Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள்

[வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்]

"பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." இவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையின் முழு விபரம்:

றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவரி 22, 2007 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தினுள் நுழைந்துகொண்டனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அப்போதைய சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த ஒப்பந்தமானது தற்போது எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இலங்கைத் தீவில் சமாதானத்திற்கான தேடலிலும், இனப்பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை நோக்கிய வரலாற்றுப் பயணத்திலும் இது ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தமானது சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்டு தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட, தீவின் ஏனைய சமூகத்தவரை ஒடுக்குவதற்குத் துணைபுரிந்த இலங்கையின் பெரும்பான்மையினரது அரசியலமைப்பினது எல்லைகளைக் கடந்தே போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தமானது தமிழீழ நடைமுறை யதார்த்த அரசினது இருப்பினை அங்கீகரித்துள்ளது.

இங்கு நடைமுறை யதார்த்த அரசு எனும் போது அது, தனித்துவமான மக்கள், பாதுகாப்புப் படை, காவல்துறை, நீதித்துறை, சிவில் நிர்வாகம் என்பவற்றுடன் மக்களைச் சிறந்தவகையில் நல்வழியில் ஆளுவதற்கான ஏனைய அனைத்து அம்சங்கள், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக்கொண்ட தமிழர் தாயகத்தின் இருப்பினைப் பிரதிபலிக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தன்னகத்தே கொண்டு, ஓர் அரசுடன் உடன்பாட்டினை எட்டும் திறன் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலுள்ள படைவலுச் சமநிலையினை போர் நிறுத்த ஒப்பந்தமானது அங்கீகரித்துள்ளதுடன், அது படை வலுச் சமநிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

இலங்கைத் தீவு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தமிழர்கள் அவர்களது தாயகத்திலேயே முகம்கொடுத்து வந்தனர்.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து முதல் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் நீதிக்கான தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவத்தின் துணைகொண்டு ஒடுக்கியது. இதன் காரணமாக தமிழர்களது அமைதிவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டம் மற்றும் ஆயுதந் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் என்பன இடம்பெற்ற காலப்பகுதியில், அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிறிலங்காவினது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தரப்பினருக்கிடையே படைவலுச் சமநிலை காணப்படாதமையினாலும், சர்வதேச ஈடுபாடு இல்லாதமையினாலும் முன்னர் இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களும் தோல்வியில் முடிந்ததோடு, சிறிலங்கா அரசாங்கம் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் மிகவும் வஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டனர்.

இவ்வாறாக அமைதி முயற்சிகள் தோற்றுப்போன கசப்பான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. இம்முறை, நோர்வேயினது அனுசரணையும், சர்வதேச சமூகத்தின் தீவிரமான ஆதரவும், பங்களிப்பும் தமிழ் மக்களுக்கு அமைதி முயற்சிகளில் முதற்தடவையாக நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் இன்று, வருந்தத்தகு வகையில், சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தினது ஈடுபாடு உண்மையானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ காணப்படவில்லை. இராணுவ வழிமுறையில் நகர்ந்து செல்லும் சிறிலங்கா அரசாங்கம் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ, ஆக்கபூர்வமாக எதிர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ சர்வதேச சமூகம் விரும்பமின்றிச் செயற்படுவதே போர் நிறுத்த ஒப்பந்தத்தினைப் பலமிழக்கச் செய்துள்ளது.

தரையிலும் வானிலும் கடலிலுமென சிறிலங்காவினது முப்படைகளும் மேற்கொண்டுவரும் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் மத்தியிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் போதிய பொறுமை காத்து வந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் நாம் எமது பல போராளிகளை இழந்துள்ளோம். சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் மற்றும் பெருந்தொகையான தமிழர்கள் காணாமற்போகிறார்கள்.

ஆனால், அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்கின்ற போதும், சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் எடுக்காது நீதியற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையிலமையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு சமதரப்பு என்ற யதார்த்தத்தினை இது சிதைப்பதோடு சமாதான முன்னெடுப்புக்களையும் பாதிப்பதாக அமைகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத்தின் இதுபோன்ற நிலைப்பாடு வலுப்பெறுமிடத்து, தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அதிக கடும்போக்கைக் கைக்கொள்வதற்கே அது வழிவகுக்கும்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுகின்ற போதும் பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் போதும் சர்வதேச சமூகமானது நீதியின்பால் நின்று செயற்பட்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்காதுபோனால், அது தமிழர் தாயகப் பகுதியில் ஒர் போர்ச்சூழல் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

