Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பாரிய குழப்பங்களை ஏற்படுத்த தீய சக்திகள் முயற்சி

Featured Replies

வடக்கில் பாரிய குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த தீய சக்­திகள் முயற்சி

 

முன்­னைய அரசே ஆவா குழுவை உரு­வாக்­கி­யது; நிலை­மையை சரி­யாக உணர்ந்­து­விட்டோம் என்­கி­றது அர­சாங்கம்

(ரொபட் அன்­டனி)

நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முடக்­கு­வ­தற்­காக வடக்கில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு  ஒரு­சிலர் முயற்­சித்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­கி­றது. வடக்கில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி மக்­களின் இயல்­பு­நி­லையை சிக்­க­லாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இது­தொ­டர்பில் அர­சாங்கம் மிகவும் ஆழ­மான முறையில் கவனம் செலுத்தி வரு­கி­றது என்று 

 அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் வடக்கில் ஆவா குழுவை முன்­னைய அர­சாங்­கத்தின் பாது­காப்­பு­து­றைசார் முக்­கி­யஸ்­தர்­களே உரு­வாக்­கினர். அந்த ஆவா குழுவே இன்றும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. எவ்­வா­றெ­னினும் அர­சாங்கம் இந்த நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வரும் என்றும் அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளர்­க­ளான ராஜித சேனா­ரட்ன, தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் இதனைத் தெரி­வித்­தனர்.

முதலில் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன குறிப்­பி­டு­கையில்;

வடக்கில் ஆவா குழுவை உரு­வாக்­கி­யது யார் என்று எங்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். எங்­க­ளுக்கு மட்­டு­மல்ல அனை­வ­ருக்கும் தெரியும். கடந்த அர­சாங்­கத்தின் பாது­காப்பு முக்­கி­யஸ்­தர்­களே ஆவா குழுவை உரு­வாக்­கினர். அந்த அர­சாங்­கத்தில் நாங்­களும் இருந்தோம். அதனால் எங்­க­ளுக்கு எல்லாம் தெரியும். ஆவா குழுவை இயக்­கு­வது யார்? அத­னூ­டாக எதனை அடைய முயற்­சிக்­கின்­றனர் என்­பதும் எங்­க­ளுக்குத் தெரியும். அதற்கு காசு கொடுத்து இயக்க வைப்­பது யார் என்­பதும் எங்­க­ளுக்குத் தெரியும் என்றார்.

கேள்வி: வடக்கில் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­வதன் கார­ண­மா­கவா இவ்­வா­றான குழுக்கள் தலை­தூக்­கு­கின்­றன?

பதில்: (ராஜித) நீங்கள் ஒன்றைப் புரிந்­து­கொள்­ளுங்கள். வடக்கில் இரா­ணுவ முகாம்கள் இருந்த காலத்தில் தான் இந்தக் குழுக்கள் உரு­வாக்­கப்­பட்­டன. அந்தக் குழுக்­களை யார் உரு­வாக்­கி­யது, அதனை செயற்­ப­டுத்­தி­யது யார் என்று எங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும் என்றார்.

அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பி­டு­கையில்;

நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்­பு­வ­தற்கு ஒரு­சிலர் நட­வ­டிக்கை எடுக்­கின்­றமை நன்­றாகத் தெரி­கின்­றது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மித­வாத அர­சி­யல்­த­லை­வர்கள் சிறந்த முறையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். அந்த நிலை­மையைக் குழப்பி சிக்­கலை ஏற்­ப­டுத்­தவே வடக்கில் நெருக்­க­டி­களை சில தரப்­பினர் ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் மித­வாத தலை­வர்கள் இருப்­ப­தைப்­போன்றே ஒரு­சில இன­வா­தி­களும் செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்­நி­லையில் இவ்­வாறு நல்­லி­ணக்க செயற்­பாட்டை நெருக்­க­டிக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு வடக்கில் ஒரு­சிலர் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வதை நாம் ஆழ­மாக அறிந்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

அதற்­கேற்ப நாங்கள் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். இவ்­வாறு தொடர்ந்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம். அர­சாங்கம் இது­தொ­டர்பில் மிகவும் ஆழ­மான முறையில் ஆராய்ந்து வரு­கி­றது என்றார்.

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவான் குண­சே­கர குறிப்­பி­டு­கையில்:

யாழ்ப்­பா­ணத்தில் அண்­மையில் ஒரு­சில அசம்­பா­வி­தங்கள் இடம்­பெற்­றன. குறிப்­பாக நீதி­பதி மீதான துப்­பாக்­கிச்­சூட்டு சம்­ப­வத்தில் அர­சாங்கம் தேவை­யான விசா­ரணை நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. அது தொடர்பில் விசா­ர­ணை­களும் இடம்­பெற்று வரு­கின்­றன . மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று பொலிஸார் மீதான வாள்­வெட்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் ஏழுபேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் இருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்கள் இரு­வரும் ஆவா குழுவின் முன்னாள் உறுப்­பி­னர்கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் ஐவ­ரையும் அடை­யாளம் கண்­டி­ருக்­கின்றோம் அவர்­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கேள்வி: .அடை­யாளம் காணப்­பட்­டுள்ள ஐவரின் பெயர்­களை கூற முடி­யுமா?

பொலிஸ் பேச்­சாளர்: ஐவரை அடை­யாளம் கண்­டி­ருக்­கின்றோம். ஆனால் பெயர்­களை கூறு­வது விசாரணைகளுக்கு பாதகமாக அமையும்.

கேள்வி: அவர்கள் சிங்களவர்களா? தமிழர்களா?

பொலிஸ் பேச்சாளர்: அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தமிழர்கள்.

கேள்வி: ஆவா குழு இன்னும் செயற்படுகின்றதா?

பொலிஸ் பேச்சாளர்: ஆவா குழு தற்போது செயற்படுகின்றதா என்பதை விட கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் முன்னாள் ஆவா குழுவின் உறுப்பினர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.