Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய போட்டியில் ஸ்கொட்லண்ட் வெற்றி பெற்றால் மாப்பிள்ளை தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பார். நெதர்லாந்து வெற்றி பெற்றால் யாழ் வினோ முதலில் இடத்தில் இருப்பார். யாழ்களப் போட்டியில் பல மாற்றங்கள் வரும்.

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இனி வரப்போகும் ஆட்டங்களின் முடிவில் தரவரிசை பட்டியலில் நான் பின் தள்ளப்படுவது உறுதி. என்னுடைய கல்குலேசன் எல்லாம் பிழைச்சுப்போச்சு. :lol:

ஏதாவது ஒரு கட்டத்திலாவது முதலிடத்தில் வரவேண்டும் என்பது தான் எனது ஆசை அதன் பின்னர் தரவரிசையில் பின் தள்ளப்பட்டாலும் பறவாயில்லை. :D

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

பொப் வுல்மரின் மரணம் குறித்து ஜமெய்க்கா பொலிஸாரால் முழுமையான விசாரணைகள் ஆரம்பம்.

பொப்வுல்மரின் திடீர் மரணம் குறித்து ஜமெய்க்கா பொலிஸாரால் முழுமையான விசாரணைகளை முடக்கி விட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை வுல்மரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மருத்துவர்களின் மூலம் கிடைத்த தகவலின் படியே முழு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ஜமெய்க்கா பிரதி பொலிஸ் ஆணையாளர் மார்க் ஷீல்ட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

9 ஆவது உலகக் கிண்ண தொடரில் எதிர்பார்ப்புடன் பங்குபற்றிய பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் தோல்வியடைந்தது. இதன் பின்னர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்திடம் படுதோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்த தினம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வுல்மர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஜமெய்க்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஹோட்டல் அறையில் அவர் சுயநினைவு அற்ற நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது பொப் வுல்மர் ஹோட்டல் அறையில் வாந்தி எடுத்தும், மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த நிலையிலுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து வுல்மரின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சப்ராஸ் நவாஸ் பொப் வுல்மர் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர், ""எனக்கு கிடைத்த தகவலின் படி வுல்மர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சூதாட்டக்காரர்கள் இருக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் போது சந்தேகத்துக்கிடமான பலதகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவருகிறது. வழக்கமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருடன் உணவருந்தும் வுல்மர் சம்பவம் நிகழ்ந்த அன்று அவர்களுடன் உணவருந்தவில்லை என தெரியவருகிறது. அவர் மன உளைச்சலுடனும் காணப்பட்டுள்ளார். மேலும், அவரது அறையில் ரத்தக்கறை படிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிர் இழந்திருக்கலாம்என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனை ஜமெய்க்கா பொலிஸாரும் மறுக்கவில்லை. அதேபோன்று அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. என்றாலும் பொப் வுல்மரின் சாவுக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே உறுதியாக தெரியவரும். கிங்ஸ்டன் நகரில் அமுலில் உள்ள உள்ளூர் சட்டத்தின்படி மரணம் அடைந்தவரின் குடும்பத்தினரின் ஒப்புதலுடன்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால், பொப் வுல்மரின் குடும்பத்தினர் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசித்து வருவதால் அவர்களால் உரியநேரத்தில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் வராமலேயே பிரேத பரிசோதனையை நடத்த ஜமெய்க்க அதிகாரிகளுக்கு பொப் வுல்மர் குடும்பத்தினர் அதிகாரம் அளித்தனர். பிரேத பிரேதபரி?970;ாதனையை கூட இருந்து கவனித்து பொப்வுல்மரின் உடலை தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு பயிற்சியாளரான முரே ஸ்டீவன்சனை பொப் வுல்மர் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

இதன்படி டாக்டர் ஏடி சரியா தலைமையில் ஜமெய்க்கா நேரப்படி நேற்று முன்தினம் காலை 9.35 க்கு (மரணமடைந்து 48 மணித்தியாலங்களின் பின்)பிரேத பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது. மதியம் வரை நடைபெற்ற சோதனையின் முடிவில் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இதுகுறித்த விபரங்களை ஜமெய்க்கா பொலிஸார் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினருக்கு அறிவித்தனர்.

இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ஜமெய்க்கா நேரப்படி மாலை 8.30 க்கு பாகிஸ்தான் அணி நிர்வாகத்தினர் மற்றும் ஜமெயக்கா பொலிஸார் இணைந்து ஊடகவியலாளர் மாநாடொன்றை கூட்டினர். இதில் பொப் வுல்மரின் மரணம் குறித்து பொலிஸார் முழுமையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ஜமெய்க்கா உதவி பொலிஸ் ஆணையாளர் மார்க் ஷீல்ட் தெரிவித்தார். பிரேத பரிசோதனையின் மூலம் கிடை த்த தகவல்களை வைத்தே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது பிரேத பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட மறுத்த அவர் தொடர்ந்தும் பரிசோதனைகள் நடைபெற்றுவருவதாகவும் இது குறித்து முழுமையான முடிவுகள் 24 மணித்தியாலத்துக்குள் வெளியிடப்படலாம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பிரேத பரிசோதனையின் போது பொப்வுல்மரின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் எனவே, அவர் கொலை செய்யப்பட்டிருக்லாம் எனவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று சிம்பாப்வேயுடனான தனது கடைசி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி வரும் சனிக்கிழமை நாடு திரும்பும் என பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் தலத் அலி மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து குறிப்பிட்டார். இதன் போது பாகிஸ்தான் அணி பொப் வுல்மரின் மரணம் குறித்த விசாரணை முடிவடையும் வரை ஜமெய்க்காவில் இருந்து வெளியேறக்கூடாது என ஜமெய்க்கா பொலிஸார் உத்தரவிட்டதாக வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்தார்.

-Virakesari-

  • தொடங்கியவர்

இன்று நடைபெறும் இரு போட்டிகள்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று வியாழக்கிழமை இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் முக்கியத்துவமற்றவையாகும்.

`ஏ' பிரிவில் ஏற்கனவே அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிட்ட நிலையில் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்படாத நிலையில் இப் பிரிவில் இன்று சென்.கிட்ஸில் நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகள் மோதுகின்றன.

`சி' பிரிவில் நியூசிலாந்து , கனடா அணிகள் சென்லூசியாவில் மோதுகின்றன.

இப்பிரிவில் நியூசிலாந்து அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தெரிவாகிவிட்டது. கனடா முதலிரு போட்டிகளிலும் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டது.

-Virakesari-

இன்று நடைபெறும் நெதலாந்து,ஸ்கொட்லன்ட் போட்டியை பற்றி என்ன நினைக்கிறீங்கள் யாழ்வினோ??

முன்னாள் அயர்லாந்து பயிற்சியாளரும் கிங்ஸ்ரனில் கோட்டல் அறையினுள் மரணமாகியிருக்கிறார்.காரணம் எதும் தெரியவில்லை

முன்னாள் அயர்லாந்து பயிற்சியாளரும் கிங்ஸ்ரனில் கோட்டல் அறையினுள் மரணமாகியிருக்கிறார்.காரணம் எதும் தெரியவில்லை

தொடர் இறப்புகளாக இருக்கின்றன இதில் ஏதோ மர்மம் இருக்குது என நான் நினைக்கிறேன்

;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயர்லாந்தின் இளைப்பாறிய பயிற்சியாளர் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டுள்ளார்.பாகிஸ்தானி

நன்றி போஸ் இவர் சாப்பிட்ட பிறகு மரணம் அடைந்திருப்பாரா அல்லது அதற்கு முதலே மரணம் அடந்திருப்பாரா??

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி போஸ் இவர் சாப்பிட்ட பிறகு மரணம் அடைந்திருப்பாரா அல்லது அதற்கு முதலே மரணம் அடந்திருப்பாரா??

:lol:

உடனடியா சொல்ல முடியாது. பட் இவர் இறந்த பிறகு சாப்பிடேலை என்டது மட்டும் (துர்)ப்பறிந்த இன்பர்மேசனில இருந்து தெரியுது.

நன்றி போஸ் இவர் சாப்பிட்ட பிறகு மரணம் அடைந்திருப்பாரா அல்லது அதற்கு முதலே மரணம் அடந்திருப்பாரா??

:lol:

சாப்பிட்டிட்டு இருக்கும் போதே இறந்திட்டாரம்

உடனடியா சொல்ல முடியாது. பட் இவர் இறந்த பிறகு சாப்பிடேலை என்டது மட்டும் (துர்)ப்பறிந்த இன்பர்மேசனில இருந்து தெரியுது.

இறந்த பிறகு இவர் சாப்பிடாத படியால் இவர் கையும் கழுவி இருக்க மாட்டார் தானே பொஸ்

:lol::lol:

சாப்பிட்டிட்டு இருக்கும் போதே இறந்திட்டாரம்

அதை நாங்கள் தான் சொல்ல வேண்டும்

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த பிறகு இவர் சாப்பிடாத படியால் இவர் கையும் கழுவி இருக்க மாட்டார் தானே பொஸ்

:lol::lol:

அதை நாங்கள் தான் சொல்ல வேண்டும்

:D

அய் நோ அய் நோ

பட் இவர் வெள்ளைக்காறர் என்ட படியா கரண்டி பாவிச்சிருக்கிறார் சாப்பிடேக்க.

அய் திங் இறக்க முன்னம் இவர் உயிரோட இந்திருக்க வேணும்.

