Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ தமிழர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு

Featured Replies

ஈழ தமிழர்களோடு சமகால அரசியல் சம்பந்தமாக கலந்துரையாடும் பொழுது எல்லோரும் கூறுவது இந்தியாவின் உதவியின்றி ஈழ தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பது கடினம் என்றும் ஆனபடியால் இந்தியாவுடன் நல்லுறவை பேணப்படவேண்டும் என்பதேயகும். இவற்றுள் இரண்டு பொருள் பொதிந்துள்ளது ஒன்று இந்தியா தமிழர்களுக்கு உதவி செய்தோ அல்லது இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தோ பிரச்சினையை தீர்ப்பார்கள் இரண்டாவது தீர்ப்பது போல் நடித்து தீர்வை குழப்பியடிப்பார்கள் என்பதுதான். பெரும்பாண்மையான  ஈழ தமிழர்கள் அமைப்புகளும் மக்களும் கருதுவது இந்தியா  இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தாவது  பிரச்சினையை தீர்த்துவைப்பார்கள் என்பதாகும் ஆனால் எனது அபிப்பிராயம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது இந்தியா ஒரு காலத்திலும் ஈழ தமிழர்கள் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை இதைப்பற்றி சரியாக புரியவேண்டுமென்றால் முதலில் இல்ங்கை இந்தியா கடந்தகால சரித்திரத்தை அறியவேண்டும்.

நாங்கள் சிறுவயதில் சரித்திர பாடங்களில் படித்ததெல்லாம் சேர, சோழ பாண்டிய மன்னர்கள் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக இலங்கை மீது படையெடுத்து சிங்கள மன்னர்களுடன் போரிட்டார்கள் என்பதேயாகும். இதன் மூலம் தமிழர்கள் சிங்களவர்களின் எதிரியாகவும் இந்தியா தமிழ்ர்களின் நண்பனாகவும் கருதப்பட்டது. இதன் மூலம் இந்தியா எமது தாய் நாடு என்றும் இந்தியாவுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளதென்றும் இந்தியா எங்களுக்கு உதவி செய்வார்கள் என்றும் ஒரு தப்பபிராயம் தமிழர்களின் மனதுகளில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியா என்பது திராவிட ஆரிய மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு நாடு இவர்களுள் தென்னிந்தியாவில் உள்ள சேர சோழ பாண்டிய திராவிட மன்னர்கள் மட்டுமே இலங்கையில் உள்ள தமிழ் மன்னர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதுதான் உண்மை. ஆரிய மன்னர்கள் யாரும் உதவி செய்ததாக நான் அறியவில்லை. இராமாயணத்தில் கூட ஆரிய மன்னனான இராமன் வழிநெடுக கழுகு, குரங்கு, அணில் போண்ற பலரிடம் உதவிகளைப் பெற்று தனித்து நின்ற இலங்கை திராவிட மன்னன் இராவணணை வெற்றிகொண்டான் என்பது இதிகாசம். இப்பொழுது 2009ல் நடந்ததை பாருங்கள் ஆரிய ஆட்சியைக் கொண்ட இந்தியாவும் ஆரிய இன வழி வந்த சிங்களமும் 38 நாடுகளுடன் சேர்ந்து உதவிகளின்றி தனித்து போராடிய தமிழ்ர்களின் போராட்டத்தை தோற்கடித்ததாக மார்தட்டிக்கொண்டது. இதன் பின்பும் பல அமைப்புகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழர் பிரச்சினையில் இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்றும் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்றும் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். திராவிட நாடாக இருந்த தென்னிந்தியா தற்பொழுது சுருங்கி தமிழ் நாடு என்ற பெயரில் ஆரிய ஆட்சி நடத்துகின்ற மத்திய அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களை மட்டுமே கொண்ட ஒரு மாநில அரசாங்கமாக ஆட்சி நடத்துகின்றது. இவர்களுக்கு முன்பு போல் இலங்கை மீது படையெடுப்பதற்கான பலமோ அதிகாரமோ இல்லை. அவர்களால் எங்களை வைத்து அரசியல் செய்யமட்டுமே முடியும்.

