Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`பிக்பாஸ் இல்லுமினாட்டிகளின் சதி!'- பகீர் கிளப்பும் இளைஞர் #BiggBossTamil

Featured Replies

`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது.  இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம்.

பாரி சாலன்

இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அதிலிருந்து இந்த தமிழ்கூறும் நல்லுலகை காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தோடு எம்.பி.ஏ படித்து வரும் அவரிடம் `பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையிலேயே இல்லுமினாட்டிகளின் வேலையா?' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

"இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா இது இல்லுமினாட்டிகளின் வேலைதான்" என எடுத்த எடுப்பிலேயே அணுகுண்டை எறிந்தார். தொடர்ந்து பேசியவர் "வெளிநாடுகளில் `பிக் பிரதர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான், நம்ம நாட்டில் `பிக் பாஸ்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருது. இந்தியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை நம் ஊரில் நடத்தக் காரணம், நம்ம சமுதாய அமைப்பையே சீரழிக்கணும், பல சமூக பிரச்னைகளை ஏற்படுத்தணும் என்பதுதான். `பிக் பாஸ்' நிகழ்ச்சியை நீங்க தொடர்ந்து பார்த்து வந்தீங்கன்னா, உங்க குடும்ப உறுப்பினர்கள் மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போயிடும். அவங்களும் உங்களைப் பற்றி புறம் பேசுவாங்க என்னும் சந்தேகம் உண்டாகும். இந்த உளவியல் போரால், குடும்பமே சிதைந்துப் போயிடும். இப்படி நம் ஊரின் குடும்ப அமைப்புகளை சிதைப்பதுதான் அவங்களோட திட்டம்.

இல்லுமினாட்டி

"நம்ம குடும்பங்களை பிரிச்சு அவங்க என்ன பாஸ் பண்ணப் போறாங்க?"

"இங்கேதான் நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இந்த உலகத்தின் மொத்த வணிகத்துறையையும் அவங்கதான் ஆதிக்கம் செஞ்சுட்டு வர்றாங்க. இங்கே குடும்ப அமைப்பு உடைஞ்சதுனா, எல்லோரும் தனித்தனி ஆளாகிடுவோம். ஒரு குடும்பத்துக்கு ஒரு டிவி, ஒரு வாஷிங்மெஷின், ஒரு ஃப்ரிட்ஜ் போதும். அதுவே, நீங்க தனித்தனி ஆளாப் பிரிஞ்சுட்டீங்கன்னா டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் தனித்தனியா வாங்கணும். வியாபாரம் அதிகமாகும். இதுதான் இந்த நிகழ்ச்சியின் மூலம் இல்லுமினாட்டிகள் செய்ய நினைக்குற சதி." 

 

"இதை கேட்கும்போது, நாலைஞ்சு இடியாப்பத்தை கொசகொசனு பிசைஞ்சு கையில கொடுத்த மாதிரியே இருக்கு. வேற ஏதாவது எளிமையான உதாரணங்கள் சொல்லமுடியுமா?"

"சொல்றேன். பிக் பாஸின் லோகோவான ஒற்றைக்கண் இல்லுமினாட்டிகளின் சின்னம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறது கமல்ஹாசன். அவரே இல்லுமினாட்டிதான். அவர் ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். அவரால் எப்படி அவ்வளவு சர்வசாதாரணமா இங்கிலாந்து  ராணியை சந்திக்கமுடியுது? அதேபோல் பின்னால் நடக்கப்போகும் சில விஷயங்களை அவர் முன்கூட்டியே கணிச்சு படத்துல வைக்குறதா சொல்வாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்க. `அன்பே சிவம்' படத்துல பந்து வாங்குவார் மாதவன். அதுவும் அந்த பந்து மினி உலகம் மாதிரியே இருக்கும். கமல் மாதவன் கிட்டே, 'பந்தை எப்படி வாங்கினே?னு கேட்கும்போது, மேலே கைகாட்டுவார் மாதவன். அங்கே `கார்டுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்'னு எழுதியிருக்கும். எதிர்காலத்தில் உலகில் எந்த பொருள் வாங்க வேண்டியதாயிருந்தாலும், கார்டுகள் மூலம்தான் வாங்கமுடியும் என சொல்ல வர்றார். நீங்களே யோசிச்சுப் பாருங்க, இப்பவே பல பொருட்களை நாம கார்டு மூலமாகத்தான் வாங்குறோம். இன்னும் கொஞ்ச நாளில் எந்தப் பொருள் வாங்க நினைச்சாலும், கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்ங்கிற சூழல் உண்டாகும்."

பிக் பாஸ்

"கமல் இல்லுமினாட்டினு சொல்றீங்க. `பிக் பாஸ்' போட்டியாளர்கள்ல யாரைப் பார்த்தா இல்லுமினாட்டி மாதிரி தெரியுது?"

