Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கடத்தப்பட்டவர்களின் உடையாதா ?

Featured Replies

காங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கடத்தப்பட்டவர்களின் உடையாதா ?

01-1-1.jpg

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன.

காங்கேசன்துறை துஃ235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்து இறைத்த போது கிணற்றினுள் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிகள் கண்டு மீட்கப்பட்டன.

அதனை கேள்வியுற்ற அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து மோட்டார் சைக்கிளின் இலக்க தகடுகளை கழட்டி எடுத்து சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 2003 ஆண்டின் பிற்பகுதிகளில் சந்தைக்கு விற்பனைக்கு வந்த இந்திய தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களான ரி.வீ. எஸ். ரக மோட்டார் சைக்கிள் , மற்றும் பஷன் ப்ளஸ் ரக மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.
01-2-1.jpg
குறித்த பிரதேசம் 1990களுக்கு முன்னரே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு இருந்த பிரதேசமாகும். அந்த பகுதிக்குள் மக்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாகும். அவ்வாறான நிலையில் குறித்த இரு மோட்டார் சைக்கிளும் அப்பகுதி  கிணற்றினுள் எவ்வாறு போடப்பட்டன எனும் கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

ஆகவே இவை இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள்களாக இருக்கலாம் எனும் சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டவை தொடர்பில் காங்கேசன்துறை போலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர் முறைப்பாடு செய்ய சென்ற போது அது தொடர்பில் முறைப்பாடு செய்ய தேவையில்லை என காணி உரிமையாளரை போலீசார் திருப்பி அனுப்பி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/archives/27979

  • தொடங்கியவர்

காங்கேசனில் விடுவித்த பகுதி கிணற்றில் 2 மோ. சைக்கிள்கள்

உடனே அங்கு விரைந்த இராணுவத்தினர் இலக்கத் தகடுகளைப் பிடுங்கிச் சென்றனர்

 
 
காங்கேசனில் விடுவித்த பகுதி கிணற்றில் 2 மோ. சைக்கிள்கள்
 

காங்­கே­சன்­து­றை­யில் இராணுவத்­தின் பிடி­யி­லி­ருந்து விடுவிக்­கப்­பட்ட கிணற்­றுக்­குள் இருந்து இரு மோட்­டார் சைக்­கிள்­கள் மீட்கப்­பட்­டன. அங்கு விரைந்த ராணு­வத்­தி­னர் என்று கூறி­ய­வர்­கள் அந்த மோட்­டார் சைக்­கிள்­க­ளின் இலக்கத்தகடுகளைப் பிடுங்கிச் சென்றனர்.

இராணுவத்தினரின் இந்தச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரும் இதனைக் கண்டும் காணாததுபோல் அக்கறையற்று இருந்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போர்க் காலத்தில் பலர் மோட்டார் சைக்கிள்களுடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் வாகனங்களுடன் கடத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு கடத்தப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள்களாக அவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இராணுவத்தினரின் பிடியிலிருந்த இடங்களில் காங்கேசன்துறையும் உள்ளடங்கும். சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது. அங்கு மீள்குடியேறச் சென்றவர்கள் தமது கிணறுகளைத் துப்புரவு செய்தபோது 2 மோட்டார் சைக்கிள்களையும் மற்றொரு மோட்டார் சைக்கிளின் பாகங்களையும் மீட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் அங்கு செல்வதற்கு முன்னர் அங்கு விரைந்த ராணுவத்தினர் என்று கூறியவர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளைப் பிடுங்கிச் சென்றுள்ளனர். அதன் பின்னரே பொலிஸார் அங்கு சென்று பார்வையிட்டுச் சென்றனர் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட புது வீதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றிலேயே இவை மீட்கப்பட்டன.

குறித்த பகுதியில் உள்ள கிணறுகளில் வெடிபொருள்களும், துப்பாக்கிகளும் மீட்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

5-10-496x400.jpg

6-7-750x400.jpg

7-7-750x400.jpg

8-6-750x400.jpg

 

http://uthayandaily.com/story/4151.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.