Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை

Featured Replies

இலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை

 

இன­வா­த­மும், மதச் செருக்­கும் இந்த நாட்­டின் சமூக பொரு­ளா­தார முன்­னேற்றத்துக்கு இரட்­டித்த சாபக்­கே­டாய் இருந்து வந்­து­ள்ளன.

நாட்­டின் கடந்த நூற்­றாண்டு கால வர­லாற்றை நோக்­கு­வோ­மா­யின், இந்த நிலை­மை­யா­னது ஆரம்ப கட்­டத்­தி­லேயே தோற்­றம் பெற்று, வெவ்­வேறு வடி­வங்­க­ளில் இற்­றை­வரை நிலவி வரு­கி­றது, 1948ஆம் ஆண்டு நாடு சுதந்­தி­ர­ம­ டைந்­ததை அடுத்து, குறிப்­பாக கொரியா நாட்­டில் நடை­பெற்ற போர் மற்­றும் சீனா­வு­டன் செய்து கொண்ட இறப்­பர்- – அரசி ஒப்­பந்­தம் போன்ற நிலை­மை­கள் வாயி­லாக, பொரு­ளா­தார வளர்ச்சி அறி­கு­றி­கள் தென்­பட்­டன.

எனி­னும், பின்பு சிங்­கள மேலா­திக்­கச் சிந்­த­னை­கள் தோன்­றி­ய­தன் கார­ண­மாக, நிலை­மை­கள் தொடர்ச்­சி­யாக மோச­ம­டைந்து வந்­துள்­ளன.

குறிப்­பாக, 1956ஆம் ஆண்டுப் பொதுத் தேர்­தல் நெருங்­கிய சந்­தர்ப்­பத்­தில் ஐ.தே.கட்­சி­யும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யும் மொழிப்­பி­ரச்­சி­னை­யைக் கையி­லெ­டுத்து மேற்­கொண்ட போட்டா போட்­டி­யில் ஸ்ரீ.ல. சு. கட்சியின் தலை­வர் எஸ். டபிள்யூ. ஆர் .டீ. பண்­டா­ர­நா­யக்க, தனது ஆரம்ப கால இரு அரச கரும மொழிக் கொள் கையைக் காற்­றில் பறக்­க­விட்டு, ‘24 மணித்­தி­யா­லத்­தில் சிங்­க­ளம் மட்­டும்’ என்ற பதா­கை­யின் கீழ் தேர்­தல் பரப்புரை முயற்­சி­யில், ‘பஞ்­ச­மகா பல­வே­கய’ என்ற போர்­வை­யில் விவ­சா­யி­கள், ஆசி­ரி­யர்­கள், தொழி­லா­ளர்­கள், சம­யத் தலை­வர்­கள், ஆயுள்­வேத வைத்­தி­யர்­கள் போன்ற சக்­தி­களை அணி­தி­ரட்டி தேர்­தல் களத்­தில் இறங்கி வெற்­றி­யீட்­டி­னார்.

பத­விக்கு வந்து 2 மாத காலத்­தி­லேயே, நாடா­ளு­மன்­றத்­தில் ‘சிங்­க­ளம் மட்­டும்’ சட்ட மூலத்­தைக் கொண்டு வந்­தார். தமிழ்­மொ­ழி­யைப் புறக்­க­ணித்­தது சாதா­ரண நீதி நியா­யத்­துக்கு முர­ணா­னது மட்­டு­மல்­லா­மல், அன்று நடை­மு­றை­யில் இருந்த சோல்­பரி யாப்­பின் 29 ஆவது பிரி­வுக்கு குந்­த­க­மா­னது என்று தமிழ்த் தலை­வர்­கள் வாதா­டி­னர்.

