Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவிச் சிங்கள மக்களுக்காகவும் தமிழரே அழவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-விஜயன்-

'கொழும்பட்ட கிரி அப்பிட்ட கெக் கரி" (கொழும்பில் உள்ளவர்களுக்குப் பால் கொடுத்து ஓய்ந்துபோன வெற்று முலைகள் - வெறும் கெக்கரிக்காய் போன்ற - தான் எங்களுக்குக் கிடைக்கிறது.

இது சிங்களக் கிராமங்களில் கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் பற்றிக் கூறப்படுகின்ற பிரதானமான ஒரு பழமொழி. சிங்கள ஆட்சியாளர் குழாம் ஆங்கிலம் கற்று, வெள்ளைக்காரருடன் சேர்ந்து நலன்களை அனுபவித்துக் கொண்டு சாதாரண சிங்கள மக்களை நசுக்க முற்பட்டதன் உள்ளடக்கமே அது.

கிராமத்துச் சிங்கள மக்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும், அரசியல் அரங்கிலும் ஓரம்கட்டப்பட்டு வாழுகின்றனர். இன்றைய நிலையிற்கூட ஆங்கிலம் கற்ற சிங்கள வரை கிராமத்தவர் 'கடுவ" (வாள்) என்றே குறிப்பிடுவதைக் காணலாம்.

பல்கலைக்கழகங்களிற்கூட கிராமத்துச் சிங்கள மாணவர்கள் ஆங்கிலம் கற்ற சிங்களவர்களால் ஒதுக்கப்படும்போது, ஆங்கிலம் கற்றவர்களை நோக்கி 'கடுவ" என்கின்றனர். அதன் உண்மையான அர்த்தம் 'நீங்கள் வெள்ளைக் காரருக்கு எங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள்தானே" என்றவாறு அமையும். இவ்வாறான 'கடுவ" குழுவினரே கொழும்பு மையச் சிங்கள ஆட்சியாளர்கள். இவர்கள் சாதாரண சிங்கள மக்களுக்கு நன்மை செய்யாது, அவர்களை உறிஞ்சி வாழ்வதற்கே முனைகின்றனர். இதனால், சாதாரண சிங்கள மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

'இலங்கைத்தீவு சிங்களவருக்குச் சொந்தமானது"

'தமிழர் வந்தேறு குடிகள்"

'பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் தீவு"

'துட்டகைமுனு போல சிங்களவர் வாழவேண்டும்"

'தமிழரை இந்தத் தீவிலிருந்து கலைக்க வேண்டும்"

'தமிழர் பயங்கரவாதிகள்"

மேற்கூறப்பட்டவற்றை நம்பும் அளவிற்கு சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு அற்றவர்களாக உள்ளனர். இதுவே இலங்கையின் முழு நீளத் துயரத்திற்குக் காரணமாய் அமைந்துவிட்டது. சிங்கள மக்கள் ஒரு முனைப்புள்ள இனமாகவும், சுயசிந்தனை உள்ளவர்களாகவும் இருந்திருந்தால் தாங்கள் நிம்மதியாக வாழவும், மற்றவர்களை நிம்மதியாக வாழவிடவும் அடிகோலியிருப்பார்கள்.

கொழும்பு மைய அரசியலில் யார் அதிகமாக பீதியினையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துகிறார்களோ அவர்களே சிறந்த தலைவர்களாக ஆகிவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அப்பாவிச் சிங்கள மக்கள் இத்தலைவர்களால் மிக இலகுவாக உருவேற்றப்பட்டு ஆட்டிப் படைக்கப்படுகின்றனர்.

பிரித்தானியர் இலங்கையை விட்டுச் சென்ற காலத்தில் இருந்து சாதாரண சிங்கள மக்கள் தமிழர் தாயகப் பகுதிகளிலும், அயற்கிராமங்களிலும் குடியேற்றப்பட்டனர். இம்மக்களே இன்றுவரை கொழும்பு மைய அரசியலுக்கு மனித அரண்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

முன்னாள் சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவர்களின் குடியேற்றங்களின் முக்கியத்துவத்தை ஒரு கோட்பாட்டு வடிவத்தில் விளக்கினார். அதாவது, 'நாம் எல்லைகளை நோக்கி நகராவிடில் எல்லைகள் எம்மை நோக்கி வந்துவிடும்" என்றார். அதை நன்கு விளங்கிய ஜே.ஆர். தனது அலுவலகத்தை ஓர் எல்லைப்புறக் கிராமத்திற்கு மாற்றியிருக்கலாம். அவர் அவ்வாறு செய்யவில்லை. அவரது காலத்தில் வெலிஓயா போன்ற குடியேற்றங்களும் இராணுவ முகாம்களும் உருவாக்கப்பட்டன. இங்கு குடியேற்றப்பட்டவர்களில் தென்னிலங்கையின் குற்றவியல் கைதிகளும் அடங்குவர்.

