Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போட்டி அரசியல்

Featured Replies

போட்டி அரசியல்

 

மலை­யக அர­சியல் தொழிற்­சங்க நிலை­மைகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­வது தெரிந்த விட­ய­மாகும். இவ்­விரு சாரா­ரி­னதும் மக்கள் நலன்­க­ரு­திய செயற்­பா­டுகள் தொடர்பில் கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றன. உச்­ச­கட்ட சேவை­களை இவர்கள் மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுப்­பதில் இருந்தும் பின் நிற்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதற்­கி­டையில் மலை­ய­கத்தில் நிலவும் போட்டி அர­சியல் கலா­சா­ர­மா­னது மலை­யக மக்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ள தடைக்­கல்­லாக இருப்­ப­தாக பலரும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மலை­ய­கமும் அர­சி­யலும்

அர­சியல் என்­பது ஒரு சாக்­கடை என்­பார்கள். அர­சி­யலில் நிலவும் ஊழல்கள் மற்றும் முறை­கே­டுகள் குறித்து பலரும் விச­னப்­பார்­வை­யையும் செலுத்தி வரு­கின்­றனர். அர­சியல் சாக்­கடை என்­கிற கருத்தை மாற்றி பூக்­க­டை­யாக்கி மக்­க­ளுக்கு சேவை செய்த அர­சி­யல்­வா­தி­களும் எம்­மி­டையே இருக்­கத்தான் செய்­கின்­றார்கள். அர­சியல் பிர­வே­சத்தை சுய­நலன் கரு­திய நோக்கில் பயன்­ப­டுத்திக் கொள்­ளாது தனது சமூகம் சார்ந்த மக்­களின் மேன்­மைக்­காக பலர் பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். இவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொண்­ட­வர்கள் இறந்தும், மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்­கின்­றார்கள். இதே­வேளை, ஊழல் அர­சி­யல்­வா­திகள் வந்த வேகத்தில் திரும்பி விடு­வ­தையும் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தையும் நாம் பார்த்­தி­ருக்­கின்றோம்.

ஒரு சமூ­கத்தின் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் என்­பது மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாக கரு­தப்­ப­டு­கின்­றது. தன்னை நம்பி வாக்­க­ளித்து அர­சி­ய­லுக்கு அனுப்பி வைத்த மக்­க­ளுக்கு விசு­வா­ச­மா­கவும் அவர்­க­ளுக்கு உரிய உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்கும் வகை­யிலும் அர­சி­யல்­வா­திகள் நடந்து கொள்ள வேண்டும். இதி­லி­ருந்தும் தவ­று­கின்ற பட்­சத்தில் அவ­ரது அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் குறித்த கேள்வி எழு­கின்­றது. செயற்­பாட்டுத் திறன் தொடர்­பிலும் விமர்­ச­னங்கள் மேலெ­ழு­கின்­றன. உலகில் உள்ள பல பின்­தங்­கிய சமூ­கங்கள் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்தின் ஆளுமைமிக்க செயற்­பா­டுகள் கார­ண­மாக மேலெ­ழுந்து தேசிய நீரோட்­டத்தில் சங்­க­மித்­தி­ருக்­கின்­றன. வர­லா­றுகள் இதனை நன்­கு­ணர்த்­து­வ­தாக அமை­கின்­றது. இதே­வேளை, அர­சியல் ஆதிக்கம் இருந்­த­போதும் உரிய செயற்­பாட்­டுத்­திறன், ஆளுமை என்­பன இல்­லா­ததன் கார­ண­மாக அர்த்­த­மற்­றுப்­போகும் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய அர­சியல் பிர­தி­நி­தித்­து­வங்­க­ளினால் மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஒரு நன்­மையும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

