Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்தின் போக்கும் மக்களின் சந்தேகமும்

Featured Replies

அரசாங்கத்தின் போக்கும் மக்களின் சந்தேகமும்

 

நாடு சுதந்­திரம் அடைந்­ததன் பின்னர், பௌத்த மதத்தை மேலா­திக்கம் கொண்­ட­தாக ஆக்கி, அர­சுகள் தமது மனம் ­போன போக்கில் ஆட்சி நடத் ­தின. மதச்­சா­ரர்­பின்மை கடைப்­பி­டிக்­கப்­பட வில்லை. அதே­போன்று சிங்­களம் மட் ­டுமே அரச மொழி­யென்றும். அதற்கு விசேட அதி­கா­ரமும், உரிமையும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஏனைய மொழியில் குறிப்­பாக தமிழ் மொழி, இரண்டாம் நிலைக்குத் தள்­ளப்­பட்­டது. அத்­துடன், சிறு­ பான்மை தேசிய இனங்­களின் உரி­மை­களை, அந்த அர­சுகள் மதித்து செயற்­படத்  தவ­றி­யி­ருந்­தன. மோச­மான ஒரு யுத்த நிலை­மைக்கு நாடு முகம் கொடுப்­ப­தற்கு இத்­த ­கைய ஆட்சிப் போக்கே  வழி­வ­குத்­தி­ருந்­தது.  

 

அனை­வரும் சமம். மதச்­சார்­பற்ற நிலையில் அனை­வ­ருக்கும் சிவில் மற்றும் அர­சியல் சம உரி­மைகள் உண்டு என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அப்­போ­துதான் தேசிய நல்­லி­ணக்­கமும்சக­வாழ்வும் ஐக்­கி­யமும் சாத்­தி­ய­மாகும். அத்­த­கைய நிலையை புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­குமா என்­பது சந்­தே­க­மாக இருக்­கின்­றது.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து, நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும், இன ஐக்­கி­யத்­தையும், ஒற்­று­மை­யையும் உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இந்த அடிப்­ப­டை­யி­லேயே நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­யது; உரு­வாக்­கப்­பட்­டது. 

நல்­லாட்­சியின் கீழ் உரி­மைகள் அனைத்தும் அனைத்து மக்­க­ளுக்கும் சம­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. அந்த உறு­தி­மொ­ழிக்­க­மைய புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது, அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணும் வழி­மு­றை­யாக அமையும் என்று பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. 

ஆனால், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்ற அம்­சங்கள் குறித்து வெளி­யி­டப்­பட்­டுள்ள கருத்­துக்கள், இந்த நம்­பிக்­கையை சிதைத்­து­வி­டுமோ என்ற அச்­சத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக யுத்­தத்­தினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை தேசிய இனங்­க­ளையே இந்த அச்சம் சூழ்ந்­தி­ருக்­கின்­றது. 

பல இனங்­க­ளையும் பல மதங்­க­ளையும் கொண்ட மக்கள் குழு­மங்­களைக் கொண்ட நாட்டில் மதச்­சார்­பற்ற நிலைமை உரு­வாக்­கப்­பட வேண்டும். அனைத்து மக்­களும் அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை உடை­ய­வர்­க­ளாகத் திகழ வேண்டும். இந்த சம உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத கார­ணத்­தி­னா­லேயே நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் அடைந்த நாள் முத­லாக உரி­மை­க­ளுக்­கான போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்தப் போராட்­டங்கள் இன்னும் முடி­வின்றி தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.  

நாடு சுதந்­திரம் அடைந்­ததன் பின்னர், பௌத்த மதத்தை மேலா­திக்கம் கொண்­ட­தாக ஆக்கி, அர­சுகள் தமது மனம்­போன போக்கில் ஆட்சி நடத்­தின. மதச்­சா­ர்­பின்மை கடைப்­பி­டிக்­கப்­பட வில்லை. அதே­போன்று சிங்­களம் மட்­டுமே அரச மொழி­யென்றும். அதற்கு விசேட அதி­கா­ரமும், உரிமையும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஏனைய மொழிகளில் குறிப்­பாக தமிழ் மொழி, இரண்டாம் நிலைக்குத் தள்­ளப்­பட்­டது. அத்­துடன், சிறு­பான்மை தேசிய இனங்­களின் உரி­மை­களை, அந்த அர­சுகள் மதித்து செயற்­படத் தவ­றி­யி­ருந்­தன. மோச­மான ஒரு யுத்த நிலை­மைக்கு நாடு முகம் கொடுப்­ப­தற்கு இத்­த­கைய ஆட்சிப் போக்கே வழி­வ­குத்­தி­ருந்­தது. 

