Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இந்திய டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அங்கு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. ஆனால், டி-20 போட்டியில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது.

Indian test team


இந்நிலையில், இலங்கைத் தொடருக்கான டெஸ்ட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில், கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக, முகமது சமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்விலிருந்து கே.எல். ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக, ஆல் ரவுண்டராக அசத்திவரும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அணியின் விவரம் வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல். ராகுல், புஜாரா, ரஹானே, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா, சஹா (விக்கெட் கீப்பிங்), இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த்.

 

http://www.vikatan.com/news/sports/94906-srilanka-tour-indian-test-squad-announced.html

  • Replies 54
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கணிப்பு

 

 
முத்தையா முரளிதரன்
படம்: வி.கணேசன் முத்தையா முரளிதரன்
 
 

இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதன் கூறினார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் செயலாளர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் உரிமையாளரான விபி சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். இதைதொடர்ந்து நிருபர்களிடம் முரளிதரன் கூறியதாவது:

டிஎன்பிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு. வீரர்களின் திறனை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஐபிஎல் தொடர், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய நிலையில் ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றி வருகிறேன். இன்னும் 3 ஆண்டுகள் வரை அந்த அணியில்தான் இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சென்னை அணியுடன் எதிர்காலத்தில் பணியாற்றுவேன். சென்னை அணி தடைக்கு பின்னர் விளையாட உள்ளது. கடந்த காலங்களில் அந்த அணி பெரும்பாலான வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டது. ஆனால் தற்போது மீண்டும் அவர்கள் ஒரு குழுவாக இணைய வேண்டும். இந்த விஷயம்தான் சற்று பின்னடைவாக இருக்கும்.

கடந்த 7 ஆண்டுகளாக நான் இலங்கை கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. அதனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எல்லா அணிக்கும் உள்ள பிரச்சினை தான் தற்போது இலங்கை அணிக்கும் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் அதை சரிசெய்துகொள்வார்கள். எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் உள்ளன. எனினும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானலும் நடைபெறலாம். கடந்த சில ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சாளர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடைசி இரு நாட்களில் அவர்களுக்கு விக்கெட்கள் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உலகம் முழுவதும் தற்போது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த திறனுடன் செயல்படுகின்றனர்.

இவ்வாறு முரளிதரன் கூறினார்.

அஸ்வின் பந்தை தொட முடியா?

கடந்த முறை சுற்றுப்பயணத்தின் போது அஸ்வின் பந்து வீச்சை இலங்கை வீரர்கள் தொடக்கூட முடியாத நிலை இருந்தது. தற்போதும் அதேபோன்று நிலை வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முரளிதரன், கிரிக்கெட்டி வரலாற்றில் எந்த ஒரு பந்து வீச்சாளரின் பந்தையும் பேட்ஸ்மேன்கள் தொட முடியாத நிலை என்று ஒன்று இல்லை. கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் முடிந்து போனது விஷயம் என்றார்.

http://tamil.thehindu.com/sports/இலங்கை-டெஸ்ட்-தொடரில்-இந்திய-அணிக்கே-வெற்றி-வாய்ப்பு-முன்னாள்-சுழற்பந்து-வீச்சாளர்-முத்தையா-முரளிதரன்-கணிப்பு/article9770748.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: விஜய்க்குப் பதில் தவான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, அங்கு ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது. ஆனால், டி-20 போட்டியில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு, மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது.

தவான்


இதில் கலந்துகொள்ளும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கருண் நாயருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜெயந்த் யாதவுக்குப் பதிலாக, முகமது சமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்விலிருந்து கே.எல். ராகுல் அணிக்குத் திரும்பியுள்ளார். குறிப்பாக, ஆல் ரவுண்டராக அசத்திவரும் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 


இதனிடையே, தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் காயம் காரணமாக, இந்தத் தொடரில் இருந்து விஜய் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு தவானுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது. 

http://www.vikatan.com/news/sports/95827-dhawan-replace-injured-murali-vijay-for-india’s-tour-of-sri-lanka.html

  • தொடங்கியவர்

இலங்கைக்கு படையெடுத்துள்ள கோலி தலைமையிலான இந்திய அணி

Published by Priyatharshan on 2017-07-20 09:27:23

 

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று இரவு இலங்கை வந்தடைந்ததுள்ளது.

india.jpg

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

19904680_10207805789657413_1278462222_n.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

20179928_10207805792417482_2002984128_n.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு,

20187591_10207805793977521_548378823_n.j

ஜூலை மாதம்  26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல்  7 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல்  16 ஆம் திகதி வரை கண்டி பல்லேகல மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

20187839_10207805791817467_605585659_n.j

இதேவேளை, முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 3 ஆவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 5 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிசெப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

20196791_10207805792377481_910950299_n.j

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான ஒருரேயொரு இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20196793_10207805792457483_107765337_n.j

20196893_10207805791497459_517808547_n.j

20196930_10207805789577411_930271578_n.j

20197167_10207805789617412_641660799_n.j

20216978_10207805789537410_345602118_n.p

20206060_10207805794017522_21854368_n.jp

 

Tags

http://www.virakesari.lk/article/22091

  • தொடங்கியவர்

நம்பர் - 1 அணியை எவ்வாறு சமாளிப்பதென்று எமது வீரர்களுக்கு நன்றாகத் தெரியும் : உபுல் தரங்க

 

 

நம்பர் - 1 அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமதுவீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். கடந்த காலத்தில் தரவரிசையிலிருந்த அணியுடன் எவ்வாறு விளையாடி 3-0 என தொடரைக் கைப்பற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  அதேபோல் தற்போதைய நம்பர்-1 அணியுடன் விளையாட முடியுமென இலங்கை அணியின் ஒருநாள் போட்டித் தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.

upul-tharanga.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்ததுள்ளது. 

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே உபுல் தரங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

DSC_0268.JPG

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிம்பாப்வே அணியுடனான கடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றோம். சிம்பாப்வே அணி அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. இருந்தாலும் டெ்ஸ்ட் போட்டியை நாம் கடுமையாக போராடி வெற்றிபெற்றோம். அதுவும் பாரிய வெற்றி இலக்கை துரத்தியடித்து வெற்றிபெற்றோம்.  இதிலிருந்து எமது வீரர்களின் மன உறுதி வெளிப்பட்டுள்ளது. 

