Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை – விக்கி சந்திப்பு

Featured Replies

மாவை – விக்கி சந்திப்பு

மாவை – விக்கி சந்திப்பு
 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசாவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சற்று முன்னர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின், யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது.

http://uthayandaily.com/story/7939.html

  • தொடங்கியவர்

எதிர்காலத்தில் இணைந்து பயணிப்போம்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்றையதினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

யாழ் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது

இருதரப்பினரும் எதிர்காலத்தில் இணைந்து மாகாணசபையை கொண்டு செல்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்

http://globaltamilnews.net/archives/30866

  • தொடங்கியவர்

மாவை – விக்கி திடீர் சந்திப்பு

மாவை – விக்கி  திடீர் சந்திப்பு

 

 

 

வடக்கு மாகாண சபையின் பரபரப்பான குழப் பங்களுக்குப் பின்னர் நேற்று அதிரடியான- – எதிர்பாராத நிகழ்வு ஒன்று தமிழ் அரசுக் கட்சி யின் மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவை நேற்று மாலை திடீரெனச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

எதிர்காலத்தில் இரு தரப்பும் இணைந்து செல்வது தொடர்பில் சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையில் கடந்த வாரம் குழப்பநிலை தோன்றியிருந்தது.

விசாரணை அறிக்கையில் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்ட அமைச்சர்களை விடுப்பில் செல்லுமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று, குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டது.

இத்தகைய பின்புலத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பமான சந்திப்பு மாலை 6 மணி வரையில் நீடித்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா இருவரும் மாத்திரமே சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் முடிவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பேசியதாகவும், வடக்கு அமைச்சரவை நியமனம் தொடர்பில் பேசியதாகவும் குறிப்பிட்டார்.

சந்திப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

‘எங்கள் மத்தியில் பிளவுகள் இருக்கக் கூடாது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றியின் பின்னர் முதலமைச்சராக விக்னேஸ்வரன் கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கின்றார். மாகாணசபை விடயம் தொடர்பில் பேசினோம். நாம் பிளவுபட்டு நிற்பது எமது இனத்தின் விடிவுக்கு உகந்தது அல்ல.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இரு தரப்பும் இணங்கி ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். எதிர்காலத்தில் இணக்கமாகச் செயற்படுவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த விடயத்தில் தலையிட்டதற்கு அமைவாகவே இந்தப் பேச்சு நடைபெற்றது’ என்று குறிப்பிட்டார்.

http://uthayandaily.com/story/7966.html

  • தொடங்கியவர்

பங்காளிகளுடன் பேசியே அமைச்சர்கள் நியமனம் – மாவை!

 
பங்காளிகளுடன் பேசியே அமைச்சர்கள் நியமனம் – மாவை!
 

வடக்கு மாகாண சபை­யில் வெற்­றி­ட­மா­கி­யுள்ள அமைச்­சுக்­க­ளுக்­கான அமைச்­சர்­கள் நிய­ம­னம் தொடர்­பில் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் மற்­றும் வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் பேச்சு நடத்­தியே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை ­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பு முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் நியமனம் தொடர்பில் சந்திப்பில் பேசப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் இது தொடர்பில் பேசுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றுசேர்ந்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சு நியமனம் தொடர்பில் முடிவு செய்யப்படும் – என்றார்.

http://uthayandaily.com/story/7971.html

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் முட்டி மோதிக் கொண்டு நின்றவர்கள்.இன்று ஒன்றாக நிற்பது தமிழ்மக்களிடம் ஏதோ அரசியல் நாகரிகம் வளர்ச்சி அடைந்து விட்டது என்று பொருள் கிடையாது.மாவை  பெயருக்குத்தான் தமிழரசுக் கட்சியின் தலைவர்.ஆனால் முடிவுகளை எடுக்கக்கூடிய நிலையில் தன்னைக் கட்சியின் சாதாரண உறுப்பினர் என்று கூறிக் கொள்ளும் சம்பந்தரே இருக்கிறார்.சம்பந்தர் இந்தப்பிரச்சினை தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்றே விடயத்தை சுமுகமாக முடிந்திருக்கிறார்.இந்தக் குழப்பங்களின் சூத்திரதாரி சுமத்திரன் கொஞ்சம் அமைதியாக இருக்கிறார்.ருதலைம்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள் வெட்கமில்லாமல் அந்த முதலமைச்சரின் கீழ் அவரை நம்பிக்கை உள்ள தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பது.தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ஆகும்.உண்மையில் அவர்கள் தங்கள் மாகாண சபை உறுப்பினர் பதவியைத் துறந்திருக்க வேண்டும்.இது அவர்கள் முதலமச்சர் மேல் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபித்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

உண்மையில் அவர்கள் தங்கள் மாகாண சபை உறுப்பினர் பதவியைத் துறந்திருக்க வேண்டும்.இது அவர்கள் முதலமச்சர் மேல் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபித்திருக்கின்றது.

நீங்கள் சும்மா பகிடி விடுறீங்கள்.பதவியை துறந்தால் ஊழல் செய்வது எப்படி?:10_wink:டி.பி.எஸ் ஜெயராஜ்யின் அடுத்த கட்டுரை என்ன சொல்லுது என்று பார்த்து கொண்டிருக்கினம்போல....

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட ஊழல் விவகாரம் மாவை.சேனா­தி­ராசா வினுடையது ,  மாவை அரசிடம் இருந்து பணம் பெற்றிருந்தார் இதனை மக்களுக்கு வெளிப்படுத்திருந்தார் முதல்வர்.
பணம் வழங்கிய தரப்பு முதல்வரையைம் அனுகியதாகவும் முதல்வர் மறுத்ததாகவும் , ஆனால் சில த.தே.கூ எம்.பிகள் பணம் வாங்கியதை அறிந்த முதல்வர்  அதனை ஊடகங்களுக்கு தெரிவித்ததாகவும் முன்னர் செய்திகள் வந்திருந்தன , அதிலொருவர் மாவை..., 

“பனம் பொருள் சபை” க்கு உறிய பணத்தினை முன்னைய ஆட்சியன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தடுத்து நிறுத்தியதாகவும்  , அதனைத் தான் இந்த ஆட்சியின் போது பெற்றதாகவும்  மாவை ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பிவிட்டார்.... 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.