பெரும்பாண்மையான  ஈழ தமிழர்கள் அமைப்புகளும் மக்களும் கருதுவது போன்று இந்தியா அழுத்தம் கொடுத்தோ அல்லது உதவி செய்தோ தமிழர் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்பதை ஒரு வாதத்துக்கு எடுத்துகொள்வோம் சரி 1987ம் ஆண்டிலிருந்து 2017 வரை இந்தியா ஈழ தமிழினத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை யாராவது பட்டியல் போட்டு காட்டமுடியுமா? ஈழ தமிழர்கள் போராட்டம் பல கட்டங்களாக 1956ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது இந்த நிலையில் தமிழர் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று இந்திய அரசாங்கத்திடம் எதாவது ஒரு கொள்கை உண்டா? 1985ல் திம்பு மகாநாட்டில் எல்லா அமைப்புகளாலும் சேர்ந்து கொடுக்கப்பட்ட தீர்வுதிட்டத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்க்கு இந்தியாவால் அழுத்தம் கொடுக்கமுடியவில்லை தீர்வு திட்டத்திலுள்ள ஏதாவதொன்றை இலங்கை அரசாங்கம் ஏற்பதற்கு இந்தியாவால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை அதன் பின் 1987 ஆண்டு வடக்கு கிழக்கை நிரந்தரமாக இணைப்பதற்கோ அல்லது என்ன என்ன அதிகாரங்கள் மாகாண அரசுகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் சேர்ப்பற்கோ இல்ங்கை அரசாங்கத்துக்கு இந்தியாவால் அழுத்தம் கொடுக்கமுடியவில்லை மாறாக தமிழர் தரப்புக்கு அழுத்தம் கொடுத்து ஒண்றுமில்லாத ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பை கையெழுத்திட வைத்தார்கள். 1991ல் ராஜிவ் காந்தி கொலையின் பின் இலங்கை விடயத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக கூறியது ஆனால் உண்மையில் நடந்தது அதற்கு மாறாக இந்தியா மறைமுகமாக இலங்கை அரசையே ஆதரித்து நின்றது அதற்கு உதாரணம் வடக்கு கிழக்கு நிரந்தரமாக பிரிக்கப்பட்டது இதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா ஒண்றுமே செய்யவில்லை அத்துடன் 2009ல் இறுதிப்போரின்போது தமிழ் மக்களுக்கு உதவி புரிவதாக வந்த இந்திய அதிகாரிகள் விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு உதவி புரிந்ததை பல அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். 2009ல் போராட்டம் முடிவுக்கு வந்ததின் பின் மனித உரிமை கவுன்சிலில் தமிழர்களுக்கு சார்பான தீர்மானங்களை ஆதரிக்கும்படி தமிழ்நாட்டு மக்களால் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபொழுது புவிசார் அரசியலில் இலங்கை அரசுடன் பகைக்கமுடியாதென்றும் அப்படி இலங்கை அரசை பகைத்தால் சீனா இலங்கைக்குள் வந்துவிடுவார்கள் என்றும் அதன் மூலம் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்ப்படும் என்றும் இந்தியா பகிரங்கமாக கூறியது. இப்பொழுது நன்றாக கவணித்து பாருங்கள் இந்தியாவுக்கு தமிழர்கள் சார்பாக கடந்தகாலங்களில் ஏதாவது கொள்கையிருந்ததா ஏதாவது செய்யமுடிந்ததா? இலங்கை அரசாங்கம் எதை கூறியதோ அதை தமிழர்தரப்பு ஏற்கவேண்டும் என தமிழர் தரப்புக்கு இந்தியாவால் அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை, இந்தியா தமிழர்களுக்கு உதவி செய்வார்கள், பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று கூறும் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் சரி மற்றும் தனிநபர்களும் சரி இதுவரை தமிழினத்துக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டுகாட்டுவார்களா? இதுவரைகாலம் இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த நன்மையெல்லாம் 50000 வீடுகள் கட்டுவதற்கு பண உதவி செய்தது மற்றும் வடமாகாணசபை தேர்தல் நடாத்துவதற்கு அழுத்தம் கொடுத்தது அத்துடன் மீள்குடியேற்றத்துக்கு மண்வெட்டி பிக்கான் கொடுத்தது மட்டுமே, இவையாவும் தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகளாகவே கருதவேண்டும். மக்கள் நன்றாக சிந்தித்து பார்க்கவேண்டும் தமிழினத்துக்கு செய்வது வேறு தமிழ் மக்களுக்கு செய்வது வேறு. தமிழ் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள், தனிநபர்கள் மற்றும் பொதுஅமைப்புக்களால் உதவி செய்யமுடியும் ஆனால் தமிழினத்துக்கான தீர்வுக்கு இந்தியாவால் மட்டுமே அழுத்தம் கொடுக்கமுடியும் என தமிழினம் நம்பியிருந்தது  ஆனால் நடந்தது வேறு இந்தியா சிங்கள அரசாங்கத்துக்கு நண்பனாகயிருக்கவே விரும்பியது அத்துடன் இந்தியா தமிழ் இனத்துக்கு செய்த தீமைகளை பாருங்கள் 1957 ஆண்டில் இலங்கை அரசாங்கம் தந்தை செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலை 1987ல் இந்தியாவின் தலையீட்டின் மூலம் முஸ்லீம் மக்கள் விரும்பினால்(சர்வசனவாக்கெடுப்பு) மட்டுமே கிழக்குமாகாணம் தமிழர் தாயகம் என ஏற்றுக்கொள்ளப்படும் என மாற்றப்பட்டது (வடக்கு கிழக்கு இணைப்பைப்பற்றி குறிப்பிடுகிறேன்) அதன் பின் நடுனிலை வகித்த காலம் சரி இன்றையகாலம் சரி வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு அப்படியானால் எப்பொழுது சாத்தியப்படும் என தமிழர்தரப்பினால் இந்தியாவிடம் கேட்கப்பட்டதா?. இலங்கை அரசாங்கமோ அல்லது முஸ்லீம் மக்களோ வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தமிழர்தரப்புக்கு என்ன மாற்று தீர்வை நடுனிலை வகிக்கும் இந்தியா  இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்தது என்பது புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தும்பொழுது தெரியவரும். வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பதன் தாற்பாரியம்  வடமாகாணம் மட்டுமே தமிழர் தாயகமாக புதிய அரசியல்மைப்பு மூலம் மாற்றப்படபோகின்றது. காரணம் இன்னும் 5-10 வருடங்களில் வன்னி மாவட்டத்தில் நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றம் மூலம் யாழ்மாவட்டம் மட்டுமே தமிழர் தாயகமாக மாற்றப்படும். 1956ம் ஆண்டிலிருந்து வலுப்பெற்று வந்த தமிழர் போராட்டம் 2009ல் துடைத்தழிக்கப்பட்டு பலவீனமாக்கப்பட்டது. 2009ம் ஆண்டின் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜதந்திரம் என்ற போர்வையில் இந்திய அனுசரனையுடன் சரனாகதி அரசியல் நடாத்துகின்றது.