இரா­ஜ­தந்­திர ரீதி­யிலும், தனக்கே உரிய அர­சியல் தந்­தி­ரோ­பாய வழி­களின் மூல­மா­கவும், முன்­னைய அர­சாங்கம், முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­தது. ஆயினும், யுத்தம் ஒன்று மூள்­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருந்த பிரச்­சி­னைக்கும், அத­னோடு இணைந்த விவ­கா­ரங்­க­ளுக்கும் அது தீர்வு காண­வில்லை.

யுத்தம் தந்த படிப்­பினை 

இந்த நாடு சக­ல­ருக்கும் உரி­யது. சகல மக்­களும் சம உரிமை உடை­ய­வர்­க­ளாக வாழ வேண்­டி­யது அவ­சியம். அத்­த­கைய நிலை­மையை தாம­த­மின்றி உரு­வாக்க வேண்டும்.  அப்­போ­துதான் நாடு சுபீட்­ச­ம­டையும் என்­பது முப்­பது வருட கால யுத்தம் தந்த முக்­கி­ய­மான படிப்­பி­னை­யாகும்.  

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் இந்த படிப்­பினை மனதில் கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சக­ல­ரோக நிவ­ார­ணி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு பிரச்­சி­னைகள் பல­வற்­றிற்கும் தீர்வு காணும் வகையில் அமைந்­தி­ருக்கும் என்ற உத்­த­ர­வாதம் இதனால் காற்றில் கரைந்­து­விட்­ட­தா­கவே தோன்­று­கின்­றது.

புதிய அர­சி­யல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் முன்­னேற்றம் காணப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பல விட­யங்­களில் கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில், புதிய அர­சி­ய­ல­மைப்பின் உரு­வாக்க நிலை­மைகள் குறித்து, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. 

மத உரி­மைகள் தொடர்­பான விட­யங்கள் குறித்து பேசு­கையில், பௌத்த மதத்­திற்கு தற்­போது நடை­மு­றையில் உள்ள அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்ள விசேட அந்­தஸ்தில் எந்­த­வித மாற்­றங்­களும் செய்­யப்­ப­ட­மாட்­டாது என தெரி­வித்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஏனைய மதங்கள் எவ்­வாறு சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­டலாம் என்­பது குறித்து பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­ற­வுள்­ளன என குறிப்­பிட்­டுள்ளார். 

இது பற்றி தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் சார்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன், மத உரி­மைகள் குறித்து இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது என கூறி­யுள்ளார். அத்­துடன் பௌத்த மதத்­திற்கு விசேட அந்­தஸ்து அளிக்­கப்­படும் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள அவர், ஏனைய மதங்­க­ளுக்கு சம அந்­தஸ்து வழங்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார். பௌத்த மதத்­திற்கு விசேட அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்ள அதே­நேரம், ஏனைய மதங்­க­ளுக்கு வழி­பாட்டு உரி­மையை எவ்­வாறு வழங்­கு­வது என்­பது குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது என்­பதே பிர­த­மரின் நிலைப்­பா­டாகும். 

எனினும் பௌத்த மதத்­திற்கு விசேட அந்­தஸ்து என்ற நிலையில் மாற்றம் ஏற்­ப­ட­மாட்­டாது என்­பது நிச்­சயம். அதே­வேளை மதச்­சார்­பற்ற கொள்­கையின் அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு அமையப் போவ­தில்லை என்­பதும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

மதச்­சார்­பற்ற நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மதங்­க­ளுக்கும் சம உரி­மையும் அந்­தஸ்தும் வழங்­கப்­பட வேண்டும் என்ற தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு அடிப்­ப­டை­யான நிலைப்­பாடு புதிய அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெற மாட்­டாது என்­பதும் உறு­தி­யா­கி­யி­ருக்­கின்­றது.  

