Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!! கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்!

Featured Replies

முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!!

கேப்பாபிலவில் பதற்றம் எனத் தகவல்!

 
முகாமுக்குள் மக்களை வீட்டு வாயிலை மூடியது இராணுவம்!!
  •  

கேப்பாபிலவு இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிக்குள் வழிபாட்டுக்குச் சென்ற மக்களை காணிக்குள் வைத்து இராணுவத்தினர் பிரதான நுழைவாயிலை மூடியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்பாபிலவு பிரதான சாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்துக்காக இன்று இராணுவத்தால் திறந்து விடப்பட்டுள்ளது.

தமது காணிகளை பாரத்து கதறியழுதவண்ணம் மக்கள் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் ஆலயத்தைவிட்டு மக்கள் வெளியே வரமுடியாதவாறு இராணுவத்தினர் நுழைவாயிலை மூடியுள்ளனர் என்றும் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

u-4.jpg

http://uthayandaily.com/story/6097.html

  • தொடங்கியவர்

மீண்டும் மூடப்பட்டது கேப்பாபுலவு வீதி : கேப்பாபுலவில் குழப்ப நிலை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தற்காலிகமாக திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. கேப்பாபுலவு கிராமத்துக்குள் தமது கோவிலை மக்கள் வழிபட சென்றுள்ள நிலையில் மக்களுடன் இணைந்து தென்பகுதி பிக்கு ஒருவரும் தென்பகுதி மக்களும் சென்றிருந்த நிலையில் பிரதான வீதியை மீண்டும் மூடியுள்ளதால் ஒரு குழப்பமான நிலை தோன்றியுள்ளது.

2.jpg

தற்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.jpg

4.jpg

5.jpg

http://www.virakesari.lk/article/20792

  • தொடங்கியவர்

கேப்பாப்பிலவு முகாம் பகுதியில் மக்களை அடைத்து வைத்தது இராணுவம்!

closed.jpg
கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் வழிபாட்டிற்குச் சென்ற மக்களை, பிரதேசத்துக்குள் இராணுவத்தினர் அடைத்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வழிபாட்டு பகுதிக்குள் மக்கள் பிரவேசித்தவுடன் பிரதான வாயிலை இராணுவத்தினர் மூடியுள்ளதால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்திலுள்ள தமது கோயிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற மக்களுடன் இணைந்து தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த மதகுருவும், தென்பகுதி மக்களும் சென்றிருந்த நிலையில் பிரதான வீதியை படையினர் மூடியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேச செயலர் அங்கு சென்று இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேப்பாபுலவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://globaltamilnews.net/archives/29456

  • தொடங்கியவர்

கேப்பாப்பிலவில் நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதி

kepapilavu.jpg

கேப்பாப்பிலவில் மக்கள் வெளியேற முடியாத வகையில் பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருந்த நிலையில்  குறித்த பகுதிக்கு சென்ற  மாவட்ட செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய, நுழைவாயிலை திறந்து மக்கள் வெளியேற இராணுவம் அனுமதித்து்ளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்தில் நிலவிவந்த பதற்றமான சூழல் தணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் வழிபாட்டிற்குச் சென்ற மக்களை, பிரதேசத்துக்குள் இராணுவத்தினர் அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/29456

  • தொடங்கியவர்

கேப்­பாப்­பு­லவு கிராமம் ஊடான வற்­றாப்­பளை வீதி திறக்கப்பட்டு மீண்டும் மூடப்­பட்­டது

p11-d8a7f9755511e19c918f72c5b38ca2c6b8c06276.jpg

 

மாவட்ட செய­லா­ள­ருடன் மக்கள் வாக்­கு­வாதம்
(கே.குமணன்)

