Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் பட்டதாரிகள் போராட்டம்

Featured Replies

தொடரும் பட்டதாரிகள் போராட்டம்

 

வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் போராட்டம், காணி மீட்பு போராட்டம், காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் போராட்டம், அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான போராட்டம், தனியார் மருத்­துவக் கல்­லூ­ரி­க­ளுக்கு எதி­ரான போராட்டம், இந்­திய மீன­வர்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம், ஆசி­ரியர் பற்­றாக்­குறை போராட்டம் மருத்­துவர், தாதியர் போராட்டம், வைத்­தி­ய­சா­லை­களை தர­மு­யர்த்­துங்கள் என்ற போராட்டம், பாலியல் வன்­மங்­க­ளுக்­கெ­தி­ரான போராட்டம் என ஏரா­ள­மான போராட்­டங்­களால் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்ற நாடாக இன்று இலங்கைத் தீவு தத்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

ஊழல், பொரு­ளா­தார நெருக்­க­டிகள் ஆட்­கொல்லி நோய்கள், இயற்கை அன ர்த்­தங்கள், வாகன விபத்­துகள், அர­சியல் நெருக்­க­டிகள், குடிநீர் பிரச்­சி­னைகள், வீடற்றோர் பிரச்­சி­னைகள், பாதை சீர்­கே­டுகள் என நாட்டின் எல்லா திசை­க­ளி­லு­மி­ருந்து மத்­திய அரசை நோக்கி கொடுக்­கப்­பட்­டு­ வரும் அவ­சர அழுத்­தங்கள் நாட்டை சம­நி­லையில் கொண்டு வர ­மு­டி­யாத அள­வுக்கு பிரச்­சி­னை­களை உரு­வாக்கி கொண்­டி­ருக்­கி­றது.

நாளுக்கு நாள் புதுப் புதுப்­ பி­ரச்­சி­னைகள் முளை கொண்­ட­வை­யா­கவே காணப்­ப­டு­கின்றன. அர­சாங்­கங்கள் மாறு­கின்­ற­ போதும் அடிப்­ப­டை­யான இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. இதேபோல் அதி­கா­ரிகள் மாற்­றப்­பட்­டாலும் பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காணும் உபாயம் தென்­ப­ட­வில்லை.

கடந்த இரண்டு மாத கால­மாக வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் வேலை­கேட்டு போராடி வரும் தொடர் போராட்­டங்கள் தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன. இடைக்­கிடை இப்­போ­ராட்­டத்தை எட்­டிப் ­பார்க்கும் அர­சியல் தலை­வர்­களோ ஆட்­சி­யா­ளர்­களோ இப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வை தேடித் ­த­ரு­வ­தா­கவும் தெரி­ய­வில்லை.

அண்­மையில் அம்­பா­றையில் போராட்டம் நடத்­தி ­வரும் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் நாம் கடந்த இரண்டு மாத கால­மாக இந்த நடுச்­சந்­தியில் வேகாத வெய்­யி­லுக்குள் இருந்து கொண்டு சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கிறோம். எமது கோரிக்­கைகள் இன்னும் இந்த கையா­லா­காத அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தெரி­ய­வில்லை. ஒரு தீர்­வையும் அவர்கள் இன்னும் பெற்­றுத் ­த­ர­வில்லை. எனவே எதிர்­வரும் தேர்­தலில் நாம் யார் என்­பதை வெளிப்­ப­டுத்திக் காட்­டுவோம் என சூளு­ரைத்­த­தாக பத்­தி­ரிகை செய்­தி­யொன்றில் காணக்­ கூ­டி­ய­தாக இருந்­தது.

