Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு

Featured Replies

வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு

 

 

வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளுக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அண்மையில் நியமிக்கப்பட்டது.

சட்ட மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமித்தார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர், ஆகியோர் கொண்ட குழாம் இதற்காக நியமிக்கப்பட்டது.

மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சந்தேகநபர் அரச தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், யாழ். மேல்நீதிமன்றத்தில் நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு பகுதியில் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

http://newsfirst.lk/tamil/2017/06/வித்தியா-படுகொலை-வழக்கு/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பம்.

GTN-special_CI.jpg
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையில் சற்று முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.
 
அதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
 
அதனை தொடர்ந்து ஐந்தாம் எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் மன்றில் முன்னிலையானர் ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலை ஆகாத காரணத்தால் அது தொடர்பில் கலந்தலோசிக்க பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் கால அவகாசம் கோரியதை அடுத்து 15 நிமிடங்கள் மன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/29502

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

judge.jpg

 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையிலான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.

அதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28ஆம்,  29ஆம், 30ஆம்,  3ஆம் , 4ஆம் , மற்றும்  5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

http://globaltamilnews.net/archives/29551

  • தொடங்கியவர்

இணைப்பு2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள். 37 சாட்சியங்கள்.

jaffna-court.jpg
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயலட் பார் தீர்ப்பாயம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் கூடியது.
 
எதிரிகள் முன்னிலை. 
 
அதன் போது எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஐந்தாவது எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் முன்னிலையாகி இருந்தார். ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகவில்லை.
 
சட்டத்தரணிகள் முன்வரவில்லை.
 
அது தொடர்பில் நீதிபதிகள் எதிரிகளிடம் வினாவிய போது தமக்காக சட்டத்தரணிகள் முன்னிலையாக முன் வருகின்றார்கள் இல்லை என தெரிவித்தனர்.
 
எதிரிகளின் சட்டத்தரணி விலகினார். 
 
அதன் போது நீதிபதிகள் கடந்த காலங்களில் 4 ஆம்,  7ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம இந்த தவணை ஏன் ஆஜராகவில்லை என  வினாவினார்கள். அதன் போது 4 எதிரியின் மனைவி , தாம் சட்டத்தரணியிடம் கேட்ட போது இந்த வழக்குக்கு வேறு சட்டத்தரணிகள் ஆஜராக முன் வரவில்லை. நான் தனியாக இந்த வழக்கிற்காக வாதாட முடியவில்லை என அவர் பின் நிற்கின்றார் என மன்றில் தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து நீதிபதிகள் எதிரிகளிடம் உங்களுக்கு அரச செலவில் மன்றினால் சட்டத்தரணியை ஒழுங்கமைத்து தரவா? என வினாவிய போது அதற்கு எதிரிகள் ஒன்பது பேரும் சம்மதித்தார்கள்.
 
15 நிமிடம் ஒத்திவைப்பு. 
 
அதனை அடுத்து பிரதி சொலிஸ்டார் ஜெனரல் குமார் இரட்ணம் , எதிரிகளுக்கான சட்டத்தரணிகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட கால அவகாசம் கொடுக்குமுகமாக நீதிமன்ற அமர்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கபப்ட்டன.
 
எதிரிகள் தரப்பில் சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
அதன் பின்னர் மீண்டும் நீதிமன்ற அமர்வு ஆரம்பமான போது , 1ஆம் , 2ஆம் , 3ஆம், மற்றும் 5ஆம் எதிரிகள் சார்பில் தான் முன்னிலையாவதாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் தெரிவித்தார். அதேவேளை 4ஆம் , 6ஆம் , 7ஆம் , 8ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் தான் முன்னிலையாவதாக சட்டத்தரணி எஸ். கேதீஸ்வரன் மன்றில் தெரிவித்தார். ஒன்பது எதிரிகளுக்கு அரச செலவில் சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தா மன்றினால் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் சார்பில் சட்டத்தரணி ரஞ்சித்குமார் முன்னிலையாவதாக மன்றில் தெரிவித்தார்.
 
எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள். 
 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்றில் ஆரம்பமானது, அதன் போது குற்றப்பத்திரிக்கை தனித்தனியாக எதிரிகள் ஒன்பது பேருக்கும் கையளிக்கப்பட்டது.  அதையடுத்து எதிரிகளுக்கு எதிராக கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை , இக் குற்றங்களுக்கு திட்டம் தீட்டியமை , உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 41 குற்றங்கள் சுமத்தப்பட்டு எதிரிகளுக்கு திறந்த நீதிமன்றில் தமிழ் மொழியில் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் போது எதிரிகள் தம் மீதான 41 குற்றசாட்டையும் மறுத்து தாம் சுற்றவாளி என மறுரைத்தனர்.
 
கடத்தல் , பாலியல் வன்புணர்வு , கொலை உள்ளிட்ட குற்ற சாட்டுக்கள் 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 5ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் மீது சுமத்தப்பட்டன. ஏனைய 4ஆம் , 7ஆம் 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் மீது இக் குற்றத்திற்கு திட்டம் தீட்டியமை , குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளான.
 
சிங்கள மொழியில் உள்ள ஆவணங்கள் தமிழுக்கு மொழி பெயர்ப்பு. 
 
அதனை அடுத்து வழக்கேடுகளில் சில வாக்கு மூலங்கள் ஆவணங்கள் சிங்கள மொழியில் உள்ளது. அவற்றினை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து தர வேண்டும் என எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை அடுத்து சிங்கள மொழியில் உள்ள அனைத்து ஆவணங்கள் , வாக்கு மூலங்களையும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறும் அன்றைய தினத்திற்கு பின்னர் பதிவாளரிடம் சட்டத்தரணிகள் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என மன்று அறிவுறுத்தியது.
 
சான்று பொருட்களை பாரப்படுத்த பணிப்பு. 
 
அதவேளை  மாணவி படுகொலை வழக்கு தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் உள்ள சான்று பொருட்களை மேல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு மன்று பணித்தது.
 
ஆறு நாட்களுக்கு தொடர் விசாரணை. 
 
வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் , 29ஆம் , 30ஆம் , 3ஆம் , 4ஆம் , மற்றும் 5ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடாத்தப்பட்டும் என மன்று அறிவித்தது.
 
37 சாட்சியங்கள். 
 
அதேவேளை குறித்த வழக்கின் ஒன்று தொடக்கம் 37 வரையிலான சாட்சியங்களை எதிர்வரும் 28ஆம் திகதி ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்பாக முன்னிலை ஆக வேண்டும் என சாட்சியங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
 
5ஆவது சாட்சியத்தை மன்றில் முற்படுத்த உத்தரவு. 
 
இந்த வழக்கின் 5ஆவது சாட்சியமும் , அரச சாட்சியுமான  உதயசூரியன் சுரேஷ்கரன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அவரையும் 28ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு நீதிபதிகள் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டனர்.
 
எதிரிகளை யாழ்ப்பான சிறைக்கு மாற்ற கோரிக்கை. 
 
எதிரிகள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் , தமது தரப்பினர் வவுனியா சிறைச்சாலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையால் விசாரணைக்கு தேவையான சில தகவல்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே அவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யுமாறு மன்றில் விண்ணப்பம் செய்தார்.
 
வழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு. 
 
அதற்கு நீதிபதிகள் , அரச சாட்சியான உதயசூரியன் சுரேஷ்கரன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நேரத்தில் எதிரிகளையும் யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்க முடியாது 28ஆம் திகதி வழக்கு விசாரணையின் போது அது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
 
கண்ணீர் விட்டழுத தாய். 
 
மாணவி கொலை தொடர்பில் எதிரிகளுக்கு குற்றப்பத்திரிகை திறந்த மன்றில் வாசித்து காட்டிய வேளை திறந்த மன்றில் இருந்த மாணவியின் தாயார் கண்ணீர் விட்டழுதார்.
 
மாணவி குடும்பம் சார்பில் சட்டத்தரணி ஒருவரே முன்னிலை. 
 
யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்ப்பாண சட்டத்தரணிகள் மாணவியின் கொலைக்கு நீதிவேண்டி மாணவியின் குடும்பத்திற்கு சார்பாக நீதிமன்றில் முன்னிலை ஆவோம் என தெரிவித்து இருந்தனர்.
 
கடந்த 2 வருடகாலமாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சில சட்டத்தரணிகளே மாணவியின் குடும்பத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
 
அந்நிலையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறைமையில் மாணவி கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மாணவியின் குடும்பம் சார்பில் சட்டத்தரணி பா. ரஞ்சித்குமார் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.
 Jun 12, 2017 @ 09:55

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையிலான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.

அதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கு தொடுனர்கள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி வழக்குறைஞர் எஸ்.குமாரரத்தினம் எதிரிகள் மேலான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் வழக்கின் 37 சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை மற்றும் சான்றுப்பொருட்களின் அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்தார்

கடத்தியமை வன்புணர்வு செய்தமை கொலை செய்தமை மற்றும் மேற்படி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அடங்கிய 41 குற்றச்சாட்டுக்களும் மன்றில் எதிரிகளுக்கு வாசிக்கப்பட்டதுடன் சகல குற்றச்சாட்டுக்களையும் ஒன்பது எதிரிகளும் மறுப்பதாக மன்றில் தெரிவித்தனர்

அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28ஆம்,  29ஆம், 30ஆம்,  3ஆம் , 4ஆம் , மற்றும்  5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

http://globaltamilnews.net/archives/29551

  • தொடங்கியவர்

வித்­தியா பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கு : ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் குற்­றப்­பத்­தி­ரிகை சமர்ப்­பிப்பு

Published by RasmilaD on 2017-06-13 09:39:58

 

புங்­கு­டு­தீவு வித்­தியா பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கினை விசா­ரணை செய்­வ­தற்­காக முதன் முறை­யாக மூன்று தமிழ் நீதி­ப­தி­களை உள்­ள­டக்கி அமைக்­கப்­பட்ட ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் இவ் வழக்கின்  ஒன்­பது சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் எதி­ராக 41 குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய குற்­றப்­ப­கிர்வு பத்­திரம், சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்­ணத்­தினால் தாக்கல் செய்­யப்­பட்­டது.

Image result for வித்­தியா virakesari

மாண­வியின் வழக்கு விசா­ரணை இம்­மாதம் 28ஆம் திகதி முதல் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்றும் ட்ரயல் அட்பார்  நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. அத்­துடன் அன்­றைய தினம் யாழ்ப்­பாணம் மற்றும் அநு­ரா­த­புரம் சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­கர்­க­ளையும் மன்றில் முன்­னி­லை­யா­கு­மாறும் ட்ரயல் அட்பார்  நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு (2015.05.13) முன்பு புங்­கு­டு­தீவு பகு­தியில் பாட­சாலை சென்ற மாணவி வித்­தியா  சிலரால் கடத்தி செல்­லப்­பட்டு கூட்டு பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் படு­கொலை செய்­யப்­பட்டார். இச் சம்­பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக  ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற வழக்கு விசா­ரணை  முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன.  அவ் வழக்கின் ஆவ­ணங்கள் விசா­ரணை  அறிக்­கைகள் அனைத்தும் சட்­டமா அதி­ப­ருக்கு சமர்­பிக்­கப்­பட்­டது.

இதனை தொடர்ந்து சட்­டமா அதிபர் இவ் வழக்­கினை, ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தது போன்று மூன்று நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார்  நீதி­மன்றில் விசா­ரணை செய்­வ­தற்­காக மூன்று நீதி­ப­தி­களை நிய­மிக்­கு­மாறு பிர­தம நீதி­ய­ர­சரை கோரி­யி­ருந்தார். இதன்­போது இவ் வழக்கை கொழும்பு மேல் நீதி­மன்­றுக்கு மாற்­று­வ­தற்கு  முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டது. எனினும் சட்­டமா அதிபர் பிர­தம நீதி­ய­ர­சரை நேர­டி­யாக சந்­தித்து இவ் வழக்கு யாழ்.மேல் நீதி­மன்றில் நடாத்­து­வ­தற்கே நியா­யா­திக்கம் உண்­டென்­பதை கூறி அதற்கு மூன்று நீதி­ப­தி­களை நிய­மிக்­கு­மாறும் கோரி­யி­ருந்தார்.

இதன்­படி பிர­தம நீதி­ய­ரசர், வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பால­சிங்கம் சசி­ம­கேந்­திரன்  தலை­மையில் திரு­கோ­ண­மலை  மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிறேம்­சங்கர்,  யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகம் இளஞ்­செ­ழியன், ஆகிய மூன்று தமிழ் நீதி­ப­தி­களை இவ் வழக்கை விசா­ரணை செய்­வ­தற்­கான ட்ரயல் அட்பார் நீதி­மன்­றுக்கு நிய­மித்தார்.

