Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அடம் கில்கிறிஸ்ற் அடிக்கும் சொட்டுக்கும் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியா அடிக்கும் சொட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

gilli122qt5.jpg

jeypc3.jpg

யாழ் வினோ-- சொட்டு வித்தியாசந்தான்.. கண்ணிலை.. வேறையும் கண்டுபிடிக்கிறதோ..

:P :P :P

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

யாழ் வினோ-- சொட்டு வித்தியாசந்தான்.. கண்ணிலை.. வேறையும் கண்டுபிடிக்கிறதோ..

:P :P :P

அடம் கில்கிறிஸ்ற் அடிக்கிறது எக்சலன்ற் கிறிக்கற் சொட், பன்டாஸ்ரிக் கிறிக்கற் சொட் ஆனால் சனத் ஜெயசூரியா அடிக்கிற சொட்டை அப்படி எல்லாம் வர்ணிக்க முடியாது வேணும் என்றால் பரத நாட்டிய சொட் என்று சொல்லலாம். :o

அடம் கில்கிறிஸ்ற் அடிக்கிறது எக்சலன்ற் கிறிக்கற் சொட், பன்டாஸ்ரிக் கிறிக்கற் சொட்

untitled3sb4.jpg

மகெலவின் இந்த சொட் எப்பிடி இருக்கு...

:o:o:D

நியுசிலாந்து பங்காளதேசம்

நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய பங்களதேசம் தனது சகல விக்கட்டுக்களையும் 48.3 ஓவாகளில் இழந்து 174 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 29.2 ஓவர்களில் 1 விக்கட் இழப்பில் 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

S Fleming 92 பந்துகளில் 10 - நான்கு ஓட்டங்களையும் 3 -- ஆறு ஓட்டங்ளுடன் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட S Bond தனது 10 ஓவர்களில் 4 மேய்டின் ஓவர்களுடன் 15 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வினோ தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று வாதாடுகிறார். கில்கிறிஸ்ரும், சனத் ஜெயசூர்யாவும் உண்மையிலே சிறந்த வீரர்கள் தான், ஆனால் ஜெயசூர்யாவோடு கில்கிறிஸ்ரை ஒப்பிடமுடியாது, ஜெயசூர்யா ஒரு சகலதுறை ஆட்டக்காரர், ஆனால் கில்கிறிஸ்ரோ ஒரு விக்கட் காப்பாளர் மட்டுமே, இறுதியாக நடைபெற்ற போட்டியில் கூட 115 ஓட்டங்களையும், 3 விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். விக்கட் காப்பாளராக யாரும் வரலாம், பிடிக்கலாம் பந்தை, ஆனால் பந்து வீசுவது என்பது சிரமம், ஜெயசூர்யா அணிக்காக ஓட்டங்களை எடுத்து குடுப்பதுடன், பந்துவீச்சின் மூலம் எதிரணி ஓட்டங்களை குறைக்கிறார். ஆனால் கில்கிறீஸ்? பட்ஸ்மெனின் பற்றீல் பட்டு வரும் பந்துகளை அதுவும் கையுறையுடன் தான் பிடிக்கிறார், ஆனால் ஜெயசூர்யா? கையுறை இல்லாமல் தானே பந்தைப்போட்டு தானே பிடித்தும் இருக்கிறார்.

அதைவிட ஜெயசூர்யா சிக்ஸ் அடிக்கும் பொழுது டான்ஸ் ஆடுகிறார் எண்டு வினோ புலம்பினார், ஒருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்ரைல் இருக்கும். ஜெயசூர்யாவின் ஸ்ரைல் அதுவாக இருக்கும். ஆனா ஜெயசூர்யா டான்ஸ் ஆடினார் என்றால் பந்து பறக்கும், வலது காலை தூக்கி சிக்ஸ் அடிப்பது போல், கில்கிறீஸ் முழங்காலை நிலத்தில் குத்தி சிக்ஸ் அடிப்பார்.