கிராமத்துச் சிங்களவர் எதையும் நம்பிவிடுகின்ற தன்மை உடையவர்கள். அக்கிராமங்களில் உள்ள பௌத்த விகாரையின் பிக்கு சொல்வதை அவர்கள் விசுவாசிப்பவர்கள். அந்தப் பிக்குகளை அரசியல் மயப்படுத்தி, அதன் மூலம் நன்மைகளைப் பெறுவதிலும் கொழும்பு மைய அரசியற் தலைவர்கள் முயன்றனர். இதில் முன்னாள் சனாதிபதி பிரேமதாச அதிகம் வெற்றிகண்டவர். கிழக்கு மாகாணத்தின் குடியேற்றத் திட்டங்களின் காவலனாக திம்புலாகல பிக்குவை நியமித்து அவருக்கு ஆயுதம் மற்றும் இன்னோரன்ன லௌகீக உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அப்பிராந்தியத்தின் சிற்றரசனாக அந்தப் பிக்கு சிறிதுகாலம் கோலோச்சினார்.

பிரேமதாச சனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் ஆனமடு, நிக்கவரெட்டியா, புத்தளம், மொனராகல, கதிர்காமம், மாத்தறை போன்ற பிரதேசங்களில் பாரிய வீதிகள் அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன. ~கம் உதாவ| ~ஜனசவிய| போன்ற திட்டங்களின் மூலம் அவற்றைச் சாதித்தார். மிகப்பெரிய ஆடை தைக்கும் தொழிற்சாலைகளை கிராமங்களில் நிறுவினார். இவற்றால் சிங்களக் கிராமத்தவர்கள் ஓரளவு நன்மை அடைந்தனர் என்பதைவிட அம்மக்களை பிரேமதாச தன் அரசியலுக்குப் பயன்படுத்தினார் என்பதே உண்மை.

1977 இன் பின்பான காலப்பகுதியில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, கிராமிய உற்பத்தி முயற்சிகள், தன்னிறைவான வாழ்க்கைமுறை என்பனவற்றை மாற்றி அமைத்தது. தேசிக்காய், தோடை என்பவற்றுக்குப் பெயர்போன விபிலைப் பிரதேசத்தில் உற்பத்திகள் யாவும் அமைச்சர் காமினி திசாநாயக்காவின் தோடம்பழ இறக்குமதியால் சந்தை வாய்ப்பைப் பெறமுடியாது போனது என்பதைவிட விபிலை விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரவகை தேசி, தோடை உற்பத்தியை முழுமையாக அழித்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சூழல்களால் பெரும்பாலான இளைஞர், யுவதிகள் வேலையற்றவர்களாக மாறினர்.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்பான காலகட்டத்தில் வட கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டிக் கிராமப்புறச் சிங்கள இளைஞர்கள் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டனர். யுவதிகளில் பெரும்பாலானவர்கள் புடவை தைக்கும் தொழிலில் உள்வாங்கப்பட்டனர். இவ்விரு தரப்பினரும் குறைந்த மட்டத்திலான படிப்பைக் கொண்டிருந்தமையால் இத்தகைய கூலிகளாக இலகுவில் மாற்றப்பட்டனர்.

இவ்விரு சாராரும் ஆட்சியாளர்களால் எவ்வாறு பயன் படுத்தப்பட்டனர் என்பதைச் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரான பிரசன்ன விதானகே தனது புறகந்த களுவற (பூரணை நிலவில் இருட்டு) என்ற திரைப்படத்தில் மிகவும் தத்துரூபமாகக் காட்டியிருக்கிறார். வடக்கே புலிகளுடனான யுத்தத்தில் இறந்ததாக கொண்டு வரப்படுகின்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் பிணப்பெட்டிக்குள் வாழைமரத்தின் அடிப்பாகம் கிடக்கக் காணப்பட்டது. இது சிங்கள மக்களுக்கு வடக்குக் கிழக்கு யுத்தம் பற்றிய மிகத் தெளிவான உண்மையை வெளிக்காட்டியது.

அப்பாவிச் சிங்கள மக்களின் மனநிலையைக் குழப்புவதில் பிரதான பங்கு வகிப்பது சிங்கள ஊடகங்கள்தான் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு ஒரு தொலைக்காட்சி உரையாடலின்போது குறிப்பிட்டிருந்தார். கொழும்பு மைய அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் தமக்குச் சாதகமாகக் கூறுவதை ஊடகங்கள் கிராமத்துச் சிங்கள மக்களுக்கு வலுக்கட்டாயமாகத் தீத்துகின்றன. இதுவும் சாதாரண சிங்கள மக்கள் எப்பொழுதும் தளம்பல் நிலையில் இருப்பதற்கு காரணமாய் அமைகிறது.

