Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

Featured Replies

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

 

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை தோற்கடித்து மையவாத வேட்பாளரான இமானுவேல் மக்ரோங், மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

இம்மானுவல் மேக்ரன்படத்தின் காப்புரிமைAFP Image captionஇம்மானுவல் மக்ரோங்

தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மக்ரோங், 66.06 சதவீதத்துக்கு 33.94 சதவீதம் என்ற வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மக்ரோங் பெறுகிறார்.

தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்ரோங், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு, முடிவுகள் வெளிவரத் துவங்கிய நிலையில்,மேக்ரனின் ஆதரவாளர்கள், வெற்றியைக் கொண்டாட, மத்திய பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.

வெற்றி உறுதியானதும், தனது எதிர் வேட்பாளர் லெ பென்னைத் தொடர்பு கொண்டு மரியாதை நிமித்தமாக மக்ரோங் பேசியதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்தனர்.

லெ பென்படத்தின் காப்புரிமைEPA Image captionலெ பென்

தேர்தல் முடிவு குறித்து பேசிய லெ பென், தனக்கு வாக்களித்த 11 மில்லியன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த முடிவுகள், தேசப்பற்றாளர்களுக்கும், உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாகவும், புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேக்ரனின் வெற்றி, ஃபிரான்ஸ் மக்கள் ஒருமைப்பாட்டை விரும்புவதை வெளிப்படுத்துவதாக தற்போதைய அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் தெரிவித்தார்.

இம்மானுவல் மக்ரோங்குக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மேக்ரன் யார்?

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபிரான்ஸ் மக்களுக்கு, இவர் யார் என்றே தெரியாத நிலையில், மேக்ரனின் வெற்றி பிரமிக்கத்தக்கது என்று பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்டு கூறுகிரார்.

தாராளமய கொள்கை கொண்ட, மத்தியவாத மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவான, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவானவர் மக்ரோங். இவரது எதிர் வேட்பாளர் லெ பென், ஐரோப்பிய ஒன்ரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் ஃபிரான்சிஸ் ஒல்லாந்தின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய மேக்ரன், இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புக்களுக்கு மாறாக, இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்ட ஓர் இயக்கத்தைத் துவக்கினார்.

முக்கிய சவால்?

இவரது இயக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே இல்லை.

அதே நேரத்தில், அதிபர் தேர்தலை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் ஜூன் 11 முதல் 18 வரை நடைபெற உள்ளன.

என் மார்சே என்ற அவரது இயக்கம், அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடும் என்றாலும், முழுமையான ஆட்சிக்கு கூட்டணி ஆட்சியை அவர் ஏற்படுத்தியாக வேண்டும்.

http://www.bbc.com/tamil/global-39840343

  • தொடங்கியவர்

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

 
 

தனக்கு கிடைத்த தேர்தல் வெற்றியின் மூலம் பிளவுபட்ட நிலையில் உள்ள நாட்டை ஒருங்கிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யப் போவதாகவும் ஃபிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதிபடத்தின் காப்புரிமைAFP

செல்லுபடியான வாக்குகளில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று ஃபிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்ரோங் தான்சந்திக்கவுள்ள சவால்கள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில், ஃபிரான்ஸ் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்காததால் வேட்பாளரை தேர்ந்தெடுக்காமலோ அல்லது தங்களின் வாக்குரிமையை வீணாக்கியோ உள்ளனர்.

தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னின் பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஆதரவாக பத்து மில்லியன் மக்களுக்கும் மேலானோர் வாக்களித்தனர்.

வாக்காளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட காரணமாக இருந்த குடியேற்றம் மற்றும் வேலையின்மை பிரச்சனை ஆகியவற்றை மக்ரோங் சமாளிக்க வேண்டுமென ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-39841217

  • தொடங்கியவர்

அதிபர் தேர்தலில் மக்ரோங் வெற்றியின் பின்னணயில் 5 `ரகசியங்கள்'

 
 

பிரான்ஸ் அரசியலில் இமான்வெல் மக்ரோங் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். ஓராண்டுக்கு முன்னால், மிகவும் பிரபலம் இல்லாத,பிரான்ஸ் அதிபர்களில் ஒருவரின் அரசில் உறுப்பினராக இருந்தவர் இவர்.