அனேகமாக ஜெயசூர்யா 15 ஓவர்கள் களத்தில் நிற்கும் பொழுது அணியின் ஓட்ட எண்ணிக்கை 100க்கு மேல் தான் இருக்கும், ஆனால் கில்கிறிற் நிற்கும் போது அவ்வாறு வாறது மிக குறைவே.

58192yn5.jpg

எனக்கு பிடித்த ஜெயசூர்யாவின் சொட், அனேகமாக இப்படியான சொட்களை ஏனைய வீரர்கள் அடுத்ததை நான் காணவில்லை.

70588sp3.jpg

கில்கிறீஸ் அனேகமாக இப்படித்தான் சிக்ஸ் அடிப்பார், இந்த ஸ்ரைலை அனேகமான வீரர்கள் அடிப்பார்கள், குறிப்பாக சங்கக்காரா, அசாருதீன், சாகித் அப்ரிடி, இன்சமாம்.

அதைவிட ஒரு நாள் போட்டிகளில் ஜெயசூர்யாவே உலகில் அதிகளவு சிக்சர்களை அடித்த வீரர்கள் வரிசையில் முதலாவதாக இருக்கிறார். 235 சிக்சர்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார். கில்கிறிஸ்ட் 128 சிக்சர்களே.

அதைவிட பின்னனி வீரர்களுக்கு தனது தொடக்க அதிரடியால் குளுக்கோஸ் குடுப்பது ஜெயசூர்யா மட்டுமே.

விக்கட்காப்பாளரையும், சகலதுறை ஆட்டக்காரையும் ஒன்றாக ஒப்பிடுகிறீரே, நீர் பிடித்த முயலுக்கு 5 காலளேய் வினோ... :angry: :angry:

சரியாகக் கொடுத்தீர்கள் Danklas.. யாழ்வினோ நினைக்கிறார். தான் சொல்வதுதான் சரியென்று.. பாவம்..

வாழ்த்துக்கள் Danklas..

:P :P :P :o

யாழ்வினோ நினைக்கிறார். தான் சொல்வதுதான் சரியென்று.. பாவம்..

gilgristcl7.jpg

இது கில்க்ரிஸ்ட்டின் குச்சீபிடி ஷொட்.. யாழ் வினோ

:P :P

gilgristcl7.jpg

இது கில்க்ரிஸ்ட்டின் குச்சீபிடி ஷொட்.. யாழ் வினோ

:P :P

இது தான் உண்மையான கிரிக்கட் அடி ஜயசூர்யா அடிக்கிறது மட்டையை எல்லா பக்கம் சுற்றி பார்கிறது தவறுதலாக பட்டால் அது போகும்

:P :lol::lol:

  • தொடங்கியவர்

கில்கிறிஸ்ற் அடிக்கிற இந்த சொட்டுக்கு பெயர் "குக் சொட்" என்னைப் பொறுத்த வரையில் இந்த படத்தில் இருப்பது ஒரு வொண்டர்புல் குக் சொட். :lol:

கில்கிறிஸ்ற் அடிக்கிற இந்த சொட்டுக்கு பெயர் "குக் சொட்" என்னைப் பொறுத்த வரையில் இந்த படத்தில் இருப்பது ஒரு வொண்டர்புல் குக் சொட். :)

யாழ் வினோவுக்கும், ஆதரவாக வந்தவருக்கும் ஒரு வார்த்தை.. இருக்கிற படங்களை வைத்துக்கொண்டு ஆராய்ந்தது போதும்.. கொஞ்ச நாள் பொறுங்கோ.. எல்லாம் தெரியும்..

:lol::lol::lol: :P

யாழ் வினோவுக்கும், ஆதரவாக வந்தவருக்கும் ஒரு வார்த்தை.. இருக்கிற படங்களை வைத்துக்கொண்டு ஆராய்ந்தது போதும்.. கொஞ்ச நாள் பொறுங்கோ.. எல்லாம் தெரியும்..

