Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ?

Featured Replies

ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் ?

ganasara-thero.jpg

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, பொதுபல சேனா இயக்கம் கோரியுள்ளது. காவல்துறை மா அதிபருக்கு இது குறித்து கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இனவாத மதவாத முறுகல்களை ஏற்படுத்தி இதன் ஊடாக ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி ஞானசார தேரருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்று மதமொன்றின் மீது தாக்குதல் நடத்தி அந்த இடத்தில் ஞானசாரருக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் ஞானசார தேரருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது.

http://globaltamilnews.net/archives/27884

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஞானசார மறைமுகமாக ஒளிந்துள்ளார், வெளியில் வந்தால் படுகொலை செய்யப்படுவார் : பொதுபலசேனா - மாறுப்பட்ட கருத்துக்களால் புதிய சர்ச்சை

 

 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்பதற்காக அவரை வெளியில் வர வேண்டாம் என எச்சரித்துள்ளோம் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.Bodu-Bala-Sena---____-__-____-BBS.jpg

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின் போதே அவ்வமைப்பின் ஊடகப்பேச்சாளர் டிலாந்த விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள  ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை.  

தேரருக்கு கடுமையான சுகயீனம் காரணமாகவே அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என நீதிமன்றில் தேரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனூஷா பேரு­சிங்க நேற்று  தெரிவித்திருந்தார். இதனையடுத்து 31 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தேரர் உயிருக்கு பயந்து மறைமுகமான இடமொன்றில் ஒளிந்திருப்பதாக அவ்வமைப்பு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20370

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.