Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்ம பள்ளிகளும் படிப்பும் ; நம்ம பயல்களும் ; பரீட்சைகளும் பெண் பிள்ளைகளும் பெடியளும்

Featured Replies

நம்ம பள்ளிகளும் படிப்பும் ; நம்ம பயல்களும் ; பரீட்சைகளும் பெண் பிள்ளைகளும் பெடியளும்

பொதுப் பரீட்சை மண்­ட­பங்­க­ளில் பெண்­பிள்­ளை­க­ளும் பெடி­யளும் (ஆண்­பிள்­ளை­க­ளும்) தமக் குரிய வினாத்­தாள் களைப்  பெற்­றுக்­கொண்டு விடை­களை எழு­தத் தொடங்­கும்­போது பின்பற்றும் சில படி­மு­றை­களை ஒரு­வர் வரி­சைப்­ப­டுத்­து­கி­றார்.

பெண்­பிள்­ளை­கள் (1) எழு­து­வார்­கள் (2) முடியை காதுக்­குப் பின்­னால் எடுத்து செரு­கு­வார்­கள் (3) மீண்­டும் எழு­து­வார்­கள் (4)பேனா­வில் மையி­ருக்கா என்று பார்ப்­பார்­கள் 5)மீண்­டும் எழு­து­வார்­கள் (6)கூடு­த­லாக பேப்­பர் கேட்டு வாங்­கு­வார்­கள் (7)மீண்­டும் எழு­து­வார்­கள்.

பெண்­பிள்­ளை­க­ளின் மேற்­சொன்ன படி­மு­றையை பெடி­யளோடு ஒப்­பிட்­டுப் பார்த்­தால் (1) எத்­தனை பேர் பரீட்சை எழு­து­கி­றார்­கள் என எண்­ணு­வார்­கள் (2)மேற்­பார்­வை­யா­ளர்­களை நோட்­டம் விடு­வார்­கள் (3)மண்­ட­பத்­தில் உள்ள யன்­னல்­களை எண்ணுவார்கள், (4) எப்­பவடா வெளியே போக­லாம் என முதுகை நெளித்து மணி­யைப் பார்ப்­பார்­கள் (5)அடுத்த பரீட்­சை­யில் நன்­றா­கப் படித்து எழு­த­வேண்­டும் என எண்­ணு­வார்­கள்.

கொஞ்­சம் நகைச்­சு­வை­யாக இது கூறப்­பட்­டா­ லும், இந்த அவ­தா­னிப்­பி­லும் ஒரு வகைக் கணிப்பு இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. ஒரு முறை அம்மா, அன்னை ஆகிய சொற்­க­ளுக்­கான ஒத்த கருத்­துள்ள சொற்­கள் இரண்­டி­னைத் தருக? என ஒரு கேள்வி கேட்­கப்­பட்­டது. ஒரு மாண­வன்  ‘‘தாயே, மாதாவே, இந்த நேரத்­திலை அந்­தச் சொற்­கள் இரண்­டும் வரு­குதில்­லையே!’என வாய்­விட்­டுப் புலம்­பி­னா­னாம்.

விடை­யைத் தெரிந்­து­கொண்டே, அது­தான் விடை­யென் பதை அறி­யாது இருப்­ப­வர்­க­ளைப்­பற்றி என்ன சொல்­வது? பரீட்­சை­யில் சித்­தி­யெய்­தி­னால் போதும் எனப் படித்­தால் இப்­ப­டித்­தான் இருக்­கும்! அவ்­வா­றில்­லா­மல், கற்­ப­தைப் பொருள் உணர்ந்து கற்­றால் சிந்­தனை வீச்­சை­யும் அறி­வுப் பரப்­பை­யும் அக­லிக்க முடி­யும்.

மாகாண ரீதி­யில் வட­மா­கா­ணம் 9ஆவது, முதலாவது இடங்­க­ளில்!

