Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவணங்களை சபையில் வீசினார் சிவாஜிலிங்கம்

Featured Replies

திருத்தங்களுடனான ஆவணங்கள் மேசை மீது வைக்கப்படாமையினால் ஆத்திரமுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே. சிவாஜிலிங்கம், தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி வீசினார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் தமிழில் மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமென திருத்தத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். அதன் திருத்தம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

எனினும், தங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் ஜாதிக சவிய அதிகார சபை சட்டமூலம் என்ற பதத்துடனேயே ஆவணங்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சிவாஜிலிங்கமும் ஈழவேந்தனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாது, பெயர் திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் தனக்கு கிடைக்கும் வரை விவாதத்தை நடத்திச் செல்ல விடமாட்டோமென சிவாஜிலிங்கம் எம்.பி. கூறியதற்கு, அனைத்து உறுப்பினர்களுக்கும் திருத்தம் செய்யப்பட்ட பிரதி வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆத்திரமுற்ற சிவாஜிலிங்கம் எம்.பி. தன் மேசை மீதிருந்த ஆவணங்களை சபையின் நடுவே தூக்கி எறிந்தார்.

http://www.thinakkural.com/news/2007/2/22/...s_page21870.htm

சுpங்களவனுடை பாராளுமன்றில் சிங்களவன் என்ன மொழியில் என்ன செய்தால் எமக்கென்ன?

ஏமது நாடு தமிழ் ஈழம், இது எமது தலைவர் கூறியுள்ளது போன்று முடிந்த முடிவ. புpறகு ஏதற்காக சிவாஜிலிங்கம் போன்றோர் இத்தகை உப்பு;சப்பற்ற பீலா வேலைகளில் ஈடுபடுகிறார்களோ தெரியவில்லை.

அவர்கள் தான் அரசியல் வாதிகள் பீலா வேலை செய்கிறார்கள். நாங்கள் வேறு அதை ஒரு வீரப் பிரதாபமாக வர்ணிக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

Innumoruvan அப்படி நினைக்கக் கூடாது. இன்றைய நிலையில் நாங்கள் அதைச் சிங்களவர்களின் பாராளுமன்றம் என்று எடுத்துக் கொண்டாலும், உலகத்திற்கு அதைக் காட்ட எமக்குத் தேவையுண்டு. அதன் போது தான் சிங்களவர்கள் எம் உரிமையை எவ்வளவு தூரம் ஏற்க மறுக்கின்றார்கள் என்பதை காட்டமுடியும்.

இதன் ஒரு சிந்தனையின் வெளிப்பாடாகத் தான், பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அனுப்பும் சிந்தனையைத் தேசியத்தலைவர் எடுத்திருப்பார் என நான் கருதுகின்றேன். தமிழ்மக்கள் கொல்லப்படும்போது, தமிழருக்கு அநீதி நடக்கின்றபோது, பாராளுமன்றத்தில் கிளப்பப்படும் பிரச்சனைகள், நிச்சயமாக உலகத்தின் பார்வையை, மற்றய அகிம்சைவழிச் செயற்பாட்டை விட அதிகளவு ஈர்க்கும். அதை விட, இவை பாராளுமன்றப் பதிவுகளாக சிங்கள தேசத்தின் வரலாற்றில் பதிவாகும்.

.............

இங்கே, பாராளுமன்றம் போகவேண்டும் என்று ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் அதை வைத்து, எம் கோரிக்கையை நியாயப்படுத்த வேண்டும் என்பதையே சொல்ல வருகின்றேன். இதனால் சிங்கள தேசம் பயந்து போனதால் தான், தமிழரசுக் கட்சி பா.உகளின் குரலை அடக்க முனைக்கின்றது. மாமனிதர்கள் ஜோசப் பராராஜுசிங்கம், ரவிராஜ் கொலைகள் கூட இந்த பயத்தின் அடிப்படையால் சிங்கள தேசத்துக்கு எழுந்தனவே! அவ்வாறே துரோகக் கும்பல்களும், இதே சிங்கள அரசின் நோக்கத்தில் தான், தமிழரசுக் கட்சியினரைப் பாராளுமன்றத்தில் இருந்து விலகவேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். அது கூட ஒரு வகையில் சிங்கள அரசின் கருத்தை வெளிப்படு்ததும் செயலே!

