Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரின் காலைப் பிடித்து கதறிய தாய்மார்கள்!

Featured Replies

நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் எனவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுதசம்பவம் நேற்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போதே இச் சம்பவம்இடம்பெற்றுள்ளது.

இதன்போது சில தாய்மார் முதலமைச்சர் அஞ்சலி உரையாற்றுவதற்காக எழுந்து சென்ற போது,சம்பந்தன் ஐயாவை பேச விடாதீர்கள். அவரை வெளியேற்றுங்கள் ஐயா.

நாங்கள்சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான்நம்பியுள்ளோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதலமைச்சர்சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து கதறினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/146198?ref=view-latest

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களுக்கு.... இப்போது இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம், 
முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தவிர வேறு யாருமில்லை. 

சம்பந்தன் கோஸ்டியை... அவர்கள் நம்பத் தயாரில்லை என்பதே உண்மை.  

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று.... முள்ளிவாய்க்காலில், சம்பந்தன்  நல்லாய்... வாங்கி கட்டியிருக்கிறார்  போலை இருக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen

சம்பந்தன் , ஒழுங்காக அரசியல் செய்திருந்தால்....  இந்த அவமானம் நிகழ்ந்து இருக்காதே....

  • தொடங்கியவர்

வடக்கு முத­ல­மைச்­சரின் காலில் வீழ்ந்து கத­றி­ய­ழுத உற­வுகள்

p27-ec4ccdd2c43fd71c64a2cbb5c88b99a44bded73d.jpg

 

நெகிழ்ந்த மன­துடன் ஈகைச்­சு­டரை ஏற்­றினார் சி.வி.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந் தல் நிகழ்வின் பிர­தான அங்­க­மாக நினை­வேந்தல்  திடலில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பிர­தான ஈகைச்­சுடர் பகு­தியை நோக்கி ஈகைச் சுட­ரேற்­று­வ­தற்­காக வட­மாகா முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வருகை தந்­த­போது பிர­தான மேடைக்கு அரு­கா­மையில் நின்ற பெண்கள் மற்றும் தாய்மார் அரு­டைய கால­டியில் வீழ்ந்து கத­றி­ய­ழு­தனர். 

எங்கள் பிள்­ளைகள் எங்­களை விட்­டுப்­போய்­விட்­டார்கள். நாங்கள் அனைத்­தையும் பறி­கொ­டுத்து விட்டு அநா­தை­யாக நிற்­கின்றோம். அர­சி­யல்­பே­சிப்­பேசி எங்­களை ஏமாற்­று­கின்­றார்கள் ஐயா! தாங்­க­ளா­வது நியா­யத்தை பெற்­றுத்­த­ர­வேண்டும். நீங்­களே எங்­க­ளுக்கு இருக்கும் ஒரே­யொ­ருவர். ஏங்­க­ளிடம் இழப்­ப­தற்கு இனி எது­வு­மில்லை. அனைத்­தையும் இழந்து விட்டோம். எங்­களின் உயிர் மட்­டுமே உள்­ளது. அதனை விடவும் தயா­ரா­கவே இருக்­கின்றோம் என கத­றி­ய­ழு­த­வாறு முத­ல­மைச்­சரின் கால்­களை பற்­றிப்­பி­டித்­தனர்.

இந்­தக்­காட்சி நினை­வேந்தல் நிகழ்வில் குழு­மி­யி­ருந்­த­வர்கள் அனை­வ­ரையும் நெகி­ழச்­செய்­தது. இச்­ச­ம­யத்தில் வடக்கு முதல்வர் குனிந்து அந்த பெண்கள் மற்றும் தயார்­க­ளி­டத்தில் தயவு செய்து எழுந்­தி­ருங்கள். கவ­லைப்­ப­டா­தீகள் எனக் கூறி­ய­வாறு அவர்­க­ளுக்கு ஆறுதல் வார்த்­தை­களை பகிர்ந்­து­கொண்டார்.

சில­நி­மி­டங்கள் வரையில் கத­றி­ய­ழு­து­கொண்ட அந்த உற­வுகள் பின்னர் ஈகை சுட­ரேற்­று­வ­தற்கு வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு வழி­விட்­டுக்­கொ­டுத்­தனர். இருப்­பினும் தொடர்ந்தும் தேம்பித்தேம்பி அழுதவாறேயிருந்தனர். அவர்களிடத்திலிருந்து ஈகைச்சுடரேற்றுவதற்காக வருகை தந்த முதலமைச்சர் நெகிழ்ந்த மனதுடன் ஈகைச்சுடரேற்றினை ஏற்றி வைத்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-1

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள காணொளியில்....  
ஸ்ரீலங்கா எதிர்க்  கட்சித் தலைவர்... சம்பந்தன்,
வட  மாகாண முதலமைச்சர்... விக்னேஸ்வரனின் பின்னால்,
சொண்டை... கடித்த படி,  பதுங்கி.... நிற்பதை பார்க்க,
தமிழ்  கூட்டமைப்பு... கடந்த எட்டு வருடமாக நடத்திய பம்மாத்து  அரசியலை, 
இனியும் செய்ய முடியாது... என்ற முடிவுக்கு வந்திருப்பார், என்றே... கருதுகின்றேன்.  

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.