அதே வேளை, லங்கா சம­ச­மா­ஜக் கட்சி உள்­ளிட்ட இட­து­சா­ரி­கள், அதனை வன்­மை­யாக எதிர்த்து ‘‘இரு மொழி­கள், ஒரு நாடு; ஒரு மொழி இரு நாடு­கள்’’ என்ற கருத்தை முன்­வைத்­த­தோடு, அது எதிர்­கா­லத்­தில தமி­ழர் தரப்­பி­னரை ஒரு தனி­நாட்­டுக் கோரிக்­கைக்கு இட்­டுச் செல்­லும் என்­றெல்­லாம் கார­சா­ர­மான வாதங்­களை முன்­வைத்­த­னர். பண்­டா­ர­நா­யக்க அந்த வேளை­யில் பத­வி­மோக சந்­தர்ப்பவாதத்­தில் ஊறி­யி­ருந்­த­மை­யால், மேற்­கு­றித்த எதிர்ப்­பு­கள் எல்­லா­வற்­றை­யும் புறந்­தள்ளி விட்­டார்.

தனிச் சிங்கள சட்டத்தை எதிர்க்க தமிழ் அரசுக் கட்சி முடிவு

எனவே, தமி­ழ் அரசுக் கட்­சித் தலை­வர் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கம் பரந்த அள­வி­லா­ன­தொரு எதிர்ப்பு இயக்­கத்தை முடுக்கி விடப்­போ­வ­தாக பகி­ரங்­க­மாக அறிக்கை விடுத் தார். ஆனால் அத­னைத் தடுக்­கும் நோக்­கில், செல்­வ­நா­ய­கத்­தோடு பேச்சு நடத்­து­வ­தற்கு பண்­டா­ர­நா­யக்க அழைப்பு விடுத்­தார். அதனை அடுத்து நடந்­தே­றிய கலந்­து­ரை­யா­டல்­க­ளின் அடிப்­ப­டை­யில் 1957ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்­டது தான் பண்டா –- செல்வா ஒப்­பந்­தம் ஆகும்.

அந்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதை அடுத்து, தாம் உத்­தே­சித்­தி­ருந்த சத்­தி­யாக்­கி­ர­கப் போராட்­டத்தை கைவி­டப் போவ­தாக செல்­வ­நா­ய­கம் அறி­வித்­தி­ருந்­தார். குறித்த ஒப்­பந்­தத்தை ஏறத்­தாழ ஒரு வருட கால­மாக ஆங்­காங்கே சிங்­கள மக்­கள் மத்­தி­யில் பண்­டா­ர­நா­யக்கா விளக்கி வந்­தார். அந்­தச் சந்­தர்ப்­பங்­க­ளில், தாம் பௌத்த மதத்­தில் அலா ­தி­யான பற்­றுள்­ள­வர் என்­றும் எடுத்­து­ரைத்து வந்­தார். இருந்த போதும், ஒப்­பந்­தத்­துக்கு எதி­ராக, குறிப்­பாக பௌத்த துற­வி­கள் மத்­தி­யி­லி­ருந்­து­தான், எதிர்ப்­புக்­கள் கிளம்­பின.

ஜே.ஆர். ஜய­வர்த்­த­ன­வின் பாத யாத்­திரை

அத்­தோடு குறித்த அந்த ஒப்­பந்­தத்தை எதிர்த்து, ஐ.தே. க வின் மறைந்த தலை­வர். ஜே.ஆர் ஜய­வர்த்­தன, கண்டி நோக்கி ஒரு பாத யாத்­திரை மேற்­கொண்­டி­ருந்­தார். எவ்­வா­றா­யி­னும் , தலைமை அமைச்சர் பண்­டா­ர­நா­யக்­கா­வின் ஆலோ­ச­னை­யின் பெய­ரில், ஸ்ரீ.ல.சு.க. நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வி­ருந்த எஸ். டீ. பண்­டா­ர­நா­யக்­கா­வி­னால் ஜய­வர்த்­த­ன­வின் கண்டி யாத்­திரை இம்­புல்­கொ­ட­வில் வைத்­துத் தடுத்து நிறுத்­தப்­பட்­டது. இருப்­பி­னும் ஜய­வர்த்­த­ன­வின் முயற்சி வெற்­றி­யீட்­டு­வ­தற்கு பௌத்த துற­வி­கள் தொடுத்த போராட்­ட­மும் கைகொ­டுத்­தது.

