Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துப் படி இறுதியாட்டத்திற்க்கு வரும் ஆசிய அணிகள் அடுத்து வரும் உலக கிண்ணத்தில் முதல் சுற்று அல்லது 2ம் சுற்றிலேயே வெளியேறிவிடுவார்கள். 83ம் ஆண்டு உல கிண்ணத்தை எடுத்த இந்திய அணி 87ம் ஆண்டு முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது, 92ம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றிய பாக் அணி 96இல் 2ம் சுற்றில் இந்தியாவிடம் தோற்று வெளியேறினது, 96ம் ஆண்டு சம்பியன் இலங்கை 99இல் சுப்பர் சிக்ஸ் கூட போகவில்லை, 99இல் ஆஸியுடன் மோதிய பாகிஸ்தான் 2003இல் சுப்பர் சிக்ஸோடு வெளியேறியது, 2003ம் ஆண்டு இறுதியாட்டத்தைல் மோதிய இந்திய அணி என்னாகும்.......?

இல்லை. 83ல் வெற்றி பெற்ற இந்தியா, 87ல் இங்கிலாந்து அணியுடன் அறி இறுதிப் போட்டியிலேயே தோல்வி கண்டது. 99ல் அவுஸ்திரெலியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் சுப்பர் சிக்ஸருக்கு தெரிவாகவில்லை. (அவுஸ்திரெலியா,இந்தியா,சிம்ப

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply

பாகிஸ்தான் அணி பயிற்றுவிப்பாளருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கீரிக்கட்டு வியாதிக்காக பலிக்கடாவாக்கப்பட்ட ஒரு அப்பாவியின் மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது மிகவும் அக்கிரமம். கீரிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு, ஆனால் இதை விளையாட்டாக எடுக்காது வியாபாரமாகவும், போராகவும் மாற்றி வைத்திருக்கும் கீரிக்கெட்டு சமூகத்தின் மூஞ்சையில் காறித் துப்புகின்றேன்! தூ! :angry: :angry: :angry:

டோனியின் வீட்டை போய் இடிப்பது, திராவிட்டு, ஹர்பஜன், தென்டூல்கரின் படங்களை, கொடிகளை எரிப்பது, வீதிகளில் இறங்கி கலவரம் செய்வது, நன்றாக விளையாடாத கீரிக்கெட்டு வீரர்களை தூற்றுவது, கைது செய்யுமாறு கூறி கோசம் போடுவதெல்லாம் மிகவும், மிகவும் அநாகரிகம். இவர்களை கீரிக்கெட்டு இரசிகர்கள் என்று கூறுவதை விட கீரிக்கெட்டு இராட்சதர்கள், அரக்கர்கள் என்றுதான் கூற வேண்டும். இவர்களை நடுத் தெருவில் கட்டி வைத்து சவுக்கால் அடிக்க வேண்டும்.

இச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறந்த மனிதர் எனக்கு அறிமுகமில்லாதவர், நான் அறியாதவர், ஆனால் அப்பாவிகள் அக்கிரமமான முறையில் கொல்லப்படும் போது அதைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க நம்மால் முடியாது!

மீண்டும் இறந்த அந்த அப்பாவி மனிதனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!, இந்த அப்பாவியின் இறப்புக்குப் பின்னாவது கீரிக்கட்டு சமூகம் இனியாவது மனிதர்களாகத் திருந்தி வாழ் வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய பிரார்த்தனைகள்!

prod_P5294136155.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களில் முன்பு அவுஸ்திரெலியா ஊடகம் ஒன்றில் வாசித்த இந்தியாச் செய்தி. இந்தியர் ஒருவர் மேற்கிந்தியாவில் நடைபெறும் இறுதிப்போட்டியினைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவரிடம் சென்று பார்ப்பதற்கு காசு இருக்கவில்லை. அதனால் அவரது கிட்னி ஒன்றை விற்கத்தீர்மானித்தார். ஒரு கிட்னி இழந்தால் இன்னொரு கிட்னியுடன் வாழலாம். ஆனால் மேற்கிந்தியாவில் இம்முறை உலகக்கிண்ணத்தினை இந்தியா வெல்வதினை அங்கு சென்று பார்க்காவிட்டால் இன்னுமொரு முறை சென்று எப்பொழுது பார்ப்பது என்று கேட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்துடன் பாகிஸ்தான் தோழ்வி அடைந்தபின்பு பாகிஸ்தான் பயிற்சியாளர் Bob Woolmer இவ்வாறு பேட்டி அளித்திருந்தார்