DSC_0308.JPG

தரவரிசையில் முதலாமிடத்திலுள்ள அணியுடன் எவ்வாறு விளையாட வேண்டுமென எமது வீரர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எமது அணி வீரர்களிடம் நம்பிக்கையுள்ளது. கடந்த காலத்தில் தரவரிசையில் முதலிடத்திலிருந்த அணியுடன் எவ்வாறு விளையாடினோம் என தெரிந்திருக்கும்.  அதேபோல் தற்போது தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியுடன் விளையாடி எமது திறமைகளை வெளிப்படுத்த நல்ல தருணம் கிடைத்துள்ளது. எனவே இத் தொடரில் நன்றாக விளையாடி நாம் எந்ந நிலையிலுள்ளோமென எமது நிலையை வெளிப்படுத்த வேண்டும்.

எவ்வாறு நாம் வேகப்பந்துவீச்சுகளுக்கு முகங்கொடுப்பதென அனைத்து விதமான பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து போட்டியில் திறம்பட செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22119

  • தொடங்கியவர்

எனது 3 அத்தியாயங்களும் இலங்கையிலேயே ஆரம்பமாயின : ரவிசாஸ்திரி

 

எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதலாவது போட்டியும் இலங்கையில் தான் , அதேபோல் முதல் கிரிக்கெட் போட்டிக்கான வர்ணனையும் இலங்கையில் தான் அந்தவகையில் எனது பயிற்றுவிப்பாளர் பதவியும் இலங்கையில் தான் முதன் முதலாக அமைந்துள்ளதென இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

ravi-sasthiri.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது. 

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

DSC_0308.JPG

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் 18 வயதில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து முதலாவது போட்டியை இலங்கை மண்ணிலேயே விளையாடினேன்.

அதேபோன்று கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக வந்தபோது அதுவும் 1994 ஆம் ஆண்டளவில் முதல் போட்டிக்கான வர்ணனையை இலங்கை மண்ணிலேயே ஆரம்பித்தேன்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுபேற்றதன் பின் இலங்கை மண்ணில் இடம்பெறவுள்ள போட்டியிலேயே எனது பயிற்றுவிப்பாளருக்கான பணியை நிறைவேற்றவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22123

  • தொடங்கியவர்

இலங்கையில் விளையாடும்போது நாம் பெறும் வெற்றிகள்  கடினமாக இருக்கும் : விராட் கோலி

Published by Priyatharshan on 2017-07-20 22:55:22

 

இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

DSC_0202.JPG

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது. 

இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கொழும்பு மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

DSC_0268.JPG

எமது அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தபோதும் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவதென்பது மிகவும் சவால் இருக்கும் என நினைக்கின்றேன்.

இலங்கையில் விளையாடுவதற்கு எமது வீரர்கள் எப்போதும் விரும்புவார்கள். எமது கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின் போது இளைப்பாறும் இடமாக இலங்கை உள்ளது.

 

இலங்கை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வதென்பது இலகுவான காரியமல்ல. இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமானதாகவே அமையும். 

 

ஓர் அணியாக ஒன்றிணைந்து எமது பலம், பலவீனங்களை தெரிந்து டெஸ்ட் போட்டியில் எமது ஆட்டத்தை வரையறுத்துக்கொண்டு தரவரிசையில் அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தோம். 

கடைசியாக நாம் இலங்கையில் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது இரு அணிகளுக்கும் இடையிலான அனுபவம் அதிக இடைவெளி கொண்டதாக இருந்தது. சங்கக்கார விளையாடிக் கொண்டிருந்தார், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் விளையாடினர். ரங்கன ஹேரத் சிறந்த பந்துவீச்சாளர்.

 

எல்லா வீரர்களும் பொறுப்புணர்வுடனும் கடின உழைப்புடனம் விளையாடும் போதே நல்ல பயனை அடையமுடியும்.

எவரும் வந்து எந்த நேரத்திலும் தமது திறமைகளை வெளிப்படுத்தமுடியும். உபாதையென்பதை விரும்பியோ விரும்பாமலோ நாம் விளையாட்டில் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். குறிப்பாக உபாதை எல்லா விளையாட்டுகளிலும் பொதுவாக வரக்கூடியதொரு பிரச்சினை.

ஏதோ ஒருவகையில் அனைத்து வீரர்களுக்கும் நாட்டுக்காக விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. 

நான் ஒரு துடுப்பாட்ட வீரன் என்ற வகையில் டெஸ்ட் போட்டிகளைப்போன்று தொடர் போட்டிகளில்  விளையாடுவதையே  விரும்புகின்றேன். நாளை எமக்கான பயிற்சி ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 

கிரிக்கெட்டை நாம் எந்த நேரத்திலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. எந்த நேரத்திலும் குறிப்பாக கடந்த காலத்தில் விளையாடியதையோ அல்லது எதிர்காலத்தில் எவ்வாறு விளையாடுவதென்றோ கிரிக்கெட்டை பார்க்க முடியாது. நிகழ்காலத்தில் எவ்வாறு விளையாட முடியுமென்று நினைக்க வேண்டும்.

இலங்கை அணி தனது சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட முடியும். பயிற்சிப்போட்டியில் தவறுகள் இருந்தால் அவை திருத்தப்படும்.

நாம் நம்பர் -1 அணியாக இருந்தாலும் அனைத்து விதமான துறைகளிலும் சமநிலையில் உள்ளோம். திறமைகளை வெளிக்காட்டும் போது வெற்றிபெற சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22124

  • தொடங்கியவர்

சந்திமல் வைத்தியசாலையில் அனுமதி ; ஹேரத் தலைமை தாங்குவார்

 

 

இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரங்கண ஹேரத் தலைமைதாங்கவுள்ளார்.

dinesh-chandimal.jpg

காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

 

இந்நிலையில் அவர் இந்திய அணிக்கெதிரான முதலிரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளையடுத்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் டினேஷ் சந்திமல் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், அவர் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அசங்க குருசிங்கவிடம் கேட்ட கேள்விக்கு, டினேஷ் சந்திமல் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஓரிரு திங்களில் குணமடைந்து இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவாரென தெரிவித்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/22169

  • தொடங்கியவர்

இலங்­கை - இந்திய கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

 

Image result for இலங்­கை - இந்திய கிரிக்கெட்

இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள இந்­திய கிரிக்கெட் அணி இலங்கை அணி­யுடன்  3 டெஸ்ட், 5 சர்­வ­தேச ஒருநாள் போட்­டிகள் மற்றும் ஒரே­யொரு இரு­ப­துக்கு 20 என முழு­மை­யான தொடரில் பங்­கு­கொள்­ள­வுள்­ளது. இதன் முத­லா­வது தொட­ரான டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி எதிர்­வரும் 26 ஆம் திகதி காலி சர்­வ­தேச மைதா­னத்தில் ஆரம்­ப­மாகும்.

