Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோதனைக்களம்

Featured Replies

சோதனைக்களம்

 

தமிழ் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வாக புதிய அர­சி­ய­ ல­மைப்பில் அர­சியல் தீர்வு கிட்­டுமா என்­பது சந்­தே­க­ மாக உள்ள நிலை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பும் அவ­சி ­ய­மில்லை. அர­சி­ய­ல­மைப்புத் திருத்தமும் தேவையில்லை என்ற பௌத்த மத பீடத் தலைவர்களான மகாநாயக்கர்களின் கருத்து வெளியாகியிருக்கின்றது. மகாநாயக்கர்களின் இந்தக் கருத்தானது, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆட்டம் காணச் செய்திருப்பதைப் போலவே கூட்டமைப்பின் தலைமையையும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. 

 

புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது அர­சி­ய­ல­மைப்­புக்­கான திருத்­தமோ இப்­போது அவ­சி­ய­மில்லை என்று பௌத்த மகா­சங்­கத்­தினர் அறி­வித்­துள்­ள­தை­ய­டுத்து, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்சிகள் ஆணி வேரில் ஆட்டம் கண்­டுள்­ளது. 

பௌத்த மதத்தின் பிரி­வு­க­ளான நான்கு நிக்­கா­யாக்­களின் மகா­நா­யக்க தேரர்­களும், பௌத்த சங்க சபை­களும் இணைந்து இந்தத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பும் அவ­சி­ய­மில்லை. அர­சி­ய­ல­மைப்­புக்­கான திருத்­தமும் இப்­போ­தைக்கு அவ­சி­ய­மில்லை என்­பது அவர்­க­ளு­டைய முடிவு. 

இலங்கை அர­சி­யலில் மிகவும் வலு­வா­ன­தொரு சக்­தி­யாக இந்த மகா­சங்­கத்­தினர் விளங்­கு­கின்­றார்கள். அவர்கள் நிக்­கா­யாக்­க­ளாகப் பிரிந்­துள்ள போதிலும் ஏனைய பௌத்த சங்க சபை­க­ளுடன் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராகக் குரல் கொடுத்­தி­ருப்­பது, நாட்டின் அர­சியல் களத்­தையே அதிரச் செய்­தி­ருக்­கின்­றது. 

பௌத்த சிங்­கள மக்­களே இந்த நாட்டின் பெரும்­பான்­மை­யி­ன­ராகத் திகழ்­கின்­றனர். அவர்­களில் ஏறக்­கு­றைய அனை­வரும் மகா­நா­யக்க தேரர்­களின் முடி­வுகள் தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய செயற்­ப­டு­வார்கள். அந்தத் தீர்­மா­னங்­களை எதிர்க்­கவோ அல்­லது அதற்கு முர­ணா­கவோ செயற்­ப­ட­மாட்­டார்கள். அவ்­வாறு அவர்கள் ஒரு­போதும் துணிந்­த­தில்லை.

மகா­நா­யக்­கர்கள் எடுக்­கின்ற முடி­வுகள் சரி­யான முடி­வு­கள்­தானா என்­பதை அவர்கள் ஒரு­போதும் விமர்­சிப்­ப­தற்குத் துணி­வ­தில்லை. 

எனவே பௌத்த சிங்­கள மக்­களை வழி­ந­டத்­து­கின்ற வலி­மை­கொண்ட மகா­நா­யக்­கர்கள், புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் தெரி­வித்­துள்ள எதிர்ப்­பா­னது, அடுத்த கட்ட அர­சியல் நட­வ­டிக்கை என்ன என்­பது குறித்த கவ­லை­க­ளையும் கரி­ச­னை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யி­ன­ரா­கிய மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யினர் பல்­வேறு விட­யங்­களில் தடை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார். அவர்­க­ளு­டைய ஒட்­டு­மொத்த சிந்­த­னையின் வெளிப்­பா­டா­கவே பௌத்த மகா­நா­யக்­கர்­களின் அறி­வித்தல் வெளி வந்­தி­ருக்­கின்­றது. 