:lol::lol::lol: :P

பொன்னி நான் வந்தது என் நாட்டுக்கு ஆதரவாக சவாலுக்கு நானும் ரெடி

:P :):D

  • தொடங்கியவர்

Official Team Rankings (ODI)

doc1ji6.jpg

Top Ten Batsmen (ODI)

toprn9.jpg

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

Super 8 Stage அணிகள் பெற்றுள்ள புள்ளி விபரம்

sheyu2.jpg

Edited by யாழ்வினோ

யாழ்வினோ தான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று வாதாடுகிறார். கில்கிறிஸ்ரும், சனத் ஜெயசூர்யாவும் உண்மையிலே சிறந்த வீரர்கள் தான், ஆனால் ஜெயசூர்யாவோடு கில்கிறிஸ்ரை ஒப்பிடமுடியாது, ஜெயசூர்யா ஒரு சகலதுறை ஆட்டக்காரர், ஆனால் கில்கிறிஸ்ரோ ஒரு விக்கட் காப்பாளர் மட்டுமே, இறுதியாக நடைபெற்ற போட்டியில் கூட 115 ஓட்டங்களையும், 3 விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். விக்கட் காப்பாளராக யாரும் வரலாம், பிடிக்கலாம் பந்தை, ஆனால் பந்து வீசுவது என்பது சிரமம், ஜெயசூர்யா அணிக்காக ஓட்டங்களை எடுத்து குடுப்பதுடன், பந்துவீச்சின் மூலம் எதிரணி ஓட்டங்களை குறைக்கிறார். ஆனால் கில்கிறீஸ்? பட்ஸ்மெனின் பற்றீல் பட்டு வரும் பந்துகளை அதுவும் கையுறையுடன் தான் பிடிக்கிறார், ஆனால் ஜெயசூர்யா? கையுறை இல்லாமல் தானே பந்தைப்போட்டு தானே பிடித்தும் இருக்கிறார்.

ஜெயசூரிய ஒரு சிறந்த விக்கட் கீப்பர் கூட. இலங்கையணிக்காக ஒரு குறுகிய காலம் ஜெயசூரிய விக்கட்கீப்பராகவும் விளையாடியிருந்தார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் விக்கட் காப்பாளர் என கிரிக்கட் விளையாட்டில் அனைத்திலும் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டும் ஒரு சிறந்த விளையாட்டு வீரன்.

JAYASURIYA_SANATH_ODI_HITS_IN_AIR_LEG.jpg

jey1.jpg

050810-00.jpg

அப்பு வினோ உங்க கீலிகிஸ்ஸால இப்படி சொட் அடிக்க முடியுமா.........? ஒப்ஃ ல பவபுல்ல

Edited by வானவில்

அதிக ரன்கள்: ஜெயசூர்யா 2-வது இடம்; இன்ஜமாமை முந்தினார்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜெயசூர்யா 115 ரன் எடுத்தார். 39-வது ரன்னை தொட்ட போது அவர் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரரான இன்ஜமாமை முந்தினார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 வீரர்கள் வருமாறு:-

1.தெண்டுல்கர் (இந்தியா)- 384 போட்டியில் 14,816 ரன்.

2.ஜெயசூர்யா (இலங்கை)- 384 போட்டியில் 11,816 ரன்.

3.இன்ஜமாம் (பாகிஸ் தான்)-378 போட்டியில் 11,739 ரன்.

4. கங்குலி (இந்தியா) 289 போட்டியில் 10,632 ரன்.

5.லாரா (வெஸ்ட் இண்டீஸ்)- 296 போட்டியில் 10,333 ரன்

தொடர்ந்து 3-வது தோல்வி: கேப்டன் பதவியில் இருந்து லாரா விலக வேண்டும்; முன்னாள் வேகப்பந்து வீரர் ஹோல்டிங் வலியுறுத்தல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அரை இறுதிக்கு நுழையுமா என்ற சந்தேக நிலை உருவாகி உள்ளது. `சூப்பர்8' சுற்றில் ஆஸ் திரேலியா, நிïசிலாந்து, இலங்கை அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. எஞ்சி மோத உள்ள தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்துக்கும் எதிரான ஆட்டங்களில் வென்றால்

மட்டுமே சூப்பர்8 சுற்று வாய்ப்பில் இருக்க முடியும்.

