Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி தான் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியது; போட்டுடைத்தார் துவாரகேஸ்வரன்!

Featured Replies

‘மகேஸ்வரனின் குடும்பத்தை மண்ணிலிருந்து அகற்ற முயற்சி’
 

- எஸ்.நிதர்ஷன்

மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும் அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உண்மையற்ற கருத்துக்கள் பரப்பப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மகேஸ்வரனின்-குடும்பத்தை-மண்ணிலிருந்து-அகற்ற-முயற்சி/71-201820

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஈ.பி.டி.பி தான் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியது; போட்டுடைத்தார் துவாரகேஸ்வரன்!

 

 

 

வித்தியா படுகொலையோடு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்களைக் காப்பாற்றுவதற்கு ஈ.பி.டி.பியினர்தான் முயன்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

"சுவிஸ் குமாரை ‘போல்’ எனப்படும் ஈ.பி.டி.பி பிரதேச சபைத் தலைவர் காப்பாற்றிக்கொண்டு வருகிறார், முன்னால் அவரது கறுப்பு பிக்கப் ரக வாகனம் வந்துகொண்டிருக்கையில் அதன் பின்னால் சுவிஸ் குமார் முச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருக்கிறார். சுவிஸ்குமார் வேலணை துறையூர் சந்தியில் கட்டப்படுகிறார். அதை நாங்கள் பாத்திருக்கிறோம். அதன் பின்னர் விஜயகலா மகேஸ்வரன் அங்கு வருகை தந்து அவரை அவிழ்த்து விட்டிருந்தார்.

ஈ.பி.டி.பி கபிலன் ரவல்ஸ் என்கின்ற உரிமையாளர் ரட்ணாவின் சகோதரரின் பஸ்ஸில் சென்று குறிகாட்டுவான் பொலிஸ் நிலையத்தைத் தாக்கிய 40 பேர் கொண்ட குழுவினர் தான் சுவிஸ்குமாரை அடித்துக் கொல்கின்றோம் என்று கூட்டிக்கொண்டுபோய் அவரைப் புங்குடுதீவுக்குள்ளே விட்டார்கள். பின்னர் சட்டத்தரணி தமிழ்மாறன்தான் சுவிஸ்குமாரை பொலிஸ் நிலையத்தில் சரணடைய வைத்த பின்னர் கொழும்புக்கு அனுப்பியுள்ளார்.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த இரண்டாண்டு காலமாக எல்லோருமே மெளனமாக இருந்தார்கள். 2015 ஜூன் மாதம் 01ஆம் திகதி வித்தியா பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் தாக்கல் செய்த பீ அறிக்கையில் நீதவான் அதிருப்தியுற்று அந்த வழக்கை உடனடியாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்தார்.

அங்கே பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி தவராசா அந்த வழக்கிலிருந்து சுவிஸ்குமாரைக் காப்பாற்றுவதற்காக மூன்று கேள்விகள் தொடுத்திருந்தார்.

முதலாவது கேள்வி, அந்த சுவிஸ் குமாரை என்ன அடிப்படையில் கைது செய்தீர்கள்?; இரண்டாவது கேள்வி, யார் முறைப்பாடு செய்திருந்தார்கள்?; மூன்றாவது கேள்வி, அவருக்கும் இந்த முறைப்பாடு செய்தவருக்கு இந்த விடயத்தில் என்ன சம்பந்தம்? என்று கேட்டிருந்தார்.

இதனால் விரக்தியுற்ற நீதவான், இந்தப் பாரிய பாலியல் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எப்படி நீங்கள் இவ்வாறான கேள்விகள் கேட்க முடியும் எனக் கூறி உடனடியாக இது தொடர்பான விசாரணையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாரப்படுத்தியிருந்தார். அன்றைய தினமே ரட்ணவேல், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் தவராசா ஆகிய ஐவர் கொண்ட குழு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு சில மீற்றர்களுக்கு அப்பாலுள்ள அத்தனை தடயங்களையும் அழித்தார்கள்.

இதனாலே தான் இந்த வழக்கு விசாரணை இரண்டாண்டுகளாக இழுபட்டுக்கொண்டிருக்கிறது; இதனால் தான் டி.என்.ஏ பொருந்த முடியாத நிலையேற்பட்டது; இரத்தமாதிரி ஒத்துப் போக முடியாமல் போனது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து தமிழ்த் தேசியத் தூணாக, மிகப் பலமாக கதைத்து ஊடகங்களில் பிரபலமாகக் காணப்படுகின்றவர்கள் இந்த வழக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பில்லை என்று கூறி கொழும்பிற்கு மாற்றுவதற்கு முயற்சித்தார்கள். அதன் பின்னர் சட்டத்தரணி தவராசா ஊடாக என்னை இந்த வழக்கில் தலையிடா வண்ணம் கொழும்பில் நீதிமன்றங்களுக்கு ஏற்றி தடுக்க முற்பட்டார்கள். அதன் பின்னர் ரயல் அட்பார் விசாரணை இடம்பெறக் கூடாது என்பதிலும் முயற்சிகள் எடுத்தார்கள். பின்னர் கொழும்புக்கு ரயல் அட்பார் விசாரணையை மாற்றச் சொன்னார்கள்.

எல்லாம் முடிந்து தற்போது விஜயகலா மகேஸ்வரனை இந்த வழக்கில் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள். முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருடைய சட்டத்தரணிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறே நீதவான் உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையின் படி எதிர்வரும் 08ஆம் திகதி விஜயகலா மகேஸ்வரனை கைது செய்வதா? விசாரிப்பதா? அல்லது குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா எனத் தீர்மானிக்கவுள்ளார்.

இந்த வழக்கைத் திசை திருப்புவதற்கும், எங்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிலத்திலும், புலத்திலும் சிலர் செயற்பட்டு வருகிறார்கள் என்றும் குறிப்பிட்ட தியாகராசா துவாரகேஸ்வரன், ஈ.பி.டி.பி தான் இந்த இந்த வழக்கின் சந்தேக நபர்களை திட்டமிட்டு விடுதலை செய்ய ஒத்துழைத்தவர்கள். அதற்கு பொறுப்பாக இருந்தவர் தான் ஈ.பி.டி.பி பிரதேச சபைத் தலைவர் போல் என்பவர். என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Help-the-suspect-escape

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.