Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துதிபாடும் அரசியல்

Featured Replies

துதிபாடும் அரசியல்

 

ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடக்கி ஆள்­வ­தற்கு முற்­ப­டுதல் கூடாது. அவ்­வாறு அடக்­கி­யாள முற்­ப­டு­மி­டத்து பிரச்­சி­னை­களும் முரண்­பா­டு­களும் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யா­த­தா­கி­விடும். உலக வர­லா­றுகள் இதனை நிரூ­பித்­தி­ருக்­கின்­றன. என்­னதான் வர­லா­றுகள் காணப்­பட்­டாலும், படிப்­பி­னைகள் இருந்­தாலும் அடக்­கி­யாளும் வர­லாறு என்­பது இன்னும் தொடர்ந்து கொண்­டேதான் இருக்­கின்­றது. உல­க­ளா­விய ரீதியில் சிறு­பான்மை சமூ­கங்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றன. இலங்கைச் சிறு­பான்­மை­யி­னரும் இதற்கு விதி­வி­லக்­காகி விட­வில்லை. இங்­குள்ள சிறு­பான்­மை­யினர் நாளுக்கு நாள் புதுப்­புது வகை­யி­ல­மைந்த பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றனர். சிறு­பான்மை மக்கள் என்­கிற ரீதியில் மலை­யக மக்கள் தொடர்­பாக நாம் சற்று அதி­க­மா­கவே கவனம் செலுத்த வேண்டி இருக்­கின்­றது.

பின்­தங்­கிய நிலையில் உள்ள இம்­மக்­களை முன்­னி­லைக்கு கொண்டு வரு­வ­தற்கு திட்­ட­மிட்­ட­து­ரி­த­மான செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்ள நிலையில் இவர்­களின் சிந்­தனா சக்­தி­யிலும் மேம்­பாட்­டினை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவையும் காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் சிந்­தனா சக்­தி­யற்ற ஒரு சமூகம் எளிதில் எதேச்­சாதி­கா­ரத்­திற்குள் சிக்­கி­விடும் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்க ஒரு விட­ய­மா­க­வுள்­ளது.

சுரண்­டலில் உச்ச கட்டம்

ஒரு­வரை சுரண்டி இன்­னொ­ருவர் வாழ்க்கை நடத்­து­வ­தென்­பது இப்­போ­தெல்லாம் சர்­வ­சா­தா­ர­ண­மா­கி­விட்­டது. யார் எப்­படிப் போனால் எனக்­கென்ன? நானும் எனது குடும்­பமும் நல­மாக வாழ்ந்தால் போதும் என்ற குறு­கிய வட்­டத்தில் இப்­போது பெரும்­பா­லா­ன­வர்கள் வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­த­னையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. சுரண்­டல்கள் வரி­சையில் சமூகச் சுரண்­டல்­களும் இடம் பெற்று வரு­கின்­றன. மலை­யக சமூகம் இச்­சு­ரண்­டல்­க­ளுக்கு அதி­க­மாக உள்­ளாகி இருக்­கின்­றது. பத்­தொன்­பதாம் நூற்­றாண்டில் தமி­ழ­கத்தில் இருந்து இலட்­சோ­ப­லட்சம் தமிழ்த் தொழி­லா­ளர்கள் உலகில் பல நாடு­க­ளுக்கும் அழைத்துச் சென்று குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். நேவீஸ், அன்ரீல்ஸ், தாஹித்த, நியூ கலி­டோ­னியா, சென்ட் குறோக்கஸ், பிஜி, டேமாரா, மொறீ­சியஸ், தென் ஆபி­ரிக்கா, வியட்நாம், அந்­தமான், சுமத்­திரா, சிசெல்ஸ், ஜமெய்க்கா, சிங்­கப்பூர், பர்மா, மலே­சியா போன்ற இடங்கள் தமி­ழர்கள் குடி­ய­மர்த்­தப்­பட்ட சில நாடு­களும் தீவு­க­ளு­மாகும். இத­ன­டிப்­ப­டையில் இலங்­கைக்கும் தமி­ழர்கள் அழைத்து வரப்­பட்டு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­மையும் தெரிந்த விட­ய­மாகும். இவ்­வாறு பல நாடு­க­ளிலும் தீவு­க­ளிலும் குடி­ய­மர்த்­தப்­பட்ட தமி­ழர்கள் அங்கு அனு­ப­வித்த கொடு­மைகள் மிக மிக அதி­க­மாகும் என்றும், அம்­மக்­க­ளது வர­லாறு சோகம் மிகுந்த துயரம் கலந்து இருள்­ப­டிந்து குருதி நிறைந்த வேத­னைகள் மலிந்து விளங்­கி­ய­தாக கலா­நிதி க.அரு­ணா­சலம் தனது நூல் ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­ற­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்டு மலை­யக பகு­தி­களில் குடி­யே­றிய அல்­லது குடி­ய­மர்த்­தப்­பட்ட தொழி­லா­ளர்கள் நீண்ட கால­மா­கவே ஒரு தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சமூ­க­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கின்­றனர். நிறைய அவ­மா­னங்­க­ளையும் இவர்கள் சுமக்க வேண்­டிய பல சந்­தர்ப்­பங்­களும் இல்­லா­ம­லில்லை. கள்ளத் தோணிகள், தோட்­டக்­காட்டான், இந்­தி­யக்­காரன் என்­றெல்லாம் பல பெயர்­களில் இம்­மக்கள் அழைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றார்கள்.

