Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோர் அலுவலக சட்டமூலம் நிறைவேறியது

Featured Replies

காணாமற்போனோர் அலுவலக சட்டமூலம் நிறைவேறியது
 

image_fc51cf7f57.jpgகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (21) நிறைவேறியது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமற்போனோர்-அலுவலக-சட்டமூலம்-நிறைவேறியது/175-199139

காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக செயற்பட வேண்டும் என பிரதமர்  தெரிவிப்பு

 


காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக செயற்பட வேண்டும் என பிரதமர்  தெரிவிப்பு
 

காணாமல் போனவர்களின் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என இதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும், தேசிய தைப்பொங்கல் நிகழ்விலும் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக செயற்பட வேண்டும் என்று கூறினார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை அமைப்பதற்கான திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

 

http://newsfirst.lk/tamil/2017/06/காணாமற்போனவர்கள்-தொடர்-6/

உப்புச் சப்பில்லாத சட்டமூலம்!
இந்த அலுவலகத்தால் சட்டரீதியாக எந்தவொரு நீதியையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது.

போர்க்குற்றங்கள் செய்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளை காப்பாற்ற இந்த சட்டமூலம் உதவும்!

போர்க்குற்றங்கள் செய்த சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளை காப்பாற்ற உதவிவரும் சம்பந்தன்-சுமந்திரன் கும்பலின் அனுசரணையுடன் தமிழருக்கு குழிபறிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

காணாமல்போனோர் குறித்த அலு­வ­ல­கத்­தி­னூ­டாக பாதிக்கப்பட்டோரின் காயங்களை ஆற்றுவதற்கு நடவடிக்கை

raaa-baadacbdaf8e2a5586d6739dcefd195f5ab59ebb.jpg

 

தாமதப்படுத்த முடியாது என்கிறார் பிரதமர் ரணில் 
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­ல­கத்தின் ஊடாக யுத்­தத்தின் போது காணாமல்போனோர் நிலை­மையை தேடி பார்ப்­பதே பிர­தான கட­மை­யாகும். அதனை தவிர வேறு எந்­த­வொரு அதி­கா­ரமும் குறித்த அலு­வ­லகத்­திற்கு இல்லை. இந்த அலு­வ­ல­கத்தை நிறு­வி­ய­மையின் ஊடாக யாருக்கு எதி­ரா­கவும் வழக்கு தொடர மாட்டோம். மேலும் இதன்­மூலம் யுத்த குற்ற விசா­ர­ணையும்

 முன்­னெ­டுக்­கப்­ப­டாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் நிறு­வுதல் , பணி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான திருத்­தச்­சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­ய­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

 காணாமல் போனோர் தொடர்­பான காரி­யா­லயம் குறித்த சட்­ட­மூ­லத்தை திருத்தம் செய்­துள்ளோம். இதன்­படி திருத்தம் செய்­யப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அனு­மதி பெறப்­பட்ட பின்­னரே சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் நீண்ட காலம் நடை­பெற்ற யுத்­தத்தின் கார­ண­மாக பலர் காணாமல் போயுள்­ளனர். இதன்­கா­ர­ண­மாக காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் நோக்­கு­டனே காணாமல் போனோவர் பற்றி காரி­யா­ல­யத்தை நிறு­வ­வுள்ளோம். இந்த காரி­யா­ல­யத்தின் பணிகள் தொடர்­பிலும் அதி­காரம் தொடர்­பிலும் பல வித கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

காணாமல் போனோர் குறித்த காரி­யா­ல­யத்தின் ஊடாக யுத்த காலப்­ப­கு­தியின் போதும் அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் காணாமல் போன­வர்கள் தொடர்பில் தேடி பார்க்­கப்­படும். இதுவே பிர­தான கட­மையும் அதி­கா­ரமும் ஆகும். காணாமல் போன­வர்­களை தேடு­வ­தனை தவிர எந்­த­வொரு அதி­கா­ரமும் காணாமல் போனோர் காரி­யா­ல­யத்­திற்கு கிடை­யாது. காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான சாட்­சியை பெற்­றுக்­கொண்டு அதன்­மூலம் காணாமல் போன­வர்கள் எங்கு உள்­ளனர் என்­பது தொடர்பில் தேடப்­படும்.

காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது?. அவர்கள் உயி­ருடன் உள்­ளார்­களா? என்­பது குறித்தே குறித்த காரி­யா­ல­யத்­தினால் ஆரா­யப்­படும். ஒரு சந்­தர்ப்­பத்தில் யுத்­தத்தின் போது காணாமல் போனவர் ஒரு­வரை கண்­டு­பி­டித்த பின்னர் தான் உயி­ரோடு இருப்­ப­தாக உற­வி­ன­ருக்கு கூற வேண்டாம் என்று கூறினால் எக்­கா­ரணம் கொண்டும் அவர்கள் தொடர்­பான விப­ரத்தை உற­வி­னர்­க­ளுக்கு காணாமல் போனோர் அலு­வ­லகம் வெளி­யி­டு­வ­தற்­கான அதி­கா­ரத்தை கொண்­டி­ருக்­க­வில்லை.

