Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலகலக்குமா... சலசலக்குமா..! பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு

Featured Replies

கலகலக்குமா... சலசலக்குமா..! பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு

 
 

சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி அணி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Opsvs Eps
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. சசிகலா தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் உருவானது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சசிகலா அணியினர் தினகரன் உத்தரவுகளின் கீழ் செயல்பட்டதாக கூறப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது. மற்றொரு புறம் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இரட்டை இலைச் சின்னத்தை பெற இடைத்தரகர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தது டெல்லி போலீஸ். 

இதற்கிடையே சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அத்தகவலை உறுதிபடுத்தும் வகையில், ’அ.தி.மு.க-வின் இரு அணிகளும் சேர்வதற்கான பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், டி.டி.வி தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டதாக அறிவித்தனர்.

தற்போது, இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இருதரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இரு அணிகளும் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஓபிஎஸ் அணியுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏழு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சுமுகமாக முடிந்தால் அதிமுக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருத்தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதால், தலைமை அலுவலகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87367-admk-merger-two-teams-to-hold-first-level-meet.html

  • தொடங்கியவர்
அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்?
 
 

article_1493008998-article_1480303869-kaதமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது.  

ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் 
அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு சர்ச்சைகள், சங்கடங்கள் அணி வகுத்து நிற்பது, இதுவரை இருந்த முன்னுதாரணங்களை முறியடித்து விட்டது.  

அ.தி.மு.கவின் அம்மா அணியாக இருக்கும் தினகரன், ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அரசாங்கத்தின் அனல்காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யத் தயாரிக்கப்பட்ட பட்டியல், வருமான வரித்துறையிடம் சிக்கியதும், அ.தி.மு.க அம்மா அணியின் எதிர்காலமும் ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்காலமும் இணைந்தே கேள்விக்குறியானது.  

முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், ஆர்.கே. நகர் பண விநியோக விவகாரத்தில் இப்படி சிக்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மாட்டிக் கொண்டவர்கள் மார்க்கம் தேடி, முட்டி மோதிக் கொண்டார்கள்.

அந்த மார்க்கம்தான் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.கவிலிருந்து ஒதுக்கி வைக்கிறோம் என்ற அதிரடி அறிவிப்பு.  

தினகரன் ஒதுங்கி விட்டார்; சசிகலாவும் ஜெயிலில் இருக்கிறார். ஆனால், அவர்கள் வழி காட்டிய ஆட்சி மட்டும், முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெறுகிறது. தினகரனை நீக்கி விட்டு, மத்திய அரசாங்கத்தின் கோபத்தில் இருந்து தப்பித்த முதலமைச்சர் எடப்பாடி அணி, அடுத்து, ‘அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா’ அணியின் தலைவர் 
ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைப்பு முயற்சியை எடுத்துச் செல்ல முயற்சி செய்தது.   
அதன் முதல் கட்டமாக, மக்களவைத் துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை, முதலமைச்சர் எடப்பாடியைச் சந்தித்தார்; மாநில ஆளுநரையும் சந்தித்தார். “தினகரனை நீக்கி விட்டு வந்தால், பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்” என்று கூறிய ஓ. பன்னீர் செல்வத்தின் பேட்டியைத் தலைமைச் செயலகத்தில் நின்று கொண்டே வரவேற்றார் தம்பித்துரை.   
இந்த வரவேற்பைத் தொடர்ந்து, இரு அணிகள் இணைப்புக் குறித்த பரபரப்பு பேட்டிகள், போட்டி போட்டுக் கொண்டு வெளிவந்து கொண்

அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டதும் தினகரன் கலாட்டா செய்வார். அதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழும். ஆகவே, ஆட்சியும் கட்சியும் நம் கைவசம் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கருதியிருந்தார்.   

ஆனால், தினகரனோ “நான் விலகுவதால் கட்சியும், ஆட்சியும் நிலைத்து நிற்கும் என்றால் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்” என்று கூறியது, மொத்த விளையாட்டின் திசையையே திருப்பி விட்டது.  எடப்பாடி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும், தினகரனை ஓரங்கட்டியதற்காக “ஆட்சிக்கு ஆதரவு தர மாட்டோம்” என்று கூறவில்லை. “ஆட்சி தொடர நாங்கள் ஆதரவு அளிப்போம். கட்சியும், ஆட்சியும் நிலைக்க வேண்டும். இரட்டை இலை திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்று கூறி விட்டார்கள்.   