தமி­ழ­கத்தில் இருந்து சென்று பல இடங்­க­ளிலும் குடி­யமர்த்­தப்­பட்ட தமிழ் மக்கள் அர­சியல் பொரு­ளா­தார மற்றும் சமூக ரீதி­யாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட வர­லாறே காணப்­ப­டு­கின்­றது. பிரித்­தா­னிய மற்றும் பிரான்­ஸிய ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும், பின்பு சுதேச ஆட்­சி­யா­ளர்­க­ளி­னாலும் அந்­தந்த நாடு­க­ளையும் தீவு­க­ளையும் சேர்ந்த சுதேச இனத்­த­வர்­க­ளி­னாலும், தொழி­லா­ளர்கள் அல்­லாத ஏனைய தமி­ழர்­க­ளி­னாலும் கொடூ­ர­மான மிக மோச­மான சுரண்­டல்­க­ளுக்கு தமிழ் மக்கள் உள்­ளாக்­கப்­பட்­டனர். இதே­வேளை வணி­கர்கள், அதி­கா­ரிகள், தோட்ட உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்ட இன்னும் பலரும் தொழி­லா­ளர்­களை சுரண்­டு­வ­தற்கு தவ­ற­வில்லை என்­பதும் புத்­தி­ஜீ­வி­களின் கருத்­தா­க­யி­ருக்­கின்­றது. உச்ச கட்ட சுரண்­டல்­க­ளுக்கு இவர்கள் உள்­ளாகி இருந்­தனர். இலங்­கையின் மலை­யக பகு­தி­களில் குடி­யே­றி­ய­வர்­களின் நிலையும் சுரண்­டல்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவே இருந்­தது. உழைப்புச் சுரண்­டலும் இதில் உள்­ள­டங்கும். இத்­த­கைய சுரண்டல் நிலைக்கு உட்­பட்ட எம்­ம­வர்­களின் பய­ணப்­பாதை மிகவும் கடி­ன­மா­கவே இருக்­கின்­றது.