இந்த தோல்வியால் கேப்டன் லாரா கடும் விமர்சனத்து உள்ளாகி இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளரும், டெலிவிசன் வர்னணையாளருமான மைக் கேல் ஹோல்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்காக கேப்டன் பதவியில் இருந்து லாரா விலகி இன் னொருவருக்கு வழிவிட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமானால் அவர் இதை செய்ய வேண்டும். ஆனால் வீரராக அணியில் இருக்கலாம்.புதிய

கேப்டனுக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

லாரா ஒரு சிறந்த பேட்ஸ் மேன் அவ்வளவுதான். ஆனால் கேப்டனுக்குரிய திறமைகள் அவரிடம்இல்லை.இவ்வாறு ஹோல்டிங் கூறினார்.

நிசிலாந்து எதிரான ஆட்டத்தில் 11 வீரர்களை தேர்வு செய்தது தொடர்பாக லாராவை ஏற்கனவே ஆன்டி ராபர்டஸ் சாடி இருந்தார்.

1979-ம் ஆண்டு உலக கோப் பையை வென்ற வெஸ்ட் இண் டீஸ் அணியில் ஹோல்டிங் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lankasri Sports : jega

  • தொடங்கியவர்

அப்பு வினோ உங்க கீலிகிஸ்ஸால இப்படி சொட் அடிக்க முடியுமா.........? ஒப்ஃ ல பவபுல்ல

கவர் பிரதேசத்தினூடாக கட் ஷொட் அடிப்பதில் பிரபல்யமானவர்களில் அடம் கில்கிறிஸ்ரும் ஒருவர். அவர் அடிக்கும் கட் ஷொட் மைதானத்தில் உறுண்ட படியே சீறிக்கொண்டு போய் பவுண்டறி எல்லையை தொட்டுவிடும் பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும். ஜெயசூரியா அடிக்கும் கட் ஷொட்டுகள் மைதானத்தால் உருண்டு போவது மிகவும் குறைவு அவர் கட் ஷொட் அடிக்கும் போது அனேகமாக ரொக்கட் விடுவார் அதை தேட் மான் இல் நிற்க்கும் கள தடுப்பாளர் அல்லது கவர் பிரதேசத்தில் நிற்க்கும் கள தடுப்பாளர் பிடித்து ஜெயசூரியாவை ஆட்டமிழக்க செய்து விடுவார் இந்த உலக கிண்ணத்தில் இந்தியாவுடனான ஆட்டத்தின் போதும் அவர் அப்படி தான் ஆட்டமிழந்தார்.

gilli122qt5.jpg

அடம் கில்கிறிஸ்ரின் எக்சலன்ற், வொண்டர்புல் கட் ஷொட்.

Edited by யாழ்வினோ

இலங்கை அணிக்கு மீண்டும் அபார வெற்றி அடுத்த சுற்று வாய்ப்பை மேற்கிந்தியா இழக்கிறது

மேற்கிந்தியாவுக்கு எதிரான `சுப்ப - 8' சுற்றுப் போட்டியில், இலங்கை அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் `சுப்ப - 8' சுற்றுப் போட்டியில், நேற்று முன்தினம் மேற்கிந்தியா, இலங்கை அணிகள் கயானாவில் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது.

முதலில் ஆடிய இலங்கை அணி முன்னணி வீரர்களான தரங்க (8), சங்ககார (7) விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெயசூரிய, கப்டன் மஹேல ஜெயவர்தன ஜோடி அபாரமாக ஆடி ஓட்டங்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெயசூரியா, 10 பவுண்டரி 4 சிக்சருடன் ஒருநாள் போட்டிகளில் தனது 25 ஆவது சதத்தை கடந்தார். இவர் 115 ஓட்டங்களை குவித்து வெளியேறினார்.

