Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்ப்பிணிப் பெண் கொலை சாட்சிக்கு ரூபா 5 இலட்சம் தருவதாக சந்தேகநபர்கள் பேரம் பேசினார்களா?

Featured Replies

 
கர்ப்பிணிப் பெண் கொலை  சாட்சிக்கு ரூபா 5 இலட்சம் தருவதாக சந்தேகநபர்கள் பேரம் பேசினார்களா?

 

 

 

ஊர்­கா­வற்­றுறை கர்ப்­பிணிப் பெண் படு­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­பர்­கள், அடை­யாள அணி­வ­குப்­பில் தங்­களை அடை­யா­ளம் காட்­டா­து­விட்­டால் 5 இலட்­சம் ரூபா பணம் வழங்­கு­வோம் என்று பேரம் பேசி­யமை தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்கை முன்­வைக்­கு­மாறு நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லை­யில் இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

வழக்­கின் கண்­கண்ட சாட்­சி­ய­மாக உள்ள வாய் பேச முடி­யாத சிறு­வன் தம்மை அடை­யா­ளம் காட்­டாது விட்­டால் அந்த சிறு­வ­னின் குடும்­பத்­துக்கு 5 இலட்­சம் ரூபா பணம் தரு­வோம் என்று சந்­தே­க­ந­பர்­கள் கூறி­ய­தாக பாதிக்­கப்­பட்டோர் நலன்­சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி நீதி­வா­னின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தார்.

“சிறு­வ­னின் உறவு முறையை சேர்ந்த ஒரு­வர் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்டு உள்­ளார். அதனை அறிந்த சந்­தே­க­ ந­பர்­கள் சிறு­வ­னின் உற­வுக்­கா­ர­ரு­டன் பேரம் பேசி­யுள்­ள­னர். அவர் அதனை சிறு­வ­னின் தாயா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார்” என்று பாதிக்­கப்­பட்­டோர் நலன்­சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி மன்­றில் தெரி­வித்­தார்.

அதனை அடுத்து பேரம் பேசப்­பட்ட சிறு­வ­னின் உற­வுக்­கா­ரி­டம் பொலி­ஸார் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்து அது தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­ மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

ஊர்­கா­வற்­றுறை கர்ப்­பி­ணிப் பெண் படு­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­பர்­க­ளான சகோ­தரர்­கள் இரு­வ­ரின் விளக்­க­ம­றி­யல் எதிர்­வ­ரும் 17ஆம் திகதி வரை நீதி­வான் மன்று நீடித்­தது. 

http://onlineuthayan.com/news/26623

  • கருத்துக்கள உறவுகள்

அட கொக்கா மக்கா என்னடா கதை அப்படி போகுது எண்டால் இதுவா நடக்குது மாக்களே கவனம் ஒரு நீதிமன்ற உத்தியோகத்தர் மனைவி அதுவும் நிறைமாத கர்ப்பிணி யாழில் கொலை அந்த கொலை சாட்சிகள் இப்படி

எவராவது யாழில் சுமூக நிலை என்று வெள்ளை வாளியுடன் வரட்டுக்கும் ....................

கர்ப்பிணிப்பெண்கொலை, 5இலட்சம் தருவதாக பேரம்?

கர்ப்பிணிப்பெண்கொலை, 5இலட்சம் தருவதாக பேரம்?

 

ஊர்காவற்துறை கர்ப்பிணிப்பெண் படுகொலை வழக்கில், சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பின்போது தம்மை அடையாளம் காட்டாது விட்டால் 5இலட்சம் தருவதாக வாய்பேசமுடியாத சிறிவனின் தாயாரிடம் பேரம்பேசப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லை­யில் இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

குறித்த வழக்கின் கண்கண்ட சாட்சியான வாய்பேசமுடியாத சிறுவன் அடையாள அணிவகுப்பின்போது தம்மை அடையாளம் காட்டாதுவிட்டால் தாம் சிறுவனின் குடும்பத்துக்கு 5இலட்சம் ரூபா தருவதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

குறித்த சிறுவனின் உறவினர் ஒருவர் சிறையில் உள்ளதாகவும், இதனையறிந்த சந்தேகநபர்கள் அந்த உறவுக்காரரிடம் பேரம்பேசியுள்ளனர். அதனை அவர் சிறுவனின் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார் எனவும் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து, சிறுவனின் உறவுக் காரரிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்து விசாரணையை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், வழக்கினை எதிர்வரும் 17ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

http://thuliyam.com/?p=70837

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.