பல இனங்­க­ளையும், பல மதங்­க­ளையும் சேர்ந்த பல்­வே­று­பட்ட இனக்­கு­ழு­மங்கள் வாழ்­கின்ற இந்த நாட்டில் மதச்­சார்­பற்ற கொள்­கையின் அடிப்­ப­டையில் ஆட்சி முறைமை அமைய வேண்டும். மதங்கள் அனைத்தும் சம உரிமை உடை­ய­வை­க­ளாக இருக்க வேண்டும். 

அதே­போன்று சகல இன மக்­க­ளி­னதும் சமூக, அர­சியல், பொரு­ள­ாதார, கலை கலா­சார உரி­மைகள் சம­மா­ன­வை­யாக அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அத்­துடன் அனைத்து இன மக்­க­ளுக்கும் அர­சியல் மற்றும் ஆட்­சி­ய­தி­கார உரி­மைகள், மீளப் பெற முடி­யாத வகையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்ற விட­யங்­களும் நடந்து முடிந்த நீண்ட யுத்­தத்தின் மூலம் படிப்­பி­னை­க­ளாக உணர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஆனால், இந்த படிப்­பி­னைகள் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்ற முயற்­சி­க­ளிலோ அல்­லது, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­கின்ற முனைப்­புக்­க­ளிலோ முக்­கிய இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இந்த நாட்டில் ஏற்­க­னவே உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­களில் பௌத்த மதத்­திற்கு விசேட இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனைய மதங்­களைச் சேர்ந்­த­வர்­களும் தமது மத உரி­மை­களைப் பேணிப் பாது­காப்­ப­தற்கும், அவற்றைப் பின்­பற்­று­வ­தற்கும் அர­சி­ய­ல­மைப்பில் வழி செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் பௌத்த மதத்­திற்கு அளிக்­கப்­பட்டுள்ள விசேட இட­மா­னது, ஏனைய மதங்­க­ளிலும் பார்க்க பௌத்த மதமே முதன்­மை­யா­னது. முன்­னு­ரிமை பெறு­கின்ற வல்­லமை உடை­யது என்ற நிலைப்­பாட்டில் காரி­யங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. மொத்­தத்தில் அரச மத­மாக பௌத்த மதமே அரி­யா­ச­னத்தில் கோலோச்­சு­கின்­றது. 

அவ்­வாறு உயர்ந்­ததோர் இடத்தில் இருந்த போதிலும் பௌத்த மதத்­திற்கு இடை­யூறு விளை­விக்­கப்­ப­டு­கின்­றது. ஏனைய மதங்­களைச் சார்ந்­த­வர்கள் அதனை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள் என குற்றம் சுமத்தி மத வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகை­யி­லான நட­வ­டிக்­கைகள் பௌத்த மதத் தலை­வர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வகையில் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் முதன்மை இடத்தைப் பெற்­றி­ருக்­கின்றார். 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும், கத்­தோ­லிக்­கர்கள் அல்­லாத கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் எண்­ணற்ற வன்­முறை தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் வர்த்­தக நக­ரங்கள் தாக்­கப்­பட்டு, வர்த்­தக நிலை­யங்கள் அடித்து நொறுக்­கப்­பட்­ட­துடன், தீயிட்டு நாச­மாக்­கப்­பட்­டி­ருக்கின்றன. 

முன்­னைய அர­சாங்­கத்தில் தோற்றம் பெற்ற பொது­பல சேனா என்ற தீவிர பௌத்த மத­வாத அமைப்பின் செய­லாளர் என்ற பதவி நிலையில் ஞான­சார தேரர் இந்த மத­வெ­றுப்­பு­ணர்­வுக்கும் வன்­மு­றை­க­ளுக்கும் முக்­கிய கார­ண­கர்த்­தா­வாக இருந்­தி­ருக்­கின்றார் என்­பது பொலிஸ் விசா­ர­ணை­களின் மூலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நேரடி சாட்­சி­யங்­களின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. 

