Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு எதிரணியினரின் பின்வாங்கலுக்கு பின்னணியில் மிகப்பெரிய நாட்டின் தூதரகம்

Featured Replies

கூட்டு எதி­ர­ணியினரின் பின்­வாங்­க­லுக்கு பின்­ன­ணியில் மிகப்­பெ­ரிய நாட்டின் தூத­ரகம்

01-dbca1e96a72a6ad3c71b0a8008a15c13ccdac4cc.jpg

 

 யாருடன் தொடர்­பு­கொண்டு உரை­யா­டினர் என்­பதும் தெரியும் என்­கி­றது அர­சாங்கம் 
(ரொபட் அன்­டனி)

அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை தொடர்­பாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வி­ருந்த விவா­தத்தை கூட்டு எதி­ர­ணி­யினர் குழப்பி நடத்­த­வி­டாமல் செய்­ததன் பின்­ன­

ணியில் மிகப்­பெ­ரிய நாடு ஒன்றின் தூத­ர­கமே இருந்­தது என்று அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் சீன நிறு­வ­னத்­துடன் அம்­பாந் தோட்டை துறை­முகம் தொடர்­பாக செய்­து­ கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யா­னது எந்­த­வொரு நேரத்­திலும் திருத்­தத்­திற்­குட் ப­டலாம். மேலும் அமைச்­சர்கள்   

தமது யோச­னை­களை முன்­வைப்­ப­தற்­காக ஒரு­வார காலம் அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் அர­சாங்கம் குறிப்­பிட்­டுள்­ளது.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளர்­க­ளான ராஜி­த­சே­னா­ரட்ன, தயா­சிறி ஜய­சே­கர ஆகியோர் இதனைத் தெரி­வித்­தனர்.

முதலில் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன குறிப்­பி­டு­கையில்;

அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பாக செய்­து­கொண்ட உடன்­ப­டிக்கை மூலம் இலங்­கைக்கு பாரிய இலாபம் கிடைக்­கின்­றது. அதே­நேரம் அந்த உடன்­ப­டிக்­கையை சீன நிறு­வ­னத்தின் சம்­ம­தத்­துடன் எந்­த­வொரு நேரமும் திருத்­து­வ­தற்கும் ஏற்­பா­டுகள் உள்­ளன. இந்த உடன்­ப­டிக்கை ஊடாக இலங்­கைக்கு 1.1 பில்­லியன் டெலர் நிதி கிடைக்­கின்­றது.

இத­னூ­டாக வெளி­நாட்டு ஒதுக்கு அதி­க­ரிக்­கப்­படும். அத்­துடன் இது இரு­த­ரப்பு உடன்­ப­டிக்­கை­யாகும். இதில் கொடுக்கல் வாங்கல் என இரண்டும் இருக்கும் என்­பதை புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதே­போன்று அர­சாங்கம் காணி உரி­மைத்­து­வத்தை சீனா­விற்கு வழங்­க­வில்லை. மாறாக குத்­த­கைக்கே வழங்­கி­யுள்­ளது. எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் எந்­த­வொரு திட்­டத்­தையும் முன்­னெ­டுக்­கும்­போது நிச்­சயம் எதிர்ப்பு வந்­தே­யாகும். அதனை நான் நன்­றாகப் பார்த்­தி­ருக்­கின்றேன். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­வித்­த­வர்­களே பத்து வரு­டங்­களில் அதனைப் பாராட்டிக் கொண்­டி­ருப்­பார்கள்.

டி.எஸ். சேனா­நா­யக்க கல் ஒயா திட்­டத்தை கொண்டு வந்­தி­ருந்­த­போதும் இங்­குள்­ள­வர்கள் எதிர்த்­தனர். 13 ஆவது திருத்த சட்­டத்தை கொண்­டு­வந்­த­போதும் தீ வைத்து எரித்­தனர். ஆர்ப்­பாட்­டங்கள் செய்­தனர். ஆனால் 10 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் அதே மாகாண சபை­க­ளுக்கு சென்று அமர்ந்­து­கொண்­டனர். நாம் இவ்­வாறு எதிர்ப்­பு­களில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது சிங்­கப்பூர், மலே­ஷியா, தாய்­லாந்து போன்ற நாடுகள் அபி­வி­ருத்­தியில் எங்­கேயோ சென்­று­விட்­டன.

கேள்வி: சிறி­லங்கா எயார்லைன்ஸ் உள்­ளிட்ட பல அரச நிறு­வ­னங்கள் நட்­டத்தில் இயங்­கு­கின்­றன. இவற்­றையும் எதிர்­கா­லத்தில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைத்து செயற்­ப­டுத்த முயற்­சிப்­பீர்­களா?

பதில்: அவ்­வாறு திட்­டங்கள் உள்­ளன. ஆனால் எதனை செய்­தாலும் இங்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­படும். மலே­ஷி­யாவின் முன்னாள் பிர­தமர் மஹாதீர் முஹமட் எவ்­வாறு மலே­ஷி­யாவை முன்­னேற்­றினார் என்­பது தொடர்பில் விவா­தங்கள் உள்­ளன. அவர் இலங்­கைக்கும் ஒரு­முறை வரு­கை­தந்து எவ்­வாறு மலே­ஷி­யாவை முன்­னேற்­றினார் என்­பதை விளக்­கி­யி­ருந்தார்.