அய் நோ அய் நோ

பட் இவர் வெள்ளைக்காறர் என்ட படியா கரண்டி பாவிச்சிருக்கிறார் சாப்பிடேக்க.

அய் திங் இறக்க முன்னம் இவர் உயிரோட இந்திருக்க வேணும்.

போஸ் யூ ஆர் கரெக்ட் பட் எனக்கு ஒரு டவுட் சாப்பிடும் போது தண்ணி குடித்திருப்பார் தானே

:lol:

  • தொடங்கியவர்

நியூசிலாந்து - கனடா இடையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் துடுப்பாடிக்கொண்டுள்ளது. தற்போது நியூசிலாந்து அணியினர் 20 ஓவர்கள் முடிவில் விக்கெற் எதுவும் இழக்காமல் 140 ஓட்டங்களை பெற்றுள்ளார்கள். Run Rate - 7.0

சற்று முன் நியூசிலாந்து அணித்தலைவர் ஸ் ரீபன் பிளெமிங் ஆட்டமிழந்துள்ளார்.

Edited by யாழ்வினோ

உங்கள் கமன்ஸை நிறுத்திவிட்டு கிறிக்கற்றின் நிலையை எண்ணிப்பாருங்கள் கிட்கற் ஆக்கிவிட்டார்களே!இந்தபோட்டிகளில் கிண்ணத்தை தட்டிகொண்டால் தலா85லட்சம் ஒவ்வருவருக்கும் வழங்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.அல்லது இறுதிவரை கலந்துகொண்டால்37லட்சம் வீதம் வழங்க தீர்மானித்திருந்தது.இதைவிட மேலதிகமான பணத்துக்காக கொலைகள் நடந்திருக்கலாம்.

  • தொடங்கியவர்

நியூசிலாந்து அணியினர் மிகவும் சிறப்பாக துடுப்பாடி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெற்றுக்களை இழந்து 363 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பாடிய கனடா அணியினரும் மிகவும் சிறப்பாக துடுப்பாடினர் ஆனாலும் அவர்களால் 249 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. கனடா அணியானது புதிய அணியாக இருந்தாலும் இன்று அவ் அணியின் தலைவர் John Davison 23 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். கனடா அணிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கின்றது.

New Zealand - 363 / 5

Vincent - 101

Fleming - 66

McCullum - 52 (not out)

Canada - 249 All Out

John Davison - 52

Edited by யாழ்வினோ

11 போட்டியாளர்கள் நெதர்லாந்து அணி ஸ்கொட்லண்டினை வெற்றி பெறும் என்று சரியாகப் பதில் அளித்திருந்தார்கள். இதன் படி முதலாம் இடத்தினை தற்பொழுது யாழ்வினோ கைப்பற்றி உள்ளார். 3,4,5,6ம் இடத்தில் இருந்த வாசகன், சிவராஜா,வானவில், வெண்ணிலா முறையே 2,3,4,5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்கள். 9,10,14,15,16,18ம் இடத்தில் இருந்த ஜமுனா, ஜனார்த்தனன், ராஜன், மணிவாசகன், மது, ரமா ஆகிய போட்டியாளர்கள் முறையே 6,8,9,10,11,17ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=273644

நேற்றைய கனடாவின் ஆட்டம் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்து விட்டது.

நெதர்லாந்து ஸ்கொத்லாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லண் அணி பத்துவிக்கட் இழப்பிற்கு 34.1 ஓவர்களில் 136 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியினர் 23.5 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நெதர்லாந்தின் R Doeschate ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 13 - 4s ம் 1 - 6s 70 ஓட்டங்களை எடுததமை குறிப்பிடத்தக்கது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அணியானது புதிய அணியாக இருந்தாலும் இன்று அவ் அணியின் தலைவர் John Davison 23 பந்துகளில் அரைச்சதம் அடித்தார்.

சென்ற உலகக்கிண்ணப்போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடினார்

  • தொடங்கியவர்

கந்தப்பு நான் நேற்று John Davison இன் துடுப்பாட்டத்தை மிகவும் ரசித்தேன் அவர் அவுஸ்ரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் பின்பு கனடா சென்று குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏதாவது ஒரு கட்டத்திலாவது முதலிடத்தில் வரவேண்டும் என்பது தான் எனது ஆசை அதன் பின்னர் தரவரிசையில் பின் தள்ளப்பட்டாலும் பறவாயில்லை. :lol:

11 போட்டியாளர்கள் நெதர்லாந்து அணி ஸ்கொட்லண்டினை வெற்றி பெறும் என்று சரியாகப் பதில் அளித்திருந்தார்கள். இதன் படி முதலாம் இடத்தினை தற்பொழுது யாழ்வினோ கைப்பற்றி உள்ளார் விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=273644

:lol: :lol:

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை?