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடை­பெற்ற ஜி.சி.ஈ. சாதா­ரண பரீட்­சைப் பெறு­பே­று­களின் படி, கல்வி அடைவு மட்­டத்­தில் வட­மா­கா­ணம் ஒன்­ப­தா­வது இடத்­தில் இருப்­ப­தா­க­வும், (ஒன்­பது மாகா­ணங்­கள்­தான் இலங்­கை­யில் உள்­ளன), சித்தி எய்­யா­தோர் நிலை­யில் வட­மா­கா­ணம் முத­லி­டத்­தில்  இருப்பதாகவும் கலந்துரை யாடலொன்றில் கவ­லை­யோடு குறிப்பிட்டிருந் தார் வட­மா­காண கல்­வி­ய­மைச்­சின் செய­லா­ளர்.

கடந்த ஆண்­டில்(2016) வட­மா­கா­ணத்­தில் 459 பாட­சா­லை­க­ளில் இருந்து 17ஆயிரத்து 418 மாணவர்கள் ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சைக்­குத் தோற்­றியபோதி­லும் அவர்­க­ளில் 256பேர் மட்­டுமே 09 பாடங்­க­ளி­லும் ‘ஏ’சித்தி பெற்­ற­தோடு, 10ஆயிரத்து 562பேர் உயர்­த­ரம் படிப்­ப­தற்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர்.

அதே­வேளை 775பேர் எந்­த­வொரு பாடத்­தி­லும் சித்தி பெற­வில்லை என்­ப­தோடு, 6 ஆயிரத்து 851பேர் உயர்­த­ரம் படிப்­ப­தற்கு தகு­தி­பெ­ற­வில்லை. அதா­வது பரீட்­சை­யில் தோற்றி சித்தி பெறத் தவ­றி­ய­வர்­கள் 39 சத­வீ­த­மா­ன­வர்­கள் ஆவர்.

நாட்டில் போர்ச் சூழல் நிலவிய  காலப்பகுதியில் கல்வி அடைவு மட்­டத்­தில் வட­மா­கா­ணம் கோலோச்சி இருந்துள்ளது என்­பது வர­லாறு. அப்­படி இருந்த வட­மா­கா­ணம், இப்­போது ஏன் கடைசி இடத்தை அடைந்­தி­ருக்­கி­றது என்­ப­தனை ஆராய்­வது மிக முக்கியமான ஒன்றாகும்.

‘9ஏ’யில் கட்­டுண்டு கிடத்தல்…‘9ஏ’யை ‘ஏ9’ என வாசித்து விடா­தீர்­கள்! பிறகு, கண்­டி­யில்­தான் போய் நிற்­பீர்­கள்!
அனைத்­துப் பாடங்­க­ளி­லு்ம்‘ஏ’­எ­டுத்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை எந்­தப் பாட­சா­லை­யில் அதி­கம் எனப் பாட­சா­லை­க­ளைத் தரம் பிரித்­துப் பார்க்­கிற நிலை தொடர்­கி­றதே தவிர, எத்­தனை பேர் உயர்­த­ரம் படிக்­கக்­கூ­டத் தகு­தி­பெ­றா­மல் இருக்­கி­றார்­கள் என்­பது குறித்து ஆராய்­வது மிகக் குறை­வாக இருக்­கி­றது.

இவ்­வாறு பெரும் எண்­ணிக்­கை­யான சத­வீ­தத்­தி­னர் சித்­தி­பெ­றா­மல் போவ­தற்­குக் கார­ணம் என்ன என ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும்.

