Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

ஒரு சர்தார் வாழ்க்கை முழுதும் ஒரு விஷயத்துக்கு விடை தெரியாம வெம்பி வீணாகி......நொந்து நூலாகி.......நைந்து நாராகி செத்துப் போனார்..அது..

என் தங்கச்சிக்கு மட்டும் 3 அண்ணன் இருக்காங்க..

எனக்கு மட்டும் ஏன் 2 பேர்தான் இருக்காங்க..????

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

யாரப்பா இவர்?

  • தொடங்கியவர்

யாரப்பா இவர்?

நம்ம கர்ணன் :lol:

நம்ம கர்ணன் :lol:

அவரே தான் சரியா சொன்னீங்க அது சரி அவர் எங்கே இப்ப

:lol: :P

  • தொடங்கியவர்

அவரே தான் சரியா சொன்னீங்க அது சரி அவர் எங்கே இப்ப

:lol: :P

அவர அவர் தன்னோட தங்கச்சிட்ட 3வது சகோதரன தேட போய்ட்டார்

நம்ம கர்ணன் :lol:

:angry:

அவர அவர் தன்னோட தங்கச்சிட்ட 3வது சகோதரன தேட போய்ட்டார்

உங்கள் நல்ல மனதிர்க்கு என்னையும் வான்ஸ் போலவே என்னுகிறீர்கள். :lol:

  • தொடங்கியவர்

ஹீ ஹீ ஒரே குட்டையிலதானே ஊறுரம்

கம்பியூட்டர் கடையில்.

விற்பவர்: இந்த கணினி உங்க வேலையை பாதியாக குறைக்கும்

நீண்ட யோசனைக்குபின்

சர்தார்: அப்ப 2 கணினி தாங்க

  • தொடங்கியவர்

ஹீ ஹீ ஓவர் இது

தாத்தா இது ஓவர்

  • தொடங்கியவர்

டாக்டர்: "காது இப்ப சரியாக் கேட்குதா?"

நோயாளி: "தெளிவாக் கேட்குது டாக்டர்."

டாக்டர்: "வெரிகுட். சரி, பீஸ் 300 ரூபாய் கொடுங்க."

நோயாளி: "என்ன டாக்டர்? காது கேட்க மாட்டங்குது டாக்டர்."

டாக்டர்: ????????

***

"மாப்பிள்ளை விண்வெளித் துறையில வேலை பார்க்கறாரு."

"அதுக்காகக் கல்யாணப் போட்டோவைச் சாட்டிலைட் மூலமாத்தான் எடுக்கணும்னு அடம் பிடிப்பது கொஞ்சம் ஓவர்."

***

"டாக்டர், உங்க நர்ஸ் கை பட்டதும் என் நோய் காணமல் போயிடுச்சு."

"அப்ப அதுக்குத் தனியா 100 ரூபாய் பீஸ் கொடுத்துருங்க."

***

மாப்பிள்ளை என்றது மாப்பியா?

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை என்றது மாப்பியா?

டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

-------

டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

:unsure::D:rolleyes::lol:

"மாப்பிள்ளை விண்வெளித் துறையில வேலை பார்க்கறாரு."

"அதுக்காகக் கல்யாணப் போட்டோவைச் சாட்டிலைட் மூலமாத்தான் எடுக்கணும்னு அடம் பிடிப்பது கொஞ்சம் ஓவர்."

:rolleyes::unsure::huh:

அட நம்ம ஆளு.

:huh::lol::lol:

அட நம்ம ஆளு.

:rolleyes::unsure:

டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

:rolleyes::unsure:

அதுக்குதான் யாருக்குமே புரியாத மாதிரி எழுதுறங்களா? :P

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே சுவி பெரியப்பா?

வில்லு சார்! நகைச்சுவைகள் அமர்க்களமாயிருக்கு.

அதுதான் இப்ப வந்துட்டன். சில சமயம் வெளியிடங்களுக்குப் போய் வருவதால் சந்திக்க தாமதமாகிறது. அவ்வளவுதான். :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

சிரிப்புத் தமிழ்

--------------------------------------------------------------------------------

1. ''டி.வி. சீரியலில் நடிக்க சான்ஸ் கேட்கறியே, முன் அனுபவம் இருக்கா?''