சைட்டம் எனப்­ப­டு­கின்ற தனியார் மருத்­துவ கல்­லூரி விடயம் தீவி­ர­மாகி, அர­சியல் விவ­கா­ர­மாக அர­சாங்­கத்தை உலுப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நெருக்­க­டிக்கு தீர்வு காண்­பதில் அர­சாங்கம் அல்­லா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது. சைட்டம் மருத்­துவ கல்­லூரி முறைமை முற்­றாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தி அரச வைத்­தியர் சங்­கத்­தினர்  பெரும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றனர். இவர்­களின் வழி­ந­டத்­தலில் நாட்டின் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மருத்­துவ பீடங்­களைச் சேர்ந்த மாண­வர்கள் சைட்­டத்­திற்கு எதி­ராகக் குரல் கொடுத்து, தொடர்ச்­சி­யாக வகுப்­புக்­களைப் புறக்­க­ணித்து வரு­கின்­றார்கள். அது மட்­டு­மல்­லாமல், தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சுகா­தார அமைச்­சுகுள் அத்­து­மீறி பிர­வே­சிப்­ப­தற்கு முயற்­சித்­ததன் மூலம், அர­சாங்­கத்­திற்குப் பெரும் தலை­யி­டியைக் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். 

இந்த நிலையில் சைட்டம் விவ­கா­ரத்­திற்கு அர­சாங்கம் உட­ன­டி­யாகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்­கை­யையும் மகா­நா­யக்­கர்கள் முன்­வைத்­தி­ருக்­கின்­றார்கள். அதே­வேளை, வலிந்து காணாமல் ஆக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களைப் பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்­ட­மூ­லத்தைப் பின்­போட வேண்டும்.  தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரப்­பட வேண்­டும் மென்றும் அவர்கள் தீர்­மா­னத்தின் ஊடாக அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

அது மட்­டு­மல்­லாமல், நாட்டில் நில­வு­கின்ற இன, மத அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­களின் பின்­ன­ணியில் பௌத்த மதத்­தி­ன­ருக்கு ஏற்­பட்­டுள்ள கவ­லைகள், துய­ரங்­க­ளுக்குத் தீர்வு காணும் வகையில் விசேட குழு­வொன்று அமைக்­கப்­பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றார்கள். பௌத்த மதம் சார்ந்த தொல்­லியல் முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­களைப் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அந்த கோரிக்­கையில் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். 

அர­சாங்­கத்தின் எதிர்­வினை 

இவ்­வாறு பல விட­யங்கள் குறித்து ஆராய்ந்து தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டுள்ள மகா­நா­யக்­கர்­க­ளு­டைய கோரிக்­கை­களில், ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­ப­டு­தலைத் தடுக்கும் சட்­ட­மூ­லத்தை பின்­போட வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த அதே­நேரம், அதனை ஏற்றுச் செயற்­பட்­டதைப் போன்று அர­சாங்கத்தால் உடன­டி­யா­கவே அதனை ஒத்தி வைத்திருக்கின்றது. இந்த சட்­ட­மூலம் தொடர்­பி­லான இரண்­டா­வது வாசிப்பு மீதான விவாதம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட இருந்த வேளை­யி­லேயே அர­சாங்கம் இவ்­வாறு அதனை திடீ­ரென பின்­போட்­டி­ருக்­கின்­றது. 

அர­சாங்கம் மிகவும் முக்­கிய கார­ணங்­களை முன்­னிட்டு, இந்த சட்­ட­மூ­லத்தைப் பின்­போட்­டி­ருக்­கலாம். ஆயினும், அது­பற்­றிய விளக்கம் பாரா­ளு­மன்­றத்­திலோ அல்­லது சபைக்கு வெளி­யிலோ அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனவே, மகா­நா­யக்­கர்­களின் கோரிக்­கைக்கு அமை­வா­கவே இந்த சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் பின்­போட்­டி­ருக்­கின்­றது என்ற முடி­வுக்கு வரு­வ­தற்கு அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் தூண்­டி­யி­ருக்­கின்­றன.   

அந்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் மகா­நா­யக்­கர்­களின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக அர­சாங்கம் செயற்­ப­டுமா? அர­சாங்­கத்­தினால் செயற்­பட முடி­யுமா? என்ற கேள்­விகள் எழுந்­தி­ருக்­கின்­றன. 

மைத்­திரி – ரணில் கூட்டு அர­சாங்­க­மா­னது தேசிய அர­சாங்­க­­மா­கவும் நல்­லாட்­சிக்­கான அர­சாங்­க­மா­கவும் வர்­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நாட்டின் இரண்டு தேசிய பெரும் கட்­சி­க­ளா­கிய சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முதன் முறை­யாக இணைந்து அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்­றன. இதன் கார­ண­மா­கவே இந்த அர­சாங்­கத்தை தேசிய அர­சாங்­க­மாக பலரும் குறிப்­பி­டு­கின்­றார்கள். 

இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்ள போதிலும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் முன்னாள் தலை­வ­ரா­கிய முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ­ஷவின் விசு­வா­சி­க­ளான பல பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், அவ­ரு­டைய தலை­மையில் அதே கட்­சியில் பிரிந்து பொது எதி­ர­ணி­யி­ன­ராகச் செயற்­பட்டு வரு­கின்­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வதில் இவர்கள் முரண்­பா­டான ஒரு போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றார்கள்.

பௌத்த மதத்­திற்கு அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள உயர் நிலையை புதிய அர­சி­ய­ல­மைப்பில் இல்­லாமல் செய்­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பதே, மகா­நா­யக்­கர்­களின் எதிர்ப்­புக்கு முக்­கிய கார­ண­மாகக் கூறப்­ப­டு­கின்­றது. பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஒரு முக்­கிய கூட்­டத்தில், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான முடி­வுகள் பற்றி வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்றில் பௌத்த மதத்திற்­கு­ரிய அந்­தஸ்தைக் குறைப்­ப­தற்­கான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இதற்­கென மூன்று ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகச் சுட்­டிக்­காட்டி, அது­பற்றி பாரா­ளு­மன்­றத்­திலும் சூடான விவா­தங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.  

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான உத்­தேச வரைபு இன்னும் முடி­வு­றுத்­தப்­ப­டாத நிலையில் அது தொடர்­பாக எந்­த­வொரு அறிக்­கையும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­பட தெரி­வித்­தி­ருந்தார். 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கக் கூடாது என தெரி­வித்­துள்ள மகா­நா­யக்­கர்­களை அவ­சர அவ­ச­ர­மாகச் சென்று சந்­தித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மகா­நா­யக்­கர்­க­ளுக்குத் தெரி­யா­மல் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

அதே­வேளை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென குழு­வொன்றை நிய­மிப்­ப­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார். ஆயினும் பிர­தமர் மற்றும், ஜனா­தி­பதி ஆகி­யோரின் உத்­த­ர­வா­தங்­களை ஏற்று, மகா­நா­யக்­கர்கள் தமது தீர்­மா­னத்­தையும் முடி­வையும் மாற்­றிக்­கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு

நாடு ஒற்­றை­யாட்­சியைக் கொண்­டி­ருக்க வேண்டும். பௌத்த மதத்­திற்கு விசேட அந்­தஸ்து வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­பது மகா­நா­யக்­கர்­களின் மாற்ற முடி­யாத முடி­வாகும். இந்தத் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் சிறு­பான்மை தேசிய இனங்­க­ளா­கிய தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு அதி­காரப் பகிர்­வு­டைய வகையில் ஏற்­றதோர் அர­சியல் தீர்வு கிடைக்­குமா என்று கூற முடி­யாது.

பிள­வு­ப­டாத நாட்­டிற்குள் வடக்கு, கிழக்கு இணைந்த பிர­தே­சத்தில் சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சமஷ்டி முறையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறை­மை­யு­ட­னான ஓர் அர­சியல் தீர்வு என்­பதே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் நிலைப்­பா­டாகும். இத­னையே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது தேர்தல் அறிக்­கை­யாக வெளி­யிட்­டி­ருந்­தது. தேர்­த­லின்­போது மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­திக்கு அமை­வா­கவே மக்கள் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனவே மக்­களின் ஆணையை நிறை­வேற்­று­வதும் அதற்­கான கோரிக்­கையை வெற்­றி­பெறச் செய்­வதும் கூட்­ட­மைப்பின் தலை­யாய கட­மை­யாகும். 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணியில் தமிழ்த்­தே­சிய கூட்­டமைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய சம்­பந்­தனும், பாராளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரு­மா­கிய சுமந்­தி­ரனுமே முக்­கிய பங்­கெ­டுத்­தி­ருக்­கின்­றனர். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என கூறிக்­கொண்­டாலும் இவர்கள் இரு­வ­ருமே தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளா­கிய ரெலோ, புளொட், ஈ.பி­.ஆர்­.எல்.எவ். ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களோ அல்­லது ஏனை­ய­வர்­களோ அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணியில் முக்­கிய பங்­காற்­று­ப­வர்­க­ளாக இல்லை. புளொட் அமைப்பின் தலைவர் சித்­தார்த்தன் உப­கு­ழு­வொன்றின் தலை­வ­ராகச் செயற்­பட்­டி­ருந்த போதிலும், அனைத்து விட­யங்­க­ளையும் கையாள்­கின்ற தளத்தில் அவர் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. 