ஐந்­தாம் ஆண்டு புல­மைச் பரி­சில் பரீட்­சை­யில் மிகச் சிறப்­பா­கச் சிந்­தி­ய­டைந்த பிள்­ளை­களை தங்­கள் பாட­சா­லை­யில் அனு­ம­திப்­பது, அல்­லது பரீட்­சை­கள் வைத்து அதில் மிகச் சிறப்­பா­கச் சித்தி பெறு­கி­ற­வர்­களை மட்­டும் தங்­கள் பாட­சா­லை­யில் இடம்­கொ­டுத்து, அவர்­க­ளைக் கொண்டு அனைத்­தும் பாடங்­க­ளிலு­ம் ‘ஏ’­எ­டுக்க வைப்பிப் பதில் என்ன சாதனை இருக்­கி­றது என்­ப­து­தான் புரி­யா­மல் இருக்­கி­றது!
இவ்­வாறு பெறு­பே­று­க­ளைப் பெறு­கிற பாட­சா­லை­க­ளின் சாத­னை­கள்­தான் நாளே­டு­க­ளி­லும் ஏனைய ஊட­கங்­க­ளி­லும் அதிக கவ­னத்தை பெறு­கின்­றன என்பது கவலைக்குரியதொன்று.

நக­ரத்­துப் பாட­சா­லை­க­ளைப் போன்று வசதி வாய்ப்­புக்­க­ளைப் பெறாத பாட­சா­லை­க­ளில் சாதா­ரண மாண­வர்­களை ஊக்­கப்­ப­டுத்தி, பயிற்­று­வித்து, பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடைவு மட்­டத்­தைத் தக்­க­வைப்­பது பெரும் சாத­னை­யா­கக் கொள்­ளப்­பட வேண்­டும். ஆனால், எமது சமு­தாய ஒட்­டு­மொத்­தச் சிந்­த­னை­யும் ‘9ஏ’ யில் கட்­டுண்டு கிடக்­கும்­வரை கல்வி அடைவு மட்­டம்’ ‘அதோ­கதி’ யாகத்­தான் அமை­யு­மென அடித்­துக் கூற­லாம்.

நான்கு வகைப்­பட்ட பிரி­வி­னர் 

தற்­போது வட­மா­கா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் நான்கு வகைப்­பட்ட பிரி­வி­னரை மாண­வர்­க­ளி­டையே காண­லாம்: (1)திற­மை­யா­கக் கற்­கும் மாண­வர்­கள் (2)மெது­வா­கக் கற்­கும் மாண­வர்­கள் (3)விசேட கல்­வித் தேவை­யு­டைய மாண­வர்­கள் (4)இடை­வி­ல­கல் மாண­வர்­கள்.

பாட­சாலை சமு­கத்­தி­னர் பொது­வாக முதல் வகை­யி­ன­ரோடு திருப்­திப்­பட்­டுக் கொள்­கி­றார்­களே தவிர, ஏனைய மூன்று வகைப்­பட்ட மாண­வர்­க­ளைப்­பற்றி அக்­கறை காட்­டு­வது இல்லை . ஏனெ­னில் திற­மை­யா­கக் கற்­கும் மாண­வர்­களை மட்­டும் தேர்ந்­தெ­டுத்­துக் கற்­பிக்­கும் பாட­சா­லை­க­ளா­கத்­தான் புகழ்­பெற்ற – பிர­சித்­தி­பெற்ற பாட­சா­லை­கள் திகழ்­கின்­றன.

அவ்­வா­றா­யின் மெது­வா­கக் கற்­கும் மாண­வர்­க­ளும், விசேட கல்­வித் தேவை­யு­டைய மாண­வர்­க­ளும் எவ்­வாறு கல்வி உத­வி­யைப் பெற­மு­டி­யும்? இவர்­க­ளுக்கே இந்த நிலை என்­றால் பாட­சா­லை­யில் இருந்து இடை­வி­ல­கிச் செல்­லும் மாண­வர்­கள் மீது எவர்­தான் கரி­சனை காட்­டப் போகி­றார்­கள்?

ஒரு கிரா­மத்­தி­லேயே பாட­சாலை செல்­லாத 42 சிறு­வர்­கள்! உதா­ர­ண­மாக, மடு­றோட்­டில் இருந்து மடுப் பேரா­ல­யம் செல்­லும் வழி­யில் 02ஆம் கட்டை என்ற இடத்­தில் புதி­தாக குடி­ய­மர்த்­தப்­பட்ட கிரா­ம மொன்றில் பாட­சாலை செல்­லாத சிறு­வர்­களை வலை­வி­ரித்து கடந்த பெப்­ர­வரி 13 ஆம் திக­தி­யன்று மேற்­கொண்ட தேடு­த­லில், கொஞ்ச நஞ்­ச­மல்ல, 42 சிறு­வர்­கள் சிக்­கி­யி­ருக்­கி­றார்­கள்.