வற்­றாப்­பளை அம்மன் ஆலயத்தின் வரு­ டாந்த வைகாசி விசா­கப்­பொங்­கலை முன்­னிட்டு பாத யாத்­தி­ரிகர்கள் மற்றும்  அடி­ய­வர்கள் செல்­வ­தற்­காக வழ­மையைப் போன்றே புதக்­கு­டி­யி­ருப்­பி­லி­ருந்து கேப்­பா­பு­லவு கிரா­மத்தின் பிர­தான இரா­ணுவம் முகாம் ஊடாக வற்­றாப்­ப­ளைக்கு செல்லும் பிர­தான வீதியை நேற்றுக் காலையில் இரா­ணு­வத்­தினர் திறந்த போதும் சொற்ப காலப்­ப­கு­தியில் அவ்­வீ­தி­யினால் பிர­வே­சித்த அனை­வ­ரையும் வெளி­யேற்றி பிர­தான வாயிலை மூடி­யது. 

இதனால் பொது­மக்­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. அதே­நேரம் சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த முல்­லைத்­தீவு மாவட்ட செய­லாளர் ரூப­வதி கேதீஸ்­வரன், மற்றும் முல்­லைத்­தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஆகி­யோ­ரு­டனும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது.

இதே­வேளை சொந்த நிலங்­களை மீட்­டெ­டுப்­ப­தற்­காக 103 நாட்­களை கடந்து போராட்­டத்தை தொடர்ந்து கொண்­டி­ருக்கும் கேப்­பா­பு­லவு பூர்­வீக கிராம மக்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக சென்­றி­ருந்த முப்­பது பேர் அடங்­கிய சம உரிமை இயக்­கத்தின் குழு­வினர் பொது­மக்­க­ளுக்கு ஆத­ர­வாக தமது குரல்­களை எழுப்­பி­யி­ருந்­தனர்.

இதன் கார­ண­மாக அப்­ப­கு­தியில் பதற்­ற­நி­லைமை ஏற்­பட்­டது. இருப்­பினும் பொலி­ஸாரின் தலை­யீட்­டினால் நிலைமை கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­தி­ருந்­தது. மேலும் வற்­றாப்­பளை அம்மன் ஆல­யத்­திற்கு பாத­யாத்­திரை மேற்­கொண்­டி­ருந்த அடி­ய­வர்கள் குறித்த வீதி மூடப்­பட்­ட­மையால் கற்­களும் முட்­களும் நிறைந்த பத்து கிலோ­மீற்­றர்­க­ளுக்கும் அதி­க­மான காட்­டு­வ­ழிப்­பா­தையை பயன்­ப­டுத்தி கோவிலை நோக்­கிய தமது யாத்­தி­ரையை பரி­தா­பத்­திற்கு மத்­தியில் தொடர்ந்­தி­ருந்­தனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தாது,

கேப்­பா­பு­லவு பூர்­வீக கிராம மக்கள் தமது சொந்த நிலத்­தினை விடு­விக்க கோர நேற்று 103ஆவது நாள­கவும் போராட்­டத்­தினை தொடர்ந்­தி­ருந்த நிலையில் அதற்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­காக தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து சம­உ­ரிமை இயக்­கத்தின் 30பேர் அடங்­கிய குழு­வினர் சென்­றி­ருந்­தனர்.

இக்­கு­ழு­வினர் அம்­மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் குறித்த மக்கள் போராட்டம் நடத்தி வரும் இரா­ணுவ முகமின் பிர­தான வாயில் கதவு திறக்­கப்­பட்­ட­தோடு பொது­மக்கள் அந்த கதவின் ஊடாக செல்லும் வீதியை பயன்­ப­டுத்த முடியும் என அறி­விக்­கப்­பட்­டது.

வற்­றாப்­பளை அம்மன் ஆல­யத்தின் வரு­டாந்த வைகாசி விசா­கப்­பொங்கல் இன்­றைய தினம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் யாத்­தி­ரிகள் செல்­வ­தற்­காக புதுக்­கு­டி­யி­ருப்­பி­லி­ருந்து வற்­றாப்­ப­ளைக்கு செல்லும் பிர­தான வீதி­யான இவ்­வீ­தியை திறந்து விடு­மாறு ஏற்­க­னவே ஆல­யத்தின் தலைவர் உட்­பட பொது­மக்கள் விடுத்த கோரிக்­கைக்கு அமை­வாக இவ்­வீதி திறக்­கப்­பட்­டது.

