Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயாட்சி இன்றேல் தமிழரின் தனித்துவம் பறிபோய்விடும் முதலமைச்சர் நேற்றுத் தெரிவிப்பு

Featured Replies

சுயாட்சி இன்­றேல் தமி­ழ­ரின் தனித்­து­வம் பறி­போய்­வி­டும்

முத­ல­மைச்­சர் நேற்­றுத் தெரி­விப்பு

 
சுயாட்சி இன்­றேல் தமி­ழ­ரின் தனித்­து­வம் பறி­போய்­வி­டும்
 

புதிய அர­ச­மைப்­பில் சுயாட்சி உள்­ள­டக்­கப்­ப­டா­விட்­டால் தமி­ழர்­க­ளது தனித்­து­வம் பறி­போய்­வி­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். அத்­து­டன் கூட்­டாட்சி அர­ச­மைப்பு மற்­றும் வடக்­கு – கி­ழக்கு இணைப்பு என்­ப­ன­வும் கட்­டா­யம் தேவை என்­றும் அவர் குறிப்­பிட்­டார். சம­கால அர­சி­யல் தொடர்­பில் ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வ­ருக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
தீர்­வுத் திட்­டம் எந்த நிலைக்கு வந்­துள்­ளது என்று எனக்­குத் தெரி­யாது. என்­னோடு கலந்­தா­லோ­சிக்­க­வும் இல்லை. எனக்கு அறி­விக்­க­வும் இல்லை. ஆறு உப குழுக்­க­ளின் அறிக்­கை­களை அனுப்­பி­னார்­கள். அதன் பின்­னர் என்ன நட­வ­டிக்கை என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது.

ஓர­ள­வுக்­குத் தெரிந்த அள­வில் மூன்று விட­யங்­களை அவர்­கள் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்­கள் போல் உள்­ளது. அந்த மூன்று விட­யங்­க­ளும் எங்­க­ளுக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும். அது கட்­டா­ய­மா­னது.கூட்­டாட்சி அர­ச­மைப்பு, வடக்­ -­கி­ழக்கு இணைப்பு, சுயாட்சி இவை மூன்­றும் புதிய அர­ச­மைப்­பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டும்.

கூட்­டாட்சி என்ற சொல்­லைப் புகுத்­தி­னால் சிங்­கள மக்­கள் எதிர்ப்­பார்­கள் என்று சொல்லி, ஏக்­கிய ரட்ட என்று சொல்­லப் பார்க்­கின்­றார்­கள். இது ஒரு­மித்த நாடு. அதனை ஒற்­றை­யாட்சி என்­றும் எடுக்­க­லாம். அதற்கு வியாக்­கி­யா­னம் எல்­லோ­ரை­யும் சேர்த்த நாடு என்று சொல்­லப் பார்­கின்­றார்­கள். ஆனால் அது சரி­வ­ராது. சட்­டங்­க­ளில் சிங்­கள மொழி வியாக்­கி­யா­னம்­தான் முதன்­மை­யா­னது என்று இருக்­கின்­றது.

ஏக்­கிய என்ற சிங்­க­ளச் சொல்­லைப் பாவித்­தால், அது ஒற்­றை­யாட்சி முறை­மை­யைத்­தான் குறிக்­கும். அவர்­கள் ஒற்­றை­யாட்சி என்­று­தான் சொல்­வார்­கள். அத­னால் ஏக்­கி­யவை விட்டு எக்­சத் என்று போடுங்­கள் என நான் ஆலோ­சனை கூறி­னேன். அந்­தச் சொல் ஒன்­றி­ணைந்த என்­ப­தைக் குறிக்­கும்.

ஏக்­கிய என்ற சொல்­லால் பாதிப்பு இல்லை என்ற முறை­யில் சம்­பந்­தன் கதைத்­தார். எக்­சத் என்று பாவித்­தால் சரி­யாக இருக்­கும் என்று அவ­ரி­ட­மும் எடுத்­துக்­கூ­றி­னேன். ஒற்­றை­யாட்சி என்­பது சிங்­கள – பௌத்த மக்­க­ளுக்கு கூடிய உரித்­தை­யும் அதி­கா­ரத்­தை­யும் கொடுத்து, எங்­க­ளு­டைய சகல அதி­கா­ரத்­தை­யும் குறைத்து குறைத்­துக் கொண்டு போகின்ற நில­மையை உரு­வாக்­கும்.

அடுத்­தது வடக்­கு-­கி­ழக்கு இணைப்பு. அதற்­கும் அவர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்­கள். வடக்கு கிழக்கு இணைப்பை கேட்­க­வேண்­டிய அவ­சி­யம் எங்­க­ளுக்கு ஏன் இருக்­கின்­றது என்­றால் கிழக்கு மாகா­ணத்­தில் 1949ஆம் ஆண்டு இருந்த சிங்­க­ள­வர்­க­ளின் எண்­ணிக்­கைக்­கும் இப்­போ­துள்ள சிங்­கள மக்­க­ளின் எண்­ணிக்­கைக்­கும் உள்ள வித்­தி­யா­சத்­தைப் பாருங்­கள்.