 இவ்வள்வு நடந்ததின் பின்பும் இதே அமைப்புகள் இந்தியாவின் உதவியைத்தான் நம்பியிருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இந்த அமைப்புகளில் ஏதாவது அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட 1956ம் ஆண்டிலிருந்து உக்கிரமடைந்த தமிழ்ர் பிரச்சினைக்கு என்ன தீர்வை வைத்திருக்கின்றீர்கள் என இந்தியாவிடமோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளிடமோ கேட்டிருக்கிறார்களா? எந்த அரசியல் கட்சியிடமும் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு திட்டமும் இதுவரை இல்லை என்பதுதான் உண்மை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் பதவிக்கு வந்தவுடன் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி குழு அமைப்பார்கள் அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் அஞ்சல் ஓட்டம் ஓடுவார்கள் தமிழர்தரப்பு எல்லோருக்கும் அரசியல் பாடம் நடத்துவார்கள் அதனை இந்திய அதிகாரிகள் கவலையுடன் கேட்டுக்கொள்வார்கள் ஆனால் என்ன பிரயோசனம் இந்தியாவிடமாவது தமிழர் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு திட்டம் உண்டா என்றால் இல்லையென்பதுதான் உண்மை. பத்திகையாளர்கள் சந்திப்பில் மட்டும் அதிகாரபகிர்வுமூலம் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பார்கள். இதன் விளக்கம் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்? ஏன் அவர்களால் வெளிப்படையாக பொலிஸ் காணி அதிகாரம் உள்ளிட்ட சமஸ்டி முறையிலான அதிகாரபரவலாக்கல் என்று கூறமுடியமலிருக்கின்றது காரணம் இந்தியா சிங்களவர்களுக்கு நண்பனாக இருக்கவிரும்புகிறார்கள் இலங்கையின் நட்பு அவர்களுக்கு தேவை என்பதுதான் உண்மை தமிழ்ர்கள் மீது இந்தியாவிற்கு அக்கறையும் இல்லை தேவையும் இல்லை காரணம் தமிழ்ர்கள் பலமற்றவர்கள்,இவர்களால் தங்களை என்ன செய்யமுடியும் என்ற இறுமாப்பு அத்துடன் தாங்கள் சொல்வதையெல்லாம் தமிழ்ர் தரப்பு கேட்க வேண்டுமென்பதே  இந்தியாவின் நிலைப்பாடு அத்தோடு தமிழர்களை வைத்து வியாபாரம் செய்வதே அவர்கள் நோக்கம்,. அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இந்தியாவுக்கு சென்று  இந்திய பிரதமரை சந்திக்கமுடியாமலிருக்கின்றது ஒரு முறை தமிழ் தேசிய கூட்டமைபினர் டெல்லி சென்று பத்து நாட்கள் வரை காத்திருந்து சந்திக்கமுடியாமல் திரும்பிவந்தது சரித்திரம். தமிழ் தேசிய கூட்டமைபினரால் கொழும்பிலுள்ள தூதுவரை மட்டுமே சந்திக்கமுடியும் அத்துடன் பத்திரிகைகளில் அறிக்கை விட மட்டுமே முடியும். ஏன் இந்தியா தமிழர்களை இப்படி நடத்தவேண்டும்? காரணம் இந்தியா தமிழ்ர்களை இரண்டாம் பெண்டாட்டி ஸ்தானத்திலேயே வைத்திருக்கிறார்கள் அவர்களால் தமிழ்ர்களுடன் தொடர்பு வைப்பதற்கோ வெளிப்படையாக தமிழ்ர்களைப் பற்றி பேசுவதற்கோ முதலாம் பெண்டாட்டியான சிங்களவர்களுக்கு அஞ்சுகிறார்கள். இந்தியாவிற்கு தமிழர் தரப்புடன் கள்ளதொடர்பு வைப்பதன் மூலம் முதலாம் பெண்டாட்டியான சிங்களவர்களிடமிருந்து எவளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார செயலாலரை சந்தித்துவிட்டு பத்திரிகைகளுக்கு கூறும் பொழுது வடக்கு கிழக்கு இணைப்பு தற்பொழுது சாத்தியப்படாதென்றும் தொடர்ந்து போராடும்படி வெளிவிவகார செயலாலரால் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதன் அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா? அதன் சரியான அர்த்தம் நீங்கள் தொடர்ந்து போராடுங்கள் நாங்கள் (இந்தியா) இலங்கையிடமிருந்து பெறவேண்டிய வியாபாரங்களை பெற்றுக்கொண்டுயிருப்போம் என்பதுதான், இதில் கூட்டமைப்பினருக்கு என்ன வகிப்பாகம் என்பது தெரியவில்லை ஏனென்றால் சாதாரன மனிதன் எனக்கு புரியும்பொழுது எப்படி கூட்டமைப்பினருக்கு புரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாகயிருக்கிறது (இன்னுமொரு விக்கிலீக்ஸ் வந்தால்தான் தெரியும் கூட்டமைப்பு என்ன பேசுகின்றது என்பது).

