Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலட்சங்களில் புரள்கின்ற மாகாணசபை உறுப்பினர்கள்

Featured Replies

இலட்சங்களில் புரள்கின்ற மாகாணசபை உறுப்பினர்கள்

வடக்கு மாகா­ண­சபை என்­பது, அதன் உறுப்­பி­னர் கள் பல அணி­க­ளா­கப் பிள­வு­பட்டு தமக்­குள் மோதிக் கொள்­ளு­மொரு இடம் என்­ப­தற்கு அப்­பால், அதன் உறுப்­பி­னர்­க­ளுக்­குத் தார­ள­மாக பணத்தை வாரி வழங்கும் ஒன்று என்பதும் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

தீர்­வை­யற்ற வாகன இறக்­கு­ம­திக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தின் மூல­மாக வடக்கு மாகா­ண­ சபை உறுப்­பி­னர்­கள் பல இலட்­சம் ரூபாய்­க­ளைச் சம்­பா­தித்­துள்­ள­னர்.

இதே­வேளை கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டமை போன்று சமமான சலுகையை வழங்­கு­மாறு நிதி­ய­மைச்­ச­ரி ­டம் அவர்­கள் மனு­வொன்­றை­யும் கொடுத்துள்ளனர்.

இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது, அடுத்த மகா­ண­ச­பைத்­தேர்­த­லில் வேட்­பா­ளர் நிய­ம­னம் பெற்­றுக் கொள்­வ­தில் கடு­மை­ யான போட்டி நில­வு­ மென்­பதை இப்­போதே கூறிக்­கொள்­ள­ மு­டி­யும். ஏனென்­றால் பெரும் தொகைப் பணத்­தை இலேசா கச் சம்­பா­திப்­ப­தற்கு எவ­ருக்­குத்­தான் மனம் இல்­லா­மல் இருக்­கும்?

தமி­ழ் அரசுக் கட்­சி­யை நிறு விய தலை­வ­ரான தந்தை செல்வா பொது வாழ்­வில் இறங்­கித் தமது சொத்­துக்­க­ளை­யெல்­லாம் இழந்து இறு­திக் காலத்­தில் பெரும் நிதி நெருக்­க­டியை எதிர் கொண்­டார்.அவ­ரி­டம் சொந்த வாக­னம் கூட இருக்­க­வில்லை.

வாட­கைக்கு அமர்த்­திய வாக­னங்­க­ளில் சென்று மக்­கள் பணி­களை ஆற்றி வந்­தார். அவர் விரும்­பி­யி­ருந்­தால் அர­சி­ட­மி­ருந்து சலுகை விலை­யில் வாக­ன­மொன்­றைப் பெற்­றுக் கொண்­டி­ருக்க முடி­யும். ஆனால் அவர் தமது தன்­மா­னத்தை இழப்­ப­தற்கு ஒரு­போ­துமே விரும்­பி­ய­தில்லை.

மக்­கள் கஷ்­டப்­ப­டும்­போது தாம் மட்­டும் சொகுசு வாக­னத்தைப் பயன்படுத்துவது நியா­ய­மல்ல என்­பதே செல்­வா­வின் கொள்­கை­யாக அமைந்­தி­ருந்­தது. செல்­வா­வின் எளி­மைக்­கும் நேர்­மைக்­கும் ஓர் உதா­ர­ணத்­தைக் குறிப்­பி­டு­வார்­கள். செல்­லையா குமா­ர­சூ­ரி­யர் தபால் அமைச்­ச­ராக இருந்­த­போது இடம்­பெற்ற சம்­ப­வம் அது.

ஒரு­நாள் தபால் அமைச்­சின் அலு­வ­ல­கப் படி­க­ளில் தந்தை செல்வா ஏறி வந்து கொண்­டி­ருப்­பதை அமைச்­சர் குமா­ர­ சூ­ரி­யர் மேல் மாடியிலிருந்து கண்டு விட்­டார். அவர் உட­ன­டி­யா­கப் படி­க­ளில் இறங்­கிச் சென்று ‘‘சேர், நீங்­கள் சிர­மப் பட்டு ஏன் இங்கு வந்­தீர்­கள்? எனக்கு ஓர் தொலை­பேசி அழைப்பை விடுத்­தி­ருந்­தால், நானே வந்து உங்­க­ளைச் சந்­தித்­தி­ருப்­பேன்’’ எனக்­கூ­றி­னார்.

அதற்­குச் செல்வா ‘‘இல்லை… இல்லை… தாங்­கள் ஓர் அமைச்­ச­ராக உள்­ளீர்­கள். நானோ ஒரு சாதா­ரண நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர். அத­னால் நான் உங்­களை நாடி வரு­வதே நியா­ய­ மா­னது’’ என்­றார். செல்வா ஏதோ தமது சொந்த விட­ய­மா­கத்­தான் தம்­மைக் காண வந்­துள்­ளார் என நினைத்த குமா­ர­சூ­ரி­யர் ‘‘சேர்…. நான் உங்­க­ளுக்கு என்ன உத­வி­ செய்ய வேண்­டும்?’’ எனக்­கேட்­டார்.