தமிழ் கூட்டமைப்பினரை கொச்சைப் படுத்த வேண்டாம். அவர்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழரின் பிரதிநிதியாக இவர்கள் இல்லாவிட்டால் டக்கி, சங்கரி போன்றவர்களை எங்கள் பிரதிநிதியாக்கி விடுவார்கள்.

தூயவன், இலங்கை யாப்பும், யாப்பினால் நிர்வகிக்கப்படுகின்ற அனைத்து நிறுவனங்களும் (அது பாராளுமன்று உட்பட) அடிப்படையில் சிங்கள பேரினவாத்தைக் கட்டிக் காப்பது என்றும், முப்பது வருடங்களிற்கு மேலான எமது அடிப்படை சாத்வீக முயற்சிகள் இக்கட்டமைப்புக்களின் முன் தோற்றதனால் இறுதி மார்க்கமாக ஆயத போராட்டம் எம் மீது திணிக்கப்பட்டது என்பதும், ஆயத போராட்டம் இல்லா விடின் தமிழ் என்று சொல்லே இலங்கைத் தீவில் மரித்துப் போயிருக்கும் என்பதும் தான் உண்மை. இதைத் தான் நாம் உலகிற்கும் சொல்லி வருகின்றோம்.

ஆனால் உலகு எமது கருத்தை தனது உள்ளார்ந்த நலன்களின் நிமித்தம் விளங்கிக் கொள்ள மறுப்கிறது அல்லது அப்படி நடிக்கின்றது. இன்றும் அமெரிக்க துர்துவர்களும் மேற்கின் தலை சிறந்த பத்திரிகையாளர்களும் (கனேடி குளோபன்மெயில் பத்திரிகையில் இங்கிலாந்து தளத்திலிருந்து தொழிற்படும் டக்கிளஸ் சான்டேர்ஸ் போன்றோர்) தமிழர் ஆயத போராட்டம் நியாயத்தன்மை அற்றது என்று ஆர்ப்பரிப்பதோடு ஒரு ||சிவில் றைற்ஸ்|| போராட்டத்தின் வாயிலாகத் தமிழர் இன்னமும் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முயலவேண்டும் என வாதிடுகிறார்கள்.

இந்நிலையில் சிங்களமும் தான் ஒரு சனநாயக விரும்பி போலவும், சனநாயகத்தின் கூறுகள் தன்னகத்தே இயங்குவது போலவும் தான் காட்டி வருகிறது. மோத்தத்தில் தமிழர் நாங்கள் தான் போர் வெறியர் என்று சனநாயக மறுப்போர் என்றும் படம் போடப் படுகிறது.

இந்நிலையில் தமிழரின் அங்கீகாரம் பெற்று சிங்கள பாராளுமன்றம் சென்றோர் அங்கு மேற்கத்தேய பாராளுமன்றங்களில நடப்பது போலான அடிப்படை உரிமை கூச்சல்கள் போட்டால், சிங்ளமும் நரித்தனமாய் அதற்கு செவி மடுத்தால் இறுதியில் சிங்களத்தினதும் மேற்கினதும் தமிழ் எதிர்ப்பு வாதம் தான் அங்கு வெற்றி பெறுமு;.

ஊதாரணத்திற்கு, சிவாஜிலிங்கத்தின் வீர ஆவண வீச்சிற்கு செவி மடுத்து சிங்களம் தமிழில் ஆவணத்தை வழங்கியது என்றால், மேற்கிற்கு அது சனநாயத்தின் வெற்றியாய்த் தான் படும். ஆனால் அவ்வாவணத்தில் கூறப்பட்டுள்ள மீள் குடியேற்றம் நடக்கப் போவதில்லை என்பது தான் யதார்த்தம்.

