Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தளங்கள் - மாற்றுப்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[21 - February - 2007] [Font Size - A - A - A]

அண்மைக்காலங்களில் உலகமயமாக்கப்பட்டுள்ள உலகளாவிய சூழலில் வர்த்தக அபிவிருத்தியில் இலத்திரனியல் நன்மைகள் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குத் தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சர்வதேச கணினி வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதால் வறுமையைக் குறைக்க முடியும். செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் எனச் செல்வந்த நாடுகளின் தொலைத் தொடர்புக் கம்பனிகள் பிரசாரம் செய்கின்றன. உலக வங்கி, யுனெஸ்கோ, யு.எஸ்.எய்ட் (க்குஅஐஈ) போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இக்கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுகள் தகவல் தொழில்நுட்பத்தில் பாரிய முதலீடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன. இக்கம்பெனிகள் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்குவதால் பெரிய இலாபத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கின்றன. இவ்விடத்து கணினி வலையமைப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி அதிகம் ஆராயப்படுவதில்லை.

ஒரு காலத்தில் உலகளாவிய வறுமையைப் (பட்டினியை) போக்க பசுமைப் புரட்சியே வழி என்று கூறப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டமையால் வறியவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேர்ந்தது என்பது வரலாறு.

2000ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இணையத்தளங்களை நாடியோர் தொகை 72 மில்லியன்களாகும். இத்தொகை ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிக் கொண்டு வந்து தற்போது நாடுவோர் தொகை அதிகரிப்பு வீதம் குறைந்து வருவதாகத் தெரிகின்றது. இணையத்தளத்தை நாடுவோரில் 3 சதவீதமானவர்கள் மட்டுமே மூன்றாம் உலகத்தைச் சார்ந்தவர்கள் 72 சதவீதமானவர்கள் அமெரிக்கர்கள், 85 சதவீதமானவர்கள் 7 செல்வந்த (எ7) நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக மக்கள் தொகையின் 10 சதவீதமானவர்களே இந்த எ7 நாடுகளில் வாழுகின்றனர். உலக மக்கள் தொகையில் 40 சதவீதமானவர்கள் வாழும் சீனா, இந்தியா, நைஜீரியா, பிரேசில் முதலிய நாடுகளின் இணையத்தளப் பயன்பாடு 0.75% மட்டுமேயாகும்.

பல உலகநாடுகளில் இணையத்தளத் தொடர்புகள் மிகச் சிலவாகவே உள்ளன. இணையத்தளப்படத்தில் பல ஆசிய, ஆபிரிக்கப் பிரதேசங்கள் வெறுமையாகவே உள்ளன. 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 100 மில்லியன் மக்கள் வாழும் நைஜீரியாவில் 77 இணையத்தளத் தொடர்புகளே காணப்பட்டன. வளர்முக நாடுகளில் தலைநகரங்களிலேயே இவை அதிகம். வெளியிடங்களில் மின் அஞ்சல் வசதிகள் மட்டுமே உண்டு. ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவையும் செனகல் நாட்டையும் தவிர்த்து நோக்கினால், கிராமப் புறங்களில் நேரடி இணையத்தளத் தொடர்பு கிடையாது. 780 மில்லியன் மக்கள் வாழும் ஆபிரிக்காக் கண்டத்தில் (உலக மக்கள் தொகையில் 13%) உள்ளவர்கள் மொத்த உலக இணையப் பயன்பாட்டில் 0.3 வீதமானவர்களாகவே உள்ளனர். இலத்தீன் அமெரிக்காவின் பயன்பாடு 1.4% மட்டுமே.