இதே­வேளை போராட்டம் நடத்­தி­ வரும் பட்­ட­தா­ரிகள் மீது இரவு வேளையில் தாக்­குதல் நடத்த சிலர் முற்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போராட்டம் நடத்­தி ­வரும் வேலை­யற்ற பட்­ட­தா­ரிகள் தமது கவ­லையை தெரி­வித்­தி­ருந்­த­மையும் சில அர­சியல் வாதிகள் தங்­க­ளது அடி­வ­ரு­டிகள் மூலம் தங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தா­கவும் மேற்­படி பட்­ட­தா­ரிகள் தமது கவ­லை­யையும் வேத­னை­யையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்டம் பர­வ­லாக வட, ­கி­ழக்­கி­லுள்ள எல்லா மாவட்­டங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­வதை காணு­கிறோம். கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய இடங்­க­ளிலும் அதேபோல் வட­மா­கா­ணத்தில் யாழ்ப்­பாணம், வவு­னியா மற்றும் மாவட்­டங்­க­ளிலும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருப்­பதை காணு­கிறோம்.

திரு­கோ­ண­ம­லைக்கு அண்­மையில் விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பட்­ட­தா­ரிகள் போராட்டம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­சினை வட­கி­ழக்­குக்கு மாத்­தி­ர­முள்ள பிரச்­சி­னை­யல்ல. கடந்த 30 வரு­ட­ கா­லத்தில் தொழில் இல்­லாத பட்­ட­தா­ரி­களின் பெருக்­கங்கள் அதி­க­ரித்­துள்­ளன. பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னையை இவ்­வ­ரு­டத்­துக்குள் தீர்த்­து­ வைக்க நானும் அமைச்­ச­ர­வையும் கூடி ஆராய்ந்து சில முடி­வு­களை எடுத்­துள்ளோம். இது ஒரு தேசிய பிரச்­சி­னை­யாகும் என ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்தார்.

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போரா ட்டம் நியா­ய­மா­னதா அவ­சி­ய­மு­டை­யதா என்ற பிரச்­சி­னை­களை மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நோக்­கு­வது என்ற வகையில் ஆரா­யப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

பட்­ட­தா­ரி­களை உரு­வாக்கும் நிறு­வ­னங்கள் அது பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளாக இருக்­கலாம். அல்­லது அதன் அடுத்த நிலை உயர் பீடங்­க­ளாக இருக்­கலாம். உற்­பத்­தியை ஆக்கும் நிறு­வ­னங்­க­ளாக மட்டும் செயற்­பட்டு வரு­கின்­ற­னவே தவிர, அதன் மறு­பக்க பயன்­பா­டாக தம்மால் உற்­பத்­தி­யாக்­கப்­பட்ட மனித மூல­த­னங்­களை பயன்­பாடு கொண்ட தேசிய பொரு­ளா­தா­ரத்­துடன் இணைக்கும் கைங்­க­ரி­யத்­தையோ பொறி­மு­றை­யையோ கொண்­ட­தாக கல்வி நிறு­வ­னங்கள் காணப்­ப­ட­வில்லை. இவை அந்த கடப்­பாட்­டி­லி­ருந்து தப்­பித்­துக் ­கொள்­கின்­றன. இதனால் ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­களும் யுவ­தி­களும் பட்­ட­மென்ற சான்­றி­த­ழோடு தெருவில் அலைந்து திரிய வேண்­டிய சூழ்­நிலை காணப்­ப­டு­கி­றது.

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னை­ மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நோக்­கப்­ப­டு­மாயின் மூன்று வரு­டங்­களோ அல்­லது நான்கு வரு­டங்­களோ கல்வி கற்று விட்டு அச்­சான்­றி­தழ்­க­ளோடு அவர்கள் பட்டம் பெற்ற காலத்­தை­ விட நீண்ட காலத்தை வேலை­ தேடி அலையும் நிலையே நாட்டில் காணப்­ப­டு­கி­றது. பட்­ட­தாரி இளைஞன் ஒருவன் அண்­மையில் தமது பிரச்­சி­னையை மனம் விட்டு இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தான். யான் பட்டம் பெற நான்கு வரு­டங்கள் தேவை­யாயின் அச்­சான்­றி­த­ழைக்­கொண்டு வேலை தேடி ஐந்­துக்கு மேற்­பட்ட வரு­டங்கள் அலைய வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு அலைந்­தாலும் உத்­த­ர­வா­த­மில்­லாத நிலையே காணப்­ப­டு­கி­றது என தெரி­வித்­தி­ருந்தான்.

