Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

பங்களாதேஷ் அணியை இனி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது

பலம் குறைந்த அணியாக பங்களாதேஷை கருதிக் கொண்டு களத்தில் இறங்கிய இந்திய வீரர்களுக்கு பிரமாதமாக ஆடி திறமையை வெளிப்படுத்திய பங்களாதேஷ் மூக்குடைத்ததோடு, குட்டி அணி என்று சொன்னவர்களின் முகத்தில் கரியைப் பூசி விட்டது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். என்றாலும், யாருடன் விளையாடினோம்.... எப்படி விளையாடினோம்.... எப்படி தோற்றோம் என்பது மிக முக்கியம். பலவீன அணி என்று கருதப்பட்ட பங்களாதேஷ் அணி, இந்தியாவுக்கு எதிராக ஆடிய விதத்தைப் பார்த்து பெரிய அணிகளே மூக்கின் மேல் விரல் வைத்துவிட்டன.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்திய துடுப்பாட்டக்காரர்களோ கிரிக்கெட்டையோ மறந்துவிட்டவர்களாக... 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக வெளியேறியதை இந்திய ரசிகர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இறுதியாக முனாப் படேல் மற்றும் சாகீர்கான் இணைந்து 30 ஓட்டங்களை எடுத்திருக்காவிட்டால் ஸ்கோர் போர்டை பார்க்கவே முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கும்.

பங்களாதேஷின் பந்து தடுப்பு மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. உதிரிகளில் 3 மட்டுமே அவர்கள் வைட் பந்து வீசியிருந்தனர். ஒருநாள் போட்டியில் எதுவும் நடக்கலாம். அந்த 50 ஓவர்களுக்குள் யார் திறமையைக் காட்டுகிறார்களோ அவர்களுக்குத்தான் கோப்பை என்றெல்லாம் சாக்குப் போக்கு சொன்னவர்களுக்கு... தைரியம் இருந்தால் எந்த அணியையும் தோற்கடிக்கலாம் என்று அருமையாக பாடம் நடத்திவிட்டது பங்களாதேஷ்.

பங்களாதேஷ் அணியுடன் மோதும் போட்டியை யார் பார்க்கப் போகிறார்கள் என்று கருதிய ஐ.சி.சி. கூட அந்த அணிக்கு பெரிய அணிகளுடன் விளையாடும் அட்டவணையில் கடந்த சில ஆண்டுகளில் அதிக வாய்ப்புகள் அளிக்கவில்லை. இந்திய போட்டி தொடங்குவதற்கு முன்பாகக் கூட பங்களாதேஷ் அணியின் கப்டன் பஷார் கூறிய போது,

`எங்களைப் பொறுத்தவரை பெரிய அணி களுடன் மோதிப் பார்க்காமல் நேரடியாக களத்துக்கு வந்திருக்கிறோம். அதுதான் குறை' என்றார். ஆனால், அந்த குறையை உலக கிண்ணத்தின் தொடக்கத்தில் பயிற்சி போட்டியிலும் இப்போதும் நிறைவேற்றிக் கொண்டார்.

2005 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த நாற்வெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது பங்களாதேஷ். அந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை எடுத்திருந்தது. இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கப்டன் பஷார் மற்றும் அஷ்ரபுலின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸி., நிர்ணயித்த இலக்கை எளிதில் சேஸ் செய்தது.

உலக கிண்ணத்துக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியின் போதும், நியூஸிலாந்தை வீழ்த்தி நம்பிக்கை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரத்தில், இந்தியா இரு பயிற்சி போட்டிகளிலும் வென்றிருந்தாலும், தற்போது சொதப்பிவிட்டது... இதை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியதை மனதில் கொள்ள வேண்டும்.

http://www.thinakkural.com/

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply

இந்தியா - பெர்மூடா

இந்தியா 5 விக்கட் இழப்பிற்கு 50 ஒவர்களில் 413 ஓட்டங்கள்

பெர்மூடா தனது 43.1 ஓவரில் சகல விக்ட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

கங்கூலி 161 பந்துகளுக்கு 6 - 4s 2 - 6s களுடன் 89 ஓட்டங்கள் பெற்றார்

சேவாக் 127 பந்துகளுக்கு முகம் கொடுத்து 17 - 4s 3 - 6s உடன் 114 ஓட்டங்களைப் பெற்றார்

யூவராஜ் சிங் 52 பந்துகள் 83 ரன்கள் இதில 3 - 4s ம் 7 - 6s அடங்கும்.

