Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரை அ்ங்கீகரிக்கும் மனோநிலை பெரும்பான்மையினருக்கு வேண்டும்

Featured Replies

சிறுபான்மையினரை அ்ங்கீகரிக்கும் மனோநிலை பெரும்பான்மையினருக்கு வேண்டும்

 

எமது நாட்டில் இன­வாத நட­வ­டிக்­கைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவ்­வி­ன­வாத நட­வ­டிக்­கை­களின் விளை­வாக மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் தனது வகி­பா­கத்­தினை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை. இன­வா­தத்தை தடுக்கும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் பின்­ன­டிப்பு செய்து வரு­கின்­றது என்றும் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன.

இன­வா­தமும் விளை­வு­களும்

இன­வாதம் என்­பது எமது நாட்­டுக்கு புதி­ய­தல்ல. நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­ன­ரா­யினும் சரி, சுதந்­தி­ர­ம­டைந்த பின்­ன­ரா­யினும் சரி இன­வாதம் என்­பது தாரா­ள­மா­கவே விதைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இன­வாத விதைப்பின் கார­ண­மாக சிறு­பான்மை மக்கள் தொடர்ச்­சி­யா­கவே துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­ற­மையும் தெரிந்த விட­ய­மாகும். இலங்கைத் தமி­ழர்கள், இந்­திய வம்­சா­வ­ளி­யினர், முஸ்­லிம்கள் என்று யாரையும் இன­வாதம் விட்டு வைக்­க­வில்லை. இன­வாதம் எல்­லோ­ரையும் எரித்­தி­ருக்­கின்­றது. உயிர்­க­ளுக்கும், உட­மை­க­ளுக்கும் சேதம் விளை­வித்­தி­ருக்­கின்­றது. சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை பறித்­தி­ருக்­கி­றது. இந்­நி­லையில் இன­வா­தமும் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரும் என்று நாம் குறிப்­பிட்டு நோக்­கு­வோ­மானால் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இன­வா­தத்­தினால் ஒரு­படி அதி­க­மா­கவே பாதிப்­பினை எதிர்­நோக்கி இருக்­கின்­றனர். 1920களின் பிற்­ப­கு­தியில் சர்­வ­ஜன வாக்­கு­ரிமை பற்­றியும் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்­தங்கள் பற்­றியும் விவா­தங்கள் நடந்­த­போதே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான சிங்­கள பூர்ஷ்­லாக்­களின் தாக்­கு­தல்கள் ஆரம்­பித்து விட்­ட­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

தோட்டத் தொழி­லா­ளர்கள் எனப்­படும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு இன்­றி­ய­மை­யா­த­வர்கள். ஆனால், அர­சியல் செயற்­பாட்­டுக்கு அல்ல என்­கிற கருத்து நில­வி­யது. அடி­மை­க­ளுக்கு சம­மாக அவர்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கொழும்பில் வசிக்கும் இந்­தி­ய­ரை­விட தோட்­டத்து கூலிக்கு நான் மிகவும் அஞ்­சு­கின்றேன். இந்­தியத் தொழி­லாளி காலையில் ஆறு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஆறு மணிக்கே தனது கூலி லயன்­க­ளுக்கு திரும்­பு­கின்றான். இத்­தீவில் நிகழ்­வுகள் பற்றி அவ­னுக்கு என்ன தெரியும்? எனவே, அர­சியல் விட­யங்­களில் வாக்­க­ளிக்கும் தகைமை அவ­னுக்கு இல்லை என்றே கூறுவேன் என்று இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­ப­டக்­கூ­டாது என எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது. சிங்­க­ளவர் துர­திர்ஷ்டம் பிடித்த சமூ­கத்­தினர். அவர்­க­ளு­டைய தாராள மனப்­பான்மை மறக்­கப்­பட்டு தவ­றாக விளங்­கப்­பட்­டுள்­ளனர். மற்­ற­வர்­களின் நன்­மைக்­காக தம்மை ஒறுப்­ப­தற்கு சம்­ம­திக்கும் சிங்­க­ளவர் போன்று வேறு ஒரு சமூகம் இருக்கும் என்று நான் எண்­ண­வில்லை. இந்­தி­யர்­க­ளுக்கு ஒரு பெரிய நாடு உள்­ளது. எங்­க­ளுக்கு இச் சிறு துண்டு நிலமே உள்­ளது. இந்த நாடு எங்­க­ளுக்கு வேண்டும் என்­றெல்லாம் கருத்­துக்கள் எதி­ரொ­லித்­தன. டொனமூர் ஆணைக்­கு­ழு­வி­னு­டைய சிபா­ரிசில் அபாய அறி­வித்­த­லாக அமைந்­தது இந்­தியத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வாக்­கு­ரி­மை­ய­ளிக்கும் பிரே­ரணை என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நாட்டில் முரண்­பா­டு­களும் குழப்ப நிலை­களும் மேலெ­ழுந்த போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் தாக்­கங்­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கின்­றனர் என்­ப­தனை மறுத்­து­விட முடி­யாது. இதற்கு சில உதா­ர­ணங்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றன.

பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் இன­வாத நிலை­மைகள் தொடர்பில் கூறு­கையில், இன­வாதம் பேசு­ப­வர்கள் நாட்­டி­னு­டைய அபி­வி­ருத்­தியில் அக்­கறை இல்­லா­த­வர்கள் என்று குறிப்­பி­டு­கின்றார். மேலும் நாடு அபி­வி­ருத்தி அடை­யா­விட்­டாலும் பர­வா­யில்லை சிறு­பான்­மை­யி­னரை மட்டம் தட்ட வேண்டும் என்­பதில் இன­வா­திகள் குறி­யாக இருக்­கின்­றனர். காலம் கால­மாக எமது நாட்டில் இன­வா­தப்­பயிர் வளர்க்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றது. உரிய தறு­வாயில் நீருற்றி, பச­ளை­யிட்டு இன­வா­தப்­ப­யிரை இன­வா­திகள் வளர்த்து வரு­கின்­றனர். இலங்கை அர­சாங்­கங்கள் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கவே காலம் கால­மாக கட்டம் கட்­ட­மாக தனது செயற்­பா­டு­களை முடுக்­கி­விட்­டி­ருக்­கின்­றன என்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும். இந்­திய வம்­சா­வளி மக்­களின் குடி­யு­ரி­மையும் வாக்­கு­ரி­மையும் பறிக்­கப்­பட்ட நிகழ்­வா­னது இந்த நாட்டின் வர­லாற்றில் கறை­ப­டிந்த ஒரு அத்­தி­யா­ய­மாகும் என்­ப­தனை சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. ஸ்ரீமாவின் காலத்தில் பல தோட்­டங்கள் தேசிய மய­மாக்­கப்­பட்­டன. தொழி­லா­ளர்­க­ளுக்கு பல விதத்­திலும் இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இந்­தி­யா­வுடன் ஒப்­பந்தம் செய்து 07 இலட்சம் மக்கள் வரையில் இந்­தி­யா­வுக்கு அனுப்­பி­ விட்­டனர். இது ஒரு இன­வாத வெளிப்­பா­டே­யாகும். இப்­படிப் பார்க்­கையில் இந்­திய வம்­சா­வளி தோட்ட மக்­க­ளுக்கு எதி­ரா­கவே இலங்கை அர­சாங்­கங்கள் செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றமை வெளிப்­படை உண்­மை­யா­கின்­றது.