அடுத்த பகுதியில் தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

  • தொடங்கியவர்

முதல் பதிபில் கூறப்பட்ட காரனங்களிருந்து  இந்தியாவால் தமிழர் தரப்புக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன், இனியும் தமிழர் தரப்பு இந்தியாவை உதவி செய்யும் என்றும் அழுத்தம் கொடுக்குமென்று நம்பியிருந்தால் அது இலவு காத்த கிளியின் நிலைதான் ஏற்படும். மக்களே மேலே கூறிய காரணங்களிலிருந்து இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது புரிந்திருக்குமென்று நம்புகின்றேன். தமிழர் தரப்பு இந்தியா மீது நம்பிக்கைவைக்க முடியாவிடின் மாற்றுத்திட்டம் என்ன என்பதைப்பற்றியும் இதை எப்படி சமாளிக்கலாம் என்பதுதான் இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர்களிடம் ஒரு பழமொழியிருக்கின்றது அதாவது கீரைக்கடைக்கும் ஒரு எதிர் கடை வேண்டுமென்பார்கள். அதன் சுருக்காமான விளக்கம் முதலாம் கடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றால் இன்னொரு கடை அருகே வரவேண்டுமென்பதுதான். இதே முறையில் இந்தியாவை தமிழர்கள் தங்கள் வழிக்கு கொண்டுவரவேண்டுமென்றால் தமிழர்கள் இன்னொரு நாட்டின் பக்கம் தங்களது பார்வையை திருப்பவேண்டும்.அந்த நாடு பலமான நாடாகயிருக்கவேண்டும்  இதற்கு ஏற்ற நாடு சீனா என்பதுதான் எனது அபிப்பிராயம். நல்லாக யோசித்துபாருங்கள் நாங்கள் எதற்காக சீனாவை எதிரியாகபார்க்கவேண்டும். நன்றாக யோசித்து பாருங்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை. உலக நாடுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று எப்படி நல்லுறவை பேண விரும்பும்பொழுது பாதிக்கப்பட்ட தமிழர்தரப்புமட்டும் எதற்காக மற்றய நாடுகளுடன் உறவைபேணக்கூடாது? இதன் மூலம் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுடனும் உறவை பேணவேண்டும் என்பது எனது அபிப்பிராயம். வீட்டோ அதிகாரரமும் பலமான அரசாட்சியைக்கொண்ட சீனாவுடன் நட்பை ஏற்படுத்துவது பல பிரச்சினைகளையும் பல இனமக்களையும் வீட்டோ அதிகாரம் இல்லாத இந்தியாவிலும் பார்க்க சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். ஆரிய இந்திய ஆட்சியை எங்கள் தொப்புள்கொடியுறவென்றும் எங்கள் நட்பு நாடென்றும் தப்பு தப்பாக கணக்குபோட்டு மற்றய நாடுகளுடன் நட்பைபேண தவறிவிட்டோம். இதற்கு எங்கள் அரசியல் தலைவர்களும் ஒரு காரணம். 1960களில் எமது ஊர்களில் சீனா இல்ங்கை நட்புறவு கழகங்கள் பல இருந்தன ஆனால் இந்தியாவை நம்பி எல்லாவற்றையும் கைவிட்டோம் அதனால்தான் இந்தியா இப்பொழுது தான்தோண்றிதனமாக நடந்துகொள்கின்றது. எனது தனிப்பட்ட கருத்து இந்தியா தமிழர்களுக்கு எதுவுமே செய்யப்போவதிலை அத்துடன் இலங்கையை எதிர்த்து தமிழர்களுக்கு எதுவும் செய்யப்போவதிலை ஆனாலும் இந்தியா தமிழர்களின் நண்பன் என்பதை காண்பிப்பதற்கு கடைசியாக இந்தியாவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுதான் புதிய அரசியலமைப்பில் கிழக்குமாகாணதில் முஸ்லீம் அல்லாத பகுதிகள் வடமாகாணத்துடன் இணைக்கப்பட்டு அதிகாரம் கூடிய ஒரு மாநிலம் உருவாக இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். புதிய அரசியலமைப்பில் தமிழினத்துக்கு சாதகமாக தீர்வு கிடைக்காவிடின் தமிழர்கள்  புதிய கொள்கைகளை உருவாக்கவேண்டும் அத்தருணத்தில்  தமிழர் பார்வை சீனா பக்கம் திரும்பவேண்டும் தமிழர்கள் சீனாவை நண்பனாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இதன் மூலம் இலங்கையின் தென்பகுதியும் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளும் சீனாவின் நண்பர்களாக மாறுவார்கள். அதே நேரத்தில் வடகிழக்கு பகுதியில் இந்தியாவுக்கு எமது அதிருப்தியை காட்டவேண்டும் இதன் மூலம் இந்தியா தமிழர்தரப்புக்கு எதுவும் செய்யவில்லை என்பதை விளக்கவேண்டும். இதன் அர்த்தம் இந்தியாவை எதிரியாக கருதவேண்டும்மென்பதில்லை. சீனாவுடன் நட்பை உருவாக்குவதற்கு பல வழிகள் உண்டு அவை யாவன

தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள  அதிருப்திக்கான காரணத்தை விளக்கி இந்திய தூதுவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படவேண்டும்.

வடகிழக்கு பகுதிகளில் இலங்கை சீனா நட்புறவுகழகங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

வடமாகாணசபை அங்கத்தவர்கள் சீனா தூதுவராலயத்துக்கு சென்று வட மாகாணத்துக்கான அபிவிருத்திகளுக்கு உதவி கேட்கலாம் மற்றும் கலைக்குழுக்களை வரவழைக்கலாம்.

சீன அதிகாரிகளை தமிழ் பகுதிகளில் நடக்கும் விழாக்களுக்கு பிரதமவிருந்தினராக அழைக்கப்படவேண்டும்.

கனடா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீன மக்கள் வாழ்வதால் அந்த நாடுகளிலுல்ல தமிழ் அமைப்புகள் அவர்களுடன் நட்பைபேணி அவர்களை தமிழ்ர்பகுதிகளுக்கு அழைத்து வரவேண்டும் (இளைய சமுதாயத்தால் செய்ய்யமுடியும்).

மேலே கூறப்பட்ட காரணங்கள் முலம் இதுவரை இந்தியாவிடம் இருந்த வடக்கு கிழக்கு  மாகாணங்களுக்கான ஏகபோக உரிமை சீனாவுக்கும் பகிரப்படவேண்டிவரும்.இதன் மூலம் இந்தியாவை தமிழர்தரப்புக்கு சார்பாக கொண்டுவரமுடியும் காரணம் புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு தமிழர்கள் பகுதி தேவை. இது கிட்டத்தட்ட இலங்கை அனுகுமுறையையொத்தது. வடபகுதிக்கு சீனர்கள் தமிழர்களின் விருப்பத்தின்பேரில் வருவார்கலேயானால் அது இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும். இதன் மூலம் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்தியா தமிழர்களுக்கு ஏதாவது செய்தேயாகவேண்டும், உதாரணத்துக்கு கடந்த ஆட்சிமற்றதின்பொழுது தமிழர்களின் தேவை மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தேவையாகயிருந்தது இதன் பொழுது த.தே.கூ.மேற்குலக நாடுகளின் முன்னிலையில் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகலான சமஸ்டி அரசியலமைப்பு அல்லது வடகிழக்கு இணைப்பு ஏதாவதொன்றை  எழுத்துமூலம் உறுதி செய்திருக்கவேண்டும். ஆனால் சம்பந்தன் சுமந்திரனின் மேதாவிதனத்தால் தவறவிட்டுவிட்டோம். தந்தை செல்வாவுக்கு தெரியாத அரசியலா சுமந்திரனுக்கு தெரிந்துவிட்டது.