இந்­த­வ­கையில், மலை­யக அர­சியல் நிலை தொடர்பில் நோக்­கு­கையில், இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிர­ஜா­வு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் பறிக்­கப்­பட்ட நிலை­யா­னது இம்­மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்­தினை கேள்­விக்­கு­றி­யாக்கி இருந்­தது. வாக்­கு­ரிமை மற்றும் பிர­ஜா­வு­ரிமை என்­ப­வற்றின் மீள்­பெ­று­கை­யா­னது மலை­யக அர­சி­யலில் கோலோச்­சு­வ­தற்கு உந்­து­சக்­தி­யாக அமைந்­தது. மலை­யக அர­சியல் குறித்த விமர்­ச­னங்­க­ளுக்கு குறை­வில்லை. இந்த விமர்­ச­னங்கள் இன்னும் தொடர்ந்த வண்­ண­மா­கவே இருக்­கின்­றன. மலை­யக அர­சி­யல்­வா­திகள் ஆட்­சியில் உள்ள அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­த­னையே பெரும்­பாலும் வழக்­க­மாக கொண்­டி­ருக்­கி­றது. எனினும் ஆட்­சிப்­பொ­றுப்பில் உள்ள அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­ட­போதும் மலை­யக மக்­களின் உரி­மைகள், தேவைகள் என்­பன உரி­ய­வாறு உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்­கின்­றன. மலை­யக அர­சியல்வாதிகள் அர­சியல் பிர­வே­சத்­திற்கு வாய்ப்­பாக தொழிற்­சங்­கத்­தினை பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். எனினும் தொழிற்­சங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் அர­சி­ய­லுக்கு நிக­ராக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தொழிற்­சங்­கங்கள்

மலை­ய­கத்தில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு குறை­வில்லை. ஆனால் எத்­தனை தொழிற்­சங்­கங்கள் தொழிற்­சங்க கலா­சா­ரத்தை பின்­பற்றி தொழி­லா­ளர்­களின் நலன்­க­ருதி செயற்­ப­டு­கின்­றன என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்டியிருக்­கின்­றது. அப்­பாவி தொழி­லா­ளர்­களின் சந்தாப் பணத்தில் சில தொழிற்­சங்­கங்கள் குளிர்­காய்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. சந்­தாப்­ப­ணத்தை ஏப்பம் விட்டு வயிறு வளர்க்­கின்­றன. தொழிற்­சங்க மூல­மான சேவைகள் தொழி­லா­ளர்­களை சென்­ற­டை­ய­வில்லை. தொழிற்­சங்­கத்­திற்கு அங்­கத்­தி­னர்­களை சேர்த்துக் கொள்­கையில் பல்­வேறு கைங்­க­ரி­யங்­க­ளையும் பின்­பற்றி பல வாக்­கு­று­தி­க­ளையும் அள்ளி வழங்கும் தொழிற் சங்­கங்கள் பின்னால் இவ்­வாக்­கு­று­தி­களை காற்றில் பறக்க விடு­வதும் புதிய விட­ய­மல்ல. இவை­யெல்லாம் நீங்கள் அறிந்த விட­ய­மே­யாகும்.

ஒரு தொழிற்­சங்கம் தனது அங்­கத்­தி­னரின் நலன்­க­ருதி சேவைகள் பல­வற்­றையும் வழங்க வேண்டியிருக்­கின்­றது. கல்வி அபி­வி­ருத்தி, கலை, கலா­சார, விளை­யாட்டு அபி­வி­ருத்தி, தொழில் உற­வுகள், அர­சியல் விவ­கா­ரங்கள் என்று பன்­முக சேவை­க­ளையும் வழங்க வேண்­டி­யது தொழிற்­சங்­கங்­களின் பொறுப்­பாக உள்­ளது. தொழில் பிரச்­சி­னை­க­ளினால் தொழி­லா­ளர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் நிலை வரு­மானால் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தைகள், சட்ட ரீதி­யான முயற்­சிகள், பல்­வேறு போராட்­டங்கள் என்­ப­வற்றின் ஊடாக தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க தொழிற்­சங்­கங்கள் முயற்­சி­களை மேற்­கொள்ளும். இந்த நட­வ­டிக்­கை­களை பின்­பற்றி எத்­தனை தொழிற்­சங்­கங்கள் தமது பணி­களை முன்­னெ­டுக்­கின்­றன என்ற கேள்வி மேலெ­ழு­கின்­றது. தொழிற்­சங்­கத்தின் மக்கள் நலன் கரு­திய செயற்­பா­டுகள் ஒரு­பு­ற­மி­ருக்க அர­சியல் ரீதி­யா­க பல்­வேறு உரி­மை­க­ளையும் மலை­யக சமூ­கத்­திற்கு பெற்றுக் கொடுக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