எந்­த­வொரு நாடும் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை உரி­ய­வாறு வழங்­காமல் அபி­வி­ருத்தி இலக்­கினை எட்ட முடி­யாது. சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உரிய கல்வி வாய்ப்­புக்கள், மொழி, கலா­சார வாய்ப்­புகள், தொழில் வாய்ப்­புகள் என்­ப­வற்றை வழங்­குதல் வேண்டும். இதை­ய­டுத்து ஒரு சமூ­கத்தை மட்டும் தலையில் தூக்கி வைத்­துக்­கொண்டு சிறு­பான்­மை­யி­னரை புறக்­க­ணித்து செயற்­ப­டு­கின்ற நிலை­யா­னது பாத­க­மான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும். அபி­வி­ருத்­தியை விட சிறு­பான்­மை­யி­னரை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்ற விட­யத்­துக்கே இவர்கள் முன்­னு­ரிமை அளிக்­கின்­றார்கள். இலங்கை தமி­ழர்கள், இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்கள், முஸ்­லிம்கள் அனை­வ­ருமே இந்த நாட்­டி­னது அபி­வி­ருத்­தியின் பங்­கா­ளர்­க­ளாக மாற­வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் பங்­கா­ளர்கள் என்ற உணர்­வுடன் செயற்­பட்­டால்தான் இந்த நாடு முன்­னேற முடியும். இந்த உணர்­வினை சிறு­பான்­மை­யி­னர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தும் வகையில் ஆட்­சியில் இருக்­கின்ற அர­சாங்­கங்­களின் செயற்­பா­டுகள் அமைதல் வேண்டும். சிறு­பான்­மை­யி­னரை நாட்டின் பங்­கா­ளர்­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய மனப்­பான்மை சிங்­கள பேரி­ன­வா­தி­க­ளிடம் காணப்­ப­ட­வில்லை. இது ஒரு வருந்­தத்­தக்க விட­ய­மே­யாகும். 1983ஆம் ஆண்டில் இனக்­க­ல­வ­ர­மா­னது நாட்டின் அபி­வி­ருத்தி பின்­ன­டைவு காண்­ப­தற்கு உந்து சக்­தி­யாக இருந்­தது என்­ப­தனை மறக்­கவோ மறுக்­கவோ முடி­யாது. இனக்­க­ல­வ­ரத்­தையும், இன­வா­தத்­தையும் வைத்­துக்­கொண்டு ஒரு­நாளும் நாடு முன்­னறே முடி­யாது என்­பது அபி­வி­ருத்தி ஆய்­வா­ளர்­களின் கருத்­தாக உள்­ளது என்றும் பேரா­சி­ரியர் சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்தார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பாடு

இப்­போ­தைய இன­வாதம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஓங்கி ஒலிக்­கின்­றது. முஸ்­லிம்­களின் அபி­வி­ருத்தி சிலரின் கண்­களை உறுத்­து­கின்­றது. இந்த உறுத்தல் நிலை­மைகள் இன­வா­த­மாக வெளிப்­ப­டு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்­களும் எமக்கு எப்­போது என்ன நடக்­குமோ என்ற அச்­சத்தில் வாழ்ந்து வரு­வ­தாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திசா­நா­யக்க தெரி­வித்­தி­ருக்­கிறார். தற்­போது நாட்டில் இன­வாதம், மத­வாதம் தலை­தூக்கி இருக்­கின்­றது. சிங்­கள மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்கு இடையில் முறுகல் நிலை­யினை தோற்­று­விப்­ப­தற்கு சில குழுக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. இதன்­படி இன­வாத நோக்­கத்­துடன் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­ப­டு­கின்­றன. முப்­பது வருட யுத்­தத்­திற்கு முகம் கொடுத்து இரத்­தமும், கண்­ணீரும் சிந்­திய அனு­ப­வத்தை கொண்ட நாம் மீளவும் அவ்­வா­றான நிலையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எனினும், இந்த தாக்­கு­தல்­க­ளுக்கு எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது இன­வாத நடத்­தை­க­ளுக்கு அர­சாங்கம் உடந்­தை­யா­கவே செயற்­ப­டு­கின்­ற­தா­கவே தெரி­கின்­றது.

இன­வாத முறுகல் நிலையை அர­சாங்கம் முடி­வுக்கு கொண்­டு­வ­ராமல் தொடர்ந்து செயற்­ப­டு­மாயின் மக்கள் பொல்­லு­க­ளுடன் வீதியில் இறங்கி இரத்தம் சிந்தும் அபாயம் ஏற்­படும். இதனை அர­சாங்கம் விரும்­பு­கின்­றதா என்று அநு­ர­கு­மார கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். இன­வா­தத்தை தடுக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்கம் பின்­ன­டிப்பு செய்து வரு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் தனது உள்ளக் குமு­றலை வெளிப்­ப­டுத்தி இருக்­கின்­றது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ள இப்­போ­தைய இன­வாதம் படிப்­ப­டி­யாக ஏனைய சிறு­பான்மை இனங்­க­ளான இலங்கை தமி­ழர்கள் மற்றும் இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்கள் என்­போ­ருக்கு எதி­ராக திரும்­பக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­று­களே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் சிறு­பான்­மை­யினர் கருத்து பேதங்­க­ளையும், முரண்­பா­டு­க­ளையும் மறந்து கைகோர்க்க வேண்­டிய ஒரு கட்­டா­ய­மான சூழ்­நிலை இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. இன்று முஸ்­லிம்­க­ளுக்கு என்றால் நாளை எங்­க­ளுக்கு என்­ப­தனை நினைவில் இருத்தி ஏனைய சிறு­பான்மை இனத்­த­வர்கள் செயற்­ப­டுதல் வேண்டும். அமைச்சர் மனோ­க­ணே­சனை வம்­புக்கு இழுத்த இன­வாதம், சிங்­க­ள­வர்­களின் நல்­லெண்­ணத்­தினால் தான் சிறு­பான்­மை­யினர் இங்கு வாழ்­கின்­றனர் என்று இடித்துக் கூறி இருக்­கின்­றது. இலங்கை சிங்­கள பௌத்த நாடு, சிங்­க­ள­வர்­களே இந்த நாட்டின் சொந்­தக்­கா­ரர்கள். இங்கே வாழ­வேண்டும் என்றால் எல்­லோரும் சிங்­களம் படிக்க வேண்டும் என்ற ஞான­சார தேரரின் கருத்து நாட்டின் அபி­வி­ருத்­தியை கேள்­விக்­கு­றி­யாக்கி இருக்­கின்­றது.