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் உலகில் 275 மில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையின் 4.8%) இணையத்தளத்தைப் பயன்படுத்தினர். அமெரிக்கர்களில் 40 சதவீதமானவர்களும் ஜெர்மன் மக்களில் 15 சதவீதமானவர்களும் சீனர்களில் 1000 க்கு 7 மேல் மட்டுமே இணையத் தளத்தை நாடியிருந்தனர். ஆபிரிக்காவில் வாழும் 73 கோடி மக்களில் 0.3% மட்டுமே இவ்வசதியைப் பெற்றிருந்தனர். இவர்களில் 16 இலட்சம் பேர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்தவர்கள். பல ஆபிரிக்கநாடுகளில் 10,000 பேருக்கு ஒருவரே இணையத்தள வசதிகளைக் கொண்டிருந்தனர். இலங்கையில் இணையத்தள வசதியைக் கொண்டிருந்தவர்கள் 61,532 பேர் (2001)

பொதுவாக தொலைபேசித் தொடர்பு, கணினி, மின்சாரம் என்பன இன்றி இணையத்தளங்கள் உருவாக முடியாது. உலகில் உள்ள மக்கம் தொகையில் 35 சதவீதமானவர்கள் மின்சார வசதியற்றவர்கள். கிராமப்புறங்களில் வாழும் ஆபிரிக்கர்களில் 30 சதவீதமானவர்கள் மின்சார வசதியற்றவர்கள். இந்தியத்துணைக் கண்டத்தின் 50 சதவீத கிராமக் குடும்பங்களுக்கும் இதேநிலைதான். பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் 15 சதவீதமான வீடுகளுக்கே இவ்வசதியுண்டு.

மிகப் பிரதானமாக உலக மக்களில் 80 சதவீதமானவர்கள் தொலைபேசி வசதியற்றவர்கள். 49 நாடுகளில் 100 பேரில் ஒருவருக்கே பிரதான (?ச்டிணஃடிணஞு) தொலைபேசித் தொடர்பு உண்டு. இவற்றில் 35 நாடுகள் ஆபிரிக்காவில் உள்ளன. உலகின் இருபது சதவீத மக்களைக் கொண்ட பத்து செல்வந்த நாடுகளில், உலகளாவிய தொலைபேசிகளில் 35% காணப்படுகின்றன. இச்செல்வந்த நாடுகளில் 100 பேரில் 54 பேருக்கும் வளர்முக நாடுகளில் 5.2 பேருக்கும் பிரதான தொலைபேசித் தொடர்புகள் உண்டு. 1000 பேரில் ஜப்பானில் 489 பேருக்கும் ஐக்கிய அமெரிக்காவில் 640 பேருக்கும் ஜேர்மனியில் 538 பேருக்கும் இந்தியாவில் 15 பேருக்கும் நைஜீரியாவில் 4 பேருக்கும் சீனாவில் 45 பேருக்கும் தொலைபேசி வசதிகள் (?ச்டிணடூடிணஞு) உண்டு (இலங்கையில் 37.9 பேருக்கு சகல தொலைபேசிகளையும் சேர்த்துப் பார்த்தால் 80 பேருக்கு 2001)

வளர்முக நாடுகளில் தொலைபேசி வசதிகள் நகர்ப்புறங்களிலேயே அதிகம். ஆபிரிக்காவில் 50 சதவீதமான தொலைபேசிகள் தலைநகரங்களிலேயே காணப்படுகின்றன. ஆனால், 60-70 சதவீதமான மக்கள் அங்கு கிராமப்புறங்களிலேயே வாழுகின்றார்கள்.

சர்வதேச மதிப்பீடுகளின்படி உலகில் உள்ள சகல கணினிகளில் 28.3 சதவீதமானவை (161 மில்லியன் கணினிகள்) ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்றன. ஐரோப்பாவில் 26.7% மான கணினிகளும் இந்தியாவில் 1.08% மான கணினிகளும் காணப்படுகின்றன( 2000).

இணையத்தள வசதிக்கான மாதாந்த செலவு, வளர்முகநாடுகளைப் பொறுத்தவரையில் மிக அதிகமானது. ஆபிரிக்காவில் 58 டொலர், இந்தியாவில் 35 டொலர், பெருநாட்டில் 18 டொலர் என இச்செலவுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான செலவுகள் வளர்முகநாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்குமிடையே அதிக அளவில் வேறுபடுவதில்லை.