தினகரன் விலகிய பிறகும், எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவியில் தொடர எந்தவித ஆபத்தும் வரவில்லை என்பது ஓ. பன்னீர் செல்வத்தின் “நிபந்தனை விதிக்கும்” அதிகாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டது.

குறிப்பாக, முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை என்பதும் மற்ற அமைச்சர்களின் வாயிலாகப் பேட்டியாக வெளி வந்தது.  சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க அம்மா அணியை வழி நடத்துவது ஒன்றே ஓ. பன்னீர்செல்வத்துக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் பெற்றுத் தந்தது; அ.தி.மு.கவினர் மத்தியிலும் ஆதரவை பெற்றுத் தந்தது. ஆனால், சசிகலாவும் தினகரனும் நீக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க ஆதரவும் மக்கள் அனுதாபமும் ஓ. பன்னீர்செல்வத்துக்குக் குறையத் தொடங்கியது.   

ஒரே இரவில் இப்படியொரு அதிர்ச்சிதரும் நிலை ஏற்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இதை எடப்பாடி பழனிச்சாமி அணியும் எதிர்பார்த்தே, ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பதவியை கொடுப்பது குறித்தோ, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வழங்குவது குறித்தோ எந்தக் கருத்தையும் கூறவில்லை.  

இப்படியொரு சூழ்நிலையில்தான், ‘இரு அணிகள் இணைப்பு’ பற்றி என்ன முடிவு எடுப்பது என்று தன் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் ஓ. பன்னீர்செல்வம்.   

அக்கூட்டத்தில், “நாம் அ.தி.மு.க அம்மா அணியுடன் இணைந்தால் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து விடுவோம். முதலமைச்சர் பதவி கிடைத்தால் மட்டுமே, நாம் அந்த இணைப்புப் பற்றிப் பேச முடியும்” என்றும் கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டன. 

கூட்டம் முடிந்து பத்திரிக்கை நிருபர்களைச் சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை, சசிகலா குடும்பத்தையே 
அ.தி.மு.கவிலிருந்து விலக்கி வைப்பது, தேர்தல் ஆணையத்தில் சசிகலா பொதுச் செயலாளர் என்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெறுவது, தினகரன், சசிகலா இருவரும் தங்கள் கட்சிப் பதவிகளை இராஜினாமாச் செய்வது உள்ளிட்ட நிபந்தனைகளை முதலில் ஏற்கட்டும்; அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும்” என்று சொன்னதோடு மட்டுமின்றி, “சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்” என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.  

சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார் என்ற கருத்தின் உள்நோக்கம் என்னவென்றால், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா தேர்வு செய்த முதலமைச்சர்; அவரை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதுதான்.    

இந்தப் பேட்டியின் இன்னொரு அர்த்தம், முதலமைச்சர் பதவி 
ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையாகும். ஆனால், இந்த நிபந்தனைக்கு அ.தி.மு.க அம்மா அணி சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் சம்மதிக்கவில்லை. அதனால், நிதியமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் போன்றோர் 
ஓ. பன்னீர்செல்வம் அணி மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார்கள்.   

அந்தத் தாக்குதலின் விளைவாக, இணைப்பு முயற்சி அந்தரத்தில் தொங்குகிறது. இப்போதைக்கு அ.தி.மு.க அம்மா அணி சார்பில், இணைப்புப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு போடப்பட்டிருந்தாலும், ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் குழு போடப்படுமா, பேச்சுவார்த்தைக்கு முன் வருவார்களா என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது.  

ஓ. பன்னீர்செல்வத்தின் இணைப்பு முயற்சி தொங்கிக் கொண்டு  நிற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை, பா.ஜ.கவின் குறிப்பாக, மத்திய அரசாங்கத்துடன் ஓ. பன்னீர்செல்வத்தை விட நெருக்கமாகச் செல்கிறார்.   

நாடு முழுவதும், முதலமைச்சர்கள் தங்கள் கார்களில் சிவப்பு விளக்குகளை அகற்றி விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதை பா.ஜ.க மாநில முதலமைச்சர்கள் முதலில் நிறைவேற்றினார்கள்.   

பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச்சர் ஒருவர், உடனடியாக நிறைவேற்றி, தன் காரில் உள்ள சிவப்பு விளக்கைத் தானே கழற்றியது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே!   

மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்தை எவ்விதத்திலும் முறைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக இருக்கிறார்.   

ஆகவே, இன்றைய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நீடிக்கிறது. ஆனால், அவசரப்பட்டு “இணைப்பு முயற்சிக்கு நிபந்தனைகள் இல்லாமல் தயார்” என்றும், பிறகு “நிபந்தனைகளுடன் தயார்” என்றும் மாறி மாறி அறிவித்து, தன் அணிக்கு மக்கள் மத்தியிலும் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் இருந்து ஆதரவையும் அனுதாபத்தையும் குறைத்துக் கொண்டு விட்டார் ஓ. பன்னீர்செல்வம்.   

சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிரான தர்மயுத்தம் முடிந்து விட்டது போன்ற சூழ்நிலை ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டு, இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சியும் கட்சியும் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படத் தொடங்கியுள்ளன.   

அதேபோல் இதுவரை, சசிகலா, தினகரன் எதிர்ப்பில் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்த அ.தி.மு.கவினர் இனிமேல் அவர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அதிகாரத்தைச் சுவைப்பதற்காகத் திரும்பக் கூடும். 

அப்படி நிகழ்ந்தால், ஓ. பன்னீர் செல்வம் ஆரம்பித்த தர்மயுத்தம், எந்தவொரு தேர்தலையும் சந்திக்கும் முன்பே நிறைவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி விட்டது.  

சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க அம்மா அணியில் இருந்தால் மட்டுமே ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஜொலிக்கும். அந்த இருவரும் இல்லாத இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அ.தி.மு.க அம்மா அணி தொடர வாய்ப்பு உருவாகியிருக்கிறது.   

அதனால்தான் தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், “இரு அணிகளுமே ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களுக்கு இரட்டை இலைச் சின்னமோ, அ.தி.மு.கவோ முக்கியமல்ல; மத்திய அரசாங்கத்தின் வருமான வரித்துறை சோதனைகள் மற்றும் ஆறு வருட அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் போன்றவற்றிலிருந்து தப்பிக்க இணைப்பு என்று நாடகம் ஆடுகிறார்கள். ஊழல் சாம்ராஜ்யத்தை மீண்டும் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து உருவாக்கவே இந்த முயற்சி” என்று காட்டமாக அறிக்கை விடுத்திருக்கிறார்.   

ஆனால், இப்போதைக்கு அ.தி.மு.கவுக்குள் உள்ள இரு அணிகளில் ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு ‘வேகத் தடை’ உருவாகி விட்டது. இது நிரந்தரமானால் பன்னீரின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகும் என்பதே தமிழக அரசியலின் தற்போதைய நிலவரம். 

- See more at: http://www.tamilmirror.lk/195308/-அ-த-ம-க-இண-ப-ப-ம-யற-ச-ய-ல-வழ-க-க-வ-ழ-ந-த-ர-ஓ-பன-ன-ர-ச-ல-வம-#sthash.vREVgDND.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அதிமுக அணிகள் பேச்சு ரத்து?

 

 

சென்னை: அதிமுக அம்மா மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று (ஏப்.24) காலையில் ஓ.பி.எஸ்., அணி தரப்பை சேர்ந்த முனுசாமி அளித்த பேட்டியில் ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணையும், சசிகலா நீக்கமும் எங்களின் முக்கிய நிபந்தனை. ஆனால் அந்த அணி தரப்பில் ஒவ்வொருவரும் ஒரு வித கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு, அந்த தரப்பு அணியை யாரோ வெளியில் இருந்து இயக்கு இயக்குகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.எடப்பாடி குழு தலைவர் வைத்திலிங்கம் பேட்டி:


முனுசாமி பேட்டி அளித்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு பேட்டி அளிக்கப்பட்டது. இரு அணிகள் இணைவது தொடர்பாக முதல்வர் தரப்பை சேர்ந்த குழுவின் தலைவரான வைத்திலிங்கம் நிருபர்களை சந்தித்தார். இவர் பேசுகையில்:


அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு இப்போதே நிருபர்கள் மூலம் கேட்டு கொள்கிறேன். ஆனால் முனுசாமி அளித்த பேட்டியில் இரண்டு நிபந்தனை வைக்கிறார். ஜெ., மரண குறித்த விசாரணை மற்றும் சசி பொது செயலர் பதவி பறிப்பு ஆகியன. இரண்டும் முறையே கோர்ட் மற்றும் தேர்தல் கமிஷன் முன்பு உள்ளது. இதன் மூலம் வரும் முடிவின்படியே முடிவுகள் எடுக்கப்படும். பேச்சு வார்த்தைக்கு வருகிறீர்களா என நான் மனோஜ் பாண்டியனிடம் போனில் கேட்டேன். ஆனால் பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை என மனோஜ் பாண்டியன் எங்களிடம் கூறி விட்டார்.


பேச்சு வார்த்தைக்கு முன்பே நிபந்தனை வைத்தால் முட்டுக்கட்டை ஏற்படும். நிபந்தனை வைப்பதுடன், ஓ.பி.எஸ்., அணியினர் மாறி மாறி பேசி வருகின்றனர். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.


இதனை தொடர்ந்து இரு அணிகள் இணைப்பு பேச்சு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758012

  • தொடங்கியவர்

அந்த இரண்டு நிபந்தனைகள் என்னாச்சு! மீண்டும் சடுகுடு விளையாடும் பன்னீர்செல்வம்!

 

6a_14438.jpg

பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், பன்னீர்செல்வம் அணியினர் மீண்டும் சடுகுடு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மூன்றாகப் பிரிந்த அ.தி.மு.க-வை ஒன்று சேர்க்கும் வகையில், முதல்வர் பழனிசாமி அணி முயன்று வருகிறது. பன்னீர்செல்வம் அணியும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து, பன்னீர்செல்வம் தனது அணியினருடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, "ஜெயலலிதா மரணம் தொடர்பாக கோடிக்கணக்கான தமிழ்மக்களிடையே சந்தேகம் எழுப்பியது. ஒன்றரைக்காேடி தொண்டர்கள், ஜெயலலிதா மரணம் இயற்கையாக அமையவில்லை. கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று துயரத்தோடு இருக்கிறார்கள். அந்தத் துயரத்தைப் போக்கிடவும் உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசின் வாயிலாக சிபிஐ விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று பன்னீர்செல்வம் குரல் கொடுத்தார். குரல் கொடுத்தோடு மட்டுமல்லாமல், இந்த மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்ய வேண்டும் என்றார். அதோடு மட்டுமல்லாமல், இந்த இயக்கத்தை கபளீகரம் செய்யக்கூடிய நிலையிலே இருந்துகொண்டிருக்கிற சசிகலாவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்று இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

இதற்கிடையில், அந்த பகுதியில் (பழனிசாமி அணி) இருக்கின்றவர்கள் நாங்கள் பேசுவதற்கு தயார் என்று அவர்களாகவே ஒரு குழுவை அமைத்து ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் அறிவித்தார்கள். தன்னோடு நீண்டகாலமாகவே உடனிருந்தவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள், என்பதற்காகவும் அவர்களை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களது கோரிக்கையை முன்னிறுத்தி இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வகையில் பன்னீர்செல்வம் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவில் ஏழு பேர் உறுப்பினர்களாக இருப்பதாக அறிவித்தோம். இப்படி அறிவித்தபின்பு உடனடியாக முதலில் அறிவித்தவர்கள் அழைப்பார்கள் என்று காத்திருந்தோம். ஆனால், அதற்கு மாறாக இந்த இரண்டு நாள்களும் ஒரு குழப்பமாக நிலையில்தான் ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு குழப்பமான நிலையில் சொல்லக்கூடிய கருத்து சந்தேகத்தை ஏற்படுத்தும் கருத்தாக இருக்கிறது. ஒரு தலைவர் சொல்கிறார், 'நாங்கள் இன்னும் குழு அமைக்கவில்லை. யார் யார் உறுப்பினர் என்றே தெரியவில்லை என்கிறார்'. ஏற்கனவே வைத்திலிங்கம், குழு அமைக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கிறார். அந்த குழுவிலே உறுப்பினராக இருக்கின்ற ஒருவர் (சி.வி.சண்முகம்) இன்னும் குழு அமைக்கப்படவில்லை என்று சொல்கிறார்.