மக்ரோங்படத்தின் காப்புரிமைAFP

இப்போது, முதலாவதாக இருந்த பிரதான மத்திய இடது மற்றும் மத்திய வலது சாரி கட்சிகள் மட்டுமல்ல, தீவிர வலதுசாரி கட்சியையும் தன்னுடைய 39வது வயதில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தோல்வியடைச் செய்து மக்ரோங் வெற்றிக்கனியை சுவைத்துள்ளார்.

அடித்தது அதிஷ்டம்

அதிஷ்டக்காற்றால் வெற்றியை நோக்கி மக்ரோங் அடித்துச் செல்லப்பட்டதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த மத்திய வலதுசாரி அதிபர் வேட்பாளர் பிரான்சுவா ஃபிலோங் ஊழல் குற்றச்சாட்டால் பின்னடைவைச் சந்தித்தார், சோஷலிச அதிபர் வேட்பாளர் பென்வா அம்வோங் கட்சியில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்ட நிலையில், இக்கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்தவர்கள் வேறு தெரிவுகளை செய்துவிட்டதால் பெரும் தோல்வியை சந்தித்தார்.

"சற்றும் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை மக்ரோங் எதிர்கொண்டதால், அவர் மிகவும் அதிஷ்டக்காரர் ஆகிவிட்டார்" என்று பாரிஸில் இருக்கும் டெர்ரா நோவா சிந்தனை குழுவின் மார்க்-ஆலிவர் பாடிஸ் கூறியுள்ளார்.

_95969591_206faa3a-e5e5-4593-9234-8de5aaபடத்தின் காப்புரிமைREUTERS Image caption“போலி வேலை” ஊழல் பிரான்சுவா ஃபியேங்கின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துவிட்டது

அவர் புத்திக்கூர்மையானவர்

வெறும் அதிர்ஷ்டம் மட்டும், இக்கதையின் விவரங்கள் முழுவதையும் குறிப்பிட்டுவிடாது.

மக்ரோங் சோஷலிச கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டிருக்கலாம். ஆனால், பல ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பின்னர், கட்சியின் செல்வாக்கு மக்களிடம் குறைந்துவிட்டதால், அவருடைய முயற்சிகள் பயனற்றுபோகும் என்பதை உணர்ந்து கொண்டார்.

"யாரும் இல்லாதபோது, அங்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம் என்பதை அவரால் முன்னரே கணிக்க முடிந்தது" என்கிறார் பாடிஸ்.

 

ஸ்பெயினில் போடோமோஸ், இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் என ஐரோப்பாவின் வேறு இடங்களில் தோன்றிய அரசியல் இயக்கங்களை அவர் கவனித்திருக்கிறார். பிரான்ஸில் அரசியல் சக்தியை மாற்றவதற்கு இணையான சக்தி இல்லை என்று என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "மக்களால் நடத்தப்படும் 'என் மார்ச்' (அணிவகுப்பு) என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். நான்கு மாதங்களுக்கு பிறகு அதிபர் பிரான்சுவா ஒலாந்தின் அரசிலிருந்து வெளியேறினார்.

மாக்ரோங்படத்தின் காப்புரிமைREUTERS Image captionமக்ரோங் இளைஞராக, புதியவரா, நேர்மறை செய்தியோடு பரப்புரை மேற்கொண்டார்

பிரான்சில் புதியதை நிறைவேற்ற முயற்சி

'என் மார்ச்'-சை நிறுவிய பின்னர், அவர் தன்னுடைய அணியை 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முயற்சித்த அடிமட்ட நிலையில் இருந்து தன்னுடைய ஆதரவாளர்களை அணி திரட்டினார் என்று பாரிஸில் இருக்கும் பகுதிநேர பத்திரிகையாளர் எமிலி செச்சுல்தீஸ் தெரிவிக்கிறார்.

