Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத்தில் கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் உடனடியாக வாருங்கள் நியமனம் வழங்கத் தயார் - அமைச்சர் இராதாகிருஷ்ணன்

Featured Replies

மலையகத்தில் கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் உடனடியாக வாருங்கள்

நியமனம் வழங்கத் தயார் - அமைச்சர் இராதாகிருஷ்ணன்

கணித, விஞ்­ஞான உயர்­தர மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­கள் நாட்­டில் எங்­கி­ருந்­தா­லும் பர­வா­யில்லை. மலை­ய­கத்­தில் உங்­க­ளுக்கு ஆசி­ரி­யர் தொழில் செய்ய விருப்­பம் என்­றால் உட­ன­டி­யாக என்­னைத் தொடர்பு கொள்­ளுங்­கள். உங்­க­ளுக்­கான நிய­ம­னத்தை நான் பெற்­றுத் தரு­கின்­றேன்.

இந்­தி­யா­வி­லி­ருந்து பட்­ட­தா­ரி­க­ளைக் கொண்டு வரு­வதை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு நான் சவால் விடு­கின்­றேன். முடிந்­தால் அறிக்கை விடா­மல் உயர்­த­ரக் கணித, விஞ்­ஞான மாண­வர்­க­ளுக்கு கல்வி கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­க­ளைக் கொண்டு வந்து தாருங்­கள். இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வே.இரா­தா­கி­ருஷ் ணன் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவ­ரது அமைச்­சால் விடுக்­கப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள ­தா­வது,

மலை­ய­கத்­தில் தற்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்ள 25 கணித, விஞ்­ஞான பாட­சா­லை­க­ளுக்­கும் ஏனைய உயர்­த­ரத்­தில் கணி­தம், விஞ்­ஞா­னம் கற்­பிக்­கப்­ப­டும் பாட­சா­லை­க­ளுக்­கும், விஞ்­ஞான, கணித பாட ஆசி­ரி­யர்­களை இந்­தி­யா­வில் இருந்து வர­வ­ழைக்­கப்­ப­டு­வதை பலர் பல வித­மாக விமர்­சிக்­கின்­ற­ னர்.

அவர்­க­ளின் பிர­தான கேள்வி இலங்­கை­யில் பட்­ட­தா­ரி­கள் இல்­லையா? தற்­போது தொழி­லுக்­கா­கப் போராட்­டம் நடத்­தும் பட்­ட­தா­ரி­களை இணைத்­துக் கொள்­ள­லாம் தானே?. இவர்­க­ளில் எத்­தனை பேர் உயர்­தர கணித, விஞ்­ஞான மாண­வர்­க­ளுக்­குக் கல்வி கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­க­ளாக இருக்­கின்­றார்­கள். இவர்­க­ளில் பெரும்­பா­லோ­னோர் கலை மற்­றும் வர்த்­த­கப் பிரி­வுப் பட்­ட­தா­ரி­கள். இவர்­களை வைத்­துக் கொண்டு உயர்­த­ரத்­தில் எப்­படி கணித விஞ்­ஞா­னப் பிரிவை அபி­வி­ருத்தி செய்ய முடி­யும்.

இலங்­கை­யில் பட்­ட­தா­ரி­கள் வேலை­யில்­லா­மல் இருப்­ப­தும் அதற்­காக போராட்­டங்­கள் நடத்­து­வ­தும் எனக்­குத் தெரி­யும். இவர்­க­ளில் பெரும்­பா­லோ­னோர் கலை¸ வர்த்­த­கத் துறை­க­ளைச் சார்ந்­த­வர்­கள். இவ்­வாறு மலை­ய­கத்­தி­லும் உள்­ளார்­கள். போதிய அளவு கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­கள் இல்லை.

வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளின் ஆளு­நர்­கள்¸ முதல் அமைச்­சர்­கள், கல்வி அமைச்­சர்­க­ளை­யும் தொடர்பு கொண்டு கேட்­டோம். அங்கு இருந்­தா­லா­வது பட்­ட­தா­ரி­க­ளைத் தாருங்­கள். இங்­கும் போதிய அளவு கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தா­ரி­கள் இல்லை என்று அவர்­க­ளும் கூறு­கின்­றார்­கள்.