ஓரம் கட்­டுதல்

மலை­யக மக்கள் இந்த நாட்டில் ஒரு தனித்­துவம் மிக்க சமூ­க­மாக இருக்­கின்­றனர். இவர்­களின் வாழ்வில் ஒரு அந்­தஸ்­தி­னையும் மறு­ம­லர்ச்­சி­யி­னையும் ஏற்­ப­டுத்த வேண்டும். இவர்­களின் இயல்பு வாழ்க்­கைக்கு வித்­திட வேண்டும். தேசிய நீரோட்­டத்தில் இம்­மக்கள் இணைந்து செயற்­பட வழி­வ­கைகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட வேண்டும் என்­றெல்லாம் இம்­மக்­களின் நலன் பேண முனை­ப­வர்கள் கோஷ­மெ­ழுப்­பியும் கோரிக்­கை­களை விடுத்தும் வரு­கின்­றமை தெரிந்த விட­ய­மாகும். இந்த கோஷங்­களும் கோரிக்­கை­களும் எந்­த­ள­விற்கு ஆட்­சி­யா­ளர்­களின் காது­களை சென்­ற­டை­கின்­றன என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது. தேர்தல் காலங்­களில் மலை­யக மக்­களை பல்­லக்கில் ஏற்றிச் செல்லும் அர­சி­யல்­வா­திகள் எல்லாம் முடிந்­தபின் எமது மக்கள் படுப்­ப­தற்கு ஒரு பாயைக் கூட வழங்­கு­வ­தற்கு தயா­ராக இல்லை என்­பது கசப்­பான ஒரு உண்­மை­யாகும். நியா­யத்தை கேட்­ப­வர்கள் சமூக விரோ­திகள் என்று முத்­திரை குத்­தப்­படும் வர­லாறு தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. மலை­யக சமூ­கத்தை ஓரம் கட்டும் நட­வ­டிக்­கை­களில் பெரும்­பான்மை கட்­சிகள் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வ­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ்.சதா­சிவம் போன்­ற­வர்கள் தொடர்ச்­சி­யா­கவே வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இது தொடர்பில் நாம் அலட்­சியப் போக்­குடன் நோக்­காமல் சற்று ஆழ­மா­கவே சிந்­திக்க வேண்­டியும் இருக்­கின்­றது. அண்­மை­கால இன­வா­தி­களின் மோச­மான செயற்­பா­டு­களும் இந்­நி­லை­மைக்கு வலு­சேர்ப்­ப­தா­கவே அமைந்­துள்­ளமை தொடர்பில் நீங்கள் விளங்கிக் கொண்­டி­ருப்­பீர்கள்.

சுதந்­தி­ரத்தின் முன்­னரும், பின்­னரும் மலை­யக மக்கள் குறி­வைக்­கப்­பட்டு வேர­றுக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையை நன்­றாக தெரிந்து கொள்ள முடியும். சுதந்­தி­ரத்­துக்கு முற்­பட்ட அர­சாங்க சபை காலத்தில் இலங்­கையின் அர­சியல் பொரு­ளா­தார சமூக வாழ்வில் மலை­யகத் தமி­ழர்கள் பிரச்­சி­னைக்­கு­ரிய ஒரு இனக்­கு­ழு­வி­ன­ராக கரு­தப்­பட்­ட­தாக பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். மலை­நாட்டின் நிலப்­ப­கு­தி­களில் பெருந்­தோட்­டங்­களை உரு­வாக்க குடி­யேற்ற அர­சாங்கம் அவற்றை கைப்­பற்­றிய போதிலும் அங்கு வேலை செய்ய வருகை தந்த இந்­தியத் தமி­ழர்­களே நிலப்­ப­றிப்­புக்கு காரணம் என்று கரு­தப்­பட்­டனர். நகர்ப்­பு­றங்­களில் இலங்­கை­யர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு பிரச்­சினை ஏற்­பட்ட போது அர­சாங்க திணைக்­க­ளங்­களில் சாதா­ரண தொழில் புரிந்த இந்­தி­யர்­களை அகற்றும் முயற்­சியும் மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்­தி­யர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்டால் மலை­யக மாவட்­டங்­களில் உள்ளூர் மக்கள் தமது பிர­தி­நி­தி­களை தெரிவு செய்ய முடி­யாது போய்­விடும் என்­பதால் இந்­தி­யர்கள் வாக்­கு­ரிமை பெறு­வ­தனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

