Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate

Featured Replies

  • தொடங்கியவர்

'பிக் பாஸ்' இறுதிப் போட்டியில் சிநேகனுக்கு வாக்களியுங்கள்: காயத்ரி ரகுராம்

 

 
snehan

கோப்புப் படம்

'பிக் பாஸ்' இறுதிப் போட்டியில் சிநேகனுக்கு வாக்களிக்குமாறு காயத்ரி ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செப்டம்பர் 30-ம் தேதி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. கடைசிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, சிநேகன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம், சிநேகனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சிநேகனுக்கு அதிக வாக்குகள் கிடைப்பது போல் தெரிகிறது. எனது ஆதரவும் அவருக்கு தான். எனக்கு அவர் நல்ல நண்பர். எனக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் உறுதுணையாக இருந்திருக்கிறார். எனக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவருக்கு, தற்போது நான் ஆதரவளிக்கிறேன். அவருக்கு வாக்களியுங்கள்"

இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19761438.ece

  • Replies 94
  • Views 32.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிக்பாஸ் அப்டேட்: பலூன் டாஸ்கை வைத்து பாதி கதையை முடித்த பிக்பாஸ்

 
 
 
kamal hassan big boss season 1 tamil nadu launch live updates
பிக்பாஸ் அப்டேட்: பலூன் டாஸ்கை வைத்து பாதி கதையை முடித்த பிக்பாஸ்
 
அனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு, அதில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களுடன் மட்டும் பேச முடியும். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபரை போட்டியிலிருந்து வெளியேற்ற தகுந்த காரணங்கள் கூறவேண்டும்.

அந்த நபர்களில் தங்களுக்கு பிடித்த நபருக்கு மக்கள் வாக்களித்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருகின்றது.

பரபரப்புடன் நடந்து வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. இறுதிப் போட்டிக்கு 5 பேர் செல்ல உள்ள நிலையில், வெற்றிக் கனியை யார் பறிப்பது என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இனி உங்களை மேடையில் சந்திக்கிறேன் என்று கமல் ஹாசனும் ஹை லைட்டாக முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
 



எபிசோட் 93: பலூன் மல்யுத்தத்தில் தெறித்து ஓடிய சினேகன்

எபிசோட் 92: இதுக்காக நான் செத்தாலும் பரவாயில்லை... சுஜாவின் கண்ணீர் பேச்சு

ஒருவழியாக முடிவுக்கு வந்த ஓவியா போல் நடித்த சுஜாவின் விளையாட்டு

எபிசோட் 91: ஓட்டு வாங்க என்னமா நடிக்கிறார் பாருங்க மக்களே!


"தலைவன் இருக்கிறான் வாடா": கமலை அரசியலுக்கு அழைக்கும் சினேகன்?

எபிசோட் 90: ஹரீஷை பிச்சைக்காரனாக்கிய பிந்து: இது தேவையா?

எபிசோட் 89: பேய் மற்றும் தேவதை டாஸ்க்கில் ஆரவ் மற்றும் ஹரீஷ் இருவரும் சுஜாவை தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சுஜா, காலில் விழுகாத குறையாக ஆரவ்விடம் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

எபிசோட் 88: தாயம் போடு டாஸ்க்கை முடி போன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆரம்பித்த இடத்திற்கு யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் லுடோ கேமின் வெற்றியாளர். இந்த டாஸ்க்கில் சுஜா அணி வெற்றி பெற்றது. இதில் ஆரவ் மற்றும் கணேஷ் இருவரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்த்ய் பேய் மற்றும் தேவதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், கணேஷ், சுஜா மற்றும் சினேகன் ஆகியோர் தேவதைகளாகவும், பிந்து, ஆரவ் மற்றும் ஹரீஷ் ஆகியோர் பேய்களாகவும் இரு அணிகளாக பிரிந்து கொடுக்கப்பட்ட டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

எபிசோட் 87: கிளீன் சேவ் செய்யணும், பெட்டுல தூங்கக் கூடாது-னு ஒரு டாஸ்க்கா? என்ன சார் இப்படி பண்ணுறீங்களே!

எபிசோட் 86: பலூனை உடைக்க மல்லுக்கட்டிய பிரபலங்கள்!

எபிசோட் 85: குடும்பத்திலிருந்து வெளியேறிய வையாபுரி: கண்ணீர் விட்டு அழுத பிந்து

எபிசோட் 84: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவர் மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து வந்து அவர்களுக்குரிய பக்கெட்டில் போட வேண்டும். இதையடுத்து, அனைவரும் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணியிலிருந்து பந்து எடுத்து வந்து அதனை தங்கள் அணியின் பக்கெட்டில் போட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ஹரீஸ், பிந்து மற்றும் வையாபுரி ஒரு அணியாகவும், சுஜா, கணேஷ் மற்றும் சினேகன் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர். ஆரவ் நடுவராக இருந்தார். இந்தப் போட்டியில் பிந்துவின் அணி வெற்றி பெற்றது

எபிசோட் 83: பிக்பாஸ் குடும்பத்தில் சினேகன், ஆரவ், ஹரீஷ் மற்றும் வையாபுரி ஆகியோருக்கு பெண்கள் உடையும், பிந்து, சுஜா ஆகியோருக்கு ஆண்கள் உடையும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், பெண்கள் உடையுடன் ரேம்ப் வால்க் நடை நடந்து காண்பிக்க வேண்டும், இதையடுத்து, பொன்வண்டு டிடெர்ஜெண்ட் கேக் வழங்கும் ஆட் பிலிம் மேகிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

எபிசோட் 82: பிக்பாஸ் குடும்பத்தில் இரண்டு இரண்டு ஜோடிகளாக பிரிந்து, அவர்களுக்கு முடிந்தால் கழற்றிக் காட்டு என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், ஜோடிகள் கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும். அதிலிருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார் என்பது தான் டாஸ்க். இதையடுத்து, காட்டுங்கள் உங்கள் கை வண்ணத்தை டாஸ்க் மற்றும், நீ என்ன அப்பா டக்கரா என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது.

எபிசோட் 81: இதுவரை என்னுடைய வாழ்க்கையில் நான் ஜெயித்தது கிடையாது. இப்போது தான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று சுஜா தெரிவித்துள்ளார். சினேகனுடன் நடந்த கார் பந்தயப் போட்டியில் சுஜா வெற்றி பெற்றுள்ளார்.

எபிசோட் 80: குடும்பத்தினர் அனைவருக்கும் பெட்சீட் தைக்கும் டாஸ் கொடுக்கப்பட்டது. அதற்காக ஊசி, கத்தரிக்கோல், மற்றும் நூல் போன்றவை வழங்கப்பட்டது. ஆனால், இந்த டாஸ்க்கை முடிக்க முடியாமல் இருந்ததால், பிக்பாஸ் அனைவரிடமும் கேள்வி கேட்டுள்ளார்.

எபிசோட் 79: இந்த வாரம் வெளியேறப் போவது சுஜா என்று ஆரவ், வையாபுரி மற்றும் ஹரீஸ் ஆகிய மூன்று பேரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று கமல் தெரிவிக்க அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர்.

எபிசோட் 78: என்னுடைய அப்பா நான் சிறு வயதில் இருக்கும் போதே என்னை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நான் என்னுடைய அப்பாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தேன் என்றார். மேலும், அப்பா வந்தால் ஒரு வாய் சோறு ஊட்டி விடுவேன். அதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார். இதற்கு உன்னுடைய அப்பா வரவில்லை என்றால் நான் வருகிறேன் என்று கமல் கூறியுள்ளார்.

எபிசோட் 77: பிக்பாஸ் வீட்டிற்குள் புதுவரவு - கதாநாயகன் விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா!

எபிசோட் 76: இதனால் தான் பரணி காலில் விழுந்தேன்: உண்மையை சொன்ன ஜூலி!

எபிசோட் 75: சினேகனின் தந்தையைக் கண்டு கண்ணீர் பிக்பாஸ் குடுமத்தினர் அனைவரும் கண்ணீர் வடித்துள்ளனர். அதன் பிறகு சினேகனுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட அவரது தந்தை திருமணம் செய்து கொள்வாயா என்று அவரிடம் கேட்டுக்கொண்டார்.

எபிசோட் 74: தமிழகத்துக்கு ஜோசியம் பார்த்த கமல்! - விரைவில் அரசியல் பிரவேசம்

எபிசோட் 73: வையாபுரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிக் பாஸ் - கலகலப்பில் குடும்பம்

எபிசோட் 72: சினேகனின் தந்திரத்தை கூறி ஓரம் கட்டும் பிக் பாஸ் குடும்பம்

எபிசோட் 71: கெளரவ வேடத்துக்கு போனாலும் அசிங்கப்படுத்தும் பிக்பாஸ் குடும்பம்: ஓரங்கட்டப்படும் சினேகன்

எபிசோட் 70: திடீரென கைது செய்யப்பட்ட ஆரவ் - மீண்டும் பிக் பாஸ் வீட்டில் சக்தி!

எபிசோட் 69: கமலுக்கே டுவிஸ்ட் வைத்த பிக் பாஸ்

எபிசோட் 66: பிந்து மாதவியின் சீக்ரெட் டாஸ்க்கால் செய்வதறியாது தவிக்கும் ஹரிஸ்...!

எபிசோட் 65: பிக்பாஸ் வீட்டில் திருமணம் செய்து கொண்ட ஹரிஷ் - பிந்து மாதவி...!

எபிசோட் 64: ஆரவ், ஜூலியை கேள்விகளால் வறுத்தெடுக்கும் பிக்பாஸ் குடும்பத்தினர்

எபிசோட் 63: பிக்பாஸ் வீட்டை உரிமை கொண்டாடும் என்.ஆர்.ஐ குடும்பம்...!

எபிசோட் 62: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த ஆர்த்தி, ஜூலி...!

எபிசோட் 61: குண்டர் சட்டத்தில் உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியே உள்ளனர்: கமல் ஆவேசம்!!

எபிசோட் 60: முகத்துக்கு நேராக தப்பாக பேசினாலும் கூட அடுத்து கை கோர்த்துக்கொள்கிறார்கள்: கமலின் மறைமுக தாக்குதல் 

எபிசோட் 59: ஆவியான கணேஷ், ரைசா: அடுத்தடுத்து கொலை செய்யும் ஆரவ்

எபிசோட் 58: யார் அந்த கொலையாளி டாஸ்க்: மிஷன் ஆரம்பம்!

எபிசோட் 57: சினேகனை பார்ட்னராக தேர்வு செய்த சுஜா!

எபிசோட் 56: திறமையால் தலைவரான ஹரீஷ் கல்யாண்: பதவி பறிபோன சோகத்தில் பிந்து!

எபிசோட் 55: பிக்பாஸிலிருந்து ரொம்ப சந்தோஷமாக வெளியேறிய காயத்ரி

எபிசோட் 54 : கோபத்தில் பொங்கி எழுந்த கமல்: காஜல், ஹரிஸ், சுஜாவுக்கு புதிய டாஸ்க்!

எபிசோட் 53 : சுஜா வருணியை புலம்ப வைத்த சினேகன், பிந்து மாதவி

எபிசோட் 52 : பல பிரச்னைகளை பார்த்தும், தில்லாக பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சுஜா வருணி

எபிசோட் 51 : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெற்றிகரமாக பேய் ஓட்டிய மந்திரவாதி : பல்பு வாங்கிய பிந்துமாதவி

எபிசோட் 50 : பேய் வீடான பிக் பாஸ் வீடு : நள்ளிரவில் அலறிய சினேகன்

இந்த வாரம் காயத்ரியை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற தயாரானநெட்டிசன்கள்

எபிசோட் 49 : சக்தியை வெளியேற்றிய பிக்பாஸ் : மீண்டும் வருகிறார் ஓவியா!

பிக் பாஸிடம் வில்லங்கமான கேள்விகளை கேட்ட நடிகை ஸ்ரீபிரியா, சதீஷ் 

எபிசோட் 48 : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சக்தி - காயத்ரியின் நிலைமை இனி பரிதாபம்

எபிசோட் 47 : பிக்பாஸ் வீட்டில் புகுந்து ஆட்டையை போட்ட கில்லாடி : காயத்ரியை காப்பாற்றிய பிக்பாஸ்

எபிசோட் 46: எப்போ பாத்தாலும் தோத்து முட்டையை தலையில் ஊத்திக்கொள்ளும் ரைச!

எபிசோட் 45: அய்யயோ! இனிமேல் இந்த டாஸ்க்கை எங்களால் செய்யமுடியாது: உடம்பெல்லாம் வலிக்குது: புலம்பிய பிக்பாஸ் குடும்பம்!

எபிசோட் 44: யாரோட துணியோ தெரியவில்லை: இப்படி ஆளாளுக்கு முட்டி மோதிக்கொண்டு துணிகளை துவைக்கிறாங்க!

எபிசோட் 43: வெளியேற தயாராகி வரும் வையாபுரி முதல் பஞ்சாயத்தை கூட்டிய காயத்ரி வரை!

எபிசோட் 42: ஓவியா வெளியேற காரணமான ஆரவ் முதல், ஜூலியை விரட்டியடித்த பிக்பாஸ் வரை

எபிசோட் 41: ஆரவ் சீக்கிரம் வா! உனக்காக காத்துக்கொண்டிருப்பேன்! கமலிடம் தெரிவித்த ஓவியா

எபிசோட் 40: காதல் சோகம்: தற்கொலைக்கு முயற்சி செய்த ஓவியா!

எபிசோட் 39: முடிவுக்கு வந்தது ஓவியா - ஆரவ் காதல்!

எபிசோட் 38: மாத்தி மாத்தி பேசும் ஆரவ்: திரும்ப திரும்ப விளையாடும் ஓவியா!

எபிசோட் 37: உம்மா வேணும், உம்மா வேணும் என்று ஆரவ்விடம் கெஞ்சிய ஓவியா!

எபிசோட் 36: ஜூலி, காயத்ரியை வெளியேற்ற நினைக்கும் பிந்து!

எபிசோட் 35: ஆள் ஆளுக்கு 10 தடவை அழுது வரும் நிலையில், புன்னகையோடு பிக் பாஸ் வீட்டில் நுழையும் பிந்து மாதவி

எபிசோட் 34: ஜூலிக்கு அவ்வை சண்முகி பாடம் எடுத்த கமல்

எபிசோட் 33 : ஜூலிக்கு வேலைக்காரியான ஓவியா; அடாவடி ஆரம்பம்

எபிசோட் 32 : ஆரவின் பலவீனமே ஓவியாவுடன் நெருக்கமே: பொறாமையில் ஜூலி

எபிசோட் 31 : ஒரே பேட்டியில் ஓவியாவுடன் ஒன்னா சேர்ந்த பிக்பாஸ் காயத்ரி : புதிய திட்டம் தீட்டும் ஜூலி

எபிசோட் 30 : குடுக்குற காசுக்கு சரியான வேலை வாங்கிய பிக்பாஸ் : ஆனால் ஜூலியின் வாயை அடைக்க முடியாது

எபிசோட் 29:ஓவியா சரிபட்டு வரமாட்டா... ஆரவை ஓரங்கட்ட நினைக்கும் காயத்ரி

எபிசோட் 28: ரசிகர்கள் அதிகம் இருந்தும், பிக் பாஸ் வீட்டிலும் நடித்ததால் வெளியேற்றப்பட்ட நமிதா!

எபிசோட் 27 : ஜுலியின் நாடகத்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓவியாவை தவறாக நினைத்தனர். எனவே ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். இன்று சனிக்கிழமை எனபதால் கமல் இந்த வாரம் என்ன நடத்தது என்பதை அனைவரிடம் கேட்டறிந்தார். இதன் பிறகு ஓவியா தவறு இல்லாதவர்.ஜுலி தான் ஒன்றுமில்லாத பிரச்சனையை ஊதி பெருசாக்கினார் என்பதை குடும்ப உறுப்பினர்கள் குறும்படம் வாயிலாக கமல் அணைவருக்கும் உணர்த்தினார். ஏவிக்கஷன் லிட்டில் இருந்த ஓவியாவை மக்கள் காப்பாத்தினார்கள். இந்த வாரம் வெளியேறப்போவது கணேஷா? அல்லது நமீதாவா என்பது நாளை தெரியும்.

எபிசோட் 26: ஓவியாவை வெளியேற்றுவதில் மற்றவர்கள் எல்லாம் தீர்க்கமாக உள்ளனர். காயத்திரி, நமீதா, ஜுலி ஆகியோர் ஒவியாவை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகின்றனர். இந்த நிலையில் நாளை ஒளிபரப்ப இருக்கும் நிகழ்ச்சியில் ஓவியாவை அடிக்க சத்தி பாய்ந்தார். ஆனால் ஓவியா தைரியமாக நின்றார்.

எபிசோட் 25 : ஜூலிக்கு திடீரென ஏறபட்ட வயிற்று வலி, அவருக்கு என்ன ஆச்சு: டாக்டர் என்ன சொல்கிறார்?

எபிசோட் 24 : வைரத்தை திருடிய பிக் பாஸ் சக்தி

எபிசோட் 22: ஓவியாவை விட்டு, ரைசாவிடம் அசடு வழியும் ஆரவ்

எபிசோட் 21 : SaveBharani கேம் விளையாடிய சிறுவர்கள்: நான் கெட்டவன் இல்லை தலைவா! என கமலிடம் கண்கலங்கிய பரணி

எபிசோட் 20: பொய் சொன்ன காயத்ரிக்கு, சத்தியத்தை காட்ட கமல் போட்டு காட்டிய குறும்படம்

எபிசோட் 19 : தல, தளபதி யார் பெஸ்ட் : ஆர்த்தி, சக்தி இடையே பிரச்னை

எபிசோட் 18: கால்பந்து விளையாடிய பிக் பாஸ் குடும்பம்

எபிசோட் 17: எதுக்கு பரணியை வெளியேற்றினீர்கள் : காயத்ரியிடம் ஓவியா வாதம்

எபிசோட் 16: SaveBharani கேம் விளையாடிய சிறுவர்கள்: நான் கெட்டவன் இல்லை தலைவா! கண்கலங்கிய பரணி

எபிசோட் 15 : பிக்பாஸால் பாத்ரூம் போக முடியாமல் அவதிப்பட்ட சினேகன்!

எபிசோட் 14 : பிக்பாஸ் இல்லத்திலிருந்து சுவர் தாண்டி தப்பிக்க முயன்ற பரணி!

எபிசோட் 13:இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்டார்.

எபிசோட் 12 : நல்ல வேல நான் பைத்தியமா ஆகல: ரைசா பெருமிதம்

எபிசோட் 11 : நான் இப்பவே வீட்டுக்குப் போணும்: பைசா ரெடி பண்ணுங்க! ஜூலியை கதறவிட்ட பிக்பாஸ் குடும்பம்

எபிசோட் 10 : நகைச்சுவை நடிகர் செந்திலை ஞாபகப்படுத்திய பிக்பாஸ்: ஸ்பூன்லிங் விளையாட்டு!

எபிசோட் 9 : தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது யார் என்று தெரியாத தமிழச்சி ஜூலி!

எபிசோட் 8 :பிக்பாஸ் இல்லத்தின் இரண்டாவது வார தலைவரான காயத்ரி

எபிசோட் 7: பிக்பாஸ் தமிழ்: ஆளவிட்டாப் போதும்: கலகலப்பாக வெளியேறிய அனுயா!

எபிசோட் 6 : பரணியை அடிக்க பாய்ந்த கஞ்சா கருப்பு!

எபிசோட் 5 : ஹார்ட் ஒர்க்கிங், சோம்பேறி, நேர்மையானவர், நேர்மையற்றவர், குழு தலைவர், குழு தலைவருக்கு தகுதி அற்றவர் என்று விருது வழங்கப்பட்டது. நேர்மையற்றவர் விருது பரணிக்கு வழங்கப்பட்டது. சோம்பேறி விருது நடிகை ஓவியாவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில் அவர் வாங்க மறுத்துவிட்டார்.
எபிசோட் 4 : ஓவியா - சினேகன் வாக்குவாதத்தில் தொடங்கி ஸ்ரீ வெளியேற்றம் வரை...!

எபிசோட் 3 : பிரபலங்களின் முதல் காதல் அனுபவம், சண்டை, சச்சரவில் இருந்து பிறந்த நாள் வாழ்த்து வரை...!

2வது எபிசோட் : பிக் பாஸ் முதல் நாள் சீசனில் கெட்ட பெயர் வாங்கிய ஜூலி!

முதல் எபிசோட் : பிக்பாஸ் இல்லத்தின் தலைவர் இவர் தான்

ஒன்னே ஒன்னு கொடுங்க... ப்ளீஸ் கெஞ்சிய நடிகை ஓவியா!

 

http://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kamal-hassan-big-boss-season-1-tamil-nadu-launch-live-updates/articleshow/59308377.cms

  • தொடங்கியவர்

இதெல்லாம்தான் டாஸ்க்கா... முடியல பிக் பாஸ்... முடிச்சுக்குவோம்! 94-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

 Bigg Boss

கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் வரும் பொண்ணுங்களே இப்படித்தான் பாடலுடன் ஆரம்பமானது, 94-வது நாள். பாடல் புரியாத கணேஷ், ஏதோ கிளாசிக்கல் பாடலுக்கு ஆடுவதுபோல ஆடிக்கொண்டிருந்தார். ஆரவ்வும் ஹரீஷும், பிரஷ் செய்துகொண்டே ஆடிக்கொண்டிருந்தனர். சிநேகன், தன் அக்மார்க் ராமராஜன் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் கலக்கலாக ஆடும் பிந்துமாதவி, இந்தப் பாடலுக்கு ஏனோ அமைதியாக இருந்தார். தான் நடித்த படத்தில் வரும் பாடல் என பிந்து மாதவி கண்டுபிடித்துவிட்டாரோ என்னவோ!