அந்­தப் பகுதி கிரா­ம­சே­வ­கர், பிர­தேச செய­ல­கத்­தி­னர், பாட­சாலை அதி­பர்­கள், மாவட்ட சிறு­வர் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தி­னர், சமுக ஆர்­வ­லர்­கள் எனப் பல தரப்பினர் ஒன்று திரண்டு திட்­ட­மிட்டு இந்­தக் கிரா­மத்­தில் ஒரு சுற்­றி­ வ­ளைப்பை அதா­வது, அழிப்­ப­தற்­கான சுற்­றி­வ­ளைப்­பாக அல்­லா­மல், வருங்­கால சிற்­பி­க­ளாய் ஆக­வேண்­டிய சிறு­வர்­க­ளுக்­கான சுற்­றி­ வ­ளைப்பை மேற்­கொண்­ட­தன் பய­னாக இந்த நாற்­பத்­தி­யிரண்டு சிறு­வர்­க­ளும் பாட­சா­லைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

அத்­து­டன் இனிமேல் பாட­சாலை செல்­லாது இருக்­கும் மாண­வர்­க­ளுக்கு எதி­ரா­க­வும், அவர்­களைப் பாட­சாலை அனுப்­பாத பெற்­றோ­ருக்கு எதி­ரா­க­வும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.

இந்த விட­யத்­தில் சிறு­வர்­க­ளைக் குற்­றம் சுமத்­து­வ­தை­விட, பெற்­றோர் தம்  பொறுப்­பில் இருந்து தவ­று­கி­றார்­கள் என்­று­தான் கொள்­ள­வேண்­டும். ஏனெ­னில் சிறு­வ­ய­தில் இருந்து கல்வி­யின்­மீ­தும், பாட­சா­லை­யின்­மீ­தும் ஆர்­வத்தை அவர்­க­ளுக்கு ஊட்டி வளர்த்­தி­ருந்­தால், அவர்­கள் இந்தச் சின்ன வய­திலே பாட­சாலை செல்­லாது வீண்­பொ­ழு­தைக் கழிக்க மாட்­டார்­கள்.

ஆகவே, பாட­சா­லை­யில் இருந்து இடை­வி­ல­கும் மாண­வர்­க­ளை­விட, அவர்­கள் இடை­வி­ல­கக் கார­ண­மா­யி­ருக்­கும் பெற்­றோர்­களே குற்றவாளி கள்.

கட்­டா­ய­மா­னது கல்வி என்­ப­தைப் புகட்­டிய நீதி­பதி
இது­போன்று பாட­சாலை செல்­லாது வேலைக்­குப் போகும், சாக்­குப் போக்­கு­கள் சொல்­லி­விட்டு பாட­சாலை செல்­லா­து’­கட்­ட­டிக்­கும்’­சி­று­வர்­களைக் கண்­டு­பி­டித்து அவர்­களைப் பாட­சா­லை­யில் சேர்க்­கின்ற பணி­யைக் கிளி­நொச்சி நீதி­வான் ஆனந்­த­ராஜா வளன்­ராஜா சில மாதங்­க­ளுக்கு முன்பே முன்­னெ­டுத்­தி­ ருக்­கி­றார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள நான்கு பிர­தேச செய­ல­கங்களுக்கு உட் பட்ட பிர­தே­சங்­க­ளில் உள்ள ஒவ்­வொரு கிரா­மங்­க­ளுக்­கும் கிளி­நொச்சி மாவட்ட சிறு­வர் நன்­ன­டத்­தைத் திணைக்­கள அதி­கா­ரி­கள், தேசிய சிறு­வர் பாது­காப்பு அதி­கா­ர­சபை உத்­தி­யோத்­தர்­கள், கிராம அலு­வ­லர்­கள், கிராம அபி­வி­ருத்தி சங்­கத்­தி­னர் என அனை­வ­ரும் இணைந்து பாட­சாலை செல்லாத சிறு­வர்­களைத் தேடிச் சென்­றுள்­ள­னர்.