ஜானா

ஜனா செய்திகளை சற்று ஆரய்ந்தெளுதவும்

நீர் பந்துகள் என்று குறிப்பிட்டது களத்தி வீரர்கள் துடுப்படிய நேரத்தை

சேவாக் 87பந்துகளில் 114 ஓட்டங்கள்

கங்குலி 114 பந்துகளில் 89 ஓட்டங்கள்

யுவராஜ் 46 பந்துகளில் 83 ஓட்டங்கள் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று ஒரு செத்த பாம்புக்கு இந்தியா இப்படி அடிச்சிட்டு ரெம்பா பிலிம் காட்டினம்.

வானவில் தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தவறுக்கு மன்னித்தருள்க.

ஜானா

உல்மர் மறைவுக்கு சூதாட்ட புகார் பின்னணி?

20 மார்ச் 2007

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் மறைவுக்கு சூதாட்டப் புகார் பின்னணி காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உல்மர் வாந்தி எடுத்த நிலையில் ஓட்டல் அறையில் மயங்கிக் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உல்மர் மறைவுக்கும் கிரிக்கெட் சூதாட்டப் பினனணி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகக் கோப்பை போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததில் பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் சிலருக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்பராஷ் நவாஸ் கூறியதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்த சில சூதாட்ட புள்ளிகள் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று பாகிஸ்தான் அணி வீரர்களை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் வெஸ்ட் இன்டீஸ் போலீசார் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே பாப் உல்மரின் மறைவு குறித்த விசாரணை முடிவடையும் வரை பாகிஸ்தான் அணி வீரர்கள் வெஸ்ட் இன்டீசை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைசி லீக் சுற்றில் பாகிஸ்தான் நாளை ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது.

நன்றி MSN தமிழ்

நியூசீலந்து - கென்யா

நியூசிலாந்து அணி : 7 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 331 ஓட்டங்கள்

கென்யா அணி : சகல விக்கட்டுக்களையும் இழற்து 49.2 ஓவர்களில் 183 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கென்யா அணி வீரர் Shah 89 பந்துகளுக்கு 8 - 4s ம் 2 - 6s உடன் 71 ரன்கள் பெற்றார்.

நியூசிலாந்து அணி 148 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஸ்கொட்லாண்ட் - தென்னாபிரிக்கா :

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாண்ட் அணியினர் 8 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 186 ஓட்டங்களைப் பெற்றது.

187 ஓட்ட இலக்கை கொண்டு விளையாடிய தென்னாபிரிக்க அணி 3 விக்கட் இழப்பிற்கு 23.2 ஓவர்களில் தனது இலக்கை அடைந்து 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

தென்னாபிரிக்க வீரர் Smith 65 பந்துகளில் 13 - 4s ம் 1 - 6s ஒட்டத்துடன் 91 ஒட்டங்களைப் பெற்றார்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பாகிஸ்தான், நெதர்லாந்து, பேர்முடா, கனடா,ஸ்கொட்லண்ட் ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளது. மேற்கிந்தியா, அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி உள்ளன. யாழ்களப் போட்டியில் இன்று இலங்கை வென்றால் மாப்பிள்ளை தொடர்ந்து முதல் இடத்திலும், பங்காளதேசம் அணி வென்றால் கறுப்பி முதல் இடத்தையும் பிடிப்பார். தற்பொழுது உள்ள சூதாட்ட நிலவரம்

Australia 2.75 Bet

South Africa 5.00 Bet

West Indies 7.00 Bet

Sri Lanka 7.00 Bet

New Zealand 7.00 Bet

India 11.00 Bet

England 12.00 Bet

Bangladesh 51.00 Bet

Ireland 301.00 Bet

Kenya 501.00 Bet

Zimbabwe 501.00 Bet

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இலங்கை VS பங்களாதேஸ்...