பெரும்­பான்­மை­யின தலை­வர்கள் இந்­திய மக்­களின் எழுச்சி மற்றும் இருப்பு என்­பன தொடர்பில் பெரிதும் அச்சம் கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­பட்­டனர். இந்­தி­யர்­க­ளுக்கு சகல உரி­மை­க­ளையும் வழங்­கு­மி­டத்து பெரும்­பான்மை மக்­களின் இன அடை­யாளம் மறைந்­து­வி­டக்­கூடும் என்ற அச்சம் இவர்­க­ளுக்கு இருந்­தி­ருக்­கின்­றது. இதன் கார­ண­மாக இந்­தி­யர்­களை ஓரம் கட்டும் நட­வ­டிக்­கை­க­ளி­லேயே இவர்கள் பெரிதும் குறி­யாக இருந்து வந்­துள்­ளனர். சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட காலத்தில் இயற்­றப்­பட்ட சட்­டங்கள் மலை­யக மக்­களை நிர்க்­கதி நிலைக்கு உள்­ளாக்கி இருந்­தது. இம்­மக்கள் சகல துறை­க­ளிலும் பின்­ன­டைவு காண இச்­சட்­டங்கள் தோள்­கொ­டுத்­தன. 1947 இல் இடம் பெற்ற தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக மலை­யக தொகு­தி­களில் இந்­தியத் தமி­ழர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஏழு இலங்கை இந்­திய காங்­கிரஸ் வேட்­பா­ளர்­களின் வெற்றி இத்­தேர்­தலில் சாத்­தி­ய­மா­னது. இலங்கை இந்­திய காங்­கிரஸ் வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டாத ஏனைய மலை­யக மாவட்­டங்­களில் போட்­டி­யிட்ட இட­து­சாரி வேட்­பா­ளர்­க­ளுக்கு இந்­தி­யர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதன் விளை­வாக14 இட­து­சாரி வேட்­பா­ளர்கள் வெற்­றி­ய­டைந்­தனர். இந்­தி­யர்­களின் அர­சியல் ரீதி­யான எழுச்­சியை கண்ட ஐ.தே.க. இந்­தி­யர்­களை வேர­றுக்க எண்­ணி­யது. இதன் விளை­வாக குடி­யு­ரிமை, வாக்­கு­ரிமை சட்­டங்­களை நிறை­வேற்ற ஐ.தே.க. துணிந்­தது. இந்­தி­யர்­களின் வாக்­கு­பலம் குறைக்­கப்­பட்ட நிலை­யா­னது 1952 தேர்­தலில் ஐ.தே.க. அதி­க­ள­வான இடங்­களில் வெற்றி பெறு­வ­தற்கு உந்து சக்­தி­யாக அமைந்­தது.

இந்­திய வம்­சா­வளி தமி­ழர்­களின் வாக்­கு­ரி­மையும், பிர­சா­வு­ரி­மையும் பறிக்­கப்­பட்­ட­மை­யா­னது இந்­நாட்டின் வர­லாற்றில் ஒரு கறை­ப­டிந்த அத்­தி­யா­யத்தை ஏற்­ப­டுத்தி விட்­டது. இருந்தும் என்ன மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னரின் விட­யங்­களில் புதுப்­புது வடி­வங்­களில் இன்னும் கறை­ப­டித்த அத்­தி­யா­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டுதான் இருக்­கின்­றன. இந்த சகப்­பான உண்­மை­யினை பேரி­ன­வா­திகள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். காணி சுவீ­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களால் சம­கா­லத்தில் மலை­யக மக்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அபி­வி­ருத்­தி­களில் புறக்­க­ணிப்பு, பொரு­ளா­தார மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் உரிய வாய்ப்­ப­ளிக்­காமை என்­பன உள்­ளிட்ட பல விட­யங்­களும் மலை­யக மக்­களை ஓரம் கட்டும் முயற்­சி­களின் ஒரு படி­யே­யாகும். இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் பட்­டியல் ஒன்றின் அடிப்­ப­டையில் காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொண்டு வரு­வ­தாக சிலர் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இப்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வெளிக்­கி­ளம்­பி­யுள்ள இன­வாதம் இன்னும் சில காலத்தில் மலை­யக மக்­க­ளுக்கு எதி­ராக திசை திரும்­பி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை என்­பதும் இவர்­களின் கருத்­தா­க­வுள்­ளது.

அடி­மைப்­ப­டுத்தல்

அடிமை என்­பது ஒரு மோச­மான நிலை­யாகும். தனது கோரிக்­கை­களை வெளிப்­ப­டுத்த முடி­யாத நிலையில் அடிமை வாய் இருந்தும் ஊமையாய் முடங்கிக் கிடக்­கின்றான். எஜ­மானின் உத்­த­ரவை நிறை­வேற்­று­வதைத் தவிர அங்கு வேறு வார்த்­தைக்கு இட­மில்லை. கேள்வி கேட்க முடி­யாது. மனி­தனை மனி­தனே கீழ்த்­த­ர­மாக நடத்­து­கின்ற இந்த நிலை அரு­வ­ருக்­கத்­தக்­கது. மனி­தனை மனிதன் அடி­மைப்­ப­டுத்தும் நிலையில் இன்று மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்ற போதும் நவீன அடி­மை­க­ளாக மலை­யக மக்கள் இருந்து வரு­வ­தாக விச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றமை தொடர்­பிலும் நீங்கள் நன்­க­றிந்­தி­ருப்­பீர்கள்.