ஏனவே எனது தாழ்மையான கருத்து என்னவெனில் மேற்கிற்காய் செய்கிறோம் உலகிற்காய்ச் செய்கிறோம் என சரியாய் சிந்திக்காது பரப்புரை செய்வது என்பது எமக்கு எதிராய் நாமே வேலை செய்வது போன்றது. என்னைப் பொறுபத்த வரை புலம்பெயர் தேசத்தில் தமிழரின் பரப்புரைத் தோல்விக்கான காரணமே நாம் எமது இலக்கு என்ன என்பதை உணராதுமு;. மேற்கின் சிந்தனையைப் புரியாததும், தசாப்தங்களாக ஒரே பிழைகளை தொடர்ந்தும் இளைத்தலும் மற்றும் நம்முள்ளே இருக்கும்; பல தவறான புரிதல்களினதும் வெளிப்பாடே.

ஓரு சிறு சேர்க்கை, அப்படியாயில்ன 2004 தேர்தல்களில் கூட்டமைப்பு போட்டியிட்டமையினை நான் எதிர்க்கிறேனா என நீங்கள் கேட்டால், நிட்டசயம் இல்லை. அத்தேர்தலானது 76ன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின (தமிழீழமே தீர்வு); மீள் உறுதிப்பாடு. ஏமது தலைமையும் புலிகளுமே எமது ஏக பிரதிநிதிகள் என தமிழ் மக்கள் நாங்கள் கூற எடுத்துக் கொண்ட சந்தர்ப்பம். அத்தோடு தமிழர்களின் சனநாயகத் தன்மையை உலகிற்கு காட்டிய வெளிப்பாடு (உலகிற்கு எங்களின் 76ம் ஆண்டுச் சரித்திரம் ஞாபகமில்லை அல்லது அதை ஞாபகப்படுத்த அது விரும்பவில்லை) அந்த சந்தர்ப்பத்தில் உலக தேர்த்தல் கண்காணிப்பாளர்கள் முன்நிலையில், தமிழரின் சன நாயக பாரம்பரியத்தை அறிந்திராத சர்வதேசத்திற்கு எங்களின் உண்மைத் தன்மை பற்றி நாங்கள் எடுத் ஒரு மீள் பாடம் தான் அது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் சந்திரிக்கா ஆட்சியில் வெளியுலகத்தோடு தொடர்பு அற்ற நிலையில் இருந்தபோது, குமார் பொன்னம்பலம் கொழும்பிலிருந்து துணிச்சலாகச் செயற்பட்டார் உண்மையில் அவரின் பேச்சுவன்மை, ஓரளவாவது உலகத்திற்கு எடுபட்ட நிலமையில் இருந்தது. அந்த ஒரு நிலமையைத் தான் இன்றைய பா.உகளின் செயற்பாட்டில் இருந்தும் எதிர்பார்க்க வேண்டியது.

சொல்லப் போனால் நீங்கள் இற்றைக்கு 10 அவருடங்களுக்கு முன் இருந்த நிலமையையும் இப்போதைய நிலைமையையும் ஒப்பீடு செய்கின்றபோது தான் வித்தியாசம் தெரியுமே தவிர, நாங்கள் எங்களை உலகம் அங்கிரிக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பது, பரிட்சை எழுதிய மாணவனின் நிலைமையே!

பாருங்கள். யாழ்பாண இடப்பெயர்வின் போது எமக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தார்கள்? அன்று ஜநா மட்டும் தான் ஏதோ தானோ என்று குரல் கொடுத்தது. மற்றும்படி, பக்கத்துநாடு இந்தியா கூட எம்மைக் கண்டுகொள்ளவில்லை. ( ஆனால் யாழ்பாணத்தில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் நிலைமையில் இந்தியா பதைபதைத்து, நோர்வே மூலமாக அதைத் தடுத்து நிறுத்தியது) ஆனால் இன்று தடுத்து நிறுத்தாவிட்டாலும், சிங்கள அரசு மீதான மதிப்பு குறைந்து வருகின்றதல்லவா. அதைக் கப்பென்று பிடித்துக் கொள்ள வேண்டியது தான் நமக்குள்ள தேவை.