நல்­லாட்­சி­யிலும் தொடரும் மத­வெ­றுப்­பு­ணர்வு 

முன்­னைய ஆட்­சியில் தன்­னி­க­ரற்­ற­வ­ரா­கவும், தடுப்பார் எவ­ரு­மற்ற நிலை­யிலும் செயற்­பட்டு வந்த ஞான­சார தேரர் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஓர­ளவு அமை­தி­யான போக்கைக் கடைப்­பி­டித்­தி­ருந்தார். 

ஆயினும், அவ­ரு­டைய அமை­திப்­போக்கு நீடிக்­க­வில்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் அவர் தனது சுய­ரூ­பத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் பல சந்­தர்ப்­பங்­களில் நடந்து கொண்டார். 

தொடர்ச்­சி­யாக நாட்டின் பல்­வேறு இடங்­க­ளிலும் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் தனித்­த­னி­யாகத் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட சம்­ப­வங்­களின் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மத­வெ­றுப்­பு­ணர்வு தீவி­ர­மாகத் தலை­யெ­டுத்­தி­ருந்­தது. 

அதே­நேரம் சில இடங்­களில் முஸ்­லிம்­களைப் பகி­ரங்­க­மாக அச்­சு­றுத்தும் வகையில் ஞான­சா­ர­தே­ரரும், அவ­ரு­டைய நேரடி ஆத­ர­வா­ளர்­களும் நடந்து கொண்­டனர். ஆனால் பல சந்­தர்ப்­பங்­களில் சட்டம் அவரைக் கண்­டு­கொள்­ளவே இல்லை.  

முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட உதிரிச் சம்­ப­வங்கள் தொடர்பில் பொலி­சாரின் விசா­ரணை நட­வ­டிக்­கைகள் வினைத்­தி­ற­னற்ற வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. ஒன்­றி­ரண்டு சந்­தர்ப்­பங்­களில் நேரடி குற்­றச்­சாட்டு முறைப்­பா­டு­களைத் தொடர்ந்து பொலிசார் அவர் மீது நட­வ­டிக்கை எடுத்த போதிலும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மத வெறுப்­பு­ணர்­வை­யூட்டும் போக்­கிலும், வன்­மு­றை­க­ளிலும் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யி­லேயே, ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வொன்று தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்சு அலு­வ­ல­கத்­திற்குள் புகுந்து அவரைச் சந்­திக்க வேண்டும் என்று அடம் பிடித்­தி­ருந்­தது. தேசிய சக­வாழ்வு அமைச்­சுக்கு அமைச்சர் மனோ கணேசன் பொருத்­த­மற்­றவர் என வெறுப்­பூட்டத்தக்க வகையில் வசை­பாடும் முறையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்த ஞான­சார தேரர் நேர­டி­யாக அமைச்சர் மனோ கணே­ச­னுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டி­ருந்தார். 

எனினும் உணர்ச்­சி­வ­சப்­ப­டாத நிலையில் மிகவும் சாது­ரி­ய­மாக ஞான­சார தேரரைக் கையாண்டு, அவ­ரிடம் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்த அமைச்சர் மனோ கணேசன், ஞான­சார தேரரின் அத்­து­மீ­றிய செயற்­பாடு தொடர்­பாக அமைச்­ச­ர­வையில் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து, இனங்­க­ளுக்­கி­டையில் வெறுப்­பு­ணர்­வையும், பகை­யு­ணர்­வையும் தூண்டும் வகை­யி­லான ஞான­சார தேரரின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய கட்­டாய நிலைமை அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்­தது, 

இந்தப் பின்­ன­ணியில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பொலிசார் விசா­ர­ணை­க­ளையும், நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். நீதி­மன்­றமும், அவர் மீதான தனது கவ­னத்தைச் செலுத்­தி­யது. இத­னை­ய­டுத்து அவரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 

ஆயினும் தலை­ம­றை­வா­கிய ஞான­சார தேரரைக் கண்­டு­பி­டித்து கைது செய்­வ­தற்­கென அமைக்­கப்­பட்­டி­ருந்த நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஒரு மாத காலம் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்த போதிலும், அவரைக் கைது செய்ய முடி­யாமல் போயி­ருந்­தது. 