பிற தேவைகள்

மலை­யக மக்­களின் தேவைப்­பா­டு­களும் பிரச்­சி­னை­களும் நாளுக்கு நாள் நீண்டு கொண்டு செல்­வ­தாக கருத்­துக்கள் எதி­ரொ­லிக்­கின்­றன. காணி­யு­ரிமை, வீட்­டு­ரிமை என்­பன பெற்­றுக்­கொ­டுக்­கப்­படல் வேண்டும். தேசிய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற பணிகள் தொழி­லா­ளர்­களை வந்­த­டையும் வண்­ண­மாக நட­வ­டிக்­கைகள் விஸ்­த­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். இவற்­றோடு அர­சியல் ரீதி­யான உரி­மை­களும் எம்­ம­வர்­க­ளுக்கு அவ­சி­ய­மாக உள்­ளது. தனி­யான அதி­கார அலகு மலை­ய­கத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக சமூகம் பின்­தங்­கிய சமூகம் என்று கருதி விசேட உத­வி­க­ளையும் சலு­கை­க­ளையும் மலை­யக மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். இளைஞர் அபி­வி­ருத்தி கரு­திய திட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்க வேண்டும். இந்­தியத் தமிழர், இலங்கைத் தமிழர், முஸ்­லிம்கள் என்ற மூன்று இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் வகையில் மூன்று உப ஜனா­தி­ப­திகள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று புதிய அர­சியல் யாப்பு குறித்த பொது­மக்கள் கருத்­த­றியும் குழு­விடம் தனி­ந­பர்­களும் அமைப்­பு­களும் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தன. இவை­யெல்லாம் மலை­யக மக்­களின் தேவை­களை வலி­யு­றுத்­து­வ­தாக உள்­ளன.

கருத்­த­றியும் குழு­விடம் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேலும் பல முக்­கிய விட­யங்­க­ளையும் சுட்­டிக்­காட்ட முடியும். இத­ன­டிப்­ப­டையில் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் மலை­யக மக்கள் உரிய பங்­கினை வகிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­படல் வேண்டும். ஆட்­சி­ய­தி­காரம் பெரும்­பான்மை மக்­க­ளிடம் மட்­டுமே இருக்க வேண்­டி­ய­தில்லை. ஜன­நா­யக ரீதியில் அது மலை­யக மக்­க­ளுக்கும் பகி­ரப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தேர்தல் சீர்­தி­ருத்­தத்தின் போது மலை­யக மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­ப­டாத வண்ணம் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். கிராம இராச்­சி­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் மூல­மான சேவை விஸ்­த­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். மலை­யக மக்­க­ளுக்­கென்று அதி­கா­ரப்­ப­கிர்வு அலகு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக மக்கள் செறிந்து வாழும் நுவ­ரெ­லியா போன்ற பகு­தி­களில் இம்­மக்­க­ளுக்­கான பிராந்­தியம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு, அத­ன­டிப்­ப­டையில் அதி­கா­ரப்­ப­கிர்வு இடம்­பெ­றுதல் வேண்டும். நிலத்­தொ­டர்­பு­டைய அதி­கா­ரப்­ப­கிர்வு, நிலத்­தொ­டர்­பற்ற அதி­கா­ரப்­ப­கிர்வு என்று இரு­வி­ட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வி­ட­யங்கள் குறித்துக் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். மக்கள் பிர­தி­நி­திகள் சபை, செனட் சபை என்­பன ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும் என்­றெல்லாம் பல்­வேறு விட­யங்கள் கருத்­த­றியும் குழு­விடம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

தொழிற்­சங்க ரீதி­யிலும், அர­சியல் ரீதி­யிலும் எமது மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சி­யப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் மலை­யக கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும் உரிய கரி­ச­னையை இவற்றில் வெளிப்­ப­டுத்­தாது கருத்து பேதங்­களை வளர்த்துக் கொண்டு, பிரிந்து நின்று செயற்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