ஆண்டவா சுவிஸ்கிங்க், சின்னப்புவின் தலை முடியையும், பிரான்ஸ் ஆட்டுப்பால் அப்பாஸ் சாஸ்த்தின் மீசையையும் காப்பாற்றுப்பா... :D :P :o:o

நாளைக்கு இலங்கை VS பங்களாதேஸ்...

ஆண்டவா சுவிஸ்கிங்க், சின்னப்புவின் தலை முடியையும், பிரான்ஸ் ஆட்டுப்பால் அப்பாஸ் சாஸ்த்தின் மீசையையும் காப்பாற்றுப்பா... :D :P :o:o

அப்படியே டங்கிட்ட இருந்து எல்லாரையும் காப்பாற்று அப்பா

:P :)

  • தொடங்கியவர்

இலங்கை - பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை.

Edited by யாழ்வினோ

கென்ய அணியின் ஒடோயோ நெற்று 100விக்கடை எடுத்திருந்தார், டெஸ்ட் அந்தஸ்து பெறாத 1 அணி வீரர் பெற்ற முதல் 100விக்கட் பெறுதி இதுதான், அத்துடம் ஒடோயா 1500 ஓட்டங்களையும் பெற்றுள்ளார், டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணியின் வீரர் சகலதுறை ஆட்டக்காரரக இணந்தமையும் இதுதான் முதல் தடவை. அதேபோல் நேற்று டிக்கலோ 50ஆவது போட்டிக்கு தலமை தாங்கினார் அதுவும் ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணிக்கு ஒருவர் தலமை தாங்கி அதிக போடிகள் விளையடிய முதல் தடவையாகும்.

  • தொடங்கியவர்

ICC Cricket World Cup 2007 Official Song

Chorus (at the start)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

Verse 1

Sending out invitations

All over the world

Every race, every class,

Every man, every girl

Whether near, whether far

Come and join in the fun

(Oh na na na)

This is it, one big game that you cannot miss

No matter who you are - everyone’s on the list

This is the game of life and we all are one

(So come along)

Chorus (repeated twice)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

Dancehall breakaway (repeated twice)

We run the place

We set the pace

We lead the chase

Everybody participate and

No time to waste

Lift up the pace and celebrate

It’s our obligation

We fascinate, we captivate

Your mind, your heart, soul and

Rhythm of the nation

We play, we play

We feel the game

Come on, come on

Let me see you gyrate

Verse 2

Bring along all your friends

And tell them join in

Cause this game never ends

Once it begins

We will spread peace and love

For eternity

All your worries and stress

Let them all go

We won't settle for less

Cause we're all MELLO

Bring your heart and your soul and set your mind free

Chorus (repeated twice)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

Bridge

We will rejoice

And sound our voice

Cause we are one together

L.O.V.E. and unity,

Forever

Chorus (repeated to the end)

Play, in this beautiful game

Where the rules and aim

Remain the same

It's the game of love unity

Play, in this beautiful game

Where the rules and aim

Will never change

It's the game of love unity

பாடலை கேட்பதற்கு

http://www.youtube.com/watch?v=fX1gI7gZHVU

பாடலை தரவிறக்கம் செய்வதற்கு

http://cricketworldcup.indya.com/event/media/anthem.mp3

Edited by யாழ்வினோ

பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்: பாப்உல்மர், விஷம் கொடுத்து கொலை

ஜமைக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியில் அயர்லாந்து அணியிடம் பாகிஸ் தான் படுதோல்வி அடைந்து உலககோப்பை போட்டியில் இருந்தே வெளியேறியது.

போட்டி முடிந்து சில மணி நேரங்களில் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ஓட்டல் அறையில் மூக்கில் ரத்தம் சிந்தி வாந்தி எடுத்த நிலையில் அவர் பிணமாக கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் சாவு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவர் அடித்தோ அல் லது விஷம் கொடுத்தோ கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. தோல்வி விரக்தியால் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்ப தாகவும் தகவல்கள் வெளிவந்தன.

எனவே பரிசோதனை நடந்தால் முழு உண்மையும் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இதற்கிடையே அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கசிந்தது. சூதாட்டகாரர்களின் சூழ்ச்சியால் பாகிஸ்தான் வேண்டும் என்றே அயர்லாந்திடம் தோற்றது இந்த உண்மை பாப்உல்மருக்கு தெரிந்து விட்டது. எனவே அவரை சூதாட்டக்காரர்கள் விஷம் கொடுத்து கொன்று விட்டார்கள் என்று அந்த தகவல் தெரிவித்தது.