"I am deeply hurt and cannot tell you how it is going to affect me"

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து ,பங்களதேச அணிகளின் வெற்றிகள் ஆச்சர்யத்தினைக் கொடுத்தாலும் பயிற்சிப்போட்டியில் பலமிக்க

நியூசிலாந்து அணியைத் தோற்கடித்ததன் மூலம் பங்களதேச அணி ஒரளவு பலமுள்ள அணிதான். அயர்லாந்து அணியும் பயிற்சிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை 192 ஒட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. பதிலுக்கு 157 ஒட்டங்களையும். பெற்றது. இதன் மூலம் அவ்வணியும் ஆக மோசமான அணி அல்ல என்றே சொல்லலாம். கென்யா அணி பயிற்சிப்போட்டியில் மேற்கிந்தியா அணியிடம் 21 ஒட்டங்களினாலேயே தோல்வி கண்டது. மேற்கிந்தியா 6 விக்கெட்டுக்கள் இழந்து பெற்ற 268 ஒட்டங்களுக்கு எதிர்த்து, கென்யா 7 விக்கெட் இழப்புடன் 247 ஒட்டங்களைப் பெற்றது. இதனால் கென்யா அணியும் சிலவேளை இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணி பயிற்றுவிப்பாளருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கீரிக்கட்டு வியாதிக்காக பலிக்கடாவாக்கப்பட்ட ஒரு அப்பாவியின் மரணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது மிகவும் அக்கிரமம். கீரிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு, ஆனால் இதை விளையாட்டாக எடுக்காது வியாபாரமாகவும், போராகவும் மாற்றி வைத்திருக்கும் கீரிக்கெட்டு சமூகத்தின் மூஞ்சையில் காறித் துப்புகின்றேன்! தூ! :angry: :angry: :angry:

டோனியின் வீட்டை போய் இடிப்பது, திராவிட்டு, ஹர்பஜன், தென்டூல்கரின் படங்களை, கொடிகளை எரிப்பது, வீதிகளில் இறங்கி கலவரம் செய்வது, நன்றாக விளையாடாத கீரிக்கெட்டு வீரர்களை தூற்றுவது, கைது செய்யுமாறு கூறி கோசம் போடுவதெல்லாம் மிகவும், மிகவும் அநாகரிகம். இவர்களை கீரிக்கெட்டு இரசிகர்கள் என்று கூறுவதை விட கீரிக்கெட்டு இராட்சதர்கள், அரக்கர்கள் என்றுதான் கூற வேண்டும். இவர்களை நடுத் தெருவில் கட்டி வைத்து சவுக்கால் அடிக்க வேண்டும்.

இச் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறந்த மனிதர் எனக்கு அறிமுகமில்லாதவர், நான் அறியாதவர், ஆனால் அப்பாவிகள் அக்கிரமமான முறையில் கொல்லப்படும் போது அதைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க நம்மால் முடியாது!

மீண்டும் இறந்த அந்த அப்பாவி மனிதனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!, இந்த அப்பாவியின் இறப்புக்குப் பின்னாவது கீரிக்கட்டு சமூகம் இனியாவது மனிதர்களாகத் திருந்தி வாழ் வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய பிரார்த்தனைகள்!

prod_P5294136155.jpg

தெற்கு ஆசியா நாடுகளில் மட்டும் தான் கிரிக்கெற்றை வியாபாரமாக்கி வைத்துள்ளார்கள் அத்துடன் தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த கிரிக்கெற் ரசிகர்கள் மட்டும் தான் வெறி கொண்டு அலைகின்றார்கள், விளையாட்டு வீரர்களை அடிக்கின்றார்கள், அவர்களுடைய வீடுகளை உடைக்கின்றார்கள், மிகவும் கேவலமான முறையில் அநாகரீகமாக நடந்து கொள்கின்றார்கள் உங்களுடைய இந்த குற்றச்சாட்டு தெற்கு ஆசியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் மற்றவர்களுக்கு அல்ல.

ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிலும், ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் கிரிக்கெற்றை மிகவும் கௌரவமான முறையில், நாகரீகமான முறையில் தான் விளையாடுகின்றார்கள் அவர்களுக்கு வெற்றியை சந்தோசமாக பகிர்ந்து கொள்ளவும் தெரியும் தோல்வியை கௌரவமான முறையில் ஏற்றுக்கொள்ளவும் தெரியும். கிரிக்கெற் என்பது நூறு வருடங்கள் பழமை கொண்ட சிறந்த ஒரு விளையாட்டு ஆரம்ப காலங்களில் அது மிகவும் மரியாதைக்கு உரிய ஒரு விளையாட்டாக தான் இருந்தது.

ஒரு சில நாடுகளில் இடம் பெறும் வன்முறைகள், லஞ்சம் வாங்குதல், பார்வையாளர்களின் வெறியாட்டம் போன்றவற்றை காரணம் காட்டி கிரிக்கெற் உலகை வெறுக்க முடியாது. உங்களுடைய இந்த கருத்துக்கள் தெற்கு ஆசியா பிராந்தியத்தில் இருக்கும் கிரிக்கெற் விளையாடும் நாடுகளுக்கு மட்டும் பொருந்தும்.

Bob Woolmer க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

ffffu8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரணத்தில் சதி ஏதாவது இருக்குமோ..?

இங்கிலாந்து பத்திரிகைகளில் இந்த செய்தியை எப்படி போட்டு இருக்கின்றார்கள் என்று இனைப்பை அல்லது செய்தியை போட முடியுமா?

  • தொடங்கியவர்

ஆடுகளம் எதிர்பார்த்தது போன்று இல்லை டிராவிட் கருத்து.

மைதானத்தில் மோசமாக செயற்பட்டதால் தோல்வியை சந்தித்தோம் என இந்திய அணித் தலைவர் ராகுல் டிராவிட் பங்களாதேஷ் உடனான அதிர்ச்சித் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: போதுமான ஓட்டங்களை எடுக்க தவறவிட்டோம். இன்னும் கூடுதலாக 30 அல்லது 40 ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும். 240 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தால் பங்களாதேஷை வீழ்த்தி இருக்க முடியும். முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆட தவறி விட்டோம். 240 ஓட்டங்கள் வரை எடுத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. எனவே, எங்களால் ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. இது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது சரியானதுதான். ஆனால் ஆடுகளம் மோசமாக இருந்தது. பந்துகள் எகிறி வந்தன. இதனை சரியாக கணிக்க முடியவில்லை. இதை பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இருந்தாலும் நாங்கள் கொஞ்சம் நன்றாகத் துடுப்பெடுத்தாடி இருக்க வேண்டும். ஆடுகளம் நன்றாக உலர்ந்து இருப்பது போல் தெரிந்தது. ஆனால் எதிர்பார்த்தமாதிரி இல்லை.

பங்களாதேஷ் பந்து வீச்சாளர்கள் முழு திறமையுடன் ஆடி எங்களை கட்டுப்படுத்தினார்கள். அடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முழு திறமையையும் அதில் பயன்படுத்துவோம்.

-Virakesari-

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா கைப்பற்றலாம்!

"மேற்கிந்தியத் தீவில் தற்போது ஆரம்பமாகியுள்ள 9 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு கூடுதலாக அவுஸ்திரேலிய அணிக்கே இருக்கின்றது. அடுத்த படியாகப் பார்த்தால், ஆசிய நாட்டு அணிகளிடையே, இலங்கையும் இந்தியாவும் சமபலத்துடன் தற்போது இருப்பதினால் இவ் இரு அணிகளுக்கும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு கூடுதலாக இருக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்".

இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ரி.ஏ.சேகர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலிய அணி கடைசியாக பங்குபற்றிய 5 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வி அடைந்தாலும் மனோ ரீதியில் இந்த தோல்விகள் அவர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அந்தளவுக்கு மனபலம், தன்னம்பிக்கை உள்ள வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி மிகவும் சிறந்த நிலையில் இருக்கின்றது. துடுப்பாட்டத்தில், அதிரடியாக துடுப்பெடுத்தாடும் வல்லமை இவ்வணியின் தலைவர் ரிக்கி பொண்டிங், மத்தியூ ஹேடன், கில்கிறிஸ்ட், சேன் வோட்ஷன் போன்ற வீரர்கள் எந்த அணியிலும் கிடையாது. இவர்களுடன் அன்றூ சைமனும் இணைந்து கொண்டால், அவுஸ்திரேலிய அணி மேலும் பலம் அடைந்துவிடும்.

ஆசிய அணிகளைப் பொறுத்தளவில், இலங்கை, இந்திய அணிகளுக்குத் தான் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. பாகிஸ்தான் அணியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த அணியில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. பாகிஸ்தான் அணி 1 ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவு அணியிடம் தோல்வியும் அடைந்துவிட்டது.

இந்திய அணியுடன் மிக நெருக்கமாக இருப்பது இலங்கை அணி தான். இந்திய அணியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்து வீச்சு வீரர்களும் இருக்கின்றார்கள். இதுபோல் இலங்கை அணியிலும் சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள். இவ்வணி அண்மைக்காலமாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. இலங்கை அணி கடைசியாக இந்திய அணியிடம் தோல்வி அடைந்தாலும், அவர்களுடைய திறமையை குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனாலும், இவ்விரு அணிகளிடமும் ஒரு சில பலவீனம் இருக்கத்தான் செய்கின்றது. இந்திய அணியிடம் பந்து தடுப்பில் பலவீனம் இருக்கின்றது. அதுபோல், இலங்கை அணியிடமும் துடுப்பாட்ட வரிசையில் பலவீனம் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது. இதேநேரம், பங்களாதேஷ் அணியின் ஆட்டம் அண்மைக் காலத்தில் சிறப்படைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. உதாரணத்துக்கு மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நியூஸிலாந்து அணியையே, பங்களாதேஷ் அணி, பயிற்சிப் போட்டியில் வெற்றி கண்டு தமது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், இந்திய, இலங்கை அணிகளுக்கு இந்த அணி இம்முறை பெரும் சவால் அணியாக விளங்கக் கூடும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் கிடையாது.

கடந்த காலங்களில், உலகக் கிண்ணப் போட்டிகளில், எதிர்பாராத அணிகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. இம்முறை அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், அது நியூஸிலாந்து தென் ஆபிரிக்க அணிகளாக இருக்கக்ககூடும். இந்த இரு அணிகளும் அண்மைக் காலமாக சிறப்பாக விளையாடி எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது என்று முன்னாள் வீரர் சேகர் தெரிவித்தார்.

-Thinakkural-

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு

உலககோப்பை போட்டியில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப்பட்டனர்.

இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரணமாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.

பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் "பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார் என்று கூறியுள்ளார்.

வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.

Lankasri Sports :

பெர்முடாவுடன் மோதல்: இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? போராட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி "பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இலங்கை, வங்காள தேசம், பெர்முடா ஆகிய அணிகள் இந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசத்திடம் அதிர்ச்சிகரமாக 5 விக்கெட்டில் தோற்றது. இந்த தோல்வியால் மிகுந்த நெருக் கடியில் உள்ளது. பெர்முடா, இலங்கை அணிகளை வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இலங்கை தொடக்க ஆட்டத்தில் 223 ரன்னில் பெர்முடாவை தோற்கடித் தது.

இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பெர்முடாவை இன்று எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது.

இந்தப் போட்டி இந்தியா வுக்கு வாழ்வாப சாவாப போராட்டம் ஆகும். பெர் முடாவை மிக அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண் டும். அப்போதுதான் இந்தியா தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.