கணினிகளின் விலைகளும் அவ்வாறே அதிகமானவை, சராசரி அமெரிக்கர் தனது ஒரு மாதச் சம்பளத்தையும் வங்காள தேசப் பிரஜை தனது எட்டாண்டு வருமானத்தையும் செலவழித்தே ஒரு கணினியை வாங்கும் நிலை காணப்பட்டது. தொலைத்தொடர்பு வசதிகள் எதிர்காலத்தில் வசதிமிக்க நகர்ப்புறங்களிலேயே பெருவளர்ச்சி பெறமுடியும் என்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கு இவ்வசதிகள் கிட்டாது என்ற அச்சம் இன்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பல மட்டுப்பாடுகள் இருந்த போதிலும் வளர்முக நாடுகள் "புதிய தொழில் நுட்பம்" பல்வேறு நன்மைகளைத் தரும் என எதிர்பார்க்கின்றனர்.

- தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உருவாகும் தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள், புள்ளி விபரங்கள் என்பவற்றை மேலும் சிறப்பாகப் பெற முடியும்.

- சுகாதாரம்: சுகாதாரத் தகவல் அமைப்புகளை நிறுவுதல், தொலை சிகிச்சை முறையைப் பயன்படுத்தல் சுகாதாரத்துறைச் செலவுகளைக் குறைத்தல் என்பன

- கல்வியும் ஆராய்ச்சியும்: தொலைமுறைக் கல்வி (கூஞுடூஞு ஃஞுணூணடிணஞ்) உலகளாவிய, பிராந்திய ரீதியில் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தல்.

- கலாசாரம்: இணையத்தில் கலாசார, வரலாற்று அரும்பொருட்சாலைகளை அமைத்தல், இஈ யில் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்தல்.

- உல்லாசப் பயணம்: சர்வதேச உல்லாசப் பயணத்தை வலுப்படுத்தல், விளம்பரச் செலவுகளைக் குறைத்தல்.

- பால் நிலையும் அபிவிருத்தியும்: பால்நிலை சமத்துவம் பற்றிப் பிரசாரம் செய்தல், பெண்களின் உரிமைகளை மேம்படுத்தல்.

- இன்றைய அழிவுகள்: இவற்றை முகாமை செய்தல், அழிவுகள் பற்றிய தகவல் அமைப்பை உருவாக்குதல், எச்சரிக்கை வழிமுறைகளை ஏற்படுத்தல், அவசரகாலங்களில் தொடர்பாடல்.

இது ஆபிரிக்க நாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியலாகும். சமூக, பொருளாதாரக் குறைபாடுகளைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் முயற்சியே இதுவாகும். வறுமை, ஊழல், குற்றம், நியாயத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை. ஏனெனில், அவை தொழில்நுட்பப் பிரச்சினைகள் அல்ல.

வளர்முக நாடுகளில் இணையத்தின் பயன்பாடு

மனித உரிமை மீறலுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு இணையம் பல வாய்ப்புகளை வழங்குகின்றது. அவர்கள் இவ்விடயம் பற்றித் தகவல்களை உடனுக்குடன் உலகெங்கும் அனுப்ப முடிகின்றது. 1989 இல் பீக்கிங்கில் இடம்பெற்ற படுகெலைகள் பற்றி உலகுக்கு அறிவிக்க முதன் முதலாக இணையம் பயன்படுத்தப்பட்டது. சகல மனித உரிமை இயக்கங்களும் இணையத் தள வசதிகளைக் கொண்டுள்ளதால் தகவல்கள் உடனடியாகப் பரிமாறப்படுகின்றன.