பாப் உல்மர் உடல் ஜமைக்கா ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலின் உள்பகுதிகளை வெட்டி எடுத்து முழுமையாக பரிசோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் பல தடயங்கள் தென்பட்டன.

குடல் பகுதியை ஆராய்ந்து பார்த்தபோது அதற்குள் இருந்த உணவில் விஷம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை ஜமைக்கா போலீசார் உறுதி செய்தனர். பாப் உல்மர் கொலை செய்யப்பட்டதற் கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முதலில் இது இயற்கை மரணம் இல்லை என்று மட்டும் போலீசார் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து தகவல் வெளியிட்ட அவர்கள் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று கூறினார்கள். இது தொடர்பாக அவர்கள் சர்வதேச கிரிக்கெட் சங்கம், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

பாப் உல்மர் கொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தான் தனியார் டெலிவிஷன் நிறுவனம் ஒன்றும் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்து செய்தி வெளியிட்டது. உருது மொழி டெலிவிஷன் ஒன்றும் பாப்உல்மர் கொலையை உறுதி செய்தது.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்பார்ஸ் நவாசும் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர் "எனக்கு கிடைத்த தகவல்படி பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சூதாட்டக்காரர்கள் இருக்கிறார்கள்'' என்று கூறினார்.

பாப் உல்மர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தெரிந்ததால் பாகிஸ்தான் வீரர்களை நாட்டை விட்டு வெளியேற ஜமைக்கா அரசு தடை விதித்து உள்ளது. பாகிஸ் தான் அணி இன்று ஜிம் பாப்வே அணியுடன் மோத உள்ளது. இது முடிந்ததும் நாடு திரும்ப முடிவு செய்திருந்தனர். ஆனால் ஜமைக்கா அரசு நாங்கள் அனுமதிக்கும் வரை யாரும் நாடு திரும்ப கூடாது என்று கடுமையான உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். கடந்த 2 நாட்களாகவே பாகிஸ்தான் வீரர்களிடம் ஜமைக்கா போலீசார் விசாரித்தனர். சாதாரண முறையில் இந்த விசாரணை நடந்தது. இப்போது கொலை உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதை மையமாக வைத்து முழு மையாக விசாரணை நடத்த உள்ளனர்.

அயர்லாந்திடம் தோல்வி அடைந்து ஓட்டலுக்கு திரும் பியதும் என்னென்ன சம்ப வங்கள் நடந்தது. பாப் உல்மரை யார்-யார்ப சந்தித்தார்கள், அப்போது வாக்குவாதம் நடந் ததாப என்று விசாரணை நடத்துகிறார்கள். ஓட்டல் ஊழியர்கள், பாகிஸ்தான் அணிக்கான பாதுகாவலர்கள் என அனைவரிடமும் விசா ரணை நடக்க உள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக் கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஓட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் வீரர்களை கேட்டு கொண்டுள்ளது.

பாப்உல்மர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் கிடைத்ததும் பாகிஸ்தான் வீரர்கள் கடும் அதிர்ச் சியில் காணப்பட்டனர். சில வீர்கள் "எங்களுக்கு கிடைத்த தகவல்படி இது கொலைதான்'' என்று கூறினார்கன். பாகிஸ்தான் அணி செய்தி தொடர்பாளர் பரிவீஸ்மிர் இது பற்றி கூறும் போது, "ஜமைக்கா போலீசார் சந்தேக மரணம் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். எனவே முழு விசாரணைக்கு பிறகுதான் எதையும் உறுதியாக கூற முடியும். இப்போதைய நிலைமை எங்களுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது'' என்றார்.

பாப் உல்மர் பிணமாக கிடந்த போது மூக்கில் ரத்தம் வழிந்தது. வாந்தி எடுத்து இருந்தார் என்று மட்டும் தகவல்கள் வெளியா கின.

