Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிரதமர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளார் – எல்லே குணவன்ச தேரர்

Featured Replies

இந்திய பிரதமர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளார் – எல்லே குணவன்ச தேரர்

 

elle-gunawansa-thero.jpg
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளதாக தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இன சமூகத்திற்கு மட்டும் இந்திய பிரதமர் உரையாற்றியுள்ளதாகவும் இது பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் மீதோ அல்லது இந்திய அரசாங்கம் மீதோ எவ்வித எதிர்ப்பும் கிடையாது என தெரிவித்துள்ள அவர்இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில் இந்தியா நோக்கியும் சில சந்தர்ப்பங்களில் சீனா, அமெரிக்கா நோக்கியும் சாய்வதாகவும் இந்த நாட்டை துண்டாடவோ அல்லது நாட்டின்  சொத்துக்களை விற்பனை செய்யவோ அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் சொத்துக்களை பாதுகாக்க  வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள எல்லே குணவன்ச தேரர் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளித் தமிழர்களும் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/archives/26697

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் சொத்துக்களை பாதுகாக்க  வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள எல்லே குணவன்ச தேரர் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளித் தமிழர்களும் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த குடும்பத்துக்கல்லவா இந்த உபதேசத்தை முதலில் உபதேக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

1987 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாதிட்ட பொழுது கொழும்பு நகரில் உள்ள சொத்துக்களை எரித்து நாசமாக்கி இந்தியாவுக்கு எதிராக எதிர்ப்பு காட்டிய மாதிரி ஏன் இப்ப எதிர்ப்பு காட்ட முடியவில்லை.இந்தியாவுக்கு பயந்தா அல்லது சர்வதேசத்திற்கு பயந்தா?

பவுத்த மதத்தை இழிவு படுத்த  தங்களுக்கு போட்டியாக மோடி வந்துவிடுவாரோ என்ற கவலை தேரருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.