Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் ஆபத்தானது – கோத்தபாய!!

Featured Replies

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் ஆபத்தானது – கோத்தபாய!!

 
காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் ஆபத்தானது – கோத்தபாய!!
 

காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலம் முற்றாக மீளப் பெறப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கட்டம்பே ராஜோபரணாம விகாரைக்கு சென்ற அவர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலத்திலுள்ள விடயங்கள், போரை முடிவுக்கு கொண்டுவர உயிரை துச்சமென மதித்து போராடிய இராணுவத்தினருக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டரை வருடங்காக ஊழல் ஊழல் என்ற பெயரில், பழிவாங்கல் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது.

எமது ஆட்சிக்காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எமக்கு தெரியாது. அவர்களே தமது மனசாட்சியை கேட்டுப்பார்த்தால், யார் ஊழல் செய்தார்கள் என்பதை தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.

http://uthayandaily.com/story/10450.html

  • தொடங்கியவர்

"சரி­யான தலை­மைத்­து­வத்தின் கீழ் சேவை­யாற்­றவே நான் விரும்­பு­கின்றேன்"

 

 

Image result for gotabaya rajapaksa virakesari

சரி­யான தலை­மைத்­து­வத்தின் கீழ் சேவை­யாற்­றவே நான் விரும்­பு­கின்றேன். மாறாக அர­சி­யலில் கால் பதிக்க நான் தயா­ரில்லை என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்தார். 

காணாமல் ஆக்­க­ப்பட்டோர் தொடர்­பி­லான சட்­ட­மூலம் இரா­ணு­வத்தை தண்­டிக்கும் வகை­யி­லேயே அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இத­னைக்­கு­றிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறி­கையில், 

காணாமல் ஆக்­கப்­ப­டுவோர் தொடர்பில் கொண்டு­வ­ர­வி­ருந்த சட்­ட­மூலம் தற்­கா­லி­க­மாக தடுக்­கப்­பட்­டுள்ள போதிலும் இதனை நிரந்­த­ர­மாக தடுக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விடின் இந்த சட்­ட­மூ­லத்தில் உள்ள விட­யங்கள் அனைத்தும் யுத்­தத்தை நிறை­வுக்கு கொண்­டு­வர தியாகம் செய்த அனைத்து இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக அமையும். இரா­ணுவ வீரர்­களை தண்­டிக்க அனை­வரும் துணை­போ­ன­தாக அமைந்­து­விடும். 

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு ஆண்­டு­கள் கடந்­துள்ள போதிலும் இன்னும் எம்மை  ஊழல் குற்­ற­வா­ளிகள் என்ற பெயரில் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றதே தவிர இது­வ­ரையில் அவர்கள் முன்­வைத்த எந்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பிலும் உண்­மை­களை நிரூ­பிக்க முடி­ய­வில்லை. 

ஆகவே, இவர்கள் பொய்­களை கூறி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர் என்­பது தெளி­வா­கின்­றது. ஆகவே, இவர்கள் எம்மை பழி­வாங்­கவே இவ்­வா­றான  நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர் என்­பது தெளி­வாக தெரி­கின்­றது. எம்­முடன் இணைந்து செயற்­பட்ட நபர்­களே இன்று எமக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆகவே, அவர்கள் எமக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு முன்­வைக்க முன்னர் மனச்­சாட்­சியை கேட்க வேண்டும்.  

இப்­போது மக்கள் நிய­மித்­துள்ள அர­சாங்கம் மிகவும் பொருத்­த­மில்­லாத ஒரு அர­சாங்­க­மாகும். மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை கவ­னத்தில் கொள்­ளாது தமது தேவைக்­கான ஆட்­சியை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனவே, பொருத்­த­மான தலை­மைத்­து­வத்தை மீண்டும் உருவாக்க மக்கள் முன்வரவேண்டும். எனினும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள நான் விரும்பவில்லை. சரியான அரசியல் தலைமையின் கீழ் சேவையாற்றவே நான் விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.        

http://www.virakesari.lk/article/21702

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டமூலம் மிக மிக ஆபத்தானதுதான். மகிந்தாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராசபக்சவுக்கும், அவரைச் சேர்ந்த பிணம்புணரும் அவர் படைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர் தீர்க்கமாக உணர்ந்தே சொல்கிறார். ஆனாலும் இச்சட்டத்தை அழுத்தங்கள் இன்றிச் சிறிலங்கா அரசு நிறைவேற்றாது என நம்பலாம்.

Bildergebnis für பயம்

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான சட்டம் கொலைகாரர்களுக்கும், கடத்தல்காரர்களுக்கும் ஆபாத்தானது தானே! இந்த கோத்தபாயா தானே எல்லாரையும் கடத்தி கொலைசெய்தது போல பயப்படுவது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.