"அப்படிச் சொல்ல முடியாது. ஆனால், அந்தப் போட்டியாளர்களை வெச்சு நம் மனசுல என்ன மாதிரியான எண்ணங்களை இல்லுமினாட்டிகள் பரப்ப நினைக்குறாங்கனு சொல்றேன். ஜூலியானாங்கிற பெண்ணை ஜல்லிக்கட்டுக்காக போராடிய அத்தனை இளைஞர்களின் பிரதிநிதி மாதிரியா காண்பிச்சாங்க? அந்த பெண்தான் போராடி ஜல்லிக்கட்டு தடையை நீக்கினாங்க எனும் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்தாங்க. ஆனால், அங்கே நடந்தது என்ன? சக போட்டியாளர் ஒருத்தர்  நிகழ்ச்சியில் தொடர விருப்பமில்லைனு சொல்லும்போது, `போகாதே'னு ஃபீல் பண்ணாங்க. ஆனால், காயத்ரியும், ஆர்த்தியும் போராட்டத்தைப் பற்றி கேட்கும்போது, அவங்களால தெளிவான பதிலை சொல்ல முடியல. எல்லாம் இல்லுமினாட்டிகளின் சதி. டயனமிக் திருமணம் நடத்தியவர் சிநேகன். அவர் ஏற்கெனவே ஏஜென்ட். அவரை என்னவோ தமிழ்புலவர், தமிழின் அடையாளம்ங்கிற மாதிரி பேசிட்டு இருக்காங்க. நமீதா, ஓவியா போன்ற கவர்ச்சி நடிகைகளை, வெற்றிகரமான பெண்களா காட்டுவதே பெரிய சதிங்குறேன். இவ்வளவு ஏன், எல்லாப் போட்டியாளர்களையும் தமிழில் பேச சொல்வதே, கிராமப்புற மக்களுக்கும் போய் சேரணும்ங்கிற காரணத்துக்காகத்தான். எல்லாமே இல்லுமினாட்டிகளின் வேலை." என கொந்தளித்தார்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/93870-biggboss-is-an-show-directed-by-illuminati---a-youngsters-accusation.html?utm_source=vikatan.com&utm_medium=chromepush&utm_campaign=manual

  • கருத்துக்கள உறவுகள்

எனி இப்படி எல்லாம் கனக்க தலைப்புக்கள் வரும். அப்ப தானே நிகழ்ச்சிக்கு ஓசி விளம்பரம் கிடைக்கும்.

உதே ஒரு பித்தலாட்ட நிகழ்ச்சி. மேற்கில் இருந்து ஹிந்தி களவாட.. அதை இப்ப விஜய் களவாடி இருக்குது. tw_blush:

சுயமாக சமூகத்துக்கு உருப்படியா.. ஒரு நிகழ்ச்சி செய்யட்டும் பார்க்கலாம்.. விஜய். செய்யாது. அது தமிழ் சமூகத்தை சீரழிக்க வந்த ஒரு களை.

5 minutes ago, Athavan CH said:

"இதை கேட்கும்போது, நாலைஞ்சு இடியாப்பத்தை கொசகொசனு பிசைஞ்சு கையில கொடுத்த மாதிரியே இருக்கு. வேற ஏதாவது எளிமையான உதாரணங்கள் சொல்லமுடியுமா?"

"சொல்றேன். பிக் பாஸின் லோகோவான ஒற்றைக்கண் இல்லுமினாட்டிகளின் சின்னம். இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறது கமல்ஹாசன். அவரே இல்லுமினாட்டிதான். அவர் ஒரு தமிழ்த்திரைப்பட நடிகர். அவரால் எப்படி அவ்வளவு சர்வசாதாரணமா இங்கிலாந்து  ராணியை சந்திக்கமுடியுது? அதேபோல் பின்னால் நடக்கப்போகும் சில விஷயங்களை அவர் முன்கூட்டியே கணிச்சு படத்துல வைக்குறதா சொல்வாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்க. `அன்பே சிவம்' படத்துல பந்து வாங்குவார் மாதவன். அதுவும் அந்த பந்து மினி உலகம் மாதிரியே இருக்கும். கமல் மாதவன் கிட்டே, 'பந்தை எப்படி வாங்கினே?னு கேட்கும்போது, மேலே கைகாட்டுவார் மாதவன். அங்கே `கார்டுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்'னு எழுதியிருக்கும். எதிர்காலத்தில் உலகில் எந்த பொருள் வாங்க வேண்டியதாயிருந்தாலும், கார்டுகள் மூலம்தான் வாங்கமுடியும் என சொல்ல வர்றார். நீங்களே யோசிச்சுப் பாருங்க, இப்பவே பல பொருட்களை நாம கார்டு மூலமாகத்தான் வாங்குறோம். இன்னும் கொஞ்ச நாளில் எந்தப் பொருள் வாங்க நினைச்சாலும், கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்ங்கிற சூழல் உண்டாகும்."

பாவம்.. அன்பே சிவம் படம் வருவதற்கு முன்னரே காட் மூலம் பணமெடுப்பது வந்துவிட்டது இந்த அரைவேக்காட்டுக்குத் தெரியவில்லை. ஆமாம்.. இந்தியாவை மையமாக வைச்சுப் பார்த்தால்.. கமலஹாசன்.. என்ன நித்தியானந்தாவும் தீர்க்கதரிசியே. tw_blush:

பாவம் தமிழக மக்கள். 