சிங்களக் கிராமவாசிகள் தாம் விரும்பும் கட்சி சார்ந்தவர்களைத் தெரிவு செய்ததன் பின் பாராளுமன்றம் செல்கின்ற தலைவர்கள் தமது நலனுக்காகக் கட்சி மாறுவதும் தாம் விரும்பியவாறு செயற்படுவதும் மிகச் சாதாரண விடயமாகி விட்டது. இதனாலும் சாதாரண சிங்கள மக்களே பாதிக்கப்படுகின்றனர்.

இதைவிட அரசுத் தலைவர்களாக வருவோர் தமது சந்ததிக்குச் சொத்துச் சேர்ப்பதிலேயே அதிக கவனம் செலுத்து கின்றனர். சந்திரிகா, ரத்வத்த ஆகியோர் உழைத்ததுபோல் தானும் உழைக்க முற்பட்ட மகிந்த பதவிக்கு வரமுன்பே சுனாமி மீள்கட்டமைப்புப் பணிக்காக ஹெல்ப்பிங் அம்பாந்தோட்டை (ர்நடிiபெ ர்யஅpழவெழவய) என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாகப் பெரும் தொகையான பணத்தினை சூறையாடிய சம்பவங்களும் உண்டு.

சிங்களக் கிராமத்து இளைஞர்கள் பலர் ஏமாற்றப்பட்ட நிலையில் வடகிழக்குப் பகுதிகளில் இராணுவப் பணியாற்றி வருகின்றனர். மன்னார், திருகோணமலைப் பகுதிகளில் சேவையாற்றவென பொய் சொல்லி கொண்டுவரப்படுபவர்கள் யாழ்ப்பாணத்தில் இறக்கிவிடப்படுவதும், தும்புத் தொழிற்சாலையில் வேலை தருவதாகக் கூறி யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டமையும் அண்மைய உதாரணங்களாகும். இத்தகைய ஏமாற்றங்களையும், துரோகங்களையும் சிங்கள ஆட்சியாளர்களே தமது இனத்திற்குச் செய்கிறார்கள்.

மகிந்த ராஜபக்ச ஏனைய சிங்களத் தலைவர்களைவிட ஓரடிகூடப் பாய்ந்து, தனது மகனைக் கடற்படையில் இணைத்தது மட்டுமல்லாது அதிகளவான பிரசாரங்களையும் மேற்கொண்டார். இதன்மூலம் அப்பாவிச் சிங்கள மக்களை நம்புமாறு செய்தார். ராஜபக்சவும், மனைவியும் திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்று மகனைப் பார்வையிட்டனர். இந்த எல்லா வகை பம்மாத்துகளுக்குப் பின் மகனை புலமைப்பரிசில் ஒன்றின் மூலம் இங்கிலாந்திற்கு அனுப்பிவிட்டார். பதவி நிலையில் மூன்று வருடங்கள் பணிபுரிந்த பின்னரே இத்தகைய புலமைப் பரிசில் ஏனையவர்களுக்கு வழங்கப்படுவதுண்டு.

ஆனால், சிங்களக் கிராமவாசிகள் இராணுவத்தில் சேர்ந்தால் அதைவிட்டு வெளியேறுவது மிகவும் சிரமமானதே. தமிழர் தாய்நிலத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்கின்ற சிங்கள மக்கள் வடகிழக்கு யுத்தத்திற்கெனத் தமது பிள்ளைகளை அனுப்பியதுடன், தமது வாழ்விடங்களை (தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமித்து வாழ்வோர்) பாதுகாக்க ஊர்காவற்படையில் சேர்ந்து சேவையாற்ற வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. இப்படைப் பிரிவுகளில் கொழும்பைச் சேர்ந்தவர்களோ, வசதி படைத்த சிங்களவரோ இருப்பதில்லை.

கிராமத்துச் சிங்கள மக்கள் தமது கிராமங்களை எப்படியாவது பாதுகாத்தே ஆகவேண்டும் என்பது ஓர் எழுதப்படாத விதியாகிவிட்டது.

கந்தளாய், மற்றும் திருகோணமலையைச் சூழவுள்ள சிங்களக் கிராமங்களில் புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகக் கூறி அம்மக்கள் அவ்வூர்களைவிட்டு ஓடியபோதிலும், அவர்களை மீண்டும் அங்கு குடியேற்றி நிரந்தரமான பதுங்குகுழிகளைச் சீமெந்தினால் துரிதமாகக் கட்டுவதற்கும் மகிந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமத்தவர்கள் எதை விலையாகக் கொடுத்தாவது அங்கு கட்டாயமாக வாழ வேண்டும் என்பதே கொழும்புச் சிங்களவரின் எதிர்பார்ப்பு. அந்த அப்பாவி மக்கள் எல்லாச் சுமைகளையும் தாங்க வேண்டியுள்ளது.