மறுமுனையில் ஜெயவர்தன (82), ஒருநாள் போட்டியில் தனது 36 ஆவது அரைச்சதம் கடந்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 183 ஓட்டங்களை எடுத்தது. சாமர சில்வா (23) பெரிய அளவில் சாதிக்கவில்லை. அடுத்து வந்த டில்ஷான் வழக்கம் போல் அதிரடியில் கலக்கினார். 2 பவுண்டரி 2 சிக்சர் அடித்த டில்ஷான் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை குவிக்க, 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்களை குவித்தது.

சவாலான இலக்கை `சேஸ்' செய்த மேற்கிந்தியாவுக்கு கெய்ல் ஏமாற்றமளித்தார். மலிங்கவின் பந்துவீச்சை சிக்சருக்கு விரட்ட முயன்ற இவர், 10 ஓட்டங்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய பிராவோ (21) மேற்கிந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினார். அடுத்து வந்த கப்டன் பிரையன் லாரா (2), எதிர்பாராதவிதமாக சங்கக்காரவால் ஸ்ரெம் செய்யப்பட, அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் சந்தர்போல், சர்வான் ஜோடி நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தியது. சந்தர்போல் ஒருநாள் போட்டிகளில் தனது 45 ஆவது அரைச்சதமடித்தார். மறுமுனையில் சர்வான் 44 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் (3), டுவைன் ஸ்மித் (0), ராம்டீன் (2) அடுத்தடுத்து வெளியேற, அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. தனி ஒருவராக போராடிய சந்தர்போல் 76 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

பின்வரிசை வீரர்களான டெய்லர் (13), பவல் (2) சொதப்ப, 44.3 ஓவர்களில் மேற்கிந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சாதனை சமன்

மேற்கிந்தியாவுக்கு எதிரான `சுப்ப - 8' போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூரிய இந்தியாவின் சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 384 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். தவிர, 39 ஓட்டங்கள் எடுத்த போது ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் இன்சமாமை முந்தி இரண்டாவது இடம் பிடித்தார் ஜெயசூரிய.

இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி மூலம் மேற்கிந்திய அணி பெரும்பாலும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கவுள்ளது.

thinakkural.com

ஜெயசூரியா அடிக்கும் கட் ஷொட்டுகள் மைதானத்தால் உருண்டு போவது மிகவும் குறைவு அவர் கட் ஷொட் அடிக்கும் போது அனேகமாக ரொக்கட் விடுவார் அதை தேட் மான் இல் நிற்க்கும் கள கடுப்பாளர் அல்லது கவர் பிரதேசத்தில் நிக்கும் கள தடுப்பாளர் பிடித்து ஜெயசூரியாவை ஆட்டமிழக்க செய்து விடுவார் இந்த உலக கிண்ணத்தில் இந்தியாவுடனான ஆட்டத்தின் போதும் அவர் அப்படி தான் ஆட்டமிழந்தார்.

இந்த விஷயத்தில் நான் யாழ் வினோ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்..இப்படி நடந்திருக்கிறது.

:icon_mrgreen::icon_mrgreen:

இந்த விஷயத்தில் நான் யாழ் வினோ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்..இப்படி நடந்திருக்கிறது.

:icon_mrgreen::icon_mrgreen:

பொன்னி அந்த சொட்டில் களத்தடுப்பளரின் கைக்கு போகும் பந்தை விட எல்லைக் கோட்டை தாண்டும் பந்துகள்தான் அதிகம்

பொன்னி அந்த சொட்டில் களத்தடுப்பளரின் கைக்கு போகும் பந்தை விட எல்லைக் கோட்டை தாண்டும் பந்துகள்தான் அதிகம்

நீங்கள் சொல்வது உண்மை.. ஜெயசூரியா களத்துக்கு வந்தவுடன் off sideல் ஆட்களை கவனமாக நிறுத்துகிறார்கள்..இதற்காகத்

நீங்கள் சொல்வது உண்மை.. ஜெயசூரியா களத்துக்கு வந்தவுடன் off sideல் ஆட்களை கவனமாக நிறுத்துகிறார்கள்..இதற்காகத்