பேச்சுவார்த்தை என்கின்றபோது கோரிக்கை வைப்பதோடு மட்டுமின்றி பேச்சுவார்த்தையில்தான் கருத்துகளை பரிமாற வேண்டும். அதுதான் ஒரு தார்மீகமான நிலைப்பாடு. எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று வந்துவிட்டால் நமக்குள்ளே இருக்கி்ற உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி கட்டுப்படுத்திக்கொண்டு பேச்சு நடத்தினால்தான் அந்த பேச்சு பேசுவதற்குரிய சூழலாகவே உருவாகும். அப்படி கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் ஒரு சில தலைவர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு சில கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சொல்வதினால் எங்களுடைய எண்ணம், இவர்களுக்குள்ளாகவே குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள்ளாவே ஒரு முடிவை எடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்கள். இவர்களை வேறுயாரோ இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி வேறுயாரோ இயக்கிக்கொண்டிருப்பவர்கள் எப்படி முறையாக கருத்துகளை பரிமாறிக்கொள்கிற சூழல் ஏற்படும்.

அப்படி பேசினாலும் கூட வெளியில் சென்று யார் இயக்குகிறார்களோ அவர்கள் சொல்வதை கேட்டுவந்துதான் மீண்டும் பேசக்கூடிய சூழலில், நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம். எனவே நாங்கள் ஏற்கெனவே கூறியதைப்போல இரண்டு கோரிக்கைகள். ஒன்று, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்யவேண்டும். இந்த கோரிக்கை முதன்மையான கோரிக்கை. அடுத்ததாக இந்த கட்சியையே அழிக்கக்கூடிய நிலையில் இருக்கிற சசிகலாவையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகள்தான். அவர்கள் வேறு எதுவோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வேறு எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டால் நாங்கள் முழுமனதாக எந்த கருத்தையும் சொல்லத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்குழுவை முதல்வர் இன்று அறிவிப்பார். அறிவிப்பு வந்தவுடன் பன்னீர்செல்வம் அணியினர் தயாாராக இருந்தால் உடனடியாக பேச்சுவார்த்தை நடைபெறும். பதவியை விட்டுத் தருவேன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87399-opanneerselvam-team-press-for-two-key-demands-ahead-of-merger-talks-with-edappadi-palanisamy-government.html

  • தொடங்கியவர்

முட்டுக்கட்டைக்கு இதுதான் காரணம்! பழனிசாமி அணி குற்றச்சாட்டு

 
 

பேச்சுவார்த்தைக்கு முன்னரே ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனைகளை விதிப்பது, அ.தி.மு.க இணைப்புக்கு முட்டுக்கட்டையாக அமைவதாக, எம்.பி.,வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

Vaithiyalingam
 

’அ.தி.மு.க-வின் இரு அணிகளும் மீண்டும் சேர பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் சில நாள்கள் முன் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச்சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், 'சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், டி.டி.வி.தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக அறிவித்தனர். 

தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில், இரு அணிகளும் இறங்கி உள்ளன. அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து ஓ .பி.எஸ் அணி பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறப்பட்டது. 

ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க இணைப்புகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்பி., வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைத்திலிங்கம், “ஓ.பி.எஸ் தரப்பு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. இது, பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும். மேலும், அவர்கள் கேட்டுக்கொண்டப்படி ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தத் தயார். ஆனால், அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் ” என்று ஓ.பி.எஸ் அணிக்கு மீண்டும் அழைப்புவிடுத்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/87395-admk-merger-talk-edappadi-palanisamy-team-blames-opaneerselvam-team.html

 

  • தொடங்கியவர்

அ.தி.மு.கவில் நடப்பது என்ன? மனம் திறந்தார் மா.ஃபா பாண்டியராஜன் !