அதா­வது, 1958ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 9ஆம் திக­தி­யன்று காலை 9 மணி­ய­ள­வில், நூற்றுக் க­ணக்­கான துற­வி­கள் திரண்டு சென்று அந்த வேளை­யில் பண்­டா­ர­நா­யக்க வசித்து வந்த ‘றொஸ்­மிட் பிளேஸ்’ இல்­லத்தை முற்­று­கை­யிட்டு பண்டா – செல்வா ஒப்­பந்­தம் கிழித்­தெ­றி­யப்­பட வேண்­டும் என்று வற்புறுத்தி ஆர்ப்­பாட்­டம் செய்­த­னர்.

ஆனால், பண்­டா­ர­நா­ய­கா­விற்கு பக்­க­ப­ல­மாக ஒரு சில ஸ்ரீ.ல.சு.க உறுப்­பி­னர்­கள் தானும் முன்­வ­ர­வில்லை. எனவே, பெளத்த துற­வி­க­ளது நிர்ப்­பந்­தத்­துக்கு அவர் அடி­ப­ணிந்தபடி­யால், அந்த இரு தரப்பு ஒப்­பந்­தம் ஒரு­த­லைப் பட்­ச­மாக கிழித்­தெ­றி­யப்­பட் டது.

பண்டா – செல்வா ஒப்­பந்­தம் ஒரு கூட்டாட்சி முறை­மையை உள்­வாங்­கவோ, சிங்­க­ளம் மட்­டும் சட்­டத்­தில் எது­வித மாற்­றம் செய்­யவோ இட­ம­ளிக்­க­வில்லை. ஆனால் அதே நேரம் வட­மா­கா­ணத்­துக்கு ஒரு பிர­தேச சபை­யும், கிழக்கு மாகா­ணத்­துக்கு இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட பிர­தேச சபை­க­ளும் அமைப்­ப­தற்கு அந்த ஒப்­பந்­தம் மூலம் இட­ம­ளிக்­கப்­பட்­டது.

அத்­தோடு விவ­சா­யம், கூட்­டு­றவு, காணி, காணி அபி­வி­ருத்தி, குடி­யேற்­றம், கல்வி, சுகா­தா­ரம், கைத்­தொ­ழில், மீன்­பிடி போன்ற 13 துறை­க­ளுக்­கான அதி­கா­ரங்­கள் அந்­தச் சபைகளுக்கான ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன.

அந்த வகை­யில் குடி­யேற்­றத்­திட்­டங் க ளுக்­கான பய­னா­ளி­களை தெரிவு செய்­யும் உரி­மை­யும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. மத்­திய அர­சாங்­கம் ஒரு குறிப்­பிட்ட தொகை நிதியை ஒதுக்­கு­வ­தோடு, வரி­வி­தித்­தல் , கடன்­பெ­று­தல் ஆகிய அதி­கா­ரங்­க­ளும் பிர­தேச சபை­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் பின்னர் நடந்­ததுதான் என்ன? இன­வெ­றிச் சக்­தி­க­ளால் ஒரு சில நாள்­க­ளில் தமி­ழ­ருக்­கெ­தி­ரான இனக்­க­ல­வ­ரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. அந்­தக்­க­ல­வ­ரம் சம்­பந்­த­மான நூல் ஒன்றை எழு­தி­ய­வ­ரா­கிய அன்­றைய ஆங்­கில ஊட­கத்­துறை ஜாம்­ப­வான், ராசி வித்­தாச்சி ‘‘அது மனி­த­னால் மனி­த­னுக்கு இழைக்­கப்­பட்ட மனித ஈனம்’’ என்று கூறி வைத்­தார்.

கல­வ­ரம் தீவி­ர­ம­டைந்த நிலை­யில் சில புத்­தி­ ஜீ­வி­கள் சென்று அவ­ச­ர­கால நிலை­யை அறிவிக்குமாறு விடுத்த வேண்­டு­கோளைப் பண்­டா­ர­நா­யக்கா நிரா­க­ரித்து விட்­டார். மாறாக, நாட்டு மக்­க­ளுக்கு அன்று வானொலி மூலம உரை­யாற்­றி­னார். அந்த உரை­யா­னது எரி­யும் நெருப்­பில் எண்­ணெய் ஊற்­றி­யது போன்று இருந்­தது. ‘blowing raw oxygen into a raging fire’ என்று வித்­தாச்சி அத­னைப் பதிவு செய்­தி­ருந்­தார்.

