Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – சி.வி

Featured Replies

துன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி

எமது தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகளுக்காக பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல , அதனால்,  மாற்று தலைமைக்கு இடமே இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை  பயணம் மேற்கொண்டு இருந்த கனேடிய உயர்தானிகர் ஷெல்லி வைட்டிங் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

தற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கு மாற்று தலைமைக்கு இடமில்லை. அது தொடர்பில் முடிவெடுக்கவும் எதுவும் மில்லை . தற்போது முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.  எமது அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அந்த நேரத்தில் தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல அதனால் எந்த பிரிவினைக்கும் இடமில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை துன்னாலை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டு படுகொலை செய்தமை தொடர்பில் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ,

பொலிசாரின் கட்டளையை மீறி ஒருவர் செல்கின்றார் எனில் வாகன சில்லுக்கு சுட்டு இருக்கலாம், அல்லது வேறு போலீசாருக்கு அறிவித்து அவர்களை மடக்கி பிடித்து இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒருவரை சுட்டுகொன்றுள்ளார்கள். அதுவும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் , தனது ஊரை சேர்ந்தவரை சுட்டு கொன்று உள்ளார் என அறிந்ததும் மிக வேதனை அடைந்தேன். பொலிசார் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தார்கள் என இரு போலீசாரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி உள்ளார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்பதனை என முதலமைச்சர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/32555

7 hours ago, நவீனன் said:

பொலிசார் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்கள்.

இதைச் சொல்லும் முதுகெலும்பு  தமிழின அழிப்பை மேற்கொண்ட, தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் சிங்கள அரசுக்கு காவடி எடுக்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை, சரவணபவன் கோஷ்டிகளுக்கு இருக்கா?

முதலமைச்சரின் கருத்துக்கு பின்னர் இனி ஏட்டிக்கு போட்டியாக அறிக்கைகள் வரலாம்!

  • தொடங்கியவர்

தமிழ் பொலிஸார் சக தமிழ் இளைஞன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டமை சகிக்க முடியாததது : சி.வி.விக்கினேஸ்வரன்

Published by Priyatharshan on 2017-07-12 09:46:45

 

யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிக மோசமான சம்பவம் என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்தமிழ் பொலிஸார் ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி படுகொலை செய்வது சகிக்க இயலாத ஒரு செயலாகும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

cv.gif

 

 

கடந்த சில தினங்களுக்கு முன் வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற் கண்டவாறு கூறியிருக்கின்றார்.

 

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்

 

மேற்படி சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியமை மிக பிழையான ஒரு நடவடிக்கையாகும். பிழையே செய்திருந்தாலும் அவர்களை தடுப்பதற்கு பல வழிகள் இருக்கின்றது.

 

குறிப்பாக வாகனத்தின் சில்லுக்கு சுட்டிருக்கலாம். அதேபோல் அடுத்த பக்கத்தில் கடமையிலிருக்கும் பொலிஸாருக்கு கூறி தடுத்திருக்கலாம் இப்படி பல வழிகள் இருக்கின்றன.

 

ஆனால் அவற்றை கருத்தில் கொள்ளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞர் ஒருவரை கொலை செய்திருக்கின்றமை மிக தவறானது. அது மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார்.

 

அதேபோல் துப்பாக்கி சூடு நடத்தவும் ஒருவரை கொல்லவும் முக்கியமான காரணங்கள் இருக்கவேண்டும். குறிப்பாக சுயபாதுகாப்புக்கு பாதகம் உண்டாக்கப்படும்போது இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடப்பதுண்டு ஆனால் இங்கே அவ்வாறான ஒரு நிலை இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

அதனை விட தமிழ் பொலிஸார் ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமையானது சகிக்க இயலாத ஒரு செயலாகவே அமைந்திருக்கின்றது. இந்தவகையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21760

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.