Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் , நீதிவானுக்கும் பங்கு கேட்டுள்ளனர்.

Featured Replies

திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் , நீதிவானுக்கும் பங்கு கேட்டுள்ளனர்.

திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.  அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வடக்கில் இடம்பெறும் திருடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை யாழ் நகரில்  உருக்கி கட்டியாக்கும் மற்றும் இந்தியாவுக்கு நகைகளை கடத்தும் குழுக்களுடன்  உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று பொலிசார் தொடர்புகளை பேணி வந்துள்ளனர்.

அந்த தொடர்பின் மூலம் திருட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவினரின் செயல்களுக்கு பாதுகாப்பாகவும் உடந்தையாகவும் குறித்த போலீசார் செயற்பட்டு உள்ளனர். அதற்காக திருட்டு நகைகளில் ஒரு பகுதியினை கப்பமாகவும் பெற்று வந்துள்ளனர்.

அந்நிலையில் தீடிரென , நீதிவான் ஒருவருக்கும் திருடுட்டு நகைகளில் பங்கு கொடுக்க வேண்டும் என கோரி போலீசார் நகைகளில் பங்கினை அதிகமாக கேட்டு உள்ளனர். இதனால் போலீசாருக்கும் திடுட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.

அதனை அடுத்து திடுட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை பெற்று தருவோம் என மிரட்டியுள்ளனர்.

அது தொடர்பில் திடுட்டு நகைகளை உருக்கி கட்டியாக்கி கடத்தும் குழுவை சேர்ந்த ஒருவர் யாழ்.பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறையிட்டு உள்ளார்.  அதன் போது அவரை பொலிஸ் உப பரிசோதகர் தொலைபேசியில் கப்பம் கேட்டு மிரட்டும் ஒலிப்பதிவையும் கையளித்து உள்ளார்.

அதை தொடர்ந்து குறித்த பொலிஸ் உயர் அதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டது.  அந்நிலையில் நேற்று முன்தினம் 3 நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரி முன்பாக சாட்சியம் அளித்துள்ளனர். அதன் போது குறித்த பொலிஸ் உப பரிசோதகர் உள்ளிட்ட மூன்று போலீசாருக்கும் இதுவரை காலமும் கொடுத்த நகைகளின் அளவு மற்றும் ரொக்க பணத்தின் விபரங்களையும் தெரிவித்து உள்ளனர்.

அதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு 10 பவுண் தங்க நகைகளும் , 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்க படுகின்றது.

அதேவேளை வடக்கில் இடம்பெறும் திருட்டுக்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூன்று பொலிசாருக்கும் தொடர்புகள் உள்ளதாகவும், அவர்களிடம் இருந்தும் பெரும் தொகையான திருட்டு நகைகளை பெற்றுக்கொண்டு உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/archives/25387

  • கருத்துக்கள உறவுகள்

தை தொடர்ந்து குறித்த பொலிஸ் உயர் அதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டது.  அந்நிலையில் நேற்று முன்தினம் 3 நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரி முன்பாக சாட்சியம் அளித்துள்ளனர். அதன் போது குறித்த பொலிஸ் உப பரிசோதகர் உள்ளிட்ட மூன்று போலீசாருக்கும் இதுவரை காலமும் கொடுத்த நகைகளின் அளவு மற்றும் ரொக்க பணத்தின் விபரங்களையும் தெரிவித்து உள்ளனர்.

உண்மையிலை என்னப்பா நடந்திச்சு? குளப்பியடிக்கிறானுங்க. நகைக்கடைக்காறங்க என்னசெய்தாங்க?

ஐந்தாம் வகுப்பு மாணவர் கட்டுரை எழுதினமாதிரியல்லா இதை எழுதி  இருக்கு.

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்
30 பவுண்களைக் கப்பமாக பெற்றார்களா 3 பொலிஸார்? விசாரணைகள் தீவிரம் என்கிறது பொலிஸ்
 
 
30 பவுண்களைக் கப்பமாக பெற்றார்களா 3 பொலிஸார்?  விசாரணைகள் தீவிரம் என்கிறது பொலிஸ்
நகை வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து தங்­கத்­தை­யும் பணத்­தை­யும் கப்­ப­மா­கப் பெற்­று­வந்­தார்­கள் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் பொலிஸ் உப பரிசோதகர் உள்ளிட்ட 3 பொலிசார் 30 பவுண் நகைகளையும் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தையும் கப்பமாகப் பெற்றுவந்துள்ளமை இதுவரையான விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. 
 
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், கொள்ளைகளின்போது அபகரிக்கப்படும் நகைகளை யாழ்ப்பாண நகரத்திலுள்ள நகைத் தொழிலாளிகள் சிலர் குறைந்த விலையில் பெற்று உருக்கித் தங்கமாக்கி வருகின்றனர் என்று கூறப்பட்டுவந்த நிலையில், அந்த நகைத் தொழிலாளிகளிடம் இருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கத்தையும் பணத்தையும் கப்பமாகப் பெற்றுவந்த விடயம் அவர்களிடையே ஏற்பட்ட பங்குப் பகிர்வுப் பிரச்சினையால் வெளியே கசிந்தது.
 
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் நகைத் தொழிலாளிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. குறித்த தகவலை ஒரு நகைத் தொழிலாளியே தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடும் பொலிஸார், நகைகளை வழங்கிய திருடர்களின் வாக்குமூலங்களைப் பதிவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்றும் கூறினர்.
 
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கப்பம் கோரியவேளை ஏற்பட்ட பிணக்கின்போது நீதிவான் ஒருவரின் பெயரையும் பயன்படுத்தியுள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
 
கப்பம் கோரப்பட்டமை தொடர்பில் விரைவில் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கப்பம் பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 பேரும் இன்னும் கடமையில் உள்ளனர் என்றும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

http://www.onlineuthayan.com/news/25951

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.