சர்வதேசத்தினது பங்குபற்றலுடன் இடம்பெற்ற சமாதான முன்னெடுப்புக்களும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளமை தமிழ் மக்களைச் சினங்கொள்ள வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தமும் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களும், ஏனைய ஒப்பந்தங்களைப் போலவும் பேச்சுக்களைப்போலவும் தற்போது தோல்வியடைந்திருப்பதுதான் தமிழ் மக்களுக்குக் கசப்பான ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதோர் புறநிலையில்தான் தமிழர் தேசத்தில் இயல்புநிலையினை ஏற்படுத்தும் வகையில், போர் நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள்.

ஆறு வருடங்களின் முன்னர் டிசம்பர் 2000 ஆம் ஆண்டில் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 24, 2001 இல் மீண்டும் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள். நோர்வேயின் முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மேற்குறித்த இந்த அறிவிப்பே வழிவகுத்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகைமையை முடிவுக்கு கொண்டுவந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தி பேச்சுகளுக்கான உகந்த புறநிலையைத் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோசமான போரின் காரணமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் மனிதநேய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை அனைத்து சுற்று அமைதிப் பேச்சுகளிலும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பும் இராணுவக் கெடுபிடிகளும் நீங்காது அமைதிப் பேச்சுகளுக்கான சாதகமான உகந்த புறநிலை ஏற்படமுடியாது என்பதை நேரடி சமாதானப் பேச்சுகளில் வலியுறுத்தினோம்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இடம்பெற்ற அனைத்துச் சுற்றுப் பேச்சுக்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முழுமையான ஈடுபாட்டுடன் அவற்றில் பங்கெடுத்தது.

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேற்ப தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், தரப்பினர் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுக்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இவற்றை மதித்து நடப்பதற்குத் தவறிய இலங்கை அரசாங்கம், நிலமையினை மேலும் மோசமாக்கும் வகையில் செயற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழர் தாயகப் பகுதிகளில் இயல்புநிலையினை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அது ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறி, பொதுமக்கள் வாழிடங்களை இன்னமும் ஆக்கிரமித்துநிற்கிறது.

ஓவ்வொரு கட்டப் பேச்சுக்களின்போதும், தமிழர் தாயகப் பகுதியில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினோம். இது தொடர்பில் தனக்குள்ள கடப்பாடுகளைப் புறந்தள்ளிய இலங்கை அரசாங்கம் காலங் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேநேரம் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவர்களின் நிலமை மோசமாகிச் சென்றது.

நிலமையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசாங்கம் தான் மதித்துச் செயற்படவேண்டிய கடப்பாடுடைய ஒப்பந்த விதிகளை மீறி, துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துத் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களை குறிப்பிடதொரு கால வரையறைக்குள் களைந்துவிட வேண்டுமென ஒப்பந்தவிதி 1.8 கூறுகிறது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் இருப்பினை சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினது அவதானிப்புகள் உறுதிப்படுத்துவதோடு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரச திணைக்கள அறிக்கையும் இந்த உண்மையினை ஏற்றுக்கொள்கிறது.

சிறிலங்காவிற்குத் தகவல் திரட்டும் ஒரு நடவடிக்கையாக விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்புத் தூதுவர் சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் இணைந்து ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் ஆட்சேர்பில் ஈடுபடுவதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2002 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் நாங்கள் எட்டுமுறை பங்கெடுத்துள்ளோம். தமிழர் தாயகத்தில் அவசர மனிதநேய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு பல பிரேரணைகளும் கட்டமைப்புகளும் ஆரம்ப கட்டப் பேச்சுகளின் போது உருவாக்கப்பட்டன.

இவ்வாறாக முன்வைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் உடன்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's Tiger rebels to resume 'freedom struggle'

COLOMBO (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels announced a resumption of their "freedom struggle" after declaring that a truce arranged by peace broker Norway had collapsed.

The Tigers said the truce, which came into effect five years ago on Friday, was now virtually non-existent and warned that Colombo's military drive against them would only add to the "bloodstained pages of the island's history."

"It has also compelled the Tamil people to resume their freedom struggle to realize their right to self-determination and to achieve statehood," the Tigers said in a statement.

It blamed the government of President Mahinda Rajapakse for trying to find a military solution to the drawn-out Tamil autonomy campaign, which has claimed over 60,000 lives in the past 35 years.