''சாவு வீட்டுக்கெல்லாம் போய் நல்லா ஒப்பாரி வெச்சு அழுதிருக்கேன் சார்.''

--------------------------------------------------------------------------------

2. ''உன் கணவரை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டியாமே.. ஏன்?''

''ரெண்டு பேருமே வேலைக்கும் போறோம்.. வீட்டு வேலைகளையும் ரெண்டுபேரும் சேர்ந்துதான் செய்யணும்'னு சட்டம் பேசறார்.. அதான்!''

--------------------------------------------------------------------------------

3. ''சார்... 'வேலைக்கு உணவு' திட்டம் மாதிரி உணவுக்கு வேலைத் திட்டம்னு ஏதாவது உண்டா சார்?''

''ஏன் கேட்கறீங்க?''

''சாப்பிட்டுட்டேன்... பர்ஸைக் காணோம்!''

--------------------------------------------------------------------------------

4. ''அந்த டாக்டர் அவரோட மகள் பேர்ல பிரசவ ஆஸ்பத்திரி கட்டியிருக்கார்.''

''அப்போ அதை மகப்'பேரு' மருத்துவமனைனு சொல்லு!''

--------------------------------------------------------------------------------

5. ''ஏன் டாக்டர் உங்க கைல 'மேஷம்'னு பச்சை குத்திட்டிருக்கீங்க?''

''நாலு பேரு என்னை கைராசி டாக்டர்னு சொல்லணுமில்ல!''

--------------------------------------------------------------------------------

6. ''என் அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?''

''அவங்கதாங்க 'இனிமே நான் வாயே திறக்கப் போறதில்லை'னு சொன்னாங்க!''

--------------------------------------------------------------------------------

7. ''வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பது உண்மைதான் என்று சொல்கிறீர்களே... எப்படி அமைச்சரே?''

''பாருங்களேன்... போரென்றால் கூடப் பயப்படாத நம் மன்னர், இந்தப் புலவர் ஒரு கவிதை

--------------------------------------------------------------------------------

8. ''மன்னர் புறாக்களை எல்லாம் ரோஸ்ட் செய்யச் சொல்லிவிட்டாரே, ஏன்?''

''புதுசா செல்போன் வாங்கிட்டாராம்!''

--------------------------------------------------------------------------------

9. ''என் கணவர் எள்ளுனா எண்ணெயா வந்து நிப்பார்!''

''என் கணவர் தோசைனா சட்னியோட வந்து நிப்பார்!''

--------------------------------------------------------------------------------

10. ''மருந்து சீட்ல பிள்ளையார் சுழி போடாதீங்க டாக்டர்...''

''ஏன்?''

''மருந்துக் கடைக்காரர் அதுக்கும் ஒரு மாத்திரையைக் கொடுத்து காசு வாங்கிடறார்!''

--------------------------------------------------------------------------------

11. ''அந்த டாக்டர் முன்னே பால் வியாபாரம் பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன்!''

''எப்படிச் சொல்றீங்க?''

''பேஷன்ட்டுக்கு ரத்தம் குறையுதாம்... கொஞ்சம் தண்ணியைக் கலந்து ஏத்தச் சொல்றாரே!''

--------------------------------------------------------------------------------

12. ''பரவாயில்லையே... ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷன்ட்டுக்கு நர்ஸ் இவ்வளவு தைரியம் சொல்றாங்களே?''

''அவர் பேஷன்ட் இல்லே... ஆபரேஷன் பண்ணப் போற டாக்டர்!''

--------------------------------------------------------------------------------

13. ''ரூமில் பாத்ரூம் எல்லாம் வசதியா இருக்குமா?''

''அதென்ன அப்படி கேட்டுட்டீங்க.. இதோ... இங்கேர்ந்தே பாக்கலாம்.''

--------------------------------------------------------------------------------

14. ''நான் சுமாரா இருக்கறப்பவே இப்படி விழுந்து விழுந்து என்னை லவ் பண்றீங்களே... நான் மட்டும் அழகா இருந்திருந்தா..?''

''சந்தேகம் என்ன, கல்யாணமே பண்ணியிருப்பேன்.''

--------------------------------------------------------------------------------

15. இன்னிக்கு உன் மனைவி சமைச்சாங்களா? கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு... சாப்பிடறதுக்குத்தான் கஷ்டமா இருக்கு!