இது ஒரு ஆயுதபோராட்டமோ அல்லது அகிம்சைபோராட்டமோ இல்லை தமிழ்மக்கள் எல்லோரும் தங்கள் கடமையையுணர்ந்து செய்யும் ஒரு செயல் உதாரணத்துக்கு  சதாரண மக்களால் ஒரு மின்னஞ்சல் அனுப்பமுடியும் அதுபோல் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் சீன தூதுவராலயத்துடன் தொடர்பை ஏற்படுத்தலாம் அதேபோல் ஊர்களிலுள்ள விளையாட்டுகழகங்கள்  சீன தூதுவ அதிகாரியை பிரதமவிருந்தினராக அழைக்கலாம் இவையெல்லாம் செய்யமுடியாதவையில்லை. தமிழர்களின் பலவீனம் என்னவென்றால் எங்கலால் எதுவும் செய்யமுடியாது என நினைப்பதும் அத்துடன் எங்களுக்காக யாராவது உதவி செய்யவேண்டும் என நினைப்பதும்தான். எப்பொழுதும் அமெரிக்கா என்ன செய்யும் இந்தியா என்ன செய்யும் என நினைப்போம் இது மாறவேண்டும்.  

      நான் ஒரு எழுத்தாளனில்லை எழுத்து பிழை இலக்கண பிழைகளிருக்கலாம் ஆனாலும் எழுதிய           கருத்த்தில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை. உண்மையாக தமிழினத்தின் மீது அக்கறையிருந்தால்       தமிழ் புத்துஜீவிகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் மேற்கூறிய கருத்துக்களைக் குறித்து விவாதங்கள் நடாத்தவேண்டும் அத்துடன் புதிய கொள்கையொன்று உருவாக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இப்படிக்கு

சுகுதர்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழை,இலக்கணப் பிழையை விடுங்கோ...தலைப்புக்கும்,எழுதிய கருத்துக்கும் என்ன சம்மந்தம் புரியவில்லை

  • தொடங்கியவர்
7 minutes ago, ரதி said:

எழுத்துப் பிழை,இலக்கணப் பிழையை விடுங்கோ...தலைப்புக்கும்,எழுதிய கருத்துக்கும் என்ன சம்மந்தம் புரியவில்லை

ஈழ தமிழர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு என்னும் தலைப்பில் இரண்டு பந்தி எழுதியிருந்தேன் ஆனபடியால் இரண்டாம் பந்தியின் தலைப்பை நிர்வாகம் மாற்றினார்களோ தெரியவில்லை. நானும் இதை கவணித்தேன் ஆனால் என்ன செய்வதென எனக்கு தெரியவில்லை.மன்னிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Suguthar said:

இந்தியாவால் தமிழர் தரப்புக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன், இனியும் தமிழர் தரப்பு இந்தியாவை உதவி செய்யும் என்றும் அழுத்தம் கொடுக்குமென்று நம்பியிருந்தால் அது இலவு காத்த கிளியின் நிலைதான் ஏற்படும். மக்களே மேலே கூறிய காரணங்களிலிருந்து இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது புரிந்திருக்குமென்று நம்புகின்றேன். தமிழர் தரப்பு இந்தியா மீது நம்பிக்கைவைக்க முடியாவிடின் மாற்றுத்திட்டம் என்ன என்பதைப்பற்றியும் இதை எப்படி சமாளிக்கலாம் என்பதுதான் இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்தியா, உதவி செய்யும் என்று... நம்பியிருந்த காலம், புலிகளின் காலம்.:)
இப்ப... இந்தியா.... ஏன், ஈழத்து  தமிழரின் அயல் நாடாக இருந்தது? என்ற வருத்தமே.... பலரிடம் உள்ளது. :shocked:
சுத்து மாத்து.... இந்தியா... எமது,  அயல் நாடாக இருக்காமல், இருந்திருந்தால்.... tw_glasses:
இன்று.. உலக தமிழர்களுக்கு, ஒரு நாடு கிடைத்து...  ஐக்கிய நாடுகள் சபையில்,
தமிழ் ஈழக் கொடி... பட்டொளி  வீ சி  பறந்திருக்கும். tw_heart: 

இந்தியாவை.... இப்போ... ஈழத்து தமிழன் மட்டுமல்ல, தமிழகத்து தமிழனே நம்புவது இல்லை.
அரசியல் வாதிகளுக்கு... இனம், ஈழம், தன்மானம்.... எல்லாம், ஜாலி.... விளையாட்டு. tw_dissapointed:

Kein automatischer Alternativtext verfügbar.