இதனை நிவர்த்தி செய்ய ஓய்வு பெற்ற கணித, விஞ்­ஞான ஆசி­ரி­யர்­க­ளைக் குறிப்­பிட்ட காலத்­துக்கு மீண்­டும் இணைக்­க­லாம் என்று எண்ணி நாடா­ளு­மன்ற அனு­ம­தி­யை­யும் பெற்­றோம். அதற்­கும் இது­வரை யாரும் விண்­ணப்­பிக்­க­ வில்லை. தற்­போ­தும் அவர்­கள் விண்­ணப்­பிக்­க ­லாம்.

தள­பா­டங்­கள் உட்­பட எல்­லாம் வழங்­கி­ய­போ­தும் போதிய அளவு ஆசி­ரி­யர்­களை வழங்க முடி­யா­மல் உள்­ளது. கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தா­ரி­கள் இலங்­கை­யில் உரு­வா­கும் வரை பொறுத்­தி­ருக்க முடி­யாது.

அத­னா­லேயே, இந்­தி­யத் தூது­வ­ரு­டன் பேசி இந்­தி­யா­வில் இருந்­தா­வது கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தா­ரி­க­ளைக் குத்­தகை அடிப்­ப­டை­யிலோ அல்­லது போர் கார­ண­மாக வடக்­கில் இருந்து இந்­தி­யா­வுக்கு அக­தி­க­ளா­கச் சென்று அங்கு படித்து முகாம்­க­ளில் இருக்­கும் கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தா­ரி­களை இலங்­கைக்கு அழைத்து நிய­ம­னம் வழங்­க­லாம் என்று ஒரு திட்­டத்­தைக் கொண்டு வந்­தேன். இவர்­களை இங்கு அழைப்­ப­தன் ஊடாக அவர்­க­ளின் மீள் குடி­யேற்­ற­மும் உறுதி செய்­யப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளும் இலங்­கை­யர்­கள் தானே. அவர்­க­ளுக்கு நிய­ம­னம் வழங்­கு­வ­தில் தவ­றில்லை.

தற்­போது வடக்கு மற்­றும் கிழக்­கில் போராட்­டம் நடத்தி வரும் பட்­ட­தா­ரி­க­ளி­டம் கதைத் தோம். உங்­க­ளுக்கு மலை­ய­கத்­தில் சேவை செய்ய முடி­யும் என்­றால் வாருங்­கள் என்று அவர்­கள் என்னை வந்­துச் சந்­திப்­ப­தா­க­வும் கூறி­ யுள்­ளார்­கள் – என்­றார்.

http://uthayandaily.com/story/2000.html

8 hours ago, நவீனன் said:

கணித, விஞ்­ஞான உயர்­தர மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கக் கூடிய பட்­ட­தா­ரி­கள் நாட்­டில் எங்­கி­ருந்­தா­லும் பர­வா­யில்லை. மலை­ய­கத்­தில் உங்­க­ளுக்கு ஆசி­ரி­யர் தொழில் செய்ய விருப்­பம் என்­றால் உட­ன­டி­யாக என்­னைத் தொடர்பு கொள்­ளுங்­கள். உங்­க­ளுக்­கான நிய­ம­னத்தை நான் பெற்­றுத் தரு­கின்­றேன்.

போராட்டம் நடத்தும் வடமாகாண பிச்சைகாரப் பட்டதாரிகளுக்கு அதற்கான தகுதிகள் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

வடக்­கில் இருந்து இந்­தி­யா­வுக்கு அக­தி­க­ளா­கச் சென்று அங்கு படித்து முகாம்­க­ளில் இருக்­கும் கணித, விஞ்­ஞா­னப் பட்­ட­தா­ரி­களை இலங்­கைக்கு அழைத்து நிய­ம­னம் வழங்­க­லாம்

இதை வரவேற்க்கலாம் 

ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கலைபாடத்தில்  பட்டம் பெற்றவர்கள் அவர்களுக்கு விஞ்ஞானம் கணிதம் சுட்டுப்போட்டாலும் வராது அமைச்சரே  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.