--------------------------------------------------------------------------------

16. ''நீ உன் மனைவியை விவாகரத்து பண்ணப் போறியாமே! தாலி கட்டறதுக்கு முன்னாடியே இதை யோசிச்சு இருக்கக் கூடாதா?''

''தாலி கட்டறதுக்கு முன்னாடியே எப்படி விவாகரத்து பண்ண முடியும்?''

--------------------------------------------------------------------------------

17. ''மன்னர் கடும் நிதிநெருக்கடியில் உள்ளார்.''

''எப்படி?''

''வேட்டைக்குப்போய் பிடித்துவந்த மான், முயல், கொக்கு எல்லாத்தையும் குருவிக்காரர்களிடம் விற்று விடுகிறார்.''

--------------------------------------------------------------------------------

18. ''அவர் டாக்டர் ஆகறதுக்கு முன்னாடி ஆட்டோ ஓட்டிட்டு இருந்தாரு!''

''இருக்கட்டும்... அதுக்காக தர்மாமீட்டர்லகூட சூடு வைக்கணுமா?!''

--------------------------------------------------------------------------------

19. ''மாமியாரைக் கண்டபடி திட்டறியே... யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?''

''ம்ஹ?amp;#2990;்..! தன்னால செய்ய முடியாததை நான் செய்யறேன்னு மாமனார் எனக்கு சப்போர்ட்டா இருக்காரு!''

--------------------------------------------------------------------------------

20. ''டாக்டர் பட்டம் வாங்கின நம்ம தலைவர் என்ன கேக்கிறாரு..?''

''அவரோட மனைவிக்கு நர்ஸ் பட்டம் தரணுமாம்..''

--------------------------------------------------------------------------------

21. ''சர்வர், வடை ஏன் கல்லு மாதிரி இருக்கு?''

''துளை இருந்தா உடனே அது வடைன்னு முடிவு பண்ணிடறதா? அது எடைக் கல் சார்!''

--------------------------------------------------------------------------------

22. ''ஒரு ஆண் தன் மனைவிக்கும் மகளுக்கும் செய்யவேண்டிய கடமை என்ன?''

''மனைவிக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். மகளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடறவனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.''

--------------------------------------------------------------------------------

23. ''தாலி கட்டறதுக்கு முன்னாடி எதுக்காக மாப்பிள்ளை ஒரு லுக்கு விடுகிறார்?''

''யாராவது வந்து 'நிறுத்துடா கல்யாணத்தை!'ன்னு சொல்லமாட்டாங்களான்னு சின்ன நப்பாசைதான்!''

--------------------------------------------------------------------------------

24. ''விளக்கேத்த மருமகள் வேணும்னு நம்ம பையன்கிட்ட கேட்டது தப்பாயிடுச்சு.''

''ஏன்?''

''நம்ம வீட்ல ரெண்டு குத்துவிளக்கு இருக்கேனு ரெண்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.''

--------------------------------------------------------------------------------

25. ''சபாவுல ஜனங்க மிரண்டு ஓடுறாங்களே!''

''ஆமா! அலைபாயுதே கண்ணா'ன்னு பாட ஆரம்பிச்சிட்டாராம் பாகவதர்!''

--------------------------------------------------------------------------------

26. ''ஏன் காலங்கார்த்தால கழுதை போல கத்தறீங்க...''

''இவ்வளவு நேரமாச்சு... இன்னும் பேப்பர்க்காரப் பையன் வரல்லே...''

--------------------------------------------------------------------------------

27. ''ஐயா ரெண்டு கண்ணும் தெரியாத கபோதிங்க! ஒரு ரூபா தர்மம் போடுங்க சாமி!''

''ஏய்யா பொய் சொல்றே? ஒரு கண் நல்லாத்தானே இருக்கு''

''சரி. அப்ப அம்பது பைசா போடுங்க போதும்!''

--------------------------------------------------------------------------------

28. ''அந்தப் பாடகர் எங்கே பாடினாலும் நீங்க நாலைந்து பேரும் தவறாம ஆஜராகிடுறீங்களே அவரோட ?amp;#2986;ேனா?

''கைத்தட்ட கூட்டிவர்றதே அவர்தானே!''