  • தொடங்கியவர்

ஆனால் கடந்த போட்டியில் பார்த்தீர்கள் என்றால் லாரா ஓf சைட்டில் பலமான களத்தடுப்பை போட்டிருந்த்தார் ஆனால் ஜெயசூரியா லென் சைட்டில் தான் அதிகமாக ஓட்டங்களை குவித்திருந்தார்

மேற்கிந்திய அணியுடன் நடை பெற்ற ஆட்டத்தில் ஜெயசூரியாவுக்கு Off Side இல் வலுவான களத்தடுப்பு வியூகம் அமைக்கப்பட்டிருந்தது தான் ஆனால் களத்தடுப்பில் ஈடுபட்ட வீரர்கள் உசாராக சிறந்த முறையில் களத்தடுப்பில் ஈடுபடவில்லை மாறாக மிகவும் மோசமான முறையில் களத்தடுப்பில் ஈடுபட்டார்கள். எறிந்த துறொக்களை ஒழுங்காக விக்கெற்றுக்கு படிக்கூடியவாறு எறிந்திருந்தால், பிடிகளை தவறவிடாமல் பிடித்திருந்தால் ஜெயசூரியா வேளைக்கு அவுட் ஆகியிருப்பார். அந்த ஆட்டம் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும் அன்றைய தினம் மேற்கிந்திய வீரர்கள் சிக்குன் குனியா வந்தவர்கள் போல தான் களத்தில் நின்றார்கள் யாருமே அற்ப்பணிப்புடன் விளையாடவில்லை கிறிஸ்ற் கைல் அன்று றோபோ போல தான் மைதானத்தில் நின்றார் அவர் பந்தை தடுப்பதற்கு ஓடிப்போவதை பார்க்கும் போது சிலோ மோசனில் றீபிளே காட்டுவது போல் இருந்தது இவர்களுடைய இந்த பொறுப்பற்ற ஆட்டம் பார்வையாளர்களையும் மேற்கிந்திய அணியின் முன்னய துடுப்பாட்ட வீரர்களையும் கடும் விசனத்துக்குள்ளாக்கி இருப்பதை கிறிக்இன்போ வெப் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் பார்வையாளர்களும் மேற்கிந்திய அணியின் முன்னய துடுப்பாட்ட வீரர்களும் அணித்தலைவர் லாறா மீது தான் குற்றம் சுமத்தியுள்ளார்கள் லாறாவை தான் கடுமையாக சாடியுள்ளார்கள் லாறாவினுடைய தலமைத்துவம் சரியில்லை அவருடைய தலமைத்துவம் பயனளிக்கவில்லை அவர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் அணித்தலைவரால் என்ன செய்ய முடியும்?? சில மாதங்களுக்கு முன் இந்திய அணியினருடன் தற்போது போட்டிகள் நடை பெறும் அதே மைதானங்களில் நடை பெற்ற ஐந்து போட்டிகளில் மேற்கிந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது அத்துடன் இந்தியாவில் நடை பெற்ற ஐசிசி சம்பியன் போட்டியிலும் மிகவும் சிறப்பாக ஆடி இறுதி ஆட்டம் வரை சென்றது இவற்றை மனதில் வைத்து தான் நான் யாழ் கள வினா விடை போட்டியில் அவுஸ்ரேலியா அணிக்கு அடுத்த படியாக மேற்கிந்திய அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து விடைகளை எழுதியிருந்தேன் ஆனால் இன்று மேற்கிந்திய அணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது அதனால் இனி வரும் போட்டிகளிலும் மேற்கிந்திய அணி தோல்வியடைந்தால் யாழ் கள போட்டி தர வரிசையில் நான் பின் தள்ளப்படுவது உறுதி. :lol:

Edited by யாழ்வினோ

ஜஸ்லாந்துக்கும் தென்னாபிரிக்காவிற்குமான 35 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டத்தில்

ஐஸ் அணியினா தமது 8 விக்கட் இழப்பிற்கு 35 ஓவர்களில் 152 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுததாடிய தென்னாபிரிக்கா அணி தனது 31.3 ஓவர்களில் 3 விக்கட்ட இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.