இன்­றைய கால­கட்­டத்தில் ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடி­மைப்­ப­டுத்தி அடக்­கி­யாள முற்­படும் நட­வ­டிக்­கை­களை உல­க­ளா­விய ரீதியில் எம்மால் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இது ஒரு பிழை­யான செய­லாகும் என்­பது சொல்லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. பல்­லின மக்கள் வாழு­கின்ற ஒரு நாட்டில் சகல இனத்­த­வர்­களின் உரி­மை­களும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். நாமே பெரி­யவர். எமது மதமே மேலா­னது என்­கிற சிந்­த­னைகள் ஒற்­று­மைக்கு ஒரு­போதும் வலு­சேர்க்க மாட்­டாது. ஒரு நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பா­னது நாட்டு மக்கள் சக­ல­ரி­னதும் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைதல் வேண்டும். ஐக்­கி­யத்தின் ஊடாக அபி­வி­ருத்தி என்ற நிலைக்கு இட்டுச் செல்­வ­தாக அமைதல் வேண்டும். எனினும் இது சாத்­தி­யப்­ப­டா­த­வி­டத்து அமை­தி­யின்மை மேலெ­ழும்­பு­வ­தோடு அபி­வி­ருத்தி குறித்த நட­வ­டிக்­கை­களும் தடைப்­படும் என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை. இதே­வேளை சட்­டங்கள் ஏட்­ட­ளவில் முற்­று­பெற்­று­வி­டாது. உண்­மையில் உரிய இனத்­த­வர்­க­ளுக்கு பாது­காப்­பி­னையும், உரி­மை­க­ளையும் வழங்­கு­வ­தாக இருத்தல் வேண்டும். உதா­ர­ணத்­திற்கு சிறு­பான்மை மக்­களின் உரி­மைகள் பாது­காப்­பினை பற்றி சோல்­பரி யாப்பின் 29 ஆம் பிரிவு வலி­யு­றுத்­தி­யது. எந்­தவோர் இனமும் இனத்­தினால் தீமைக்கோ அல்­லது அவ­ம­திப்­பிற்கோ ஆளாக முடி­யாது என்று இப்­பி­ரிவு வகுத்­தது.

இருந்­த­போதும் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் வாக்­கு­ரிமை பறி­போ­வ­தையோ, அல்­லது சிங்­களம் மட்டும் என்ற சட்­டத்­தையோ இதனால் தடுத்து நிறுத்த முடி­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. எனவே 29 ஆம் பிரிவு சிறு­பான்மை காப்­பீ­டாக இருந்தும் என்ன பயன் உண்­டா­னது என்று புத்திஜீவிகள் கேள்வி எழுப்­பு­கின்­றனர். இத­ன­டிப்­ப­டையில் இங்கு சட்டம் ஏட்­ட­ளவில் முற்­று­பெற்­றுள்­ள­த­னையே எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதனால் எவ்­வி­த­மான பயனும் இல்லை. நடை­முறை பயன்­பாடு என்­பது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். பல­த­ரப்­பட்ட இனங்கள் வாழு­கின்ற ஒரு நாட்டில் அனைத்து இன மக்­க­ளுக்கும் அதி­கா­ரத்தை பகிர்ந்து கொள்­கின்ற பிறப்­பு­ரிமை உள்­ள­தாக பேரா­சி­ரியர் ஜயம்­பதி விக்­ர­ம­ரட்ண போன்­ற­வர்கள் ஏற்­க­னவே வலி­யு­றுத்தி இருக்­கின்­றார்கள். எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் சிறிய இன­மாக இருப்­பினும், அவ்­வின மக்கள் பரந்து வாழும் போது மாநில சுயாட்­சியை பற்­றிய கேள்­விக்கே இட­மில்லை. ஏனெனில் அவர்கள் பரந்து வாழும்­போது அவர்­க­ளது அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­பட வேண்டும்.