 

aarav

டாஸ்க் எதுவும் சொல்லப்படாததால், ஜாலியாக அமர்ந்து ஐவரும் காபி குடித்துக்கொண்டே கதை பேசிக்கொண்டிருந்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் பறவை ஒன்று, பிந்துவின் தலையில் சில்மிஷம் செய்துவிட்டதாய் ஹரீஷ் கிளப்ப, பிந்து Bullshit (எருமை சானம்) என புலம்பினார். இல்லைங்க, இது birdshit தான், Bullshit பெருசா இருக்கும் என்றார். அதைச் செய்தது காக்காதான் என உறுதியாகச் சொன்னார் ஆரவ். கக்கா எந்தப் பறவையோடதுனு கண்டுபிடிக்கிற நேரமா இது ஆரவ். இவ்வளவு களேபரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க ஒண்ணும் தெரியாத கரகாட்டக்காரன் பட செந்தில் போல, அமைதியாய் அமர்ந்திருந்த பறவையை ஒன்றை காட்டிக்கொடுத்தது, பிக் பாஸ் கேமரா. ஆமா, பறவைகூட ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது. ஆனா, அந்தப் பறவை தான் தப்பே பண்ணலியே.(என்னமோ போங்க பிக் பாஸ்)

பிந்து மாதவி

***
12 மணிக்கு, நாளுக்குரிய முதல் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். வழக்கம்போல தெலுங்குப் பட டைட்டில்தான்' நிக்குறோம் தூக்குறோம்'. நீச்சல் குளத்தில் இரண்டு இரும்புக்கம்பிகள் இருக்கும். அதில் ஏறி நிற்க வேண்டும். எந்த அணி கடைசி வரை ஏறி நிற்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர். சிநேகன், ஆரவ் ஒரு அணியாகவும் ஹரீஷ், பிந்து ஒரு அணியாகவும் பிரித்துக்கொண்டனர். கணேஷ், இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்தார். 

முதலில் பிந்து மாதவியும் ஆரவ்வும், கம்பி மேல் நிற்க ஆரம்பித்தனர். இந்த வாரம் முழுக்கவே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தான் செல்கிறது. இந்தப் போட்டியைக்கூட மிகவும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தனர். ஆரவ்வும் பிந்து மாதவியும், கைகளைக் கோத்தபடி, 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனப் பாடிக்கொண்டே கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தனர். சுவாரஸ்யமே இல்லாமல், டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்க, சிநேகன் மட்டும், "இந்த மாதிரி விளையாட்டா ஆரம்பிக்கிற டாஸ்க்தான் சீரியஸா முடியும் "நீங்க வேணும்னா பாருங்களேன் எனப் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி ஏதோ சொல்லிக்கொண்டி  ருந்தார். ஹரீஷ் ஒரு பக்கம், இந்த மாதிரி டாஸ்க்குக்கெல்லாம் கவிஞர்தான் லாயக்கு. அவர் பாட்டுக்கு நிப்பார் என்றார். 'பாட்டுக்கு' நிற்பவர்தானே கவிஞர். ஆனால், அந்த கார் டாஸ்க்கில் சுஜாவும் சிநேகனும் அப்படித்தான் நடந்துகொண்டனர். சந்தானம், 'வாலு' பட காமெடி ஒன்றில் இரவு முழுக்க நின்று ஒரு நாளை கடப்பார். அதை மீறி கார் டாஸ்க் செய்தனர் சுஜாவும் சிநேகனும். 

பிந்து மாதவி, ஆரவ்


டாஸ்க் ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றுமே நடக்காமல் இருக்க, 'இது ஆவறதில்ல' என கடுப்பான பிக் பாஸ், இருவரையும் ஒரு கால், ஒரு கை கம்பியில் படக்கூடாது என கட்டளையிட்டார். அதற்குரிய பலன் சீக்கிரமே கிடைத்தது. ஆரவ் முதலில் அவுட்டாக, பிறகு பிந்துவும் அவுட்டானார். பின்பு ஹரீஷும், சிநேகனும் போட்டியில் பங்குபெற்றனர். வழக்கம்போல, ஹரீஷ் சொதப்ப, போட்டியில் சிநேகன் வெற்றிபெற்றார். 

வெற்றிபெற்ற அணிக்கு பாயின்ட்டுக்கு பதிலாக  30,000 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர் gift voucher வழங்கினார் பிக் பாஸ். ஆரவ்வும் சிநேகனும், 100 நாள் உழைச்சிருக்கோம், இந்த விவோ மொபைலையாவது ஒண்ணு கொடுக்கலாம்ல, என கேமராவில் புலம்பியதற்கு, வவுச்சர் கிடைத்திருக்கிறது போல. அட, இது நம்ம எல்லோருக்குமான வெற்றி என துணிக்கடை வவுச்சருடன் போஸ் கொடுக்க அனைவரையும் அழைத்தார். போற போக்கைப் பார்த்தா, பிக்பாஸ் செட்டைப் பிரித்தால்கூட, சிநேகன் வெளியே வரமாட்டார் போல. 

பிக் பாஸ் தமிழ்


****
மாலை 5 மணிக்கு அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. டாஸ்க்கின் பெயர் டிக் டேக் டோ. பள்ளிக்கூடங்களில், போர் அடிக்கும் வகுப்பில் பேப்பரில் கட்டம் போட்டு விளையாடுவோமே , அதே விளையாட்டுதான். 9 கட்டங்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் யார் முதலில் கோணலாகவோ, நேராகவோ ஒரு வரிசையை கம்ப்ளீட் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். இதே போட்டி, தரையில் நடந்தது. இரு அணிகளுக்கும் மூன்று துண்டுகள் கொடுக்கப்பட்டன.  எந்த அணி முதலில் ஒரு வரிசையை முடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். சிநேகன், கணேஷ் ஒரு அணியாகவும், பிந்து, ஹரீஷ் ஒரு அணியாகவும் பிரிந்தனர். இந்த முறை ஆரவ் நடுவராக செயல்பட்டார். 

முதல்முறை பிந்து மாதவி வென்றுவிட, அடுத்த மூன்று முறையும் சிநேகன், கணேஷ் அணி வென்றுவிட்டது. "எனக்கு இந்த கேமோட, டெக்னிக் கொஞ்ச நேரம் கழிச்சுதான் தெரிஞ்சது நண்பா" என்றார் கணேஷ். இவர் மட்டும் தனியாகச் சென்று 'விவேகம்' படம் பார்த்துவிட்டு வந்திருப்பாரோ என்னவோ, விவேக் ஓபராயைவிட அதிகமாக 'நண்பா' போட்டுக்கொண்டிருந்தார். போதும் நண்பா முடியல. மறுபக்கம், ஆரவ் விளையாட்டை விளக்கிக்கொண்டிருந்தார். டீ முடிஞ்சு போச்சு ஆரவ்..

பிந்து மாதவி

***
மாலை 6 மணிக்கு பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் பிந்து மாதவியை அழைத்து, 'இந்த சூட்கேஸில் 10 லட்ச ரூபாய் இருக்கு என்றார். இப்போதே விலகிக்கொள்பவர்கள் , இந்த 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்' என அறிவித்தார் பிக் பாஸ்.அதேபோல, இந்த 10 லட்ச ரூபாய் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையிலிருந்து கழிக்கப்படும் என்றார். (இதென்ன நியாயம் பிக் பாஸ்). பழைய படங்களில் காதலைப் பிரிக்கும் பணக்கார அப்பா, ஒரு சூட்கேஸில் பணம் தருவாரே, அதே டெம்ப்ளேட். ஒட்டுமொத்த அணியும் எங்கள் காதல் உண்மைக் காதல் என 10 லட்சத்தை வாங்க மறுத்தது. நாங்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு வரவில்லை என்றும், மக்கள் விருப்பப்பட்டால் செல்கிறேன் என்றும் அறிவித்தார்கள். "இப்போதானே டிரெஸ் எல்லாம் ... " என ஹரீஷ் எதையோ சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் பிக் பாஸ் பேசத்தொடங்கி, ஹரீஷை வாயடைத்தார். (நல்லா எடிட் பண்ணுங்கப்பா ).

யோசிச்சு முடிவு பண்ணுங்க, 'போனா வராது, பொழுது போனா கிடைக்காது' என பிக் பாஸ் எவ்வளவோ வார்த்தை ஜாலங்கள் காட்டியும் யாரும் அதை எடுக்கவில்லை. இனி பாருங்க,  விலை ஏறும் என கணித்தார் ஆரவ். 30 லட்ச ரூபாய் வரை இந்த டீலிங் போகும் பாருங்களேன் என்றார் ஆரவ். அப்படியே, 50 லட்சம் வரை போனா, எடுத்துட்டுப் போயிடலாம்னு ஆரவ் பிளான் பண்ணினார் போல. 
இதற்கு நடுவே கணேஷை கலாய்க்க, சிநேகனும் ஹரிஷும் திட்டம் போட்டனர். தங்களுக்குள் சண்டை போட்டால், ' என்ன ஆச்சு நண்பா' என கணேஷ் வருவார் என்பது சிநேகனின் எண்ணம். என்னடா இது ஜென்டில்மேன் கணேஷுக்கு வந்த சோதனை. சரி, ஜென்டில்மேன் என்றாலே ஏமாளிகள்தானே! இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, கணேஷ் எதிர்பார்த்தபடி "என்ன ஆச்சு நண்பா" என்றார். ஆனால், ஹரக்‌ஷின் திருட்டு விழியில், நடிப்பதைக் கண்டுபிடித்துவிட்டார் கணேஷ். அப்போதும் அதே சிரிப்புதான். எப்பதான் பாஸ் உங்களுக்கு கோபம் வரும். 

மீண்டும் 7.30 மணிக்கு பெட்டி வந்தது. 15, 20 லட்சம்னு கூட்டுவார்னு பார்த்தா, பிக்பாஸ் ஒன்றாம் வாய்ப்பாடு போல ஒரு எண்ணைக் கூட்டி, ''11 லட்சம் இருக்கு, யாரு போறீங்க'' என்றார். இப்போதும் முடியாது, முடியாது என கூலாக அறிவித்தது ஐவர் கூட்டணி. எப்படி ஒற்றுமையா இருக்கணும்னு, தமிழக அரசியலின் மூவர் கூட்டணிக்கு (இப்போ ரெண்டு) கிளாஸ் எடுக்கலாம் இந்த ஐவர் கூட்டணி.

பிந்து மாதவி


***

இரவு எட்டு மணிக்கு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து, வந்த டாஸ்க்குகளில் எவையெல்லாம் சிறப்பாக இருந்ததோ, அந்த டாஸ்க்குகள் இந்த வாரம் முழுக்க வருமாம். அப்ப, புதுசா எதுவும் யோசிக்கல. அப்படித்தான... 

பிக் பாஸில் ஹிட் அடித்த 'திருடா.. திருடா' டாஸ்க்கை மீண்டும் விளையாட பணித்தார் பிக் பாஸ். ஐவர் மட்டுமே இருப்பதால், உறுப்பினர்களுக்கு பெயர் என எதுவும் வழங்காமல், வைரப்பெட்டி மட்டும் எடுத்துவந்து வைக்கப்பட்டது. ஹரீஷை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, ''இந்தமுறை நீங்கள்தான் திருடனாக இருக்க வேண்டும்'' என்றார் பிக் பாஸ். நம்ம பிஞ்சு மூஞ்சிக்கு அதெல்லாம் செட் ஆகாது என்பது போல பார்த்தார் ஹரீஷ். அறையைவிட்டு வெளியே செல்லும்போது, ''இந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு போங்க ஹரீஷ்'' என்றார் பிக் பாஸ். கேஷுவலா இருக்காங்களாம். கணேஷை அழைத்து, "திருடனைப் பிடிக்க என்ன திட்டம் வச்சி  ருக்கீங்க" என்றார் பிக் பாஸ். "நாங்க அலெர்ட்டா இருப்போம் பிக் பாஸ்" என்றார் கணேஷ். உங்க அலெர்ட் லட்சணங்களைத்தான் நாங்க போன தடவை பார்த்தோமேடா. 

சிநேகன்

" நான் வேணும்னா, போன தடவை மாதிரி தூங்கிட்டா வைரத்தை ஈசியா எடுத்துடலாம்ல" என நக்கலடித்தார் ஆரவ். ஆம், சென்ற முறை இந்த விளையாட்டு வந்தபோது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மிகப்பெரிய பாரம்பர்ய கூட்டுக் குடும்பம். காயத்ரி , நமீதா என இரு மருமகள்கள். கண்டிப்பான மாமனார். கடைக்குட்டி ஜூலி. வேலையாள் சிநேகன். விருந்தாளி ஓவியா என அதுவொரு கலக்கல் டீம். " இதான் உங்க அண்ணியா, பன்னி மாதிரி இருக்கு" என ஓவியா கேட்டதெல்லாம் ஓவியா ஆர்மியினருக்குக் கண் முன்னால் வந்து போயிருக்கும் (எனக்கும் வந்து போச்சு பாஸ்).

 இரவு, ஓவியா வைரத்தை ஜாலியாக எடுக்க முயற்சித்தது. சக்தி, ஆரவ் தூங்கியதும், அதை மாற்றிவிட்டு கமுக்கமாகத் தூங்கியது. இரண்டு நாட்கள் கழித்து, " இதுக்கு மேல முடியாது குருநாதா" என சக்தி அப்ரூவராக மாறியது  என கிரைம் த்ரில்லர் ரேஞ்சில் நிகழ்ந்த நிகழ்வு அது.   

ஆனால், இப்போது இருப்பது ஐவர் மட்டும்தான். இதில் எப்படி நடத்த முடியும் என்பது போல ஆரம்பிக்கப்பட்டது  'திருடா திருடா'  டாஸ்க்.  
அங்கு இருக்கும் அணியினரை நக்கல் அடித்தபடியே இருந்தார் ஆரவ். அந்தத் திருடன் ஓவர் கோட் போட்டிருக்கலாம் (பிந்து),  குடுமி வச்சு இருக்கலாம் (சிநேகன்), கண்ணாடி போட்டிருக்கலாம் (ஹரீஷ் ),தமிழ் பேசத் தெரியாத மாதிரி நடிக்கலாம் (பிந்து மாதவி) என ,தெறி, பட இன்டர்வெல் விஜய் போல பஞ்ச் பேசிக்கொண்டிருந்தார். கணேஷ் சும்மாவே ஓவர் ஆக்டிங் பண்ணுவார். அவரெல்லாம் இதுக்கு செட்டாக மாட்டார் எனப் போகிறபோக்கில் ஜென்டில்மேன் கணேஷையும் நக்கல் அடித்தார்.

"எனக்கென்னமோ, உன் மேலதான் டவுட்டா இருக்கு" என கோலை ஆரவ் பக்கம் திருப்பினார் பிந்துமாதவி. "உண்மைலயே நான் திருந்திட்டேன், நான் கொலைகாரன் இல்லை" என கொலைகாரன் டாஸ்க்கை நினைவுபடுத்தினார் ஆரவ், இப்போது பிந்துமாதவி, எனக்கென்னமோ சிநேகன் மேலதான் சந்தேகமா இருக்கு" என்றார். ''பெத்த தாயி பிள்ளையைப் பார்த்து சந்தேகப்படலாமா'' என்றார் சிநேகன். ஏனோ, இன்று நாள் முழுவதும் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககரா போல, முகத்தில் பவுடர் பூசிய நிலையில் இருந்தார் சிநேகன். (ஃபைனலுக்கு ரெடியாகுறார் போல)."எனக்கு இப்ப ஹரீஷ் மேலதான் சந்தேகம்"  என்றார் பிந்துமாதவி. அடப்போம்மா, நீயி பிக் பாஸைத் தவிர எல்லார் மேலயும் சந்தேகப்படுற. 'ஹரீஷ், நெசமா நான் இல்லைங்க' என்பது போல பிந்துவைப் பார்த்தார். பிந்து மாதவி , ''சத்தியமா நீ இல்லையா? சத்தியமா'' என மீண்டும் மீண்டும் கேட்டார். இம்புட்டு பச்ச மண்ணா இருக்கே, விட்டா ஸ்கூல் பொண்ணு மாதிரி அடுத்து மதர் ப்ராமிஸ், ஸ்டடி ப்ராமிஸ் எல்லாம் கேட்பார் போல. ஆனாலும், பிந்து மாதவி ப்ராமிஸ் கேட்ட விதம், அவ்வளவு அழகு.

பிந்து மாதவி

போன தடவை கொடுத்தது போல, டூப்ளிகேட் வைரம் எதுவும் கொடுக்காமல் இருக்கலாம் என ஆரவ் தனக்குத்தானே ஏதேதோ சொல்லிக் கொண்டார். ஆரவ் மட்டும் வாஷ் பேசின் மேல் இருக்கும் இடத்தில் எல்லாம் சென்று டூப்ளிகேட் வைரம் இருக்கிறதா எனப் பார்த்தார். பழைய போட்டியாளர்கள், நினைவுகள் என அதிகம் பகிர்வது ஆரவ்தான்.  சிநேகன், கணேஷ் எல்லாம் அடுத்த கட்டத்துக்கு விரைவில் வந்துவிடுகிறார்கள். சிநேகன் கூர்கா போல, குச்சி, விசிலுடன் களம் இறங்கினார். ரோந்துப் பணியில் ஈடுபடுவார் போல. 
கதாநாயகன், 'பலூன்' பட ப்ரொமோஷன்களுக்குப் பிறகு, தன்னை அறியாமல் இந்த வாரம் வெளியாக இருக்கும் 'ஹர ஹர மகாதேவகி' திரைப்படத்துக்கு விளம்பரம் வைத்துக்கொண்டிருந்தார் ஆரவ். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் வைரலாகி, திரைப்படங்கள் வரை ஹிட் அடித்த வரலாறு, 'ஹர ஹர மகாதேவகி'க்கு உண்டு. அதில் வரும் ராஜா கரடி கதையை பிக் பாஸுக்கு ஏற்றவாறு சொன்னார் ஆரவ். அந்த ராஜா பேரு பிக் பாஸாம் எனப் போகிற போக்கில் பிக் பாஸைக் கொட்டினார் ஹரீஷ். எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் சென்ற நாளை, சுவாரஸ்யமாக்க, தன்னால் இயன்றவரை பாடுபட்டார் ஆரவ். பிக் பாஸ், அவருக்குக் கொஞ்சம் பேட்டாவுல பார்த்து போட்டுக்கொடுங்க பிக் பாஸ்.

ஆரவ்

"ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா பாக்குறவங்கள எல்லாம் அடிக்கச் சொன்னாராம். அந்த ராஜா, ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போனாராம். ஒரு கரடியைப் பார்த்தாராம். அம்பு எடுத்து விட்டாராம். ஜஸ்ட்டு மிஸ்ஸு. கரடி மேல படல. அடுத்து, ஒரு கம்ப எடுத்து விட்டாராம் அவரு மேல, அதுவும் ஜஸ்ட்டு மிஸ்ஸு. அந்தக் கரடி எஸ்கேப் ஆயிடுச்சு. பதிலுக்கு அந்தக் கரடி, இந்த ராஜாவைப் பார்த்து சொல்லுச்சாம். இந்த வில்லையே உனக்கு விடத்தெரியலயே, நீ எப்படி இந்த வைரத்த திருடப்போற? அதுக்கு அந்த ராஜா, "பாருடா, இந்தவாட்டி நன்னா திருடுவேன்னு சொன்னாராம். "முதல்முறையாக ஹர ஹர மாகதேவகி ஜோக் கேட்கிறார் போல பிந்து மாதவி விழுந்து விழுந்து சிரித்தார். வெளியே சென்றதும் கண்டிப்பா அசிஸ்டென்டிடம் சொல்லி, மற்ற ஜோக்குகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வார் என நம்பலாம். பிந்துவுக்கு உண்மையிலேயே தமிழ் தெரியாதுதான் போல. அம்புல இருந்து எடுத்து எப்படி வில்ல விட முடியும் என கடைசி வரை அவர் கேட்கவில்லை. சரி, எல்லாம் தெரிஞ்ச கவிஞர் சிநேகனே, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது தாயுமானவர்னு நம்பும்போது, சுந்தரத் தெலுகு பிந்து மாதவியை எல்லாம் குற்றம் சொல்வது தவறு. நீ சிரி தாயி.
'தேவதைகளும் பிசாசுகளும்' டாஸ்க்கிற்குப் பிறகு, ஒட்டுமொத்த அணியும் உஷாராகிவிட்டது. மெனக்கெட்டு விழித்திருந்து டாஸ்க் செய்கிறார்களோ இல்லையோ. அங்கேயே பாயப் போட்டு படுத்துவிட்டார்கள். தேவதைகள் டாஸ்க்கின்போது, இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார் ஆரவ். ஆனால், இந்த முறை அணி மாறிவிட்டதால், யாரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என கவுண்டமணி சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனம். ஐவரும், தங்கள் பெட்டை எடுத்துவந்து வைரப்பெட்டிக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டனர். 

சிநேகன்

 

இரவு 12 மணிக்கு ஒட்டுமொத்த அணியும் தூங்கிவிட்டது. ஹரீஷ் எழுவார் என்று பார்த்தால், ஆரவ் எழுந்து வந்தது  சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு, இவனுகள நம்பி டாஸ்க் வேற தர்றியே பிக் பாஸ் என்பது போல, கேமராவில் சைகை காட்டிவிட்டு தூங்கச்சென்றுவிட்டார். 4 மணிக்கு எழுந்த ஹரீஷ், மிகவும் சாமர்த்தியமாக  வைரத்தை எடுத்துக்கொண்டு வந்து படுத்துவிட்டார். 
5 மணிக்கு பீப் ஒலி அலற, அனைவரும் எழுந்து பார்த்தால், வைரம் மிஸ்ஸிங். ஆரவ், ''எனக்கு  சிநேகன், ஹரீஷ் மேலதான்  சந்தேகம்'' என கணேஷிடம் சொல்லிக்கொன்டிருந்தார். ஏன்னா, கவிஞர் செம்ம தூக்கம் தூங்கினார் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பார்வையாளர்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. சென்ற முறையாவது ஒட்டுமொத்த அணியும் உள்ளே தூங்கியது. காவல் காத்தது ஆரவ், சக்தி மட்டும்தான். அதில் ஆரவ், கண் அசர, சிநேகன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ஆனால் இந்த முறை, ஒட்டுமொத்த அணியும் அங்கேயேதானே படுத்து இருந்தார்கள். பிறகெப்படி இது சாத்தியம்!