அதா­வது, இனக்­க­ல­வ­ர­மா­னது 1958ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி வெடித்­த­தா­யி­னும், நுவ­ரெ­லியாவின் முன்னாள் மேயர் டீ.ஏ சென­வி­ரத்ன உள்­ளிட்ட சிலர் மட்­டக்­க­ளப்­பில் 1958 மே மாதம் 25ஆம் திகதி கொலை செய்­யப்­பட்­ட­தன் கார­ண­மா­கவே இனக்­க­ல­வ­ரம் வெடித்­தது என்று மறுநாள் 26ஆம் திகதி ஆற்­றி­ய­அந்த உரை­யில் பண்­டா­ர­நா­யக்கா குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஆனால் சென­வி­ரத்ன கொலை செய்­யப்­பட்­ட­தற்கு தனிப்­பட்ட பகையே கார­ணம் என்று செல்­வ­நா­ய­கம் 1958 ஜூன் 4ஆம் திக­தி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் சுட்­டிக்­காட்­டி ­யி­ருந்­தார். அது எவ­ரொ­ரு­வ­ரா­லும் மறுத்­து­ரைக்­கப்­பட வில்லை.

டட்லி – செல்­வ­நா­ய­கம் ஒப்­பந்­தம்

இரண்­டா­வ­தாக, 1965ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 24ஆம் திகதி தலைமை அமைச்­சர் டட்லி சேன­நா­யக்­கா­வுக்­கும் தமி­ழ் அரசுக்­கட்­சித் தலை­வர் செல­வ­நா­ய­கத்­துக்­கும் இடை­யில் இடம்­பெற்ற பேச்­சுக்­க­ளின் வாயி­லாக மேற்­கு­றித்த ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இது பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­தைக் காட்­டி­லும் குறைந்த பட்ச உள்­ள­டக்­கத்­தையே கொண­டி­ருந்த போதி­லும், அதற்­கெ­தி­ரா­க­வும் தென்­னி­லங்­கை­யில் குறிப்­பாக சிங்­கள பௌத்த வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து பலத்த எதிர்ப்­புக்­கள் கிளம்­பின. எனவே, உட­ன­டி­யா­கவே டட்லி சேன­நா­யக்கா ஒப்­பந்­தத்தை தூக்கி எறி­வ­தற்கு நெடு­நே­ரம் எடுக்­க­வில்லை.

ஒப்­பந்­தத்­தில் கீழ்க்­கா­ணும் விட­யங்­கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

1. வடக்கு கிழக்­கு­மா­கா­ணங்­க­ளில் தமிழ்­மொ­ழி­யில் நிர்­வா­கம் நடத்­தப்­ப­டும்.
2. வடக்கு கிழக்­கில் நீதி விசா­ர­ணை­க­ளும் பதி­வு­க­ளும் தமிழ் மொழி­யில் செய்­யப்­ப­டும்.
3. மாவட்ட சபை­கள் அமைக்­கப்­பட்டு அவற்­றுக்­குப் பார­தீ­னப்­ப­டுத்த வேண்­டிய விட­யங்­க­ளும் அதி­கார எல்­லை­க­ளும் பரஸ்­ப­ரம் பேசித்­தீர்க்­கப்­ப­டும்.
4. அதே நேரத்­தில் நாட்­டின் நல­னைக் கருத்­திற்­கொண்டு மத்­திய அர­சி­னால் சிற்­சில உத்­த­ர­வு­கள் மாவட்ட சபை­க­ளுக்கு விடுக்­க­ப்ப­டும், மேலும் வடக்­குக்­கி­ழக்­கில் குடி­யேற்­றத்­திட்டங்­க­ளின் கீழ் காணி­கள் பகி­ரப்­ப­டும் விட­யத்­தைப்­பொ­றுத்­த­ வரை முத­லா­வ­தாக, அந்தந்த மாவட்­டங்­க­ளில் காணி அற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும். இரண்­டா­வ­தாக, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும். மூன்­றா­வ­தாக நாட்­டி­லுள்ள ஏனைய மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும். அந்த வகை­யி­லும், வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ்­பி­ர­ஜை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும்.

