Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர்

Featured Replies

சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர் - சுரேஸ் பிரேமச்சந்திரன்!

சுமந்திரன் நாடாளுமன்றத்தை விட மாகாணசபைக்கே பொருத்தமானவர் – சுரேஸ் பிரேமச்சந்திரன்!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் சி.வி.வக்னேஸ்வரனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே இக்குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்.

இதன்காரணமாக வட மாகாணத்தில் முதலமைச்சர், அவைத் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரது செயற்பாடுகளிலும் சுமந்திரன் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்.

விக்னேஸ்வரனிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே அண்மையில் அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுமந்திரனும் அவரது குழுவினரும் கொண்டுவந்தனர் எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=72479

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததேர்தலின்போது அவர்(சும்) ஐ.தே.க அல்லது சி.ல.சு.க முலமாக நாடாளுமன்றம் சென்று வெளிநாட்டமைச்சராகி இவற்றை வேட்டியைக் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறார்

  • தொடங்கியவர்
சுரேஸ் பிரேமச்சந்திரன் சுமந்திரனுக்கு சவால்
 
15034.jpg
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தலிலேயோ போட்டி யிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் சவால் விடுத்துள்ளார்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்தி ரன் அண்மையில் வடமாகாண முதலமை ச்சரின் வீட்டிற்கு முன்னாலுள்ள வீதி ஒடுக்க மானது. அதில் நூறு பேரிருந்தாலும் பாரிய ஜனப்பிரளயம் போன்றே தென்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்தி ரன் அண்மையில் வடமாகாண முதலமை ச்சரின் வீட்டிற்கு முன்னா
அதனைக் கண்டு தனக்கு மக்கள் சக்தி யிருக்கிறது என முதலமைச்சர் நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைப்பாராகவிரு ந்தால் மாகாண சபையைக் கலைத்துவிட் டுத் தேர்தலை நடத்திப் பார்க்கட்டும் என தெரி வித்திருந்தார்.
இது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ்மக்களின் உரிமைகளை வலியுறு த்தியும், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பி னரை எதிர்த்து எழுக தமிழ்ப் பேரணி யொன்று இடம்பெற்றது.
 
யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற அந்த எழுக தமிழ்ப் பேரணியில் எத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட னர் என்பது சுமந்திரனுக்குத் தெரியும்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரா கக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கெதிராக சமூக வலைத்தளங் கள் மூலமாக இளைஞர்கள் முன்வைத்த கோரி க்கைக்கு இணங்க உடனடியாகவே முத லமைச்சரின் இல்லத்திற்கு முன்பாகக் கூடிய இளைஞர் கூட்டத்தையும்,
இரண்டாம் நாளில் வடமாகாணம் தழு விய ரீதியில் வெற்றிகரமாகக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையும், மூவா யிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்த தும் சுமந்திரன் போன்றவர்களுக்கு ஏற்றுக் கொள்வது கடினமாகத்தானிருக்கும்.
ஏனெனில், முதலமைச்சருக்கு ஆதர வான மக்கள் எழுச்சி அவர்களை மிரட்டியுள் ளது என்பதுதான் உண்மை.
 
இதனால்தான் வடமாகாண முதலமை ச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். வடமாகாண சபையைக் கலை த்து விட்டு அடுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்றெல்லாம் சுமந்திரன் கூறுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சும ந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜி னாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர் தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களி லேயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும்.
 
அவ்வாறு சுமந்திரன் வெற்றியடைந்த பின்னர் குறிப்பிட்டால் அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருக்கும்.
எமது மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் சகல உரிமைகளையும் விற்றுப் பிழைப்பவ ர்கள் என்று பெயரெடுத்த சுமந்திரன் போன் றவர்கள் வடமாகாண மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற முதலமைச்சருக்கு எதி ராகச் சவால் விடுவது அர்த்தமற்ற, சிறு பிள்ளைத்தனமான செயல் எனவும் கடுமையாகச் சாடினார்.                    

 

http://valampurii.lk/valampurii/content.php?id=15034&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்கதிர்காமருக்கு எடுத்துச் சொல்ற மாதிரி சொன்னால் அவர் அதைப்புரிந்து கொள்ளுவார் எண்டு நம்பிறன். காவடியை தோளிலை தூக்கி வைத்து செதிலும் குத்தினாப்போலை இப்பபோய் ஆடவேணாம் எண்டால் யாரும் ஆடாமை இருப்பினமோ?. பெரிய கதிர்காமரை போல சின்னவரும் மண்டைக்காறர்தான் ஒத்துக்கொள்றன். இப்ப இருக்கிற நிலைமையிலை தமிழர் பக்கம் அறிவுசார் மக்கள் சரியான குறைவு அதனாலை சிறு புல்லும் பல்லு குத்த உதவும் என்று நினைச்சு ஒருவரை ஒருவர் புரிஞ்சு மக்களுக்காக பாடுபடுங்கோ அல்லது திரும்பவும் எங்களுக்கு கிடைக்கப்போறது நிலமில்லை மணல் தான். ஆனால் மண்டையை எங்கை என்னத்துக்கு பாவிக்கிறது என்பதிலைதான் தமிழனுக்கு சரியான தெளிவில்லை. சிலர் அதை புரியாமை செய்யினம் சிலர் நல்ல புரிதலுடன் செய்யினம். ஆனால் முதல்வர் பெரிய "தம்பி"யை இப்போதைக்கு அசைக்கேலும் எண்டு நான் நினைக்கேல்லை தானா நினைச்சி விரும்பி விலகி போனால்தான் உண்டு ஆனால் தன்னை நம்பின சனங்களுக்கு செய்யும் துரோகம் எண்டுதான் அந்த மனுசன் நினைப்பார். இதுக்குள்ளை எதிர்கட்சி தலைவரின்ரை சிலமனையும் காணேல்லை. மந்திரிகளின் நியமனம் பற்றி கூட்டணியின்ரை பங்காளிக்கட்சிகளையும் கலந்து ஆலோசிக்கவேணும் எண்டு தலை சொல்லி சம்சும்முக்கு ஆப்பை  பின்னாலை இறுக்கிப்போட்டுது. பொறுத்திருந்து பார்ப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.