சிங்­கள மக்­கள் உட்­பு­குத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்­கள். வடக்கு – கிழக்கு இணை­யா­விட்­டால் 20 ஆண்­டு­க­ளில் எங்­க­ளின் தனித்­து­வம் போய்­வி­டும். தற்­போது எங்­க­ளின் சுயாட்­சிக்கு பங்­கம் ஏற்­ப­டுத்­தும் விதத்­தில்­தான் நடை­முறை இருக்­கின்­றது. சுயாட்­சியை ஏற்­றுக் கொள்­ளா­விட்­டால் எங்­க­ளின் தனித்­து­வம் பறி­போ­கும்  என்­றார்.

http://uthayandaily.com/story/16276.html

  • தொடங்கியவர்

திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர்களின் தனித்துவம்

 
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர்களின் தனித்துவம்

வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாசைகள் புதிய அரசியலமைப்பில் இடம்பெறாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் தமிழர்களின் தனித்துவ அடையாளங்கள் எதிர்வரும் 20, 25 வருடங்களில் அழிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் என்னும் அடிப்படையில் அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு இல்லாமல் ஒற்றையாட்சியே மீண்டும் கொண்டுவரப்படுமானால் தமிழர்களுடைய தனித்துவங்கள் முழுமையாக அழிக்கப்படும் அதேவேளை, வடக்கு கிழக்கு இணைப்பும் கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிடும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் மக்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் மக்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மக்களுக்கும் வழக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதன் அர்த்தம் வடக்கு கிழக்கு எந்த காலத்திலும் இணைக்கப்பட கூடாது என்பதே.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30, 35 வருடங்களில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருக்கின்றது. அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை குடியேற்றியமையே இந்த அதிகரிப்பிற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிட்ட குடியேற்றங்களால் நிரப்பபட்டதோ அப்படியே வடமாகாணமும் நிரப்பபடும்.

இதனால் தமிழர்களின் தனித்துவம் முழுமையாகவே 20, 25 வருடங்களில் அழிக்கப்படும்.

சுயாட்சி இல்லாவிட்டால் தமிழர்களுடைய தனித்துவம் முழுமையாக அழிக்கப்படும்.

நாங்கள் வேறு கலாச்சாரம், பண்பாடு ஒன்றை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே வடகிழக்கு இணைப்பு மற்றும், சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழ்களின் அபிலாஷைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீமையையே பெற்று கொடுக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/politics/unitary-state-will-be-brought-to-the-constitution

  • தொடங்கியவர்

சமஷ்டியை கோருவதற்கான காரணத்தை விளக்குகிறார் விக்கினேஸ்வரன் (காணொளி இணைப்பு )

 

 

 

வடக்கு, கிழக்கு இணைப்பு சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Local_News.jpg

புதிய அரசியலமைப்பு தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

 

புதிய அரசியலமைப்பு தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் நான் அறிந்திருக்கவில்லை ஆனால் நான் இந்த விடயம் தொடர்பாக பேசியதன் அடிப்படையில் அறிந்து கொண்டிருப்பதாவது சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள்  என்னும் அடிப்படையில் அதனை  “ஏக்கிய றட்ட” என சொல்ல பார்க்கிறார்கள்.

ஆனால் அதனை ஒற்றையாட்சி எனவும் எடுக்கலாம் குறிப்பாக அதற்கு வியாக்கியானம் கொடுக்கையில் எல்லோரையும் சேர்த்து என அர்த்தப்படுத்தப் பார்க்கிறார்கள் ஆனால் சிங்கள மொழியே முதன்மையானது என்ற அடிப்படையில் “ஏக்கிய றட” என்பது ஒற்றையாட்சி எனவே அர்த்தப்படுத்தப்படும்.

இந்நிலையில் “ஏக்கிய” என்ற சொல்லை விட்டு “எக்சத்” என பாவிக்கும்படி கேட்டிருக்கின்றேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுடன் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பிய போது,

குறித்த “ஏக்கிய றட்ட” எனும் சொல்லால் பாதிப்பில்லை  இருப்பினும் அதனை நான் மறுத்திருக்கின்றேன் சமஷ்டி இல்லாமல் ஒற்றையாட்சியே மீண்டும் கொண்டுவரப்படுமானால் எங்களுடைய தனித்துவங்கள் முழுமையாக அழிக்கப்படும் இதற்கு சிறந்த உதாரணம் மகாவலி தண்ணீர் வடப்பகுதிக்கு வரவில்லை ஆனால் மகாவலியின் பெயரால் வடக்கு வாழ் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு அவற்றில் சிங்கள குடியேற்றங்களை செய்துள்ளார்கள்.

மேலும் வடக்கு, கிழக்கு இணைப்பும் இல்லை என்ற நிலையிலேயே நிற்பதாக அறிகிறேன் இது எமக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கின்றது. குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம் மக்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் மக்களுக்கும் திருகோணமலை மாவட்டத்தை சிங்கள மக்களுக்கும் வழங்கலாம் என்ற கதை இருந்தது.

இதன் அர்த்தம் வடக்கு கிழக்கு எந்த காலத்திலும் இணைக்கப்பட கூடாது என்பதே மேலும் கிழக்கு மாகாணத்தில் கடந்த 35 வருடங்களில் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருக்கின்றது.

இதன் உண்மை என்னவென்றால் அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள மக்களை வெளி மாகாணங்களில் இருந்து கொண்டு வந்து குடியேற்றியுள்ளது என்பதாகும். வடக்கு கிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்டு சிங்கள குடியேற்றங்களால்  நிரப்பப்பட்டதோ அவ்வாறே வட மாகாணமும் நிரப்பப்படும் இதனால் தமிழர்களின் தனித்துவம் முழுமையாகவே 25 வருடங்களில் அழிக்கப்படும்.

மேலும் சுயாட்சி இல்லாவிட்டால் எங்களுடைய தனித்துவம் முழுமையாக அழிக்கப்படும் நாங்கள் வேறு கலாச்சாரம் பண்பாடு ஒன்றை எதிர்கொள்ள நேரிடும் எனவே வடக்கு ,கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் இல்லாத புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு தீமையை மட்டுமே பெற்றுக்கொடுக்கும் என்று தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22749

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.