--------------------------------------------------------------------------------

29. ''அப்பா! நான் அறிவியல்ல 105 மார்க் வாங்கியிருக்கேன்!''

''எப்படி?''

''100 போட்டு அதுக்கு மேல 5 மார்க் போட்டிருக்காங்களே!''

--------------------------------------------------------------------------------

30. ''உங்க பையன் ஏன் கணக்குப் போடும்போது உறுமிக்கிட்டேயிருக்கான்...!''

''நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே... அவன் கணக்குல புலின்னு....!''

--------------------------------------------------------------------------------

31. ''இப்பத்தானே தேள் கொட்டிடுச்சுன்னு மருந்து வாங்கிட்டுப் போனீங்க. அதுக்குள்ள ஏன் திரும்பி வந்திருக்கீங்க?''

''மருந்து கொட்டிடுச்சு டாக்டர்!''

--------------------------------------------------------------------------------

32. ''நான் நெனைக்கிறதை என் மனைவி செஞ்சு முடிச்சுடுவா...''

''அப்படியா! இன்னிக்கி என்ன நெனைச்சே?''

''ஓங்கி அறையணும்னு நெனைச்சேன்...''

--------------------------------------------------------------------------------

33. ''நம்ம ஆபீஸ?amp;#2969;்கறது ஒரு கூட்டுக் குடும்பம்னு ஒத்துக்கறேன். அதுக்காக இப்படியா....?''

''ஏன் என்னாச்சு?''

''அன்புள்ள மச்சானுக்கு'னு பியூன் லீவ் லெட்டர் எழுதித் தர்றதை என்னால ஒத்துக்க முடியல!''

--------------------------------------------------------------------------------

34. ''ஏண்டி...! பையன் பசியில ரொம்ப நேரம் அழுதுக்கிட்டிருக்கான்... நீ பாட்டுக்கு மடியில உட்காரவச்சுக்கிட்டு டீ.வி. பார்த்துக்கிட்டு இருக்கியே....''

''பையனும் என்னை மாதிரி மெகா சீரியல் பார்த்துத்தான் அழறான்னு நெனைச்சிட்டேங்க!''

--------------------------------------------------------------------------------

35. ''மாமியார் மருமகள் சண்டைன்றது சகஜம்தானே. இதுக்கு நீ ஏன்டா இப்படி 'அப்செட்'டாகுறே?''

''டேய்.... இப்ப அவங்க ரெண்டு பேரும் கராத்தே கத்துக்கிறாங்கடா!''

--------------------------------------------------------------------------------

36. ''இந்த மந்திரி மட்டும் ஏன் 'வரிக் குதிரையில வர்றாரு?''

''இவரு 'நிதி மந்திரி'யாச்சே!''

--------------------------------------------------------------------------------

37. ''அந்த சாமியார் கையெழுத்துக்குப் பதிலா விரல் ரேகையை வச்சதுனால இன்னொரு வழக்குல மாட்டிக்கிட்டார்!''

''எப்படி?''

''எப்பவோ நடந்த முகமூடிக் கொள்ளையில பதிவான விரல் ரேகை அவர் ரேகை மாதிரியே இருக்குதாம்?''

--------------------------------------------------------------------------------

38. ''என்னய்யா குழந்தைங்க சிலேட்டைப் பிடுங்கி தலைவர் தன் பெயரை எழுதுறாரே!''

''நான் சொல்லலே... தலைவர் மலிவான விளம்பரம் தேடுறார்ன்னு.''

--------------------------------------------------------------------------------

39. ''தலைவரே! அரசியலுக்கு வராம இருந்திருந்தா என்னவாகி இருப்பீங்க?''

''சாதாரணத் திருடனாத்தான் இருந்திருப்பேன்!''

--------------------------------------------------------------------------------

40. ''தலைவரை அவரோட மனைவி திட்டறாங்களே.''

''அதுவா, தலைவர் வருமானத்துக்கு கம்மியா சொத்துச் சேர்த்துட்டாராம்.''

--------------------------------------------------------------------------------

41. ''இந்த நடிகை பாத்ரூம் சிங்கர்.'

''அதுக்கென்ன?''

''குளிக்கும்போது படமெடுத்தவங்க ஆடியோ கேஸட்டும் வெளியிட்டுட்டாங்க?''