இவ்­வாறு தேடிச்­சென்­ற­தில் ஏறக்­கு­றைய 160 சிறு­வர்­கள் பாட­சாலை செல்­லா­தி­ருக்­கும் சிறு­வர்­க­ளா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு அவர்­களை நீதி­மன்­றத்­துக்கு அழைத்­து­வந்து அந்­தச் சிறு­வர்­கள் பாட­சாலை செல்­வ­தற்­கான அனு­கூ­லங்­களை ஆராய்ந்து அதற்கு ஆவனை செய்­யும்  ஏற்­பாட்­டினை நீதி­பதி கடந்த சில மாதங்­க­ளாக மேற்­கொண்­டி­ருந்தமை குறிப்பிடத் தக்கது.

நீதி­ப­தி­யின் இந்த உய­ரிய செயற்­பா­டு, வருங்­கால சந்­த­தி­யி­னர்­மீது அவர் வைத்­தி­ருக்­கும் சமுக அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­கி­றது. இவ்­வாறு இந்தச் சி­றார்­கள் கல்­வி­யற்று – கல்­வி­ய­றி­வற்று – கவ­னிப்­பா­ரற்­றுத் திரி­வார்­க­ளே­ யா­னால் வருங்­கா­லத்­தில் பாட­சா­லை­க­ளுக்­குப் பதி­லாக சிறைச் சா­லை­ க­ளைத்­தான் கட்­ட­வேண்டி வரும்  எனக் கருத நேர்கிறது.

ஆக, சிறு­வர்­க­ளுக் கான கல்வி கட்­டா­ய­மா­னது –  என்­பதை உணர்­வ­தோடு எக்­கா­ர­ணத்தை முன்­னிட்­டும் அதற்குத் தடங்கல் இருக்கக் கூடாது என்­ப­தை­யும் நாம் உணர வேண் டும். இத்­த­கைய மன­நிலை எமது பெற்­றோ­ருக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் ஊர்ப் பெரி­ய­வர்­கள், சமு­கத் தலை­வர்­கள் என அனை­வ­ருக்­கும் இருக்­க­வேண்­டும்.

இது­போன்று அனைத்­துக் கிரா­மங்­க­ ளி­லும் உள்­ள­வர்­கள் குறிப்­பாக கிராம அலு­வ­லர், சிறு­வர் நலம்­பே­ணும் தரப்பினர் அக்கறை காட்டி, இன்­றைய சிறு­வர்­கள் எவ்­வித விதி­வி­லக்­கு­க­ளும் இல்­லா­மல் கல்­வி­பெற வைக்­க­வேண்­டும்.

அனை­வ­ரும் இணை­ய­வேண்­டி­யது அவ­சி­யம்

கல்­விப் பெறு­பேற்­றில் மட்­டு­மல்­லாது மாண­வர்­க­ளின் ஒழுக்­கம், விளை­யாட்டு, ஏனைய அனைத்­துக் செயற்­பா­டு­க­ளி­லும் அடைவு மட்­டத்தை அதி­க­ரிக்க வேண்­டு­மென்­றால்,  கல்விப் புலம் சார் தரப்பினர் மற்றும்  சமு­கத்­தின் கூட்­டுப் பொறுப்­பில் உள்ள அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கி­ற­போ­து­தான், அறிவு படைத்த சமு­தா­யத்தை உரு­வாக்க முடி­யும்.

