Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி

Featured Replies

மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி

 
மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி

இலங்­கை­யில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது மற்­றும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான தனது நிலைப்­பாட்­டில் இருந்து தற்­போ­தைய கூட்டு அரசு வில­கிச் செல்ல ஆரம்­பித்­தி­ருக்­கி­றது என்று உலக நெருக்­க­டி­கள் குழு அண்­மை­யில் அறிக்கை விட்­டி­ருந்த நிலை­யில், வெளி­வி­வ­கார அமைச்­சர் பத­வி­யில் இருந்து மங்­கள சம­ர­வீர மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்.

அமைதி மற்­றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளில் இருந்து அரசு வில­கிக் செலல்­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த மாற்­றம் இருக்­கக்­கூ­டும் என்று அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு கூட்­டாட்­சித் தத்­து­வத்­தின் கீழ் தமிழ் மக்­கள் விரும்­பு­வ­தைக் கொடுத்­துத் தீர்வு ஒன்­றைக் கண்­டு­வி­ட­வேண்­டும் என்று நினைக்­கக்­கூ­டிய, அர­சுக்­குள் இருக்­கும் வெகு சில­ரில் மங்­கள சம­ர­வீர முக்­கி­ய­மா­ன­வர். தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தன் ஊடா­கத்­தான் இலங்­கையை அபி­வி­ருத்­தி­ய­டை­யச் செய்ய முடி­யும் என்று உறு­தி­யாக நம்­பு­கி­றார் அவர்.

அதன் அடிப்­ப­டை­யில்­தான் புதிய அர­ச­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று 2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் ஆணித்­த­ர­மா­கக் கருத்­துத் தெரி­வித்­தார். மனித உரி­மை­கள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளில் உல­கின் கருத்­தோடு போக்­கோடு ஒத்­தோ­டும் பண்­பை­யும் வெளிப்­ப­டுத்­தி­னார்.

2015ஆம் ஆண்டு ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பான தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வது என்று இலங்கை தீர்­மா­னித்­த­தில் கணி­ச­மான பங்கை ஆற்­றி­யி­ருந்­த­வ­ரும் மங்­கள சம­ர­வீ­ரவே!

இனப் பிரச்­சினை விட­யத்­தில் உல­கின், குறிப்­பாக மேற்கு நாடு­க­ளின் கரி­ச­னைக்­குப் பதி­ல­ளிப்­ப­தன் மூலம் உலக அரங்­கில் இலங்­கை­யின் மதிப்­பைத் தூக்கி நிறுத்த முடி­யும் என்­றும் அவர் கரு­தி­னார். அதற்­கேற்­பவே போர்க்­குற்ற விசா­ர­ணை­யில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கு­வ­தற்­கும், காணா­மற்­போ­ன­வர்­கள் தொடர்­பான அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கும் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015 தீர்­மா­னத்­தின் மூலம் இணங்­கி­னார்.

அவ­ரால் இணங்­கப்­பட்ட இந்த இரு விட­யங்­க­ளி­லும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பெரி­ய­ள­வில் உடன்­பாடு இருக்­க­வில்லை. அதி­லும் குறிப்­பாக போர்க் குற்ற விசா­ர­ணை­க­ளில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்க முடி­யாது என்­ப­தில் மைத்­திரி பிடி­வா­த­மாக இருந்­தார். தனக்­குத் தெரி­யா­மல் அல்­லது தன்னை மீறி இது விட­யத்­தில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார் அவர்.

இது விட­யத்­தில் மைத்­தி­ரிக்­கும் மங்­க­ள­வுக்­கும் இடை­யில் சில மோச­மான காலங்­கள் கடந்து சென்­றி­ருக்­கின்­றன. எப்­ப­டி­யி­ருந்­த­போ­தும், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­க­கள் சபை­யில் தான் வழங்­கிய வாக்­கு­று­தி­யி­லி­ருந்து பின்­வாங்­க­வி­ல்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் ஜெனிவா அமர்­வி­லும்­கூட அதே வாக்­கு­று­தி­களை நிற­வேற்­றுவ­தாக உறுதி வழங்­கி­னார்.

2015ஆம் ஆண்­டுத் தீர்­மா­னத்தை அப்­ப­டியே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக நிறைவேற்­றப்­பட்ட தீர்­மா­னத்துக்கும் மங்­கள இலங்கை அரசு சார்­பில் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தார்.

இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே அவர் அய­லு­ற­வுத் துறை அமைச்­சுப் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது பதவி நீக்­­கம், இலங்கை அரசு ஐ.நா. தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் இருந்து பின்­வாங்­கு­வ­தற்­கும், காணா­மற்­போ­னோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை இயக்­கா­மல் அப்­ப­டியே கிடப்­பில் போட்­டு­வி­டு­வ­தற்­கும் உறு­து­ணை­யாக இருக்­கும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

இந்த விட­யங்­க­ளில் மங்­கள அள­வுக்கு ஆர்­வம் உள்­ள­வர்­கள் அர­சுக்­குள் வேறு எவ­ரும் கிடை­யாது. மங்­க­ளவை நிதி அமைச்­ச­ராக்­கி­ய­தன் மூலம் இனி இந்த விட­யங்­க­ளில் இருந்த அவ­ரது கவ­னம் ஓரங்­கட்­டப்­ப­டும். இது நல்லிணக்க மற்றும் அமைதி முயற்சிகளின் மீது பலமாக வீழுந்துள்ள அடி. எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

http://uthayandaily.com/story/4003.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.