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜமைக்கா ரேடியோ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப் உல்மர் மரணம் குறித்து அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று தான் முதல் முறையாக பாப் உல்மர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்தச் சூழ்நிலையில் பாப் உல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜமைக்கா ரேடியோ செய்தி கூறுகிறது. ஜமைக்கா ரேடியோவின் நிருபர் ரோஹன் போலல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கழுத்து நெரித்துத்தான் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறை இந்த செய்தியை விரைவில் பகிரங்கமாக வெளியிடவுள்ளது. எனக்கு இந்தத் தகவலை யார் கொடுத்தார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை.

மிக மிக நம்பகத்தன்மை கொண்ட ஒரு இடத்திலிருந்து இந்த செய்தி எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் இந்த செய்தியை காவல்துறை உறுதிப்படுத்தும்.

உல்மரின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்களை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உல்மர் விழுந்து கிடந்த அறையில் வாந்தி எடுத்த அடையாளம், அவரது உடலிலிருந்து மலம் வெளியேறியது, அறையில் சிதறிக் கிடந்த ரத்தம் ஆகியவை இதை நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார் போலல்.

ஜமைக்கா நிருபர் தெரிவித்துள்ள இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, உல்மரின் உடல் சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

http://www.sooriyan.com/index.php?option=c...112&Itemid=

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

Police hunt Woolmer's murderer

Police are searching for the killer - or killers - of Bob Woolmer after revealing he was strangled in his hotel room on Sunday. During a press conference in Jamaica police confirmed Woolmer was murdered - he showed few signs of struggling with his attackers - and there were no suspects.

"The pathologist's report states that Mr Woolmer's death was due to asphyxiation as a result of manual strangulation," Karl Angell, the police spokesman, said. "In these circumstances, the matter of Mr Woolmer's death is now being treated by the Jamaica police as a case of murder."

Mark Shields, Jamaica's deputy commissioner of police, is now heading the investigation and said there were many lines of inquiry. "Bob is a large man and it would take some significant force to strangle him, but we don't know at this point how many people were in his room," he said. "There was very little evidence of a struggle."

When asked why it had taken so long to prove the case of strangulation Shields said: "There were no visible signs in this particular case and we had to make sure."

Shields said there was no reason why the Pakistan team would be detained in Jamaica, "but we're ruling nothing out". He said the coroners would decide whether Woolmer's body would be allowed to travel back with the team on Saturday. "I have a meeting with them in morning," Shields said.

Woolmer was pronounced dead at 12.14pm on Sunday, but Shields said "there were no visible signs of life when found". "He went to his room at 8.30pm in the evening and was found by a chamber maid at 10.45am. We don't have a time of death as of now, but I would say it's closer towards the time he was found."

When asked if there were any other injuries Shields said: "There were some other issues around the body which we'll take time to look at and examine."

Vomit and blood was also found in the room, but Shields was still waiting for the toxicology and histology results. "A full forensic examination of the body in the room was done for finger prints," he said. "We have sealed all CCTV records as well as all electronic records. Calls to the room, calls from his mobile all have been checked."

Shields said Scotland Yard, his former employers, had offered its assistance and he would take it "should we need it". Woolmer held a British passport, but split most of his time since taking the Pakistan job living in Lahore and Cape Town.

"We're also in touch with Pakistan and South African police," Shields said. "The ICC has offered us all assistance [with regard to the Anti-Corruption Unit] and we're exploring every avenue."

Malcolm Speed, the ICC chief executive, confirmed at the conference the World Cup would continue and they would not be "put off by a cowardly criminal act". "This is not the first time that tragedy has visited a sporting event," Speed said, "but what we must all do now is to show how resolute the game is by proving ourselves strong enough to move on from what has happened."

http://content-aus.cricinfo.com/wc2007/con...ory/286794.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் தெற்காசிய பயிற்சியாளர்க்கு ஒன்றும் நடக்கவில்லை அப்படி நடந்து இருந்தால் எங்கன்ட சிட்னி டமிழ்ஸ் தூக்கில தொங்கி இருப்பினம்

:unsure:

Edited by putthan

சென்ற உலகக்கிண்ணப்போட்டியிலும் இவர் சிறப்பாக விளையாடினார்

கடந்த 2003 ஆண்டு உலக கிண்ணத்தில் மேற்கிந்தியாவுக்கெதிராக 72 பந்துகளில் சதமடித்து உலககிண்ணத்தில் அதிவேக சத்தை அடித்தவர் என்டும் சாதனையை வைத்திருக்கிறார், நேற்றைய போட்டியோடு 2தடவை 23 ப்நதுகளில் 50அடித்தவர் என்ற உலக கிண்ண சாத்ணையயும் படைத்திருக்கிண்றார். என்னுமொரு கொசுறு செய்தி இவரும் தென்னாபிரிக்க கப்டன் சிமித்தும் ஒரே கல்லூரியில் கல்வி கற்றவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.