இலங்கை அணி தனது ‍சொந்த மண்ணில் விளை­யா­டு­கின்­ற­போ­திலும், டெஸ்ட் தர­வ­ரி­சையில் முத­லி­டத்­தி­லுள்ள இந்­திய அணியை வெற்றிக் கொள்­வ­தென்­பது சவா­லா­ன­தாகும். இலங்கை ஆடு­க­ளங்கள் அதி­க­மாக சுழற்­பந்­து­வீச்­சுக்கு சாத­கத்­தன்­மையைக் கொண்­டதால், இரு அணி­க­ளிலும் சுழற்­பந்­து­வீச்­சா­ளர்­களை ஈடு­ப­டுத்த அதிக வாய்ப்பு உண்டு. இந்த தொடரில் டெஸ்ட் தர­வ­ரி­சையின் முதல் மூன்று இடங்­க­ளி­லுள்ள ரவீந்­திர ஜடேஜா, ரங்­கன ஹேரத் மற்றும் ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஆகிய மூவரும் பங்­கு­கொள்­கின்­றமை விசேட அம்­ச­மாகும்.

இலங்‍கை கிரிக்கெட் அணியில் புதிய டெஸ்ட் அணித்­த­லை­வ­ராக அண்­மையில் நடை­பெற்று முடிந்த ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான ‍டெஸ்ட் போட்­டியில் தினேஷ் சந்­திமால் நிய­மிக்­கப்­பட்டார். அவர் தலை­மை­யேற்ற முத­லா­வது  போட்­டியில் வெற்­றியும் பெற்­றி­ருந்தார். எனினும் தற்­போது  வைரஸ் காய்ச்சல் பிடித்­துள்­ளதால் முதல் டெஸ்ட் போட்­டியில் பங்­கேற்க மாட்டார்.   இதனால் ரங்­கன ஹேரத் அணித்­த­லை­வ­ராக செயற்­ப­டுவார்.

இரு அணி­க­ளிலும் இளம் மற்றும் அனு­பவ வீரர்கள் என  கல­வை­யாக காணப்­ப­டு­கின்­றனர். எனினும், இலங்கை அணியை விட இந்­திய அணி சற்று முன்­னேற்­ற­க­ர­மா­ன­தா­கவே விளங்­கு­கி­றது. துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பு என அனைத்­திலும் இந்­தியா முன்­னி­லையில் இருக்­கின்­றது.

இந்­திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்­கியா ரஹானே, சேத்­தேஷ்வர் புஜாரா , விராட் கோஹ்லி , லோகேஷ் ராஹுல் என பலம்­பொ­ருந்­திய துடுப்­பாட்ட வரி‍சை காணப்­ப­டு­கி­றது. வேகப்­பந்­து­வீச்சில் இஷாந்த்  ஷர்மா, மொஹமட் சமி, உமேஷ் யாதவ்  ஆகிய மூவர் இந்­திய குழாத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு இரு­பது  போட்­டி­களில் இந்­திய அணிக்கு வெற்­றியை ஈட்­டி­கொ­டுத்து வரு­கின்ற சக­ல­துறை வீர­ரான ஹர்திக் பாண்­டியா சேர்க்­கப்­பட்­டுள்­ளமை அவரின் மீது பலத்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் தமி­ழக வீரர்­க­ளான முரளி விஜய் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் இணைந்­துள்­ளனர். 

இலங்கை அணியை எடுத்­துக்­கொண்டால், உபுல் தரங்க, திமுத் கரு­ணா­ரத்ன, குசல் மெண்டிஸ், எஞ்­சலோ மெத்­தியூஸ், தினேஷ் சந்­திமால் ( விளை­யாடும் பட்­சத்தில்) ஆகியோர் சிறந்து விளங்­குவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  அத்­துடன்  அண்­மைக்­கா­ல­மாக சிறந்த ஆற்றல் வெளிப்­பா­டு­களை வெளிக்­கொண்­டு­வரும் தனுஷ்க குண­தி­லக்க , நிரோஷன் திக்­வெல்ல ஆகியோர் துடுப்­பாட்­டத்­திற்கு பலம் சேர்ப்பர். சகல துறை வீர­ரான அசேல குண­ரத்ன காயத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளதால் இலங்கை அணி முக்­கி­ய­மான கட்­டத்தில் அவரை இழந்­துள்­ளது. சுழற்­பந்­து­வீச்சில் ரங்­கன ஹேரத்­துக்கு பக்­க­ப­ல­மாக தில்­ருவன் பெரேரா விளங்­குவார் என்­பதில் சந்­தே­க­மில்லை. டெஸ்ட் அரங்கில் 376 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ள ரங்­கன ஹேரத் இத்­தொ­டரில் 400 விக்­கெட்­டுகள் என்ற மைல் கல்லை எட்­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வேகப்­பந்­து­வீச்சில் சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, விமுக்தி பெர்­னாண்டோ காணப்­ப­டு­கின்­றனர்.

இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பலமாகும். அவரின் திறமை மற்றும் அனுபவம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த பயனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இவ்­விரு அணி­களும் இது­வரை 38 டெஸ்ட் போட்­டி­களில் சந்­தித்து 16 போட்­டி­களில் இந்­தி­யாவும் , 7 போட்­டி­களில் இலங்­கையும் வெற்­றி­யீட்­டி­யுள்­ளன. 15 போட்­டிகள் வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன. சர்­வ­தேச ஒருநாள் அரங்கில் 150 போட்­டி­களில் விளையாடி 83 போட்டிகளில் இந்தியாவும், 55 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை, ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இந்தியா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன்  இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22223

  • தொடங்கியவர்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு- ஹெராத் கேப்டன்

 

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டிற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு- ஹெராத் கேப்டன்
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற 26-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது. காலே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஹெராத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

201707232028089510_1_chandimal-s._L_styv

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரங்கனா ஹெராத் (கேப்டன்), 2. உபுல் தரங்கா, 3. திமுத் கருணாரத்னே, 4. குசால் மெண்டிஸ், 5. மேத்யூஸ், 6. அசேலா குணரத்னே, 7. நிரோஷன் டிக்வெல்லா, 8. தனஞ்செயா டி சில்வா, 9. தனுஷ்கா குணதிலகா, 10. தில்ருவான் பெரேரா, 11. சுரங்கா லக்மல், 12. லஹிரு குமாரா, 13. விஷ்வா பெர்னாண்டோ, 14. மலிந்தா புஷ்பகுமாரா, 15. நுவன் பிரதீப்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/23202805/1098137/Sri-Lanka-announce-squad-for-first-Test-against-India.vpf

  • தொடங்கியவர்

இலங்கை அணியில் புதிய சுழல் வீரர்

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளராக மலின்டா புஷ்பகுமாரா இடம் பெற்றுள்ளார்.

30 வயதான புஷ்பகுமாரா, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 558 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். அவர் ஒருவர் மட்டுமே அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் தனஞ்ஜெயா டி சில்வா, வேகப் பந்து வீச்சாளர் நூவன் பிரதீப் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இவர்களில் புஷ்பகுமாரா, இடது கை சுழற்பந்து வீச்சாளரான லக் ஷன் சந்தகனுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக விலகிய தினேஷ் சந்திமால் இடத்தை தனஞ்ஜெயா டி சில்வா கைப்பற்றி உள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனஞ்ஜெயா இடம் பெறவில்லை. இதேபோல் துஷ்மந்தா ஷமீராவுக்கு பதிலாக நூவன் பிரதீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்

ரங்கான ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குணரத்னே, நிரோஷன் திக்வெலா, தனஞ்ஜெயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, திலுருவன் பெரேரா, சுரங்கா லக்மல், லகிரு குமரா, விஷ்வா பெர்ணாண்டோ, மலின்டா புஷ்பகுமாரா, நூவன் பிரதீப். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article19357240.ece

  • தொடங்கியவர்

ஹெராத் சவாலை இந்திய அணியும் அஸ்வின் சவாலை இலங்கை அணியும் சமாளிக்குமா? புதனன்று முதல் டெஸ்ட்

 

virat%20kohli

விராட் கோலி.   -  படம் | ஏஎப்பி.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை கால்லே மைதானத்தில் புதனன்று களமிறங்குகிறது.

சமீபத்திய நிலைகுலைவுகளால் இந்தியாவுக்கு எதிராக மோசமானதை நினைத்து அச்சத்துடனேயே இலங்கை களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாழ்க்கையில் முதல் முறையாக வங்கதேசத்துடன் தோற்றது, சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்ததோடு, ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை திருப்திகரமான முறையில் வெற்றி பெறவில்லை, காரணம் இலங்கைப் பந்து வீச்சை ஜிம்பாப்வே அணியினர் மிகத்திறமையாக எதிர்கொண்டனர்.

இந்நிலையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியை இலங்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

2015-ம் ஆண்டு தொடரில் கால்லே டெஸ்ட் போட்டியில் ஹெராத்திடம் வீழ்ந்து தோல்வி தழுவிய பிறகு இந்திய அணி ரங்கனா ஹெராத் வீசினால் இறங்கி வந்து வெளுக்கும் அணுகுமுறையைக் கையாண்டு, அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சில் இலங்கையில் தொடரையே வென்றது, அந்த அணி அப்போது நல்ல நிலையில் இருந்தது, சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் தொடராக இருந்தாலும் அவரை அஸ்வின் படாதபாடு படுத்தி எடுத்து வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இலங்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆஸ்திரேலியா இலங்கை அணியிடம் 3-0 என்று உதை வாங்கும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்தது.

அதே போல் ரங்கனா ஹெராத் 40 வயதிலும் அபாரமாக தன் சொந்த மண்ணில் வீசி வருகிறார், நாம் அவரை கடந்த முறை கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொண்டது போல் இம்முறை இந்திய வீரர்களை வீழ்த்த அவரும் கூட புதிய உத்திகளை வகுத்திருக்கலாம், எனவே ஒரே மாதிரியான அணுகுமுறையை இந்திய அணியினர் விடுத்து எதிர்பாராத ஒரு அணுகுமுறையை சமயோசிதமாகப் பயன்படுத்துவது நல்லது என்று தெரிகிறது.

கே.எல்.ராகுல் தன் உடல் தகுதியை சரிவரக் கவனிக்கவில்லையெனில் விரைவில் அவர் இந்திய உடையிலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்படும், அவர் முதல் டெஸ்டில் ஆட முடியாததால் மீண்டும் புஜாராவையே இந்திய அணி நம்பவேண்டியுள்ளது.

பவுலிங்கில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களை தயங்காமல் பயன்படுத்த வேண்டுமென்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளது எடுத்துக்கொள்ளத்தக்க அறிவுரையே.

ஆனால் இலங்கை அணி முதல் நாளில் கொஞ்சம் வேகப்பந்து வீச்ச்சுக்குச் சாதகமான பிட்சை போட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

இலங்கை பேட்டிங்கில் உபுல் தரங்கா மீண்டும் வந்திருப்பது ஒரு அனுபவ வீரர் என்ற முறையில் அந்த அணிக்கு வலுசேர்க்கும், ஆனால் அவருக்கு அஸ்வின் அச்சுறுத்தல் எப்போதும் உள்ளது. குசல் மெண்டிஸ், குணதிலக, மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்திய பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மாவா அல்லது ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவா என்ற கேள்வி உள்ளது, ஆனால் கடந்த முறை ரோஹித் சர்மா ஹெராத் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டதால் ரோஹித் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பிட்சைப் பொறுத்தவரையில் முதல் 2 நாட்கள் பேட்டிங் பிட்சாக இருக்கலாமென்று கணிக்கப்படுகிறது.

அஸ்வினுக்கு 50வது டெஸ்ட் போட்டி, சந்திமால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நிமோனியா காரணமாக விலகியுள்ளதால் ஹெராத் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளாக டிரா ஆன டெஸ்ட் போட்டியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி (உத்தேசம்): அபினவ் முகுந்த், ஷிகர் தவண், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரோஹித்/பாண்டியா, சஹா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார்/ஷமி.

