"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 73 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
அத்தியாயம் 9 அபயனின் பட்டாபிஷேகம் பற்றியது. பண்டுவசுதேவனுக்கு [அல்லது பண்டுவாசுதேவவுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மூத்தவன் அபயன் அல்லது அபய [Abhaya], இளையவள் உம்மத சித்தா அல்லது உன்மாதசித்திரா [Unmada Chitra]. இவள் மிகவும் அழகானவள். பண்டுவாசுதேவ முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் என்று குறிப்பிடுவதைக் கொண்டு, இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.[மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.] இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால் பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர்.
உம்மத சித்தாவின் மகன் தனது அனைத்து மாமாக்களையும் கொல்வான் என்று ஒரு ஜோதிடர் கணித்தார்; இதனால், அவளுக்கு ஒரு மகன் பிறந்தால், மாமாக்கள் எல்லோரும் அவனைக் கொல்ல முடிவு செய்தனர். இந்த வேளையில், சக்க இளவரசர் பாண்டுவின் மகன்களும் இலங்கைக்கு வந்தனர். அதாவது, கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனின், இளைய சகோதரன், அமிதோதனாவின் பேரன்களும், பேத்தியைத் தொடர்ந்து இலங்கை வந்தனர்? நம்பினால் நம்புங்கள், மகாவம்சத்தின் கதை இது?? எனவே மீண்டும் கௌதம புத்தருடன் மற்றொரு உயிரியல் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது! ராமர், அனுராதா, விஜிதா, திகாயு, ரோஹண [Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana] ஆகியோர், இலங்கை வந்த சக்க பாண்டுவின் மகன்கள் ஆவார்கள். அங்கு அவர்களின் சகோதரியே ராணியாவார்.
நாளடைவில், இளவரசி உம்மத சித்தா திகாயுவின் மகனுடன் [Dighagamini / தீககாமினி] உறவு வைத்து கர்ப்பமானார். ஒரு மகன் பிறந்தார், ஆனால் இந்த பையனுக்காக மற்றொரு பெண்ணை மாற்றுவதன் மூலம், பையன் காப்பாற்றப்பட்டு, இரகசியமாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு பண்டு காபய [பண்டுகாபயன் / Pandukabhaya] என்று பெயரிடப்பட்டது. பண்டு காபய பிறந்து அபயன் பட்டாபிஷேகம் செய்யப்பட்டபோது, பண்டுவாசுதேவன் இறந்தார்.
"பண்டு கபாயன்" என்ற பெயரில், பண்டு என்றால் "பழைய", கபாயன் என்றால் "சிவன்" என்றும் இது இந்துக்களின் பழம்பெரும் தெய்வமான "முந்துசிவன்" என்ற பெயரை ஒத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதே 'பண்டு' என்ற சொல்லே பாண்டியன் (பண்டு+இயன்) என்ற பெயரின் வேர்ச்சொல்லுமாகும் என்பதையும் அறிக. மேலும் தீபவம்சத்தில், பண்டுகாபயாவை பகுண்டக சோரா [Pakundaka chora] என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது திருடன் என்று பொருள்படுகிறது. [In Pali, the word "chora" (छोर) means "thief" or "robber"] எனவே விஜயன் குலத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றாகிறது.
அத்தியாயம் 10: பண்டுகாபயனின் குழந்தைப் பருவம் முதல் பட்டாபிஷேகம் வரையிலான வாழ்க்கையைப் பற்றி, நம்பமுடியாத திருப்பங்களைக் கொண்ட கதைகள் போன்று, பல விசித்திரக் கதைகள் இங்கு உள்ளன. பண்டுகாபயன் முப்பத்தேழு வயதில் முடிசூட்டப்பட்டான். மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, அவன் நூற்று ஏழு ஆண்டுகள், திடகாத்திரமாக வாழ்ந்திருக்க வேண்டும்? ஏனென்றால் அதுவரை மன்னனாகவே ஆட்சி செய்துள்ளார். நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆயுள் கொண்ட மன்னன்.