இந்­திய உத­வியும்  இன­வா­தமும்  

எமது அயல் நாடு, நேச நாடு இந்­தி­யா­வாகும். இந்­தி­யா­வுக்கும், இலங்­கைக்கும் இடையே தொப்புள் கொடி உறவு காணப்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு வருகை தந்­த­வர்கள் இந்­திய வம்­சா­வ­ளி­யினர். எனவே இம்­மக்­களின் நலன்­களை பேணும் பொறுப்பு இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. இதில் இருந்தும் இந்­தியா ஒதுங்கி இருந்­து­விட முடி­யாது. இத­ன­டிப்­ப­டையில் இந்­தியா பல உத­வி­களை இலங்­கைக்கும், இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ருக்கும் வழங்கி இருக்­கின்­றது. இன்னும் வழங்­கு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்­றது. இத­ன­டிப்­ப­டையில் அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த மோடி பத்­தா­யிரம் வீடு­களை இந்­திய வம்­சா­வளி மக்­களின் நலன்­க­ருதி வழங்­க­வுள்­ள­தாக அதி­ர­டி­யான ஒரு அறி­விப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இந்த விடயம் இன­வா­தி­களின் கண்­களை உறுத்­தி­யி­ருக்­கின்­றது என்­ப­தனை நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். ‘இத்­த­கைய அறி­விப்­புக்­களை செய்­வ­தற்கு நரேந்­திர மோடி யார்? இலங்கை இந்­தி­யாவின் முப்­ப­தா­வது மாநி­லமா? என்­றெல்லாம் இன­வா­திகள் புலம்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

மேலும் இந்­தி­யாவில் இருந்து ஆசி­ரி­யர்­களை வர­வ­ழைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் இந்­ந­ட­வ­டிக்­கை­யையும் இன­வாத கண்­கொண்டு சிலர் நோக்கி வரு­வ­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வி.இரா­தா­கி­ருஷ்ணன் குற்றம் சாட்டி இருக்­கின்றார். மேலும் ஆசி­ரியர் பற்­றாக்­கு­றையை நீக்­கு­வ­தற்­காக எம்­மிடம் ஆசி­ரி­யர்கள் இல்­லாத கார­ணத்­தினால் நாம் தமிழ் நாட்­டிற்கு இங்­கி­ருந்து சென்­ற­வர்­களை மீண்டும் இங்கு அழைத்து வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றேன். ஆனால் இதனை ஒரு சில பெரும்­பான்­மை­யினர் இன­வாத கண்­கொண்டு பார்க்­கின்­றனர். அவர்கள் மலை­யக மாண­வர்­களும், தமிழ் மாண­வர்­களும் கல்­வியில் முன்­னேற்றம் அடை­வ­தனை விரும்­ப­வில்­லையா? எங்­க­ளு­டைய பிள்­ளைகள் கல்­வியில் முன்­னேற்றம் அடைந்தால் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு யாரும் கிடைக்க மாட்­டார்கள் என்­கிற எண்­ணத்தில் அவர்கள் இதனை எதிர்­பார்ப்­ப­தா­கவே நான் பார்க்­கின்றேன்.

இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை தொடர்­பு­ப­டுத்தி இந்­தி­யாவை வம்­புக்­கி­ழுக்கும் இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் பொறா­மையின் உச்­ச­க்கட்­ட­மாகும் என்­ப­தனை சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. இந்த நாட்டில் இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரையும் ஏனைய சிறு­பான்மை இனங்­க­ளையும் சகல துறை­க­ளிலும் நிர்­வா­ணப்­ப­டுத்த முயற்­சிக்கும் பேரி­ன­வா­திகள் கிள்ளிக் கொடுக்­கவும் விரும்­ப­வில்லை. சிறு­பான்மை இனங்­களின் எழுச்­சியால் பேரி­ன­வா­தி­களின் வயிற்­றெ­ரிச்சல் அதி­க­ரிக்­கின்­றது. இன­வா­தத்தை கைவிட்­டா­லன்றி இந்த வயிற்­றெ­ரிச்­ச­லுக்கு எந்த வைத்­தி­ய­ராலும் மருந்து கொடுத்து குணப்­ப­டுத்த முடி­யாது.

எம்.தில­கராஜ் (பாரா­ளு­மன்ற உறுப்­பினர்)  

இன­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­ந­ட­வ­டிக்­கைகள் கார­ண­மாக மலை­யகம் ஏற்­க­னவே பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாகி இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதனை நாம் மறுக்க இய­லாது. இந்த நிலையில் அண்­மை­க்கால இன­வாத நட­வ­டிக்­கை­களை நாம் நோக்கும் போது முஸ்­லிம்­களை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவே இது காணப்­ப­டு­கின்­றது. இன­வாதம் என்­பது இந்­நாட்டில் எப்­போதும் இருக்­கின்­றது. ஆனால் வடி­வங்கள் மாறி மாறி காணப்­ப­டு­கின்­றன. மலை­ய­கத்தை நோக்கி நேரடி இன­வாத நட­வ­டிக்­கைகள் இல்­லா­த­போ­திலும் கூட நிகழ்ச்சி நிரல் என்று ஒன்று காணப்­ப­டு­கின்­றது. இன­வாதம் என்­பது சாதா­ர­ண­மாக நடந்­தேறும் ஒரு விட­ய­மல்ல. மறை­மு­க­மான ஒரு நிகழ்ச்சி நிர­லுடன் தொடர்ந்­தேர்ச்­சி­யாக இன­வாதம் இந்த நாட்டில் இருந்து வரும் ஒன்­றாக இருக்­கின்­றது.

இத்­த­கைய இன­வாத நிகழ்ச்சி நிரலில் இருந்து மலை­ய­கத்தை தள்ளி வைப்­பார்கள் என்று நாம் எதிர்­பார்க்க முடி­யாது. எனவே இதனை எதிர்­கொள்­கின்ற போக்­கு­ட­னேயே நாம் கையாள்­கையை மேற்­கொள்ள வேண்டி இருக்­கின்­றது. இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்ட வகையில் நாம் வாழ்­கின்றோம் என்­ப­தனை நாம் மற­வாது வாழ்தல் வேண்டும். இது நாம் அக்­கறை கொள்ள வேண்­டிய ஒரு விட­ய­மாக உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

ஆர்.இரா­ஜாராம் (மத்­திய மாகாண சபை உறுப்­பினர்) 

இன­வா­தி­க­ளுக்கு அடைக்­க­லமும் அடை­யா­ளமும் கொடுக்­கின்ற ஒரு நாடாக இலங்கை இருந்து விடக்­கூ­டாது. தமி­ழர்கள் இந்த நாட்டில் உரிமை கோர முடி­யாது என்று இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இந்­தியா தந்த பௌத்த மதத்தை ஏற்­றுக்­கொள்ளும் இன­வா­திகள் இந்­தி­யா­வையும் இந்­திய வம்­சா­வளி தமிழ் மக்­க­ளையும் ஏற்றுக்கொள்ள தயா­ராக இல்லை. இன­வாதம் பேசு­ப­வர்கள் இந்­நாட்டில் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் அவர்­க­ளுக்கு உரிய உள­ந­லன்கள் குறித்த சிகிச்­சை­யினை உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ வழங்­கு­வ­தற்கு முற்­ப­டுதல் வேண்டும்.

