Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலங்குவானுர்தி மீது மோட்டார் தாக்குதல்

Featured Replies

அதே உண்மைகள் சிலவேளைகளில் சுடும்போது அவை பொய்யாக தெரிவதும் உண்டு!!!

Edited by saanakiyan

  • Replies 152
  • Views 22.4k
  • Created
  • Last Reply

இணைத்தலைமை நாடுகள் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாலேயே தாக்குதல்

* பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம்

-ப. பன்னீர்செல்வம்-

இணைத்தலைமை நாடுகளின் தொலைத்தொடர்பு மாநாட்டின் போது அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தமையாலேயே மட்டக்களப்பில் தூதுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் இத்தாக்குதலை புலிகள் திட்டமிட்டே நடத்தினர் என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

கொழும்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொருளாளர் பந்துல சந்திரசேகர இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மட்டக்களப்பு வருகை தருவதையும் அங்கு பிரதேச செயலாளர் தலைமையில் மாநாடொன்று இடம்பெறுவதையும் விடுதலைப்புலிகள் நன்கறிந்திருந்த நிலையிலேயே இத்தாக்குதலை நடத்தினர். எனவே, இது தவறுதலாக இடம்பெற்றதல்ல.

யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஐந்து வருடம் பூர்த்தியானதன் பின்னர் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளின் தொலைத்தொடர்பு மாநாட்டில் உடன்படிக்கையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்றும் அமெரிக்காவும், ஜப்பானும் வலியுறுத்தியிருந்தன.

அதேவேளை, இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கமைய வடக்கு கிழக்கை இணைத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்தும், விசேடமாக இந்தியா சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாதென்றும் தெரிவித்துள்ள அதேவேளை, தமிழ்நாட்டை புலிகளின் தளமாக பயன்படுத்த இடமளிக்கக்கூடாதென பாரதீய ஜனதா கட்சி அறிவுறுத்தியுள்ள சூழ்நிலையில் சர்வதேச சமூகத்துடன் ஆத்திரம் கொண்டுள்ள புலிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஆனந்தசங்கரி போன்றோர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, அரசாங்கம் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்க வேண்டுமென்றும் பந்துல சந்திரசேகர தெரிவித்தார்

அநுருத்த பிரதீப்

எதிரியின் ஆயுதத்தாலேயே எதிரியை தோல்வியடையச் செய்ய வேண்டும். அது பயங்கரவாதமென்றால் அதற்கெதிராக ஆயுதங்களையே பாவிக்க வேண்டும். அதைவிடுத்து வேறு வழியில்லையெனத் தெரிவிக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தின ஊடகச் செயலாளர் அநுருத்த பிரதீப் சில பத்திரிகைகளும் இலத்திரனியல் ஊடகங்களும் புலிகளுக்கு சார்பாக செயற்படுகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்.

`சமாதானப் புலிகள்', `ஊடகப் புலிகள்', `இடதுசாரிப் புலிகள்', `கண்டுகொள்வோம்', `அழித்தொழிப்போம்', `நாட்டை பாதுகாப்போம்' என எம்மால் அண்மையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பாக நாட்டில் பெரும் சலசலப்பு தோன்றியுள்ளது.

இதன்மூலம் நாம் கருத்து சுதந்திரத்தையோ ஊடகச் சுதந்திரத்தையோ அழிக்கச் சொல்லவில்லை. இந்தப் போர்வைகளில் ஆயுதங்களை வைத்திருப்போர், பயிற்சி பெற்றவர்கள் ஆகியோரை அழிக்க வேண்டுமென்றே கோருகின்றோம்.

புலிகளுக்காக கருத்து வெளியிடுபவர்கள் கருத்து ரீதியில் தோல்வியடையச் செய்ய வேண்டும்.

ஆனால், எமது சுவரொட்டி தொடர்பாக புலிகளுக்கு சார்பாக கருத்துக்களை வெளியிடும் சில சிங்கள, ஆங்கில நாளேடுகளும் இலத்திரனியல் ஊடகங்களும் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டிருந்தன. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவர்கள் ஒருபக்கச் சார்பான செய்திகளை வெளியிடுபவர்களாகவே செயற்படுகின்றனர்.

