Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரருக்கு கடும் சுகயீனமாம்..!

Featured Replies

ஞான­சார தேர­ருக்கு கடும் சுக­யீ­னமாம்..!

 

 

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை. 

28-gs.jpg

இந் நிலையில் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் நேற்று நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அனூஷா பேரு­சிங்க தேரர்  சுக­யீ­ன­முற்­றுள்­ள­தா­கவும் அதனால் அவரால் நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­ய­வில்லை எனவும் அறி­வித்தார். இத­னை­ய­டுத்து ஞான­சார தேரரை எதிர்­வரும் 31 ஆம் திகதி மருத்­துவ அறிக்­கை­யுடன் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நீதி­ப­தி­க­ளான பிரீத்தி பத்மன் சுர­சேன, எல்.டி.பி. தெஹி­தெ­னிய ஆகிய இருவர் கொன்ட குழு முன்­னி­லையில் ஆஜ­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ரோஹினி வல்­கம, எஸ். துரை­ராஜா ஆகி­யோரே இந்த உத்­த­ரவை நேற்று பிறப்­பித்­தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது,  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்து மீறி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்­டது. 

 இதன் போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரசாத் எக்­ன­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. இத­னை­விட அன்­றைய தினம் பெரும் தொகை­யான பிக்­கு­க­ளுடன்  ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக அச்­சு­றுத்தல் விடுத்­த­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­பட்­டது.  

இதனால் அன்­றைய தினம் முழுதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து  நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும்  குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான சந்­தியா எக்­னெ­லி­கொ­ட­வுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை  ஆகிய குற்றச் சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு  ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அதன்­படி  ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்ப்ட்­ட­துடன் அவர் மீது மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போது கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. 

இதன் போது குறித்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதை தவிர்க்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ஞான­சார தேரர் சார்பில் அடிப்­படை ஆட்­சே­ப­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் நீதி­மன்றம் அதனை நிரா­க­ரித்­தது. அதன்­படி குறித்த வழக்கை நேற்று விசா­ர­ணைக்கு எடுக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்­தி­ருந்­தது.

 அதன்­படி நேற்று சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரால் ரொஹந்த அபே­சூ­ரிய ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.   நேற்று ஞான­சார தேரரை மன்ரில் ஆஜ­ராக உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் மன்­றுக்கு சமூ­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. எனினும் ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணி­யான மனோ­கர டி சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமைய சட்­டத்­த­ரணி அனூஷா மன்றில் ஆஜ­ராகி ஞான­சார தேரர் சுக­யீ­ன­முற்­றுள்­ள­தா­கவும் அதனால் அவரால் நேற்று மன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

 இதனை ஏற்றுக்கொன்ட நீதிமன்றம் வழக்கை 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் ஞானசார தேரர் நேற்று உண்மையிலேயே அவர் சுகயீனமுர்றிருந்தார் என்பதற்கான ஆதராமாக  மருத்துவ சான்றிதழுடன் மன்றில் ஆஜராக வேண்டும் எனவும்  உத்தர்விட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20331

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.