Bildergebnis für karunanidhi hunger strike

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

முன்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட ஈழ தமிழர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு என்னும் கட்டுரையின் பகுதி-2 நேற்று தவறுதலாக பிள்ளையாரின் உண்மையான வரலாறு என்னும் தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.ஆனபடியால் பகுதி-2 மீண்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

முதல் பதிபில் கூறப்பட்ட காரனங்களிருந்து  இந்தியாவால் தமிழர் தரப்புக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன், இனியும் தமிழர் தரப்பு இந்தியாவை உதவி செய்யும் என்றும் அழுத்தம் கொடுக்குமென்று நம்பியிருந்தால் அது இலவு காத்த கிளியின் நிலைதான் ஏற்படும். மக்களே மேலே கூறிய காரணங்களிலிருந்து இந்தியாவின் நிலைப்பாடு இப்பொழுது புரிந்திருக்குமென்று நம்புகின்றேன். தமிழர் தரப்பு இந்தியா மீது நம்பிக்கைவைக்க முடியாவிடின் மாற்றுத்திட்டம் என்ன என்பதைப்பற்றியும் இதை எப்படி சமாளிக்கலாம் என்பதுதான் இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர்களிடம் ஒரு பழமொழியிருக்கின்றது அதாவது கீரைக்கடைக்கும் ஒரு எதிர் கடை வேண்டுமென்பார்கள். அதன் சுருக்காமான விளக்கம் முதலாம் கடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றால் இன்னொரு கடை அருகே வரவேண்டுமென்பதுதான். இதே முறையில் இந்தியாவை தமிழர்கள் தங்கள் வழிக்கு கொண்டுவரவேண்டுமென்றால் தமிழர்கள் இன்னொரு நாட்டின் பக்கம் தங்களது பார்வையை திருப்பவேண்டும்.அந்த நாடு பலமான நாடாகயிருக்கவேண்டும்  இதற்கு ஏற்ற நாடு சீனா என்பதுதான் எனது அபிப்பிராயம். நல்லாக யோசித்துபாருங்கள் நாங்கள் எதற்காக சீனாவை எதிரியாகபார்க்கவேண்டும். நன்றாக யோசித்து பாருங்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை. உலக நாடுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று எப்படி நல்லுறவை பேண விரும்பும்பொழுது பாதிக்கப்பட்ட தமிழர்தரப்புமட்டும் எதற்காக மற்றய நாடுகளுடன் உறவைபேணக்கூடாது? இதன் மூலம் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுடனும் உறவை பேணவேண்டும் என்பது எனது அபிப்பிராயம். வீட்டோ அதிகாரரமும் பலமான அரசாட்சியைக்கொண்ட சீனாவுடன் நட்பை ஏற்படுத்துவது பல பிரச்சினைகளையும் பல இனமக்களையும் வீட்டோ அதிகாரம் இல்லாத இந்தியாவிலும் பார்க்க சிறந்தது என்பது எனது அபிப்பிராயம். ஆரிய இந்திய ஆட்சியை எங்கள் தொப்புள்கொடியுறவென்றும் எங்கள் நட்பு நாடென்றும் தப்பு தப்பாக கணக்குபோட்டு மற்றய நாடுகளுடன் நட்பைபேண தவறிவிட்டோம். இதற்கு எங்கள் அரசியல் தலைவர்களும் ஒரு காரணம். 1960களில் எமது ஊர்களில் சீனா இல்ங்கை நட்புறவு கழகங்கள் பல இருந்தன ஆனால் இந்தியாவை நம்பி எல்லாவற்றையும் கைவிட்டோம் அதனால்தான் இந்தியா இப்பொழுது தான்தோண்றிதனமாக நடந்துகொள்கின்றது. எனது தனிப்பட்ட கருத்து இந்தியா தமிழர்களுக்கு எதுவுமே செய்யப்போவதிலை அத்துடன் இலங்கையை எதிர்த்து தமிழர்களுக்கு எதுவும் செய்யப்போவதிலை ஆனாலும் இந்தியா தமிழர்களின் நண்பன் என்பதை காண்பிப்பதற்கு கடைசியாக இந்தியாவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது அதுதான் புதிய அரசியலமைப்பில் கிழக்குமாகாணதில் முஸ்லீம் அல்லாத பகுதிகள் வடமாகாணத்துடன் இணைக்கப்பட்டு அதிகாரம் கூடிய ஒரு மாநிலம் உருவாக இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும். புதிய அரசியலமைப்பில் தமிழினத்துக்கு சாதகமாக தீர்வு கிடைக்காவிடின் தமிழர்கள்  புதிய கொள்கைகளை உருவாக்கவேண்டும் அத்தருணத்தில்  தமிழர் பார்வை சீனா பக்கம் திரும்பவேண்டும் தமிழர்கள் சீனாவை நண்பனாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இதன் மூலம் இலங்கையின் தென்பகுதியும் தமிழர்களின் வடகிழக்கு பகுதிகளும் சீனாவின் நண்பர்களாக மாறுவார்கள். அதே நேரத்தில் வடகிழக்கு பகுதியில் இந்தியாவுக்கு எமது அதிருப்தியை காட்டவேண்டும் இதன் மூலம் இந்தியா தமிழர்தரப்புக்கு எதுவும் செய்யவில்லை என்பதை விளக்கவேண்டும். இதன் அர்த்தம் இந்தியாவை எதிரியாக கருதவேண்டும்மென்பதில்லை. சீனாவுடன் நட்பை உருவாக்குவதற்கு பல வழிகள் உண்டு அவை யாவன

தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள  அதிருப்திக்கான காரணத்தை விளக்கி இந்திய தூதுவருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படவேண்டும்.