கொலைகாரர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது ஊடகச் சுதந்திரமா?

இன்று எமது நாட்டில் அரசாங்கத்துடன் முறுகலை ஏற்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் இராணுவத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு சார்பாகவும் மாறிவிடுகின்றனர்.

விடுதலைப்புலிகளுக்கு சார்பான ஊடகங்களுக்கு எதிராக செயற்பட அரசாங்கம் புதிய சட்டங்களை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பில் முப்படையினரும் பொலிஸாரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அநுருத்த பிரதீப் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/3/2/i...s_page22457.htm

This clearly shows that they purposly let the helicoptor land in the area where shelling was going on. Acutally it seems that SL government wanted some diplomats to be killed in the incidents so that they can beg more money for war. The sad part is, I don't see any news in english. We have only Tamilnet which put its own news all the others are just provide the links. It should bring these kind of news immediately. Even Ilanthirayan just mention that "The LTTE was responding to hostile artillery and mortar attacks Tuesday morning" he didn't highlight that there was shelling even before they landed. Similar kind of incident happened to the media people in Muhamalai months before. Ilanthirayan could have mentioned that also to show that the SL gov used to do these kind of tactics for its propaganda purpose.

Recently the international medis like AFP, Reuters started to put LTTE news releases. Before they put just boldly that they denied it. We have to use every opportunity available to expose the true face of SL gov.

Howmany people in this forum know that LTTE is the one first declared ceasfire ? When was the last time any LTTE spokesperson (Tamilchelvan or ilamthirian) highlited this? International media put any rubbish that SL gov. relases to the media because it is a recoganised body. We don't have that opportunity and we have to use it 100% when ever it is available. Believe it or not now a days most of the politicians, gov. spokespersons, columists google(search) first before they deliver a speech or write an article etc etc. So it is important that we have a effective english reporting media and also search (google) friendly. If you search "Tamil" at google news, our news media not even within first 10 results. This is a very bad situation. We have enough tamil news reporting webs but not in english. 98% of our people knows our problem and gets the news by other means. But the for other people it has to be seen by them, it has to catch their eyes.

Everybody in this forum Please Think!.

http://www.eelampage.com/?cn=30946

பாதுகாப்பு தொடர்பான அலட்சியமே மட்டக்களப்பு தாக்குதலுக்கான காரணம்

[வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 04:37 ஈழம்] [அ.அருணாசலம்]

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிற்கு சென்ற இராஜதந்திரிகள் மீதான மோட்டார் எறிகணைத் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும் எனவும், அதிகாலையில் அந்தப் பகுதியில் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்ற போதும் பாதுகாப்பு ஒழுங்குகளை புறக்கணித்ததே இதற்கு காரணம் எனவும் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானப்படைத் தளப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு மட்டுமே தாக்குதல்கள் இடம்பெற்றதாக படைத்தரப்பு தெரிவித்த போதும், உலங்குவானூர்திகள் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றது என்று தற்போது தெரியவந்துள்ளது.

உலங்குவானூர்திகள் சிறப்பு அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களக்கு முன்னரும் விமானப்படைத் தளத்தின் மீது மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை சிறப்பு அதிரடிப்படை தளபதி நிமால் லெவ்கே ஒப்புக்கொண்டுள்ளார்.

காலை 7.30 மணிக்கும் 8.15 மணிக்கும் எறிகணைத் தாக்குதல்கள் அந்தப்பகுதியில் நடத்தப்பட்டிருந்தன. எனவே அங்கு நிச்சயமாக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இருந்திருக்கின்றன.

இராஜதந்திரிகளை ஏற்றி வந்த உலங்குவானூர்திகள் காலை 8.40 மணிக்கே தரையிறங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தன. எனவே அவற்றின் தரையிறக்கத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியிருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாங்கள் அங்கு போய் இறங்கும் வரையிலும் முன்னர் தாக்குதல்கள் இடம்பெற்றதாக எமக்கு அறியத்தரப்படவில்லை என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்ததுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.