முக்­கிய விட­யங்கள் பற்­றிய கலந்­து­ரை­யா­டல்கள், தீர்­மானம் எடுப்­ப­தற்­கான உந்­து­சக்­தி­யாகத் திகழும் இடங்கள் என்­ப­வற்றில் தலைவர் சம்­பந்­தனும் சுமந்­தி­ர­னுமே பங்­கெ­டுத்து வரு­கின்­றனர். அதே­வேளை, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதி;ல் தமிழ் மக்­க­ளு­டைய அபி­லா­ஷைகள், எதிர்­பார்ப்­புக்கள் என்­பன எந்­தெந்த வகை­களில் பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கின்­றன. அல்­லது எந்த வகையில் தாக்கம் செலுத்­தி­யி­ருக்­கின்­றன என்­ப­து­பற்­றிய விப­ரங்கள் இந்த இரு­வ­ரையும் தவிர கூட்­ட­மைப்பின் ஏனைய தலை­வர்­க­ளுக்கோ அல்­லது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கோ தெளி­வாகத் தெரி­யாது. அவர்கள் இருட்டில் இருப்­பது போன்­ற­தொரு நிலை­யி­லேயே இருக்­கின்­றார்கள்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள வகை­யி­லான ஒரு தீர்வை நோக்­கியே கூட்­ட­மைப்பின் தலைமை அர­சியல் தீர்வு விட­யத்தில் காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. ஆயினும் சமஷ்டி ஆட்சி முறை தொடர்பில் சந்­தே­க­மா­ன­தொரு நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

 

அதே­போன்று வடக்கும் கிழக்கும் இணைந்த தாய­கப்­பி­ர­தே­சத்தில் சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்ட ஆட்சி உரிமை கிடைக்­குமா என்­பதும் சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது.

ஒற்­றை­யாட்சி முறையின் கீழேயே அர­சியல் தீர்வு என்­பது திட்­ட­வட்­ட­மான முடி­வாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஒற்­றை­யாட்சி என்ற தமிழ்ச்­சொல்லும், ஆங்­கிலச் சொல்லும் கருத்­தா­டல்­களில் சிக்­கல்­களை உரு­வாக்­கு­கின்­றன என்ற கார­ணத்­திற்­காக சிங்­கள மொழிப் பிர­யோ­கத்தில் உள்ள "ஏக்­கிய ராஜ்­ஜிய" என்ற சொல்லின் அடிப்­ப­டையில் அதி­காரப் பகிர்வு மேற்­கொள்­ளப்­படும் என கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. 

மகா­நா­யக்­கர்கள் தந்த அதிர்ச்சி 

பிள­வு­ப­டாத நாட்­டிற்குள் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது ஒற்­றை­யாட்­சி­யையே குறிக்­கின்­றது. ஏக்­கிய ராஜ்­ஜி­யத்­துல பலய பெதா­ஹெ­ரிம ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­காரப் பர­வ­லாக்கல் என்­பதே சிங்­கள மொழிப் பிர­யோ­க­மாகக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழான மாகாண சபை முறை­யி­லேயே அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கலாம். சிங்­களத் தீவி­ர­வாத அர­சியல் சக்­தி­களின் அதி­காரப் பகிர்வு கொள்­கை­களின் அடிப்­ப­டையில்  மாகாண சபைக்கு மேல­தி­க­மாக அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்று கூற முடி­யாது, 

அதே­போன்று வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும் என்ற தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பும் ஏற்­க­னவே சிதைக்­கப்­பட்ட ஒரு விட­ய­மாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பாராளு­மன்ற உறுப்­பி­னரும், கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரு­மா­கிய சுமந்­தி­ரனின் கூற்­றுப்­படி, கிழக்கு மாகாணம் வட மாகா­ணத்­துடன் இணைக்­கப்­ப­டு­வதை முஸ்­லிம்கள் விரும்­ப­வில்லை. முஸ்லிம் மக்­களின் இணக்­கப்­பா­டின்றி வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க முடி­யாது. ஆகவே இணைப்­பென்­பது இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மற்­றது என அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இந்த விட­யத்தை அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­களில் ஒரு­வ­ரா­கிய மனோ கணே­சனும் வடக்கும் கிழக்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இணைக்­கப்­ப­டு­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை என தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்றார்.