  • தொடங்கியவர்

‘தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஒரு இல்லுமினாட்டி!’ - பகீர் கிளப்பும் இளைஞர்

‘எதை எடுத்தாலும் இல்லுமினாட்டிகளின் சதி இருக்கு... எல்லா சம்பவங்களுக்குப் பின்னாலேயும் இல்லுமினாட்டிகளுக்குத் தொடர்பு இருக்கு...’ எனப் பலநூறு ஆண்டுகளாகப் பரவி வந்த செய்திகள் இந்த வாட்ஸ்-அப் யுகத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவும் மிக விரைவாகவும் பரவி வருகின்றன. இவர்கள் சொல்கிற அந்த இல்லுமினாட்டி ஊடகங்களின் மூலம்தான் இந்த ஆன்ட்டி இல்லுமினாட்டி பரப்பப்பட்டு வருவது வேதனைதான். இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி சமூக வலைதளங்களில் 'புரட்சி' ஏற்படுத்தி வருகிறார் 'ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலன். "கார்ப்பரேட் கலாசார சதிகளையும், அதன் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அதிலிருந்து தப்பிக்கத்தான் தற்போது எம்.பி.ஏ படித்து வருகிறேன்" எனக் கூறுபவரிடம் தொடர்ந்து பேசினோம். 

இல்லுமினாட்டி

"யாருங்க அந்த இல்லுமினாட்டிகள்..?"

"அமெரிக்க டாலரில் இடம் பெற்றிருக்கும் ஒற்றைக்கண்கொண்ட முக்கோணம்தான் இல்லுமினாட்டிகளின் சின்னம். டாலர் நோட்டின் ஒரு பக்கம் பிரமிடும், அதன் மேல் பகுதியில் ஒரு கண்ணும் இடம் பெற்றிருக்கும். ‘அனைத்தும் எங்களால் கண்காணிக்கப்படுகின்றன’ என்பதுதான் இந்தச் சின்னம் சொல்லும் தகவல். சின்னத்தில் இடம் பெற்றிருக்கும் பிரமிடின் அடிப்பகுதியில் இருக்கும் ரோமன் எண்களைக் கூட்டினால் 1776 வரும். இதுதான் இல்லுமினாட்டிகள் உருவான ஆண்டு.

இல்லுமினாட்டிகள் அவர்களது அடையாள எண்ணான 13 -ஐக் குறிக்கும்விதமாக 13 பிரிவுகளில் தங்களது ஆதிக்கத்தை மக்களிடம் மறைமுகமாகப் பரப்பியிருக்கிறார்கள். நுகர்வுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், அணுசக்தி, மருத்துவம், ஆயுதங்கள், ஊடகங்கள், வங்கிகள், அரசியல், உணவு, மத அமைப்புகள், நில அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு என்னும் இந்த 13 பிரிவுகளில் புகுந்து தங்களுடைய பொருட்களுக்கும், போதனைகளுக்கும் அடிமையாக்கி மக்களை ஒரே சிந்தனையில், ஒரே ரசனையில் செதுக்குவதால் மட்டுமே ‘ஓர் உலகம்; ஓர் அரசு’ ங்கிற கொள்கையை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதற்கு அவர்கள் உலகின் மூத்த குடியான தமிழ்மக்களை அழிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். சொன்னா நம்ப மாட்டீங்க... இப்போ இல்லுமினாட்டிகளின் தலைமையகமே தமிழ்நாட்டில்தான் இருக்கு." என அதிர்ச்சி அணுகுண்டைத் தூக்கிப் போட்டார் ஆரம்பத்திலேயே. 

Illuminati எச்சரிக்கை

 

"சரி... கார்ப்பரேட்களைச் சாராமல் இப்போ எப்படி வாழ முடியும்?"

"இப்படித்தான் நம்மளை இந்த இல்லுமினாட்டிகள் அடிமைகளாக மாற்றி அவங்க சொல்படி நடக்க வெச்சுருக்காங்க. இந்த ஆளும் வர்க்கம் மக்களை வசப்படுத்த பல யுத்திகளையும் கையாண்டு பார்க்குது. ஒருபக்கம் ஒரு நிறுவனத்திற்கு எதிரா போராட்டம் தீவிரமா நடக்கும்போது இலங்கை ஓரத்தில் மீனவனைச் சுட்டுக் கொல்றாங்க. சம்பந்தமே இல்லைனு நீங்க நினைக்கிற இந்த ரெண்டு விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கு. இல்லுமினாட்டிகள் பெரிய நெட்வொர்க். ஒருத்தனைப் பகைச்சா அடுத்தவன் அதே வேலையைச் செய்வான். நான் தற்சார்புப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன். எனக்குத் தேவையானதை நானே விவசாயம் செய்து உற்பத்தி செய்துகொள்ள முடியும். அதே மாதிரி எல்லோரும் மாறணும். கார்ப்பரேட் வலைக்குள் சிக்காமல் தப்பிக்கப் பாருங்க." 

"வெளியாகிற எல்லா சினிமாக்களுமே இல்லுமினாட்டிகளின் சதின்னு பீதியைக் கிளப்புறீங்களே..?"

