Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா

Featured Replies

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா

 

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.

 
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா
 
லண்டன்:

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.

201706042339307439_vijayaya._L_styvpf.gi

மல்லையா மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தும் மல்லையா இன்றும் அவ்வாறு செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியை மல்லையா நேரில் சென்று பார்த்துள்ளார். வெள்ளை கோட் அணிந்து பார்வையாளர்கள் கேலரியில் அவர் அமர்ந்திருக்கும் படம் இணையத்தில் பரவி வருகின்றது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/04233929/1089005/vijay-mallya-spotted-in-champions-trophy-cricket-match.vpf

  • தொடங்கியவர்

இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் வருவேன்: விஜய் மல்லையா

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க விருப்பமாக உள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

 
இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் வருவேன்: விஜய் மல்லையா
 
லண்டன்:
 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான்  இடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
இந்தியா பாகிஸ்தான் இடையிலான இந்த பரபரப்பான போட்டியை இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்தார். 
 
விஜய்மல்லையா மைதானத்தில் கிரிக்கெட் பார்ப்பது போன்ற புகைப்படங்கள் ஊடங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரில் பார்க்க விருப்பமாக உள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ”இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்வையிட நான் வருகை தந்ததை அனைத்து ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு இருந்தது. இந்திய அணியை மகிழ்விக்க நான் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பதாக உள்ளேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
201706060858205669_Mallya2._L_styvpf.gif
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/06085817/1089221/Mallya-intends-to-attend-all-Team-India-Champions.vpf

  • தொடங்கியவர்

விராட் கோலி அறக்கட்டளை நிகழ்ச்சியில் மல்லையா!

'இந்திய அணியை உற்சாகப்படுத்தும்விதமாக, அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் நேரில் சென்று பார்க்கத் திட்டமிட்டுள்ளேன்' என்று கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய்மல்லையா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

M_Id_481076_Vijay_Mallya_11094_09527.jpg


வங்கிகளிடம் வாங்கிய சுமார் 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு  தப்பியோடினார். அவருக்கு பலமுறை பிடிவாரன்ட் பிறப்பித்தும் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், ஞாயிறன்று எட்ன்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை அவர் பார்த்தார். அவருடைய வருகை, உலக அளவில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.

தற்போது, இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், 'இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் பார்த்ததை ஊடகங்கள் பெரிய அளவில் செய்தியாக்கின. இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில், அனைத்துப் போட்டிகளையும் நான் நேரில் சென்று பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். விராட் கோலி ஒரு உலகத் தரம் வாய்ந்த கேப்டன். வாழ்த்துகள் விராட்கோலி' என்று பதிவிட்டுள்ளார்.

லண்டன் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, அவருடைய தொண்டு நிறுவனம் சார்பில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு விஜய்மல்லையாவும் காரில் வருகை தந்திருந்தார்.

Wide sensational media coverage on my attendance at the IND v PAK match at Edgbaston. I intend to attend all games to cheer the India team.

— Vijay Mallya (@TheVijayMallya) June 6, 2017

 

World class player World class Captain World class gentleman @imVkohli . Bravo Virat.

— Vijay Mallya (@TheVijayMallya) June 6, 2017
 
 

 

 

http://www.vikatan.com/news/sports/91458-viratkohli-world-class-captain-vijaymallaiya-praised.html

  • தொடங்கியவர்

விராட் கோலி நிறுவன விழாவில் பங்கேற்ற விஜய் மல்லையா: வந்தாச்சு அடுத்த சர்ச்சை!

 
RCB_duo

 

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி நடத்தும் தொண்டு நிறுவனம் தொடர்பாக லண்டனில் நடந்த விழா ஒன்றில்,  சர்ச்சைக்குரிய தொழில் அதிபர்  விஜய்  மல்லையா பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்குள்ள பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இங்கு வழக்குகளில் ஆஜராகக் கோரி, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ சார்பில் சம்மன்கள் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. ஆனால் அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையிலும் தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியின்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை விஜய் மல்லையா நேரில் சென்று பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது

இந்த நிலையில் இந்திய  கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில், லண்டனில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கலந்து கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராத விதமாக விஜய் மல்லையா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திடீரென்று அவரைக் கண்ட இந்திய அணி வீரர்கள் விஜய் மல்லையாவை கவனமாக தவிர்த்தனர். தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவிக்கபட்டது.