ஹரிஷ்

 'போட்டி' என்று வந்துவிட்டால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் சிநேகன் எப்படித் தூங்கினார். பிக் பாஸ், சிநேகனை அழைத்து, 'நீங்கள் தூங்க வேண்டும்' என கட்டளையிட்டு இருந்தாலே ஒழிய இது சாத்தியமில்லை என்றே தோன்றியது. எல்லாம் பிக் பாஸுக்கே வெளிச்சம்.
இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இந்த பிக் பாஸ் டீமை விட்டு, நாளை ஒருவர் வெளியேறப்போகிறார் என்ற பிக் பாஸின் அறிவிப்புடன், விளக்குகள் அணைக்கப்பட்டன. 

கமலின் அரசியல் ட்விட்டரைக் கடந்து, ஒரே நாளில் பல மீடியாக்களுக்கு பேட்டி தரும் அளவுக்கு talk of the town ஆகியிருக்கிறது. சமூக வலைதளங்களில், 'முதல்வர்' கமலுக்கு ஆதரவும் அறிவுரையுமாகக்  கொட்டுகிறது. சூழ்நிலை இப்படியிருக்க, கமல் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் எந்தவித சண்டையோ, முகச் சுளிப்புகளோ, மனித உரிமை மீறலோ  நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில், பிக் பாஸ் அணி கவனம் செலுத்துகிறதோ எனவும் எண்ணத்  தோன்றுகிறது,  தீவிர அரசியல் என வந்துவிட்டால், சினிமாவுக்கு குட்பை என ஒரு பேட்டியில் சொன்னார் கமல். சினிமாவுக்கே குட்பை என்றால், பிக்பாஸ் எம்மாத்திரம்?!  முதல் சீசனை முடித்து கமலை அனுப்பிவிட்டு, இரண்டாவது சீசனை ரணகளமாக  நடத்தக் காத்திருக்கிறார்கள் போலும். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, கடைசி நான்கு நாட்களிலேனும்  ஏதேனும் சுவாரஸ்ய  சிக்ஸர் அடிப்பார்களா... அல்லது  கிழிந்த துணியை தைப்பது, அழுக்குத் துணியைத் துவைப்பது என பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் டாஸ்க்குகளையே மீண்டும் செய்யச் சொல்லப்போகிறீர்களா பிக் பாஸ்?!

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103519-its-done-bigg-boss-happenings-of-bigg-boss-day.html

  • தொடங்கியவர்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் இன்னொருவர் யார்?

 

 
harish

பார்வையாளர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியும், சுவாரஸ்யப்படுத்தியும், அபூர்வமாக நெகிழ்ச்சி அடையச் செய்தும் என ஏதோ ஒருவகையில் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சி முடிய இரண்டே நாட்களில் உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல் கடந்த வார நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் எனக் கூறியிருந்தார். புரொமோவிலும் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் காண்பிக்கப்பட்டது, ஆனால் அவர் யார் எனச் சரியாகத் தெரியவில்லை.

bigg-boss-tamil-feature.jpg

பிக் பாஸ் நிகழ்ச்சியை இத்தனை நாட்கள் பொறுமையாகப் பார்த்துவிட்ட ரசிகர்கள் என்ன தான் ஆகிறது யார் தான் டைட்டில் வின்னர் என்பதையும் காண ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த வெளியேற்றக் காணொலியைப் பார்த்த ரசிகர்கள் பிந்து அல்லது ஹரிஷ் இருவரில் ஒருவர் வெளியேறக் கூடும் என்று கருதுகின்றனர்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/28/big-boss-elimination-continues-2781357.html

  • தொடங்கியவர்

மிஸ்டர் பிக்பாஸ்... பிந்து மாதவிக்கு ஏன் இப்படி பண்ண நீ?! 95-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 

bigg boss tamil

சென்ற பகுதி 94ஐ படிக்க க்ளிக் செய்க...

 

க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டபடியால் இத்தனை நாள் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ‘மாணிக்கம்’  பிக்பாஸ், மீண்டும் தனக்குள் இருந்த ‘பாட்ஷா’ பிக்பாஸை வெளிக்கொண்டு வந்த நாள் இன்று. ஆம் பார்வையாளர்கள் ஃபைனல்ஸுக்குத் தயாராவதற்கான நெருப்பைப் பற்ற வைக்க நாளின் இறுதியில் சிறப்பான சம்பவம் ஒன்றை நிகழ்த்திவிட்டார். 

நேற்றைய ‘திருடா திருடா’ டாஸ்க்கில் ஹரிஷ் வெற்றிகரமாக வைரத்தைத் திருடியிருந்தார். அதிலிருந்து தொடங்கியது இன்றைய நாள். காலை 8 மணிக்கு  ‘தாரை தப்பட்டை’ படத்திலிருந்து ‘வதன வதன வத வடிவேலனே’ பாடல்   ‘வேக்கப் சாங்’காக ஒலித்தது. வைரத்தைப் பறிகொடுத்த துக்கத்தில் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டார்கள். 8 மணி வரை யாருமே எழுந்திருக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்து ஆட, ஹரிஷ்  ‘ஆளை விடுங்கடா’ என்று கையெடுத்துக் கும்பிட்டு மீண்டும் Sleep Mode க்குப் போனார். பிந்துவும் ஆரவ்வும் சேர்ந்து ஆட, சிநேகன் ’Snake’கன்னாக மாறி மகுடி வாசித்துக் கொண்டிருந்தார். 

பிக் பாஸ் தமிழ்

ஆட்டம் முடிந்தது உள்ளே போனதும் ஆரவ்விடம் தனது புலன் விசாரணையைத் தொடங்கினார் சிநேகன். அவர் கவிஞரென்றபடியால் புலவன் விசாரணை என்றுகூடச் சொல்லலாம். ‘மதர் ப்ராமிஸ்..   கமல் சார் ப்ராமிஸ்.. நான் எடுக்கலை’ என்று ஆரவ் தனது நேர்மைக்கு கமலை ஜவாப்தாரியாக்கிக் கொண்டிருந்தார். கமல் மீதே சத்தியம் செய்துவிட்டபடியால் சிநேகனுக்கு ஆரவ் மீதிருந்த சந்தேகம் நீங்கியிருக்கும். ‘வண்ணாரப்பேட்டைல பாவாடை காணாம போனக்கூட என்னைதான் சொல்றாங்க’ என்று ஆரவ் தனது வழக்கமான கவுன்டரை எடுத்துவிட்டார். ‘எப்படி தூக்கிருப்பாங்க?’ என்று ஃபீலிங்க்ஸ் காட்டியபடியே படுக்கையறைவிட்டு வெளியேறினார் ஹரிஷ் (கேசுவலா இருக்காராம்..!). ‘பேண்ட் பாக்கெட்டை கவனிச்சேன் அதுல இல்ல’ என்று பிந்துவும்.. ‘ஹரிஷ் ரியாக்ஸனே வேற மாதிரி இருக்கு’ என்று ஆரவ்வும்… ஹரிஷ் மீதான தங்கள் சந்தேகத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஹரிஷ் பாத்ரூமை க்ளீன் செய்வதற்காகச் செல்ல, சிநேகன் கணேஷை அழைத்து ஹரிஷைப் பின்தொடர்ந்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சொன்னார். கணேஷ் கிளம்பியதும் ஆரவ், ‘அந்தாளு போய் ஓப்பனா சொல்லப்போறாரு.. சிநேகன் உங்களை ஃபாலோ பண்ணச்சொன்னாருனு’ என்று சொல்லிக்கொண்டிருக்க, அது என்ன பிரமாதம் அதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என்பதுபோல கணேஷ் திரும்பிவந்து, ‘இல்ல உண்மைலயே பாத்ரூம்தான் க்ளீன் பண்றாரு’ என்றார். ‘லாரிக்குள்ள கடத்தல் பொருள் ஒண்ணும் இல்ல சார்.. அவன் கடத்துனதே லாரியத்தான்யா’ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

ஹரிஷ்

**

ஹரிஷைக் கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்து அவர் கையில் ஒரு சூட்கேசைக் கொடுத்து அனுப்பினார் பிக்பாஸ். ஹரிஷ் எல்லாரையும் அழைத்து அதைத் திறக்க 13 லட்சம் என்று எழுதப்பட்டிருந்தது. நேற்றைய 11 லட்சம் டீல் படியாததால் இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கிறார்கள். வழக்கம்போல் அதே டயலாக்.. இந்தத் தொகையை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். ம்ஹூம் ஒரு பயலும் மதித்ததாகத் தெரியவில்லை. நல்லவேளையாக ‘தமிழ் மக்கள்’, ‘தர்ம யுத்தம்’ என்றெல்லாம் மீண்டும் வசனம் பேசாமல் இந்த முறை டீசண்டாக எழுந்து சென்றுவிட்டார்கள். ‘போய் தொலையானு சொல்லிப்பாக்குறாங்க கேட்க மாட்டேங்குறீங்களே’ என்று சிநேகனைக் கலாய்த்தார் ஆரவ்.

ஆரவ்

ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் லிவிங் ரூமில் உட்காரவைத்து டிவியில் ஹரிஷ் திருடியதை குறும்படமாக ஓட்டினார்கள். ‘நான் அப்பவே சொன்னேன்’ என்று ‘அருணாச்சலம்’  வி.கே ராமசாமியைப்போல் ரியாக்ஸன் கொடுத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வைரத்தை எங்கே மறைச்சு வச்சிருக்கீங்க என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மௌனகுருவாக இருந்தார் ஹரிஷ். பிக்பாஸ், ஹரிஷ் வெற்றிபெற்றதாக அறிவித்து வைரத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைக்கச் சொன்னார். ஹரிஷ் வைரத்தை எடுக்கச் செல்ல, ‘எங்கே இருந்ததுனு பாப்போம்’ என்று ஆரவ்வும் கணேஷூம் பின்தொடர்ந்தார்கள். டாய்லெட்டுக்குள் இருந்து வைரத்தை எடுத்து வந்து டேபிளில் வைத்தார். ‘நீங்க டான்ஸ் பண்ணலைன்னதும் சந்தேகப்பட்டேன்’ என்ற கணேஷின் கேள்விக்கு, ‘எனக்கு வயித்துவலி அதான் டான்ஸ் ஆடல’ என்று ஒண்ணாங்கிளாஸ் பையனைப்போல் ரீசன் சொன்னார் ஹரிஷ். ’எங்கே இருந்தது?’ என்று பிந்து கேட்டதற்கு, ‘அண்டர் தி வேர்’ என்று ஆரவ் கலாய்க்க, பிந்து ‘ச்சீ’ரித்தார்.

**

12 மணிக்கு இன்றைக்கான முதல் டாஸ்க்கை அறிவித்தார்கள். ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பிறகு என்ன பேசுவீர்கள்?’ என்பதை ஒரு நிமிட செல்ஃபி குறும்படமாக எடுக்க வேண்டும். இதுதான் டாஸ்க்.  சிநேகன் சிந்தனையில் ஆழ்ந்தார். ஹரிஷ் போனை எடுத்துவந்து செல்ஃபி எடுக்க, அதைப் பார்த்துவிட்டு, ‘நல்லா இல்ல டெலிட் தட்’ என்று டெலிட்ட வைத்தார் பிந்து. இந்த பெண்கள் நல்லா இல்லை என்று டெலிட் செய்த செல்ஃபிக்களையெல்லாம் ஒரு இடத்தில் சேர்த்தால் கூகுள் சர்வர்க்கே சவால் விடும். 

சிநேகன்

ஆளாளுக்கு பிராக்டிஸில் இறங்கினார்கள். ஹரிஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து, ‘நான் டைட்டில் வின் பண்ணிட்டேன்’ என்று கத்த, ‘ப்ரோ இன்னைக்குதான் லாஸ்ட் நாள் அதுக்குள்ளயா’ என்று ஆரவ் சொல்வது போல் சீன். இருவருமே நன்றாகத்தான் செய்தார்கள். ஆனால் பாவம் அதற்குள் மொபைல் லாக் ஆகி வீடியோ பதிவாகாமல் போய்விட்டது. இன்னொரு டேக் வாங்கினார்கள். கணேஷ் கையையே மொபைல் மாதிரி வைத்துக்கொண்டு ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார். 

ஹரிஷ் அடுத்த சீனை எடுத்துக்கொண்டிருந்தார். பிக்பாஸ் டைட்டில் அவருக்குக் கிடைத்தவுடன் கத்தி துள்ளிக்குதித்து கீழே விழுந்து புரள்வதுபோல் நடிக்க போன் கீழே விழுந்து மீண்டும் லாக் ஆனது. (இதென்னடா ஹரிஷூக்கு வந்த சோதனை). ம்ஹூம் ரொம்ப குதிக்கக்கூடாது என்று லிவிங் ரூமில் அமர்ந்துகொண்டே அந்த சீனை எடுத்தார்கள். ‘வாழை வைத்த தமிழ் மக்கள்… தென்னை வைத்த தெலுங்கு மக்கள்’ என்று முக்கா நிமிடம் நேரம் அரசியல் வசனம் பேசி கடைசியில் எனக்கு பேச்சே வரல என்று முடித்தார் ஹரிஷ். 

பிந்து மாதவி ஷூட்டிங்.. அவர் வெற்றியாளர் என்று கோப்பையைக் கொடுக்க (பாத்ரூம் கழுவுற பிரஸ்.. ஏன்யா உங்களுக்கு வேற ப்ராப்பர்டியே கிடைக்கலையா?. அதை மைக்காக பாவித்து அதற்கு முத்தம் வேறு கொடுத்தார் பிந்து மாதவி. நீ தான்மா நடிகை), அவர் அதை வாங்கிக் கொண்டு ‘ரொம்ப தேங்க்ஸ்.. இந்த படத்தோட டைரக்டர், கேமரா மேன் எல்லாருக்கும் நன்றி’ என்று சொல்ல.. ஆரவ், ‘இது சினிமா அவார்டு இல்ல பிக்பாஸ் டைட்டில்’ என்று சொல்வது போல் சீன். சாக்லேட் கேக்கிற்குள் ஐஸ்க்ரீம் வைத்தாற்போல பிந்துமாதவிக்குள் இப்படி ஒரு கிரியேட்டரா? வாவ்டா. சிநேகன், டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதும் கீழே அமர்ந்து ‘இந்த தருணத்தை மறக்கவே முடியாது’ என்று நெகிழ்ந்து பேசத் தொடங்க, பின்னிருந்து ஹரிஷூம் ஆரவ்வும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். 

பிந்து

மீண்டும் ஒரு பெட்டி வந்தது. இந்த முறை 15 லட்சம். பெட்டியைக் கொண்டு வந்ததும் ‘எனக்கு வேண்டாம்’ என்று பிந்து எழுந்துசெல்ல, சிநேகன், ‘பிக்பாஸ் பேசுவாரு இருங்க’ என்று சொல்லி அமரச் செய்தார். வார்த்தை மாறாமல் அதே டயலாக்கைச் சொல்ல, ‘ஸாரி’ சொல்லி கலைந்தார்கள்.

**

இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கு எவிக்சன் கன்பார்மா இருக்குமா என்று சிநேகன் கேட்க, கமல் சாரே சொல்லிட்டாரே இருக்கும்னு என்று ஆரவ் சொல்லிக்கொண்டிருந்தார். ‘மீண்டும் உலகத்தைப் பார்க்கப்போகிறேன்’ என்ற தலைப்பில் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கவிதை வடித்தார் சிநேகன். ‘அவ்வப்போது தேநீர்.. எப்போதும் இளையராஜா பாடல்’ என்று மழை பெய்யும்போது ஃபேஸ்புக்வாசிகள் போடும் கவிதை போலவே இருந்தது அது.

‘சப்புனுலாம் முடிஞ்சிராது கடைசி எபிசோட்’ என்று ஹரிஷ் தன் அனுமானத்தைச் சொன்னார். ‘எப்படி சுவரை ஏறிக்குதித்து எஸ்கேப் ஆகலாம்?’ என்று ப்ளான் போட்டார்கள் ஹரிஷூம் ஆரவ்வும். நூறு நாள் முடிந்தபிறகு இந்த வீட்டிற்குள் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நடித்துக் காட்டினார்கள் இருவரும். ‘கன்ஃபஷன் ரூம் கதவை திறக்க மாட்டேங்குறான்… எடுறா அந்த சிலிண்டரை’ வடிவேலுவைப்போல் சலம்பலைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘இதுல தானடா குறும்படம் போட்டீங்க’ என்றார் ஹரிஷ். இது விளையாட்டுக்குப் பேசுன மாதிரி தெரியல. நோட் பண்ணுங்க பிக்பாஸ்.

bigboss29_1_09595.jpg

**

இன்றைய நாளின் டெய்லி டாஸ்க் ‘விருது வழங்கும் விழா’. டாஸ்க் பெயரை வாசித்ததும், ‘உருது??’ என்று இழுத்தார் பிந்து. பத்து விருதுகள் இருக்கும். அதை ஹவுஸ் மேட்ஸ் யாருக்கு வழங்க நினைக்கிறார்களோ அவர்கள் பெயரை எழுதித்தரவேண்டும்.  இது ஏற்கனவே நடந்ததுதான். சக்தி மீண்டும் வந்தபோது இப்படி ஒரு டாஸ்க் நடந்தது. அப்போது ஜூலிகூட சுஜாவுக்கு ‘நாடகக்காரி’ என்ற பட்டம்கூட கொடுத்தாரே. அதே டாஸ்க் இப்போது மீண்டும். எல்லாரும் விருதுக்கான பரிந்துரைகளை எழுதிக்கொடுத்தார்கள். 

பிறகு அவார்டு ஃபங்க்சனுக்கு ரெடியானார்கள். ஆரவ் சட்டை அயன் பண்றதுக்கெல்லாம் ஹரிஷ் தீம் ம்யூசிக் போட்டுக்கொண்டிருந்தார். மூன்றடுக்கு செயின் ஒன்றை அணிந்துகொண்டார் பிந்து. சிநேகன் சட்டை மாற்றும்போது அந்த பெட்ரூமில் இருந்து பிந்து திரும்பிடாதீங்க என்று ஆரவ் கத்த, (நல்லவேளை) பிந்து திரும்பாமலேயே ‘பாத்துட்டேன் பாத்துட்டேன்’ என்று கத்தினார். கணேஷை கன்பஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் அவரையே இந்த விருது வழங்கும் விழாவை நடத்தச் சொன்னார்.

ஆக்டிவிட்டி ஏரியாவில் அவார்டு நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆரவ் ஆடியன்ஸூக்குக் கைகாட்டுவதுபோல் பாவனை செய்தார். கணேஷ் நிகழ்ச்சியைத் தொடங்கினார். சென்ற முறை நடந்த அவார்டு ஃபங்க்சன் போல் இல்லாமல் இந்த முறை நல்ல நல்ல அவார்டுகள் என்று சொல்லி ஒவ்வொரு அவார்டுகளாக அறிவித்தார்.