என்றைக்குமே, உலகம் தானாக வந்து எங்கள் தேவையை நிவர்த்தி செய்யாது. அது முதலில் தனக்கு பலாபலன்களைப் பாத்து, அதைக் கிடைக்க வைக்கத் தான் முயற்சி செய்யும். அது தான் இன்று நடப்பதும். இந்தியா, சீனா, யப்பான்.அமெரிக்கா போன்றவற்றுக்கு தனது லாபக்கணக்கைத் தான் முதலில் பார்க்கும். தவிர தானாக வந்து செய்யும் அளவிற்கு அவர்களுக்கு தேவையும் இல்லை.

ஆனால் மாற்றுவழி என்றவென்றால் வேண்டா, வெறுப்பாகவாவது அங்கிகரிக்க வைத்தல். அதற்கு நாம் செய்ய வேண்டியது, சிங்கள அரசு கொடூரமானது எனக் காட்ட வேண்டியது. பாராளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தினைத் தடுக்க முடியாது என்றாலும் கூட, தமிழரசுக்கட்சியினர் வாக்கெடுப்பிற்கு அழைப்பு விட்டுத் தான் நிறைவேற்ற வைக்கின்றனர். இது ஒரு வகையில் ஒரு தமிழனின் எதிர்புணர்வாகப் பதிய வைக்கவே.

சிவாஜி லிங்கம் இன்று தூங்கியெறிந்தது கூட அங்கே தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று காட்டுவதற்கு. சிவாஜிலிங்கம் கேட்டுத் தான் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படுகின்றது என்றால், தமிழனுக்குரிய உரிமையை, எந்தவொரு விடயத்தையும் அவன் கேட்டுத் தான் பெறவேண்டியிருக்கின்றது என்று உலகம் எடு்க்கும் என்று ஏன் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது?

பத்திரிகை எழுதுபவர்களின் நோக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சமீபத்தில் "த காட்டியன்" பத்திரிகை சிங்கள அரசைத் திட்டி எழுதியது. அது எழுத்தாளனின் பார்வையில் இருந்தே வருவது,

தூயவன் சொல்லுவதில் எனக்கு உடன் பாடு இருக்கு.

தமிழ் கூட்டமைப்பினர்கள் பல ஆபத்துடன் தான் தங்கள் செயற்பாடுகளை செய்யவேண்டிய சுழ்நிலையில் இருக்கிறார்கள்...............

சிவாஜி லிங்கம் இன்று தூங்கியெறிந்தது கூட அங்கே தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று காட்டுவதற்கு. சிவாஜிலிங்கம் கேட்டுத் தான் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்படுகின்றது என்றால், தமிழனுக்குரிய உரிமையை, எந்தவொரு விடயத்தையும் அவன் கேட்டுத் தான் பெறவேண்டியிருக்கின்றது என்று உலகம் எடு்க்கும் என்று ஏன் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது?

அப்படியே தான் அவர்கள் அதை எடுப்பார்கள் என நம்புவோமாக.. .. ..

அப்படியே தான் அவர்கள் அதை எடுப்பார்கள் என நம்புவோமாக.. .. ..

எடுப்பது எடுக்காததுது அவர்களின் பிரச்சனை ஆனால் தமிழ்கூட்டமைப்பு தங்கள் வழியில் தங்கள் உணர்வுகளை வெளிபடுத்துவதில் நஷ்டம் யாருக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுpங்களவனுடை பாராளுமன்றில் சிங்களவன் என்ன மொழியில் என்ன செய்தால் எமக்கென்ன?

ஏமது நாடு தமிழ் ஈழம், இது எமது தலைவர் கூறியுள்ளது போன்று முடிந்த முடிவ. புpறகு ஏதற்காக சிவாஜிலிங்கம் போன்றோர் இத்தகை உப்பு;சப்பற்ற பீலா வேலைகளில் ஈடுபடுகிறார்களோ தெரியவில்லை.

அவர்கள் தான் அரசியல் வாதிகள் பீலா வேலை செய்கிறார்கள். நாங்கள் வேறு அதை ஒரு வீரப் பிரதாபமாக வர்ணிக்க வேண்டுமா?

Ithukalukku velai illa singalavanda kundiya kaluviddu kidakkatan seri :D

இதுதான் சரியான முறை பணபான கருத்தாடல்

தெளிவான விளக்கம்

ஒருவரை ஒருவர் வசைபாடும் முறையிலான கருத்துக்களை தவிர்க்கமுயலுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.