"Even though today it exists only on paper, it (the ceasefire agreement of 2002) remains a unique document in the search for an end to the national conflict in the island of Sri Lanka," the Tigers said.

The statement came as Sri Lanka's navy said it sank two suspected Tiger boats off the island's north-western coast, killing at least nine people.

There was no reaction from the rebels, but a pro-rebel website said eight fishermen had gone missing in the same area where the navy said it sank the boats.

Security forces also launched ground attacks against Tiger rebels Thursday as the guerrillas said thousands of civilians in the north fled their homes in fear of an upsurge of fighting.

Military officials confirmed they were retaliating against rebel harassment, but said there was no major offensive in the region.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) said thousands of men, women and children from half a dozen villages along the de facto border between the two sides were on the move, seeking refuge deeper inside rebel territory.

On Wednesday, 25 Tamil civilians carrying white flags entered a government-held area in the northern district of Vavuniya and were provided with shelter and food by the troops, a military official said.

An exodus of civilians from the island's troubled regions is usually a first sign of stepped-up fighting between troops and Tamil Tiger guerrillas, who are campaigning for independence.

The escalation of fighting in the past year has claimed nearly 4,000 lives and tattered a ceasefire arranged by peacebroker Norway on February 23, 2002.

At least five people were killed earlier on Thursday in clashes linked to the conflict, police said.

Norway's top peacebroker, Erik Solheim, Thursday offered to continue to try to revive peace talks, even as thousands of Sinhalese nationalists took to the streets here calling for the truce to be scrapped.

"Norway is willing to go the extra mile to assist their peace endeavours at their request," Solheim said. "As soon as the parties renew their peace efforts, we will be ready to do all we can to help."

http://news.yahoo.com/s/afp/20070222/wl_st...rs_070222181042

http://www.news.com.au/story/0,10117,21273...from=public_rss

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மொழிபெயர்ப்பில் காலவழுக்கள் இருக்கின்றன.

ஒப்பந்தம் கைச்சாத்திய ஆண்டு 2007 என்று தரப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்த ஆண்டு 2005 என்று தரப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையைத் தரும்போது கூடுதல் கவனம் வேண்டும்.

மொழிபெயர்த்த செய்தியாளர் கவனத்திற்கொள்ள வேண்டும். (இது நேரடியாக புலிகளால் விடப்பட்ட ஆங்கில அறிக்கையின் மொழிபெயர்ப்பு வடிவமென்றே நினைக்கிறேன்.0

ஆம்

2007 என்பது 2002 எனவும் (2ம் வரி), 2005 என்பது 2004 என்றும் வரவேண்டும். ஆங்கிலத்தில் சரியாக உள்ளது. புதினத்தில் தவறாக உள்ளது! கனத்தில் கொள்வார்களா?

தவறை சுட்டிக்காட்டிய நல்லவனுக்கு நன்றி.

Edited by saanakiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(திருத்தம்) 'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது': விடுதலைப் புலிகள் [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 03:31 ஈழம்] [புதினம் நிருபர்]

"பயங்கரவாதத்திற்கு எதிரான போரெனக் கூறிக்கொண்டு, தற்போது சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது. இத்துடன், இந்த முனைப்புக்கள் இலங்கைத் தீவினது இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வையும் ஒருபோதும் ஏற்படுத்திவிடாது." என்று போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையின் முழு விபரம்:

"றோயல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் பெப்ரவரி 22, 2002 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தினுள் நுழைந்துகொண்டனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அப்போதைய சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

இந்த ஒப்பந்தமானது தற்போது எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும், இலங்கைத் தீவில் சமாதானத்திற்கான தேடலிலும், இனப்பிரச்சினையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை நோக்கிய வரலாற்றுப் பயணத்திலும் இது ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தமானது சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்டு தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிங்களவர்களால் சிங்களவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட, தீவின் ஏனைய சமூகத்தவரை ஒடுக்குவதற்குத் துணைபுரிந்த இலங்கையின் பெரும்பான்மையினரது அரசியலமைப்பினது எல்லைகளைக் கடந்தே போர் நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. இந்த ஒப்பந்தமானது தமிழீழ நடைமுறை யதார்த்த அரசினது இருப்பினை அங்கீகரித்துள்ளது.