‘சாகசக்காரன்’ என்ற விருதை ஆரவ் ,சிநேகன் இருவரும் பெற்றுக்கொண்டார்கள். இரண்டு பேருக்கும் சேர்த்து அந்த விருதை மாட்டிவிட டெஸ்ட் ட்யூப் பேபி மாதிரி இருக்கு என்று கலாய்த்தார் ஹரிஷ். எதார்த்தமானவர் என்ற விருது பிந்து, ஆரவ் இருவருக்கும். ‘மக்களே.. மக்களுக்கு மக்களே..’ என்று தனது சுந்தரத்தமிழில் நன்றி நவிழ்ந்தார் பிந்து. ‘அமைதிப்படை’ பிந்து, ‘உழைப்பாளி’ என்ற விருதை சிநேகன் பெற்றுக்கொண்டு, ‘ஹார்ட் வொர்க் பண்ண ரொம்ப புடிக்கும். அதைத்தான் பிக்பாஸ் வீட்லயும் பண்ணேன். வேணும்னு பண்ணலை’ என்று தன்னிலை விளக்கமளித்தார். ‘சுட்டி’ ஹரிஷ் என்று தொடர்ந்தது விருதுகள். போனமுறை அவருக்கு ‘உப்புக்கு சப்பாணி’ விருது கிடைத்ததை நினைவுபடுத்தி இந்த முறை நல்ல அவார்டு வாங்கியிருப்பதாகச் சொன்னார். வீட்டின் செல்லப்பிள்ளை என்ற விருதை பிந்து பெற்றபோது கொஞ்சம் கண் கலங்கினார். ‘ரொம்ப சந்தோசம் பண்ண… பண்ணி..’ என்று பண்ணுதமிழை கொன்னு எடுத்தார். ‘ஆதிபுத்திசாலி’  (கணேஷ் அப்படித்தாங்க வாசிச்சாரு) என்ற விருது சிநேகனுக்குத் தரப்பட்டது. ‘காதல் மன்னன்’ விருதின் பெயரைச் சொன்னதும் எல்லாருமே சரியாக யூகித்தார்கள். ஆரவ் விருதைப் பெற்றுக்கொண்டு ‘இது என் முன்னால் இருப்பவர்களின் சதிச்செயல் ஆனால் பட்டம் நல்லா இருப்பதால் பெற்றுக்கொள்கிறேன்’ என்றார். ‘அணைக்கும் கரங்கள்’ என்ற விருது சிநேகனுக்கு (ஹெல்பிங் மைண்டாம்.. தப்பா நினைக்கக்கூடாது). ‘இந்த நாலு பேர் மனசுல இடம் புடிச்சா நாலு கோடி பேர் மனசுல இடம் புடிச்சா மாதிரி’ என்று சிநேகன் தத்துவம் நம்பர் 1230 ஐ பதித்தார். கணேஷூக்கு ஒழுக்கமானவர் என்ற விருது வழங்கினார்கள். அதைத் தன் அப்பாவுக்கு டெடிகேட் செய்தார். ‘ரொம்ப மகிழ்ச்சியா இருக்குல’ என்று சிநேகனும் ‘நான் எழுதுன எல்லாமே கரெக்டா வந்திருக்கு’ என்று ஆரவ்வும் மெச்சிக்கொண்டார்கள். 

bigboss29_2_09410.jpg

**

இரவு 9:30 க்கு ஹவுஸ்மேட்ஸ் எடுத்த குறும்படம் அவர்களுக்கே போட்டுக்காண்பிக்கப்பட்டது (எத்தனை நாளைக்குத்தான் அந்த தண்டனைய நமக்கே தருவாய்ங்க). முதலில் ஆரவ், பிக்பாஸ் பெரிய களம், லைஃப் சேஞ்சிங்காக இருந்தது என்பதையும் என்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரீயில் தொடர்ந்து இருப்பேன் என்பதையும் சுட்டிக்காட்டினார். அதோடு இந்த டைட்டிலை வின் பண்ணனும்னு தொடர்ந்து ஏங்கிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் நிறைய பேரின் படிப்பு, மருத்துவத்துக்கும் உதவுவேன் என்றார். இந்த வாரத்தின் தொடக்கத்தில், சுஜா வெளியேறி கடைசி ஐந்துபேர் இருந்த நிலையில் பிக்பாஸ் ஒரு முக்கிய கட்டளையிட்டிருந்தார். அது, மக்கள் ஓட்டுகளை வைத்து வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி வாரம் இது என்பதால் யாரும் நேரடியாகவோ, டாஸ்க் மூலமாகவும் மக்களிடம் ஓட்டுக்கேட்கக் கூடாது என்பது. இவர்களின் குறும்படங்கள் நேரடியாக ஓட்டுக்கேட்கவில்லை என்றாலும் ‘எனக்கு ஏன் ஓட்டுப் போடவேண்டும்?’ என்கிற தொனியிலேயேதான் பேசியிருக்கிறார்கள். இதையெல்லாம் பிக்பாஸ் கேட்பாரா? 

கணேஷ் ரொம்பவும் பொறுமையாக பேசினார். டாக் ஆஃப் தி டவுன் ஷோவுல டைட்டில் வின் பண்ணப்பறமும் நீங்க இப்படி பொறுமையாதான் பேசுவீங்களா ப்ரோ? பிந்து ரிகர்சலிலேயே அவருடைய குறும்படம் என்ன என்பது தெரிந்துவிட்டது. ‘எனக்கு ஓட்டு போடுற’ என்று விவகாரமான தமிழில் திணறித் திணறிச் சொல்ல, டிவியில் இது வரும்போது வெட்கப்பட்டுக் கண்களை மூடிக்கொண்டார். 

சிநேகன் தான் பேசிக்கொண்டிருக்கும்போது பின்னால் ஆரவ், ஹரிஷ், பிந்து சிரித்துக்கொண்டிருந்ததை இப்போதுதான் கவனித்தார் போல, சிடுசிடுவென அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அன்று கமல் முன்பு சொன்ன அதே நூலகம் திறக்கும் ஐடியாவை இப்போதும் ‘பகிரங்கமாக’ அறிவித்தார். ஹரிஷ் கல்வி உதவியும் மருத்துவ உதவியும் செய்வேன் என்றார். பிறகு கனவு போல எழுந்திருப்பதாக காட்சி அமைத்திருக்க, இதையும் போட்டாங்களா என்று ஆரவ் சிரித்தார்.  

இதில் சிநேகனின் குறும்படம் மட்டும் உண்மைக்குக் கொஞ்சம் பக்கத்தில் இருந்தது. உண்மையிலேயே அவர் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினால் இப்படித்தான் பேசியிருப்பார். மற்றவர்கள், சிலர் நகைச்சுவை செய்திருந்தார்கள், ஆரவ் பிரச்சார நெடி, கணேஷ் செயற்கை. 

**

சிநேகனை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். மீண்டும் கையில் ஒரு பெட்டியைக் கொடுத்து அனுப்பினார். பிந்து ஏன் இவ்ளோ சீரியாஸா இருக்கு என்று ‘ஆல் இஸ் வெல்’ சொல்லிக்கொண்டிருந்தார். பெட்டியுடன் வந்த சிநேகனைப் பார்த்ததும் இந்த முறை பதினேழா இருபதா என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உள்ளே இருந்தது ஒரு செய்தி. ‘நீங்கள் எவிக்சனுக்கு தயாராகுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. மயான அமைதி குடிகொண்டது. எல்லார் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது. ‘ஈவ்னிங்ல இருந்து ரொம்ப சிரிச்சுட்டோம்ல’ பிந்து கவலைப்பட்டார். ‘டாஸ்க்காகூட இருக்கலாம்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டார் ஹரிஷ்.

வீட்டிற்கு வெளியே கார்டன் ஏரியாவில் ஐந்து சிறிய மேடைகள் அமைத்திருந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் ஒட்டப்பட்டிருந்தது. ‘டாஸ்க் மூலமா அனுப்புவாங்களா? இல்லை ஓட்டிங் வச்சு அனுப்புவாங்களா’ என்ற குழப்பம் ஆரவ்வுக்கு. ‘பிக்பாஸ்ல எது வேணா நடக்கலாம்’ என்று சோகமானார் கணேஷ். அவருக்கு தான்தான் எலிமினேட் ஆவோம் என்ற பயம் அதிகமாகவே இருப்பது தெரிந்தது.

bigboss29_3_09164.jpg

இன்றிரவு இந்த வீட்டில் ஒருவருக்குக் கடைசி இரவு என்று பேசத் தொடங்கினார் பிக்பாஸ். அவரவர் பெயர் போட்ட மேடைகளில் ஏறி நிற்க விளக்குகள் மாறி மாறி எறியும் யாருக்கு பச்சை விளக்குகள் போடுகிறார்களோ அவர் காப்பாற்றப்பட்டவர். சிவப்பு விளக்குகள் வருபவர் எவிக்ட் ஆக வேண்டும். 

ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக அமர்ந்துகொண்டார்கள். பேய் அறைந்தார்போல் முகமானது அனைவருக்கும். சிநேகன் ரொம்பவே கலங்கிப்போனார். ‘டோன்ட் க்ரை’ என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் பிந்து. ‘பிக்பாஸ் வீட்ல என்ன வேணா நடக்கலாம் நான் தயாரா இருக்கேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு வரச் சொன்னார் பிக்பாஸ்.

எல்லாரும் அந்த சிறிய மேடையில் ஏறிக்கொள்ள லைட்டுகள் மாறி மாறி எறிந்து நின்றது சிநேகன் முகத்தில் மட்டும் பச்சை விளக்கு அடிக்கப்பட்டது. அவர் சேஃப். எல்லாரையும் கீழே இறங்கச்சொன்னார். சிநேகன் கண் கலங்க, ‘ஸ்ட்ராங்க இருங்க’ எல்லாரும் ஆறுதல் சொன்னார்கள். திரும்பவும் மீதி நான்கு பேரையும் மேடை மீது ஏறச்சொன்னார். இது ஒரு நல்ல யுக்தி. தொடர்ந்து விளக்குகள் அடித்து ஒருவர் ஒருவராக பச்சை காண்பித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒருவர் சேஃப் என்று அறிவிக்கப்பட்ட பிறகு சிறிது இடைவெளிவிட்டால் அந்த இடைவெளியில் அவர்களுக்கு பிபியே வந்துவிடும். 

விளக்குகள் மாறி மாறி அடிக்க இந்த முறை கணேஷூக்கு பச்சை விளக்கு காண்பிக்கப்பட்டது. மீண்டும் அனைவரையும் கீழிறங்கச் சொன்னார்கள். மிகுந்த வருத்தத்தில் இருந்த கணேஷூக்கு இப்போது ஒரு நிம்மதி வந்திருக்கும். 

மீண்டும் சிநேகன், கணேஷ் தவிர மூவரையும் மேடையேற்றி விளக்குகள் அடித்தார்கள். இம்முறை காப்பாற்றப்பட்டது ஆரவ். ஆரவ்வால் இதை வெற்றியாக நினைத்து சந்தோசப்படமுடியவில்லை. அவர் ஒரு பேரதிர்ச்சியில் இருந்து மீண்ட நிலையில் பேச்சின்றி இருந்தார். ‘போறதுனாகூட ஓக்கே சேஃப் ஆகிட்டாதான் இன்னும் கவலை’ என்றார். ‘புதன்கிழமைனால கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன்’ என்று ஹரிஷ் பதட்டப்பட்டார். 

எதுவாயிருந்தாலும் பரவாயில்லை என்று பிந்துவும் ஹரிஷூம் மீண்டும் மேடையேறினார்கள். அந்த ரணகளத்திலும் ஹரிஷ் தலை கலைந்திருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். ‘உங்கள் இருவரில் ஒருவரின் பயணம் இப்போது முடிவுக்கு வர இருக்கிறது’ என்று பிக்பாஸ் மேலும் திகிலூட்ட, அவர்களின் ஹார்ட் பீட் கன்னாபின்னாவென உயர்ந்திருக்கும்.

bigboss29_4_09096.jpg

ஹரிஷ் பெருமூச்சு விட்டு கண்களை மூடிக்கொண்டார். விளக்குகள் எரியத்தொடங்கியது. ஹரிஷூக்கு பச்சையும் பிந்துவுக்கு சிவப்பு விளக்கும் காண்பிக்கப்பட்டது. பிந்து இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகிறார். ஹரிஷ் கண்களை மூடியிருந்ததால் சிறிது நேரத்திற்கு பிறகே பார்த்தார். 

**

பிந்து வெளியேறும் படலம் தொடங்கியது. ‘டைம் டூ கோ’ என்று அவர் சொன்னபோதே கண்கள் மெல்ல ஈரமாகத் தொடங்கியிருந்தது. எல்லோரையும் கட்டிக்கொண்டார். அவருக்கான பெட்டி வந்தது. சிநேகன் கேவிக் கேவி அழத் தொடங்க, பிந்து சமாதானம் செய்தார். ஆனால் அவருக்கும் சிரிக்கும் உதடுகளைக் கடந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ‘இந்த வாரம் நல்லாப் போச்சு எந்தப் பிரச்னையும் இல்லாம’ என்று சொல்லிவிட்டு காலைல எந்திரிச்சதும் உங்க யார் முகத்தையும் பார்க்க முடியாதுனு நினைச்சாதான் கவலையா இருக்கு என்றார். 

வழக்கம்போல் போர்டில் பிரிவுச் செய்தி எழுத வேண்டும். பிந்து ஆங்கிலத்தில் சொல்ல அதை சிநேகன் தமிழ்ப்படுத்தி எழுதினார். கையெழுத்தும் தமிழில் போட விரும்புவதாக பிந்து கேட்டுக்கொள்ள அவர் கைபிடித்து தமிழில் எழுத உதவினார் சிநேகன். சனிக்கிழமை எல்லாரும் மீட் பண்ணுவோம் என்று எல்லாரையும் உற்சாகப்படுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார். எக்ஸ்பிரசனே வரமாட்டேங்குது என்று ஹரிஷ் தன் ஃபீலீங்க்ஸை பதிவு செய்தார். சிநேகன் மீண்டும் அழ, நான் ஹேப்பியாதான் போறேன், என் முன்னாடி அழுதா நானும் அழுவேன் என்று சமாதானப்படுத்தி விடைபெற்றார். காலைல எல்லாரும் டான்ஸ் ஆடுங்க என் ஸ்டெப் போடுங்க என்று சியர் அப் செய்து விடைபெற்றார் பிந்துமாதவி.

bigboss29_5_09453.jpg

இவையெல்லாம் நடந்த போது நேரம் நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி இருந்தது. அர்த்தராத்திரியில் இப்படி ஒரு பிரளயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வழக்கமாக ஞாயிறு எவிக்சன் இருக்கும் மனதளவில் யாரோ போகப்போகிறார்கள் என்று தயாராகி இருப்பார்கள், ஆனால் இன்று திடீரென ஒரு பிரிவு. இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதை ஹவுஸ் மேட்ஸ் எப்படி எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சோகமே உருவாக காட்சியளித்தார்கள் அனைவரும்.

பிந்துமாதவிக்கான குறும்படம் காண்பிக்கப்பட்டது. என்ட்ரீ, குறும்புகள், சோகம், டாஸ்க் என எல்லாம் கலந்த கலவையாக இருந்தது குறும்படம். இந்த குறும்படங்களை எடிட் செய்பவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ். பிந்துமாதவிக்கு மட்டுமில்லை இதுவரை வெளியேறிய எல்லா போட்டியாளர்களுக்கும் போடப்பட்ட குறும்படங்கள் மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருந்தது. தோட்டத்துப் பூக்களில் சிறந்த பூக்களை மட்டும் பறித்து, தொடுத்து, மாலையாக்கி பெருமாளுக்குச் சூட்டும் ஆண்டாளைப்போல், போட்டியாளர்களின் அத்தனை நாள் பயணங்களில் இருந்தும் மிகச் சிறந்த நினைவுகளை பொறுக்கி எடுத்து மிக அழகாகத் தொடுக்கிறார்கள்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103627-bigg-boss-why-bindhu-madhavi-happenings-of-bigg-boss-day-95.html

  • தொடங்கியவர்

'சேவல் பண்ணை'யாக மாறிய பிக்பாஸ் வீடு! 96-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

bigg boss tamil

கல்லூரியின் கடைசிநாளில் என்னென்ன காட்சிகள் இருக்குமோ.. என்னென்ன வசனங்கள் இருக்குமோ… என்னென்ன கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், கண்ணீர்கள் இருக்குமோ அது அத்தனையும் இருந்தது இந்த பிக்பாஸில். 96 ஆம் நாள் மற்றும் 97 ஆம் நாளின் காட்சிகள் இன்று ஒளிபரப்பட்டது. 96 ஆம் நாள் நள்ளிரவில் பிந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அன்றைய நாள் விடிந்த பிறகான காட்சிகள் தொடங்கியது. எப்படியும் எவனும் ஆடப்போறதில்ல என்று தெரிந்து ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ சாங்கை வேக்கப் சாங்காக ஒலிக்கவிட்டார்கள்.  மற்ற நாட்களைப்போல் இல்லாமல் உற்சாகம் குறைவாக இருந்தாலும் எல்லாருமே ஆடினார்கள்.  கடமைக்கு ஆடிக்கொண்டிருந்த சிநேகன் முகத்தில் சோக ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தது.

 

பிக் பாஸ் தமிழ்

‘100 நாள் கழிச்சு ஃபைனல்ஸ் வரைக்கும் வந்துட்டோம்.. எவ்ளோ டாஸ்க் பண்ணியிருக்கோம்.. என்னெல்லாம் போராடியிருக்கோம். கடைசி நாலுபேர்ல ஒருத்தரா அறிவிக்குறாங்க ஆனா அந்த மொமன்ட்டை எஞ்சாய் பண்ணமுடியல.. டாப் 4 ல வந்ததைவிட பிந்து போய்ட்டானு மட்டும்தான் மைண்ட்ல இருந்துச்சு. செம கேம் ஆனா…’ என்று கணேஷிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆரவ். உண்மைதான் டாப் 5 வந்தபோதுகூட எல்லோரும் கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள். ஆனால் இன்று நான்கு நடமாடிக்கொண்டிருந்தாலும் வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது. பிந்து விதைத்துவிட்டுச் சென்ற வெறுமை, விருட்சமாகி வீடு முழுவதும் படர்ந்துகிடப்பதை போட்டியாளர்களின் பேச்சில் இருந்து உணரமுடிந்தது. நேற்று தான் போவதற்கு மனதளவில் தயாராகிவிட்டதாகச் சொன்ன கணேஷ் ‘காப்பத்தப்பட்டதை உணர முடியல’ என்றார். ‘முன்னாடி லிமிட்டா இருந்துச்சு அப்பறம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் ஆகிட்டாங்க.. எப்படி அந்த க்ளோஸ்னஸ் வந்துச்சுனே தெரியல’ என்றார் ஆரவ். 

‘யாருமே ப்ரிப்பேரா இல்ல’ என்று ஹரிஷ் சொல்ல, ‘ஆமா சனிக்கிழமைக்காக ரெடியாயிருந்தோம்’ என்று ஆரவ் ஆமோதித்தார். ‘பணப்பெட்டி வந்தப்போ சின்ன பயம் இருந்தது நம்மளா போனா பணத்தோட போகலாம் ஆனா அவங்க அனுப்புனா எதுவுமே இருக்காது அப்படினு அன்னைக்கு சொன்னேன் அப்போ ஒரு பயம் இருந்துச்சு டக்குனு யாராச்சும் ஒருத்தர் பேரை சொல்லி கிளம்புங்கனு சொல்லிடுவாங்களோனு’ என்றார் சிநேகன். ‘யார் போயிருந்தாலுமே கஷ்டம்தான்’ என்றார் ஹரிஷ். ‘ஆரம்பத்துல ஏன்டா உள்ளே வந்தோம்னு நினைச்சிட்டு இருந்தாங்க கடைசில இருக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க’ என்று பிந்துவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சிநேகன். 

பிக் பாஸ் தமிழ்

**

இவர்கள் புலம்பல்களையெல்லாம் கேட்டபோது ‘நெல்லாடிய நிலமெங்கே’ என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது.  ’15 பேர் உட்கார்ந்து சாப்பிட்ட டேபிள் இப்போ 4 பேர்ல வந்து நிக்குது’ என்று ஆரவ் கடந்த கால நினைவுகளை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, சிநேகன் எதிர்காலம் குறித்த கற்பனைக்குத் தாவினார். ‘நாளைக்கு நம்ம பேரன்கிட்ட சொல்லிட்டு இருப்போம்ல மொபைல்லாம் இல்லாம 100 நாள் இருந்தோம்னு.. காட்டுவாசி மாதிரி இருந்தீங்களா தாத்தானு கேட்பான்’ என்று சிநேகன் பேரன் லெவலுக்குத் திங்க் பண்ண, ஹரிஷ் ‘அடுத்த வருசமாச்சும் கல்யாணம் பண்ணுவீங்களா?’ என்று கேட்டு சிநேகனை நிகழ்காலத்துக்கு இழுத்துவந்தார். ‘இதுக்கப்பறம் ஒரு பொண்ணு புடிச்சிருக்குனு சொல்லி வந்தா பண்ணலாம்’ என்று இழுத்தார் சிநேகன். (பிக்பாஸூ  கேமரால ஓட்டுதான கேட்கக் கூடாது.. பொண்ணு கேட்கலாம்ல..). ஆனாலும் என்ன நினைத்தரோ ‘வரலைனாலும் பரவால்ல இப்பவே நல்லாதான் இருக்கு இப்படியே ரன் பண்ணிடுவோம்’ என்று சேஃப்டிக்கு சொல்லிவைத்தார்.(அடுத்த சீசனுக்கும் மொத ஆளா ரெடி ஆவார் போல சிநேகன்) ‘அதுக்கப்பறம் இல்லைமா வேணாமானு சொன்னீங்கன்னா தெரிஞ்சா கொலைகாரனாகிடுவேன்’ என்று நண்பரின் மீதுள்ள தன் அக்கறையைக் காட்டினார் ஆரவ்.

‘பரணியை அட்வைஸ் பண்ணி ரெண்டு வாரம் வீட்டுல இருக்க வச்சிருக்கலாமோங்குற குற்றவுணர்வு இருக்கு’ என்று அடுத்த டாபிக்கை எடுத்தார் சிநேகன். ‘நாளைக்கு அவன் வந்தா ஸாரி கேட்கணும்’ என்று ‘பகிரங்கமாக’ அறிவித்தார். ‘பாத்த உடனே புடிச்சவங்க நிறைய பேரை பழகினப்பறம் புடிக்கல… பாத்த உடனே பகைச்ச நிறைய பேரை பழகினப்பறம் பிடிச்சது’ என்று சொல்லி ‘முன்முடிவு’ எவ்வளவு மோசமானது என்ற பாடத்தை இந்த வீட்டில் கற்றுக்கொண்டதாகச் சொன்னார் சிநேகன். மிகச் சரியான வார்த்தை.  ‘இவர்கள் இப்படித்தான்’ என்று தாமாகவே ஒரு கண்ணோட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி எல்லோரையும் அணுகியதுதான் காயத்ரி போன்றவர்களுக்கு சிலர் என்ன செய்தாலுமே தவறாகத் தெரிந்தது. 

பிக் பாஸ் தமிழ்

**

யாருமற்ற பெண்களின் அறையில் கணேஷ் தனியாக நடந்து வெறுமையின் நீளத்தை அளந்துகொண்டிருந்தார். ‘தேரடிச்ச வீடு மாதிரி இருக்குங்க’ என்று தலையில் கைவைத்துக்கொண்டு சொன்னார் சிநேகன் . என்னடா இவிய்ங்க புலம்பிக்கிட்டே இருக்காய்ங்க என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ஆரவ் தன் காமெடியைப் புகுத்தினார். ஹரிஷை அழைத்து தன் சமையலை டேஸ்ட் பார்க்கச் சொன்னார். ‘உங்களுக்கு ஒரு ட்ரிக் சொல்றேன். சில சமயம் நாம சமைச்சு முடிச்சு டேஸ்ட் பாக்கும்போது கன்றாவியா இருக்கும். அப்போ இந்த கொத்தமல்லிய மேலாப்புல தூவி விட்டோம்னா இவன் டேஸ்ட்டை தூக்கிக் கொடுத்துடுவான்’ என்று சொல்லி கொத்தமல்லியைத் தூவிக்கொண்டே ‘ஆனா இப்போ அதுக்காக பண்ணலை பொதுவா சொல்றேன்’ என்று முடித்தது, ப்ரோ செம டைமிங் ப்ரோ. 