முரண்­பா­டுகள்

முரண்­பா­டுகள் என்­பது சகல மட்­டங்­க­ளிலும் மேலெ­ழும்­பு­வது இயற்­கை­யாகும். பேச்­சு­வார்த்­தைகள், விட்­டுக்­கொ­டுப்­புகள் என்­ப­வற்றின் மூல­மாக முரண்­பா­டு­க­ளுக்கு தீர்வு காண நாம் முற்­ப­டுதல் வேண்டும். இதனை விடுத்து முரண்­பா­டு­களை விப­ரீ­த­மாக்கிக் கொள்­வது புத்­தி­சா­லித்­த­ன­மல்ல. இந்த வகையில் மலை­யக அர­சியல், தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­க­ளுக்கு குறை­வில்லை. இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் நிகழ்வு ஏற்­பாடு தொடர்­பான விட­யங்­களில் கூட மலை­ய­கத்தின் பிர­தான கட்­சிகள் முரண்­பட்டுக் கொண்­டமை தொடர்பில் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். இந்­திய வம்­சா­வளி மக்­களின் தந்­தையை வர­வேற்­பதில் மலை­யக கட்­சிகள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் பலரும் தமது அதி­ருப்­தி­யினை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றார்கள்.

மலை­யக கட்­சி­க­ளி­டையே புரிந்­து­ணர்வு இல்­லா­தி­ருக்­கின்­றது. விட்­டுக்­கொ­டுப்­பு­களும் காணப்­ப­ட­வில்லை. கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான விரி­சல்கள் அதி­க­ரித்து செல்­லு­கின்ற நிலையில் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான சேறு பூசல் நட­வ­டிக்­கை­களே தொடர்ந்த வண்­ண­மாக உள்­ளன. பழைய மெத்­தையில் புதிய கல் என்­ற­வாறு நிலை­மைகள் தொடர்ந்து கொண்­டி­ருப்­ப­த­னையே அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஒரு கட்­சி­யினர் மேற்­கொள்ளும் நியா­ய­மான, மக்கள் நலன்­சார்ந்த விட­யங்­க­ளைக்­கூட மாற்றுக் கட்­சி­யினர் ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்லை. குற்றம் கூறுதல், விமர்­சனம் செய்தல் என்­ப­வற்­றி­லேயே காலம் போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது. தனிப்­பட்ட குரோ­தங்கள் கார­ண­மாக தொழி­லா­ளர்­களின் உரி­மைகள் பறிபோய்க் கொண்­டி­ருப்­ப­தாக பலரும் விச­னப்­பட்­டுக்­கொள்­கின்­றனர். ஒரு போராட்டம் வெற்றி பெறு­வ­தற்கும், உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் ஐக்­கியம் என்­பது மிகவும் அவ­சி­ய­மா­னது. இது இல்­லா­த­போது எல்லாம் பூஜ்­ஜி­ய­மா­கி­விடும். ஒரு சமயம் ஜவ­ஹர்லால் நேரு இலங்­கைக்கு வந்­தி­ருந்த சமயம் ஒற்­று­மையின் அவ­சி­யத்­தையே பிர­தா­ன­மாக வலி­யு­றுத்தி சென்­றி­ருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஆனால் ஒற்­றுமை இன்னும் எதிர்­பார்த்த அள­விற்கு சாத்­தி­யப்­ப­ட­வில்லை என்­பது வருந்­தத்­தக்க விட­ய­மே­யாகும்.