இது தொடர்பான தகவல்கள் வெளியானதும், 'விராட் கோலி சார்பாகவோ அல்லது விராட் கோலியின் தொண்டு நிறுவனம் சார்பிலோ, விஜய் மல்லையாவுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை' என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியது. ஆனால் நிதிவசூலிப்பின் பொருட்டு நடத்தபடும் இது போன்ற ”நிதி விருந்து" நிகழ்ச்சிகளில், அதிக விலையை டேபிள்களுக்கு செலுத்துபவர்களுக்கு, விருந்தினர்களை அழைக்கும் உரிமை உள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வகையில் வேறு யாரோ ஒருவர் விஜய் மல்லையாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியாவின் பிரபல ட்வென்டி 20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவராகத்தான் விராட் கோலி செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/06/விராட்-கோலி-நிறுவன-விழாவில்-பங்கேற்ற-விஜய்-மல்லையா-வந்தாச்சு-அடுத்த-சர்ச்சை-2715500.html

  • தொடங்கியவர்

லண்டன் மைதானத்தில் மல்லையா; கேலி செய்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

 
கோப்புப் படம்: விஜய் மல்லையா
கோப்புப் படம்: விஜய் மல்லையா
 
 

லண்டனில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியைக் காண வந்த விஜய் மல்லையாவை, இந்திய ரசிகர்கள் கேலி செய்தனர்.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய கோரிக்கைக்கு இணங்க அண்மையில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் விஜய் மல்லையவை கைது செய்தனர். ஆனால், அவர் கைதான அன்றே ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜூன் 4-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்திருந்தார். அவர் போட்டியை ரசித்த காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் அறக்கட்டளை சார்பில் ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியிலும் மல்லையா கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியில் அவரைக் கண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளாகி, விழாவில் இருந்து விரைவாக வெளியேறினர்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. போட்டியைக் கண்டுகளிக்க வந்த விஜய் மல்லையாவைப் பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், ''திருடன், திருடன்'' என்று கூக்குரலிட்டனர்.

'மைதானத்துக்குள் திருடன்'

நீல நிற பிளேசர் அணிந்திருந்த மல்லையா, புகழ்பெற்ற ஜேக் ஹாப்ஸ் நுழைவுவாயில் வழியாக உள்ளே நுழைந்தார். அப்போது அவரைக் கண்ட இந்திய ரசிகர்கள் சிலர் ''திருடன், திருடன்'' என்று கத்தத் தொடங்கினர்.

ஒரு ரசிகர் அவரைப் படம் பிடிக்க, மற்றொருவரோ ''மைதானத்துக்குள் திருடன் நுழைவதைப் பாருங்கள்'' என்று கத்தினார்.

ஆனால் இதைப் பற்றிக் கவலைகொள்ளாத மல்லையா, தன்னுடைய வழக்கமான அலட்சியப் போக்குடனேயே இருந்தார்.

http://tamil.thehindu.com/india/லண்டன்-மைதானத்தில்-மல்லையா-கேலி-செய்த-இந்திய-கிரிக்கெட்-ரசிகர்கள்/article9725139.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்
கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற விஜய் மல்லையாவுக்கு நேர்ந்த கதி

mallaya_3.png

 

லண்டனில் இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற விஜய் மல்லையாவைப் பார்வையாளர்கள் சிலர் திருடன் திருடன் எனக் கூச்சலிட்டுக் கிண்டல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுனைடட் ப்ரேவரீஸ் (United breweries), கிங்பிஷர் ஆகிய நிறுவனங்களின் அதிபர் விஜய் மல்லையா தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை வட்டியும் முதலுமாக 9000 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவில்லை. கடனைத் திரும்பப் பெற வங்கிகள் சட்ட ரீதியான நடவடிக்கையைத் தொடங்கியதும் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டார். 

இப்போது லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையா ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய போட்டியைக் காணச் சென்றுள்ளார். அப்போது வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாததைக் குத்திக் காட்டும் வகையில், பார்வையாளர்கள் சிலர் இந்தியில் Chor.... Chor.... என கூச்சலிட்டுக் கிண்டல் செய்துள்ளனர். 'chor' என்றால் இந்தியில் திருடன் என பொருள்.

http://ns7.tv/ta/tamil-news/sports/12/6/2017/vijay-mallya-booed-chor-chor-chants-during-indiasouth-africa-match

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.