சுமார 30 வருட கால யுத்தம் தெற்­கிலும் இருந்­தது. வடக்­கிலும் இருந்­தது. . யுத்­தத்தின் போது காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்­ப­தனை பற்றி மாத்­தி­ரமே நாம் ஆய்வு செய்வோம். அதற்கு மாறாக எக்­கா­ரணம் கொண்டு எவ­ருக்கு எதி­ரா­கவும் வழக்கு தாக்கல் செய்ய மாட்டோம். வழக்கு தாக்கல் செய்­வ­தற்­கான எந்­த­வொரு அதி­கா­ரமும் காணாமல் போனோர் காரி­யா­ல­யத்­திற்கு கிடை­யாது.

யுத்­ததம் கார­ண­மாக தமது உற­வு­களை இழந்­த­வர்­களை கண்டு பேசி­யுள்ளேன். யுத்தம் கார­ண­மாக வடக்கில் வாழும் சாதா­ரண மக்கள் மாத்­திரம் காணாமல் போக­வில்லை. சுமார் 5000 படை­யி­ன­ரையும் காண­வில்லை. ஆகவே அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் நாம் ஆராய வேண்­டி­யுள்­ளது.

எனவே இந்த பிரச்­சி­னையை மேலும் வளர்க்­க­வி­டாமல் உடன் தீர்வு காண வேண்டும். யுத்தம் கார­ண­மாக வடக்­கிலும் தெற்­கிலும் ஏற்­பட்ட காயங்­களை உடன் ஆற்ற வேண்டும். காயங்­களை ஆற்றி கொண்டு ஒரே நாடு என்ற கொள்­கையின் பிர­காரம் வாழ வேண்டும்.

  காணாமல் போன­வர்­க­ளுக்­கான காரி­யா­லயம் நிறு­வி­யமை ஊடாக படை­யி­ன­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­ய­வுள்­ள­தா­கவும் யுத்த குற்ற விசா­ரணை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் கூறு­கின்­றனர். எக்­கா­ரணம் கொண்டு இந்த காரி­யா­ல­யத்தின் ஊடாக யாருக்கு எதி­ரா­கவும் வழக்கு தொடர மாட்டோம். அதே­போன்று யுத்த குற்ற விசா­ர­ணையை முன்­னெ­டுக்க மாட்டோம். . யுத்த குற்ற விசா­ர­ணைக்­காக காரி­யா­லயம் நிறு­வ­வில்லை.

அத்­துடன் நாம் உண்­மையை கண்­ட­றிய வேண்டும். இதற்கு தென் ஆபி­ரிக்­காவின் அனு­ப­வத்தை நாம் பெற­வுள்ளோம். இதன்­படி உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வ‍­நைி­ய­மிக்­க­வுள்ளோம் உண்மை கண்­ட­றிவோம். அதன் பின்னர் தீர்வு காண்போம். முதலில் உண்­மையை கண்­ட­றிய வேண்டும். காணாமல் போன­வர்­களின் உற­வி­ன­ருக்கு தமது உறவுகளை தேடுவதற்கு உரிமை உள்ளது.

புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் செயற்பாடு சீரான முறையில் இயங்கி வருகின்றது. தற்போது இன பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பல விடயஙகள் தொடர்பில் இணக்கத்திற்கு வந்துள்ளோம். மேலும் பல விடயங்களில் இணக்கத்திற்கு வர வேண்டியுள்ளது. ஆகவே நாட்டின் பிரதான பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-22#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இதேட சர்வதேச.. போர்க்குற்ற விசாரணை.. நிறைவடைஞ்சிட்டதா.. சம் சும் மாவை கும்பல்.. ஒரு பெரிய பெருமித அறிக்கை விடும் இருந்து பாருங்க.

மோட்டுச் சிங்களவன் என்று சொல்லிச் சொல்லி.. சொந்த இனத்தை தானே காட்டிக்கொடுத்தும்.. எதிரிக்கு வால் பிடிச்சும்.. சுத்தமாக.. அழிச்சு முடிச்ச... வரலாற்றில்..... முழு மோடன் தமிழன் என்பதை தமிழர்கள் சார்பில் சம் சும் மாவை கும்பல் மிக விரைவில் நிரூபிக்கும்.tw_angry:

இதை எல்லாம் தாண்டி செயற்பட இளைய தலைமுறை.. தமிழர்கள்.. முயற்சிக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.