இப்போது வேறு சில தகவல் களும் வெளியாகி இருëக்கிறது. அவர் கண்ணத்தில் காயம் ஏற் பட்டு ரத்தம் வந்துள்ளது. அதே போல கண்ணில் இருந்தும் வடிந்துள்ளது. யாராவது தாக்கி இருந்ததால் தான் இது போல ரத்தம் வரவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விஷம் கொடுக்கப்படும் முன்பு பாப் உல்மர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கிங்ஸ்

பாப்உல்மர் எழுதிய புத்தகம்: வீரர்கள்-சூதாட்டகாரர்கள் தொடர்பை அம்பலப்படுத்த முயற்சி

பாப்உல்மர் ஏற்கனவே தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான ஒரு புத்தகம் எழுதி வந்தார்.

அதில் கிரிக்கெட் ஆட்டம் மற்றும் பயிற்சி தொடர்பான நுணுக்கங்கள் மற்றும் பல்வேறு தகவல்களையும் எழுதினார்.

கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும் அவர் அதில் எழுதி வந்தார். கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்கிறது. இதில் வீரர்களின் பங்கு என்னப மேட்ச்பிக்சிங் நடப்பதற்கு எப்படி வீரர்கள் உதவுகிறார்கள் என்று விரிவாக குறிப்பிட்டு இருந்தார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்டகாரர்களுடன் தொடர்பு இருந்தது அதையும் அவர் புத்தகத்தில் எழுத திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அயர்லாந்திடம் பாகிஸ்தான் தோற்றதற்கும் சூதாட்டகாரர்கள் சூழ்ச்சிதான் காரணம் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அதையும் அவர் தனது புத்தகத்தில் எழுதுவதுடன் இந்த தொடர்பை வெளியே அம்பலப்படுத்தி விடுவார் என்பதால் சூதாட்டகாரர்களுடன் தொடர்புடைய வீரர்களே அவரை கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இல்லை என்றால் சூதாட்டகாரர்கள் யாரையோ ஏவி கொலை செய்திருக்கலாம்.

இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலை நடப்பதற்கு முன்பு பாப்உல்மரிடம் யாராவது டெலிபோனில் பேசினார்களாப இதே போல வீரர்களுக்கு எங்கிருந்தாவது போன் வந்ததாப பாப்உல்மரை யார்-யார் சந்தித்தார்கள் என்றும் விசாரித்து வருகிறார்கள்.

Lankasri Sports

ஜிம்பாப்வேயுடன் இன்று மோதல்: உல்மருக்காக வெற்றி பெற இன்ஜமாம் விருப்பம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை இன்று சந்திக்கிறது. இந்த ஆட்டம் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் 54 ரன் வித்தியா சத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட்டில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இந்த தோல்வியால் `சூப்பர் 8' சுற்று வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் பால்உல்மர் மரணம் உள்பட பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் ஜிம்பாப்வேயுடன் மோது கிறது.

இந்தப் போட்டியில் பாப் உல்மருக்காக வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

பாப்உல்மர் மிக நல்ல மனிதர். எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தவர். எங்களுக்குள் பிரச்சினை இருந்தால் அருகே இருந்து தீர்த்து வைப்பார். பாப் உல்மருக்காக ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற விரும்புகிறோம். அவருக்காக நாங்கள் எது செய்தாலும் அது ஈடாகாது.

இவ்வாறு இன்ஜமாம் கூறினார்.

உலக கோப்பையில் வெளியேற்றம், பாப்உல்மர் மரணத்தை தொடர்ந்து ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஜமாம் ஏற்கனவே அறிவித்து இருந் தார். இதனால் அவர் விளையாடும் கடைசி ஒரு நாள் போட்டி இதுவாகும்.

தடை காரணமாக 2 போட்டி யில் விளையாடாத அப்ரிடி இன்று ஆடுகிறார்.

பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் எந்த பாதிப்பும இருக்காது. ஜிம்பாப்வே அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்துடன் `டை' செய்தது. 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று இருந்தது.

Lankasri Sports : jega

இன்று பலப்பரீட்சை: இலங்கைக்கு, வங்காளதேசம் நெருக்கடி கொடுக்குமா?

9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகி றது. இதன் `பி' பிரி வில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பெர்முடா அணிகள் இடம் பெற்றுள்ளன.

இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பெர்முடாவை வென்று இருந்தது. இந்திய அணி அதிர்ச்சிகரமாக வங் காள தேசத்திடம் தோற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் இந்தியா 257 ரன் வித்தியா சத்தில் பெர்முடாவை வீழ்த்தி யது.

`பி' பிரிவில் இன்று நடை பெறும் 4-வது `லீக்' ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. போர்ட்ஆப் ஸ்பெயனில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

பலவீனமான அணி என்று கருதப்பட்ட வங்காளதேச வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக ஆடி வரு கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் நிïசிலாந்தை வென்று இருந் தது. முதல் ஆட்டத்தில் 1983ம் ஆண்டு சாம்பியனான இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இதனால் இலங்கை அணி வங்காளதேசத்தை சாதாரண மாக எடை போட முடியாது. பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் காணப்படுகிறது.தொடக்க வீரர் தமிம்இக்பால், ஹசன், ரகீம் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக அரை சதம் அடித்தனர். வேகப்பந்து வீரர் மொர்தாசா பந்து வீச்சு பேட்ஸ்மேன்களுக்கு நெருக் கடியை கொடுக்கும்.

வங்காளதேசத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை வலுவானதாகும். ஆனால் தற்போதுள்ள நிலையில் எந்த அணியையும் சாதாரணமாக கருதி விட இயலாது. இலங்கைக்கு எல்லா வகை யிலும் நெருக்கடியை கொடுக்க கூடிய திறமை வங்காள தேசத்திடம் உள்ளது.

இந்தப் போட்டியை அந் நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களும் ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். ஏனென்றால் இந்தப் போட்டியின் முடிவு இந்தியாவின் சூப்பர் 8 வாய்ப்பை நிர்ணயிக்கும்.

இலங்கை அணி தோற்றால் இந்தியாவுக்கு சாதகம். அப்படி நடந்து இலங்கையை இந்தியா வென்றால் வங்காளதேசம், இந்தியா `சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறும்.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் `டி' பிரிவில் உள்ள பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் 54 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட்டில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இந்த தோல்வியால் `சூப்பர் 8' வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் பாப்உல்மர் மரணம் உள்பட பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி ஜிம் பாப்வேயுடன் மோதுகிறது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் எந்த பாதிப்பும் இருக்காது. ஜிம்பாப்வே தொடக்க ஆட் டத்தில் அயர்லாந்துடன் `டை' செய்தது. 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்றது.

malaimalar

இலங்கை அணியுடன் அதிரடியாக ஆடி வெற்றிபெற முயல்வோம் என்கிறார் ராவிட்

இலங்கை அணியுடனும் அதிரடியாக ஆடி வெற்றிபெற முயல்வோமென்று இந்திய அணியின் கப்டன் ராகுல் ராவிட் கூறியுள்ளார்.

பெர்முடாவுடன் இந்திய அணியின் வெற்றி குறித்து கப்டன் ராவிட் கூறியதாவது;

இந்தப் போட்டியில் நாங்கள் நினைத்த சில விஷயங்கள் நடந்துள்ளன. சில விஷயங்கள் நடக்காமல் போயுள்ளன. சிறப்பாக ஆட வேண்டும் என்று நினைத்தோம் அது நடந்துள்ளது. ஆட்டத்தை முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆடினோம்.

அடுத்து இலங்கை அணியுடன் பெரிய போட்டியில் மோதவுள்ளோம். இந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். இதே ஆட்டத்தை கடைப்பிடித்து இலங்கையை வெல்வோம்.

ஆனாலும், ஓட்டவிகிதம் முக்கிய பங்கு வகிக்கப் போவதால் அடுத்து என்ன நடக்கும் என்பதை எங்களால் சொல்ல முடியாது. பங்களாதேஷுடன் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி மூலம் இந்தப் போட்டியில் அதிக திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தோம். அதை எங்கள் வீரர்கள் வெகு சிறப்பாகச் செய்து முடித்தனர்.

நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து கடைசி வரை அதை காப்பாற்றினார்கள். இந்தப் போட்டியில் எதை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அதை நிறைவேற்றி இருக்கிறோம். பெர்முடாவை இலங்கை வெற்றி பெற்றதை விட நாம் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்த ஆடுகளமும் மோசமாகத்தான் இருந்தது. பின்னர் வீரர்கள் ஆட ஆட அது சரியாகிவிட்டது. ஷேவாக் நாங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாக ஆடினார். நான் ஷேவாக்குக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னார்கள். நான் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை. அவர் மிகச் சிறந்த வீரர். அவருடைய போர்ம் சரியாகிவிட்டால் அது அணிக்கு உதவியாக இருக்கும் என்பதால் அவர் தேவை என்பதை உணர்ந்தேன். கடுமையான பயிற்சி மூலம் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார்.

பங்களாதேஷிடம் தோற்றதும் ரசிகர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பும் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பத்தினரும் பெற்றோரும் எங்களால் பாதிக்ககூடாது என்று கருதினோம். எங்கள் கொடும்பாவியை எரித்ததாலோ எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாலோ நாங்கள் வேதனைப்படவில்லை என்றும் ராவிட் கூறினார்.

பெர்முடா கப்டன் ரொமைனி கூறியதாவது;

நாங்கள் நன்றாக ஆடினோம். ஆனால், இந்திய வீரர்கள் மிக மிக நன்றாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். நிறைய விஷயங்களை இதன் மூலம் கற்றுக்கொண்டோம்.

எங்கள் வீரர் டேவிட் ஹெம்ப் 76 ஓட்டங்களை எடுத்தவுடன் நாங்கள் வேகமாக 150 ஓட்டங்களை எடுத்ததே சாதனைதான். எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்று சிறப்பான நாள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

http://www.thinakkural.com/news/2007/3/21/...s_page23672.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ!! இதனால்தான் விளையாட்டு வினையாகும் எனப் பெரியவங்க சொல்வார்களோ!!...

  • தொடங்கியவர்

இலங்கை - பங்களாதேஷ் ஆட்ட நிலவரம் 100 ஓட்டங்கள் 1 விக்கெற் இழப்பு (15 ஓவர்கள்)

பாகிஸ்தான் 2 விக்கட் இழப்பிற்கு 20.4 ஓவர்களில் 105 ஓட்டங்கள். வேதனைகளை சுமந்த பாகிஸ்தன் அணி மரணித்த உல்மருக்காக வாவது வெற்றி பெறட்டும்.

ஜானா

சிரிலங்கா 4 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 318 ஓட்டங்களைப் பெற்றது.

சனத் 87 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்களும் 7 ஆறு ஓட்டங்களுடன் 109 ஓட்டங்கள் பெற்றார்.

சராசரி ஓட்ட வீகிதம் 6.36

ஜானா

  • தொடங்கியவர்

சிரிலங்கா 4 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 318 ஓட்டங்களைப் பெற்றது.

சனத் 87 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்களும் 7 ஆறு ஓட்டங்களுடன் 109 ஓட்டங்கள் பெற்றார்.

சராசரி ஓட்ட வீகிதம் 6.36

ஜானா

பெரியவர் நீண்ட நாட்களுக்கு பின் இன்று சதம் அடித்திருக்கிறார்.

37 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட் இழப்பிற்கு 112 ரன்களை எடுத்துள்ளது

பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்?

கீரிகெட்டு கெட்டுவிட்டது?

http://content-usa.cricinfo.com/wc2007/con...ory/286445.html

Full investigation launched in Jamaica

Woolmer's death 'suspicious' - police

Cricinfo staff

March 21, 2007

Police are now treating Bob Woolmer's death as suspicious, Mark Shields, the deputy commissioner of police, told a news conference in Jamaica. A full-scale investigation has been ordered.

"We have already informed the Woolmer family of these developments," Shields said. "Having met with the pathologists, our medical personnel and investigators, there is now sufficient information to continue a full investigation into the circumstances surrounding the death of Mr Woolmer, which we are now treating as suspicious."

However, unconfirmed reports suggested Woolmer might have been murdered because marks were found around his neck.

Shields said the police had been in close contact with the Pakistan team management, the Cricket World Cup committee and the ICC, but he would not speculate on the cause of Woolmer's death. "It would be inappropriate for me to make any comment at this stage as we have still not got the final official report from the pathologists," he said.