"ஆமாங்க... உண்மையைச் சொல்லித்தானே ஆகணும். தமிழகத்தில் டாஸ்மாக் ஆரம்பிச்சப்போ யாரும் போய் இந்த அளவுக்குக் குடிக்கலை. சினிமாக்களில் நடிகர்கள் குடிக்கிற மாதிரிக் காட்சிகளைக் காட்டி மக்கள் மனசுல கொஞ்சம் கொஞ்சமா பதிய வெச்சாங்க. இப்போ பாருங்க ஊர்ல ஒருத்தன் விடாம எல்லோரும் குடிக்கிறாங்க. இப்படித்தான் இல்லுமினாட்டிகள் பல வருசமா நம் இனத்தைத் திட்டமிட்டு அழிச்சுக்கிட்டு இருக்காய்ங்க. இல்லுமினாட்டிகள் இப்போ தமிழ்ப் படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்காங்க. சமீபத்தில் வெளிவந்த படங்களைப் பார்த்தா அது உங்களுக்கே புரியும். கமல்ஹாசன் போன்ற இல்லுமினாட்டிகள் தங்கள் படங்களில் சில குறியீடுகளைப் பயன்படுத்தி இருப்பாங்க. 

'ஜில் ஜங் ஜக்' படத்தில் இல்லுமினாட்டிகளின் சின்னம் காட்டப்படும். இப்போ 'குற்றம்- 23' படம் முழுக்க முழுக்க இல்லுமினாட்டிகளின் திரைக்கதைதான். தயாரிப்பும் இல்லுமினாட்டிகள்தான்.  தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டுமே வெள்ளைக் குதிரைகளை லோகோவாகக் கொண்டுள்ளன. ஜெயலலிதா கட்டிய குதிரைச் சிலை, மற்றும் தமிழ்நாடு குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட் லோகோ என்ன என்பதையும் இங்கே பொருத்திப் பாருங்கள். எல்லாமே வெள்ளைக் குதிரைதான். குதிரை என்பது வணிகத்தின் சின்னம். முதல் காட்சியில், கதாநாயகன் அணிந்துவரும் சட்டையில் 'G' என்ற ஆங்கில எழுத்து இருக்கிறது. இது இலுமினாட்டிகளின் எடுபிடி வேலைகளைச் செய்யும் ஃப்ரீ மேசன்களின் சின்னம்.

படத்தின் இடைவெளியில் கதாநாயகனின் ஒரு கண்ணை மட்டும் காட்டி முடிப்பது, பேப்பர் வெயிட் என்ற பெயரில் இல்லுமினாட்டிகளின் பிரமிடு சின்னத்தை வேண்டும் என்றே காட்டுவது எனப் பல இல்லுமினாட்டி அடையாளங்கள் இந்த படத்தில் உள்ளன. இல்லுமினாட்டிகளின் ஒரு மாபெரும் சதித்திட்டமான 911 தாக்குதல் 2001-ம் ஆண்டு நடந்தது. 9+11+2+0+0+1 கூட்டுத்தொகை 23. இப்படி இந்த எண்ணுக்குள் பல குறியீடுகள் ஒளிஞ்சிருக்கு. நீங்கள் சாதாரணமா பார்த்துப் புரிஞ்சுக்க முடியாத பல குறியீடுகளும் என் கண்ணுக்குத் தெரியுது. 

குற்றம் -23

'போகன்' படத்தில் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கதாநாயகி மதுபானம் வாங்குகிற காட்சி வரும். தமிழகத்தில் எல்லாப் பெண்களும் மது அருந்துகிறார்களா என்ன? வெகு சிலர் மட்டுமே செய்கிற விஷயத்தை சினிமா எல்லோருக்குள்ளேயும் திணிக்க முயலுது. ஆண்களைப் பெண்களுக்கு எதிரா வன்முறை செய்யத் தூண்டினதும் இந்த இல்லுமினாட்டிகளின் சினிமாதான். அதில் இல்லுமினாட்டிகள் வெற்றி அடைஞ்சுட்டாங்க. இந்த சினிமாவைப் பார்த்து அதே மாதிரி இந்த மக்களும் மாற ஆரம்பிக்கிறதைத் தடுத்து நிறுத்தத்தான் நாங்க போராடிக்கிட்டு இருக்கோம்." 

"கமல்ஹாசன் ஒரு இல்லுமினாட்டினு எப்படிச் சொல்றீங்க..?"

"அடுத்து நடக்கப்போற ஒரு விஷயத்தை எப்பயாவது நாம் சொன்னா அது சாதாரண விஷயம். நாளை நடக்கப்போகும் ஒவ்வொரு விஷயத்தையும் இவர் முன்கூட்டியே சொல்ல முடியுதுன்னா அதற்குக் காரணம் என்ன? கமல் ஒரு தமிழ் சினிமா நடிகர். இங்கிலாந்து ராணியை அவ்வளவு எளிதில் அவரால் சந்திக்க முடியறதுக்கும், 'மருதநாயகம்' வெளியீட்டுக்கு எலிசபெத்தையே அழைக்க முடியறதுக்கும் காரணம் என்ன? ஆளும் இடங்களில் எல்லாம் இல்லுமினாட்டிகளுக்கு நேரடித் தொடர்பு இருக்கு. இப்போ நீங்களோ நானோ நினைச்சா இதையெல்லாம் செய்ய முடியுமா?"