ஆக, மேற்­படி ஒப்­பந்­தங்­க­ளில் ஒன்­றை­யா­வது நடை­மு­றைப்­படுத்­து­வ­தற்கு அவ்­வே­ளைய அரசு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தால், 26 வருட காலப் போரொன்று நிச்­ச­ய­மாக தவிர்க்­கப்­ப­டக் கூடி­ய­தாக இருந்­தி­ருக்­கும். உண்­மை­யில் தமி­ழர் ஆயு­தப் போராட்­ட­மா­னது, ஒரு இறு­தித்­தெ­ரி­வா­கவே மேலெ­ழுந்­ததுதான் யதார்த்­தம் என்­பதை எவ­ரும் மறுத்­திட முடி­யாது. 1983 (கறுப்பு ஜுலை) படு மோச­மான இனக்­க­ல­வ­ரமே அதற்கு உந்து சக்­தி­யாக அமைந்­தது.

கற்­றுக்­கொண்ட பாடங்­கள் மற்­றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு மறைந்த முன்­னாள் சட்­டமா அதி­பர் சீ.ஆர்.டி சில்வா தலை­மை­யி­லான இந்த ஆணைக்­குழு 2010ஆம் ஆண்டு அன்­றைய அரச தலைவர் மகிந்தவி­னால் நிய­மிக்­கப்­பட்­டது.

ஒரு வருட கால­மாக விசா­ர­ணை­கள் நடத்­தி­வந்த இந்த ஆணைக்­குழு, நாடு சுதந்­தி­ர­ ம­டைந்த காலம் முதல் பத­வி­வ­கித்து வந்த எந்­த­வொரு அர­சாங்­க­மும் தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர்த்­த­முள்ள, நிலை­யான அர­சி­யல் தீர்வு காணத்­த­வ­றி­ய­தா­லேயே, கால­த்துக்­குக் காலம் குருதி சிந்­தும் கல­வ­ரங்­க­ளும், இறு­தி­யில் முழு அள­வி­லான போரும் வடக்கு கிழக்­கில் நடை­பெற நேர்ந்­த­தா­கத் தனது அறிக்­கை­யில் குறிப் பிட்­டி­ ருந்­தது. அத்­தோடு, மேலும் காலந்­தாழ்த்­தாது தமி­ழர் பிரச்­சி­னைக்கு ஒரு இறு­தி­யான தீர்வு காணப்­பட வேண்­டும் என்­றும் பரிந்­துரை செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இற்­றை­வரை அது கிடப்­பி­லேயே போடப்­பட்­டி­ருக்­கி­றது. உண்­மை­யில் ,ஆணைக்­கு­ழு­வி­னால் ஒரு­வ­ரு­ட­கா­லத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த இடைக்­கால அறிக்கை தானும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று ஆணைக்­குழு அதி­ருப்தி தெரி­வித்­தி­ருந்­தது.

சில ஆய்­வா­ளர்­கள் முன்­வைத்­து­வ­ரும் மேலோட்­ட­மான ஆய்­வு­கள்.

பல்­வேறு அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள், நுனிப்­புல் மேயும் பாணி­யில் ஆய்­வு­கள் செய்­வ­தோடு, போர் ஆரம்­ப­மா­வ­தற்கு தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் தான் அடிப்­ப­டைக்­கா­ர­ணம் என்ற முடி­வுக்கு வந்து விடு­கின்­றார்­கள். இவ்­வாறு மக்­கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­வது கண்­ட­னத்­துக்கு உரி­ய­தா­கும்.

மூன்று தசாப்த கால­மாக தமிழ்த் தலை­மை­கள் நடத்­திய போராட்­டங்­கள் விழ­லுக்­கி­றைத்த நீரா­கிப் போன­தன் கார­ண­மா­கவே, தமிழ் இளை­ஞர்­கள் பொறு­மை­யி­ழந்து களத்­தி­லி­றங்கி, பின்பு ஆயு­தப் போராட்­டத்­துக்கு தள்­ளப்­பட்­ட­னர் என்­பது மேற்­கு­றித் ஆய்­வா­ளர்­க­ளால் மூடி மறைக்­கப்­ப­டும் விட­ய­மா­கவே உள்­ளது.