  • தொடங்கியவர்
சசி குடும்பத்தை நீக்கினால் தான் பேச்சு!
பன்னீர் அணி மீண்டும் போர்க்கொடி
 
 
 

சென்னை :''அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் முழுமையாக நீக்கினால் தான் பேச்சு நடைபெறும்,'' என, பன்னீர் அணி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

 

Tamil_News_large_1758072_318_219.jpg

பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி அளித்த பேட்டி:ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; அவர் கொலை செய்யப்பட்டார் என, கட்சியினர் சந்தேகமடைந்து உள்ளனர். அதை போக்கவும், நீதியை நிலைநாட்டவும், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என, மத்திய அரசிட

ம், தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.
 

கருத்துக்களை பரிமாற வேண்டும்


கட்சியை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, முழுமையாக கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்து உள்ளோம். இதுதவிர, வேறு எந்த நிபந்தனையும் கிடையாது.எம்.பி., வைத்திலிங்கம், 'குழு அமைக்கப்பட்டு உள்ளது' என்கிறார். இன்னொருவரோ, 'குழு அமைக்கவில்லை' என்கிறார். இப்படிமாறுபட்ட கருத்துக்களை, அவர்கள் கூறி வருகின்றனர். பேச்சு நடைபெறும் போது தான், கருத்துக்களை பரிமாற வேண்டும்.
 

முடிவு எடுக்க முடியாத நிலை


எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்,

 

அவற்றையெல்லாம் மறந்து தான் பேச வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, பேச்சு நடத்த வேண்டும். ஆனால், அவர்கள் கட்டுப்பாடற்ற நிலையில், சில கருத்துக்களை கூறி வருகின்றனர். இது, பல குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒரு முடிவு எடுக்க முடியாத நிலையில் பேசி வருகின்றனர். இவர்களை, யாரோ ஒருவர் பின்னால் இருந்து இயக்குகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758072

  • தொடங்கியவர்
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு தடைபட்டது ஏன்
 
 
 

அ.தி.மு.க., பொதுச் செயலரின் அதிகாரத்தை குறைத்து, அப்பதவியை பன்னீர் அணிக்கு ஒதுக்கும் முடிவால், இரு அணிகள் இணைப்பு பேச்சு, நேற்று தடைபட்டது.

 

Tamil_News_large_1758110_318_219.jpg



முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரு குழுக்களும், நேற்று, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பேச்சு நடத்த திட்டமிட்டன.
 

அவசர ஆலோசனை


அதன் காரணமாக, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை, 11:45 மணிக்கு, முதல்வர் பழனிசாமி வந்தார். அவரை தொடர்ந்து, அமைச்சர்கள், ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் ராஜ்யசபா, எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களும் வந்தனர். பன்னீர் அணி குழுவினர் வரவில்லை.

அமைச்சர்களுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதே நேரத்தில், போயஸ் கார்டன், வீனஸ் காலனியில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், அவரது தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், கே.பி.முனுசாமி,விஸ்வநாதன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின், 'சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும், கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும். இரு கோரிக்கைகளையும் ஏற்றால் தான் பேச்சு' என, அறிவித்தனர்.
 

அதிகாரப்பூர்வ பேச்சுக்கு முன்வரவில்லை.


இந்த தகவல், பழனிசாமி அணிக்கு தெரிய வந்ததும், அவர்கள் சார்பில், வைத்திலிங்கம் பேட்டி அளித்தார். 'நீதிமன்றம் உத்தரவிட்டால், சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு தயார். தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், சசிகலா நீக்கம் பற்றி முடிவெடுக்கலாம்'என்றார். இப்படி இரு அணியினரும் பேட்டி அளித்தனரே தவிர, அதிகாரப்பூர்வ பேச்சுக்கு முன்வரவில்லை.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பழனிசாமி தரப்பில், பாண்டியராஜன், செம்மலைக்கு, அமைச்சர் பதவி அளிக்க, பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது.

 

ஆனால், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்கின்றனர்.
பொதுச் செயலர் பதவியை, பன்னீருக்கு வழங்க தயார் என, கூறியுள்ளனர். ஆனால், பொதுச் செயலர் பதவிக்குரிய முழு அதிகாரம் தர முடியாது என, நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுச் செயலர் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில், கட்சியின் சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என, பழனிசாமி தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதற்கு, பன்னீர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்; பொதுச் செயலருக்கு தான், முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த விவகாரத்தால் தான், நேற்று இரு அணிகளின் பேச்சு துவங்கவில்லை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758110

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.