"இல்லுமினாட்டிகளுக்கு எதிரா ஓர் இயக்கமா சேர்ந்திருக்கீங்களா..?"

"நாங்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயல்படவில்லை. அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச தகவல்களைப் பரப்பி மக்களை விழிப்பு உணர்வு அடையச்செய்றோம். இல்லுமினாட்டிகளை எதிர்ப்பவர்களில் பலர் தவறான வதந்திகளையும் பரப்புறாங்க. ஆனால், எதிரி கல்லடி பட வேண்டியவன். அவனை எப்படி அடித்தால் என்ன... அழிக்கப்படணும்ங்கிறதுதான் முக்கியம்."

பாரி சாலன்

"நீங்கள் இதுவரை எவ்வளவு பேருக்கு இல்லுமினாட்டிகள் பற்றி விளக்கியிருப்பீர்கள்..?"

"இல்லுமினாட்டிகள் பற்றிய விபரங்களைக் கேட்டு தினமும் எனக்குக் குறைஞ்சது பத்து போன்கால்கள் வருது. ஆறு வருடங்களாக இது பற்றிய சந்தேகங்களைத் தீர்த்து வெச்சுக்கிட்டு இருக்கேன். முன்னாடி இருந்ததைவிட இப்போ இல்லுமினாட்டிகள் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமா இறங்கி இருக்கேன். எனக்குத் தெரிஞ்சதை எல்லோருக்கும் சொல்லி அவர்களைக் காப்பாத்திக்கிட்டு இருக்கேன். ஏஞ்சலினா ஜூலி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், கிளிண்டன், ஒபாமா, தொழிலதிபர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், திரைப்பட இயக்குநர்கள் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் மறைந்த பிரபலங்களான மைக்கேல் ஜாக்ஸன், ஹிட்லர், சர்ச்சில் உள்ளிட்ட நம்மை ஈர்த்த, ஈர்த்துக்கொண்டிருக்கிற பெரும்பாலான பிரபலங்கள் இல்லுமினாட்டியைச் சேர்ந்தவர்கள்தாம். இதையெல்லாம் எப்படின்னு மக்களுக்கு விளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்."

"எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்த்து மக்களிடையே அச்சத்தை விதைக்கிறீங்களே..?"

"பயம் இல்லாதவன் எப்படிங்க எதிர்த்துப் போராடுவான். முதலில் இல்லுமினாட்டிகளின் இருப்பை மக்களுக்கு உணர வைக்கணும். இதெல்லாம் நடக்கும்னு சொல்லி மக்களை எச்சரிக்கிறோம். அது பயமுறுத்துறதுக்காக இல்லை... இல்லுமினாட்டிகளை எதிர்த்து நிற்பதற்காகத்தான். அவர்கள் புகுத்துகிற எதையும் நம்பாமல் வாழ்வதற்குப் பழக்கப்படுத்துறோம். பயமுறுத்தலை. பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறதுலேர்ந்து குழந்தை பிறக்குறது வரை இங்கே நடக்குற எல்லாத்தையும் தீர்மானிக்கிறது இல்லுமினாட்டிகள்தாம்." என அடித்துப் பேசினார்.

http://www.vikatan.com/news/miscellaneous/84857-an-interview-with-paari-saalan-who-researches-about-illuminati.html?artfrm=read_please

  • கருத்துக்கள உறவுகள்

இல்லுமினாட்டிகளைப்  பற்றி, பாஸ்கர் குறிப்பிடும் கருத்துக்களை கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்

BIG BOSS ரகசியம் உடைக்கும் தமிழன்

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

நிதானமாக யோசித்துப் பார்த்தால்...

 

 
bigboss

ஒரு விஷயம் பரபரப்பாக தோன்றுவதும் பின்னர் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்பதும் மிகவும் தாமதமாகவே நமக்குத் தோன்றிவிடுகிறது. உதாரணமாக பிக்பாஸ். பொழுதுபோக்கு ஊடகத்தைப் பொறுத்தவரை ஒரு டிவி நிகழ்ச்சியின் வெற்றி உறுதி என்பது அது ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே பலவகையில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட வேண்டும்.

''நம் எல்லோருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. உங்களைச் சுற்றி 64 கேமராக்கள்.... நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி... வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், பொது இடத்தில் ஒரு முகம் தனி இடத்தில் ஒரு முகம்''- என்று கமல் திடீரென்று தோன்றி டிவி விளம்பரங்களுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன் பேசினார், பிக்பாஸ் பற்றிய அந்த விளம்பரம், அட நம்மைப் பற்றியே பேசுவதுபோல இருக்கிறதே என அந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்களை காத்திருக்க வைப்பதிலேயே வெற்றி எனும் விதையை ஊன்றிவிட்டது.