முதன்முதலில் 'கிரான்டே மார்ச்' (மாபெரும் பேரணி) நடத்தி தன்னுடைய அரசியல் தரநிலையை உயர்த்திக் கொண்டார். ஆனால், 'என் மார்ச்' ஆர்வலர்களோ அனுபவம் இல்லாதவர்களாக இருந்தனர்.

 

தேர்தல் பரப்புரையின்போது, 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பரப்புரையில் தன்னார்வத்துடன் பணிபுரிந்திருந்த அரசியல் நிறுவனத்திலிருந்து, பிரான்ஸை முழுமையாக அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களையும், சுற்றுப்புறங்களையும் இனம்கண்டு கிடைத்திருந்த கணிப்பு முறையை மக்ரோங் பயன்படுத்தினர்" என்று செச்சுல்தீஸ் குறிப்பிடுகிறார்.

சற்றும் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை மக்ரோங் எதிர்கொண்டதால், அவர் மிகவும் அதிர்ஷ்டக்காரர் ஆகிவிட்டார்" மார்க்-ஆலிவர் பாடிஸ் , டெர்ரா நோவா சிந்தனை குழு

"3 லட்சம் பேரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று சந்திக்க தொண்டர்களை அனுப்பினர்".

இந்த தொண்டர் படை விரைவாக செயல்பட்டது மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள வாக்காளர்களிடம் இருந்து 15 நிமிடநேர 25 ஆயிரம் பேட்டிகளை எடுத்தனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் பெரியதொரு தரவுதளத்தில் பதிவேற்றப்பட, அவை தான் பரப்புரை முதன்மைகளையும். கொள்கைகளையும் வகுக்க உதவின.

"நாட்டின் நாடி நரம்பை அறிந்துகொள்ள ஓர் இலட்சியத்தை குவிமையமாக வைத்து செயல்படுவதாக இந்த குழு மக்ரோங்கிற்கு அமைந்ததோடு, தொண்டர்களை வீடு வீடாக செல்ல வைத்ததில் இவருடைய இயக்கத்தோடு மக்கள் தொடர்பு வைத்திருப்பதை தொடக்கத்திலேயே அவர் உறுதி செய்துகொண்டார். இந்த முயற்சி இந்த ஆண்டு அவர் செய்ததற்கு களப் பணியாக அமைந்துவிட்டது.

அதனை மக்ரோங் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

மக்ரோங், பிரான்சுவா ஓலாந்த்படத்தின் காப்புரிமைREUTERS Image captionவரலாற்றிலேயே மிகவும் பிரபலம் இல்லாத பிரான்ஸ் அதிபர்களில் ஒருவரின் அரசில் உறுப்பினராக இருந்தவர் மக்ரோங்

அவரிடம் இருந்தது நேர்மறை செய்தி

மக்ரோங்கின் அரசியல் ஆளுமை முரண்பாடுகளால் நிறைந்திருப்பதாக தோன்றியது.

அதிபர் பிரான்சுவா ஒலாந்தின் சீடராக இருந்து புதிதாக வந்தவர், பொருளாதார அமைச்சர், முன்னாள் முதலீட்டு வங்கியாளர் அடிமட்ட இயக்கத்தை நடத்துகிறார், பொதுத் துறைகளை குறைப்பதற்கு முற்போக்கு திட்டமுடைய மையவாதி என்பதாக முரண்பட்ட நபராகவே தோற்றமளித்தார்.

இதனால்தான், மக்ரோங் சொல்வது போல புதியவர் யாரும் பயனடைய மாட்டார்கள். மேல்தட்டு வர்க்கத்தினரே பயன்பெறுவர் என்று சரியான தாக்குதல் தொடுக்க போட்டியாளர் மெரைன் லெ பென்னுக்கு ரெம்பவே வசதியாக அமைந்துவிட்டது.