மூன்றாம் உலகில் புதிய தொழில் வாய்ப்புகள்

தொழில் வாய்ப்புகள் சர்வதேச ரீதியாக விநியோகம் செய்யப்பட துரித வேக வலையமைப்புகள் காரணமாக உள்ளன. தூரம் என்ற விடயம் இன்று வலுவிழந்து விட்டது. வளர்முக நாடுகளின் தகவல் தொழில்நுட்ப மனிதவலு மேலை நாடுகளால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப வேலைகளை வெளியாட்களைக் கொண்டு செய்து முடித்தல் இன்று பெரிய அளவில் நடைபெறுகின்றது. மேலைநாடுகள் மூன்றாம் உலக ஊழியர்களைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்தி வருகின்றன. வளர்முக நாடுகளில் 100 கோடி ஊழியர்கள் ஒரு நாளைக்குப் பெறும் சம்பளம் 3 டொலர். அவர்களுடைய சக ஊழியர்கள் மேலை நாடுகளில் பெறும் சம்பளம் 85 டொலர் (2000)

இந்தியா

அண்மைக்காலங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பிரதான காரணம் அந்நாட்டில் 1990 களில் எழுச்சியுற்ற தகவல் தொழில்நுட்பத்துறையாகும். இத்துறையில் இடப்பட்டுள்ள முதலீடு 1000 கோடி டொலர்களாகும். இதில் 33 சதவீதம் வன்பொருள் துறையிலும் 62 சதவீதம் மென்பொருள் துறையிலும் இடப்பட்டுள்ளது. 1985 இல் இத்துறை பெற்ற வருமானம் 2.5 கோடி டொலர்கள். 2001 இல் 640 கோடி டொலர் 2004 இல் 1200 கோடி டொலர் 2009 இல் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் வருமானம் 5000 கோடி டொலர்களை எட்டவுள்ளது.

2002 ஆம் ஆண்டில் மொ.உள்நாட்டு உற்பத்தியில் தகவல் தொழில் துறையின் பங்களிப்பு 2 சதவீதமாக இருந்தது. 2010 இல் இச்சதவீதம் 6.8 ஆக அதிகரிக்க உள்ளது. உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்வோரில் 16% மாணவர்கள் இந்தியர்களாவர். இந்தியாவில் ஜெர்மனியை விட இரு மடங்கு தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளனர். அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 70% ஆற்றல் இந்தியாவிடம் உண்டு. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 40 மென்பொருள் தொழில்நுட்பப் பேட்டைகள், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் வலையமைப்புத் தொடர்புகளைக் கொண்டுள்ளன.

இந்தியாவின் உயர் தொழில்நுட்ப நகரமாக மாறியுள்ள பெங்களூர், இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கு எனப் பெயர் பெற்றுள்ளது. ஐஆ? மொட்டோரொலா, ஒராக்கில், சன்மைக்ரோ சிஸ்டம்ஸ், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட் ஆகிய கம்பனிகள் அங்கு நிலைகொண்டுள்ளன.

மென்பொருள் தயாரிப்பினால் பெறப்படும் பெரும்பகுதி வருமானம் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்தே வருகின்றது. குஜராத்தும் மகாராஷ்டிராவும் சற்று முன்னேறி வருகின்றது. மூன்று தென்மாநிலங்களிலும் நாட்டின் 50 சதவீதமான தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களில் 30 சதவீதமானவர்கள் உயர்ந்த சம்பளங்களை நாடி வெளிநாடுகளை நாடினர். இதனைத் தடை செய்யவே தகவல் தொழில்நுட்பப் பேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டன. கணினித் தொழில் வளர்ச்சி பெறப் பெங்களூர் மக்கள் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர்.

விலைவாசிகள் ஐந்து மடங்காக உயர்ந்துவிட்டன. சுற்றாடல் மிக மோசமாக மாசடைந்து விட்டது. நாளாந்தம் நீர்விநியோகம், மின்சாரம் என்பன தடைப்பட்டன. -தொடரும்-

http://www.thinakkural.com/news/2007/2/21/...s_page21783.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.