இதற்­கி­டையில் ஞான­சார தேர­ருக்கு உயி­ரச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அதன் கார­ண­மா­கவே அவர் மறைந்து வாழ்கின்றார் என்றும் பொது­ப­ல­சேனா அமைப்பு பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்­தது.  அத்­துடன் திடீ­ரென அவர் நீதி­மன்­­றத்தில் சர­ண­டைந்தார். ஆயினும் அவரைக் கைது செய்து விசா­ர­ணை­களின் பின்னர் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­படுத்­தினர். எனினும், அவரை பிணையில் விடு­தலை செய்­வ­தற்கு பொலிசார் ஆட்­சே­பனை எத­னையும் தெரி­விக்­காத நிலையில் அவர் பிணையில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்டார். 

இனங்­க­ளுக்­கி­டையில் மத­வெ­றுப்புணர்வை ஊட்டி, இனக்­கு­ரோ­தத்­தையும் மத ரீதி­யான வன்­மு­றை­க­ளுக்குத் தூபம் போட்­டி­ருந்த ஞான­சார தேரர் மறைந்து வாழ்ந்த போது அவரைக் கைது செய்ய முடி­யாத நிலைமை தங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­த­தாக பொலிஸ் துறை பேச்­சா­ளரே பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். 

வேறு மதத்தைச் சேர்ந்த மத­குரு ஒருவர், இனங்­க­ளுக்­கி­டையில் மத வெறுப்­பு­ணர்­வையும், குரோ­தத்­தையும் ஏற்­ப­டுத்தும் வகையில் ஞான­சார தேரரைப் போன்று கருத்­துக்­களைப் பரப்­பி­யி­ருந்தால், சட்டம் அவர் மீது உட­ன­டி­யாகப் பாய்ந்­தி­ருக்கும். அந்தப் பாய்ச்சலா­னது கடு­மை­யா­ன­தா­கவும் இருந்­தி­ருக்கும் என்­பதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் இல்லை.  ஆனால் நாட்டில் பௌத்த மதம் மேன்­மை­யு­டை­ய­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அதற்கு மேலான இடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மா­கவே, தேசிய நல்­லி­ணக்­கத்தை  ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஒரு சூழலில் அதற்கு நேர் விரோ­த­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த போதிலும், பௌத்த மத குரு­வா­கிய ஞான­சார தேர­ருக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக பொலிஸா­ரினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாமல் போயி­ருந்­தது. 

சட்­டமும் ஒழுங்கும் நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. அது சிவில் நிலை­மை­க­ளையோ, பதவி நிலை­க­ளையோ, மத­ரீ­தி­யான அந்­தஸ்­தையோ பார்ப்­ப­தில்லை. ஆனால் இலங்­கையில் சட்­டமும் ஒழுங்கும் பௌத்த மதத்­திற்கு வளைந்து கொடுக்கும் தன்மை கொண்­ட­தாக உள்­ளது என்­பதை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி ஞான­சார தேரர் தொடர்­பி­லான பொலி­சாரின் அணு­கு­முறை நிரூ­பித்­தி­ருக்­கின்­றது. 

மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி லக்ஸன் டயஸ்

முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்கள் மத ரீதி­யான ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு அப்பால் கிறிஸ்­த­வர்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மீதான தாக்­கு­தல்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆயினும் முஸ்­லிம்கள் மீதான மத­ரீ­தி­யான தாக்­கு­தல்­களைப் போன்று கிறிஸ்­த­வர்கள் மீதான தாக்­கு­தல்கள் பொது­மக்­களின் கவ­னத்தை அதிக அளவில் ஈர்த்­தி­ருக்­க­வில்லை. ஆனால், அந்தத் தாக்­கு­தல்கள் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் அரச சார்­பற்ற அமைப்­புக்கள் மீதான அரச தரப்பு தாக்­கு­தல்­க­ளாகப் பரி­ண­மித்­தி­ருக்­கின்­றன. 