இது அவ­னு­டைய திரு­மண எல்­ லையை தள்­ளிப்­ போ­டு­கி­றது. குடும்­பத்­துக்கு தொடர்ந்தும் பார­முள்­ள­வர்­க­ளா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். சில சந்­தர்ப்­பங்­களில் பெற்­றோர்­க­ளுக்கு உதவ முடி­யா­மலும் அவர்­களை தாங்க தகு­தி­யற்­ற­வர்­க­ளா­கவும் விரக்­தி­ய­டைந்து தற்­கொலை முயற்­சிக்கு போன சம்­ப­வங்­களும் நாட்டில் நிறை­யவே நடந்­துள்­ளன.

பெண் பட்­ட­தா­ரி­களை பொறுத்­த­வரை இவ்­ வி­வ­காரம் வெவ்­வேறு சுய­கெ­ள­ரவ நிலை­களை உரு­வாக்­கி­வி­டு­வ­து­முண்டு. திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் அண்மையில் இடம்பெற்ற வேலை தேடி அலைந்து அலைந்து விரக்­தி­யுற்ற நிலையில் தற்­கொலை செய்து கொண்ட பரி­தாப சம்­பவம் திரு­கோ­ண­மலை பிர­தே­சத்­தையே கவலை கொள்ள வைத்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை, அம்­பாறை மற்றும் மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் இடம்­பெற்று வரும் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டத்தை அவ­தா­னித்து பார்ப்­போ­மாயின் படங்­கையோ சாக்­கையோ கூடா­ர­மாக்கி வேகாத வெய்­யிலில் மணித்­தி­யா­லக்­க­ணக்கில் தமது போராட்­டத்தை நடத்­திக் ­கொண்­டி­ருக்­கி­றார்கள். உண்ண உண­வில்லை, குடிக்க நீரில்லை. போவோர் வரு­வோரின் ஏள­னப்­பார்வை, இடைக்­கிடை திடீ­ரென வாக­னத்தில் வந்து இறங்கி, குசலம் விசா­ரித்து விட்டு மறைந்து போய்­விடும் அர­சி­யல்­வா­திகள், இவர்­களின் பரி­தாப போராட்­டத்தை இடைக்­கிடை ஊட­கங்­களில் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் எழு­து­வ­தற்­கா­கவும் வந்­து­போகும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என இவர்கள் போராட்­டங்கள் நடந்து கொண்­டி­ருக்­கி­ன்றன.

ஆளுநர் அலு­வ­ல­கத்­துக்கு முன்னால் மாதக்­க­ணக்­காக இப்­போ­ராட்டம் இடம்­பெற்­று­ வ­ரு­கின்ற போதும் அதி­கா­ரிகள் யாரும் இவர்கள் போராட்­டத்தை பச்­சா­தா­பத்­துடன் பார்ப்­ப­து­மில்லை. நியா­ய­மா­னது என ஏற்­றுக் ­கொள்­வ­து­மில்லை. இதில் கவலை கொள்ள வேண்­டிய விடயம் என்­ன­வெனில் இடம்­பெற்று வரும் போராட்­டங்­களில் போராடி வரு­கி­ன்ற­வர்­களில் சிலர் வேலை கிடைத்து விடு­மென்ற அதீத நம்­பிக்­கையில் மணம் முடித்து ஒரு தந்­தை­யா­கவோ அல்­லது தாயா­கவோ ஆகி தன்­னையும் காக்க முடி­யாமல் தனது குடும்­பத்­தையும் காக்க திரா­ணி­யற்று அதிக கன­வு­க­ளோடு போரா­டி­ வரும் பட்­ட­தாரி பாத்­தி­ரங்­களும் காணப்­ப­டு­வது கவலை தரு­கின்ற விட­யந்தான்.