அதன்பிறகு அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் நடந்துகொண்டது, அவர்கள் பற்றி அறியும் ஆவல், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் சொந்த வாழ்க்கை குறித்த செய்திகள்... அது குறித்த நமது நிலைப்பாடுகள்... இவைகள் ஒரு ரசவாதம் போல கலந்து அடுத்துவரும் நிகழ்ச்சிகளில் அவர்கள் குறித்த நமது பார்வைகள் பன்மடங்கு பெருகியிருந்தது... உண்மையில் அந்த நிகழ்ச்சியில் வலம் வந்தவர்கள் அவர்கள் அவர்களாகத்தான் இருந்தார்கள். அப்படி இருந்தார்களா என்பதும் ஒரு கேள்வி. அப்படி இருக்க வைக்கப்பட்டார்கள் என்று வேண்டுமானால் இவ்வாக்கியத்தில் சற்று திருத்தம் செய்து கொள்ளலாம்.

நாட்டில் நடக்கும் எவ்வளவோ பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்நிகழ்ச்சியைப் பற்றி பேச்சு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நடந்துகொண்ட அணுகுமுறைகள் குறித்து பஸ்ஸிலும் ஓட்டலிலும் அலுவலகங்களிலும் வீட்டு வரவேற்பறையிலும் பலத்த விவாதமாக்கப்பட்டுவிட்டன. மாற்றங்களை உருவாக்குபவர்கள் என்ற பொருளில் மெரினா புரட்சியை உருவாக்கிய, தமிழக இளைஞர்களை உரசிப் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்வழியே பிரபல்யமடைந்த ஜூலி என்ற இளம்பெண்ணும் நாம் பெரிய திரையில் பார்த்த நன்கு அறிமுகமான பிரபலமான முகங்களோடு இணைந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இடம்பெறுகிறார். இவ்வளவு காலம் தமிழக அரசியலைப் பேசாத கமல் சில மாதங்களாக தீவிரமாகப் பேசத் தொடங்குகிறார்.

பிக் பாஸ் உச்சம்பெறும்போது அவரும் நிகழ்ச்சிக்கு வெளியே நாட்டு நடப்பைப் பற்றி கவலை கொள்பவராக, தமிழக அரசைப் பற்றியும் தமிழக அரசியல் சூழ்நிலைப் பற்றியும் பேட்டிகள் தருகிறார். நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். வெளியேற்றப்பட்டவரின் குணநலன்கள் அது நிகழ்ச்சியின் ஸ்கிரிப்ட்டுக்கானது என்பதை மறக்கும்அளவுக்கு பார்வையாளர்களின் சொந்த வாழ்க்கை தருணங்களில் அவர்களது குணநலன்கள் பேசப்பட வைக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா என்ற துறுதுறு பெண்ணின் காதல் தோல்வி அது நிகழ்ச்சியின் ஸ்கிரிப்டில் இல்லை, அது இயல்பானது உணர்வுபூர்வமானது உண்மையானது என வாதிடும் அளவுக்கு அவரது காதலுக்கு வக்காலத்து வாங்க பலரின் இதயங்களும் களவாடப்படுகின்றன. இதுதான் இந்த ஸ்கிரிப்டின் வெற்றி.

அதுமட்டுமல்ல அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘வாரம் ஒருவர் வெளியேற்றப்படுதல்’ என்ற வகையில் ஓவியா வெளியேற்றப்படுவது ஒரு அப்பாவியான இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்கள் கருதினார்கள். ஓவியா மனநல டாக்டரை நாடுவதுதான் நல்லது. இல்லையெனில் என்னாகுமோ என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு வெளியிலுள்ள பலரும் யோசனை தெரிவித்தார்கள். பெட்டிக்கடையில் தொங்கும் சில செய்தித்தாள் சுவரொட்டிகளில் ‘ஓவியா தற்கொலை முயற்சி’ என்று ஒருநாள் பார்க்க நேர்ந்த போது ஒருகணம் எனக்கு வியப்பு கலந்த அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது.

அப்படி ஏற்பட்டது, புறக்கணிப்பு எனும் வலிக்காக ஓர் இளம் உயிர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி எனற நிலைக்காக அல்ல. அந்த செய்தித்தாள் தனது ஊடக வலிமையைக் கொண்டு இவ்வளவு மோசமாக பொதுவெளியில் நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் சம்பந்தப்பட்டு ஏதேதோ சிந்தனையில் அல்லது அப்படியெதுவும் இல்லாமல்கூட சாதாரண மனநிலையில் சாலையில் நடந்துசெல்பவர்களிடம் கூட பாதிப்பை கட்டமைக்கிறதே என்பதற்காகத்தான் அந்த வியப்பு கலந்த அதிர்ச்சி.