இதே­வேளை, ஐக்­கியம் என்­பது எல்­லோ­ரி­டத்­திலும் ஏக காலத்தில் ஏற்­பட்டு விடாது. காலப்போக்கில் சில புரிந்­து­ணர்­வு­களும் விட்­டுக்­கொ­டுப்­பு­களும் ஏற்­ப­டு­கையில் ஒற்­றுமை சாத்­தி­ய­மாகும். முரண்­பாடு என்­பது சிலவேளை­களில் ஏற்­ப­டலாம். அதனை நாம் சமா­தான வழியில் தீர்த்துக்கொள்ள வேண்டும். பொது­வி­ட­யங்­களில் மக்கள் நலன்­க­ருதி ஐக்­கி­யத்­துடன் செயற்­பட முற்­ப­டுதல் வேண்டும். இதனை நாம் ஒரு உடன்­பாட்டு நோக்கில் பார்க்­க­வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். எதி­ரான நோக்கில் பார்க்­கக்­கூ­டாது. ஐக்­கியம் ஏற்­படும் என்­கிற உடன்­பாட்டு சிந்­தனை மற்றும் நோக்கு என்­பன இங்கு அவ­சி­ய­மாக உள்­ளது. மலை­யக கட்­சிகள் ஒருபோதும், ஒரு­நாளும் ஒன்று சேரக்­கூ­டிய வாய்ப்­பில்லை. இது ஒரு முடி­யாத காரியம் என்ற எண்­ணங்­களை முதலில் விட்­டொ­ழிந்து ஒன்­றி­ணைத்து செயற்­ப­டு­வ­தற்­கான வழி­வ­கைகள் குறித்து ஆராய வேண்டும் என்று புத்­தி­ஜீவி ஒருவர் வலி­யு­றுத்தி இருக்­கின்­ற­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

மே தின நிகழ்­வுகள்

தொழி­லா­ளர்­களின் தின­மா­கிய மே தினம் அண்­மையில் இடம் பெற்­றது. தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளுக்கு குரல் கொடுக்க வேண்­டிய தினம் மேதினம் என்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும். ஆனால் தொழி­லா­ளர்­களின் முதுகில் ஏறி அர­சி­யல்­வா­திகள் பயணம் செய்­கின்ற ஒரு தின­மாக மேதினம் இன்று உரு­மாறிப் போய் இருக்­கின்­றது. தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளுக்­காக எத்­தனை கட்­சிகள் மேதி­னத்தில் குரல் எழுப்­பினர் என்று நினைக்கும் போது வேதனை ஏற்­ப­டு­கின்­றது. கட்­சிகள் மேதினக் கூட்­டத்தில் கலந்து கொள்ளும் ‘தலை­களை’ கணக்­கிட்டு திருப்தி கொள்­கின்­றன. ஆட்­ப­லத்­தையும் அர­சியல் பலத்­தையும் நிரூ­பிப்­ப­தற்கு ஒரு வாய்ப்­பாக மேதினக் கூட்­டங்­களை அர­சியற் கட்­சிகள் பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றன. ஏதோ அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக ஊறு­காயைப் போல் தொழி­லா­ளர்கள் தொட்டுக் கொள்­ளப்­பட்­டு­கின்­றார்கள்.

கட்­சி­க­ளுக்கிடை­யி­லான முரண்­பா­டு­களை வெளிச்சம் போட்டு காட்­டு­கின்ற ஒரு இட­மாக இன்று மேதின விழாக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களும் இதற்கு விதி­வி­லக்­காகி விட­வில்லை. அர­சியல் போட்­டி­களும் குரோ­தங்­களும் மே தின உரை­களில் எதி­ரொ­லித்­ததை தாரா­ள­மா­கவே காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இதன்­போது அர­சி­யல்­வா­திகள் மேதி­னத்தின் கருப்­பொ­ருளை விளங்கிக் கொள்­ள­வில்­லையா? என்ற நியா­ய­மான சந்­தேகம் மேலெ­ழும்­பு­வ­தையும் தவிர்க்க முடி­ய­வில்லை. சுருக்­க­மாகக் கூறு­மி­டத்து போட்டி அர­சியல் நிலை­மைகள் மேதி­னத்தின் கருப்­பொ­ருளை இன்று மழுங்­க­டிக்கச் செய்­தி­ருக்­கின்­றன. மேலும் மேதி­னத்தின் போது ஒவ்­வொரு கட்­சி­களும் தனது சிந்­த­னைக்கு ஏற்­றாற்போல் வெவ்­வேறு தீர்­மா­னங்­களை முன்­வைக்­கின்­றன.

மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை உள்­ள­டக்கி எல்லா கட்­சி­களும் பொது­வான தீர்­மா­னத்தை மேற்­கொள்­ளாத அல்­லது முன்­வைக்­காத ஒரு நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது. இது ஒரு குறை­பா­டாகும். கட்­சிகள் வேறு­பட்டு செயற்­ப­டினும் முக்­கிய தீர்­மான விட­யத்தில் ஒரு­மித்த தன்மை அவ­சி­ய­மாகும். இவ்­வாறு தீர்­மா­னத்தை முன்­வைப்­பதால் மட்டும் பய­னில்லை. அத்­தீர்­மானம் வெற்­றி­பெற உச்­சக்­கட்ட அழுத்­தங்­க­ளையும் கட்­சிகள் பிர­யோ­கிக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். இதை­வி­டுத்து இந்த மேதி­னத்தில் எடுக்­கப்­ப­டு­கின்ற தீர்­மா­னங்­களை அடுத்து வரு­கின்ற ஒரு மேதி­னத்­தி­லேயே தூசு தட்டிப் பார்ப்­போ­மானால் அதனால் எவ்­வி­த­மான நன்­மையும் ஒரு போதும் ஏற்­படப் போவ­தில்லை என்­ப­த­னையும் நன்­றாக விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும்.

தொழி­லாளர் தின­மா­கிய மேதினம் குறித்த ஒரு பொது­வான பார்­வை­யையும் குறிக்­கோள்­க­ளையும் தொழி­லா­ளர்­க­ளி­டையே முன்­வைப்­ப­தற்கு அர­சியல் கட்­சி­களும், தொழிற்­சங்­கங்­களும் முன்­வ­ருதல் வேண்டும். தொழி­லா­ளர்­களை திசை திருப்பி அவர்­களை மையப்­ப­டுத்தி குளிர்­காயும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சியல், தொழிற்­சங்­க­வா­திகள் ஒரு­போதும் முனைதல் கூடாது.

ஜே.வி.பி.என்ன சொல்­லு­கி­றது?

மலை­யக கட்­சி­களின் போட்டி, அர­சியல் நிலை­மைகள் மற்றும் பல விட­யங்கள் தொடர்பில் ஜே.வி.பி.யின் மத்­திய குழு உறுப்­பி­னரும், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சேகர் பின்­வ­ரு­மாறு தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்தி இருந்தார். போட்டி அர­சியல் என்­பது சமூ­கத்தை சீர­ழி­விற்கு இட்டுச் செல்ல உந்து சக்­தி­யாகும் என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை. பல சமூ­கங்­களில் நில­விய போட்டி அர­சியல் நிலை கார­ண­மாக சமூகம் வலு­வி­ழந்­தி­ருக்­கின்­றது. மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில் போட்டி அர­சியல் என்­பது ஒரு சாபக்­கே­டா­கவே இருந்து வரு­கின்­றது. இதனால் ஏற்­படும் குழப்­பங்­க­ளுக்கும் முரண்­பா­டு­க­ளுக்கும் குறை­வில்லை. பிர­தமர் மோடியை வர­வேற்­பதில் கூட மலை­ய­கத்தின் பிர­தான கட்­சி­க­ளி­டையே ஒரு­மித்த போக்­கினை காண முடி­ய­வில்லை. இது வருந்­தத்­தக்க ஒரு விட­ய­மாகும். மோடியின் வரு­கையின் ஊடாக மலை­ய­கத்­திற்கு நன்மை ஏற்­ப­டுமா? என்­பது சந்­தே­கமே. மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பல்­வே­று­பட்­ட­ன­வாக காணப்­ப­டு­கின்­றன. எனினும் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு மோடியால் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க முடியும் என்று நான் நம்­ப­வில்லை. மாறாக எமது நாட்டின் வளங்­களை சூறை­யா­டு­வ­தற்கே மோடியின் விஜயம் உந்து சக்­தி­யாக இருக்­கப்­போ­கின்­றது. இப்­ப­டி­யான ஒரு நிலையில் பிர­தமர் நரேந்­திர மோடியை வர­வேற்­பதில் மலை­யக கட்­சிகள் பிள­வு­பட்­டி­ருப்­ப­தென்­பது பிழை­யான ஒரு விட­ய­மே­யாகும்.