இன்­னு­மொ­ரு ­வ­கையில் பார்ப்­போ­மாயின் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­சி­னை­யா­னது தேசிய பொரு­ளா­தார நலன் சார்ந்த வகையில் எவ்­வகைப் பிரச்­சி­னை­க­ளாக மாறு­கின்­றது என்­ப­தையும் நோக்க வேண்டும். பட்­டச்­சான்­றி­த­ழுடன் ஒரு பட்­ட­தாரி சுமார் நான்கிற்கு மேற்­பட்ட வரு­டங்கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. இதனால் அவ­னு­டைய ஆற்­ற­லுள்ள மனி­த­வளம் வீண­டிக்­கப்­ப­டு­கி­றது. விர­ய­மாக்­கப்­ப­டு­கி­றது. கணக்­கீட்டு அடிப்­ப­டையில் கூறு­வோ­மானால் வரு­டத்­துக்கு ஒரு பட்­ட­தாரி இளை­ஞனின் வரு­மான இழப்பு சரா­ச­ரி­யாக 2 இலட்­சத்து 40 ஆயிரம் ரூபா, ஊழிய உழைப்பு அவ­மாக்­கப்­ப­டு­கி­றது என அண்­மையில் ஒரு பொரு­ளா­தார கணிப்­பாளர் கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.

பட்­ட­தா­ரி­களை வேலையில் அமர்த்திக் கொள்­வதில் மூன்று நிறு­வ­னங்கள் முக்­கி­ய­மான வேலை கொள்­வோ­ராக காணப்­ப­டு­கி­றார்கள். ஒன்று அரச துறை­யினர், இன்­னொன்று தனியார் துறை­யினர், மற்­றொன்று கூட்­டுத்­தா­ப­னங்கள்.

இந்த மூன்று துறை­யி­னரும் பட்­ட­தா­ரிகள் மீது சுமத்தும் குற்­றச்­சாட்­டுகள் இவர்­க­ளிடம் வெறும் பட்­டச்­சான்­றி­தழ்கள் இருக்­கி­ன்றதே தவிர தொழில்சார் திறன்­களோ அனு­ப­வங்­களோ மற்றும் மொழி வாண்­மையோ இல்­லாத கார­ணத்­தினால் தொழில் துறையில் இணைத்துக் கொள்­வதில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கி­ன்றன என தொழில் கொள்வோர் கூறு­கின்­றார்கள். அர­சாங்கத் துறையை பொறுத்­த­வரை பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை வழங்­கு­வதில் கூடி­ய­ வரை ஆசி­ரிய நிய­ம­னங்­க­ளையும் சிறிய அளவில் பொது­நிர்­வா­கத்­துறை கூட்­டுத்­தா­ப­னங்கள் ஆகி­ய­வற்றில் வேலை வழங்­கப்­ப­டு­கி­றது. ஆசி­ரிய நிய­ம­னங்­களே அதி­க­ளவு கைகொ­டுத்து வரு­கின்­றன.

இவ்­வா­சி­ரிய நிய­ம­னங்­களை வழங்­கு­வ­திலும் அர­சாங்கம் பல்­வேறு சங்­க­டங்­களை அனு­ப­விக்­கி­றது. ஆளணித் தேவை, பொருத்­த­மான தேவை நவீன மாற்­றங்கள் என்ற அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு இது இட­மா­கி­ வ­ரு­கி­றது.

பாட­சா­லையின் ஆளணித் தேவை­யென்­பது வருடா வருடம் முறை­யாக கணிக்­கப்­பட்டு அவை உட­ன­டி­யாக பூர்த்­தி­யாக்­கப்­பட வேண்டும். இவற்­றுக்­கான முறை­யான தர­வு­களோ கணிப்­பீ­டு­களோ இன்னும் இலங்­கையில் செம்­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக ஆசி­ரிய தேவையை பூர்த்தி செய்­வதில் நடை­முறைச் சிக்கல் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கி­றது.

பாட­சா­லை­களை பொறுத்­த­வரை பொருத்­த­மான ஆசி­ரிய தேவை­யென்ற பதம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக நாட்டில் அதிலும் குறிப்­பாக வட ­கி­ழக்கில் ஆங்­கில ஆசி­ரியர், கணித ஆசி­ரியர், விஞ்­ஞான ஆசி­ரியர், தொழில்­நுட்ப பாட ஆசி­ரி­யர்­களின் தேவை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­ற­போது இவற்­றுக்­கான பொருத்­த­மா­ன­வர்­களை தேடிப்­ பி­டிப்­பதில் பல கஷ்­டங்கள் காணப்­ப­டு­கி­ன்றன.