‘வெளில போய் ஒருத்தனுமே கூப்டலைனா பேசாம சமையல்காரனா போயிடலாம்’ என்று சிநேகன் சொல்ல, ‘அதுக்கு கண்டிப்பா கூப்பிடுவாங்க’ என்று ஆரவ்வும் ஒத்துக்கொண்டார். ‘எல்லாருக்கும் ஒரு சுயதொழில் இருக்கு. ஒண்ணா சேர்ந்து ஓட்டல் வச்சிடலாம்’ என்று ஐடியா கொடுத்தார் சிநேகன்.

பிக் பாஸ் தமிழ்

நேற்று எவிக்சன் என்ற பெயரில் ஹார்ட் பீட்டை எக்குத்தப்பாக எகிற வைத்துவிட்டு, இன்று இதய தின சிறப்பு டாஸ்க் கொடுத்தார்கள். மன் கீ பாத் - மனதில் பட்டதை பலூனில் எழுதி பறக்கவிடவேண்டும். ஆரவ் தனது அப்பா அம்மாவிடமும் தமிழ் மக்களிடம் ஏதாவது விஷயத்தில் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படிக் கேட்டார். சிநேகன், தன் ஊர் மக்களுக்கு, நண்பர்களுக்கெல்லாம் ஸாரி சொன்னார். எவ்ளோ சண்டை போட்டாலும் உடனே மன்னிப்பு கேட்ருங்க இதுதான் சிநேகனின் மெசேஜாம். ஹரிஷ் சில வாட்ஸப் பார்வேர்களை எழுதிவிட்டு எப்படி மற்றவர்களுக்காக வாழணும்ங்குறதை இங்கே கத்துக்கிட்டதாகச் சொன்னார். இதயத்தில் கை வைத்து ‘இங்க என்ன சொல்லுதோ அதைக் கேட்டு நடந்துகிட்டா வாழ்க்கை சிறப்பா இருக்கும்’ என்று முடித்தார். கணேஷ் தன் பங்குக்கு நான்கு அட்வைஸ்கள் பலூனில் எழுதி பறக்கவிட்டார்.

**

அடுத்த டாஸ்க் பற்றிய அறிவிப்பை வாசித்தார் ஹரிஷ். ‘டேஷ் அண்ட் டேஷ்’ என்னனு கெஸ் பண்ணுங்க பாப்போம்? என்று சஸ்பென்ஸ் வைக்க, ஆரவ் சில அட்டம்ப்டுகளுக்குப் பிறகு ‘Freeze and Release’ என்று சரியாக யூகித்தார். பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் உன்னிப்பாக கவனித்து டாஸ்க் வைக்கிறார் என்பது தெரிகிறது. ஏனென்றால் கொஞ்ச நேரம் முன்புதான் ஃப்ரீஷ் டாஸ்க்கின்போது சந்தோஷமாக இருந்ததாக சிநேகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஹரிஷ். 

பிக் பாஸ் தமிழ்

5:15 மணிக்கு ஃப்ரீஷ் சொன்னார் பிக்பாஸ். அந்த நேரத்தில் சிநேகன் வலைபோட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். ஹரிஷ் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆரவ்வும் கணேஷூம் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..’ என்று சிவாஜி பாடி முடித்ததும் அலைகள் பறவைகளெல்லாம் ஃப்ரீஷாகி நிற்பது போல் அசையாது நின்றார்கள். ஒருவரை உள்ளே அனுப்பினார்கள். ஏற்கெனவே இவர் இந்த வீட்டிற்குள் ஒருமுறை வந்திருக்கிறார். அப்போது இவரை கண்டுகொள்ளாததுபோல் இருக்க வேண்டும் டாஸ்க் கொடுத்திருந்தார்கள். இப்போது ஃப்ரீஷாகி நிற்கவைத்துவிட்டு அனுப்புகிறார்கள். ‘எல்லாம் ஷோ ரூம் பொம்மை மாதிரியே நிக்குறாங்க’ என்று கலாய்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர், ஆரவ்வைப் பார்த்து, ‘பாடி பீடி மாதிரி ஆயிடுச்சு’ என்று நக்கலடித்தார். கணேஷூக்கு சலூன் சால்வை போர்த்தி முடிவெட்டத் தொடங்கினார். ‘லைட்டா வெட்டுங்க’ என்று கணேஷ் சொல்ல, ‘லைட் ஹவுஸ் மாதிரி இருக்க எங்க லைட்டா வெட்டுறது’ என்று மீண்டும் ரகளையை கொடுத்தார். 

ப்ரேயரின்போது எல்லாரும் வெயிலில் நிற்க ‘மிஸ் மயக்கம் வர்றமாதிரி இருக்கு மிஸ்’ என்று நடிப்பைப் போட்டு மரத்தடியில்போய் அமர்ந்துகொள்ளும் ஸ்கூல் பையன்மாதிரி சிநேகன் ‘பிக்பாஸ் எறும்பு கடிக்குது பிக்பாஸ்’ என்று ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி ரிலீஸ் ஆனார். ‘உள்ள போனா நம்மளை வச்சி செஞ்சிருவாய்ங்களே’ என்று சொல்லி சேரில் அமர அவருக்கு மீண்டும் ஃப்ரீஷ். ‘எப்ப பாரு கொஸ்டீனா கேக்குறீங்களே.. இதெல்லாம் தன்னால வர்றதா இல்ல நைட் புல்லா யோசிப்பீங்களா’ என்று கணேஷ் மீது தன் அட்டாக்கைத் தொடங்கினார் அந்த புதியவர். ‘எங்க மிஸ்டர் கவிஞர்.. கவி.. கவி…’ என்று கேட்டு வெளியே வந்தவர், சிநேகனுக்கு தலையில் தண்ணியடிச்சு, ‘ரஜினி ஹேர் ஸ்டைல் பண்ணவா?’ என்று கேட்க, அருகிலிருந்த ஹரிஷ் லைட்டாக சிரித்தார். பின் எல்லாருக்கும் விடுதலை தரப்பட்டது.

பிக் பாஸ் தமிழ்

**

புதிதாக வந்தவரோடு சேர்த்து ஐவரும் கிச்சனில் இருக்க, ஸ்டோர் ரூம் மணி ஒலித்தது. நான்கு ஸ்பெஷல் கேக்குகள் அனுப்பியிருந்தார்கள். உள்ளே சென்று கேக்கை எடுத்துவந்ததும் ஃப்ரீஷ் என்று பிக்பாஸ் உத்தரவிட கையில் கேக்குடன் சிலையானார்கள். புதிதாக வந்தவர் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். சிநேகன் முகத்தில் கேக்கைப் பூசினார். ‘இப்பதான உங்களை நல்லவர்னு சொன்னோம்’ என்று ஆரவ் சொல்ல, அடுத்த அட்டாக் ஹரிஷிற்கு, அவர் முகத்தில் பூசியதோடு தலையிலும் கொஞ்சம் வைத்தார். ‘பூசுறதுதான் பூசுறீங்க ஹேப்பி 100th டேனு சொல்லி பூசுங்க’ என்ற ஆரவ் சொன்ன அறிவுரையைக்கேட்டு ‘Happy 100 th day’ என்று சொல்லி கணேஷ் முகத்தில் பூசினார். அவர் காபியிலும் கொஞ்சம் கேக்கைப் போட்டுவிட்டார். அடுத்தது ஆரவ். முகத்தில் பூசியது பத்தாமல் இரண்டு பேன்ட் பாக்கெட்டிலும் போட்டுவிட, ஆரவ் அங்கும் இங்கும் ஓட, கணேஷ் ஃப்ரீஷ் சொல்லப்பட்டதை நினைவுபடுத்தினார். ‘ப்ளீஸ் பிக்பாஸ் ரிலீஸ் பண்ணிவிடுங்க’ என்று ஆரவ் கெஞ்ச, ‘யாராச்சும் ஓடிவந்து அடிப்பீங்கனு தெரியும்’ என்று அவரே லீட் கொடுத்தார் வந்தவர்.  அவர் வெளியில் சென்று கதவு திறப்பதற்காக காத்திருக்க, பிக்பாஸ் ரிலீஸ் சொல்ல, எல்லாரும் ஓடிவந்து அவர் முகத்தில் கேக் பூசினார்கள். ஆரவ் அவருடைய பேண்ட் பாக்கெட், சட்டை பாக்கெட் என எல்லா இடத்திலும் கேக்கைக் கொட்டி பழிதீர்த்துக்கொண்டார்.

**

சிநேகனுக்கு ஒரு ஸ்பெஷல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலிருந்து அவர் பார்த்த சம்பவங்களை வைத்து பிக்பாஸ் பாடல் ஒன்றை உருவாக்க வேண்டும். சிநேகனுக்கு எழுதுவதற்கு நேரம் கொடுக்கப்பட அந்த நேரத்தில் ஒவ்வொருவரையாக கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்துப் பேசினார் பிக்பாஸ். முதலில் கணேஷ். ‘இந்த போட்டியில் இவ்ளோ தூரம் வருவீங்கனு நினைச்சீங்களா?’ என்று கணேஷிடம் கேட்டார். அதற்கு அவர், ‘இல்லை. இந்த வீட்ல நிறைய கத்துக்கலாம்னு வந்தேன். யாரையும் இதுவரைக்கும் ஹர்ட் பண்ணதில்லைங்குறதை நினைச்சு பெருமைப்படுறேன். காலையை எஞ்சாய் பண்ணி பழக்கம் இல்ல.. ஆனா நீங்க பண்ண வச்சிட்டீங்க’ என்றார். 

ஆரவ், ‘இங்க நிறைய பேர், ஆல்ரெடி செலிபிரட்டி. மக்களுக்குத் தெரிஞ்ச முகம். அதனால அவங்களுக்குத்தான் ஆதரவு கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்லைனு மக்கள் நிருபிச்சுட்டாங்க. குறும்படம்ல அசிங்கப்பட்டது உட்பட எதையும் மறக்கமுடியாது’ என்றார். நடுவில் பிக்பாஸ் குரலுக்கு அடிமையா இருந்தோம் என்று வேறு ஒருவரி சேர்த்துக்கொண்டார். 

ஹரிஷ், பொறுப்பு, நிதானம், பொறுமை என்று டிக்சனரியில் இருக்கும் எல்லா நல்ல வார்த்தைகளையும் இங்குவந்து கற்றுக்கொண்டதாகச் சொன்னார். எல்லாரும் நெருங்கி பழகுனதுக்கப்பறம் அவங்கதானே சரினு சில விஷயங்கள் விட்டுக்கொடுத்திருப்பதாகச் சொன்னார். கடைசியாக பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ கிடையாது அது ஒரு வாழ்வியல் முறை என்று முடித்தார்.

சிநேகன், இந்த நிகழ்ச்சியின் மூலம் 2 பாக்யங்கள் கிடைத்திருப்பதாகச் சொன்னார். ஒன்று அவருடைய அப்பாவை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.  உண்மையா இருக்கேன் அது பைத்தியக்காரத்தனம்னோ நான் நடிக்கிறேன்னோ மத்தவங்களுக்குத் தோணிடுமோன்னு பயமா இருக்கு என்றார். இங்க முட்களோடு கை குலுக்கிய பூக்களோடு சண்டை போட்ட தருணங்கள் ஏராளம் என்றார். யார் முட்கள்? யார் பூக்கள்? என்பதையும் சொல்லியிருக்கலாம். வீட்டைவிட்டு போக மனசு இல்ல என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினார். ‘வெளில என்னை எல்லாரும் எப்படி பார்க்கப்போறாங்கனு தெரியல அதை நினைக்கும்போது பயமா இருக்கு’ என்று அவர் சொல்லும்போது குரலில் நிஜமாகவே பயம் தெரிந்தது. 

பிக் பாஸ் தமிழ்

** 

ஹரிஷ், கணேஷ், ஆரவ் வெளியில் சோபாவில் அமர்ந்திருக்க, சிநேகன் உள்ளே எழுதிக்கொண்டிருக்க பிக்பாஸ் ஃப்ரீஷ் சொன்னார். இம்முறை தப்பாட்டாக்காரர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். மைக்கே தேவைப்படாமல் மேளச்சத்தம் பொளந்து எடுக்க, உள்ளுக்குள் ஆடவேண்டும் என்று தோன்றினாலும், பிக்பாஸின் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அசையாமல் நின்றார்கள். ஹரிஷ் மட்டும் தலையை மெதுவாக ஆட்டினார். பிறகு ரிலீஸ் சொல்லப்பட எல்லாரும் எழுந்து ஆடினார்கள். இப்போ எல்லாம் ஆடிட்டு இருக்கும்போது ஃப்ரீஷ் சொல்வீங்க அதான என்று அசால்டாக பார்த்துக்கொண்டிருந்தால் பெரிய ட்விஸ்ட் இரண்டு நிமிடம் முழுமையாக ஆடி டயர்டான பிறகு ஃப்ரீஷ் சொன்னார். அப்படியும் கேட்காமல் ஆரவ்வும் கணேஷூம் அவர்களுக்கு  ஆடிக்கொண்டிருந்தார்கள் அவர்களுக்குக் கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். 

சிநேகன் தான் எழுதிய கவிதையை வாசித்துக் காண்பித்தார். ‘இது எங்கள் வீடு’ என்று தொடங்கிய அந்தக் கவிதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்சப்டை புட்டுபுட்டுவைப்பதுபோல் பொருத்தமாக இருந்தது. சில வரிகள் ரசிக்கும்படி இருந்தது. குறிப்பாக, ‘இது பிக்பாஸ் கற்பித்த பாடம், இதில் கலைந்தது எங்களின் வேடம்’ என்ற வரிகள். இந்தக் கவிதையே அருமையாக இருந்தது. அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் சிநேகன் இன்னொரு பாடலும் தயார் செய்திருந்தார். பிக்பாஸூக்கு நன்றி சொல்வது போல் இருந்த அந்தப் பாடலை கோரஸாகப் பாடுகிறோம் என்று சொல்லிக் கொதறிஎடுத்தார்கள். விவேகம் க்ளைமேக்சில் காஜல் பாடுவதைப் போல சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாடல் வெறியேற்றியது. ஏன்யா ஏன்??

**

அடுத்ததாக இன்றைய நாளின் டெய்லி டாஸ்க்  இரவு 9 மணிக்கு அறிவித்தார்கள். டாஸ்க்கின் பெயர் ‘ஆட்டோகிராப்’. ஹவுஸ்மேட்ஸ் மற்றவர்களுக்குச் சொல்ல நினைக்கும் கடைசி மெசேஜை அவர்களின் டீசர்டில் எழுதவேண்டும். ‘கடைசி நாள்ல மெமரீஸ் மாதிரி கேம்ஸ் கொடுக்குறாங்க’ என்றார் ஆரவ். கார் டாஸ்க், பலூன் டாஸ்க்கெல்லாம் பார்த்தபோது, அநேகமாக கடைசி நாளில் உயிருக்கு உலைவைக்கும் டாஸ்க்குகளெல்லாம் கொடுப்பார்கள் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கடைசி வாரம் கொடுத்த டாஸ்க் எல்லாமே.. உடலளவில் காயப்படுத்தாத, மனதளவில் மகிழ்ச்சியளிக்கிற டாஸ்க்குகளாக கொடுத்தது சிறப்பு. 

பிக் பாஸ் தமிழ்

ஹரிஷ், ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் டீசர்டில் தன் மெசேஜை எழுதினார். கவிஞருக்கு கனவு நிறைவேற வாழ்த்துகள் சொன்னார். கணேஷை மிஸ்டர். கேள்வி நாயகன் என்று எழுதினார். ஆரவ்விடம் மைக்கை கழட்டச் சொல்ல, அவர் டீசர்ட்டை என்று நினைத்து ‘கழட்டணுமா?’ என்று ஷாக் ஆனார்.  ஆரவ்வை ’டேய் நண்பா’ என்று எழுதியிருந்த ஹரிஷ், ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்லாம் பாக்காதீங்க கவிஞரே..!’ என்று சிநேகனிடம் ரெக்வஸ்ட் வைத்தார்.

கணேஷ், ஒவ்வொருவருக்கும் டீசர்ட்டின் ஒரு பக்கம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்தார். ஆரவ் சிநேகனுக்கு இது முடிவல்ல நம் உறவின் ஆரம்பம் என்று எழுதியிருப்பதாகச் சொல்ல ‘என்ன முத்தச் சத்தம்லாம் கேக்குது’ என்று ஹரிஷ் கலாய்த்தார்.

சிநேகன் ஒவ்வொருவருக்கும் ஒரு மைக்ரோ கவிதையாக எழுதினார். ‘என் நினைவுக்குள் எப்போதும் நீ இருப்பாய். உன் நிழலினைத் திரும்பிப்பார் நான் இருப்பேன்’ என்று ஆரவிற்கு எழுதியதற்கு ஹரிஷ் விளக்கம் கேட்க, சிநேகன் கொடுத்த விளக்கத்திற்கு ‘வெரி டச்சிங்’ என்றார். கவிஞர் எனக்காக எழுதிய முதல் கவிதை என்று பெருமைப்பட்டுக்கொண்டார் ஆரவ்.

ரொம்ப எமோசனல் பிந்து இருந்திருக்கணும் என்று அனைவரும் மீண்டும் ஃபீல் ஆனார்கள். ஹரிஷ் பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டிருக்க பிரியாணி வந்தது. அனைவரும் சாப்பிட்டு முடிக்க விளக்குகள் அணைக்கப்பட்டது.

**

97 ஆம் நாள் விடிந்தது. காலை 7 மணிக்கு சிநேகன் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு நாள் மட்டுமே என்று உணர்த்தும் விதமாக 1 Day to Go என்ற செய்தி டிவியில் டிஸ்ப்ளே செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ‘தோஸ்து படா தோஸ்து’ பாடலை ‘வேக்கப் சாங்’காக ஒலிக்கவிட்டார்கள். எல்லாரும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் ரயில் ஓட்டி விளையாண்டார்கள். படுக்கையின் மேல் ஏறிக்குதித்தார்கள். தலையணைகளை தூக்கிப்போட்டு கொண்டாடினார்கள். சிநேகன் பல்டியெல்லாம் அடித்தார்.

அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘உடம்பெல்லாம் சோர்வாகிடுச்சு’ என்றார் சிநேகன். மற்றவர்களும் அதையே வழிமொழிந்தார்கள். பூண்டு உரித்துக்கொண்டிருந்த ஆரவ், ‘இதைப் பார்த்ததும் பிந்து பூண்டு சாப்பிட்டது ஞாபகம் வருது’ என்று பிந்துவின் டாஸ்க்கை நினைவுபடுத்தினார். எலுமிச்சை, வேப்பிலை, பூண்டு, பச்சைமிளகாய் எல்லாம் பிந்து சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லி இதில் எது சாப்பிடுவது கஷ்டம் என்று விவாதித்தார்கள். ‘ஹைதராபாத்ல பச்சை மிளகாய ப்ரேக்ஃபாஸ்டாவே சாப்பிடுவாங்க ப்ரோ’ என்றார் ஹரிஷ். 

சிநேகன் டைனிங் டேபிளுக்கு நடுவில் இருக்கும் கேமராவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். (இப்போ தெரியுது ஏன் கவிஞர்க்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு..!) சாப்பிட்டீங்களா என்று சிநேகன் கேட்க அது ஆமா என்பது போல் தலையாட்டியது. ‘ எங்க வீட்ல ஒரு வாய் கஞ்சி சாப்பிடுங்க?’ என்று கேட்டபோது அது இல்லை என்பதுபோல் தலையாட்டியது. பிக் பாஸ் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் எல்லாப் பக்கமும் தலையாட்டியது. 

 

**

 

இது நாள் வரை நூறுநாட்களை இந்த வீட்டுக்குள் எப்படி கடக்கப்போகிறோம் என்று சிந்தித்துக்கொண்டிருந்த சிநேகனின் மனம் இப்போது இறுதிநாளை எட்டிவிட்ட நிலையில் எப்படி உலகத்தை சந்திக்கப்போகிறோம் என்ற பயத்துக்குள் புகுந்துகொண்டதை அவரின் பேச்சில் தெரிந்துகொள்ள முடிந்தது. ‘வெளி வாழ்க்கை நம்மளை பொரட்டி போட்ருமோனு பயமா இருக்கு. இங்க நாம எல்லாத்தையும் ரொம்ப ஓப்பனா காமிச்சுட்டோம். தெரிஞ்சு காமிச்சது வேற தெரியாம காமிச்சது வேற.. அவன் நம்மளை படிச்சுட்டான்.. ஆயிரம் விமர்சனம் பார்த்தாச்சு நம்ம வேலையை நாம பாக்கப்போறோம். ஆனா நம்ம பலம், பலவீனம் அவனுக்குத் தெரியும். நம்ம பலத்தையும், பலவீனத்தையும் கைல எடுத்து நம்மளை மிஸ் யூஸ் பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு.’ என்றதோடு ஜூலிக்கு நடந்ததையும் நினைவுபடுத்தினார். கூடுன கூட்டத்துல பாதிபேர் விமர்சனம் பண்றவங்கதான் என்று சொல்ல.. ‘அவ்ளோ பிரச்னை இருக்காது’ என்று ஆரவ் சமாதானாம் சொன்னார். ‘கொஞ்ச நாள் வெளி உலகத்தவிட்டு ஒதுங்கி இருக்கணும்’ என்று ஹரிஷ் அறிவுரை சொன்னார். ‘மக்கள் மனதை வென்றவர் யார் என்பது நாளை தெரியவரும்’ என்ற குரலுடன் முடிவுற்றது அன்றைய நாள். உண்மையில் சிநேகனின் பயத்திற்கு பதில் சொல்லவேண்டிய இடத்தில் நாம்தான் இருக்கிறோம். ‘ஒருத்தனோட பலவீனத்தோட மட்டும் விளையாடக்கூடாது’ என்று சிநேகன் இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லியிருக்கிறார். 100 நாள் முடிந்து அவர்கள் வெளிவந்த பிறகு, நாம் எவர் பலவீனத்தோடும் விளையாடாதிருப்போம்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103695-bigg-boss-is-completely-boys-now-but-incomplete-happenings-of-day-96.html

  • தொடங்கியவர்

பிக்பாஸ் Grand Finale - Live Updates

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் லைவ் அப்டேட்ஸ் உங்களுக்கு இதோ.