‘‘அமைச்­சரே, தாங்­கள் எனக்கு ஒன்­றுமே செய்ய வேண்­டாம். மக்­க­ளுக்­குத் தேவை­யான ஓர் உத­வி­யைத் தங்­க­ளி­ட­மி­ருந்து பெறவே இங்கு வந்­துள்­ளேன்’’ எனப் பதி­ல­ளித்த செல்வா, தமது தொகு­தி­யில் உள்ள மிக­வும் பின்­தங்­கிய ஓர் இடத்­தைக் குறிப்­பிட்டு அங்கு வசிக்­கின்ற மக்­கள் தமது அஞ்­சல் தேவை­க­ளைப் பெறு­வ­தில் அதிக சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். எனவே அங்கு ஓர் உப அஞ் சல் அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­குத் தாங்­கள் உதவ வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­திக் கேட்­டுக் கொண்­டார். அமைச்­சர் தந்­தை­யின் பெருந்­தன்மை கண்டு திகைத்து நின்­றார்.

ஆனால் இன்று தந்தை செல்­வா­வின் வழி­யில் செல்­வ­தா­கக் கூறிக் கொள்­ப­வர்­க­ளும், ஏனை­ய­வர்­க­ளும் தமது தீர்­வை­யற்ற வாகன அனு­ம­திப்­பத்­தி­ரத்­தின் கொள்வனவு தொகை மட்டம் மற்றும் வரிச் சலுகை என்பவற்றை அதி­க­ரிக்­கு­மாறு கேட்­டுக் கொழும்­பில் உள்ள நிதி­ய­மைச்­சின் அலு­வ­ல­கப் படி­க­ளில் காத்து நிற்­கின்­ற­னர்.

தமக்­குள் முட்டி மோதிக் கொள்­ளும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள்

போரால் மிக­வும் பாதிக்­கப்­பட்ட பகு­தி­யாக வடக்கு மாகா­ணம் காணப்­ப­டு­கின்­றது. வடக்­கில் வாழ்­கின்ற மக்­கள் போர் ஓய்ந்து எட்டு ஆண்­டு­கள் நிறை­வ­டைந்த நிலை­யி­லும், தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காத நிலை­யில் அவ­லங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கடந்த 2013ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் உரு­வாக்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை­யா­லும் இந்த மக்­க­ளின் பிரச்­சி­னைக ளுக்­குத் தீர்வு காண­மு­டி­ய­வில்லை. மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு காண­வேண்­டிய மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் சிறிய கருத்து வேறு­பா­டு­க­ளுக்­கும் தமக்­குள் மோதிக் கொண்டு மக்­க­ளை­யும் பிள­வு­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

தமது வசதி வாய்ப்­புக்­களை பெருக்­கிக் கொள்­ளும் நோக்­கில் செயற்­ப­டுகின்றனர் உறுப்­பி­னர்­கள்

முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வா­னவர்கள் ஒரு புற­மும், எதி­ரா­ன­வர்­கள் மறு­பு­ற­மும் நின்று கொண்டு போட்டி போட்­டுச் செயற்­ப­டு­கின்­ற­னர். இவர்­கள் மக்­க­ளைப் பற்­றிச் சிந்­திப்­ப­தா­ கத் தெரி­ய­வில்லை. ஆனால் தத்தமது சொந்த நலன்கள் பற்றி நன்­றா­கவே சிந்­திக்­கின்­ற­ னர். தமக்கு வழங் கப்­ப­டு­கின்ற வேத­னம் போதா­தெ­னக் கு­றைப்­பட்­டுக் கொள்­கின்­ற­னர்.

மாகா­ண­சபை அமர்­வு­க­ளின் போது தமக்கு வழங்­கப்­ப­டு­கின்ற உணவு மற்­றும் சிற்­றுண்­டி­கள் தொடர்­பாக முறைப்­பாடு தெரி­விக்­கின்­ற­னர். தாமும் அமைச்­சர் பதவி யொன்றைப் பெற்று விட வேண்­டும் என்­ப­தற்­காக முத­ல­மைச்­ச­ரின் கடைக்­கண் பார்­வைக்­காக ஏங்கி நிற்­கின்­ற­னர்.

தற்­போது தீர்­வை­ குறைந்த அனு­ம­திப் பத்­தி­ரங்­களை விற்று இலட்­சக்­க­ணக்­கில் பணத்­தைச் சுருட்­டிக் கொண்ட போதி­லும், அதில் திருப்­தி­ய­டை­ யாது மேல­திக நிதியை வழங்­கு­மாறு கோரி நிற்­கின்­ற­னர். உண்­மை­யில் இவர்­கள் அதிர்ஷ்­ட­சா­லி­கள்­தான். எது­வுமே செய்­யாது, உடம்மை வருத்­தா­மல் பல இலட் சம் ரூபாய்­க­ளைச் சம்­பா­திப்­பது என்­பது சாதா­ரண விட­ய­மல்ல.

அடுத்த ஆண்டு மாகா­ண­ச­பைத்­தேர்­தல் இடம்­பெ­றும் போது மக்­க­ளி­டம் வாக்­குக் கேட்டு இவர்­கள் தான் வந்து நிற்­கப் போகின்­றார்­கள். மேடை­க­ளில் நின்று முழங்­கப் போகின்­றார்­கள். மண­லைக் கயி­றா­கத்­தி­ரிப்­போம், மலை­க­ளைப் புரட்­டிப் போடு­வோம் என்­றெல்­லாம் வீர வச­னங்­கள் பேசப் போகின்­றார்­கள். ஆனால் மக்­கள் இனி­யும் இவர் களை நம்­பு­வார்­களா என்­பது சந்­தே­கமே.

மக்­க­ளின் வரிப்­ப­ணத்தை வீணாக்கி வரு­கின்ற மாகா­ண­ச­பை­யில் உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்­கள். இனி­யா­வது மக்­க­ளைப் பற்­றிச் சிந்­திப்­பார் களா? தமது மனச்­சாட்­சிக்கு இடம் கொடுப்­பார்­களா?

http://uthayandaily.com/story/15854.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.