இவ்­வாறு மூன்று தமிழ் நீதி­ப­திகள் ட்ரயல் அட்பார் நீதி­மன்­றுக்கு நிய­மிக்­கப்­ப­டு­வ­தா­னது இதுவே முதல் தடவை என்­ப­துடன் வடக்கில் இடம்­பெறும் முத­லா­வது ட்ரயல் அட்பார் நீதி விசா­ர­ணையும் இது­வாகும். இந்­நி­லையில் இவ் மூவர் அடங்­கிய விஷேட ட்ரயல் அட்பார் நீதி­மன்­றா­னது வித்­தியா வழக்கின் முத­லா­வது திறந்த நீதி­மன்ற விசா­ர­ணையை நேற்று நாடாத்­தி­யி­ருந்­தது. 

இதன்­போது இவ் வழக்கை அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­ஸிட்டர் ஜெரல் குமார்­ரட்ணம் நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

15 நிமிடம் ஒத்­தி­வைக்­கப்­பட்ட வழக்கு நவ­டிக்கை.

வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மா­ன­போது, மன்றில் முத­லி­யாரால் வழக்கின் இலக்கம் எதி­ரி­களின் பெயர்  வாசிக்­கப்­பட்டு எதி­ரி­க­ளாக குறிப்­பி­டப்­பட்ட ஒன்­பது எதி­ரி­களும் எதிரி கூண்டில் நிறுத்­தப்­பட்­டனர். இதன்­போது மன்­றா­னது எதி­ரி­க­ளிடம் உங்கள் சார்பில் முன்­னி­லை­யாக சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளார்­களா என வின­வி­யது. இதற்கு 1ஆம் 2ஆம் 3ஆம் 6ஆம் 8ஆம் சந­தே­க­ந­பர்கள் தமக்கு சட்­டத்­த­ர­ணிகள் எவரும் இல்லை என தெரி­வித்­தனர். அதே­போன்று 4ஆம் 7ஆம் 9ஆம் சந்­தே­க­ந­பர்கள் தமக்கு சட்­டத்­த­ரணி சரத்­வல்­க­மகே  முன்­னி­லை­யா­வ­தாக கூறி­யி­ருந்­த­தா­கவும் ஆனால் இன்று மன்­றுக்கு வர­வில்லை எனவும் தெரி­வித்­தனர். அத்­துடன் 5ஆவது சந்­தே­க­நபர் சார்­பாக சட்­டத்­த­ரணி ஆறு­முகம் ரகு­பதி முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

இதனை தொடர்ந்து மன்­றா­னது தமக்­கான சட்­டத்­த­ர­ணிகள் இல்­லாத சந்­தே­க­ந­பர்­க­ளி­டமும், சட்­டத்­த­ரணி சமூகம் தராத சந்­தே­க­ந­பர்­க­ளி­டமும், அரச செலவில் சட்­டத்­த­ரணி நிய­மிக்க வேண்­டுமா என வினா­வி­யி­ருந்­தது. இதற்கு சந்­தே­க­ந­பர்கள் சம்­மதம் தெரி­வித்­த­தை­ய­டுத்து அது தொடர்­பாக ஆலோ­சனை செய்­வ­தற்­கான வழக்கு நட­வ­டிக்கை 15 நிமி­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மீள விசா­ரணை ஆரம்பம்

15 நிமிட ஒத்­தி­வைப்­பிற்கு பின்னர் மீளவும் வழக்கு விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது மன்­றா­னது ஒன்­பது சந்­தே­க­ந­பர்கள் சார்­பிலும் சட்­டத்­த­ரணி விக்­ன­ராஜா ஜயந்­தனை அரச செலவில் நிய­மித்­தி­ருந்­தது. எனினும் 15 நிமிட ஒத்­தி­வைப்பின் போது  4ஆம்,6ஆம்,7ஆம்,8ஆம்,9ஆம் சந்­தேக நபர்கள்   தமக்­காக சட்­ட­த­ரணி சின்­ன­ராஜா கேதீஸ்­வ­ரனை நிய­மித்­தனர்.  அதே­போன்று சட்­டத்­த­ரணி ஆறு­முகம் ரகு­நாதன் 1ஆம்,2ஆம்,3ஆம்,5ஆம் சந்­தே­க­ந­பர்கள் சார்­பாக தாம் முன்­னி­லை­யா­கு­வ­தாக தெரி­வித்தார்.