இங்கு நடைமுறை யதார்த்த அரசு எனும் போது அது, தனித்துவமான மக்கள், பாதுகாப்புப் படை, காவல்துறை, நீதித்துறை, சிவில் நிர்வாகம் என்பவற்றுடன் மக்களைச் சிறந்தவகையில் நல்வழியில் ஆளுவதற்கான ஏனைய அனைத்து அம்சங்கள், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக்கொண்ட தமிழர் தாயகத்தின் இருப்பினைப் பிரதிபலிக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளைத் தன்னகத்தே கொண்டு, ஓர் அரசுடன் உடன்பாட்டினை எட்டும் திறன் போன்ற தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலுள்ள படைவலுச் சமநிலையினை போர் நிறுத்த ஒப்பந்தமானது அங்கீகரித்துள்ளதுடன், அது படை வலுச் சமநிலையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.

இலங்கைத் தீவு பிரித்தானியக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட நாள் முதல் தொடர்ச்சியாக வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தமிழர்கள் அவர்களது தாயகத்திலேயே முகம்கொடுத்து வந்தனர்.

சிறிலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து முதல் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களின் நீதிக்கான தொடர்ச்சியான அமைதிவழிப் போராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவத்தின் துணைகொண்டு ஒடுக்கியது. இதன் காரணமாக தமிழர்களது அமைதிவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டம் மற்றும் ஆயுதந் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் என்பன இடம்பெற்ற காலப்பகுதியில், அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிறிலங்காவினது சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

தரப்பினருக்கிடையே படைவலுச் சமநிலை காணப்படாதமையினாலும், சர்வதேச ஈடுபாடு இல்லாதமையினாலும் முன்னர் இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களும் தோல்வியில் முடிந்ததோடு, சிறிலங்கா அரசாங்கம் எட்டப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்டது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் மிகவும் வஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டனர்.

இவ்வாறாக அமைதி முயற்சிகள் தோற்றுப்போன கசப்பான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. இம்முறை, நோர்வேயினது அனுசரணையும், சர்வதேச சமூகத்தின் தீவிரமான ஆதரவும், பங்களிப்பும் தமிழ் மக்களுக்கு அமைதி முயற்சிகளில் முதற்தடவையாக நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

ஆனால் இன்று, வருந்தத்தகு வகையில், சமாதான முயற்சிகளில் சர்வதேச சமூகத்தினது ஈடுபாடு உண்மையானதாகவோ ஆக்கபூர்வமானதாகவோ காணப்படவில்லை. இராணுவ வழிமுறையில் நகர்ந்து செல்லும் சிறிலங்கா அரசாங்கம் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ, ஆக்கபூர்வமாக எதிர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ சர்வதேச சமூகம் விரும்பமின்றிச் செயற்படுவதே போர் நிறுத்த ஒப்பந்தத்தினைப் பலமிழக்கச் செய்துள்ளது.

தரையிலும் வானிலும் கடலிலுமென சிறிலங்காவினது முப்படைகளும் மேற்கொண்டுவரும் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் மத்தியிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் போதிய பொறுமை காத்து வந்துள்ளனர்.

இக்காலப் பகுதியில் நாம் எமது பல போராளிகளை இழந்துள்ளோம். சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள் மற்றும் பெருந்தொகையான தமிழர்கள் காணாமற்போகிறார்கள்.

ஆனால், அடிப்படை உண்மைகள் இவ்வாறிருக்கின்ற போதும், சர்வதேச சமூகமோ இலங்கை அரசாங்கத்தின் மீது எந்த வகையான நடவடிக்கைகளையும் எடுக்காது நீதியற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தண்டனை வழங்கும் வகையிலமையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு சமதரப்பு என்ற யதார்த்தத்தினை இது சிதைப்பதோடு சமாதான முன்னெடுப்புக்களையும் பாதிப்பதாக அமைகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான சர்வதேசத்தின் இதுபோன்ற நிலைப்பாடு வலுப்பெறுமிடத்து, தமிழர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அதிக கடும்போக்கைக் கைக்கொள்வதற்கே அது வழிவகுக்கும்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறுகின்ற போதும் பெரும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் போதும் சர்வதேச சமூகமானது நீதியின்பால் நின்று செயற்பட்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்காதுபோனால், அது தமிழர் தாயகப் பகுதியில் ஒர் போர்ச்சூழல் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.