நானும் ஓவியாவின் வாழ்க்கைப் பின்னணியை, நடந்தது என்ன என்பதை அறிய யூடியூப்பில் கிடைத்த வெவ்வேறு சிறு, குறு வீடியோக்களின் வழியே தெரிந்துகொள்ள முயன்றதை நினைத்துப் பார்க்கையில் எனக்கே சிரிப்பு வருகிறது. வாழ்க்கையை இவ்வளவு துணிச்சலாக எதிர்கொண்ட பெண்ணுக்கா இந்த நிலை என்று நானும் ஒருநாள் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டேன், ஒரு பெண் தன் காதலைச் சொல்வதற்குக் கூட உரிமையில்லையா என்ன கொடுமை எந்த மாதிரி ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என ஒருநாள் கூட நிகழ்ச்சியைப் பார்க்காத என்னைப் போன்ற ஒருவரையும்கூட உணர்ச்சிவசப்படச் செய்த வகையில் தள்ளச் செய்தது. அந்தவகையில் இதெல்லாம் நிகழ்ச்சியின் வெற்றி அல்லாமல் வேறென்ன?

ஒரு பரபரப்பான ஊடக வெளிச்சத்தைத் தாண்டி இதை நிதானமாக யோசித்துப் பார்த்தால் ஒன்றுமேயில்லை என்பதை அறியமுடியும். உணரமுடியும். இவர்களை விட நாம் அன்பு செலுத்தமுடியும், அன்பை இனங்காண முடியும். இவர்களை விட நாம் சிலரை வெறுத்து ஒதுக்க முடியும். நாம் சிலரிடம் வெறுத்து ஒதுக்கப்படவும் நேரும். அப்போதெல்லாம் தனியே வாய்விட்டு சிரிக்க, மனம்விட்டு அழ, தோள்கொடுக்க, தோள்கிடைக்க இயலாமல் தவித்த தருணங்களை விட இது உயிரோட்டமானதா?

மூத்த மனநல மருத்துவர் அசோகன், தி இந்து ஆன்லைன் வீடியோ பேட்டியில் பிக்பாஸ் நிகழ்வின் பக்கவிளைவுகள் குறித்து, அவர் குறிப்பிட்டுச் சொன்னதுபோல் இந்நிகழ்ச்சியின் வெற்றி முழுக்க முழுக்க எடிட்டிங்கில்தான் உள்ளது. ஒவ்வொருநாளின் முழுநாள் நிகழ்வுகளையா காட்டுகிறார்கள்? தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரைம்டைம் கட்டத்திற்குள் அடங்குவதுதானே... அவர் சொல்வது போல ஒன்று சாப்பிடுகிறார்கள் அல்லது மற்றவர்களைப் பற்றி பேசுகிறார்கள் அல்லது தூங்குகிறார்கள்...

90களின் இடைப்பட்ட வருடங்களில் (94-97) டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து மதிமயங்கியதுண்டு நான். சென்னைக்கு இரண்டாவது முறை வந்து புதியதாக ஒரு அலுவலகத்தில் பணியில் இணைந்து பணியாற்றிய அலுவலகத்தின் பணி (9-5) நேரம்போக, ஒரு பேயைப் போல அலைந்து தொலைக்காட்சி தொடரில் பங்கேற்றவர்களை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஊடக வெளிச்சக் கலைஞர்களை பேட்டியெடுத்து டாட்.காம்களில் வெளியிட்டு சுகங்கண்டதில் ஒரு மோகம் இருந்தது எனக்கு... அதன் தொடர்ச்சியாகவோ என்னவோ ஒருசில தொலைக்காட்சியிலும் டிவி நிகழ்ச்சி தயாரிப்புப் பணிகளின் முக்கிய துணைக்கூறாக நான் இருக்க நேர்ந்தது.

அப்போது சிலவற்றில் வெற்றியடைந்தாலும் பலவற்றில் தோல்வியடைந்தேன். தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என பலமுறை நான் யோசித்ததுண்டு. ஏனெனில் வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒருசிலவற்றைத் தவிர (அது கற்பனையோ நிஜமோ) பலநிகழ்ச்சிகள் ரசிகர்களை கேளிக்கையான ஒரு பாதையில் அழைத்துச் செல்கிறது. அல்லது உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சமூகசிந்தனைபோல பாவ்லா காட்டுகிறது. எனக்கு அந்தவகையான கேளிக்கையான பாதைகளில், உணர்ச்சிவசப்படுத்துதலில், பாவ்லாவான சமூக அக்கறை உருவாக்குதலில் ரசிகர்களை எந்தப் பாதை வழியாகவும் அழைத்துச் செல்லும் தகுதி சிறிதும் இல்லை என்பதை புரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் அது அமைந்தது. பார்த்துக்கொண்டிருந்த வேலையிலிருந்து வெளியேவந்து இந்த மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டதால், உண்மையில் ஒருபக்கம் வாழ்வின் வயிற்றுப் பசி குடலைப்புரட்டித் தின்ன வேதனையோடு வெளியேறிய நாட்கள் அவை.

இப்படி ஊடகங்களில் வெற்றிக்கொடி நாட்ட முடியாமல் இயல்புநிலைக்கு திரும்பிய ரசனைத்தரம் குறித்த சிந்தனை படைத்தவர்கள் ஏராளம். வெளியே வந்தாலும் ரசிகர்களை சின்னத்திரையோடு தரம் தாழாமல் தக்கவைக்க எவ்வகையான உத்திகளை கையாள வேண்டும் என்றெல்லாம் பலவாறாக யோசித்ததுண்டு. அப்படியெல்லலாமல் நல்ல நிகழ்ச்சிகள் வரவில்லையென மட்டையடி அடிக்கமுடியாது. சிற்சில நல்ல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வரத்தான் செய்தன.

மேலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என யோசிக்கிறவர்கள் பலவிதமான உலகளாவிய ஊடகங்களைக் காண்பது வழக்கம். அவை பலநேரம் பிடித்தமாகவும் பலநேரம் சுவையாகவும் சிலநேரம் அருவறுக்கத் தக்கவையாகவும் இன்னும் சிலநேரம் கர்ணகொடூரமாகவும் இருக்கும். நான் கடைசியாக சொன்னதற்காக ஓர் உதாரணம் மட்டும் இங்கு காட்டலாம்.

டபிள்யூடபிள்யூ எஃப் எனப்படும் மல்யுத்தப் போட்டி. அவ்வகையான நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றி சாதாரண வெற்றியல்ல. பூமிப்பந்தின்மீதுள்ள எந்த ஒரு கண்டத்திலோ நடக்கும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மல்யுத்த வீரர்களின் ஸ்டிக்கர்கள் நம் ஊர் கடைகளில் விற்கப்பட்டன. காலையில் உடைச்ச கடலை, பச்சமிளகாய், தக்காளி, உளுத்தம்பருப்பு இவற்றோடு வீட்டில் உள்ள குழந்தைகள் கேட்டுள்ள அவர்களுக்குப் பிடித்த மல்யுத்த வீரர்களின் ஸ்டிக்கர்கள் என மளிகை லிஸ்ட் எடுத்துச்சென்று வாங்கிவந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும்.

ஒருவர் ஒருவரை அடித்து மூக்கில் ரத்தம் வரவழைத்து அவரை வீழ்த்தி அவர்மேல் ஏறி பலவறாக மிதித்து துவம்சம் செய்வதை நம் குழந்தைகள் ரசிப்பதை நம்மால் தடுக்கமுடியவில்லை. தாங்கள் செய்ய முடியாததை அவர்கள் செய்கிறார்கள்.... ''நாளை நான் பெரியவனான பிறகு இவ்வாறு செய்வேன்'' என்று அவர்கள் மனதில் சின்னதான விதை ஊன்றப்படுகிறது. சமூக அக்கறை என்றால் என்ன? அது கறுப்பா சிகப்பா என கேட்கும் அவர்கள் சமூகத்தின் ஒருபகுதியாக பிற்காலத்தில் வளர்வதை அத்தகைய நிகழ்ச்சிகளைப் போன்ற பல்வேறு ஊடக தாக்கங்களே காரணம்.

ரெஸ்லிங் சண்டைக்காட்சியின் நிகழ்ச்சிகளோடு நேரடியாக பிக்பாஸை ஒப்பிட முடியாது, வேண்டியதில்லை என்றாலும் எத்தகைய தெளிவான சமூகப் பார்வை, நடக்கும் எந்த நிகழ்வையும் இன்னொரு கண்கொண்டு பார்க்கும் வல்லமை உள்ளவர்களையும் வசியம் செய்துவிட்ட மகா காரியத்தை பிக்பாஸ் செய்துவிட்டது.

அதற்குக் காரணம் யதார்த்த சூழலில் இன்று நாளுக்கு நாள் சக மனித உறவு என்பது உத்தரவாதமற்ற திசையில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு விதங்களில் உருவெடுக்கும் குடும்பப் பிரச்சினைகள் என்ற பிக்கல்பிடுங்கல் அற்ற, வேளைக்குவேளை சாப்பிடவும், தங்களோடு உலவவிடப்பட்ட இனிய பார்வையும் புன்னகையும் பரிமாறிக்கொள்ளும் மனிதர்களோடு சாப்பிடவும் தூங்கவும் பேசவும், பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வீடு மாதிரியே தோற்றமளிக்காத,  வண்ணக்கலவையிட்ட அட்டைச்சுவர்களின் கலைவடிவமைப்பு என்றாலும், செயற்கையாக உலவவிடப்பட்டவர் அம்மனிதர்கள் என்றாலும் அங்கேயும்கூட மனித மனத்தின் ஆசாபாசங்களின்  பரஸ்பர நட்புறவுகளின் நெருக்கத்தை பார்வையாளர்களை இதயத்தின் நெருக்கத்தோடு அலசியதுதான்.

கிடைத்தற்கரிய வாய்ப்புகளில் ஊடகத்தில் வெற்றிமிக்க ஒரு நிகழ்ச்சியை எனக்கு உருவாக்கமுடியாமல் போனதற்கு பல ஆண்டுகளுக்குமுன் நான் வருந்தியது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படி வருந்தியது நிச்சயம் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்காக இல்லை.

பால்நிலவன்

http://tamil.thehindu.com/opinion/blogs/article19456392.ece?homepage=true

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"இலுமினாட்டியை" எதிர்த்து அரசியல் செய்பவர்கள்,
கொடியவர்களாக சித்தரிக்கபடுகிறார்கள்...
ஹிட்லரும் அப்படிதான் சித்தரிக்கபட்டார்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.