வெளி­யே­றி­ வரும் பட்­ட­தா­ரி­களில் பெருந்­தொ­கை­யா­ன­வர்கள் உள்­வா­ரி­யா­கவும் வெளி­வா­ரி­யா­கவும் கலைத்­துறை சார்ந்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள். அத்­துடன் தனித்­தாய்­மொழி ஆற்றல் கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள். இது ­த­விர ஆசி­ரியர் தொழி­லுக்­கு­ரிய வாண்மை விருத்தி, தொழில்சார் பயிற்சி கொண்­ட­வர்­க­ளாக இருப்­ப­தில்லை என பட்­ட­தா­ரிகள் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கி­ன்றன.

தனியார் துறை­யினர் இன்னும் புதிய புதிய தகு­தி­யீ­னங்­களை கண்டு கொண்­டி­ருக்­கி­றார்கள். நாட்­டி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களும் உயர்­கல்வி நிறு­வ­னங்­களும் இரு­வ­கை­யான பட்­ட­தா­ரி­க­ளையும் டிப்­ளோமா தாரி­க­ளையும் உரு­வாக்கி வரு­கின்­றன. ஒன்று தொழில்சார் பட்டம். மற்­றது பொதுப்­பட்டம். இதில் தொழில்சார் பட்டம் என்­பது மருத்­துவம், பொறி­யியல், கணக்­காளர், சட்­டத்­து­றை­யினர், தாதியர் பயிற்சி, கணினிப் பயிற்சி போன்­ற­வற்றை உள்­ள­டக்கி கொள்­ளலாம். ஏனை­யவை கலைத்­ துறை, விஞ்­ஞா­னத்­ துறை, கணிதத் துறை பல்­வேறு டிப்­ளோ­மாக்கள் என அவை வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இவற்றில் மேலே சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள துறை­யி­னரே வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இவர்­க­ளிலும் கலைத்­துறை பட்­ட­தா­ரிகள் ஏகப்­பட்ட பிரச்­சி­னை­களை அனு­ப­விக்க வேண்­டி­யுள்­ளது.

காரணம் இவர்­க­ளிடம் தொழில்சார் தகை­மை ­கல்வி, அனு­பவம் இன்மை, இவர்­க­ளு­டைய பாட விதானம், நாட்டின் பொரு­ளா­தார துறை­யோடோ அபி­வி­ருத்தி துறை­யோடோ இணைக்க முடி ­யாத வில­கல்கள் காணப்­ப­டு­கி­ன்றன.

வரு­டாந்தம் உள்­வா­ரி­யா­கவும் வெளி­வா­ரி­யா­கவும் பெருந்­தொ­கை­யான பட்­ட­தா­ரிகள் பட்டம் பெற்று வெளி­யே­று­கி­றார்கள். இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் இலங்கை பல்­க­லைக்­க­ழக மானியங்கள் ஆணைக்­கு­ழுவின் அனு­ம­தி­யுடன் எளி­ய ­மு­றை­யிலும் இல­கு­வான முறை­யிலும் பட்­டங்­களை வழங்­கி­ வ­ரு­கி­றது. உதா­ர­ண­மாக தமிழ்­நாட்டு காம­ராஜர் பல்­க­லைக்­க­ழகம், பார­தி­தாசன் பல்­க­லைக்­க­ழகம் போன்­றன இந்த கைங்­க­ரி­யங்­களில் அதிக பங்­கெ­டுத்து வரு­கி­ன்றன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் பட்­ட­தா­ரி­களின் உற்­பத்தி நாட்டின் தேவைக்கும் கேள்­விக்கும் அதி­க­மாக உற்­பத்­தி­யாக்­கப்­ப­டு­கி­றது என இல்­லாத பொல்­லாத பொய்கள் கூறப்­பட்டு பட்­ட­தா­ரிகள் உதா­சீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

கடந்த 30 வரு­ட­ கால யுத்தம் வேலை­யற்­றோ­ருக்கு வேலை வழங்கும் நடை­மு­றையில் பல்­வேறு சிக்­கல்­களை கொண்­டு­ வந்­தி­ருக்­கின்­றன என்­பது உண்­மை­யாக இருக்­கின்­ற ­போ­திலும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை வழங்கும் செயல்­மு­றையில் பல்­வேறு தடங்­கல்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் உரு­வாக்­கி­யுள்­ளன என்­பது உண்­மையே.