வடகிழக்கு பகுதிகளில் இலங்கை சீனா நட்புறவுகழகங்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்.

வடமாகாணசபை அங்கத்தவர்கள் சீனா தூதுவராலயத்துக்கு சென்று வட மாகாணத்துக்கான அபிவிருத்திகளுக்கு உதவி கேட்கலாம் மற்றும் கலைக்குழுக்களை வரவழைக்கலாம்.

சீன அதிகாரிகளை தமிழ் பகுதிகளில் நடக்கும் விழாக்களுக்கு பிரதமவிருந்தினராக அழைக்கப்படவேண்டும்.

கனடா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் சீன மக்கள் வாழ்வதால் அந்த நாடுகளிலுல்ல தமிழ் அமைப்புகள் அவர்களுடன் நட்பைபேணி அவர்களை தமிழ்ர்பகுதிகளுக்கு அழைத்து வரவேண்டும் (இளைய சமுதாயத்தால் செய்ய்யமுடியும்).

மேலே கூறப்பட்ட காரணங்கள் முலம் இதுவரை இந்தியாவிடம் இருந்த வடக்கு கிழக்கு  மாகாணங்களுக்கான ஏகபோக உரிமை சீனாவுக்கும் பகிரப்படவேண்டிவரும்.இதன் மூலம் இந்தியாவை தமிழர்தரப்புக்கு சார்பாக கொண்டுவரமுடியும் காரணம் புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு தமிழர்கள் பகுதி தேவை. இது கிட்டத்தட்ட இலங்கை அனுகுமுறையையொத்தது. வடபகுதிக்கு சீனர்கள் தமிழர்களின் விருப்பத்தின்பேரில் வருவார்கலேயானால் அது இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும். இதன் மூலம் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காக இந்தியா தமிழர்களுக்கு ஏதாவது செய்தேயாகவேண்டும், உதாரணத்துக்கு கடந்த ஆட்சிமற்றதின்பொழுது தமிழர்களின் தேவை மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் தேவையாகயிருந்தது இதன் பொழுது த.தே.கூ.மேற்குலக நாடுகளின் முன்னிலையில் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகலான சமஸ்டி அரசியலமைப்பு அல்லது வடகிழக்கு இணைப்பு ஏதாவதொன்றை  எழுத்துமூலம் உறுதி செய்திருக்கவேண்டும். ஆனால் சம்பந்தன் சுமந்திரனின் மேதாவிதனத்தால் தவறவிட்டுவிட்டோம். தந்தை செல்வாவுக்கு தெரியாத அரசியலா சுமந்திரனுக்கு தெரிந்துவிட்டது.

இது ஒரு ஆயுதபோராட்டமோ அல்லது அகிம்சைபோராட்டமோ இல்லை தமிழ்மக்கள் எல்லோரும் தங்கள் கடமையையுணர்ந்து செய்யும் ஒரு செயல் உதாரணத்துக்கு  சதாரண மக்களால் ஒரு மின்னஞ்சல் அனுப்பமுடியும் அதுபோல் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் சீன தூதுவராலயத்துடன் தொடர்பை ஏற்படுத்தலாம் அதேபோல் ஊர்களிலுள்ள விளையாட்டுகழகங்கள்  சீன தூதுவ அதிகாரியை பிரதமவிருந்தினராக அழைக்கலாம் இவையெல்லாம் செய்யமுடியாதவையில்லை. தமிழர்களின் பலவீனம் என்னவென்றால் எங்கலால் எதுவும் செய்யமுடியாது என நினைப்பதும் அத்துடன் எங்களுக்காக யாராவது உதவி செய்யவேண்டும் என நினைப்பதும்தான். எப்பொழுதும் அமெரிக்கா என்ன செய்யும் இந்தியா என்ன செய்யும் என நினைப்போம் இது மாறவேண்டும்.  

      நான் ஒரு எழுத்தாளனில்லை எழுத்து பிழை இலக்கண பிழைகளிருக்கலாம் ஆனாலும் எழுதிய     கருத்த்தில் பிழையிருப்பதாக நான் கருதவில்லை. உண்மையாக தமிழினத்தின் மீது அக்கறையிருந்தால்       தமிழ் புத்துஜீவிகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் மேற்கூறிய கருத்துக்களைக் குறித்து விவாதங்கள் நடாத்தவேண்டும் அத்துடன் புதிய கொள்கையொன்று உருவாக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.