 

ஆனால் ஒரே இன மக்கள் செறிந்து வாழும்­போது இந்தச் சமன்­பாடு மாற்­றப்­பட வேண்­டிய நிலைமை உண்­டா­கின்­றது. இதன்போது கோரிக்கை சம உரி­மையில் இருந்து மாநில சுயாட்­சி­யாக மாறு­கின்­றது. அவ்­வா­றான இன­மா­னது தனது கலா­சார அடை­யா­ளத்தை அர­சியல் மூலம் வெளிப்­ப­டுத்த விளை­வ­துடன் தேசிய அதி­கா­ரத்­தையும் பகிர்ந்து கொள்ள கோரிக்கை விடுக்­கவும் விரும்பும். பல நாடு­களில் பெரும்­பான்­மை­யினர் புரிந்து கொண்டோ அல்­லது கட்­டா­யத்தின் பேரிலோ தமது நாடு முன்­னேற அதி­கார பர­வ­லாக்கம் முக்­கி­ய­மா­னது என்­ப­தனை உணர்ந்து கொண்­டுள்­ளனர் என்றும் வலி­யு­றுத்­தல்கள் இடம் பெற்­றுள்­ளன. எனவே அடி­மைப்­ப­டுத்தல், அடக்­கி­யாதல் என்ற நிலையில் இருந்தும் மாறி சகோ­தர உணர்­வு­டனும் இலங்­கையர் என்ற மனப்­பான்­மை­யு­டனும் சக­லரும் கை கோர்க்க வேண்டும். மலை­யக மக்­களை அடி­மைப்­ப­டுத்த யாரும் முனைதல் கூடாது. அர­சியல், பொரு­ளா­தார சமூக ரீதி­யான புறக்­க­ணிப்­புகள் மற்றும் வேர­றுப்­புகள் கைவி­டப்­பட்டு பொது வரை­ய­றைக்குள் அம்­மக்கள் நோக்­கப்­ப­டுதல் வேண்டும்.

சிந்­தனை வளம் மிக்க சமூகம்

பலர் உணர்வு ரீதி­யாக முடி­வு­களை மேற்­கொள்­வ­தனை நாம் அவ­தா­னித்­தி­ருக்­கின்றோம். எனினும் அறிவு ரீதி­யாக இவர்கள் முடி­வு­களை மேற்­கொள்ள தவறி விடு­கின்­றனர். இதில் பின் விளை­வு­களும் அதி­க­மாக இருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது. ஒரு சமூகம் கல்­விக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கின்ற சமூ­க­மாக இருக்க வேண்டும். அறிவு சார்ந்த விட­யங்­களில் கூடு­த­லான கரி­ச­னையை வெளிப்­ப­டுத்த எந்த ஒரு சமூ­கமும் பின் நிற்கக் கூடாது. கல்­வியை மையப்­ப­டுத்தி செயற்­ப­டு­கின்ற சமூகம் பல்­வேறு நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்­புள்­ளது. உலகில் பின்­தங்­கிய சமூ­கங்கள் பல கல்வி ஈடு­பாட்டின் கார­ண­மாக முன்­னி­லைக்கு வந்­தி­ருக்­கின்­றன. தேசிய நீரோட்­டத்தில் இணைந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதனை மலை­யக சமூ­கமும் ஒரு பாட­மாக படிப்­பி­னை­யாக கொள்­ளுதல் வேண்டும். கல்வி முன்­னேற்ற வழி­வ­கைகள் தொடர்பில் சிந்­தித்து செயற்­ப­டு­தலும் வேண்டும்.