கொழும்பு மைய ஆட்சியாளர்கள், பெரும் முதலாளிமார் ஆகியோருக்கு எதிராக வேலை வாய்ப்பின்றி இருந்த இளைஞர்கள் 1971 இல் ரோகண விஜேவீர தலைமையில் போர்க்கொடி உயர்த்தினர். கிராமங்கள் தழுவிய இப்போராட்ட முயற்சி மிருகத்தனமாக நசுக்கப்பட்டது.

1987-89 காலப்பகுதியில் ஜே.வி.பி.யினர் மேற்கொண்ட இரண்டாவது முயற்சியும் கொழும்பு மையச் சிங்களத் தலைவர்களால் மிகமோசமாக அடக்கப்பட்டது. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் சிங்கள இளைஞர், யுவதிகளைச் சிங்கள இராணுவமும் காவல்துறையும் கொன்று குவித்தனர். இக்கொடுமைகளை ஆட்டிக்கல் நைன்ரீன் (யுசவiஉடந-ஒiஒ) என்ற மனித உரிமைகள் அமைப்பு வெளியுலகிற்குக் கொண்டு வந்தது. இப்படுகொலைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'சற்றடே றிவியூ (ளுயவரசனயல சுநஎநைற) ~திசை| போன்ற பத்திரிகைகள் குரல் கொடுத்தது பல சிங்கள மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

சிங்களக் கிராமத்து இளைஞர் மத்தியில் எழுந்த இரண்டாவது எத்தனிப்பும் தோல்வியடைந்த பின்னரே - ரோகண விஜேவீரவும் கொல்லப்பட்டார் - அவ்வாறான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த இரண்டாவது எத்தனிப்பின்போது 60,000 வரையிலான சிங்கள கிராமத்து இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான மோசமான படுகொலைகள் சிங்கள மக்களை அதிகம் பாதித்ததுடன் இலங்கை இராணுவமும், காவல்துறையும் எந்தப் போராட்டங்களையும் இலகுவில் அடக்கி விடும் என்று நம்புகின்றனர். இந்த அடிப்படையிலேயே தமிழரின் போராட்டத்தையும் இலகுவாக நசுக்கிவிடலாம் என்று நம்புகின்றனர். அதற்கேற்றவாறு சிங்கள ஊடகங்களும் கதைவிடுகின்றன. ஆனால், அதன் சூழல் வேறு.

1983 ஆம் ஆண்டிற்குப் பின்பான காலப்பகுதியில் 50,000 இற்கும் மேற்பட்டோர் இராணுவத்தை விட்டுத் தப்பியோடியுள்ளனர். 2003 இன் பின்பான சமாதானச் சூழலில் 17,000 இற்கும் மேற்பட்டோர் ஓடியுள்ளதாக 12-01-2007 அன்று இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களால் பல்வேறு சமூகப் பிரச்சினை சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் 15மூ மானவை இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்களால் நடாத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாகவும், அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் எனவும் அரசு வற்புறுத்தி வருகிறது. இது சிங்களக் கிராமத்து மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

இராணுவத்தில் சேவை புரிந்து இறந்தவர்களுக்கான சலுகைகள் சாதாரண கிராமத்துச் சிப்பாய்களுக்குக் கிடைப்பதில்லை. அதுகூட உயர் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. சாதாரண சிப்பாய் ஒருவர் இறந்துவிட்ட செய்தியைக்கூட குடும்பத்தவருக்கு அறிவிக்காது 'நடவடிக்கை ஒன்றின்போது காணாமற்போய்விட்டார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்று அறிவிக்கின்றனர். இவ்வாறானவர்களின் சம்பளம்கூட வீட்டிற்கு அனுப்பப்படுவதில்லை. இவ்வாறான விடயங்களில் அரசுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிவு குடும்பத்தவர்களுக்கு இல்லாதிருப்பதும் ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பான ஒன்றாகும்.

அநுராதபுரம் ஏறத்தாள ஒரு பாலியல் நகரமாக மாறிவிட்டது. வடக்கு வெலிஓயா பகுதிகளில் இராணுவத்தில் கடமையாற்றுபவர்கள் இந்நகருக்குச் சென்ற பின்னரே தமது ஊர்களுக்குச் செல்கின்றனர். இவர்களுக்காகவே விலை மாதர்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இத்தொழிலில் அதிக வருமானம் பெறக்கூடியதாக இருப்பதால் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பல யுவதிகள் அநுராதபுரத்தை நாடி வருவதையும் காணமுடிகிறது. அநுராதபுரம் புனித வெள்ளரசுக் கிளையுள்ளதால் 'புனித நகரமாக" அரசு பிரகடனப்படுத்தியிருந்தாலும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.