இலங்கை அணி: உபுல் தரங்கா, கருணரத்னே, குசல் மெண்டிஸ், குணதிலக, மேத்யூஸ், டிக்வெல்லா, அசேலா குணரத்னே, திலுருவன் பெரேரா, ஹெராத், லாஹிரு குமாரா, நுவான் பிரதீப்

http://tamil.thehindu.com/sports/article19359501.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய அணி துடுப்பெடுத்தாட முடிவு

 

 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

india-sri-lanka.jpg

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 26 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய முதலாவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட்கோலி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

இந்திய அணியின் விபரம் வருமாறு, 

விராட் கோலி ( அணித் தலைவர் ), தவான், முக்குந்த், புஜாரா, ரஹானே, பாண்டியா, விர்திமான் ஷா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமட் சமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விபரம், ரங்கண ஹேரத் ( அணித் தலைவர் ), உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குஷல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, நுவான் பிரதீப், லகிரு திரிமன்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிகள் வருமாறு, ஜூலை மாதம்  26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல்  7 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல்  16 ஆம் திகதி வரை கண்டி பல்லேகல மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

 

இதேவேளை, முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 3 ஆவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 5 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிசெப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

 

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான ஒருரேயொரு இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22342

  • தொடங்கியவர்
76/1 (17.1 ov)
  • தொடங்கியவர்

காலே டெஸ்ட்: ஷிகர் தவான் அதிரடி சதம்!

 
 

இந்திய அணி இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 

முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. காய்ச்சல் காரணமாக ராகுல் விலகியதால் இந்திய அணியில் அபினவ் முகுந்த் சேர்க்கப்பட்டார். ஹர்திக் பாண்டியா இன்று அறிமுக டெஸ்டில் ஆடுகிறார். குல்தீப் யாதவும் வாய்ப்பளிக்கப்பட்டவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டனர். 

ஷிகர் தவான்

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். அபினவ் முகுந்த் 12  ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர்  தவான் புஜாரா ஜோடி இணைந்து அருமையாக ஆடி வருகிறது. புஜாரா அமைதி காக்க  தவான் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கிறார். இதனால் 4.6 ரன்ரேட்டில் இருக்கிறது இந்திய அணியின் ஸ்கோர். உணவு இடைவேளை முடிந்துள்ள நிலையில் சமீபத்திய நிலவரப்படி 38 ஓவர்களில்  ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 184 ரன்களை குவித்திருக்கிறது இந்தியா. ஷிகர் தவான் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்தார். தவான் இதே கல்லே மைதானத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சதமடித்திருந்தார். அதற்கு பிறகு, இப்போதுதான் சதம் விளாசியிருக்கிறார். தவான் 119 பந்துகளில் 17 பௌண்டரியுடன் 111 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.புஜாரா அரை சதம் அடித்திருக்கிறார்.  

http://www.vikatan.com/news/tamilnadu/96876-shikhar-dhawan-scored-century-in-galle-test.html

  • தொடங்கியவர்

ஷிகர் தவண் அதிரடி 190 ரன்கள்; புஜாரா சதம்: ஒரே நாளில் 399 ரன்களைக் குவித்தது இந்தியா

 

kohli

பவுன்சரில் ஆட்டமிழந்த விராட் கோலி.   -  படம் | ராய்ட்டர்ஸ்.

dhawan

190 ரன்களை விளாசிய ஷிகர் தவண்.   -  படம் | ஏ.எஃப்.பி.

kohli

பவுன்சரில் ஆட்டமிழந்த விராட் கோலி.   -  படம் | ராய்ட்டர்ஸ்.

dhawan

190 ரன்களை விளாசிய ஷிகர் தவண்.   -  படம் | ஏ.எஃப்.பி.

 

கால்லே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.

ஆட்ட முடிவில் புஜாரா 144 ரன்களுடனும் ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ஒரே நாளில் 399 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் இந்திய அணி எடுக்கும் 3-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். இவை அனைத்தும் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ஹர்திக் பாண்டியா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது ஆச்சரியமல்ல.

அபினவ் முகுந்த் சவுகரியாகவும் ஆடவில்லை. 12 ரன்களில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டார் கெட்டார். நுவான் பிரதீப் இவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

முகுந்த் போன்ற ஒருவரை அணியில் வைத்திருப்பது அணி நிர்வாகத்தின் அணித் தேர்வு சவுகரியத்துக்காகவேயன்றி வேறு எதற்குமாகவும் இருக்க முடியாது என்று தெரிகிறது, அவரது பேட்டிங் சர்வதேசத் தரத்துக்கு உயர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இவரை வைத்துக் கொண்டால் ராகுலோ, விஜய்யோ வரும் போது மீண்டும் அணிக்குள் நுழைப்பது சுலபம், அதே வேளையில் முகுந்துக்கு வாய்ப்பளித்தோம் என்று கூறிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது, எனவே இந்த ஸ்டாப் கேப்பிற்காக ஸ்ரேயஸ் ஐயர் போன்ற திறமையைக் கொண்டு வந்தால் அது பெரிய தர்மசங்கடங்களை விளைவிக்கலாம் என்று நிர்வாகம் யோசித்தால் அதில் தவறில்லை.

கேட்ச் தவற விட்டதற்காக இலங்கைப் பந்து வீச்சை தண்டித்த ஷிகர் தவண்:

ஷிகர் தவண் சில அருமையான ஷாட்களுடன் அனாயசமாக ஆடினார், ஆனால் அவர் 31 ரன்களில் இருந்த போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு குமாரா பந்தை எட்ஜ் செய்ய, ஸ்லிப்பில் கேட்சைத் தவறவிட்ட குணரத்னே அதில் காயமடைந்து வெளியேறினார், அவர் இந்தத் தொடரில் இனி ஆட முடியாத அளவுக்குக் காயம் ஏற்பட்டது, இது இரட்டை அடியாகப் போனது. ஒரு புறம் ஒருநல்ல வீரரை காயத்தில் இழந்ததோடு, தவணின் கோபத்துக்கும் ஆளாகியது இலங்கைப் பந்து வீச்சு.

நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் ஆடும் தவண், உதவிகரமான பிட்சில் நீண்ட நாள் என்ற அடையாளம் இல்லாமல், தன் இடத்தைத் தக்க வைக்கும் நோக்கமும் இல்லாமல் வெளுத்துக் கட்டினார். அவர் ஆடிய ஷாட்களின் ரேஞ்ச் அவர் ஆடிய ஆட்டத்தின் ரிஸ்க்கை வெளிப்படுத்துவதாகும். உணவு இடைவேளையின் போது 64-ல் இருந்த தவண் அதன் பிறகு தேநீர் இடைவேளைக்குள் 126 ரன்களை அதிகபட்சமாக விளாசித் தள்ளி 190 ரன்களை 168 பந்துகளில் அடித்து நொறுக்கினார். மிடில் ஓவர்களில் அதிக ஸ்கோரை எடுத்த 2-வது இந்திய வீரராகத் திகழ்கிறார் ஷிகர் தவண், முதலிடத்தில் சேவாக் அல்லாமல் வேறு யார் இருக்க முடியும், இதே இலங்கை அணிக்கு எதிராக மும்பை பிரபர்ன் மைதானத்தில் அவர் 293 ரன்களை அடித்த போது உணவு இடைவேளைக்கும் தேநீர் இடைவேளைக்கும் இடையே 133 ரன்களை விளாசியது இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தருணம்.

ஆனால் உலக கிரிக்கெட்டில் 1954-ம் ஆண்டு டிரெண்ட் பிரிட்ஜில் டெனிஸ் காம்ப்டன் 173 ரன்களை இதே மிடில் செஷனில் அடித்து முதலிடம் வகிக்கிறார். இத்தனைக்கும் அப்போதெல்லாம் நாளொன்றுக்கு 90ஓவர்கள் வீச வேண்டும் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் இல்லை. இந்தியாவில் பாலி உம்ரீகர் இதேமிடில் செஷனில் 110 ரன்களை 1961-62 தொடரில் மே.இ.தீவுகளில் சாதித்தார்.

அன்று சேவாக் சிறந்த இலங்கை/உலக பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனை விளாசியது போல் இன்று சிறந்த இலங்கை பவுலரான ரங்கனா ஹெராத்தை தவண் 34 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார்.

ஷிகர் தவண் ஆடிய ஷாட்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மென்மையான ஸ்வீப்ஷாட்கள், கடுமையான ஸ்வீப் ஷாட்கள், விக்கெட் கீப்பர் பின்னால் ஆடிய பெடல் ஷாட்கள், கட்டுக்கோப்புடன் கூடிய புல்ஷாட்கள். ஆஃப் திசையில் ஆடிய அதி அற்புதமான டிரைவ்கள், நேர் டிரைவ்கள், குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு அவர் கிரீசில் நிற்கவில்லை, அப்படி க்ரீசில் நின்றால் அது ஒன்று ஸ்வீப் ஷாட்டாக இருக்கும் இல்லையேல் பின்னால் சென்று ஆடிய லேட் கட்டிற்காக இருக்கும். எனவே மீண்டும் வந்த ஷிகர் தவண் 110 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 100 ரன்களை எட்ட 147 பந்துகளில் 150 ரன்களையும் கடைசியில் 168 பந்துகளில் 190 ரன்களையும் விளாசினார். இதில் 31 அருமையான பவுண்டரிகள் அடங்கும் கடைசியில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்பை மேலேறி வந்து ஒரு வெளுவெளுக்கும் முயற்சியில் மிட் ஆஃபில் மேத்யூசிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இரட்டைச் சதம் அடிக்காவிட்டாலும் தவண் தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை எடுத்த பிறகே வெளியேறினார்.

மறுமுனையில் புஜாரா 80 பந்துகளில் அரைசதமும் 173 பந்துகளில் சதமும் எடுத்து கடைசியில் 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் களத்தில் இருக்கிறார்

தவணும், புஜாராவும் இணைந்து 153 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், பிறகு ரஹானே, புஜாரா ஜோடி 113 ரன்களை 4-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.

விராட் கோலியின் ஷார்ட் பிட்ச் பிரச்சினை:

விராட் கோலிக்கு திடீரென ஷார்ட் பிட்ச் பந்துகள் பிரச்சினை தரத் தொடங்கியுள்ளன. இன்று 6 ரன்களை அவர் எடுத்திருந்த போது நுவான் பிரதீப் நெஞ்சுயர பவுன்சரை வீசினார், ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்த கோலி மிடில் ஸ்டம்ப் பவுன்சரை புல் ஆட முயன்றார், ஆனால் ஆடும் போது கண்களை மூடிக்கொண்டதால் பந்தின் உயரத்தைக் கணிக்க முடியவில்லை. எட்ஜ் ஆனது, கள நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் இலங்கை மேல்முறையீடு செய்ய அவுட் என்று தெரிந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சரிந்த கோலியின் பார்ம் இன்னமும் சீரடையவில்லை என்றே தெரிகிறது.

இலங்கை அணியில் நுவான் பிரதீப் மட்டுமே கடினமாக உழைத்து வீசினார். அவர் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், குமாரா பந்தில்தான் தவணுக்கு கேட்ச் விடப்பட்டது, அந்த துரதிர்ஷ்டசாலி 16 ஓவர்களில் 95 ரன்கள் விளாசப்பட்டார். ஹெராத் 92 ரன்களையும் பெரேரா 103 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.

இலங்கை அணி பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்திய அணியை 500 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினால் அதுவே அந்த அணிக்கு பெரிய விஷயமாக தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/article19364638.ece

  • தொடங்கியவர்

காலே டெஸ்ட்: இலங்கை 154 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்; இந்தியா 600

 

காலேயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

காலே டெஸ்ட்: இலங்கை 154 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்; இந்தியா 600
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தவான் (190), புஜாரா (144 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. புஜாரா 144 ரன்களுடனும், ரகானே 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் புஜாரா 150 ரன்னைக் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 153 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 57 ரன்கள் எடுத்த நிலையில் குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார்.

201707271821494573_1_4-umesh-yadava-s._L

அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி 47 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சஹா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்திருந்தது.

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 15 ரன்க்ள எடுத்து ஆட்டம் இழந்தார். 8-வது விக்கெட் இழப்பிற்கு ஹர்திக் பாண்டியா உடன் மொகமது ஷமி ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

201707271821494573_2_4-tharanga-s._L_sty

ஷமி 30 பந்தில் 3 சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் குவித்தது.