‘படிப்­பது எங்­கள் வேலை­யல்ல. அது மாண­வர்­க­ளின் வேலை!’என அதி­பர்­க­ளும் ஆசி­ரி­யர்­க­ளும்,’படிப்­பிப்­பது எங்­கள் வேலை­யல்ல, அது அதி­பர் ஆசி­ரி­யர்­க­ளின் வேலை!’எனப் பெற்­றோ­ரும் பழைய மாண­வர்­க­ளும் ஒரு­வரை ஒரு­வர் குற்­றம் சுமத்­திக் கொண்­டி­ருந்­தால், கல்­விச் செயற்­பா­டு­க­ளில் முன்­னேற்­றம் காண­மு­டி­யாது.

மேற்குறிப்பிட்ட கூற்­றுக்­க­ளில் நியா­யப்­பா­டு­கள் வெவ்வேறு தரப்பினர் பக்­கம் இருப்­பி­னும், ஒரு பகு­தி­யி­னர் செய்­யும் பணி­க­ளுக்கு மற்­றைய பகு­தி­யி­னர் உதவி ஒத்­தா­சை­யாக இருக்­க­வேண்­டும்.

கட­வு­ளி­டம் மட்­டு­மல்ல கட­மை­யி­லும் பக்தி வேண்­டும்
அண்­மை­யில் ஓர் ஆசி­ரியை தனது ஆசி­ரி­யப் பணி­யின் அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார். தன் பணி­களை நேர்த்­தி­யா­கச் செய்­து­கொண்டு வரு­கிற நேரத்­தில் அவர் மிக­வும் கட­மை­யு­ணர்­வு­டன் எதிர்­பார்க்­கப்­பட்ட பணி­க­ளுக்கு அப்­பா­லும் சென்று பணி­களை ஆற்­றி­வ­ரு­வதை அவ­தா­னித்து விட்டு,‘‘நீர் எவ்­வ­ளவு செய்­தா­லும் உமக்கு எவ­ரும் சிலை வைக்­க­மாட்­டாங்­கள்! ஆகவே, சாதா­ர­ணமா உம்­மு­டைய பணி­களை மட்­டுமே நீர் செய்­யும்!’’ எனச் சொன்­னா­ராம் ஆசி­ரி­ய­ரா­கக் கட­மை­பு­ரி­யும் சக கட­மை­வீ­ரர். அவரது மனப்­பாங்கு எப்­ப­டி­யி­ருக்­கி­றது என எண்­ணிப் பார்ப்பது நல்லது.

இவ்­வா­றான மன­நிலை கொண்ட இரண்டு, மூன்று ஆசி­ரி­யர்­கள் ஒரு பாட­சா­லை­யில் இருப்­பார்­க­ளா­யின் அப்­பா­ட­சாலை பின்­ன­டை­வைச் சந்­திப்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கி­வி­டும். என­வே­தான், ஆசி­ரி­யத் தொழி­யில் அல்ல, பணி­யில் ஈடு­ப­டு­கிற ஒவ்­வொ­ரு­வ­ரும் கட­வு­ளி­டம் மட்­டு­மல்ல, ஆசி­ரி­யக் கட­மை­யி­லும் பக்தி கொண்­டி­ருக்க வேண்­டும் என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­னது.

கல்­வியை நேசிக்­கக் கற்­றுக்­கொ­டுப்­போம்

வகுப்­ப­றை­களை நாடு­வ­தற்கு பிள்­ளை­களை நாம் இப்­போது ஊக்­கப்­ப­டுத்­த­வில்லை என்­றால், வருங்­கா­லத்­தில் சிறைச்­சா­லை­க­ளில்­தான் எமது செல்­வங்­க­ளைச் சந்­திக்­க­வேண்டி வரும்! அதற்கு அவர்­கள் பொறுப்­பல்ல, அவர்­தம் பெற்­றோர்­க­ளும் சமு­க­மும்­தான் அதற்குப் பொறுப்பு என்­ப­தைக் கவ­னத்­தில் கொண்டு கல்­வி­யை­யும், பாட­சா­லை­யை­யும், ஆசி­ரி­யர்­க­ளை­யும், நேசிக்க குழந்­தைச் செல்­வங்­க­ளைத் தூண்­டு­வோம்.

http://uthayandaily.com/story/16164.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.