 மலை­ய­கத்தின் கல்வி மேம்­பாடு கருதி புத்­தி­ஜீ­விகள் உரிய திட்­டங்­களை வகுத்து அர­சி­யல்­வா­தி­களின் மூல­மாக நிறை­வேற்ற முனைதல் வேண்டும். அர­சி­யல்­வா­திகள் அர­சுக்கு உரிய அழுத்­தங்­களை வழங்­கு­வதன் ஊடாக இதனை சாத­க­மாக்கிக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். அர­சி­யல்­வா­தி­களின் அர்ப்­ப­ணிப்­பான சேவை, சமூக ஈடு­பாடு என்­பன இங்கு மிகவும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. மலை­யக புத்­தி­ஜீ­விகள் சிலர் மலை­ய­கத்தில் இருந்தும் ஒதுங்கி வாழ்­வ­தையும், மலை­யக அபி­வி­ருத்தி குறித்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­பாடு காட்­டாது இருந்து வரு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இத்­த­கையோர் ஒதுங்கி வாழ்­வதை கைவிட்டு மலை­யக எழுச்சி கருதி தனது ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்­பினை வழங்­கு­வது மிக மிக அவ­சி­ய­மா­கின்­றது.

கல்­வியில் சிறந்து விளங்கும் சமூகம் ஒன்றின் சிந்­தனை மேலா­ன­தா­கவும், வளம் மிக்­க­தா­கவும் இருக்கும் தூர­நோக்கு, இலக்­குகள் என்­பன தெளி­வான தன்­மை­யி­னையும் கொண்­டி­ருக்கும். கல்­வியில் முன்­னேற்றம் காணப்­ப­டா­த­வி­டத்து சிந்­த­னையில் மட்­டு­மின்றி செயற்­பாட்­டிலும் கூட பின்­தங்­கிய வெளிப்­பா­டு­க­ளையே காணக்­கூ­டி­ய­தாக இருக்கும். சமூ­கத்தின் எழுச்­சிக்கு இது நன்மை தர­மாட்­டாது. எண்­ணங்கள் நல்­ல­ன­வாக இருக்­கின்ற போது செயல்­களும் சிறந்­த­ன­வா­கவே அமையும் என்­பதே உண்­மை­யாகும். எனவே எண்­ணங்­களை நல்­ல­ன­வாக அமைத்துக் கொள்­ளுதல் வேண்டும். இந்­நி­லையில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்த சிந்­தனா சக்தி இல்­லாத ஒரு சமு­தாயம் எளிதில் எதேச்­சா­தி­கா­ரத்­துக்குள் வசப்­பட்டு விட வாய்ப்­புள்­ள­தாக மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் கலா­நிதி தீப்­பிக்கா உடு­கம தெரி­வித்­தி­ருக்­கின்றார். எனவே இங்கும் சிந்­தனா சக்­தியின் அவ­சி­யத்­தினை எம்மால் விளங்­கிக்­கொள்ள முடிந்­துள்­ளது.

சிந்­தனா சக்­தியின் அவ­சியம் பற்றி விஜ­ய­சந்­திரன் 

சிந்­தனா சக்தி என்­பது சமுக அபி­வி­ருத்­திக்கு மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது. சிறப்­பான சிந்­தனா சக்தி இல்­லாத நிலை­யா­னது சமூக மழுங்­க­டிப்­பிற்கே உந்து சக்­தி­யாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை. இந் நிலையில் சிந்­தனா சக்­தியின் முக்­கி­யத்­துவம் தொடர்பில் பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பொரு­ளியல் மற்றும் புள்ளி விப­ர­வியல் துறையின் தலைவர் எஸ். விஜ­யச்­சந்­திரன் பின்­வ­ரு­மாறு தனது நிலைப்­பாட்­டினை தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார். இது பற்றி அவர் கூறு­கையில் சிந்­தனா சக்­தியின் அவ­சியம் இன்று நடை­முறை சமூ­கத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தே­யாகும். மலை­யக சமு­கத்­துடன் இதனை ஒப்­பிட்டு நோக்கும் போது சிந்­தனா சக்தி மலை­யக சமூ­கத்தின் அர­சியல் உள்­ளிட்ட கடந்த கால செயற்­பா­டு­களில் எந்­த­ள­விற்கு தாக்கம் செலுத்தி உள்­ளது என்­ப­தனை .ெதளி­வாக விளங்கிக் கொள்ள முடியும். ஒரு சமூகம் அறி­வியல் ரீதி­யாக சிந்­தனை வளத்­துடன் வழி நடத்­தப்­பட வேண்டும். இது இல்­லாத பட்­சத்தில் நீண்­ட­கால நோக்­கி­லான சமூகப் பார்வை இல்­லாத நிலை காணப்­படும்.