8.30 PM :

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களின் செயல்களை பற்றி விவரிக்கும் ஒரு புதிய பாடலுக்கு சாண்டி நடனமாடினார்.

8.40: இத்தனை கோடி ரசிகர்களா?

தொடக்கம் முதலே சின்னத்திரையில் அதிகம் பிரபலமான இந்த நிகழ்ச்சியை இதுவரை 85% ரசிகர்கள் பார்த்துள்ளதாக கமல் கூறியுள்ளார். 6.5 கோடி ரசிகர்கள் என்பது சாதாரண விஷயமல்ல என கமல் பெருமையுடன் கூறினார்.

8.50 PM: வீட்டினுள் போட்டியாளர்கள்

இதுவரை வெளியேறிய போட்டியாளர்கள் 15 பேரும் வீட்டுக்குள் சென்றனர். பின்னணியில் மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

8.55 PM: ஆரவ்வை கண்டுகொள்ளாத ஓவியா

வீட்டுக்குள் நுழைந்ததும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த ஓவியா, ஆரவ்வை மட்டும் புறக்கணித்தார்.

9.10 PM: சினேகனை கலாய்த்த ஓவியா

கவிஞர் சினேகன் அடிக்கடி கண்ணீர் விடுவதை பற்றி நடிகை ஓவியா பேசியுள்ளார். "இந்த கண்ணீருக்கு மோட்டார் எங்க வச்சிருக்கீங்க?" என அவரிடமே கேட்டுவிட்டார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என்னை யாருக்குமே பிடிக்காதுன்னு நினைச்சேன்..! பிக்பாஸ் மேடையில் நெகிழ்ந்த ஓவியா #BiggBossGrandFinale

 

இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம்.

கமல்ஹாசன்

 

இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்..? அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

பிக் பாஸ் வீடு

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். பாட்டு, ஆட்டம் என்று ஒரே கொண்டாட்டமாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது. 

சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்தவர்களுக்கு கமல்ஹாசன் நன்றி கூறினார். பின்னர், இணையத்தில் பிக்பாஸ் தொடர்பாக அதிக வைரலான மீம்ஸ்கள் திரையில் காட்டப்பட்டன. அதைப்பார்த்து பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர். 

ridspceiiface_22193.jpg

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரும் மேடையில் தோன்றி சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டனர். அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்து பேசிய ஓவியா, 'என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனா, பிக் பாஸ்  நிகழ்ச்சி தான் ஒரு ஐடியா கொடுத்துச்சு. நன்றி பிக் பாஸ் அன்ட் லவ் யூ ஆல்' என்று முடித்தவர், 'கொக்கு நெட்ட' பாடலை பாடிக்கொண்டே போய் அமர்ந்தார்.

 இது வரை நடந்த சம்பவங்களை ஒரு குறும் படமாக போட்டு காண்பித்தார் பிக் பாஸ் குறும்படத்தை பார்த்தபிறகு, கருத்து சொன்ன ஓவியா. 'இது விளையாட்டு இல்லை. என் வாழ்க்கை. எனக்கான அடையாளம்' என்றார். 'நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் சிறந்த படம் பிக் பாஸ் தான் ' என்றார் பரணி. இந்த தருணத்தில் நான் ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார் சக்தி.

இந்த நிகழ்விற்கு பிறகு 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட குட்டீஸ் வர, அவர்களிடம் கமல் ஒரு போட்டியை வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'ஷட் அப் பண்ணுங்க', 'ட்ரிக்கர்', 'அகம் டிவி வழியே அகத்திற்குள்', பனானா க்ரீன் டீ போன்ற பிக்பாஸின் பாப்புலர் டயலாக்ஸை சொல்ல அதை யார் சொன்னார்கள் என கண்டுபிடிக்க வேண்டும் என்பதே போட்டி. கமலை போல சுசீலும், உத்ராவும் பேச இடைமறித்த ஆதீஷ் (ஜட்டி ஜகனாதன்) உங்களை போல பாடுவேன் என்று களத்தூர் கண்ணம்மா பாடலை பாடி அசத்தினான்.

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103760-bigg-boss-tamils-grand-finale.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிக் பாஸ் வீட்டில் இயக்குனர் ஷங்கர்! புதிய அறிவிப்பை வெளியிட்டார்

இயக்குநர் ஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாக உள்ளார். அவர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி விழாவில் இன்று கலந்துகொண்டார். இந்தியன் 2 படத்தில் கமலுடன் அவர் இணையவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார் என்றும் அவர் கூறினார்.

மீம் போடுபவர்கள் பற்றி பேசிய கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் நூற்றுக்கனக்கான மீம்கள் வெளியானது. அதுபற்றி இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், "காலை முதல் மாலை வரை வேறு வேலையே இல்லாமல் எங்களுக்கு புகழை தேடிதந்த மீம் மேக்கர்ஸ்க்கு நன்றி கூறாமல் இருக்க முடியாது" என கூறினார்.

அதுமட்டுமின்றி பிரபலமான சில மீம்களை ஷோவில் திரையிட்டும் காட்டினார். அதை பார்த்து மாக்கள் மட்டுமின்றி பிக்பாஸ் போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

பிக்பாஸுக்கு மக்கள் போட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கை!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மக்கள் இதுவரை எத்தனை வாக்குகள் வந்துள்ளது என கமல் தற்போது அறிவித்துள்ளார். 13 வாரங்கள் இதுவரை போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காக மக்கள் இதுவரை வாக்களித்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 76 கோடிக்கும் மேல் ஓட்டு பதிவாகியிருப்பதாக கமல் கூறினார். 76,76,53,065 வாக்குகளில் ஒரு பத்து சதவீதம் மட்டும் எனக்கு வாக்களித்தால் போதும் என தன் அரசியல் பிரவேசம் பற்றி மறைமுகமாக பேசினார்.

11.10 PM: ஹரிஸுக்கு பிக் பாஸ் டைட்டில் கொடுக்க வேண்டாம் ! கமலிடம் கூறிய அவரின் தந்தை

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களின் ஒருவராக உள்ளார். இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரின் தந்தை, ஹரிஷுக்கு டைட்டில் கொடுக்கவேண்டாம் என கூறினார்.

ஒரு தந்தையாக என் மகன் ஜெயிக்கவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த போட்டியில் 100 நாட்கள் இருந்த மற்ற போட்டியாளர்கள் - ஆரவ், சினேகன், கணேஷ் ஆகியோர் தான் வெற்றி பெற வேண்டும் என ஒரு பார்வையாளராக நான் ஆசைப்படுகிறேன்" என கூறினார்.

  • தொடங்கியவர்

ஹரிஸ் கல்யானை பிக்பாஸ் வீட்டிலிருந்து அழைத்து வந்த ஓவியா..! #BiggBossGrandFinale

 

ஓவியாவின் கொக்கு நெட்ட பாடலையும் அவரது ஃபேமஸ் வசனங்களையும் மிருதுளா ஶ்ரீ அவரைப் போலவே பெர்ஃபார்ம் செய்து க்ளாப்ஸ் அள்ளினார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஓட்டுகள் 76,76,53, 065. இதை எங்கே பதிவு செய்ய வேண்டுமோ அங்கே பதிவு செய்யுங்கள். இதைப் பேச இது மேடையல்ல. வேறு மேடையில் பேசலாம்' என்று சிறிய ப்ரேக் விட்டு சென்றார் கமல்.

ganesh-bigg-boss-tamil_23085.jpg

போட்டியின் மூன்றாவது ரன்னர் ஆப்பின் குடும்பத்தார் வீட்டிற்குள் போய் அவரை அழைத்து வரவேண்டும் என்று கமல் சொல்ல, ஆட்டம் பாட்டத்துடன் வீட்டிற்குள் நுழைந்தார் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா. பின், இருவரும் மேடைக்கு வந்தனர். அப்போது பேசிய அவர், 'அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்கவிரும்புகிறேன்' என்றார். 

hk-main_23520.jpg

ஓவியாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து ஒரு லெட்டரை படிக்க சொன்னார் பிக் பாஸ். ஆனால், ஓவியாவை உதட்டை மட்டும் அசைக்கச் சொல்லி வாய்ஸ் ஓவர் கொடுத்தார் கமல். ஓவியாவை உள்ளே அழைத்து ஒரு போட்டியாளரை மேடைக்கு அழைத்து வர சொன்னார் பிக் பாஸ். ஆடலும் பாடலுமாக உள்ளே சென்ற ஓவியா அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இறுதியில் ஹரீஷ் கல்யானை அழைத்து சென்றார் ஓவியா.

  • தொடங்கியவர்

d2a6f329-994a-43e7-a_00132.jpg

 'உள்ளே உள்ள சினேகனையும் ஆரவ்வையும் நான் போய் அழைத்து வரப்போகிறேன்' என்று கமல் பேசம்பொழுது, கமலைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. பிக் பாஸ் என்ற பெயரில் பேசிய குரல் இனி கேட்க முடியாது. ஆல் தி பெஸ்ட் சொல்லி பிக் பாஸ் குரல் விடைபெற்றவுடன் சினேகன் கண் கலங்கினார். வீட்டிற்குள் கமல் சென்று இருவரையும் அழைத்து வரும் போது ஆங்காங்கே திரும்பி பார்த்தபடி கும்பிட்டு வெளியே சென்றார் சினேகன். பின், 'விரு விரு மாண்டி விருமாண்டி' பாடலுடன் மூவரும் மேடை ஏறினார்கள்.

68671d8e-c4a3-4cee-b710-6eef67c7880c_002

 

அப்போது பேசிய கமல், 'இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கே வருவேன். வந்தே தீருவேன். ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வரவில்லை; கடமையில் வருகிறேன். இங்கு கிடைக்கும் அன்பு அங்கேயும் கிடைக்கும் என நம்பிகிறேன்.' என்றார். அதன் பிறகு, பலத்த ஆரவாரத்துடனும் ஆர்ப்பரிப்பரிப்புக்கும் மத்தியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை கமல் அறிவித்தார். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கினார். 

  • தொடங்கியவர்

100 நாள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றார் ஆரவ்

பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாவது இடத்தை கவிஞர் சினேகன் தட்டிச்சென்றார்.

 
 
100 நாள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டிச்சென்றார் ஆரவ்
 
சென்னை:

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

201710010117439770_1_bigboss-aarav._L_st

இந்த நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி, சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி ஆகியோர் இடைப்போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி நேற்றுடன் (30-ம் தேதி) முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ஆரவ் தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை கவிஞர் சினேகனும், மூன்றாம் இடத்தை நடிகர் ஹரிஷ் கல்யாணும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆரவிற்கு வெற்றிக்கோப்பையும், 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

201710010117439770_2_biggbosss._L_styvpf

இந்த நிகழ்ச்சியில் 76,76,53,065 பேர் வாக்களித்துள்ளனர் என நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்தார். வெற்றிக்கு பின்னர் பேசிய ஆரவ் இந்த பட்டத்தை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தனது ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/10/01011743/1110738/Aarav-was-announced-the-winner-of-the-bigboss-show.vpf

  • தொடங்கியவர்

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

 
 

 

bigg boss tamil

 

இத்தனைநாள் நம் வீட்டில், அலுவலகத்தில், கல்லூரியில், டீக்கடையில், பொது இடத்தில் பேசுபொருளாக இருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது சிலருக்கு என்னவென்றே புரியவில்லை. சிலருக்கு இதெல்லாம் தமிழுக்கு செட் ஆகுமா? என்ற குழப்பம். சிலருக்கு நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது இதெல்லாம் தேவையா? என்கிற கோபம், ஒருத்தரோட அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுவது சரியா? என்ற ரௌத்திரம், இதெல்லாம் நிஜமா, ஸ்க்ரிப்டா? என்ற சந்தேகம் என எல்லா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. தொடக்கத்தில் ‘கமல் டிவி ஷோ பண்ணப்போறாராமே? இதெல்லாம் அவருக்கு தேவையா?’ என்று கேட்டவர்கள், பிறகு கமல் அல்லாமல் வேறு யாராலும் இதைச் சிறப்பாக செய்யமுடியாது என்று ஒப்புக்கொண்டார்கள். ‘பிரபலங்கள்னு சொன்னீங்க.. இவங்கதான் பிரபலங்களா?’ என்று நகைத்தவர்களுக்கு இன்று எல்லார் முகங்கள் மட்டுமல்லாமல் குணங்களும் பரிச்சயம். இவர் நல்லவர், இவர் கெட்டவர். இவர் பொய் சொல்கிறார், இவர் நேர்மையாக இருக்கிறார். இவரை எனக்குப் பிடிக்கும், இவரை எனக்குப் பிடிக்காது என்று ஒவ்வொருவர் பற்றியும் நம்மிடம் ஒரு அபிப்ராயம் கொண்டிருந்தோம். நமது அலுவலகத்தை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். தமிழக அரசியலை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் அடைத்துவைத்ததை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். நமக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஒரு அரசியல்வாதி தனது ஓட்டுகளை ஓவியாவின் ஓட்டுகளுடன் ஒப்பிட்டார். இது தேவையா? இவ்வளவு பில்டப் தேவையா? என்பதையெல்லாம் தாண்டி நல்லதோ கெட்டதோ இன்று தவிர்க்க முடியாததாகி இருக்கிறது பிக்பாஸ்.  முதல் நாளில் 14 பிரபலங்கள் என்று சொல்லி 15 பேரை உள்ளே அனுப்பியது முதல் 100 நாட்கள் என்று சொல்லி 98 வது நாளிலேயே முடித்துக்கொண்டது வரை நமக்குமே பல சர்ப்ரைஸ்கள். இனி இறுதி நாளில் என்ன நடந்தது என்பது பற்றிப் பார்க்கலாம். 

ஆரவ்

சாண்டி மற்றும் அவரது குழுவினரின் டான்ஸூடன் தொடங்கியது இன்றைய நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வசனங்களை வைத்தே ஒரு பாடல் அமைத்து அதற்கு நடனமாடினார்கள். ஜூலியை வர்தா புயல் என்றது, ‘குழந்தை பேச்சுங்க.. தண்ணில விழுந்து போச்சுங்க’ என்று ஓவியா பற்றிய வரிகள் வரை செம.. செம. (தனி வீடியோவா போடுங்கப்பா) ரொம்ப  பின் ஸ்க்ரீனில் மணலில் கமல் முகம் வரையப்பட, முகம் முழுமை பெற்றதும் கதவு திறந்து மேடைக்கு வந்தார் கமல். இந்த நிகழ்ச்சியில் அதிகம் கவனிக்கப்பெற்ற இன்னொன்று அவர் அணிந்துவரும் ஆடைகள். இன்று வெள்ளை வேட்டி, கருப்பு சட்டையில் வந்திருந்தார். ‘100 நாள்…யப்பா இவ்ளோ பெரிய வேலைய ஒப்புக்கிட்டமேன்னு நினைச்சேன்.. அப்டி போயிடுச்சு’ என்று சொடக்கு போட்டு தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களில் ஆறரை கோடி பேர் அதாவது 85 சதவீதம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்த்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கொடுத்து ‘தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இது புதிய அத்தியாயம்’ என்றார். அதோடு ‘நான் நடிக்க வந்த பிறகு.. தமிழ் சினிமாவில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்களில் எல்லாம் பங்கு கொள்கிற வாய்ப்பு எனக்கு இருக்கும். அதை தொலைக்காட்சி திருப்புமுனையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி’ என்று சொல்லி நிகழ்ச்சியைத் துவக்கினார். 19 பேரில் இருந்து 4 பேர் எஞ்சியிருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றியாளர் என்பதை உடனே சொல்லணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. அந்த ஒருவர் என்று ஆரம்பிக்க ஸ்டோர் ரூம் மணி அடித்தது. பேட்டரி மாத்தணுமாம் மாத்திட்டு வந்துடுறேன் என்று பிக்பாஸில் நாம் அடிக்கடி பார்த்து பழகிய காட்சிகளை நினைவூட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான இன்னொரு வார்த்தை ‘குறும்படம்’. ‘இப்போ உங்களைப் பத்தி ஒரு குறும்படம்’ என்று பிக்பாஸ் பற்றி மக்களிடம் கேட்டு தொகுத்திருந்த குறும்படத்தைப் போட்டுக்காட்டினார். ‘சிலர் இது பத்தி என்னன்னே தெரியாம இது வரக்கூடாதுனு நினைச்சாங்க.. எதுக்காக அப்படி சொன்னாங்கன்றதுக்குள்ளயெல்லாம் போக வேணாம். அது வேற ஏதோ காரணமா இருக்கும்’ என்று தனது வழக்கமான குறியீடு கலந்த பேச்சை எடுத்துவிட்டார். எத்தனையோ அறநூல்களின் மூலம் சொல்லி விளக்குவதைவிட இன்னொரு மனிதன் வாழ்ந்து காட்டினால் நமக்குத் தெளிவாகப் புரியும் என்று இந்நிகழ்ச்சி ஏன் தேவை என்பதற்கு விளக்கம் கொடுத்தார். 

அகம் டிவி வழி வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள் விரிந்தது. சிநேகன் கோலம் போட்டுவிட்டு சோகமாக வந்து அமர்ந்தார். ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒலித்தது. வழக்கம்போல் ஒரு ‘வேக்கப் சாங்’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டு சோம்பல் முறித்தார்கள் ஆரவ், ஹரிஷ், கணேஷ் மூவரும். மெயின் டோர் திறக்கிறது. சிநேகன் திரும்பி ஆச்சர்யமாக பார்க்க, பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வருகின்றனர். பெருமகிழ்ச்சிக்கும் வாய்ச்சொற்களுக்குமான மியூசிக்கல் சேரில் வாய்ச்சொற்கள் தோற்றுவிட பேச்சற்று நின்றார் கவிஞர். சிநேகன் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது, யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க வந்ததுபோல. ஓவியா சிநேகனை, ‘டோன்ட் க்ரை பீ ஹேப்பி’ என்று சமாதானப்படுத்தினார். காலையில் எழுந்தவுடன் எல்லாரையும் பார்த்ததில் ஆரவ்வுக்கு செம ஷாக். காயத்ரி - ஆரவ், கணேஷ் - ஆர்த்தி என மாற்றி மாற்றி உள்ளே குசலம் விசாரித்துக்கொண்டிருக்க, வெளியே ஓவியா ‘மெர்சல்’ டான்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். (அட அப்புறம் ஆடலாம்.. போய் ஆரவ்வை பாரு தாயி.. அதுக்குத்தானே வெயிட்டிங்கு). பின் உள்ளே நுழைந்து வீட்டை ஓவியாவும்..  வீடு ஓவியாவையும் அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். பரணி தனது பழைய படுக்கைக்கு அருகில் நின்று கொண்டு நினைவுகளில் மூழ்கினார். கஞ்சா கருப்பு, வையாபுரி என மாற்றி மாற்றி ஒவ்வொருவராக சிநேகனுக்கு ஆரத்தழுவி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். ‘இது கனவோ’ என்ற சிநேகனின் மன ஓட்டத்தைப் புரிந்து, ‘இது ரியல் நாட் ட்ரீம்.. நான் சொன்னேன்ல ஃபைனல்ஸ் அப்போ இருப்பேன்னு’ என்றார் ஓவியா. பிந்து, ரைஸா,சுஜா, அனுயா என்று வீடே களைகட்ட நேற்று ‘சேவல் பண்ணை’ போல ஆண்மயமாக இருந்த வீடு, இன்று சேட்டு வீட்டு கல்யாணம் போல கலர்கலராக ஜொலித்தது.பிக்பாஸ் வீட்டின் செட்டையும் அதற்கு ஏற்றார் போல், வட இந்திய திருமண வீடு போல் மாற்றி இருந்தார்கள்.

ஓவியா

‘தொழில் முறை’ நண்பர்களான சக்தியும் ஹரிஷூம் டைமண்ட் திருடிய அனுபவத்தை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டார்கள். ரைஸா, ஹரிஷிடம் ‘உங்க கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்’ என்று கேட்க, சம்மன் இல்லாமல் ஆஜரான வையாபுரி, உள்ளே புகுந்து பூஜையை காலி செய்தார். வழக்கம்போல் கேமராவுடன் பேசத்தொடங்கினார் ஓவியா.. ‘உன்னை மிஸ் பண்ணல.. இதைதான் மிஸ் பண்ணேன்’ என்று இன்னொரு கேமராவைக் காட்டினார் (அந்த கேமராவின் சொந்தக்காரங்களுக்கு சொல்லியனுப்புங்கப்பா..!). ‘ஆரவ் அந்த ரூம்ல இருக்கு’ என்று அனுயா ஓவியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். 