அதே நேரத்தில் புதுமக அணியான பெர்முடாவை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோச மாக இருந்தது. ஷேவாக் நீக்கப்பட வேண்டியவரில் முதலாவதாக இருக்கிறார். மோசமாக பந்து வீசிய அகர்கர் இன்று கழற்றி விடப்படுகிறார். அவருக்கு பதிலாக கும்ப்ளேக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்திய ரசிகர்களின் ஒட்டு மொத்த கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்திய வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

இந்தியா-பெர்முடா இடையேயான இன்றயை ஆட்டம் இந்திய நேரடிப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், செட்மேக்சில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள வெஸ்ட்இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் மோது கின்றன. வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. ஜிம்பாப்வேயை இன்று வெற்றி பெற்றால் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஜிம்பாப்வே முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் டை செய்து இருந்தது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Lankasri Sports : .

சில நாட்களில் முன்பு அவுஸ்திரெலியா ஊடகம் ஒன்றில் வாசித்த இந்தியாச் செய்தி. இந்தியர் ஒருவர் மேற்கிந்தியாவில் நடைபெறும் இறுதிப்போட்டியினைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவரிடம் சென்று பார்ப்பதற்கு காசு இருக்கவில்லை. அதனால் அவரது கிட்னி ஒன்றை விற்கத்தீர்மானித்தார். ஒரு கிட்னி இழந்தால் இன்னொரு கிட்னியுடன் வாழலாம். ஆனால் மேற்கிந்தியாவில் இம்முறை உலகக்கிண்ணத்தினை இந்தியா வெல்வதினை அங்கு சென்று பார்க்காவிட்டால் இன்னுமொரு முறை சென்று எப்பொழுது பார்ப்பது என்று கேட்டிருந்தார்.

கந்தப்பு இதுகளுக்கு கிட்னி(மூளை) இருந்தா ஏன் இந்த பாடு

:):o

கந்தப்பு இதுகளுக்கு கிட்னி(மூளை) இருந்தா ஏன் இந்த பாடு

:):o

தற்கொலை செய்துகொள்ள தயாராகும் கிரிக்கெட் ரசிகர்

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக தனது சிறுநீரகத்தை விற்க அனுமதி கிடைக்கா விட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக இந்திய கிரிக்கெட் ரசிகர் தருண் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்குபெறும் ஆட்டங்களை நேரடியாக பார்ப்பதற்காக தனது சிறுநீரகத்தை விற்பனை செய்ய உள்ளதாக ஷர்மா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணி விளையாடுவதை நேரடியாகப் பார்க்க முடியாமல் போனால் தற்கொலை செய்து கொள்வதாக ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய சட்டத்தின்படி உடல் பாகங்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் தமது குடும்ப அங்கத்தவர்கள் ஒருவருக்கு தமது உடல் பாகத்தை வழங்க அனுமதி உள்ளமை குறிப்பிடத்தக்கது. புடைவைக் கடை ஒன்றில் விற்பனையாளராக உள்ள ஷர்மா மாதத்திற்கு 3000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.

இந்நிலையில் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதன் மூலம் 90,000 ரூபாயை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் 17 ஆம் திகதி பங்களாதேஷுடன் தனது முதல் ஆட்டத்தில் பங்குபெறவுள்ளது.

virakesari.lk

இந்திய 20/1 4ஓவர்ஸ். ஊத்தப்பா 3ஓட்டன்களுடன் அவுட் :P

கங்குலி 6ஓட்டங்களுடனும் சேவாக் 8 ஓட்டங்க்ளுடனும் களத்தில்

லாராவின் சிக்சர்களை நினைத்தே ஒரு ஓவரில் ஆறு சிக்சர் அடித்தேன்

* கிப்ஸ் கூறுகிறார்

லாராவின் முந்தைய அபார சிக்சர்களை மனதில் நினைத்தேன். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தேன் என்று கிப்ஸ் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஹொலண்டுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்களைக் குவித்தார். ஆட்டத்தின் 30 ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வான்புங்கா வீசினார். இதில் 6 பந்துகளையும் சிக்சர்களாக அடித்து கிப்ஸ் புதிய உலக சாதனை படைத்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர் கிப்ஸ் ஆவார். சாதனை குறித்து கிப்ஸ் கூறியதாவது;