தேசிய கிறிஸ்­தவ சுவி­சேஷ ஐக்­கியம் என்ற கிறிஸ்­தவ அமைப்பு கிறிஸ்­த­வர்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் கிறிஸ்­தவ வழி­பாட்டுத் தலங்கள் மீதான தாக்­குதல்­களை அட்­ட­வ­ணைப்­ப­டுத்தி ஆவ­ண­மாகத் தயா­ரித்­தி­ருக்­கின்­றது. இந்த மத­வெ­றுப்­பு­ணர்வு தாக்­கு­தல்கள் குறித்து பல்­வேறு கட்­டு­ரை­களும் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. 

இவற்றைத் தொகுத்து – அவற்றை ஆதா­ர­மாகக் கொண்டு மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி லக்ஸன் டயஸ் ஒரு தொலைக்­காட்சி சேவையின் அர­சியல் நிகழ்­வொன்றில் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார். 

கிறிஸ்­தவ வழி­பாட்டுத் தலங்கள் மீது 2015 ஆம் ஆண்டு முதல் 195 தாக்­கு­தல்கள் மற்றும் துன்­பு­றுத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் அப்­போது கூறி­யி­ருந்தார். அவ­ரு­டைய அந்தக் கருத்­துக்­களை நேர­டி­யாகக் கண்­டித்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பதில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். 

இந்தத் தாக்­கு­தல்கள் குறித்து ஜனா­தி­பதி ரோமன் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையைத் தொடர்பு கொண்டு சட்­டத்­த­ரணி லக்ஸன் டயஸ் தெரி­வித்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுக்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காகக் கேட்­ட­போது, அத்­த­கைய தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்­தி­ருந்­த­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார். 

இதைத் தொடர்ந்து, தொலைக்­காட்சிச் சேவை­யொன்றில் இது குறித்து, கருத்து வெளி­யிட்ட நீதி­ய­மைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்.ஷ, கிறிஸ்­தவ வழி­பாட்டுத் தலங்கள் மீதான தாக்­கு­தல்கள் பற்­றிய ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களை மேற்கோள் காட்டி, சட்­டத்­த­ரணி லக்ஸன் டயஸ் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நாட்டு மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரா­விட்டால், அவர் சட்­டத்­து­றையில் சேவை­யாற்­று­வதில் இருந்து நீக்­கு­வ­தற்­கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அச்சுறுத்தும் தொனியில் கூறியிருந்தார். 

பிரபலமிக்க மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் - அதுவும் நீதி அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த அச்சுறுத்தல் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அதிர்ச்சியடையச் செய் திருக்கின்றது. 

முன்னைய அரசாங்கத்தில் நிலவிய மனித உரிமைகளுக்கு எதிரான நிலைமைக்கே புதிய அரசாங்கமும் நழுவிச் சென்று கொண் டிருக்கின்றதோ என்று அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றார்கள். 

நல்லாட்சி அரசாங்கத்தில் இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது குறித்து அவர்கள் பெரிதும் கவலையடைந்திருக்கின்றார்கள். இத்தகைய நிலைமை தொடரக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இது குறித்து அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனால், சீரழிந்து செல்லும் மனித உரிமை நிலைமைகளை சீர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின் றார்கள். 

அதேவேளை நல்லாட்சி புரிவதாக உறுதி யளித்து ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புக்களின் நிலைமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அவற்றுக்கு உகந்த பாதுகாப்வை வழங்குவ தற்கும் முன்வர வேண்டும் என அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் வலியுறுத்தியி ருக்கின்றார்கள்.

மனித உரிமை நிலைமைகளை மேம்படு த்து வதற்கும் மதச்சார்பற்ற நிலைமையைப் பேணுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் படாவிட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் போக்கு விபரீதமான விளைவுகளுக்கே வழி வகுக்கும் என புத்திஜீவிகளும் மனித உரி மைச் செயற்பாட்டாளர்களும் குறிப்பிட்டி ருக்கின்றார்கள். அத்துடன் மதச்சார்பற்ற கொள்கையின் கீழ் மதங்கள் அனைத்தினதும் சுதந்திரத்தையும் உரிமைகளையும் உறுதிப் படுத்தாவிட்டால், புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியும் அர்த் தமற்றதாகிவிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.  

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.