--------------------------------------------------------------------------------

42. ''கட்டுன புடவையோட வரச் சொல்லிட்டீங்களே, மாத்துத் துணிக்கு என்ன பண்றது?''

''கவலையே படாதே, இந்த சூட்கேசுல என் மனைவியோட புடவை நிறைய இருக்கு. அதையே நீ கட்டிக்கலாம்!''

--------------------------------------------------------------------------------

43. ''என்னது... 'பல்வலிக்கு என்னைப் போய்ப் பாரு'னு ஊர்ல எல்லாரும் சொன்னாங்களா?'' நான் வக்கீல்யா!''

''ஊர்ல எல்லாரோட 'சொத்தை'யும் நீங்கதான் நல்லா பிடுங்கித் தருவீங்கனு சொன்னாங்களே!''

--------------------------------------------------------------------------------

44. ''என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்!''

''ச்சீ.... அப்புறம்?''

''அதான்... செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்!''

--------------------------------------------------------------------------------

45. ''டாக்டர்! நான் உங்களுக்கு கொடுத்த ?amp;#2986;ீஸை வெச்சு இந்நேரம் ஒரு வீடே கட்டியிருக்கலாம்!''

''கட்டிட்டேனே! வர்ற 10-ம் தேதி என்னோட புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம்! நீங்கதான் திறந்து வைக்கறீங்க!''

--------------------------------------------------------------------------------

46. ''என் மகள் சானியா மிர்சா மாதிரி!''

''நல்லா டென்னிஸ் விளையாடுவாளா?''

''இல்லை.... பிரியாணி சாப்பிடுவா!''

--------------------------------------------------------------------------------

47. ''என் கணவர்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்க வக்கீல் சார்!''

''அப்படி என்னம்மா அவர் தப்புப் பண்ணினார்!''

''நான் டி.வி.யில மெகா சீரியல் பார்க்கிறப்ப, கிரிக்கெட்டுக்கு மாத்திடுறார்!''

--------------------------------------------------------------------------------

48. ''ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே... என்னடி ஆச்சு?''

''சொன்னேனே.... 'ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச்சுட்டான்'னு!''

--------------------------------------------------------------------------------

49. ''தெரியாம காயினை முழுங்கிட்டேன் டாக்டர்!''

''ஒரு ரூபா காய்னா, ரெண்டு ரூபாய் காய்னா?''

''அதான்... தெரியாம முழுங்கிட்டேன்னு சொல்றேன்ல!''

--------------------------------------------------------------------------------

50. ''கமல்ஹாசனுக்குத் தேசிய விருது கொடுத்தது ஓகே... ஆனா, விக்ரமுக்குத் தேசிய விருது கொடுத்தது ரொம்பத் தப்பு!''

''ஏன்?''

''கமல் 'இந்தியன்''... விக்ரம் 'அந்நியன்!''

நகைச்சுவை எல்லாம் நல்லா இருக்கு வான்வில் அதிலும் கடைசி நகைசுவை அருமை.

எல்லாம் நல்லா இருக்கு,

கொஞ்சம் ஓவர இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

29. ''அப்பா! நான் அறிவியல்ல 105 மார்க் வாங்கியிருக்கேன்!''

''எப்படி?''

''100 போட்டு அதுக்கு மேல 5 மார்க் போட்டிருக்காங்களே!''

வில்லண்ணே! நகைச்சுவை எழுதுவதில் முக்கியமா ஒரு விடயத்தைக் கவனிக்கனும். ஆர்வத்தில நம்மட மார்க்சீட்டை நாமே வெளியிடக்கூடாது. இப்ப என்னைப் பாரும்! நான் அப்படி செய்வதில்லை. உமது 29வது ஜோக்கைத்தான் சொல்கிறேன். :P :P

எல்லாம் அருமையான ப்கிடி..

வயிறு வலிச்சுப் போட்டுது போங்கோ

நன்றி வானவில்...!

  • தொடங்கியவர்

எல்லாம் அருமையான ப்கிடி..

வயிறு வலிச்சுப் போட்டுது போங்கோ

நன்றி வானவில்...!

ஹீ ஹீ நன்றி ஆனால் அதில பாதி உங்கள் நகைச்சுவைதானே :P :lol:

வான்வில் எங்கே உங்கள் நகைசுவையை காணவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.