வடக்கும் கிழக்கும் இணைந்­தி­ருக்க வேண்­டி­யது சிறு­பான்மை தேசிய இனங்­க­ளா­கிய தமிழ், முஸ்லிம் மக்­களின் அர­சியல் உரிமைப் பாது­காப்­பிற்கு அத்­தி­யா­வ­சி­ய­மா­னது என்­பது குறித்து கூட்­ட­மைப்­பினர் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுடன் இது­வ­ரையில் ஆக்­க­பூர்­வ­மான பேச்­சுக்கள் எத­னையும் நடத்தி அந்த விட­யத்தில் முன்­னேற்றம் காணப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறு­வ­தற்­கில்லை.

இந்த நிலையில் ஒற்­றை­யாட்சி முறையின் கீழ், இணைக்­கப்­ப­டாத வடக்­கையும் கிழக்­கையும் கொண்ட ஓர் அர­சியல் தீர்வு என்­பதே, இது­வ­ரையில் புதிய அர­சி­ய­லமைப்பு விட­யத்தில் காணப்­ப­டு­கின்ற நிலைப்­பா­டாகும். அதே­வேளை, சுய­நிர்­ணய உரிமை, பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட இறைமை என்­பவை குறித்து பேச்­சுக்கள் நடை­பெற்­றி­ருப்­ப­தா­கவே தெரி­ய­வில்லை. 

புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும். இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான அர­சியல் தீர்வு எட்­டப்­படும் என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் நம்­பிக்­கை­யாகும். இந்த நம்­பிக்­கையை தமிழ் மக்கள் மத்­தியில் அவர்கள் ஊட்டி வரு­கின்­றார்கள். சர்­வ­தே­சத்தின் உத­வி­யுடன் அர­சியல் தீர்வு உள்­ளிட்­ட­அ­னைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்­பதில் கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்சி அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பது அவர்­க­ளு­டைய தொடர்ச்­சி­யான அர­சியல் பிர­சா­ர­மாகும். 

எனவே, தமிழ் மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­வாக புதிய அர­சி­ய­ல­மைப்பில் அர­சியல் தீர்வு கிட்­டுமா என்­பது சந்­தே­க­மாக உள்ள நிலை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பும் அவ­சி­ய­மில்லை. அர­சி­ய­ல­மைப்புத் திருத்தமும் தேவையில்லை என்ற பௌத்த மத பீடத் தலைவர்களான மகாநாயக்கர்களின் கருத்து வெளியாகியிருக்கின்றது. மகாநாயக்கர்களின் இந்தக் கருத்தானது, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆட்டம் காணச் செய்திருப்பதைப் போலவே கூட்டமைப்பின் தலைமையையும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. 

புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத் தரப் போவதாகக் கூறி வருகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கவிடாமல் தடுக்கும் வகையில் மகாநாயக்கர்கள் எழுச்சி கொண்டிருப்பது கூட்டமைப்பின் தலைமையையும் ஆட்டம் காணச் செய்திருக்கின்றது. 

கனவிலும் எதிர்பார்த்திராத வகையில் பௌத்த மகாநாயக்கர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ள கருத்தானது, நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பையே ஆட்டம் காணச் செய்யும் வகையில் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அரசியல் அலையாக உருவெடுக்கும் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது.  புதிய அரசியலமைப்பை உருவாக் குதவற்கான முயற்சிகள் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது குறித்து மகாநாயக்கர் களிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பு உணர்வும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. 

புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபை முழுமையாக்குகின்ற கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்த எதிர்ப்பானது, நிச்சயமாக மிக வலுவான அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. பௌத்த சிங்கள மேலாதிக்கத்தையும் சிறுபான்மை தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்கின்ற நோக்கத்தையும் கொண்டுள்ள இந்த அரசியல் பின்னணியானது, நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரியதொரு சோதனைக்களத்தைத் திறந்திருக்கின்றது. இந்த சோதனைக் களத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எவ்வாறு கையாளப் போகின்றார்கள், எவ்வாறு வெற்றி காணப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

- செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.