மலை­யக மக்­க­ளுக்கு இந்­நாட்டில் மிக நீண்ட ஒரு வர­லாறு இருக்­கின்­றது. சுமார் இரு­நூறு வரு­ட­கால வர­லாறு இது­வாகும். இந்­நாட்டை உரு­வாக்­கி­ய­வர்கள் எமது இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்கள். நாட்டின் உயர்­வுக்கு தோள் கொடுத்து இருக்­கின்­றார்கள் என்றால் மிகை­யா­காது. நாட்டின் மேன்­மைக்கு உத­விய எமது சமூகம் இந்த நாட்டில் உரிமை கொண்­டாட முடி­ய­வில்லை என்று சொன்னால் உரி­மைகள் பற்றி பேசக் கூடாது என்று சொன்னால் யார் பேசு­வது? எமது மக்­களின் உழைப்பை மட்டும்தான் எண்ணி இந்த நாடு செயற்­ப­டு­கின்­றதா? எமது மக்கள் உழைப்­ப­தற்கு மட்டும் தான் தேவை என்று இலங்கை கருதுகின்­றதா? எந்த ஒரு நாட்­டிலும் இளைஞர் சக்தி வலு­வா­னது. மலை­யக இளை­ஞர்­களின் சக்­தியும் இன்று அதிக­ரித்து காணப்­ப­டு­கின்­றது. இளை­ஞர்கள் விழிப்­ப­டைந்­துள்­ளார்கள். இன­வாதம் பேசு­ப­வர்கள் எமது இளை­ஞர்கள் சக்­தியை புரிந்து கொள்ள வேண்டும்.

மலையக மக்­களை தொடர்ந்தும் கொத்­த­டி­மை­க­ளாக வைத்­தி­ருப்­ப­தற்கு யாரும் முனைதல் கூடாது. எமது மக்­களை பிரித்­தா­ளு­வ­தற்கு யாரும் முற்­ப­டுதல் கூடாது. இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்கு இளைஞர் கூட்டம் உரு­வா­வதை எவ­ராலும் தடுக்க முடி­யாது. எமது இளை­ஞர்­களை யாரும் குறைத்து மதித்தல் கூடாது. அவர்கள் திற­மை­யா­ன­வர்கள் என்­ப­தனை புரிந்து கொள்ள வேண்டும். ஞான­சார தேரர், உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் நாட்டு மக்­க­ளி­டையே இன­வா­தத்தை தூண்டி இனக்­க­ல­வ­ரங்­களை ஏற்­ப­டுத்த தூண்­டு­கோ­லாக இருந்து வரு­கின்­றனர். எமது தொழி­லா­ளர்கள் சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் பழைய காலத்தால் முந்­திய லயன்­களில் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­களின் வீட்டுத் தேவை­யா­னது நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. எனவே இவர்­க­ளுக்கு தனித்­தனி வீடு அமைத்துக் கொடுக்­கப்­பட வேண்டும். இது விடயத்தில் இலங்கை அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்­தியா பத்­தா­யிரம் வீடு­களை மலை­யக மக்­க­ளுக்­காக வழங்க உள்ள நிலையில் நாம் மோடிக்கு நன்றி கூற வேண்டும். இதை­வி­டுத்து உத­ய­கம்­மன்­பில இந்­தி­யா­வையும் மோடி­யையும் விமர்­சித்­தி­ருந்தார். இது பிழை­யான ஒரு செயற்­பா­டாகும்.

விஞ்­ஞான, கணித ஆசி­ரி­யர்­க­ளுக்கு பற்­றாக்­குறை நில­வு­கின்­றது. இதனை எவ்­வாறு தீர்த்து வைப்­பது? என்று சிந்­திக்க வேண்டும். 25 விஞ்­ஞான பாட­சா­லை­களை மலை­ய­கத்தில் ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்­பது பிர­த­மரின் எண்­ண­மாக உள்­ளது. இதற்­கான கற்றல் உப­க­ர­ணங்­களும் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் விஞ்­ஞான, கணித ஆசி­ரி­யர்­களை வழங்கி இப்­பா­டங்­களை மலை­ய­கத்தில் ஊக்­கு­விக்க வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கின்­றது. என­வேதான் இந்­தி­யாவில் இருந்து ஆசி­ரி­யர்­களை வர­வ­ழைக்க உத்­தே­சிக்­கப்­பட்­டது. எனவே இத­ன­டிப்­ப­டையில் எமது நாட்டில் இருந்து இந்­தி­யா­வுக்கு இடம் பெயர்ந்த எமது சகோ­த­ரர்­களில் நூறு ஆசி­ரி­யர்­களை இப்­ப­ணிக்­கென்று அழைத்து வர உறு­தி­பூண்­டுள்ளோம். ஒப்­பந்த அடிப்­ப­டையில் இவர்கள் இங்கு வரு­கின்­றனர். ஒப்­பந்தம் முடிந்­த­வுடன் இவர்கள் சொந்த நாட்­டிற்கு திரும்பி விடு­வார்கள். இதனை யாரும் இன­வாத நோக்கில் பார்க்கக் கூடாது. எமது மக்கள் ஒன்றும் அடி­மை­யாக இருக்க வேண்டும் என்று கட்­டா­ய­மில்லை. எமது சமூகம் எல்லா உரி­மை­களும் பெற்று தலை நிமிர்ந்து மாற வேண்டும். இதற்கு நாம் உத­வுவோம்.