இவை தொடர்பில் ட்ரயல் அட்பார்  நீதி­மன்ற தலைமை நீதி­பதி பால­சிங்கம் சசி­ம­கேந்­திரன் கூறு­கையில், இவ் வழக்கின் விசா­ர­ணை­க­ளா­னது தொடர்ச்­சி­யாக இடம்­பெறும். சட்­டத்­த­ர­ணிகள் வர­வில்லை என்­ப­தற்­காக இடை நிறுத்­தப்­ப­டாது. மன்றால் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ர­ணி­யுடன் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் என தெரி­வித்தார்.

குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல்.

இதனை தொடர்ந்து சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொசிட்டர்  ஜெனரல் குமார்­ரட்ணம், சட்­டமா அதி­பரால் பதி­வா­ள­ருக்கு அனுப்­பட்­டுள்ள குறித்த வழக்­கா­னது யூரர் சபை­யற்ற மூன்று நீதி­ப­திகள் குழாம் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தற்­காக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் குறித்த ஒன்­பது சந்­தே­க­ந­பர்­க­ளுக்கும் எதி­ராக மொத்­த­மாக 41 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன  எனக் குறிப்­பிட்டு குற்­றப்­ப­கிர்வு பத்­தி­ரங்கள் அத­னு­ட­னான ஆவ­ணங்கள் மற்றும் சான்று பொருள் பட்­டியல் ஆகி­ய­வற்றை மன்றில் சமர்­பித்தார்.

குற்­றப்­ப­கிர்வு பத்­திரம் வாசித்து காட்­டப்­படல்.

பிரதி சொலிஸ்ட்டர் ஜென­ரலால் ட்ரயல் அட்பார்  மன்றில் சமர்­பிக்­கப்­பட்ட  குற்­றச்­சாட்டு பத்­தி­ரங்­க­ளா­னது சந்­தே­க­ந­பர்கள் ஒவ்­வொ­ருக்கும் தனித்­த­னி­யாக வழங்­கப்­பட்­ட­துடன் அவற்­றி­லுள்ள குற்­ற­ச­சாட்­டுக்கள் ஒவ்­வொன்­றாக சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு தமிழ் மொழியில் வாசித்து காட்­டப்­பட்­டது. இதன்­போது சந்­தே­க­ந­பர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தம் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் ஒவ்­வொன்­றுக்கும் தாம் சுற்­ற­வா­ளிகள் என மன்­று­ரைத்­தனர்.

சான்­று­பொருள் திருத்தம்.

இவ் வழக்கை நெறிப்­ப­டுத்தும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்­டணம் இவ் வழக்கின் சாட்சிப் பட்­டி­யலில் 17ஆவது சாட்­சி­யத்தை அணைக்­க­வில்லை என்றும் அதனை நீக்­கு­வ­தற்கு மன்றின் அனு­ம­தியை கோரி விண்­ணப்­ப­மொன்றை செய்தார். அதற்கு மன்­றா­னது அனு­ம­தி­ய­ளித்­தது. அதே­போன்று இவ் வழக்கின் 6 ஆவது சந்­தே­க­நபர் 2015.05.13அன்று வேலணை பிர­தேச சபையில் சமு­க­ம­ளித்­தமை தொடர்­பான வரவு புத்­தகம் தொடர்­பான சாட்­சி­யத்தில் மாற்றம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என மன்­றிடம் கோரி­ய­தற்கு மன்­றா­னது அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­தது.

தொடர்ந்து மன்­றா­னது குறித்த வழக்கு தொடர்­பாக ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற வழக்கின் கீழான சான்­று­பொ­ருட்­களை பெற்­றுக்­கொள்ள பதி­வா­ள­ருக்கு பணிப்­புரை பிறப்­பித்­தது. 

வழக்கு ஆரம்பம் தொடர்­பான மன்றின் கட்­டளை.