ஒரே ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்சர்கள் அடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. குறிப்பிட்ட நாள் உங்களுக்கு சிறப்பு சேர்க்கக்கூடிய நாள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தால் அது கண்டிப்பாக நடந்தே தீரும். இந்த சாதனை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேற்கிந்திய கப்டன் லாராவின் டெஸ்ட் ஆட்டத்தை நான் உன்னிப்பாக கவனிப்பேன். இதில் சில சிக்சர்களை அவர் திறமையாக அடித்ததை பார்த்து ரசித்திருக்கிறேன். அதுபோல நானும் முயற்சி செய்தேன். சாதனை நடந்து விட்டது. மைதானம் சிறியதாக இருந்தது எனக்கு உதவிகரமாக இருந்தது. குறிப்பாக துடுப்பாட்டக்காரர்களுக்கு எதிரே உள்ள பவுண்டரி லைன் தூரம் மிகவும் குறைவாக இருந்தது.

முந்தைய நாள் இரவு நான் குடித்த மதுபானத்தில் ஏதோ ஒரு சிறப்பு இருந்தது போல் நினைக்கிறேன். முதல் 4 சிக்சர்கள் அடுக்கும் போது என்ன செய்கிறேன் என்று என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் கிப்ஸ்.

கிப்ஸ் சாதனை குறித்து அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் தெரிவிக்கையில்,

`கிரிக்கெட்டில் இது அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு தான். ஆனால், இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில், போட்டி நடக்கும் மைதானத்தின் பவுண்டரி லைன் தூரம் மிக மிகக் குறைவாக இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்பட்டால் வறுமை ஒழிப்புக்கு எதிராக போராடும் தொண்டர் அமைப்புக்கு எட்டு கோடி ரூபா நன்கொடை வழங்குவதாக உலகக் கிண்ண அனுசரணையாளரான ஜொனி வோக்கர் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிட்டதால் அந்த தொண்டர் நிறுவனத்துக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது.

இந்திய 40/1 8ஓவர்ஸ். ஊத்தப்பா 3ஓட்டன்களுடன் அவுட்

கங்குலி 10ஓட்டங்கள்20 பந்துகளில் சேவாக் 22 ஓட்டங்க்ளுடனும் களத்தில்

இலங்கைக்கு எதிரா no & wideஐ அதிகமாக போட்ட கேடிள் இன்று சிறபக பந்து வீசுகிறார் 5ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களி கொடுத்துள்ளார்

தலைவர் டிராவிட் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக சேவாக் விளையாடுகிறார். மறுபுறத்திலே கங்கூலி ஓட்டங்களைப் பெறுவதிலே சிரமப்படுகிறார்.

சேவாக் 114 ஓட்டங்களை 87 பந்துகளில் பெற்று ஆட்டமிழந்துள்ளார், இந்திய 30ஓவர் முடிவில் 2விக்கட் இழப்புக்கு 210 ஓட்டங்கள், புதிதக களத்திள் டோனி. கங்குலி ஆட்டமிளக்காமல் 76 ஓட்டங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய ஆணி(204/4 47.5 over) சிம்பாவேயைத்( 202/5 50 over) தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தெரிவான முதலாவது அணியாகும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பேர்முடாவினை அதிக ஒட்டங்களினால் வெற்றி பெற்றதினால் உலகக்கிண்ண சூதாட்டத்தில் உலகக்கிண்ணத்தினை வெல்லும் அணிக்கு கட்டும் பந்தயப்பணத்தில் இந்தியா,பங்காளதேச நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Australia 2.75 Bet

