Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் – கிழக்கந்தைக் கிராம மக்கள்!

Featured Replies

நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் - கிழக்கந்தைக் கிராம மக்கள்!

நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் – கிழக்கந்தைக் கிராம மக்கள்!

அடுத்த தேர்தலுக்கு சம்பந்தன் ஐயாவோ அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு வாக்குக் கேட்டுவந்தால் திருக்கை வாலால் கட்டாயம் அடிப்பேன் என கிழக்கந்தை கிராமத்து ஆர்டிஎஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யுத்தம் இடம்பெற்றவேளை தாம் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து சென்றவேளை சவக்காலையில் குடியமர்த்தப்பட்டதாகவும், பின்னர் யுத்தம் காரணமாக தாம் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் மூன்றுஇடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும் மூன்று தடவையும் தாம் சவக்காலையில் குடியேற்றம் செய்யப்பட்டோம்.

நாங்கள் இறுதியாக கிளிவெட்டி என்ற இடத்திலும் சவக்காலையிலேயே குடியேற்றம் குடியேற்றம் செய்யப்பட்டோம், அங்கு இருக்கமுடியாத நிலையில் பிரதேச செயலாளரும், அட்மிரல் கருணாதிலகவாலும் தாம் நீங்கள் இங்கு குடியேறினால் உங்களது கிராத்தை சிங்கப்பூராக மாற்றித் தருவோம் எனக் கூறி 2009ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்திற்குப் பின்னர் இங்கே குடியேற்றம் செய்தனர்.

குடியேற்றம் செய்யப்பட்டதும் முதற்தடவையாக சம்பந்தன் ஐயாஇந்த இடத்திற்கு வந்தவர், அப்போது நான் அவரிடம் சொன்னேன் நான் உங்களை முதலில் 18 வயதில் சந்தித்தேன். அப்போது நீங்கள் விடுதலைப் புலிகளின் பாதுகாப்போடு வந்தீர்கள் அப்போது நான் சண்டைபிடிக்கச் சொன்னீர்கள் இதுக்கு மேல கதைக்கிறதுக்கு உங்களுக்கு இடமில்லையென்று. இப்ப சண்டை பிடிக்கச் சொல்லுகின்றார் நாங்கள் காட்டான்கள் என.

இந்நிலையில், எமது கிராமத்தில் யானைத் தொல்லை அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்த வேலிகளில் கொழுவுவதற்காக 9 மின்குமிழ்கள் கேட்டோம். அதற்காக எத்தனையோ தடவைகள் சம்பந்தன் ஐயாவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளோம். ஒவ்வொரு தடவையும் போகும்போதும் அவர் இந்தியா, கொழும்பு, பாராளுமன்றம் போட்டார் எனக் கூறுவார்கள்.

ஆனால் இன்றுவரை எமக்கு மின்குமிழ்கள் கிடைக்கவில்லை. இன்று எங்களின் இடத்தில் இருக்கும் கிணறுகளில் நீர் இல்லை. அனால் விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற சொத்து ஒன்று மட்டும் எங்கள் அனைவருக்கும் நீர் தருகின்றது.

அன்று சம்பந்தன் ஐயா சொன்னவர் பேச்சென்றால் என்னுடன் பேசுங்கோ, சண்டையெண்டால் தம்பியோட பிடியுங்கோ. ஆனால் இன்று தம்பி என்ற வார்த்தையே பயன்படுத்துகிறாரில்லை.

அடுத்த தேர்தலுக்கு வாக்குக் கேட்டு சம்பந்தன் ஐயாவோ அல்லது அவரது ஆட்கள் வந்தால் திருக்கை வால் வெட்டி வைத்துள்ளேன். அதனால் நிச்சயம் அடிப்பேன். அதன்பின் என்னை சுட்டாலும் பரவாயில்லையெனத் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=72656

20 hours ago, Athavan CH said:

அடுத்த தேர்தலுக்கு சம்பந்தன் ஐயாவோ அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு வாக்குக் கேட்டுவந்தால் திருக்கை வாலால் கட்டாயம் அடிப்பேன் என கிழக்கந்தை கிராமத்து ஆர்டிஎஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் கவனமா அடிக்கோணும்.

கொஞ்சம் ஏமாந்தாலும் சம்பந்தன் திருக்கை வாலை பறித்துச் சென்று ரணிலுக்கும் மைதிரிக்கும் கறிசமைத்து விருந்து வைத்திடுவார்!

  • கருத்துக்கள உறவுகள்
On 04/07/2017 at 5:36 PM, Athavan CH said:
நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் - கிழக்கந்தைக் கிராம மக்கள்!

நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் – கிழக்கந்தைக் கிராம மக்கள்!

இரண்டு  விடயங்கள் மக்கள் மனங்களில் இருப்பது தெரிகிறது

ஒன்று இவர்களை  விரட்டணும்

அடுத்தது இவர்களை  விரட்டுவதாயின் உயிரைக்கொடுக்கவேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இரண்டு  விடயங்கள் மக்கள் மனங்களில் இருப்பது தெரிகிறது

ஒன்று இவர்களை  விரட்டணும்

அடுத்தது இவர்களை  விரட்டுவதாயின் உயிரைக்கொடுக்கவேண்டி வரும்.

எது எப்படியோ  அந்த இரண்டையும் இங்கிருந்து நாம் செய்யப் போவதில்லை..:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சுவைப்பிரியன் said:

எது எப்படியோ  அந்த இரண்டையும் இங்கிருந்து நாம் செய்யப் போவதில்லை..:rolleyes:

நாம  ஒரே   சாதி  தானே..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.