'புதியதாக ஒன்று வேண்டும்' என்று மக்களின் மத்தியில் எதிரொலித்ததை வைத்து தனக்கான சுய தோற்றத்தை உருவாக்கி கொண்ட மக்ரோங், இன்னொரு பிரான்சுவா ஒல்லாந்தாக தான் முத்திரை குத்தப்படும் முயற்சிகளை தவிர்த்துவிட்டார்.

"ஃபிரான்சில், ஒரு வழியில் அதிக எதிர்மறையான மனநிலை பரவியிருக்கிறது. மக்ரோங் மிகவும் நேர்மறையான செய்தியோடு வந்தார்" என்கிறார் மார்க்-ஆலிவர் பாடிஸ்.

"அவர் இளைஞர். சக்தி நிறைந்தவர். பிரான்ஸூக்கு என்ன செய்வார் என்று அவர் விளக்கவில்லை. ஆனால், மக்கள் எவ்வாறு வாய்ப்புக்களை பெறுவர் என்று சொன்னார். இத்தகைய செய்தியை கொண்டிருந்தவர் இவர் மட்டுமே".

போராட்டம், பாப்பிசைபடத்தின் காப்புரிமைGETTY/AFP

மெரைன் லெ பென்னுக்கு பெரும் எதிரி

மக்ரோங்கின் அதிக நேர்மறை தொனிக்கு எதிராக அமைந்த மெரைன் லெ பென்னின் குடிவரவு எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு அடங்கிய பரப்புரைகள் அனைத்தும் எதிர்மறை செய்தியாக வந்தது.

மக்ரோங் பரப்புரை பேரணிகள் அனைத்தும் பிரகாசமான பகுதிகளில், பாப் இசை முழங்க நடைபெற்றதாக கூறுகிறார் எமிலி செச்சுல்தீஸ். ஆனால், மெரைன் லெ பென்னின் பரப்புரை பேரணிகளோ பாட்டில்களை எறிகின்ற, கோப உணர்வுகளை வெளிக்காட்டுகிற போராட்டக்காரர்களாலும், காவல் துறையினர், எதிர்மறை கருத்துடையோர் மற்றும் கோபமுடையோர் நிறைந்திருந்தாக இருந்தது. .

மே மாதம் 3ஆம் தேதி நடத்தப்பட்ட பெரியதொரு தொலைக்காட்சி விவாகத்தில், இரு பக்கத்தினராலும் அவமதிப்புக்குரிய தாக்குதல்கள் அதிகம் நிறைந்திருந்தன.

தந்தையின் அதே கடும்போக்கு பின்னணியோடு மெரைன் லெ பென், அச்சமறியா பெண்ணாக ஏமாற்றும் உள்நோக்கத்தில் அடுத்தவரை கவர எண்ணினார். லெ பென்னின் தந்தை ஒரு சோஷலிச பொம்மையாக இருந்தவர்.

ஸ்திரமில்லாத, பிளவுண்ட தீவிர வலதுசாரி அதிபர் வாய்ப்பை பெறுவதை பற்றி பலரும் எச்சரிக்கை அடைந்தனர். எனவே, மக்ரோங்கை மட்டுமே, லெ பென்னின் அதிபர் ஆகின்ற வழியில் கடைசி தடையாக பார்த்தனர்.

மெரைன் லெ பென் உயர் செயல்திறன் வாய்ந்த பரப்புரை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், பல மாதங்களாக அவருக்கு மக்களின் ஆதரவு குறைந்து கொண்டே வந்துள்ளது. 30 சதவீதத்திற்கு நெருக்கமான ஆதரவை கடந்த ஆண்டு அவர் கொண்டிருந்தார். என்றாலும், இரண்டு வாரங்களில் இருமுறை அவரை இம்மானுவேல் மக்ரோங் தாோல்வியடையச் செய்துள்ளார்.

 

http://www.bbc.com/tamil/global-39847381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.