இதேவேளை சிந்­தனா சக்தி இல்­லா­த­வர்­களில் வழி­காட்­டலில் சமூகம் வழி­ந­டத்தப் படு­கையில் குறுங்­கால இலா­பங்­க­ளையும் குடும்­ப­நலன் மற்றும் சுய­தே­வை­களைக் கொண்­ட­தாக அவரின் தலை­மைத்­துவ பண்­புகள் காணப்­படும். சமூகம் சிந்­தனா சக்­தி­யில்­லாத நிலையில் தலை­வரின் வாக்கை தெய்வ வாக்­காக கருதிக் கொண்டு தலை­வரே எமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்றுக் கோடுக்கக் கூடி­யவர் என்று முழு­மை­யாக நம்பி கட்­டுப்­பட்டு தலை­வரின் பிழை­யான வழி­ந­டத்­தல்­க­ளுக்கு உட்­ப­டு­கின்ற நிலைமை ஏற்­படும். மலை­யக சமூகம் சிந்­தனா சக்­தி­யிலே பெரும் வளர்ச்­சி­ய­டை­யாத ஒரு சமூகமாகவுள்ளது. மேலும் அறிவியல் ரீதியாக பாரிய எழுச்சியினைக் கொண்ட ஒரு சமூகமாகவும் இல்லாதுள்ளது. இந்நிலையில் 1989 இல் இருந்து பின் வந்த 20 வருட காலத்தில் ஓரளவு அறிவியல் ரீதியான சமூக வழிநடத்தல் இருந்துள்ளது. காலஞ்சென்ற மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனின் காலத்தில் படித்தவர்களின் பங்கேற்பு என்பது அதிகமாகவே இருந்தது. மலையக மக்களின் உரிமைகள், தனித்துவம், சமூக எழுச்சி என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு இக் காலப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டமை தெரிந்த விடயமாகும். சந்திரசேகரனின் இலக்கு நீண்டகால நோக்கில் அமைந்திருந்தது. 2010 ஆம் ஆண்டின் பின்னர் அறிவியல் ரீதியான வழிநடத்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளதையும் கூறியாதல் வேண்டும்.

இக்காலப்பகுதி மலையக அரசியல் என்பது குறுகிய இலக்குகள், சமூக நல விடயங்கள் என்பவற்றை மையப்படுத்தியதாக உள்ளது. உரிமை சார்ந்த சமூக அந்தஸ்துடன் கூடிய ஒரு பார்வையை காண முடியவில்லை. இந்நிலை மலையக அரசியல் தலைமைகளிடையே நிலவும் போட்டிகளை நோக்குகின்ற போது ஒரு எதேச்சாதிகார தன்மையினை காணக்கூடியதாக உள்ளது. ஜனநாயகத் தன்மை இல்லாத ஒரு அரசியல் செயற்பாடுகளும் தனி நபர் தீர்மானத்தை மையப்படுத்திய நிலைமைகளும் தென்படுகின்றன. தலைவனின் எழுச்சி கட்சியின் நிலைமையில் செல்வாக்கு செலுத்துவதாக கருதப்படுகின்றது. சமூகம் சிந்தனா சக்தியுடனும், அறிவியல் மேம்பாட்டுடனும் விளங்கும் போது அங்கு ஜனநாயகப் பண்புகள் தோற்றம் பெறும். கீழ் நிலை தலைவர்கள் உள்ளிட்ட சகலரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் இடம்பெறும். எனினும் எதேச்சதிகார நிலையில் தலைவன் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரி என்ற நிலையில் தலைவனுக்கு துதி பாடுவது இடம்பெறும். பல சமூகத்தவர்களின் அரசியலிலும் நாம் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.

-- எதேச்சாதிகார அரசியல் வர்க்க சமூகம் தனது நீண்ட கால அடைவுகளை இழக்கும். தனிநபர் வளர்ச்சி மேலோங்குமே தவிர சமூக இலக்குகளோ அல்லது அடைவுகளோ மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். சமூக உரிமைகளை இழந்து அழிவுப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என்று விஜயசந்திரன் தெரிவித்தார். மலையக சமூகம் சிந்தனா சக்தியையும், அரசியல் மேம்பாடும் காண்பதால் நன்மைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

துரைசாமி நடராஜா.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.