கலா­நிதி ஏ.எஸ்.சந்­தி­ரபோஸ்  

இன வன்­மு­றையால் இந்­திய வம்­சா­வளி மக்கள் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தென்­ப­குதி மக்கள் இந்­திய வம்­சா­வளி மக்­களின் இருப்­பி­டத்­தையும் வடக்கு, கிழக்கு மக்­களின் போராட்­டத்­தையும் சரி­வர புரிந்துகொள்­ளாத நிலையில் எமது ஆதங்­கத்தை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் மீதே வெளிப்­ப­டுத்­தினர். இது ஒரு துர­திர்ஷ்­ட­மாகும். தமிழ் இனம் என்ற ஒரே கார­ணத்தால் எமது மக்கள் பல்­வேறு பாதிப்­புக்­க­ளையும் சந்­திக்க வேண்டி நேர்ந்­தது. சிங்­கள மக்­க­ளுடன் சமா­தா­ன­மாக இருக்க வேண்டும் என்­கிற நோக்கில் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களும் கடந்த காலத்தில் முன்­வைக்­கப்­பட்­டன. உதா­ர­ண­மாக மார்­கழி பஜ­னையைக் கூட அகன்ட பஜனை என்று நடாத்­தினோம். இது போன்ற கூட்­டங்கள், திரு­வி­ழாக்கள், விளை­யாட்­டுக்கள் இடம்­பெ­று­கின்ற தரு­ணத்தில் பொலி­ஸாரின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே எல்லா நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டோம். எமது மக்கள் எப்­போதும் சந்­தேகக் கண்­கொண்டே நோக்­கப்­பட்­டனர். பொலி­ஸாரின் அனு­மதி இன்றி எந்த ஒரு நிகழ்­வையும் நடாத்த முடி­யாத ஒரு நிலை­மையே காணப்­பட்­டது. யுத்தம் முடிந்த நிலையில் ஓர­ளவு நிம்­மதி பெரு­மூச்சு விடு­கிறோம்.

இதற்­கி­டையில் இன்­னு­மொரு யுத்தம் அல்­லது இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால் இந்திய வம் சாவளி மக்களின் பாதிப்பு என்பது இன்னுமின்னும் அதிகமாகவே இருக் கும். சிங்களவர்களை வெறுத்துவிட்டு, அவர்களை ஒதுக்கிவிட்டு எம்ம வர்களால் இந்நாட்டில் வாழ முடியாது. ஏனென்றால் இந் நாட்டில் சுமார் 74 வீதமானவர்களாக சிங்களவர்கள் உள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்க ளின் பரம்பலைப் பார்த்தால் அவர் கள் சிங்கள மக்கள் வாழும் இடங்க ளிலேயே வாழ்கின்றனர். 

எனினும் சிங்களவர்களை புறந்த ள்ளிவிட்டு சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழ முடியாது. பெரும் பான்மை மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிறுபான்மையினர் வாழ முடியாத ஒரு பரப்பிலேயே நாம் வாழ் கின்றோம். எனவே சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக் கள் மீது வெறுப்பு ஏற்படக்கூடிய பொருளாதார காரணிகள் கிடை யாது. சிறுபான்மை மக்களை அங்கீகரிக்கின்ற மனோநிலை பெரும்பான்மையினரிடையே ஏற்பட வேண்டும். பொதுவான வேலைத்திட்டத்துடன் இயங்குதலும் வேண்டும். இவ்வாறு நடந்தால்தான் நாட்டில் சமாதானம் ஏற்படும். நல்லி ணக்கம் குறித்து நாம் பேசுவதை விட ஞானசார தேரர் கதைக்க வேண்டும். நாம் மட்டும் கதைப்ப தால் பயனில்லை. சோபித தேரர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைந்தார். அவரின் மறைவு பேரி ழப்பானது. அவரின் வழித்தோன் றல்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடுதல் வேண்டும்.

துரை­சாமி நட­ராஜா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.