இச்­ச­ம­யத்தில் போராட்டம் நடத்­திக்­கொண்­டி­ருக்கும் மக்­களும் அதற்கு ஆத­ர­வு­தெ­ரி­விப்­ப­தற்­காக சென்­றி­ருந்த சம உரிமை இயக்­கத்தின் குழு­வி­னரும் குறித்த வீதி­யூ­டாகச் உட்­பி­ர­வே­சித்­தனர்.

அவ்­வாறு உட்­பி­ர­வே­சித்­த­வர்கள் அங்கு தமக்கு சொந்­த­மான பூமியில் இரா­ணுவம் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை பார்­வை­யிட்­ட­தோடு தமக்குச் சொந்­த­மான வீடுகள், கட்­டங்­க­ளையும் வீதியின் இரு­ம­ருங்­கிலும் நின்று கைகளால் சைகை காட்டி பரஸ்­பரம் கலந்­து­ரை­யா­டினர்.

இத­னை­ய­டுத்து குறித்த இரா­ணுவ முகாமின் ஊடாகச் செல்லும் வீதியின் அருகில் காணப்­படும் கேப்­பா­பு­லவு முருகன் ஆலய வளா­கத்தில் ஒன்­று­கூ­டி­ய­வர்கள் அவ்­வி­டத்தில் அந்த வீதி­யூ­டாகச் செல்லும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தாக சாந்­தி­ய­ளிப்­ப­தற்­காக தாக­சாந்தி நிலை­ய­மொன்றை அமைப்­ப­தற்­காக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த வேளையில் அவ்­வி­டத்­திற்கு இரா­ணு­வத்­தினர் வருகை தந்­துள்­ளனர்.

'நீங்கள் இவ்­வி­டத்தில் எதுவும் செய்ய முடி­யாது. உங்­க­ளு­டைய இடங்­களை பார்­வை­யிட்டு விட்­டீர்கள் என்றால் இங்­கி­ருந்து செல்­லுங்கள் என்று இரா­ணு­வத்­தினர் கூறி­யுள்­ளனர். இந்த சந்­தர்ப்­பத்தில் 'நாங்கள் இங்கு எத­னையும் செய்­ய­வில்லை. எங்­களின் நிலத்தை நீங்கள் தான் வைத்­தி­ருக்­கின்­றீர்கள். அதனை முதலில் விடுங்கள். தற்­போது நாங்கள் கோயி­லுக்கு செல்­ப­வர்­க­ளுக்கு தண்ணீர் வழங்­கு­வ­தற்­கா­கவே இங்கு இருக்­கின்றோம் எனக் கூறி­யுள்­ளனர்.

எனினும் அதனை இரா­ணு­வத்­தினர் ஏற்­றுக்­கொள்­ளாத நிலையில் சம­உ­ரிமை இயக்­கத்தின் குழு­வி­னரில் பௌத்த தேரர் ஒரு­வரும் காணப்­பட்­ட­மை­யினால் அவரைச் சுட்­டிக்­காட்டி, இவ்­வாறு தேரர்கள் ஏனை­ய­வர்­களை கூட்டி இந்த இடத்தில் நீங்கள் ஆர்ப்­பாட்டம் செய்ய முடி­யாது எனக் குறிப்­பிட்­டுள்­ளனர்.

எனினும் பொது­மக்கள் நாங்கள் ஆர்ப்­பாட்டம் செய்­வ­தற்கு வருகை தர­வில்லை என்று திரும்­பத்­தி­ருப்பக் கூறிய போதும் இரா­ணுவம் அதனை ஏற்­றுக்­கொள்ள மறுத்­து­விட்­ட­தோடு ஈற்றில் பாது­காப்பு அமைச்சு இவ்­வீ­தியை மீண்டும் மூடு­மாறு அறி­வித்­துள்­ளது ஆகவே நீங்கள் இங்­கி­ருந்து வெளி­யே­றுங்கள் என அறி­வு­றுத்தல் வழங்­கி­யது.