‘ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று ஓவியாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் பரணி. கஞ்சா கருப்பு தன் பழைய நினைவுகளை காமெடியாக சொல்லிக்கொண்டிருந்தார். ‘இவ்ளோ ஃபேன்ஸை என் லைஃப்ல பாத்ததில்ல’ என்று வையாபுரி, ஹரிஷிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார். ஷாப்பிங் போனவர், ஒன்றரை மணிநேரம் போட்டோவுக்கு போஸ் மட்டுமே கொடுத்துவிட்டு வெளியே வந்தாராம். கேசுவலாக ஆரவ்வை சந்தித்து, ஆல் தி பெஸ்ட் சொல்லி ஹக் பண்ணிவிட்டு வெளியேறினார் ஓவியா. தன் முடிந்து போன காதல் பற்றி தெளிவான ஒரு புரிதலுக்கு ஓவியா வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இருவருமே அதை மிகவும் மெச்சூர்டாக கையாண்டார்கள். ஓவியா ஆர்மி பற்றி ஓவியாவிடமே விசாரித்துக்கொண்டிருந்தார் வையாபுரி. ‘உங்களுக்கு நல்ல ஃபேன்ஸ் இருக்காங்க. என்ன ஒல்லியாகிட்டீங்க? பொண்டாட்டி எப்டி இருக்கீங்க?’ என்று ஓவியத்தமிழில் பேசினார். என்ன ஓவியா ஓவியானு கட்டுரை ஓவியாவேயே சுத்திசுத்தி வருதேனு நினைக்கவேண்டாம். அதிலும் ஜூலி எல்லாம் தன் தாய் கழகத்தைவிட்டுவிட்டு, ஓவியா பாட்டு பாடலாமா ? என ஓவியாவிடம் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பிக்பாஸ் அறையில் இருக்கும் எல்லா கேமராவும் ஓவியா பக்கம் தான். வேறு வழியில்லாமல், ஓவியாவிடம் பேசியே ஆக வேண்டும் நிலை தான் மற்றவர்களுக்கு. இன்றைக்கு ஃபைனல்ஸே ஓவியாவுக்காகத்தான் என்பதுபோல கமல் உட்பட எல்லாரும் அவரையே மையம் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா!? . டைட்டில் 100 நாட்கள் காத்திருந்து வென்றவர் போன்றவற்றை எல்லாம் கடந்து, ஓவியா மக்களின் வெற்றியாளர் ஆயிற்றே?

 

கமல்

‘எப்போ பாத்தாலும் அழுதுட்டே இருக்கீங்க இதுக்கு மோட்டார் எங்க இருக்கு?’ என்று ஓவியா, சிநேகனை கலாய்க்க, அவர் ‘உனக்காகத் தான் நிறைய அழுதுருக்கேன்’ என்றார். தெரியும் என்று ஸ்மைலி போட்டுக் கடந்தார் ஓவியா. ‘எங்கயாவது நாம ஃபேஷ் பண்ணிதான் ஆகணும். இன்னைக்கு திட்டிட்டு நாளைக்கு பேசிக்குவோம். இது வெளில இருக்குறவங்களுக்குத் தெரியாது’ என்று சிநேகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் காயத்ரி. ‘நீ ரொம்ப மாறியிருக்க… மேக் ஓவர் நல்லாருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு’ என்று ஜூலியைப் புகழ்ந்தார் ஓவியா. 

ஆரவ்விடம் வையாபுரியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் ரைஸா. ‘ஃபுல் லவ் மூடுதான் இப்போலாம்’ என்று ரைஸா சொல்ல வையாபுரி ஆண் வெர்சனில் வெட்கப்பட்டுக்கொண்டே ‘ஃபர்ஸ்ட் டைம் ஃபேமிலிய படத்துக்கு கூட்டிட்டு போனேன் நேத்து’ என்றார்.  ஓவியாவும் ஜூலியும் பாடிக்கொண்டிருந்தார்கள். ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’னுலாம் பாடுறீங்க அப்படியே ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்’ பாடியிருந்தா மரண மாஸா இருந்திருக்குமே ஜூலி மேடம். அதுதான் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டாச்சே. ‘வந்த உடனே ஆரம்பிச்சுட்டாளா?’ என்று சிநேகன் அதட்டினார்.

‘ஒரு பாட்டு போடுங்க பிக்பாஸ் ஐயா’ என்று கஞ்சா கருப்பு சொல்ல, அதை ஆமோதித்து சிநேகனும் பிக்பாஸிடம் ரெக்வஸ்ட் வைக்க, பிக்பாஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘கட்டிக்கிடும் முன்னே நாம’ பாடலை ஒலிக்கவிட்டார். எல்லாரும் ஆடினார்கள். ஓவியா இப்போதும் போட்டுப் பொளந்து எடுத்தார். இன்றைக்கு செம குஷியாக இருந்தார்போல. பரணி ஓவியாவைப்போல் ஆடிக்காட்டினார். தான் கதறவிட்ட நாயை நினைவுகூர்ந்த ரைஸா, ‘அந்த நாயை ஐ.சி.யூக்கு அனுப்பிட்டேன்’ என்று சொல்லி பேய்ச்சிரிப்பு சிரித்தார். ‘ஏதிலார் போல பொதுநோக்கு நோக்குதல் காதலர் கண்ணே உள’ என்று வள்ளுவர் சொன்னதற்கினங்க ஆரவ்வை யாரோபோல பொதுவாக பார்த்துக்கொண்டிருந்தது ஓவியாவின் கண்கள். வெகுநாட்கள் கழித்து சந்தித்துக்கொள்கிறார்களே என்னென்ன பேசிக்கொள்வார்களோ என்று என்று ஏகத்துக்கும் எதிர்பார்த்தால் ‘யூ லுக் குட்.. ஹேர்ஸ்டைல் நல்லாருக்கு’ என்று கடமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார் ஓவியா. ரயில் சிநேகிதர்கள்கூட இன்னும் கொஞ்சம் டீட்டெய்லாக பேசுவார்கள். இவருக்காகத்தான் நீங்க நீச்சல்குளத்துல குதிச்சீங்க மறந்துட்டீங்களா ஓவியா? ஆனால் ஓவியாவது சில வார்த்தைகள் பேசினார். ஆரவ் அதுவும் இல்லை. புறக்கணிப்புதான் நட்பில் பெரும்தண்டனை என்பது ஆரவ்வுக்கு வெளியில் வந்த பிறகாவது புரியட்டும்.

‘நீங்க ஏன் போனீங்க.. நின்னு என்னனு கேட்ருக்கணும்’ என்று பரணிக்கு ஆர்த்தி அட்வைஸ் சொல்ல, ‘நீங்க அங்கதானே இருந்தீங்க நீங்க கேட்ருக்கலாம்ல’ என்று எதிர் கேள்வி கேட்டார் காஜல். ஆர்த்தியிடம் பதிலில்லை. ‘நாங்க ஒரே டீம்’ என்று ஏதேதோ சொல்லி மழுப்பினார். இந்த சம்பாஷனைகளின்போது பரணியின் வார்த்தைகள் சுவரேறிக்கொண்டிருக்க மௌனத்தில் இருந்தார் பரணி.

திருவிழாக்காட்சி போல 30 கேமராக்களில் எந்தக் கேமராவைப் பார்த்தாலும் மகிழ்ச்சியும், நலம் விசாரிப்புகள், அன்புமொழிகளுமாக நிறைந்திருந்தது பிக்பாஸ் வீடு.

Bigg Boss

 

**

ஶ்ரீ, நமீதா தவிர வந்திருந்த மற்ற 17 பேரும் லிவிங் ரூமில் அமர்ந்திருக்க கமல் தோன்றி, ‘கண்கொள்ளா காட்சி கேள்விபட்டிருக்கோம் இது கேமரா கொள்ளா காட்சி. நிறைந்த வீடு. எங்க வீட்டை பாக்குற சந்தோசம்’ என்று நெகிழ்ந்தார். ‘எப்படி ஃபீல் பண்றீங்க?’ கேள்வி முதலில் ஓவியாவுக்குப் போனது. கமல் ஓவியாவின் பெயரைச் சொன்னதும் அரங்கத்தில் அத்தனை கூச்சல், கைதட்டல் மாஸ் காட்டினார் ஓவியா. ‘திரும்ப வீட்ல.. கனவா நனவா புரியல.. ரொம்ப சந்தோசமா இருக்கு’ என்று இரண்டு வரியில் முடிக்க ‘என்ன ரொம்ப சுருக்கமா shut up பண்ணிட்டீங்க’ என்று கமல் கலாய்த்தார். ‘இவங்க இல்லாம எப்படி இருக்கப்போறோம் தெரியல’ என்று ஆர்த்தி சொல்ல, கமல் ‘நீங்களாவது வெளில போய் டச்சுல இருக்கலாம். பாக்குறவங்கள நினைச்சு பாருங்க.. எனக்கே 30 ஆம் தேதிக்கு மேல என்ன பண்ணப்போறேன்னு தெரியல’ என்றார்.அனுயாவை ‘தமிழரசி’ என்று அழைக்க ‘இப்ப தமிழ் ஜாஸ்தியா தெரியும். இட்ஸ் நைஸ் டூ கம் பேக்’ என்றார் ஆங்கிலத்தில். ஆரவ்விடம் வந்தபோது மீண்டும் அரங்கத்தில் கைதட்டல். பிந்துவுக்கு மட்டும் ஸ்பெஷலாக ‘You look Good’ என்றார் கமல். (ஏன் இந்த ஓரவஞ்சனை வாத்யாரே!?). சிநேகன், ‘தூங்கி 5 நாளாச்சு இன்னைக்கு இவங்களையெல்லாம் பாத்தா நல்லாருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கும்போதே வந்துட்டாங்க’ என்று தொடங்கி பொலபொலவென வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்தார். கஞ்சா கருப்பு ‘இந்த எலிமினேசன்னா என்னண்ணே?’ என்று கேட்க, ‘எலிக்கும் உண்டு நமக்கும் உண்டு’ என வாழ்க்கையை சொன்னார் கமல். 


ஃபைனலிஸ்ட் நான்கு பேரைத் தவிர மற்றவர்களை வெளியே வரச் சொன்னார். கைகுலுக்கல்கள் கட்டிப்பிடித்தல்கள் எல்லாம் முடிந்து வெளியேறினார்கள். வெளியேறும்போது காயத்ரியும் ஓவியாவும் பேசிக்கொண்டு வந்தார்கள். 

**

கமல் மேடையில் நின்றிருக்க ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். காலில் விழுவதைத் தடுத்துக்கொண்டிருந்தார் கமல். சுஜா கொஞ்சம் விந்தி விந்தி நடந்தார் (ஹீல்ஸ் பிரச்னையா?). ஓவியா வராமல் போகவே ஆடியன்ஸ் ஓவியா ஓவியா என்று கத்த கமல் அவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டு ‘இப்போது வந்த 15 பேர் இங்கிருந்து உங்க ஆணையோடு வெளியே அனுப்பப்பட்டவர்கள். இனி வரப்போகிறவர்கள் உங்கள் அனுமதியில்லாமல் வெளியேறியவர்கள். அவர்களை உங்கள் அனுமதியோடு வரவேற்கிறேன்’ என்று சொல்லி முதலில் பரணியை அழைத்தார். அடுத்து ‘நீங்க சொல்றீங்களா நான் சொல்லவா’ என்று கமல் கேட்க, மீண்டும் ஓவியா ஓவியா என்று அரங்கத்தில் சத்தம் (பாகுபாலி எஃபெக்ட்). இதுவல்லவோ வெற்றி..!

‘இனி நீங்களாச்சு அவங்களாச்சு’ என்று பரணியிடம் மைக்கைக் கொடுத்தார் கமல். (‘பார்த்தா பரமக்குடில இருந்து வந்த மாதிரி இல்ல பீகார்ல இருந்து வந்த மாதிரி இருக்கு’ என்று கலாய் வேறு). மலேசியாவில் மக்கள் நாயகன் விருது தர இருந்ததாகவும் கமலுக்காக இன்று இங்கு வந்திருப்பதாகவும் சொன்னார் பரணி. அமெரிக்காவில் இருந்தெல்லாம் கால் வந்ததாக நெகிழ்ந்தார். 

அடுத்ததாக ஓவியா என்ட்ரீ. மேடையை முழுவதுமாக அவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார் கமல்.  எல்லாருக்கும் லவ் யூ சொல்லி மேடை முழுவதும் நடந்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். ‘உள்ளே இருந்தப்போ யாருக்கும் என்னை புடிக்காதுனு நினைச்சேன். ஆனா எல்லாருக்கும் புடிச்சுருக்கு. எனக்கும் சொசைட்டிக்கும் ஏதோ ஒண்ணு இடிச்சுட்டே இருந்தது. ஆனா பிக்பாஸ்தான் எனக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கு. தாங்க்யூ பிக்பாஸ். ஐ லவ் கமல் சார் ஹி இஸ் ஆசம்’ என்று சொல்லி தனது ஆஸ்தான ‘கொக்கு நெட்டை கொக்கு’ பாடலை பாடினார். செம சீனாக இருந்தது. ஆனால் பிரகாஷ்ராஜ்க்கு ‘லவ் யூ செல்லம்’ போல விஜய் சேதுபதிக்கு ‘ப்ப்ப்ப்பா’ போல போகிற இடத்திலெல்லாம் இதையே சொல்லச் சொல்லி செல்லத்தை டார்ச்சர் பண்ணுவாய்ங்களேனு நினைச்சாதான் பயந்து வருது. 

மீண்டும் மேடைக்கு வந்த கமல். ‘தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு திருப்புமுனையில் பங்கு கொள்கிற வாய்ப்பு. இது ஒரு செய்தி மட்டுமல்ல அறிவிப்பு’ என்று சொல்லி இயக்குநர் சங்கரை மேடைக்கு அழைத்தார். இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். ‘மூணு வருசம் முன்னாடி ஒரு லைன் கிடைச்சது. தள்ளிப்போயிட்டே இருந்தது. ஆனா இதை இப்போ பண்ணியே ஆகணும்னு ஒரு உந்துதல் வந்திருக்கு’ என்று  ஒரு பெரிய அறிவிப்பை சுருக்கமாக வெளியிட்டார் சங்கர். ‘இத்தனை நட்சத்திரங்கள் முன்னால ஆறரை கோடி பேர் பார்க்க இந்த மாதிரி ஒரு ஆரம்ப விழா என் வாழ்க்கைல நடந்ததில்லீங்க’ என்றார் கமல்.

**

ஜூலியின் டான்ஸ் பெர்பாமன்ஸூக்குப் பிறகு ‘ஒரு படத்தை எடுக்கும்போது எத்தனை நாள் ஓடும்னு தெரியாது. ஆனா இது 100 நாள் ஓடும்னு முன்னாடியே ப்ளான் பண்ணி எடுத்தோம்’ என்று கமல் சொல்ல மீண்டும்  ஒரு குறும்படம் போடப்பட்டது. இத்தனைநாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைரலான, நெகிழ வைத்த, சோக, சந்தோச, சண்டை பிடித்த எல்லா தருணங்களையும் தொகுத்திருந்தார்கள். ஆரவ் ஓவியா லவ் சீனைப் பார்த்து ஓவியா சிரித்தார். சுஜாவின் அப்பா வரலைனா நான் வரேன் என்று கமல் சொன்ன காட்சியை கமல் மீண்டும் பார்த்தபோது இப்போதும் உணர்ச்சிவசப்பட்டார். ‘இது வெறும் கேம் இல்ல.. லைஃப். அதுதான் நான். வெளியே ஃபேமிலி இருக்காங்க ஆனா இவங்களும் என் ஃபேமிலிதான்’ என்று சொல்லி மீண்டும் கைதட்டல் வாங்கினார் ஓவியா. தான் பார்த்த சிறந்தபடம் பிக்பாஸ் படம் என்றார் பரணி. சக்தி தான் பெண்களை மதிப்பவன் என்று மீண்டும் சொல்லி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்டார். ரைஸா கலவையாக ஒரு எக்ஸ்பிரசன் கொடுத்தார். 

‘வலைதளங்களில் வேற வேலையே இல்லாம காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் இதை பத்தியே பேசி எங்களை கிண்டல் பண்ணி எங்களுக்கு புகழ் சேர்த்தாங்க. அவங்களை கௌரவிக்குற விதமா அந்த ட்ரோல்ஸ், மீம்ஸெல்லாம் ஒரு குறும்படமாக’ என்று சொல்லி கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி வந்த மீம்ஸ்களை போட்டுக்காட்டினார். அவர்களைப் பற்றிய எள்ளல்களுக்கு அவர்களே சிரித்தார்கள்.

சுட்டிக்குழந்தைகளை வரவழைத்து பிக்பாஸில் புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்லி அது யார் சொன்னதுனு கண்டுபிடிக்கும் போட்டிவைத்தார் கமல். அந்த வாண்டுகள் கமல் மாதிரியே மிமிக்ரி செய்தார்கள். கமல் மாதிரி பாடினார்கள். கமலுக்கே கரெக்சன் சொன்னார்கள். பார்க்க ஜாலியாக இருந்தது. ஆனால் குழந்தைகளும் இவ்வளவு தூரம் இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் எனும்போது அடுத்த சீசனில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கணும் பிக்பாஸ் டீம்.

Bigg Boss

**

இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 76 கோடியே 76 லட்சம் ஓட்டுகள் வந்திருப்பதாகச் சொன்னார். (இதுல ஓவியாவுக்கு மட்டும் எத்தனைனு சொன்னீங்கன்னா…) ஒருவரே ஒருநாளைக்கு 50 ஓட்டுகள் போடலாம் எனும்போது ஓட்டுப்போட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு குறைவாகத்தான் இருக்கும் என்றாலும் அந்த எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கும். இதுவே அதிகம்தான். ‘இதுல 10%  ஓட்டாவது போட வேண்டிய இடத்துல போட்டீங்கன்னா நல்லாருக்கும்’ என்று கமல் பஞ்ச் வைத்தார். 

தொடர்ந்து ஆர்த்தியும், காயத்ரியும் தனித்தனியாக தங்கள் டான்ஸ் பெர்பாமன்ஸ் கொடுத்தார்கள். (காயத்ரிக்கு நானும் ரௌடிதான் சாங் செலக்சன் யாரோ?). ஃபைனலிஸ்ட் நால்வரின் குடும்பத்தினரிடமும் பேசினார் கமல். சிநேகனின் அண்ணனும் பேசும்போது கண் கலங்க, ‘குடும்பமே உணர்ச்சி பிழம்பா இருக்கீங்க’ என்றார் கமல்.

அகம் டிவி வழி இறுதிகட்ட போட்டியாளர்களிடம் பேசினார் கமல்.  வழக்கம்போல ‘எப்படி ஃபீல் பண்றீங்க?’ என்று நால்வரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார் கமல். தொகுப்பாளர்களின் முதல் அஸ்திரம் அதுதானே.  ‘வயித்தை கலக்குது சார்.. வார்த்தையே வரல’ என்றார் ஹரிஷ். ‘உங்களுக்கு வார்த்தை வரல.. வார்த்தையையே தொழிலா வச்சிருக்கிற கவிஞர் என்ன நினைக்குறார்?’ என்றார் கமல். ‘மயக்கம் வந்துடும்போல’ என்று சிரித்தார் சிநேகன். போட்டியாளர்களுக்கு குடும்பத்தினரின் மெசேஜ். சொல்லிவைத்தார் போல எல்லாருமே ‘யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே’ என்றார்கள். 

மூன்றாவது ரன்னர் அப்பை குடும்பத்தினர் உள்ளே சென்று அவர்களைக் கூட்டி வரவேண்டும் என்று சொல்ல, நிஷா  மூன்றாவது ‘ரன்னர் அப்’பான தனது கணவர் கணேஷை அழைக்க உள்ளே சென்றார். கணேஷ் தன் மனைவியைப் பார்த்த உற்சாகத்தில் கூலாக டான்ஸ் ஆடினார். வழக்கம்போல் போர்டில் பிரிவுச் செய்தி எழுதச் சொல்ல ஒரு பெரிய கட்டுரை எழுதிவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினார். ‘நானே உள்ள போய் கூட்டிட்டு வர்றது சந்தோசம். எப்பவோ போதும் வாய்யானு சொல்லணும்னு நினைச்சேன். எப்படி இந்த மனுஷன் இவ்ளோ பொறுமையா இருக்கார்னு சொன்னப்போ பெருமையா இருந்துச்சு’ என்றார் நிஷா.  ‘இதுவே பெரிய வெற்றி. என் மனைவியோட தியாகத்திற்கு நன்றி’ என்றார் கணேஷ். ‘நான் ஒரு படம் நடிச்சிட்டு யாராவது என்னை அடையாளம் கண்டுபுடிக்கிறாங்களானு பாத்துட்டே இருப்பேன். உங்களுக்கு அந்த புகழ் ஈசியா கிடைச்சிருக்கு’ என்று கமல் கணேஷூக்கு வாழ்த்துகள் சொன்னார். சுஜா தன் நண்பன் ஜெயிக்காததற்காக வருத்தப்பட்டார்.

**

‘ஓவியா கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க’ ரொம்ப நாளுக்குப் பிறகு இந்த வார்த்தைகளைக் கேட்கிறோம். (அந்த சிவப்பு நிற ஆடையில் கன்ஃபஷன் ரூமில் பிக்பாஸிடம் ‘இனிமே அந்த மாதிரி பாட்டு போடாதீங்க’ என்று அழுத ஓவியாவை நினைவிருக்கிறதா?). மேடையில் போட்டிருந்த கன்ஃபஷன் ரூம் செட்டப்பிற்கு வந்த ஓவியாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து கமல் படிக்கச் சொல்ல, அவர் படிக்கத் திணற, கமலே அவருக்கு டப்பிங் கொடுத்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று இரண்டாவது ‘ரன்னர் அப்’பை அழைத்து வரவேண்டும். அவர் பெயரைப் படிக்கப்போக வெடுக்கென்று பிடுங்கிய கமலின் ரியாக்ஸன்.. ஆண்டவரே..!