அதா­வது 10 ஏக்கர் காணியில் 10 பேர் விவ­சாயம் செய்­வதை அவர் விரும்­ப­வில்லை. அந்தப் 10 ஏக்கர் காணியில் ஒரு தொழிற்­சாலை அமைத்து 1000 பேருக்கு தொழில்­வாய்ப்பை வழங்­கு­வ­தையே அவர் விரும்­பினார். அதே­போன்று வெளி­நா­டு­க­ளுக்கு காணி­களை 50 சத­வீத பெறு­ம­தி­யி­லேயே விற்­பனை செய்தார். அதற்கு பதி­லாக இரண்டு மடங்கு தொழில் வாய்ப்­புக்­கைள கோரினார். அவற்றை செய்­வ­தற்கு நாம் தயா­ராக இருக்­கின்­றோமா என்­பதே இங்கு எழு­கின்ற கேள்­வி­யாகும் என்றார்.

கேள்வி: 2020 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­ததும் இந்த உடன்­ப­டிக்­கையை இரத்து செய்­வ­தாக. பஷில் ராஜ­பக்ஷ கூறி­யுள்­ளாரே?

பதில்: அப்­ப­டி­யாயின் 2020 ஆம் ஆண்டு வரை அவர்கள் பொறு­மை­யாக இருக்கத் தயாரா? ஏதோ இரண்டு போயா தினங்­களில் செய்­யப்­போ­வ­தாக கூறி­னார்­களே. 2020 ஆம் ஆண்டில் பார்ப்போம்.

கேள்வி: இந்த உடன்­ப­டிக்­கையை மீண்டும் திருத்­து­வீர்­களா?

பதில்:நல்ல யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்டால் அது குறித்து பரி­சீ­லிக்­கலாம்.

கேள்வி: அதற்கு சீன நிறு­வனம் உடன்­ப­டுமா?

பதில்: சீன நிறு­வ­னத்தின் இணக்­கப்­பாட்­டுடன் தான் திருத்தம் செய்­ய­வேண்டும்.

கேள்வி: எவ்­வாறு யோச­னைகள் பெறப்­படும்?

பதில்: அமைச்­சர்­க­ளுக்கு உடன்­ப­டிக்­கையின் பிர­திகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவர்கள் ஒரு­வா­ரத்­திற்குள் யோச­னை­களை முன்­வைக்­கலாம்.

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பி­டு­கையில்:

அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான உடன்­ப­டிக்­கைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­ததும் அதனை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கூறினார். அதற்­கேற்­ற­வாறே வெள்­ளிக்­கி­ழமை விவாதம் நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது.

ஆனால் எந்­த­வொரு கார­ணமும் இன்றி பொது எதி­ர­ணி­யினர் விவா­தத்தை குழப்பி அதனை தடுத்து நிறுத்­தினர். திருத்­தங்­களை ஏற்­றுக்­கொள்ள ஜனா­தி­பதி தயா­ராக இருந்தார். எனினும் அதற்கு கூட்டு எதி­ரணி இட­ம­ளிக்­க­வில்லை. கூட்டு எதி­ர­ணியின் இந்த செயற்­பாட்­டிற்குப் பின்னால் ஒரு மிகப்­பெ­ரிய நாட்டின் இலங்கை தூத­ரகம் இருந்­த­தாக நாங்கள் அறி­கின்றோம்.

கேள்வி: அப்­ப­டி­யாயின் எந்த தூத­ரகம் இதனை செய்­தது?

பதில்: பெயரைக் கூற விரும்­ப­வில்லை. ஆனால் அந்த தூத­ரகம் யாருடன் தொடர்பு கொண்டு பேசி­யது என்றும் எங்­க­ளுக்குத் தெரியும். அதன் பின்­னரே கூட்டு எதி­ர­ணி­யினர் விவா­தத்தை நடத்­த­வி­டாமல் குழப்­பினர். எங்­க­ளுக்கு எல்லாம் தெரியும். இந்த கூட்டு எதி­ர­ணியின் செயற்­பாட்­டுக்கு தூது­ர­கத்தின் தலை­யீடு கார­ண­மாகும். தொலை­பே­சி­ய­வரின் பெயரும் எங்­க­ளுக்குத் தெரியும். ஆனால் நான் அதனை இங்கு வெளி­யி­ட­வில்லை.

கேள்வி: சுதந்­தி­ரக்­கட்சி அம்­பாந்­தோட்டை உடன்­ப­டிக்கை தொடர்பில் சரி­யான நிலைப்­பாட்டில் இல்­லை­போன்று தெரி­கின்­றதே?

பதில்: அப்­படி இல்லை. சுதந்­தி­ரக்­கட்சி அனைத்து விட­யங்­க­ளையும் தெளி­வாக ஆராய்ந்து விட்டு தீர்­மானம் எடுத்­தது. ஆரம்­பத்தில் பல முரண்­பா­டுகள் இருந்­தன. பின்னர் அவை தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி நிலைப்­பாட்­டுக்கு வந்தோம். காணி உரிமை தொடர்பில் சிக்கல் இருந்­தது. பின்னர் எங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

பின்னர் எங்களுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஆதரவு அளித்தோம். ஆனால் கூட்டு எதிரணியில் இருக்கின்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த விடயத்தில் முரண்பாடான நிலைப்பாட்டில் இருப்பது தெரிகிறது. அதற்காகத்தான் அதுதொடர்பில் விவாதம் நடத்தி திருத்தங்களை முன்வைப்பதற்காக வெள்ளிக்கிழமை தினத்தை ஒதுக்கியிருந்தோம்.

ஆனால் கூட்டு எதிரணியினர் அந்த வெள்ளிக்கிழமை விவாதத்தினை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. இதன்மூலம் கூட்டு எதிரணியில் உள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இந்த உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்பதை புரிந்துகொண்டோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.