Talat Ali, the Pakistan team manager, told Geo TV they had not been given full details by the police. "They have not made any reference to poisoning or anything yet, as some reports are suggesting," Ali said. "There is no information at all that this poison could be involved. Investigations will carry on so we cannot come to any conclusions right now."

Ali denied Pakistan were not allowed to travel. "There are no police restrictions on the team," he said. "As planned for now, we are flying back on Saturday."

Woolmer, 58, was found unconscious in his hotel room on Sunday and pronounced dead shortly after at a Jamaica hospital. Woolmer's family said after speaking to doctors they expected his death came from a stress-related heart attack.

His wife Gill told CNN-IBN, an Indian news channel, he did not complain of any chest pain after the match. An autopsy completed on Tuesday was inconclusive, but investigators were waiting for the results of toxicology tests to see if they helped determine the cause.

© Cricinfo

17 போட்டியாளர்கள் இலங்கை, பங்களதேச அணியினை வெற்றி பெறும் எனச் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். மாப்பிள்ளை தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். 3,4,5,6 ம் இடத்துக்கு முறையே 4,5,6,7ல் இருந்த வாசகன்,சிவராஜா,வானவில்,வெண்ண

  • கருத்துக்கள உறவுகள்

இருந்து பாருங்கள், இலங்கை அணி பங்களாதேசை வென்றுகாட்டும், 21ம் திகதி இதே நேரம் இலங்கை வென்றுவிட்டது என்று கருத்து எழுதுவேன், அப்படி இல்லையே சுவிஸ் கிங்க் சின்னப்பு எனக்காக மொட்டைபோடுவார். :lol::lol: :angry: :angry: :angry:

இந்திய அணியை பலம் வாய்ந்த அணி என்று சொல்லமுடியாது, அவர்களும் பாகிஸ்த்தான் அணிமாதிரித்தான், சில நேரங்களில் எல்லோரும் நன்றாக விளையாடுவார்கள், அல்லது எல்லோரும் ஒன்றாக மட்டை போடுவார்கள், தற்போதைய இலங்கை அணி அப்படியில்லை, ஜெயசூர்யா 15 ஓவர்கள் நின்றாலே இலங்கை அணியின் வெற்றி 75% வெற்றிபெறும், அதைவிட இலங்கை அணிக்கு இரண்டு துடுப்பாட்டவீரர்களும் (சில்வா, தரங்க), இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்களும் (மலிங்க, மஹ்ரூவ்) கிடைத்துள்ளார்கள், தூள் கிளப்புவார்கள்.

மறந்திடாதேங்க 21ம் திகதி டன் கருத்து எழுதுறான் இல்லையேல் 22ம் திகதி விடிய 8-10க்குள்ள சின்னப்புவுக்கு மொட்டை போடுறன். அட்லீஸ் சாஸ்த்துக்காவது ஒரு பக்க மீசையை எடுப்பன், இது எனது குரு கொழுப்பு கமாலாக்கா மேல் ஆணை. :angry: :angry:

இன்னா மின்னல் எப்டி புலனாய்வு? சொன்னமெல்ல.... சொன்னமாதிரி ஜெயசூர்யா 15 ஓவர்களுக்கு மேல நிண்டரா? (கொஞ்ச நேரம் படுத்திருந்தவர் அதைவிடுங்க).

அதைவிட நான் சொன்ன புதிய துடுப்பாட்ட வீரர்களின் அனல் அடி நல்லாக இருந்தது. சில்வா அரை செஞ்சரி போடும் பொழுது ஒரு சிக்ஸர் அடித்தாரே ஓவ்வில் வந்த பந்தை எதிர்ப்பக்கத்துக்கு வெட்டி அடிச்சாரே ஒரு அடி (ஜெயசூர்யாவின் அடி மாதிரி இருந்திச்சு, சில்வாவுக்கும் நல்ல எதிர்காலமுண்டு). அப்புறமா மஹ்ரூவ், பறட்டை மலிங்காவின் பந்துவீச்சில் பங்களாதேஸ் திணறிச்சே அருமை. :D

உண்மையில் சிங்களவன் எம்மக்களின் உயிரோடு விளையாடும் பொழுது இவர்களின் விளையாட்டை ரசித்து அதனைப்பற்றி எழுதுவதற்காக வெட்கப்படுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.