சர்வதேசத்தினது பங்குபற்றலுடன் இடம்பெற்ற சமாதான முன்னெடுப்புக்களும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளமை தமிழ் மக்களைச் சினங்கொள்ள வைத்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தமும் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களும், ஏனைய ஒப்பந்தங்களைப் போலவும் பேச்சுக்களைப்போலவும் தற்போது தோல்வியடைந்திருப்பதுதான் தமிழ் மக்களுக்குக் கசப்பான ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதோர் புறநிலையில்தான் தமிழர் தேசத்தில் இயல்புநிலையினை ஏற்படுத்தும் வகையில், போர் நிறுத்த உடன்படிக்கையினை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனை முழுமையாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள்.

ஆறு வருடங்களின் முன்னர் டிசம்பர் 2000 ஆம் ஆண்டில் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்னர் டிசம்பர் 24, 2001 இல் மீண்டும் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்தார்கள். நோர்வேயின் முயற்சிகளைத் தொடர்ந்து தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மேற்குறித்த இந்த அறிவிப்பே வழிவகுத்தது.

போர் நிறுத்த உடன்படிக்கையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பகைமையை முடிவுக்கு கொண்டுவந்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தி பேச்சுகளுக்கான உகந்த புறநிலையைத் தோற்றுவிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோசமான போரின் காரணமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் மனிதநேய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை அனைத்து சுற்று அமைதிப் பேச்சுகளிலும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பும் இராணுவக் கெடுபிடிகளும் நீங்காது அமைதிப் பேச்சுகளுக்கான சாதகமான உகந்த புறநிலை ஏற்படமுடியாது என்பதை நேரடி சமாதானப் பேச்சுகளில் வலியுறுத்தினோம்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இடம்பெற்ற அனைத்துச் சுற்றுப் பேச்சுக்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முழுமையான ஈடுபாட்டுடன் அவற்றில் பங்கெடுத்தது.

சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கேற்ப தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், தரப்பினர் மத்தியில் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்புவதும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுக்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இவற்றை மதித்து நடப்பதற்குத் தவறிய இலங்கை அரசாங்கம், நிலமையினை மேலும் மோசமாக்கும் வகையில் செயற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழர் தாயகப் பகுதிகளில் இயல்புநிலையினை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கையினை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் அது ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறி, பொதுமக்கள் வாழிடங்களை இன்னமும் ஆக்கிரமித்துநிற்கிறது.

ஓவ்வொரு கட்டப் பேச்சுக்களின்போதும், தமிழர் தாயகப் பகுதியில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தினோம். இது தொடர்பில் தனக்குள்ள கடப்பாடுகளைப் புறந்தள்ளிய இலங்கை அரசாங்கம் காலங் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேநேரம் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவர்களின் நிலமை மோசமாகிச் சென்றது.

நிலமையை மேலும் மோசமாக்கும் வகையில் அரசாங்கம் தான் மதித்துச் செயற்படவேண்டிய கடப்பாடுடைய ஒப்பந்த விதிகளை மீறி, துணை இராணுவக் குழுக்களின் உதவியுடன் மிகவும் மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துத் துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்களை குறிப்பிடதொரு கால வரையறைக்குள் களைந்துவிட வேண்டுமென ஒப்பந்தவிதி 1.8 கூறுகிறது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் இருப்பினை சிறிலங்கா போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினது அவதானிப்புகள் உறுதிப்படுத்துவதோடு 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க அரச திணைக்கள அறிக்கையும் இந்த உண்மையினை ஏற்றுக்கொள்கிறது.

சிறிலங்காவிற்குத் தகவல் திரட்டும் ஒரு நடவடிக்கையாக விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா சிறப்புத் தூதுவர் சிறிலங்கா இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் இணைந்து ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் ஆட்சேர்பில் ஈடுபடுவதை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

2002 தொடக்கம் 2006 வரையான காலப்பகுதியில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் நாங்கள் எட்டுமுறை பங்கெடுத்துள்ளோம். தமிழர் தாயகத்தில் அவசர மனிதநேய நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கு பல பிரேரணைகளும் கட்டமைப்புகளும் ஆரம்ப கட்டப் பேச்சுகளின் போது உருவாக்கப்பட்டன.

இவ்வாறாக முன்வைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புக்கள் மற்றும் உடன்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்

இதில் என்ன நடந்தவற்றை தான் எழுதி இருக்காங்கள் இது அனைவருக்கும் தெரிந்தவிடையம் தானே எனி நடக்க போவதைத்தான் எல்லோரும் எதிர் பர்த்து இருக்கிறோம் அதைப்பற்ரி ஒரு தகவலும் இதில் இல்லை இப்படி மொட்டையான அறிக்கை தான் விட்டவண்ணம் உள்ளார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் ஓர் தேசிய விடுதலை இயக்கம். எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் சுய நிர்ணய உரிமை கொண்ட மக்களாக வாழ்வதற்கே நாம் விரும்புகிறோம். <<<<<<<<<<<<<

கவிதாக்கா இதில் இருந்தே புரிஞ்சு கொள்ள வேண்டாமே! என்ன செய்யப் போகின்றோம் என்பதை! இன்னும் சின்னப் பிள்ளையாவே இருங்கோ !!