நாம் முன்பு கூறியவாறு, தீபாவம்சம் அவனை பகுண்ட மற்றும் பகுண்டகன் [Pakunda and Pakundaka] என்றும் குறிப்பிடுவதுடன், தீபாவம்சத்தின் 11 - 1 & 2 இல்: 1. அபயனின் இருபதாம் ஆண்டு ஆட்சி நிறைவடைந்த நிலையில், பகுண்டனும் தனது இருபதாம் ஆண்டு அகவை நிறைவடைந்தார். பகுண்டகன் பிறந்து முப்பத்தேழாவது ஆண்டு நிறைவடைந்தபோது அவன் மன்னனாக முடிசூட்டப்பட்டார். 2. அபயனின் இருபதாம் ஆண்டுக்குப் ஆட்சிக்குப் பிறகு பகுண்டகன் ஒரு கொள்ளையனாக வாழ்ந்தான்; பதினேழு ஆண்டு கொள்ளை வாழ்வின் பின், அவன் தன் தாய் மாமன்கள் ஏழு பேரையும் கொன்று, அனுராதபுர நகரில் அரசனாக முடிசூடிக் கொண்டான் என்று கூறுகிறது. என்றாலும்,
அவன் பதினேழு ஆண்டுகள் ஒரு கொள்ளையனாக வாழ்ந்ததாக தீபவம்சம் கூறும் அதேவேளை, மகாவம்சம் இதைப் பற்றி அமைதியாக உள்ளது.
பண்டு கபாயன் பதினாறு வயதைக் கடந்தபோது தனது மனைவி சுவண்ணபாலியை [Suvannapali] மணந்தார். மூத்தசிவா [மூத்தசிவன் / Mutasiva] பண்டுகபயனின் மகன், அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதுவும் ஒரு நீண்ட ஆட்சி. ஆனால் மகாவம்சம் அவரைப் பற்றியோ அல்லது அவரது நீண்ட ஆட்சியைப் பற்றியோ அதிகம் எதுவும் கூறவில்லை; அவரது ஆட்சி சுமார் ஆறு வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் ? ஒருவேளை, அவரது பெயர் தமிழில் ஒலிப்பதால் இப்படி இருக்குமா? அவரது தாயார் சுவண்ணபாலி ஆகும். சுவண்ணபாலி அல்லது சுவர்ணபாலி, சுவர்ணலதா போன்ற பெயர்களைக் கொண்ட தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர், இன்னும் இருக்கின்றனர் என்பதையும் நோக்குக.
Part: 73 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Chapter 9: This is about the consecrating of Abhaya. Panduvasudeva had ten sons, and one daughter. Abhaya is the eldest, and youngest is the daughter Citta, very beautiful one. Panduvasudeva ruled for thirty years. A soothsayer predicted that Citta’s son would kill his uncles; the uncles wanted to kill if a son is born to her. Sakka Pandu’s sons also came to Lanka. Another biological connection with Gautama Buddha is invented! Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana are the sons of Sakka Pandu who came to Lanka where their sister already came and became the queen. Princess Citta had an affair with the son of Dighayu and became pregnant. A son was born, but by interchanging with another girl for this boy, the boy was saved and was brought up clandestinely. An ancient tale is copied here. He was named Pandukabhya. Panduvasudeva died when Pandukabhya was born and Abhaya was consecrated. Another coincidence is invented.
Chapter 10: There are many fairy tales like stories with many unbelievable twists and turns about Pandukabhaya’s life from childhood to the consecration. To quote from the page 52 of Reference 22: “It is interesting to note how the Chroniclers availed themselves of the Indian legend of Devagabbha, Nandagopa, Vasudeva, and Kamsa as contained in the Ghata Jataka“. Indian Puranic stories are liberally used to spin stories here. Pandukabhaya was crowned when he was thirty-seven years old, and he ruled for seventy years. He must have lived for one hundred and seven years, incredibly a long life. The Dipavamsa refers him as Pakunda and Pakundaka, refer 11 - 1 of the Dipavamsa. The Dipavamsa says that he lived as a robber for seventeen years. The Mahavamsa is selectively silent on this. Pandukabhaya took his wife, Suvannapali, when he has passed sixteen years of age. Mutasive was the son of Pandukabhaya, and he ruled for sixty years. It is also a long reign, but the Mahavamsa has nothing much to say about him or about his long reign; his rule was mentioned in passing in about six verses. Could the reason be that his name sounds Tamil? His mother was Suvannapali. There were Tamil ladies with names Suvannapali, Suvarnalatha etc. in Tamil Nadu. Mahanama, author of the Mahavamsa, must have decided to erase this Tamil identity of sixty years by not giving any importance to it.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 74 தொடரும் / Will follow
துளி/DROP: 1956 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73
https://www.facebook.com/groups/978753388866632/posts/33009567578691797/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.