இந்திய அணி 600 ரன்னாக இருக்கும்போது கடைசி விக்கெட்டாக ஹர்திக் பாண்டியா அவுட் ஆனார். அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. உமேஷ் யாதவ் 10 பந்தில் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரதீப், குமாரா ஆகியோர் முறையே 6 விக்கெட்டும், 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201707271821494573_3_4-gunathilaka-s._L_

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கருணாரத்னேயும், உபுல் தரங்காவும் களம் இறங்கினார்கள். கருணாரத்னே நிதானமாக விளையாட உபுல் தரங்கா அதிரடியாக விளையாடினார். கருணாரத்னே 2 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து குணதிலகா களம் இறங்கினார். இவரை 16 ரன்னிலும், அடுத்து வந்த குசால் மெண்டிஸை டக்அவுட்டிலும் வெளியேற்றினார் மொகமது ஷமி.

உபுல் தரங்கா 44 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தரங்கா 64 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் பெரேரா ஜோடி சேர்ந்தார். மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார்.

இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 54 ரன்களுடனும், பெரேரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா 446 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் இந்தியா 300 ரன்களுக்கு மேல் முன்னிலை வகுக்க வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/27182142/1098894/Galle-Test-Sri-Lanka-5-for-154-india-600-all-out.vpf

  • தொடங்கியவர்

இந்திய அணியை 600 ரன்களுக்காவது மட்டுப்படுத்த முடிந்ததே: நுவான் பிரதீப் (அ)திருப்தி!

 

 
pradeepjpg

கால்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப், கோலியை பவுன்சரில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

“கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர், அவரை அவ்வாறு வீழ்த்தியதில் மகிழ்ச்சியடைகிறேன். அவரைப்போன்ற ஒரு வீரருக்கு நாங்கள் நிறைய திட்டமிடுவோம், அப்படிப்பட்ட திட்டத்தில் ஒன்றுதான் அவருக்கு வீசிய அந்தப் பந்து. எனக்கு உண்மையாகவே அவரது விக்கெட் மகிழ்ச்சியளிக்கிறது.

6 விக்கெட் சிறப்பானதுதான், ஆனால் நான் சிறப்பாக முதலில் வீசவில்லை, தொடர்ந்து வீசிய போதுதான் எனக்கு ரிதம் கிடைத்தது. திட்டத்துடன் தான் போட்டியில் களமிறங்கினோம், ஆனால் பிட்சின் தன்மை திட்டங்களை மாற்றியது, ஆனால் நாங்கள் செய்த சில விஷயங்கள் சரியல்ல.

தற்போது ஆட்டம் உள்ள நிலை எங்களுக்கு திருப்தியாக இல்லை. நிறைய திட்டங்கள் மோசமாகப் போய்விட்டது. புதிய திட்டங்களைச் செயல்படுத்தினால் அது எப்போதும் சரியாகச் செல்வதில்லை. ஆனால் கிரிக்கெட் ஆட்டம் என்பது இத்தகையதுதான் நாம் அதனை புரிந்து கொள்ள வேண்டும், குறைந்தது அவர்களை (இந்திய அணியை) 600 ரன்களுக்காவது மட்டுப்படுத்தினோமே.

மேத்யூஸ், திலுருவன் கிரீசில் நிற்கின்றனர், நாளை உணவு இடைவேளை வரை அவர்கள் நிற்க வேண்டும். தேநீர் இடைவேளை வரை ஆடினால் ஒருவேளை அபாயக் கட்டத்தைக் கடக்க வாய்ப்புள்ளது” என்றார் நுவான் பிரதீப்.

http://tamil.thehindu.com/sports/article19371925.ece?homepage=true

  • தொடங்கியவர்
284/8 (75.6 ov)
8.png&h=42&w=42

இலங்கை

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 291 ரன்னில் ஆல்-அவுட்

 

காலேயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

 
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 291 ரன்னில் ஆல்-அவுட்
 
காலே:

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 600 ரன் குவித்தது. ஷிகர் தவான் (190 ரன்), புஜாரா (153) சதம் அடித்தனர். ரகானே 57 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்து வீச்சில் திணறியது. கருணா ரத்னே 2 ரன்னிலும், குணதிலகா 16 ரன்னிலும், குசல்மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். தரங்கா 64 ரன்னில், டிக்வெலா 8 ரன்னில் வெளியேறினர்.

நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 44 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து இருந்தது. மேத்யூஸ் 54 ரன்னுடனும், தில்ருவான் பெரைரா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பாலோ-ஆனை தவிர்க்க இலங்கை இன்னும் 247 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. மேத்யூசும், தில்ருவான் பெரைரா தொடர்ந்து விளையாடினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இதில் பெரைரா பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் சுழற்பந்து வீச்சை கேப்டன் கோலி கொண்டு வந்தார். அந்த ஓவரை ஜடேஜா வீசினார்.

இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57-வது ஓவரில் இலங்கை 200 ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் மேத்யூஸ் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
201707281350483662_1_dsoup7dh._L_styvpf.

அவர் 130 பந்தில் 83 ரன் எடுத்தார். அடுத்து தில்ருவான்பெரைராவுடன் கேப்டன் ஹெராத் ஜோடி சேர்ந்தார்.

பெரைரா 94 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியையும் ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் ஹெராத் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதீப் களம் வந்தார். மறுமுனையில் இருந்ததில் ருவான் பெரைரா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பவுண்டரி, சிக்சர்களாக அடித்தார். உணவு இடைவேளையின் போது இலங்கை 77 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்திருந்தது. பெரைரா 90 ரன்னுடனும், குமாரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு குமாரா அவுட் ஆனார். காயத்தால் விலகியுள்ள குணரத்னே ஆடவில்லை. இதனால் இலங்கை அணி 291 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். பாலோ ஆனை தவிர்க்க இலங்கை 401 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/28135040/1099035/Sri-Lanka-all-out-for-291-in-India-Test.vpf

  • தொடங்கியவர்

காலே டெஸ்ட்: 498 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா; 2-வது இன்னிங்சில் 189/3

காலே டெஸ்டில் இந்தியா 498 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது.

காலே டெஸ்ட்: 498 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா; 2-வது இன்னிங்சில் 189/3
 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி தவான் (190), புஜாரா (153), ரகானே (57), ஹர்திக் பாண்டியா (50) மற்றும் அஸ்வின் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 54 ரன்னுடனும், தில்ருவான் பெரேரா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க வீரர் உபுல் தரங்கா 64 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மேத்யூஸ் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெராத் 9 ரன்னிலும், பிரதீப் 10 ரன்னிலும் வெளியேறினார்கள்.