South Africa 5.00 Bet

West Indies 7.00 Bet

Sri Lanka 7.50 Bet

New Zealand 7.50 Bet

India 11.00 Bet

England 11.00 Bet

Bangladesh 51.00 Bet

Kenya 301.00 Bet

Ireland 301.00 Bet

Zimbabwe 501.00 Bet

Scotland 1501.00 Bet

Bermuda 3001.00 Bet

இந்தியா - பெர்மூடா

இந்தியா 5 விக்கட் இழப்பிற்கு 50 ஒவர்களில் 413 ஓட்டங்கள்

பெர்மூடா தனது 43.1 ஓவரில் சகல விக்ட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

கங்கூலி 161 பந்துகளுக்கு 6 - 4s 2 - 6s களுடன் 89 ஓட்டங்கள் பெற்றார்

சேவாக் 127 பந்துகளுக்கு முகம் கொடுத்து 17 - 4s 3 - 6s உடன் 114 ஓட்டங்களைப் பெற்றார்

யூவராஜ் சிங் 52 பந்துகள் 83 ரன்கள் இதில 3 - 4s ம் 7 - 6s அடங்கும்.

ஜானா

Edited by Janarthanan

  • தொடங்கியவர்

ஜனா, நேற்றைய போட்டியில் இந்திய அணியினர் 413 ஓட்டங்களை பெற்று உலக கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியினர் என்ற புதிய சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்கள். ஆனால் என்னை பொறுத்த வரையில் இந்திய அணியினரின் இந்த சாதனை இந்த உலக கிண்ண போட்டிகள் முடிவடைவதற்கு முன்னர் வேறு அணியினரால் முறியடிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

நேற்றைய போட்டியில் பெர்மூடா அணியினர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற போதும் அவர்கள் முதலில் துடுப்பாடாமல் இந்திய அணியினரை முதலில் துடுப்பாடும் படி பணித்திருந்தார்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று புரியவில்லை பெர்மூடா அணியினருக்கு தாங்கள் அவுஸ்ரேலியா அணி என்ற நினைப்பா? பெர்மூடா அணியின் பந்து வீச்சாளர்கள் யாழ்ப்பாணத்து பாடசாலைகளில் உள்ள பதினைந்து வயதுக்கு உட்பட்ட அணியில் (Under 15 Team) விளையாடும் பந்து வீச்சாளர்களை விட மோசமாக அல்லவா பந்து வீசுகின்றார்கள்.

அனுபவமற்ற புதிய அணிகளுடன் விளையாடும் போது பிலிம் காட்டுவது இந்திய அணியினரின் வழக்கமான ஒரு நடைமுறை தான் ஆனால் பலமான அணிகளுடன் மோதும் போது எல்லோரும் காலை வாரி விடுவார்கள். புதிய சாதனை படைத்த இந்திய அணி "Super 8" சுற்றுக்கு தெரிவாகுமா என்பது இன்னமும் சந்தேகமாக தான் உள்ளது.

ஆம் வினோ உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன். இந்த சாதனை என்னைப் பொறுத்த வரை தென்னாபிரிக்காவே செய்திருக்கவேண்டும் கடந்த விளையாட்டில். அவர்கள் எப்போழுதும் உலகக் கிண்ணங்களில் அதிஸ்டமில்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். ஆயினும் இம் முறை காற்று அவர்கள் பக்கம் என்பது என் கருத்து. ஜென்டில் மேன் விளையாட்டு என்றே கிரிக்கட்டை கூறுவார்கள். ஆயினும் இந்தியாவின் கிரிக்கட் தலைக்கணம் பிடித்தவர்களின் விளையாட்டு.

நன்றி

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல்தான் இந்தியா

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணித்தலைவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு.

பாகிஸ்தான அணியின் தலைவர் இன்ஸ்மாமுல் ஹக் ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்..

உலககிண்ண போட்டிகளில் அயர்லாந்து பாகிஸ்தான் கிரிக்கட் போடிகளில் பாகிஸ்தான் அணி தொல்வியடந்ததையடுத்தும், பயிற்சிவிப்பாளர் பொப் வுல்மர் கலமானதையடுத்தும் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து வெளீயெறுவதாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது..

-Virakesari-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.