  • கருத்துக்கள உறவுகள்

'போரானது ஒருபோதும் தமிழ் மக்களை அடிமைப்படுத்திவிடாது'

தமிழீழ விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம்..பிரத்தியேகமாக தழிழ் தங்கைக்கும் வணக்கம்...தங்கை நீங்கள் சொன்னமாதிரி கவிதாக்கா மட்டுமல்ல எல்லாருமே ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேண்டும்...மாசி 22ந்திகதியை எல்லோரும் ஒவ்வொரு கோணத்திலும் எதிர்பார்த்தார்கள்.

நான் சொன்னேன் இந்த திகதிக்கு பின்பு நல்ல புதினங்கள் நடைபெறவிருக்கின்றன ஆனால் யுத்தத்தை நான் சொல்வில்லை என்றேன்..

தலைவரின் 2006ம் ஆண்டுக்காண மாவீரர் உரையை கேளுங்கோ என்றும் சொன்னேன்.. புலிகளைப்பொறுத்தவரை யுத்தம் ஒரு சிறு விடயம் அதாவது புலம்பெயர் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே.

மேல் உள்ள புலிகளின் அறிக்கையை நான் எதிர்பார்த்தேன் இந்த அறிக்கை எல்லோருக்காகவும் பொதுவாக தயாரிக்கப்பட்டுள்ளது அதாவது பலவிடயங்கள் தீர்மாணிக்கப்பட்டுவிட்டது இதை எனிமேல் எவராலும் மாற்ற முடியாது முக்கியமாக இந்த சர்வதேச நாடுகளால் இனிமேல் வாய்திறக்கமுடியாமல் புலிகளால் அரசியல் நகர்த்தப்பட்டுவிட்டன..

அதாவது கடந்த ஜந்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் இழந்த இழப்புக்கள் எங்களுக்கு உதவியுள்ளன என்றுதான் நிச்சயப்படுத்தி கூறமுடியும்.. இழப்புகளின்றி சுதந்திரகாற்றை சுவாசிக்க முடியாதென்பதை சுதந்திரமடைந்த பல உலகநாடுகள் மூலம் அறிந்திருந்தோம் ஆனால் இன்று நாங்களும் அனுபவ ரீதியாக சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்ற செய்தியையும் இந்த அறிக்கை சொல்லுகின்றது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது அரசியலில் தோல்வியடைந்ததை மறைப்பதிற்காக ராணுவ நடவடிக்கைகளில் முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தன ஆனால் தமிழ் படையோ வேறு நடவடிக்கைகளில் (யுத்தத்தை விட கடினமான) செயல்பட்டு அவை பூர்த்தியடைந்து விட்டன என்பதையும் இந்த அறிக்கை மூலம் அறியக்கூடியதாவுள்ளது. அதாவது தமிழர் படை அரசியலிலும் தோற்கவில்லை படை பலத்திலும் நலிவடையவில்லை.

இதை விட புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கள் கடமைகள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவிருக்கின்றன என்பதையும் முக்கியமாக இந்த செய்தி தெரிவிக்கிறது.

அதாவது எனக்கு கடன் பிரச்சினை..மோட்கேஜ் பிரச்சினை.அந்த பிரச்சினை இந்த பிரச்சினை என்று காரணங்கள் கூறாமல் சுய பொறுப்புடன் செயல்படவேண்டிய ஒரு கட்டாய இறுதிச்சந்தர்ப்பம் என்பதையும் இதன் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

முக்கியமாக தமிழீழம் என்ற ஒரு நாடு உருவாக சகலவழிகளிலும் உதவிசெய்;த மேன்மைமிகு மகிந்தராஜபக்ஸ அவர்கட்கு ஒவ்வொரு தமிழீழ பிரஜையும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம் என்பதையும் கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகின்றேன்.

துன்பமும் நிரந்திரமில்லை.. இன்பமும் நிரந்திரமில்லை..

உண்மை மட்டும் நிரந்திரம்....

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.