இவற்றை தொடர்ந்து குறித்த வழக்கு நட­வ­டிக்­கையை தொடர்ச்­சி­யான வழக்கு விசா­ர­ணை­யாக நடாத்­து­வ­தற்­காக மன்­றா­னது சாட்சிப் பதி­விற்­கான திக­தி­களை குறிப்­பிட்டு கட்­ட­ளை­யொன்றை பிறப்­பித்­தது. இதன்­படி குறித்த வழக்­கா­னது இம் மாதம் 28ஆம் திகதி முதல் 29, 30, எதிர்­வரும் மாதம் 3,4,5 ஆகிய திக­தி­களில் தொடர்ச்­சி­யான வழக்கு விசா­ர­ணை­யாக நடாத்த ட்ரயல் அட்பார் நீதி­மன்று கட்­டளை பிறப்­பித்­தது. அத்­துடன் இவ் வழக்கின் சில முக்­கிய சாட்­சிகள் சிங்­கள மொழியில் உள்­ள­தானால் அவற்றை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்­ப­தற்கு மன்­றிடம் கால அவ­காசம் கோரி­யதை மன்­றா­னது  அதனை கவ­னத்தில் எடுத்து அவ் மொழி மாற்றம் செய்­யப்­பட்ட ஆவ­ணங்­களை இம் மாதம் 20ஆம் திக­திக்கு முன்­ப­தாக யாழ்.மேல் நீதி­மன்ற ட்ரயல் அட்பார் பதி­வா­ள­ரிடம் ஒப்­ப­டைக்க உத்­த­ர­விட்­டது.

பிரதி சொலி­சிட்டர் ஜென­ரலின் விண்­ணப்பம்.

இதன்­போது பிரதி சொலி­சிட்டர்  ஜெனரல்  இவ் வழக்கின் சாட்சிப் பட்­டி­யலில் 5ஆவது சாட்­சி­யாக உள்ள உத­ய­சூ­ரியன் சுரேஸ்­கரன் சட்­டமா அதி­ப­ரது உறு­தி­மொ­ழியின் பிர­காரம் பொது மன்­னிப்­ப­ளிக்­கப்­பட்டு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்ற கட்­ட­ளையின் பிர­காரம் யாழ்.சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். எனவே அவரை எதிர்­வரும் 28ஆம் திகதி மன்றில் முற்­ப­டுத்த கட்­ட­ளை­யொன்றை பிறப்­பிக்­கு­மாறு மன்றை கோரினார்.

இதற்கு மன்­றா­னது குறித்த சாட்­சிக்கு அழைப்­பா­ணையை சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர் ஊடாக அனுப்பி அவரை மன்றில் எதிர்­வரும் 28ஆம் திகதி முற்­ப­டுத்த கட்­டளை பிறப்­பித்­தது. மேலும் குறித்த ஒன்­பது சந்­தே­க­ந­பர்­களும் இனி ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் முற்­ப­டுத்த தேவை­யில்லை என்றும் அவ் ஒன்­பது பேரையும் யாழ்.மேல் நீதி­மன்றில் இவ் வழக்கை விசா­ரணை செய்ய உரு­வாக்­கப்­பட்­டுள்ள மூன்று மேல் நீதி­மன்ற நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்­றி­லேயே முற்­ப­டுத்த வேண்டும் என்றும்,  கட்­ட­ளையை ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற பதி­வா­ள­ருக்கு அனுப்பி வைக்­கவும் மன்­றா­னது உத்­த­ர­விட்­டது.

சந்­தே­க­நபர் சார்பு சட்­டத்­த­ர­ணியின் விண்­ணப்பம்.

இதே­வேளை குறித்த வழக்கின் 1ஆம்,2ஆம்,3ஆம்,5ஆம் சந்­தே­க­ந­பர்கள் சார்­பாக முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி ஆ.ரகு­பதி இவ் வழக்கின் சந்­தே­க­ந­பர்கள் தற்­போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதனால்  எமது வழக்கு தொடர்பாக தகவல்களை எமது சார்பு சந்தேகநபர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவது கடினமாகவுள்ளது. எனவே அவர்களை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என மன்றை கோரியிருந்தார்.

இது தொடர்பாக மன்றானது சிறைச்சாலை அதிகாரிகளை வினவியிருந்தது.அதற்கு சிறைச்சாலை அதிகாரி குறித்த மாணவியின் கொலை சம்பவம் இடம்பெற்ற பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலைமையால் பாதுகாப்பு கருதியே வவுனியா சிறைச்சாலைக்கு சந்தேகநபர்களை  மாற்றியதாகவும் அதன் பாதுகாப்பு பொறுப்பை அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து மன்றானது, குறித்த விடயம் தொடர்பாக நிலமைகளை ஆராய்வதற்கு வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகரையும், அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரையும் எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டது. அத்துடன் இவ் வழக்கின் சந்தேகநபர்களான ஒன்பது நபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கவும் மூன்று தமிழ் நீதிபதிகள் அடங்கிய விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

http://www.virakesari.lk/article/20835

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.