Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நூலகத்தை எரித்தோரை தண்டிக்கத் தவறிவிட்டது அரசு வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

Featured Replies

யாழ். நூலகத்தை எரித்தோரை தண்டிக்கத் தவறிவிட்டது அரசு

வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

 
 
யாழ். நூலகத்தை எரித்தோரை தண்டிக்கத் தவறிவிட்டது அரசு
 

“யாழ்ப்­பா­ணம் பொது நூல­கம் எரிக்­கப்­பட்­டமை தொடர்­பில் நேர­டிச் சாட்­சி­யங்­கள் பதிவு செய்­யப்­பட்ட போதும் சம்­ப­வத்­து­டன் தொடர் புடைய­வர்க­ளைத் தண்­டிக்க ஆட்­சி­யா­ளர்­கள் தவ­றி­விட்­ட­னர்”

இவ்­வாறு குற்­றஞ்­சாட்­டி­னார் வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­ லிங்­கத்­தின் ஏற் பாட்­டில் யாழ்ப்­பாண பொது நூல­கம் எரிப்பு நினை­வு­தி­னம் நேற்று யாழ்ப்­பாண பொது நூல­கத்­தில் நடை­பெற்­றது.

இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணப் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட குண்டர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பணத்தில் தகுதியான பல அதிகாரிகள் இருந்த நிலையில் தேர்தல் கடமைக்கு எனத் தென்பகுதியில் இருந்து பலரை அழைத்து வந்து ஜனநாயகமற்ற தேர்தலை இங்கு நடாத்தினார்கள்.

அன்றைய காலப்பகுதியில் ஆட்சி செய்த அரசு, இராணுவம் மற்றும் பொலிஸாரைத் தூண்டி யாழ்ப்பாணத்தில் வன்முறையை ஏற்படுத்தியது. அந்த வன்முறையின் போதே தென்னிலங்கையில் இருந்து வருகை தந்திருந்த குண்டர்களால் யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவத்தை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவில் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யயப்பட்டன. அப்போதைய அரசும் சரி, அதற்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்களும் சரி அது தொடர்பில் எந்த விசாரணையையும் நடத்தவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்காதுவிட்டது மட்டுமல்லாது அவர்களை இனம்காணக் கூட எவ்வித முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை.

தற்போதைய கூட்டு அரசாவது இதற்கான நடவடிக்கையை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை இனம்கண்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.
“யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்படதற்காக யாழ்ப்பாண மாநகர சபையால் அப்போதைய கொழும்பு அரசிடம் இழப்பீடாக 1.5 மில்லியன் ரூபாயை கோரியிருந்தோம். ஆனால் அரசு வெறும் 20 இலட்சம் ரூபா நிதியைத் தந்துவிட்டு எந்த பதிலையும் வழங்காது விட்டுவிட்டது.

எரிக்கப்பட்ட பொது நூலக்கதின் ஒருதொகுதியை நினைவுச் சின்னமாக வைத்துக்கொண்டு மிகுதியை சீரமைப்புச் செய்ய முற்பட்டோம். எனினும் கொழும்பு அரசு எரிக்கப்பட்ட அடையாளங்களை அழித்து நூலகத்தைச் சீரமைத்தது.

அன்றைய அரசிடம் கோரிய இழப்பீடு தொடர்பில் 2006ஆம் ஆண்டிலும் கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் இன்றுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. இதனுடன் தொடர்புடையவர்களையும் சட்டத்தின் முன்னிறுத்தவில்லை” என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

http://uthayandaily.com/story/4902.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் இனத்தின் கல்வி வளர்ச்சியை முற்றாக அழிக்க பின்னணியில் நின்று செயற்பட்ட அத்துலத் முதலி, காமினி திசநாயக்கா போன்றோர் புலிகளால்  கொல்லப்பட்டார்கள் (உரிமை கோராவிட்டாலும்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.