Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்

Featured Replies

முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்

Published by RasmilaD on 2017-06-19 12:33:29

 

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

unnamed__1_.jpg

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

unnamed__1_.png

சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, திடீரென அப்பகுதிக்குச் சென்ற முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

unnamed__2_.jpg

குறித்த மோதலை தற்போது பொலிஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் முதலமைச்சரின் ஆதரவாளர்களை அவ்விடத்திலிருந்து அகற்றியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

unnamed__2_.png

எனினும் தற்போதும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலைமைகளையடுத்து, வவுனியாவில் சற்று பற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

unnamed__3_.jpg

 

 

Tags

http://www.virakesari.lk/article/21031

  • தொடங்கியவர்

வடக்கு சுகாதார அமைச்சரின் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கைகலப்பு! – காணொலி

 

வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு ஆதரவாக வவுனியாவில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மு.ப. 10.30 மணியளசில் வடக்கு மாகாண மாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த இடத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் சென்றனர்.

இருதரப்பினருக்கும் இடையே வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. கைகலப்பாக அது மாறியது. பொலிஸாரின் தலையீட்டை அடுத்து சுமுக நிலைமை ஏற்படுத்ததப்பட்டது.

இரு தரப்பினர்களின் ஆதரவாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

DSC_0338.jpg

 

DSC_0346.jpg

http://uthayandaily.com/story/7315.html

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் நடந்திருந்தால் அதனைமக்கள் முன் பகிரங்கப்படுத்த வேண்டியது மாகாண சபையின் கடமை.  இதுவரை மக்களுக்கு ஏன் இவர்கள் அடிபடுகிறார்களென்பது தெரியாது..  அது பற்றி விவரமாகத் தெரிந்தால் மக்களே சரியான முடிவுகளையெடுப்பார்கள்.

மாவீரர்களை தற்கொலை செய்துகொள்ளச் சொல்லுங்கள்…! – மனோகணேசன்

 

17862609_10206514718105867_5576789749119

 

இன்று வவுனியாவில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆதரவாளர்களுக்குமிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று கைகலப்பில் முடிவடைந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,

“சிங்கள” பொலிஸ் என்று சொல்லி ஸ்ரீலங்கா காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த காலம் மாறி, இப்போ இரண்டு தமிழ் தரப்புகள் ஏட்டிக்கு போட்டியாக ஆர்ப்பாட்டம் செய்து சண்டையிட, அதில் “சிங்கள” பொலிஸ் தலையிட்டு, சிங்களத்தில் பேசி சண்டையை விலக்குகிறது. ஆஹா…!

இதுதான் முன்னேற்றமோ…?

“மாவீரர்கள்” என்று “யாரோ” இருந்தார்களே..! அவர்களை தட்டி எழுப்பி, மீண்டும் பிறந்து வந்து, தற்கொலை செய்துக்கொள்ள சொல்லுங்கள்..!

http://www.quicknewstamil.com/2017/06/19/மாவீரர்களை-தற்கொலை-செய்த/

Edited by Athavan CH

சத்தியலிங்கத்தின் ஊழல்களை ஆர்ப்பாட்டங்கள் மூலம் மறைக்க முடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.