மலை­யக மக்­களின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். தீர்வு இருக்­காது. இதனை எம்­ம­வர்கள் நன்­றாக விளங்­கிச்­செ­யற்­ப­டுதல் வேண்டும். மலை­யக கட்­சி­க­ளுக்­கி­டை­யே­யான போட்டி என்­பது தங்­க­ளு­டைய அர­சியல் தொழிற்­சங்க இருப்­பினை தக்க வைத்துக்கொள்­வ­தற்­கா­கவே அல்­லாது மலை­யக மக்­க­ளுக்கு நன்­மை­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அல்ல என்­ப­தனை சக­ல­த­ரப்­பி­னர்­களும் நன்­றாக விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும். மலை­யக கட்­சிகள் பல்­வேறு விட­யங்­க­ளுக்­காக போட்டி போட்டுக்கொள்­கின்­றன. இவற்றை நாம் பல­வி­த­மாக பட்­டி­யல்­ப­டுத்த முடியும். பாட­சா­லை­களின் விழாக்­க­ளிலே பங்­கு­பற்­று­வ­திலே போட்டி, வீட­மைப்பு நிர்­மா­ணப்­ப­ணி­க­ளிலே போட்டி, வீதி­களை திறந்து வைப்­ப­திலே போட்டி, அபி­வி­ருத்தித் திட்ட செயற்­பா­டு­க­ளிலே போட்டி, நிதி­களை உரி­ய­வாறு பெற்­றுக்­கொள்­வ­திலே போட்டி, நிற்­ப­திலே போட்டி, நடப்­ப­திலே போட்டி என்று பல விட­யங்­க­ளிலும் போட்டி போட்டுக் கொள்­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

மக்கள் வாக்­க­ளித்து பிர­தி­நி­தி­களை அர­சி­ய­லுக்கு அனுப்பி வைத்­து­விட்டு பய­னின்றி பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மக்­களின் வறுமை நிலையும் பின்ன­டை­வான வாழ்க்­கை­யுமே என்­றென்றும் தொடர்ந்த வண்­ண­மாக இருக்­கின்­றது. இந்த நிலையில் மலை­ய­கத்தில் இருக்­கின்ற புத்­தி­ஜீ­வி­களும் மலை­யக மக்­களின் நலன்­களை நேசிப்­ப­வர்­களும் போட்டி அர­சியல் நிலை­மை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்க வேண்டும். போட்டி அர­சியல் ஏற்­ப­டுத்தும் பாதக விளை­வு­களை தெளி­வு­ப­டுத்த வேண்டும். மலை­யக இளை­ஞர்­க­ளுக்கும் இதில் கூடு­த­லான வகி­பாகம் இருக்­கின்­றது. ஒரு நாட்டில் இளைஞர் சக்தி என்­பது மிகவும் பெரி­ய­தாகும். உல­கத்தின் வர­லா­று­களை இளை­ஞர்கள் நல்­ல­ப­டி­யாக மாற்­றி­ய­மைத்த வர­லா­று­களும் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. இளை­ஞர்­களின் சக்தி பல அர­சியல் தலை­வர்­களின் வெற்­றிக்கும் உந்து சக்­தி­யாக இருந்­தி­ருக்­கின்­றது. இந்த வகையில் மலை­ய­கத்தில் கட்­சி­களின் போக்­கினை மாற்­றி­ய­மைப்­ப­தற்கும் நேர்­வ­ழியில் செல்ல வைப்­ப­தற்கும் இளை­ஞர்­களின் வகி­பாகம் என்­பது மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது. இளை­ஞர்­க­ளா­லேயே சமூக எழுச்­சிக்கு வித்­தி­டுதல் முடியும் என்­ப­தனை மறந்­து­வி­டுதல் கூடாது. எந்தக் கட்சி ஆட்­சிக்கு வந்­தாலும் மலை­யக கட்­சிகள் யாரோடு கூட்டு சேர்ந்­தாலும் போட்டி அர­சியல் என்­பது இருந்து கொண்­டேதான் இருக்­கின்­றது. மக்கள் இவரைக் காட்­டிலும் அவர் நல்­லவர். அவ­ரைக்­காட்­டிலும் இவர் நல்­லவர் என்று நினைத்து வாக்­க­ளித்து அர­சி­ய­லுக்கு எதிர்­பார்ப்­புடன் அனுப்பி வைக்­கின்­றார்கள். ஆனால் எல்­லோரும் ஒரே­வி­த­மான அர­சி­யல்­வா­தி­க­ளா­கவே இருப்­பது கசப்­பான உண்­மைதான்.

சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பதில் தோல்வி கண்­டி­ருக்­கின்­றன. எந்தவொரு அபி­வி­ருத்­தி­யையும் இம்­மக்­க­ளி­டையே ஆட்­சி­யா­ளர்கள் ஏற்­ப­டுத்­த­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யாகும். இத்­த­கைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பின்னே மலை­யக அர­சி­யல்­வா­திகள் ஓடிக் கொண்­டி­ருப்­ப­தென்­பது மலை­யக சமூ­கத்­துக்கு நன்மை விளை­விப்­ப­தாக அமை­யாது. போட்டி அர­சியல் நிலை­மை­யா­னது மலை­யக மக்கள் சமூ­கத்தை முன்­னேற்ற குரல் கொடுப்­ப­தனை மழுங்­க­டிக்கச் செய்­கின்­றது. அத்­தோடு மலை­யக கட்­சி­களின் பிற்­போக்­கான அர­சியல் செயற்­பா­டுகள் முன்­னி­றுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­தையும் குறிப்­பிட்­டாதல் வேண்டும்.

இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் உழைப்பை உறிஞ்சுவதனை சிலர் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். மலையக மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கு யாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நாட்டின் ஆட்சியாளர்களோ அல்லது இந்தியா மற்றும் பிரித்தானியாவோ எவருமே எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மலையக மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் மலையக மக்கள் மத்தியில் முதலில் ஒற்றுமை அவசியமாகும். அரசியல் கட்சிகளிடமும் இந்த ஐக்கியத் தன்மையானது வலுப்பெறுதல் வேண்டும். அந்த ஒற்றுமை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதா-? என்பது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கின்றது. மலையக மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய அரசியல்வாதிகள் இன்று பிரிந்து நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் கிடையாது. இத்தகைய ஒரு நிலையில் மலைய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவிடம் நியாயம் கேட்பதோ அல்லது பிரித்தானியாவிடம் நியாயம் கேட்பதோ சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படும் என்பதனையும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

இந்தியா இங்கிருந்து சென்ற அகதிகளைக் கூட மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே கருதி செயற்பட்டு வருகின்றது. அவர்கள் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். குரல் இல்லாத மக்களாக இன்னும் பலர் இந்தியாவில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மலையக மக்களின் நலன்கருதி இந்தியா காத்திரமான பங்காற்றும் என்று எவ்வாறு நம்ப முடியும். நாட்டுக்கு அநீதி ஏற்படுகையில் குரல் கொடுப்பதற்கு சிந்திப்பதனை தடுக்கும் வகையில் நாட்டு மக்கள் பிரித்தாளப்படுகின்றார்கள். இலங்கை, இந்தியா, பிரித்தானியா என்று எல்லா நாடுகளுமே இந்த பிரித்தாளும் தந்திரோபாயத்தினை பின்பற்றி வருகின்றன. மலையகத்தின் போட்டி அரசியல் சூழ்நிலை கட்சிகள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவேயாகும் என்று இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

கூத்தாடிக்கு கொண்டாட்டம்

மலையக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளுக்கு இடையேயான பிளவுகள் மலையக சமூகத்தை தடமிழக்கச் செய்துவிடும். இனவாத சிந்தனையாளர்கள் மலையக சமூகத்தை வேரறுக்கும் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நாம் எமக்கு நாமே முரண்பட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமல்ல. ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்கிற ஒரு நிலையை இது ஏற்படுத்திவிடும். மலையக கட்சிகள் இதனை சிந்தித்து தத்தமது செயற்பாடுகளில் மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

துரைசாமி நடராஜா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-13#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.