இத­னைத்­தொ­டர்ந்து பரஸ்­பர வாக்­கு­வா­தத்­திற்கு பின்னர் பொது­மக்­களும், சம­உ­ரிமை இயக்­கத்­தி­னரும் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு பொது­மக்கள் ஏற்­க­னவே இரா­ணுவ முகா­மிற்கு முன்னால் போராட்டம் செய்யும் கூடா­ரப்­ப­கு­தியை அடைந்­தனர்

இச்­சந்­தர்ப்­பத்தில் முல்­லைத்­தீவு மாவட்ட செய­லாளர், ரூப­வதி கேதீஸ்­வரன், முல்­லைத்­தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், வற்­றாப்­பளை அம்மன் ஆலய அறங்­கா­வலர் சபை­யினர் ஆகியோர் அவ்­வி­டத்­திற்கு வருகை தந்து குறித்த பாதையை மீண்டும் திறக்­கு­மாறு கோரிக்கை விடுத்து இரா­ணு­வத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். குறித்த கலந்­து­ரை­யாடல் நிறை­வ­டைந்து வெளி­யே­றிய வேளையில் அவர்­களை இடை­ம­றித்த மக்கள் கடும் தொனியில் வாக்­கு­வா­தப்­பட்­டனர்.

குறிப்­பாக மாவட்ட செய­லா­ளரைப் பார்த்து எங்­க­ளு­டைய சொந்த நிலத்­திற்­காக நாங்கள் நூறு நாட்­க­ளாக போரா­டு­கின்றோம். எனினும் இது­வ­ரையில் எந்த பதிலும் கிடைக்­க­வில்லை. தற்­போது கோயி­லுக்குச் செல்­வ­தற்­கான பாதையை திறக்க கோரியும் தற்­போது வரையில் திறக்­க­வில்­லையே எனக் குறிப்­பிட்­டனர். இச்­சந்­தர்ப்­பத்தில், நான் அரச ஊழியர். பாதையை திறக்­கு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளேன். ஊங்­க­ளது கோரிக்­கை­க­ளையும் அவர்­க­ளி­டத்தில் தெரி­வித்­துள்ளேன். அவர்கள் என்ன பதி­ல­ளிக்­கின்­றார்­களோ அதன் பிர­காரம் நட­டி­வக்கை எடுப்பேன் என்று கூறி­விட்டு அவ்­வி­டத்தை விட்டு அகன்றார்.

அதே­ச­மயம் அவ்­வி­டத்தில் சற்று பதற்­ற­மான நிலைமை ஏற்­பட்­டவும் பொலிஸ் பரி­சோ­தகர் தலை­யீடு செய்து நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்­தி­ருந்தார். எனினும் நேற்­று­மாலை 6.30வரையில் குறித்த பாதை செல்லும் கேப்பாபுலவு இராணுவ முகாமின் பிரதான வயில் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.

இதேநேரம் குறித்த பாதையின் ஊடாக பாத யாத்திரையாக செல்வதற்கு புதுக்குடியிருப்பு, மல்லாவி உட்பட வடமாகாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த அடியவர்கள் ஏமாற்றத்துடன் அவ்விடத்திலிருந்து திரும்பிச் சென்று சுமார் பத்துக் கிலோமீற்றருக்கும் அதிகமாக தூரம் கொண்ட கற்களும் முட்களும் நிறைந்த பிறிதொரு காட்டுப்பாதையின் ஊடாக தமது யாத்திரையை தொடர்ந்தனர்.

அவ்வாறு யாத்திரையை தொடர்ந்த அடியவர்கள் பலரின் கால்களில் கற்களும் முட்களும் குற்றி இரத்தக்கசிவுடனும் வயதானவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தமது யாத்திரையை கைவிடாது தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.