ஆனால் மறுமுனையில் அரைசதம் கடந்த தில்ருவான் பெரேரா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் 90 ரன்னைத் தாண்டி முதல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆனால் எதிர்முனையில் நின்ற குமாரா, ஜடேஜா பந்தில் போல்டாக, இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 291 எடுத்திருந்தது.

குணரத்னே காயத்தால் விளையாடாததால் அத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. தில்ருவான் பெரேரா 92 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

201707281933579989_1_Virat-Kohli2-s._L_s
81 ரன்கள் சேர்த்த அபிநவ் முகுந்த்

291 ரன்னில் இலங்கை சுருண்டதால் இந்தியா முதல் இன்னிங்சில் 309 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இலங்கை அணி பாலோ-ஆன் ஆனாலும், இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக தவானும், அபிநவ் முகுந்தும் களம் இறங்கினார்கள். தவான் 14 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்தில்  ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த புஜாரா 15 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

201707281933579989_2_Virat-Kohli3-s._L_s
ஹர்திக் பாண்டியா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த பிரதீப்

முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அளித்த அபிநவ் முகுந்த், விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருவரும் அரைசதம் அடித்து சதம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்கள். அபிநவ் முகுந்த் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குணதிலகா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. விராட் கோலி 76 ரன்களுடன் களத்தில் உள்ளார். அபிநவ் முகுந்த் - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

201707281933579989_3_Virat-Kohli-s._L_st
76 ரன்களுடன் களத்தில் இருக்கும் விராட் கோலி

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போது வரை இந்தியா 498 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை 4-வது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வரை அதிரடியாக விளையாடி 600 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்று இலங்கை அணியை இந்தியா சேஸிங் செய்ய பணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/28193350/1099120/INDvSL-Galle-Teest-India-498-runs-lead-2nd-innings.vpf

  • தொடங்கியவர்

விராட் கோலி சதம்; இந்தியா 240/3 டிக்ளேர்: இலங்கைக்கு 550 ரன்கள் இலக்கு

 

 
kohli

கேப்டன் விராட் கோலி சதம்.   -  படம் | ராய்ட்டர்ஸ்.

கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

இன்று ஆட்டம் 15 நிமிடங்கள் முன்னதாகவே தொடங்கியது, இந்திய அணி மேலும் 51 ரன்களை விரைவு கதியில் குவித்தது, 76 ரன்களில் தொடங்கிய விராட் கோலி தனது 17-வது டெஸ்ட் சதத்தையும், கேப்டனாக 10-வது சதத்தையும் எடுத்தார்.

136 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 103 ரன்களுடன் கோலி நாட் அவுட்டாக இருக்க ரஹானே 18 பந்துகளில் 23 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 240 ரன்களை எட்டியது, விராட் கோலி டிக்ளேர் செய்தார்.

இதனையடுத்து 550 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த உபுல் தரங்கா, மொகமது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஷார்ட் பிட்ச் ரக உள்ளே ஸ்விங் ஆன பந்தை தடுத்தாட நினைத்தார் பந்து மட்டையில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார். இந்தப் பந்தை அவர் புல் ஷாட் ஆடியிருக்க வேண்டும், ஆனால் கூடுதல் உயரம் வந்த பந்தை பின்னால் சென்று தடுத்தாட நினைத்தது தவறாகிப் போனது.

குணதிலக 2 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவ் வீசிய இன்ஸ்விங்கரை நேராக ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் புஜார கையில் அடித்தார், இது கேட்சிங் பிராக்டீஸ் போல் இருந்தது.

தற்போது கருணரத்னே 19 ரன்களுடனும் மெண்டிஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article19383938.ece?homepage=true

  • தொடங்கியவர்

காலே டெஸ்ட்டில் வெற்றிப்பாதையை நோக்கி இந்தியா : இலங்கை 140/4

 

காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருவதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

 
காலே டெஸ்ட்டில் வெற்றிப்பாதையை நோக்கி இந்தியா : இலங்கை 140/4
 
 
காலே:
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
 
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 309 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்திருந்தது.
 
இந்நிலையில், நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இலங்கை அணி வெற்றிபெற 550 தேவை என்னும் இமாலய இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 
 
இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே இலங்கை அணியின் தொடக்க ஜோடியை முகமது ‌ஷமி பிரித்தார். உபுல்தரங்கா 10 ரன் எடுத்து இருந்த போது அவரது பந்தில் ‘போல்டு’ ஆனார். அப்போது ஸ்கோர் 22 ரன்னாக இருந்தது.
 
2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேயுடன், குணதிலகா ஜோடி சேர்ந்தார். உமேஷ்யாதவ் இந்த ஜோடியை எளிதில் பிரித்தார். குணதிலகா 2 ரன்னில் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 29 ரன்னில் 2 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
201707291400426678_1_to1b6usn._L_styvpf.
3-வது விக்கெட்டான கருணாரத்னே- மென்டீஸ் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் ஆடியது.
 
மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்து இருந்தது. கருணாரத்னே 44 ரன்னும், மென்டீஸ் 24 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியின் மெண்டிஸ் 36 ரன்னில் ஜடாஜா சுழலில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ் 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் இலங்கை அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்திருந்தது.
 
இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 416 ரன்கள் தேவைப்படும் நிலையில், விக்கெட்டை தக்க வைத்து இலக்கை எட்ட இலங்கை அணி போராட வேண்டும். தற்போதைய நிலையில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறும் வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/29140042/1099245/india-urges-to-win-galle-test.vpf

 194/4 (58.1 ov, target 550)
  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா அபார வெற்றி

 

 
cri

கோப்புப் படம் : அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்த கருணரத்னே

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணி தன் 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

இதில் 76 ரன்களில் தொடங்கிய விராட் கோலி தனது 17-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

136 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 103 ரன்களுடன் கோலி நாட் அவுட்டாக இருக்க ரஹானே 18 பந்துகளில் 23 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 240 ரன்களை எட்டியது, விராட் கோலி டிக்ளேர் செய்தார்.

இதனையடுத்து 550 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்து தோல்வி அடைந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 97 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் அஷ்வின், ஜடேஜ தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர்.

முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 600 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்தியாவின் ஷிகர் தவான் 190 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article19385112.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.