ஓவியா உள்ளே சென்று மூவரையும் கொஞ்ச நேரம் சஸ்பென்சில் வைத்து தன் பங்குக்கு பிபியை ஏற்றி இறுதியில் ஹரிஷ் என்று சொல்லி அவரை அழைத்துவந்தார். திரும்பி வரும்போது ‘எல்லாரும் ஆரவ்வா இருக்கும்னு நினைக்குறாங்க’ என்றார் ஹரிஷ். ‘ஏன் அப்படி நினைக்குறாங்க’ இது ஓவியா. ‘ஒரு இதுவா இருக்கும்னு’ ‘எது’ ‘அது’ என்று பேசிக்கொண்டது செம செம. 

மேடைக்கு வந்ததும் சாஸ்டாங்கமாக காலில் விழுந்து கமல் கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்தார் ஹரிஷ். ‘இந்த ஆம்பளை பசங்கள்லாம் இப்படி கேக்குறாங்கனுதான் மீசை தாடியெல்லாம் வச்சிருந்தேன்’ என்று நக்கலடித்தார் கமல். ரஜினி ‘கமல் 50’ நிகழ்ச்சியின் போது கமலை கலைத்தாய் இடுப்புல தூக்கி வச்சிருந்தாங்க என்று சொன்னதை நினைவுப்படுத்தி எங்களுக்கெல்லாம் கமல்தான் கலைத்தாய் என்றார்.  ‘நான் இன்னைக்கு ஜெயிச்சிருந்தா கூட சந்தோசப்பட்டிருக்க மாட்டேன் 100 நாள் உள்ள இருந்த அந்த 2 பேர்ல யாராவதுதான் ஜெயிக்கணும்னு நினைச்சேன்’ என்று தன் பெரிய மனுஷத்தனத்தைக் காட்டினார் ஹரிஷ். 

தொடர்ந்து சுஜாவின் டான்ஸ் பெர்பாமன்ஸ் வந்தது.

**

‘அந்த 2 பேரையும் நானே உள்ளே போய் கூட்டிட்டு வர்றேன்’ என்று கமல் சொல்ல.. ‘உங்களுக்காக ஒரு குறும்படம்’ என்று கமலுக்கே குறும்படம் போட்டார்கள். ‘எங்க எடுத்தீங்க’ என்று கமல் நக்கலாக கேட்க.. ‘இங்க தான்’ என்று பிக்பாஸ் பதில் சொன்ன பிறகு ‘சரி அப்போ போடுங்க’ என்றார் கமல். பிக்பாஸ் மேடையில் கமல் பேசியதையும் கொடுத்த ரியாக்ஸன்களையும் மிக நேர்த்தியாக தொடுத்திருந்தார்கள். 

‘நாற்பது வருடத்துல நாங்க சிறுக சிறுக சேமித்த கண்களை பட்டுனு பதினாலு வாரத்துல கொண்டு வந்து சேர்த்தது பெரிய பாக்யம். நீங்கள்லாம் ஃபேமிலியா இருக்குறதை பாக்குறப்போ நம்ம அப்பா அம்மா இல்லையேனு ஒரு சின்ன வருத்தம் தோன்றி மறைந்தது. காசு கொடுத்தா அழுற மாதிரி ஈசியா நடிச்சிரலாம். அழாதமாதிரி நடிக்குறதுதான் கஷ்டம். இங்க அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்’ என்று நெகிழ்ந்தார் உலக நாயகன்.

ஆரவ்விடம், சிநேகனிடம் பேசியது பிக்பாஸ் குரல். ‘100 நாட்கள், 100 வேக்கப் சாங், 100 எபிசோட்.. இந்த வீட்டின் சுவர்கள் உங்கள் வாழ்க்கையை எழுதிய சுவர்கள். இதுநாள் வரை உங்களுடன் உரையாடிய இந்த குரல் விடைபெறுகிறது’ என்று சொன்னபோது நமக்கே மனதைத் துளைத்தது அந்தக் குரல். இத்தனை நாள் அதைக் கேட்டு அதன் ஆணைப்படி வாழ்ந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். ‘நீங்க கூப்டுறப்போ அம்மா கூப்பிடுற மாதிரி இருக்கும்’ என்று அழுதார் சிநேகன். சிநேகன் அழுவது புதிதல்ல ஆனால் இந்த முறை ஆரவ்வும் கண்கலங்கினார்.  கடைசியாக இந்த வீட்டில் ஆரவ் எப்போது அழுதார் என்றே நினைவில்லை. ‘என் வாழ்க்கையை மாத்தி அமைச்சிருக்கீங்க’ என்றார் ஆரவ். கமல் உள்ளே நுழைந்து ‘வீட்டுக்கு டாட்டா சொல்லிட்டு வாங்க’ என்று சொல்லி இருவரையும் அழைத்தார். சிநேகன் வீட்டு வாசலில் விழுந்து கும்பிட்டு வெளியேறினார். இருவரின் எண்ண ஓட்டங்களையும் கேட்டபிறகு கமல் தன் பிக்பாஸ் மேடையில் தன் இறுதி உரையை நிகழ்த்தினார். 

“எனக்கு இதுவரை பேச அனுமதித்ததற்கு ஆறரை கோடி நன்றி.. இது எட்டு கோடியாக மாற்ற வேண்டும் என்று ஆசை. இது முடிவல்ல துவக்கம். இந்த மேடையில் துவங்கியிருக்கிறேன். அந்த மேடையிலும் உரையாடல் தொடரும். அங்கும் வருவேன். என்னவா வருவேன்னு கேக்காதீங்க.. தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதல்ல அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வருவதல்ல கடமையுடன் வருகிறேன். இந்த அன்பு அங்கும் கிடைக்கும் என்பதற்கான அச்சாரம் எனக்கு கிடைத்திருக்கிறது. இனி என்ன வேலை என்று கேட்க மாட்டேன் உங்கள் வேலைதான் என் கடமை. சினிமால நடிக்கவேணாம் சேவகம் செய்னு சொன்னா செய்யுறேன். இல்ல அதுக்கெல்லாம் நீ லாயக்கில்லைனு சொல்லிட்டா அதையும் கேட்டுக்குறேன். கைதட்டலுக்காக இதை சொல்லலை. மனதின் ஆழத்தில் இருந்து வந்த வார்த்தை. சேவையில் சாவதுதான் இந்த நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு” என்று கண்கள் கலங்கினார்.

பின் பெரிய சஸ்பென்ஸூக்குப் பிறகு ஆரவ்தான் வெற்றியாளர் என்பதை அறிவித்தார். ஸ்கூல் கரெஸ்பாண்டன்ட் முதல் மக்கள் வரை எல்லாருக்கும் நன்றி சொல்லி வின்னர் ஸ்பீச் கொடுத்தார் ஆரவ். பின் கமல் ஒவ்வொருவருக்கும் புத்தகங்கள் பரிசளித்தார். ’அன்னாத்த ஆடுறார்’ பாடல் ஒலிக்க வேட்டியை மடித்துக்கொண்டு ஆட்டம் போட்டார் கமல். பிக்பாஸ் வீட்டின் விளக்குகளை அணைப்பதற்கான ‘ட்ரிகரை’ கமல் அழுத்த, ‘புதிய நபர்களுடன் தொடரும்’ என்ற அறிவிப்புடன் விளக்குகள் அணைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லதோ.. கெட்டதோ..  தேவையோ.. இல்லையோ.. தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  இத்தனை பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இதுவே முதல்முறை. பிக்பாஸ் நமக்கு சிலரை அடையாளம் காட்டியிருக்கிறது. அந்த சிலர் ‘தொகுப்பாளர்’ கமலோ.. ‘வெற்றியாளர்’ ஆரவ்வோ.. ‘மக்களின் வெற்றியாளர்’ ஓவியாவோ இல்லை. பிக்பாஸ் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இயல்புகளையும் நமக்கே அடையாளம் காட்டியிருக்கிறது.  

http://cinema.vikatan.com/bigg-boss-tamil/103779-its-time-for-the-grand-finale-in-biggboss.html

  • தொடங்கியவர்

பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு

 

 
aravjpg

'பிக் பாஸ்' வெற்றிக் கோப்பையுடன் ஆரவ்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ மற்றும் நமீதா இருவரும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஓவியா "ஹாய் ஆரவ், எப்படி இருக்க.. நீ ரொம்ப உடல் மெலிந்து விட்டாய்" என்று மட்டுமே பேசினார்.

இறுதிப் போட்டியாளர்கள் நால்வரில் முதல் ஆளாக, கணேஷ் வெங்கட்ராம் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் வெளியேற்றப்பட்டார். சிநேகன் மற்றும் ஆரவ் இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று கமல் அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார்.

இறுதியாக வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டு கோப்பையும், 50 லட்ச ரூபாய் பணமும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி என்று பேசினார் ஆரவ்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருடனும் 'அண்ணாத்தா ஆடுறார்' பாடலுக்கு நடனமாடினார் கமல். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் கமல் அணைக்க நிகழ்ச்சி முடிவுற்று. விரைவில் அடுத்த சீசனில் சந்திக்கலாம் என்பதோடு முடித்துவிட்டார்கள்.

சமூகவலைத்தளத்தில் சர்ச்சை

பிக் பாஸ் இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதே, சமூகவலைத்தளத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும் இதற்கு தகுதியானவர் அல்ல என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறி வருகிறார்கள்.

மேலும், ஆரவ்வின் ட்விட்டர் பக்கத்தில் "இது தான் எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு" என்று ட்வீட் செய்தார். அதற்கு பதிலடியாக பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஓவியாவால் மட்டுமே இது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பலரும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19780803.ece?homepage=true

  • தொடங்கியவர்

'பிக் பாஸ்' வெற்றியாளர் ஆரவை டிவிட்டரில் கலாய்த்த நடிகை! 

 
actress_kasturi

 

சென்னை: நேற்று நடைபெற்று முடிந்த 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற நடிகர் ஆரவை, சமூக வலைத்தளமான டிவிட்டரில் நடிகை கஸ்தூரி கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

100 நாட்களாக தொடந்து வந்த ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்றுடன் முடிந்து விட்டது. இறுதிச்சுற்று வரை வந்த ஆரவ்  மற்றும் ஸ்நேகன் இருவரில்  'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளராக 'மருத்துவ முத்தம்' கொடுத்து புகழ்பெற்ற ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

aarav.jpg

கவிஞர் ஸ்நேகன் அல்லது நடிகர் கணேஷ் வெங்கடராமன் ஆகிய இருவரில் ஒருவர் ஜெயிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆரவின் வெற்றி எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

 
 

இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் அதனைக் குறித்த விமர்சனங்கள் எழும்பின. அதில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். அவர் டிவிட்டரில் நடிகர் ஆரவ் வெற்றியாளராகத் தேர்தெடுக்கப்பட்டிருந்ததை 'அநியாயம் என்று விமர்சித்து இருந்தார்.தன்னுடைய கருத்துக்கு வலுசேர்க்கும் படி நடிகர் வடிவேலுவின் படம் ஒன்றிணையும் அவர் இணைந்திருந்தார்   

actress_kasthuri.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/01/பிக்-பாஸ்-வெற்றியாளர்-ஆரவை-டிவிட்டரில்-கலாய்த்த-நடிகை-2782595.html

  • தொடங்கியவர்

பிக் பாஸ் இறுதிப்போட்டிக்குப் பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போட்டியாளர்கள்! (படங்கள்)

 

 
oviya_julie1xx

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார். 

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது.

பிக் பாஸ் இறுதிப்போட்டிக்குப் பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

bb331.jpg

bb_party6161.jpg

bb_party1.jpg

bb2.jpg

 

bb90.jpg

snehan_julie1.jpg

suja_bb2.jpg

suja_bb.jpg

 

oviya_julie1.jpg

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியை ஆரவ் வென்றது எப்படி?: சிநேகன் ஆதரவாளர்கள் கேள்வி!

 

 
arav2

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். 

வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார். 

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனை நடிகர் ஆரவ் வென்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை சிநேகன் தான் வெல்வார் என்று பலரும் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதத்தில் ஆரவ் ஜெயித்துள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்பு சமூகவலைத்தளங்களிலும் சிநேகனுக்கு ஆதரவான பதிவுகளையே அதிகம் காணமுடிந்தது. பிக் பாஸ் இறுதிப் போட்டியில், சிநேகன், ஆரவ் ஆகிய இருவர் முன்னிலையிலும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் சிநேகனுக்கு ஆதரவாகவே அதிகமாகக் குரல் எழுப்பினார்கள். இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக, 'யாருக்கு அதிக வாக்குகளோ அவர்தான் வெற்றியாளர்' என்று பார்வையாளர்களைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அழுத்தம்திருத்தமாகக் கூறினார் கமல். இந்நிலையில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதால் சிநேகன் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். விஜய் டிவியின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலர் தங்களுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பிக் பாஸ் குறித்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுகள் எழுதிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், இறுதிப்போட்டிக்குப் பிறகு சிநேகன் குறித்து தன் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது: 

snehan11.jpg

சிநேகனுக்கான என் ஆதரவு - அவருக்கு அந்த வீட்டில் இருந்த கமிட்மெண்ட், உழைப்பு... ஆரம்பத்தில் தனக்குத் தெரிந்த நண்பர்களுடன் வளைய வந்தாலும் இடையில் புரிந்துகொள்ளும்போது மற்றவர் குறித்த தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயங்காமல் இருத்தல், அனைவரையும் அனுசரித்துப் போகும் தலைமைப் பண்பு, எல்லோருக்கும் உணவு இருக்கிறதா என பார்த்து பின் கடைசியிலேயே தானும் உண்பது, மன அழுத்தத்தில் யார் இருந்தாலும் அவரை தன் விருப்பு வெறுப்பு பாராமல் ஆற்றுப்படுத்துவது, மற்றவர்கள்- முக்கியமாய் பெண்கள் அவரை நன்றாக உபயோகித்துக்கொண்டு கடைசியில் சந்தர்ப்பம் பார்த்து அழவைத்துவிட்டுப் போயினர். ஆனாலும் தொடர்ந்து மற்றவர்களுக்கு அவர் தன் பலவீனங்களிடையே உதவிக்கொண்டிருந்தது... அல்லது உதவுவதையே பலவீனமாகக் கொண்டவராய் இருந்தது, அவ்வப்போது அடுத்தவர் பற்றிய தன் மனவேதனைகளை பிறரிடம் ஒரு வடிகாலாகப் பகிர்ந்துகொண்டாலும் அதில் வசைச்சொற்களோ அடுத்தவரைக் கவிழ்க்கும் தீவிரத் திட்டங்களோ இல்லாதிருந்தது. அதனாலேயே அது புறம்பேசல் வகையில் சேராது. 

முதல்நாள் முதல் (ஃபைனலுக்கு நேரடியாக கோல்டன் டிக்கெட் வாங்கிவிட்டாலும்) இறுதிநாள் வரை பிக்பாஸ் கொடுக்கும் போட்டிகளில் சின்சியராகப் பங்கெடுத்தல், கீழ்ப்படிதல்... பிக்பாஸ் மற்றும் கமலுக்கு அடங்கியவராகவே சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவராகவே இருந்தது, தன் இருப்பு ஒரு மாதம் ஆனதற்குப் பார்ட்டி கொடுக்கவேண்டும் என்று பிந்து நினைத்தால் சிநேகன் இன்றைக்கு பஜ்ஜி, கேசரி செய்துதருவார் என்று உரிமையோடு உத்தரவு போடமுடிகிறது. சாதா சமையல் முதல் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை, சுண்டல் வரை எல்லாவற்றையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு சலிக்காமல் சளைக்காமல் சமைத்துப்போடுகிறார். சமையல்- மற்ற க்ளீனிங் வேலைகள் போல் செய்தால் செய்யலாம், இல்லாவிட்டால் அப்படியே விடலாம் என்கிற வேலை இல்லை. மூன்று வேளையும் மாற்றி மாற்றி எத்தனை பேர் புதிது புதிதாக வந்தாலும் அவர்களுக்கும் சேர்த்து செய்தே ஆகவேண்டிய வேலை. க்ளீனிங் குழு வேலைகளிலும் தன்னுடையதைத் தவிர மற்றவர்களுடையதையும் சேர்த்து செய்யவேண்டியிருந்தது. புலம்பிக்கொண்டேயாவது செய்துமுடித்தார். 

இதைத் தவிர மற்ற போட்டிகள், டாஸ்க்குகளையும் தன்னளவில் மிக சின்சியராகச் செய்கிறார். வெற்றிபெற்ற குழுக்களிலெல்லாம் இவருடைய பங்கே பிரதானமாக இருந்திருக்கிறது. அயர்ன்பாக்ஸுக்கு கரி பற்றவைப்பதிலிருந்து வாசலில் கோலமிடுவது வரை இவருக்குத் தெரியாத வேலையே இருக்கவில்லை. எப்பொழுது திறந்தாலும் அவரது படுக்கை டிராயரில் சீராக அடுக்கப்பட்ட துணிமணிகள், டேபிளில் வரிசையாக அடுக்கப்பட்ட அலங்காரப் பொருள்கள், எப்பொழுதும் எந்தக் காரசாரப் பேச்சு அல்லது சோர்வினிடையேயும் வீட்டின் டைனிங் சேர் தொடங்கி அனைத்தையும் யதார்த்தமாக ஒழுங்குபடுத்திக்கொண்டே இருந்தது என்று எல்லாவற்றிலும் இருந்த அலாதியான நேர்த்தி..... இந்த செயல்பாடுகளை அவ்வப்போது குறிப்பிட்டே பாராட்டியிருக்கிறேன். இப்பொழுதும் ஒரு "வீடு" என்பதில் இருப்பவரில் தலைமைப்பண்புக்கான மிக முக்கியமான அவசியமான தகுதிகள் அனைத்தும் சிநேகனுக்கே இருந்ததாக நம்புகிறேன் என்று சிநேகனுக்கு ஆதரவாக எழுதியுள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில், ஆராம்? ஆரவாம். ஆரு? ஆரவ். ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்! #அநியாயம் என்று பிக் பாஸ் இறுதிப்போட்டி குறித்த தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

வெற்றியாளர் ஆரவ் ஒரு பேட்டியில், பிக் பாஸ் போட்டியை கணேஷ் வெங்கட்ராமன் அல்லது சிநேகன் ஆகிய இருவரில் ஒருவர்தான் ஜெயிப்பார் என எண்ணினேன். அவர்கள் இருவரும் கடுமையான சவாலை அளிக்கும் போட்டியாளர்களாக இருந்தார்கள். எல்லா டாஸ்க்குகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்கள். என்னுடன் பிக் பாஸில் இருவரும் நீண்டநாள் பயணிப்பார்கள் என எண்ணினேன். அதுதான் நடந்தது. அவர்கள் போட்டியில் ஜெயித்திருந்தாலும் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் எப்போதும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் உண்டு பண்ணுபவை. அரவிந்தாக்‌ஷன் சூப்பர் சிங்கராகத் தேர்வு செய்யப்பட்டபோது பெரிய சர்ச்சை ஒன்று வெடித்தது. அதேபோல பிக் பாஸ் சீஸன் 1 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் முடிவும் சர்ச்சைக்குரியதாக அமைந்துவிட்டது.

http://www.dinamani.com/

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்

சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்: வாழ்நாளில் காணாத புகழ் குறித்து வையாபுரி உருக்கம்!

 

 
vaiyapurixx

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இதுவரை காணாத ஒரு புகழை அடைந்துள்ளதாக நடிகர் வையாபுரி கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று விருந்தினர்களாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்குக் கிடைக்கும் வரவேற்பு குறித்த விவரங்களை நடிகர் வையாபுரி சகபோட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்கிறேன். குடும்பத்தினருடன் திரைப்படத்துக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தேன். குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள மாலுக்குச் சென்றேன். தகவல் தெரிந்து மாலுக்கு வந்த அனைவரும் என்னைச் சுற்றிக்கொண்டார்கள். என்னால் எந்தக் கடைக்கும் செல்லமுடியவில்லை. ஒன்றரை மணி நேரம் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்ளமுடிந்தது. வேறு எதுவும் செய்யமுடியவில்லை. ரசிகர்கள் வருகை அதிகமாகவே, வீட்டுக்குப் போகலாம். இன்னொரு நாள் வந்துகொள்ளலாம் என்று மனைவி சொல்லிவிட்டார். என் வாழ்நாளில் இப்படியொரு புகழையும் ரசிகர்களின் ஆதரவையும் கண்டதில்லை என்று உருக்கமாகக் கூறினார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/02/biggbosstamil-vaiyapuri-2783120.html

  • தொடங்கியவர்

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

 

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் வந்தனர். நமீதாவை தவிர அனைவரும் இந்த பிக் பாஸ் இறுதிப் போட்டியில் அணைத்து பிரபலங்களும் பங்கு கொண்டனர். மேலும் காயத்ரி, சுஜா ஜூலி மேலும் சிலர் நடனம் ஆடி நிகழ்ச்சியில் மக்களை மகிழ்வித்தனர். இதுவரை நடந்த அனைத்தையும் அந்த தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர்.

ஆரவ் வெற்றிபெற்றதற்காக ஓவியா செய்த காரியத்தை பாருங்களே..!

இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒரு பார்ட்டி நடந்தது, அதில் அந்த தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் அனைவரும் பங்கு கொண்டனர். மேலும் அந்த பார்ட்டியில் ஓவியா ஆடிய ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிரது

 

https://news.ibctamil.com/ta/celeberities/Oviya-dance-in-bigg-boss-party

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.