குறிப்­பாக வட ­கி­ழக்கில் ஆயி­ரக்­க­ணக்­கான பட்­ட­தா­ரிகள் வேலை­யில்லா கஷ்­டங்­களை அனு­ப­வித்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று கூறப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்­களின் தக­வலின் படி கிழக்கு மாகா­ணத்தில் மட்டும் ஏழாயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பட்­ட­தா­ரிகள் வேலை­யில்­லாமல் இருக்­கின்­றார்கள் என்று கூறப்­ப­டு­கி­றது. இதேபோல் வட­மா­கா­ணத்­தி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளிலும் 15 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட பட்­ட­தா­ரிகள் வேலை தேடி அலையும் நிர்க்­கதி காணப்­ப­டு­கி­றது.

இவர்­க­ளுக்கு வேலை வழங்­கு­வதில் அர­ச­ து­றை­களின் பங்­க­ளிப்பு அதி­க­மாக இருக்­கின்­ற­ போ­திலும் மத்­திய அரசின் அனு­ம­தி­யின்றி வேலை­ வ­ழங்­கு­வ­தென்­பது நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மில்­லாத விட­ய­மா­கவே காணப்­ப­டு­கி­றது.

மாகா­ண ­ச­பைகள் ஆர்வம் காட்­டு­கி­ன்ற ­போதும் அவர்­களின் கைகளை மத்­திய அரசு கட்­டிப் ­போட்­டு ­விட்டு அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளோம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிர காரம் நடவடிக்கைகளை எடுக்க முடி யுமென மத்திய அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. முதல் அமைச்சர் மார் கூறுகிறார்கள். ஒரு சிற்றூழியர் நியமனத்தை வழங்கக் கூட அதிகார மற்றவர்களாக காணப்படுகிறோம். ஆளுநர் அனுமதியை பெறுவதென்பது முயற்கொம்பாக காணப்படுகின்றதென கூறுகின்றார்கள்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு பரி காரம், பொறுப்பு மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட வேண்டும். வடகிழக்கைப் பொறுத்தவரை தனியார் துறையில் வேலை வழங்குவதென்பது முடியாத காரியம். இங்கு தொழில் துறைகளோ தொழிற்சாலைகளோ நிர் மாணிக்கப்படுவது என்பது மிக மிக குறைவாகவே காணப்படுகிறது. நிறுவப் படும் அனைத்து தொழிற் சாலைகளும் கொழும்பு, கண்டி, மாத்தறை, நிட்டம்புவ எனும் நகரப்பகுதியை மையப்படுத்தி அமைக்கப்படுகிறதே தவிர, வட கிழக் குக்கு கொண்டுவரப்படுதென்பது கடந்த 30 வருடங்களாக பூச்சியமாகவே இருந்துள்ளது.  

வட கிழக்கில் பல தொழிற் சாலைகள் இன்னும் முறையாக இயக்கப்படவில்லை. உதாரணமாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற் சாலை, பரந்தன் இரசாயன தொழிற் சாலை, வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை என ஏராளமான தொழிற் சாலைகள் மூடப்பட்ட நிலையி லேயே காணப்படுகின்றன. அவ்வாறு இல்லாத போதும் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வெளி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டு வந்து குவிக்கப்படுகிறார்கள்.

எது எவ்வாறு இருந்த போதிலும் பட்ட தாரிகளுக்கு வேலை வழங் குவதில் மத்திய அரசும் மாகாண சபைகளும் இணைந்து முறையான திட்டங்களை தீட்டி, வகுத்து பட்ட தாரிகளின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகாண முயல வேண்டும். புதிய தொழிற்சாலைகளை நிறுவும் முயற் சிகளில் இறங்க வேண்டும். இதே வேளை பட்டதாரிகளும் வெறும் காகித சான்றிதழ்களுடன் நின்றுவிடாமல் காலம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளையும் தொழில்சார் தகைமைகளையும் பெறு வதற்குரிய முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-22#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.