மேலும், புலம் பெயர் தமி­ழர்­கள் இலங்­கைக்கு களங்­கம் கற்­பிக்­கி­ன்ற­னர் என்று குற்­றம் சுமத்­து­ப­வர்­க­ளும் உள்­ள­னர்.

காலங்­கா­ல­மாக அரங்­கேற்­றப்­பட்டு வந்த இனங்­க­ல­வ­ரங்­கள் எல்­லா­வற்­றுக்­கும் உச்­சக்­கட்­ட­மாக 1983 ஆம் ஆண்­டில் போர் ஆரம்­பித்த காலத்­தி­லும் உயிர் பாது­காப்­புக் கருதி பெரு­வா­ரி­யான தமிழ் மக்­கள் நாட்டை விட்டு ஓடி­னர் என்­பதை முற்­றி­லும் மறந்து விட்­ட­வர்­கள் அல்­லது மறந்­தது போல் பாசாங்கு பண்­ணு­ப­வர்­கள் தான் அவர்­கள், மற்­றும், பெருந்­தொ­கை­யான பொது­மக்­க­ளும் ஆயு­தப்­ப­டை­யி­ன­ரும் உள்­நாட்டுப் போரில் மாண்­ட­னர்.

மேலும், போர் தொடர்­பான செல­வீ­னம் கொஞ்ச நஞ்­ச­மல்ல, அது ஏறக்­கு­றைய 200 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் தொகை ஆகும் என்று இலங்­கை­கான முன்­னாள் இந்­தி­யத் தூது­வர் சிவ் சங்­கர் மேனன் மேற்­கொண்ட ஆய்­வின் மூலம் தெரிய வந்­தது.

எனவே, நல்­ல­றி­வும் நற்­சிந்­த­னை­யும் கொண்ட எந்­த­வொரு பிர­சை­யா­ வது, முழு நாட்­டுக்­குமே கடும் அழி­வு­க­ளுக்கு வழி­ச­மைத்த தமிழ்த் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிலை­யான அர­சி­யல் தீர்­வுத் திட்­டம் அர­சி­யல் யாப்­பில் உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தற்கு தடைக்­கல்­லாக இருக்­கக் கூடாது.

2015 ஜன­வ­ரி­யி­லும் ஓகஸ்­டி­லும் நடத்­தப்­பட்ட அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளின்போது இன்­றைய தேசிய ஒற்­றுமை நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லுள்ள இரு பெரிய கட்­சி­க­ளா­லும் அளிக்­கப்­பட்ட வாக்கு­று­தி­களை எவ­ரா­லும் சரி மூடி மறைத்­து­விட முடி­யாது.

இன்­னொரு முக்­கி­ய­மான விட­யம் என்­ன­வென்­றால், தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­கள் எண்­ணிக்­கை­யில் சிறு­பான்­மை­யி­ன­ரா­யி­னும், அவர்­கள் இந்த நாட்டு மக்­க­ளோடு மக்­க­ளா­க­வுள்­ளன இறை­மை­யுள்ள பிர­சை­கள் என்ற யதார்த்­தத்தை பௌத்த பீடங்­களோ, வேறு எந்­தத் தரப்­பி­னரோ மறந்து விடக்­கூ­டாது, அத்­தோடு, அவர்­கள் பார­தீ­னப்­ப­டுத்த முடி­யாத தமது அதி­கா­ரப்­ப­கிர்வு உரி­மையை வேண்டி நிற்­கின்­ற­னரே தவிர, வேறு ஏதா­வது சலு­கை­க­ளுக்கோ அல்­லது நன்­கொ­டை­க­ளுக்கோ கையேந்தி நிற்­க­வில்லை என்­பது எல்­லோ­ரா­லும் நிதா­ன­மாக புரிந்து கொள்­ளப்­பட வேண்­டிய ஒன்­றா­கும்.

http://uthayandaily.com/story/15094.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.